Sunday, July 7, 2013

இளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.



 கங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்பிய கலைஞர்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அத்தனை திறமையும் இருந்து சாதனை படைத்தவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் மீடியா கவனமும் மக்கள் பார்வையும் இவர்கள் மீது பதிந்து இருக்கும். இன்றைய திரையுலகில் டி.ராஜேந்தருக்கடுத்து கங்கை அமரனைத்தான் இந்தவகையில் நம்மால் சேர்க்கமுடியும்.

கங்கை அமரன் கதை எழுதுவார், வசனம் எழுதுவார், பாடல்கள் புனைவார், அவரே பாடுவார், இசை அமைப்பார், படங்களை இயக்குவார், டிவியிலும் மேடைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்குவார், பல வாத்தியக்கருவிகளை வாசிப்பார்………………என்று எண்ணற்ற திறமைகள் கைவரப்பெற்றவர் கங்கை அமரன்.

இளையராஜா சகோதரர்கள் மூன்று பேராகத்தான் திரையுலகில் நுழைந்தனர். மூத்தவர் பாஸ்கர் குடும்ப நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டு விளம்பர வெளிச்சத்திற்கு அதிகமாக வராமலேயே நின்றுவிட்டார். மற்ற இரு சகோதரர்களும் திரைப்பட வெளிச்சத்திலேயே உழல்கின்றவர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டு விட்டனர். இளையராஜா வந்த காலத்தில் இளையராஜா ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டிருக்க இளையராஜாவுக்காகத் திரையுலகில் செய்யப்பட்ட ‘மவுத் பப்ளிசிடி’ சாதாரணமானதல்ல; அதனைப் பெரும்பாலும் பல்வேறு உத்திகளிலும் ‘ரூபங்களிலும்’ செய்துவந்தவர் கங்கை அமரன்தான். இன்றைய பின்னூட்டப் புலிகளுக்கெல்லாம் அதன் மகத்துவமோ முக்கியத்துவமோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில் இதனைப் படித்ததும் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் ராஜாவுக்கான விளம்பரம் மட்டுமல்ல அவருக்கான ‘எல்லாமே’ அவரது இசைதான். அவரது இசையே போதுமானது. அதுவே மொத்த உலகையும் சுருட்டிக் கொண்டுவந்து அவரது காலடியில் கிடத்தும்’ என்பதுபோல் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். திரையுலகில் இதெல்லாம் வேலைக்காவாது. 

எத்தனைத் திறமை எத்தனை வல்லமை இருந்தாலும் அங்கே நிற்கவும் நிலைக்கவும் ‘வேறுமாதிரியான’ சில ‘சப்போர்ட்டுகள்’ தேவைப்படுகின்றன. அதையெல்லாம் அன்றைக்கு கவனித்துக்கொண்டவர் கங்கைஅமரன்தான்.

அதுமட்டுமல்ல, தன்னுடைய சகோதரரை இளையராஜா வேண்டாமென்று சொல்கிறவரைக்கும் இளையராஜாவுடன் மட்டுமல்ல அவரது ‘இசையுடனும்’ கூடவே இருந்தவர் கங்கை அமரன். 

இவரது ‘பங்களிப்பு’ எத்தகையது என்பதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் கங்கைஅமரனின் ‘பங்களிப்பே துளிக்கூட இல்லை’ என்று நிச்சயம் சொல்வதற்கில்லை.

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

இளையராஜாவுக்கும் கங்கைஅமரனுக்கும் இடையில் தகராறுகள் வந்து “இனிமேல் நீ ரிகார்டிங் இடத்திற்கு வரவேண்டாம்” என்று தம்பியை இளையராஜா கடுமையாகச் சொல்லிவிட்டார் என்று செய்தி.

இந்தச் செய்திகளுக்குக் காரணம் கங்கை அமரன் தனியாக இசையமைக்கச் சென்றதுதான் என்றும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் இரண்டு சகோதரர்களுக்கும் பொதுவான ஒரு நண்பர், “நீ அந்தப் பக்கமாய்ப் போயிறாதே. அண்ணன் உன் மீது ரொம்பவும் கோபமாயிருக்காராம். அவர் கம்போஸ் பண்ணி வச்சிருந்த டியூனையெல்லாம் நீ எடுத்துவந்து அவரை முந்திக்கிட்டு உன்னுடைய படத்துல பாடல்களாய் போட்டுடறியாம்” என்று சொன்னதற்கு-

“அப்ப இத்தனை நாட்களும் நான் எத்தனை டியூன் சொல்லியிருப்பேன். அதையெல்லாம் அவர் போட்டு பேரும் பணமும் வாங்கினாரே அதுமட்டும் பரவாயில்லையா?” என்று கங்கைஅமரன் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். இதுபற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அவர்களுக்குள் உண்டான சகோதரச் சண்டை.

ஆரம்பத்தில் ஒரு இசைக்குழுவாகவே அவர்கள் செயல்பட்டு வந்ததால் இதுவெல்லாம் சாத்தியமே. நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களில் அந்தச் சகோதரர்களுக்கு நிறைய பரிச்சயம் இருப்பதால் தங்களைக் கவர்ந்த, தங்களுக்குத் தெரிந்த பல பாடல்களை அவர்கள் திரைப்படங்களில் மெட்டுக்களாகப் போட்டிருக்கிறார்கள். எந்தப் படத்தில் எந்தப் பாடல் அப்படி வந்தது போன்ற விவரங்களையும் கங்கை அமரன் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிறையச் சொல்லியும் பாடிக்காட்டியும் இருக்கிறார்.

அவர் டைரக்ட் செய்து மிகப்பெரிய வசூலைப் பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று சொல்லி இரண்டு பாடல்களையும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடிக்காட்டியிருக்கிறார் அமரன்.

பொதுவாக இது இந்தப் பாடலின் தழுவல், அது அந்தப் பாடலின் தழுவல்……இளையராஜா இந்தப் பாடலிலிருந்து இதனைத் தழுவியிருக்கிறார் என்பது போன்ற பட்டியலை நான் எப்போதுமே எழுதுவதில்லை. ஆனால் இது சம்பந்தமாய் வரும் விவாதங்களில் சிலவற்றைச் சொல்லமுனைவதுண்டு. ராஜ்கபூர் படத்தின் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது முகேஷோ, மன்னாடேயோ பாடிய ஒரு பாடலைக் கேட்டபோது ‘அட இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்று தோன்றிற்று.பிறகு பார்த்தால் ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி படப்பாடல் ‘இங்கிருந்துதான்’ என்பது தெரிந்தது.

‘ஓஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…………….’.என்று பிரபுதேவாவின் அண்ணன் ராஜூசுந்தரம் ‘இதயம்’ படத்தில் பாடிக்கொண்டு ஆடிய பாடல் ‘ஓஓஓ தேவதாஸ்’ என்று தேவதாஸ் படத்தில் சி.ஆர். சுப்பராமன் போட்ட டியூன்தான் என்பதும் நிறையப்பேருக்குத் தெரிந்த விஷயமே.

இதெல்லாம் சாதாரணமே. அங்கீகரிக்கக்கூடிய ஒரு விஷயமே. ஏனெனில், திரைத்துறையில் ஒரு பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என்று நிலைத்திருந்து தொழில் செய்யும்போது இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதவை. ஐநூறு படங்கள், அறுநூறு படங்கள், எண்ணூறு படங்கள் என்று ஒப்புக்கொண்டு பணியாற்றும்போது சில தழுவல்கள் வந்துதான் தீரும். இது ராஜாவுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பொருந்தும். அதுபோன்ற தழுவல்களில் ஈடுபட மாறுபாடான பல்வேறு காரணங்களும் அமைவதுண்டு.

இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, கவிஞர்களுக்கும் இது பொருந்தும். கண்ணதாசன் பாடல்களிலுள்ள சில வரிகளைக் குறிப்பிட்டு ‘இது தனிப்பாடலில் வந்துவிட்டது. இது மகாபாரதத்தில் உள்ள வரி. இது குற்றாலக்குறவஞ்சியில் உள்ளது. அங்கிருந்து சுட்டிருக்கிறார் கவிஞர். இது கம்பராமாயணத்தில் வந்த வரி; இது பட்டினத்தாரில் உள்ள வரி’ என்றெல்லாம் எழுதுவார்கள். இருக்கலாம். அந்த வரி ஏதோ ஒரு இடத்தில் அதிகம் பேர் கவனிக்கமுடியாத இடத்தில் வந்திருக்கிறது. அது பல பேரைச் சென்று அடையவேண்டிய வரி. நாம் பணியாற்றும் ஊடக வழியாக அதனைப் பயன்படுத்தினால் அதனை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றுகூட ஒரு கவிஞன் நினைத்து தான் எழுதும் பாடலில் அந்தவரியைச் சேர்க்கலாம். அதேபோலவே ஒரு இசையமைப்பாளரும் எங்கோ தான் கேட்டு ரசித்த ஒரு மெட்டை, அல்லது தன்னைக் கடந்துபோகும்போது ஒருகணம் தன்னைப் பரவசப்படுத்திவிட்டுப் போகும் ஒரு இசைத்துணுக்கை, எல்லாரும் கேட்டு அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தில்கூட தன்னுடைய இசையில் சேர்க்கலாம். இது தவறே இல்லை. தவறில்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு தருணங்களில் இது நடைமுறைச் சாத்தியமே.

ஆனால் இது ‘பொதுபுத்தியில்’ எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்றுதான் பார்க்கவேண்டும். பிரபல பதிவர் வவ்வால் தம்முடைய ஒரு பதிவில் சில தழுவல் பாடல்களின் பட்டியலையும் அதற்கான இணைப்புகளையும் கொடுத்திருந்தார். அவற்றில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஒன்றும், மீதி நான்கு பாடல்கள் இளையராஜா பிற மெட்டுக்களைத் தழுவி அமைத்த பாடல்களும் இருந்தன.

விகடன் இணையதளத்தில் யார் யார் எந்தெந்தப் பாடல்களிலிருந்து ‘சுட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு வீடியோ தொகுத்திருந்தார்கள். மற்ற எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களும், இளையராஜா, ரகுமான் பாடல்களும் அதில் இருந்தன. இந்த விகடன் இணையதளத்தில் வந்த வீடியோவை மதுமதி என்ற பதிவர் தமது தளத்தில் எடுத்துப்போட்டு ‘எல்லா இசையமைப்பாளர்களும் எப்படி தழுவியிருக்கிறார்கள்  பாருங்களேன்’ என்று ஒரு பதிவு எழுதுகிறார். உடனே கமெண்ட் என்ன வருகிறது என்றால் “அப்படியானால் நம்முடைய இசைஞானி ஒருவரைத்தவிர மற்ற அத்தனைப்பேரும் இப்படித் திருடித்தான் போடுகிறார்களா’ என்பதுபோன்ற தொனியில் உடனடியாக எதிர்வினை ஆற்றப்படுகிறது.

‘ஏங்க நீங்க வீடியோவை சரியாகக் கேட்கவில்லையா, பார்க்கவில்லையா? சரியாக கவனிக்காமலேயே பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல’ என்று அந்தப் பதிவர் பதில் சொல்லுகிறார். ஏனெனில் இளையராஜா தழுவியிருக்கும் டியூன்களையும் கொண்டதுதான் அந்த வீடியோ என்பதே கமெண்ட் போட்டவருக்குத் தெரியவில்லை. அல்லது இளையராஜா அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் அல்ல என்று மட்டுமே நம்புகிற ரகம்.

ஆக, இப்படியொரு பிரமை, இப்படியொரு மயக்கம், இப்படியொரு மூடஎண்ணம், இப்படியொரு அபரிமிதமான தவறான சிந்தனை இளையராஜாவைப் பற்றி நிறையப்பேருக்கு இணையத்திலும் சரி, எண்பதுக்குப் பிறகு பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்தவர்களுக்கும் சரி இருக்கிறது – ஏற்பட்டிருக்கிறது –ஏற்படுத்தப்படுகிறது.

இளையராஜாவை நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லுங்கள்; அருமையான பல பாடல்களைத் தமிழுக்குத் தந்தவர் என்று சொல்லுங்கள்; சில படங்கள் அவரது இசை காரணமாகவே வெற்றி பெற்றிருக்கின்றன என்று சொல்லுங்கள். யாரும் ஆட்சேபணை தெரிவிக்கப்போவதில்லை. 

ஏனெனில் இவையெல்லாமே எல்லா பிரபல இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படும் விவகாரங்கள்தாம்.

அந்தக் காலத்திலேயே பாடல்களுக்காக மட்டுமே ஓடிய படங்கள் எத்தனை? 

எஸ்விவெங்கட்ராமனுக்கும் சிஆர் சுப்பராமனுக்கும் ஜி. ராமனாதனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? அவர்களின் இசை கட்டிப்போட்ட ரசிகர்கள் எவ்வளவு?

பழைய நாட்களை விட்டுவிடுவோம்.

இரண்டு தலைமுறைக்கு முன்புகூட என்ன நடந்தது? கேவிமகாதேவனின் சங்கராபரணம் சாதிக்காத கர்நாடக இசையனுபவமா? அந்த ஒரு படத்திற்காக இந்த நாட்டின் சாதாரண தொழிலாளி முதல் குடியரசுத்தலைவர்வரை கேவிஎம்முக்கு மரியாதை செய்தார்கள். அவரைக் கூப்பிட்டு கௌரவிக்காத சங்கீத சபாவே இந்தியாவில் இல்லை. இந்துஸ்தானி மேதைகளிலிருந்து கர்நாடக இசைமேதைகள்வரை பலரும் வீடுதேடிவந்து கேவிஎம்மைப் பாராட்டிவிட்டு நெக்குருகி நின்றார்கள்.

ஒரு பின்னணிப் பாடகருக்கு ஆயிரம் படத்தில் பாடினாலும் கிடைக்கமுடியாத மரியாதை எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு அந்த ஒரே படத்தில் கிடைத்தது.

கேவிமகாதேவன் மட்டுமா?

தன்னுடைய ஒரே ஒரு பாட்டின் மூலமே பல படங்களை ஓட வைத்திருக்கிறார் எம்எஸ்வி. ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா?’ பாடலுக்காகவே ‘தீர்க்கசுமங்கலி’ படம் ஓடியது ஒருபுறம் இருக்க இன்றைக்கும் வாணி ஜெயராமின் விலாசமே அந்தப் பாடல்தானே?
‘அடி என்னடி ராக்கம்மா’ பாடல் தாரை தப்பட்டைக் கிழிபட பட்டிதொட்டியெங்கும் அடித்துத் தூள் கிளப்பியதா இல்லையா?

தோல்விப்படம்தான் என்றாலும் ‘ரோஜாமலரே ராஜகுமாரியை’க் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவர்கள் இன்றைக்கும் லட்சக்கணக்கில் இருக்கிறார்களா இல்லையா? (முரசு, மெகா டிவி, ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்களில் இந்தப் பாடல் நாள்தவறாமல் ஒருமுறையாகிலும் ஒளிபரப்பப்பட்டுவிடுகிறது.)

கேஎஸ்ஜியின் திறமையான திரைக்கதையமைப்பும் வசனங்களும் படத்தின் வெற்றிக்குத் துணைபோயின என்றாலும் ‘கற்பகம்’ என்ற படத்தை நினைத்ததும் நினைவுக்கு வருவது ‘அத்தைமடி மெத்தையடி’தானே?

‘எலந்தப் பயம்’ என்ற ஒற்றைப் பாடல் ‘பணமா பாசமா’ படத்தை இருபத்தைந்து வாரங்களுக்கும் மேல் ஓட வைத்த கதை எத்தனைப்பேருக்குத் தெரியும்?

அந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டுதான் அதுவரை வெளிவந்த தமிழ் இசைத்தட்டுக்களிலேயே அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்று ஹெச்எம்வி நிறுவனம் அறிவித்த கதை தெரியுமா?
இதுபோன்ற பட்டியல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.

இப்போதுகூட இவற்றையெல்லாம் எதற்காகச் சொல்ல நேர்ந்திருக்கிறது என்றால் காலம்காலமாகத் திரையுலகில் நடந்துவரும் பல சர்வசாதாரண நிகழ்வுகளையெல்லாம் ஏதோ இளையராஜா வந்து செய்த சாதனை என்பதுபோல் பலபேர் நினைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நேற்றுக்கூட ஒரு தளத்தில் யாரோ ஒரு அன்பர், ‘இளையராஜா தமது பாடல்களினாலேயே எத்தனைப்பேரை லட்சாதிபதியாக்கியிருக்கிறார் தெரியுமா?’ என்று எழுதியிருக்கிறார்.

திரையுலகில் இதெல்லாம் சர்வசாதாரணம். ஐடியில் பணிபுரியும் தம்பி ஒருவர் வந்திருந்தார். சென்னையைச் சேர்ந்தவர். ‘நாங்க ரொம்ப பெரிய பணக்காரரா இருந்தோம். நிலம் நீச்சு என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒரேயொரு படம் எடுத்து அத்தனை சொத்துக்களும் போச்சு. இப்ப வாடகை வீட்லதான் இருக்கோம். காரணம் அப்பா ஒரேயொரு படம் எடுத்து அத்தனையும் இழந்துட்டார். வெறும் புதுமுகங்கள் நடித்த படம். இளையராஜா மியூசிக் ஒன்றுக்காகவே ஓடிடும்னு நினைச்சு எடுத்த படம். மியூசிக்கல் சப்ஜெக்ட். படமோ பாட்டோ எடுபடலை. பயங்கர நஷ்டம்” என்றார். இதற்காக இளையராஜா மீது குறையோ குற்றமோ சொல்லவா முடியும்? திரையுலகில் அன்றாடம் கடந்துபோகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி, இப்போது நாம் கங்கை அமரன் விஷயத்துக்கு வருவோம். 

கங்கை அமரனை எனக்கு நேரில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. இளையராஜாவை ஒரு ஏழெட்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அண்ணன் பாஸ்கருடன் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஆனால் கங்கை அமரனை இளையராஜா பெங்களூரில் ஆர்க்கெஸ்டிரா நடத்த வந்தபோது ஒரேயொரு முறை சந்தித்து ஒரு ஒருமணி நேரம்போல பேசிக்கொண்டிருந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அந்த ஒரு மணி நேரத்திலேயே எத்தனை விஷயங்கள் பேசினார் என்பதை நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது., நகைச்சுவைக்கும் கலகலப்பிற்கும் சொந்தக்காரர் அவர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களின் வெற்றி குறித்தெல்லாம் பல விஷயங்கள் பேசினார் அவர். விஸ்வநாதனின் திறமை குறித்து அந்த அளவுக்குப் பெருமைப்பொங்கப் பேசினார்.

பாடல்களுக்கு நடுவில் வரும் இடையிசை குறித்துப் பேசினோம். BGM என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். இடையிசை, இன்டர்லூட் என்று இந்தக் காலத்தில் சொல்லிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கும் அதே சமாச்சாரம்தான். அந்த இடையிசையில் அப்போதுதான் இளையராஜா கொஞ்சம் மாற்றத்தைச் செய்ய ஆரம்பித்திருந்தார். என்ன மாற்றம்?

விஸ்வநாதனும் மற்றவர்களும் பிஜிஎம்மில் ஒரு அழகிய கோர்வையைச் செய்திருப்பார்கள். அதுவே ஒரு அற்புதமான இசைக்கலவையாக இனிமைத்துணுக்காக இருக்கும். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் வரும் அந்த இசைத்துணுக்கு அப்படியே மனதில் இடம் பிடித்துவிடும். முதல் அடி சரணத்திற்குப்பின் வரும் இரண்டாவது சரணத்தில் சில சமயம் மிகச்சில வேறுபாடுகள் செய்வார்கள். சிலவற்றை அப்படியே இரண்டாவது சரணத்திலும் போட்டுவிட்டு மூன்றாவது சரணத்திற்கு மட்டும் வேறு மாதிரி போடுவார்கள். எப்படிப்போட்டாலும் ஒரு முழுமை அதில் இருக்கும். கவனித்துப் பார்த்தால் தெரியும். அதுவும் ஒரு குட்டிப்பாட்டுத்தான். கவிதை மொழியில் சொன்னால் அது ஒரு குட்டிக்கவிதை. மிகச்சிறிய ஹைக்கூ.

இதற்கு உதாரணமாக நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்லலாம். ஆனால் ஒரேயொரு பாடல் எனில் ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாடலைக் கேளுங்கள்.

அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.

ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.

பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.

இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.

ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!

அப்படிப் பார்த்துக்கொண்டு போனாலும் நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் ‘இளையராஜாவின் ஸ்பெஷல்’ என்று சொல்லப்படும் அந்த இன்டர்லூட் எப்படியோ ‘ஒப்பேற்றப்பட்டுத்தான்’ அடுத்த சரணத்தை எட்டிப்பிடிக்கிறது என்பதை சற்றே நுணுக்கமாக கவனிக்கிறவர்களால் கண்டுணர முடியும். இதனால் கிடைத்த லாபம் என்னவென்றால் சாதாரண இசைக்கோஷ்டிகளால் திரையில் ஒலித்த, அல்லது டேப்பில் ஒலித்த அதே இன்டர்லூடை மேடையில் வாசிக்கமுடியாது. பாடலைக் கேட்பவர்கள் “என்ன இருந்தாலும் ஒரிஜினல் மாதிரி இல்லையே” என்று சொல்லிவிடுவார்கள்.

“என்ன இருந்தாலும் இசைஞானி பாடலை எல்லாம் அவ்வளவு சுலபமா வாசிக்கமுடியுமா? அதுக்கெல்லாம் ஞானம் பத்தாது. அந்த நுணுக்கங்கள் எல்லாம் அத்தனை சுலபமாக வந்துவிடாது’ என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.

என்ன ஆகும் தெரியுமா?

பல பாடல்கள் அதோ கதியென்று விடப்பட்டுவிடும்.

இன்னிசைக் கோஷ்டிகள் இப்படிப்பட்ட பாடல்களை சத்தமில்லாமல் கைகழுவிவிட்டு அடுத்த பாடலுக்கு நகர்ந்துவிடுவார்கள்.

இளையராஜாவின் மிகமிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஓரிரண்டை மட்டும் வாசித்துவிட்டு இன்றைய ஹிட் பாடல்களுக்கும் அந்தக் காலத்தின் ‘எவர்கிரீன்’ பாடலுக்குமாகச் சென்றுவிடுவார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பாடல் ஐம்பது வருடங்கள் அறுபது வருடங்கள் எழுபது வருடங்கள் என்று தொடர்ந்து நிலைக்க மக்கள் முணுமுணுக்கவேண்டும். இன்னிசைக் கோஷ்டிகள் தவறாமல் ஒவ்வொரு மேடையிலும் பாடவேண்டும். ஒலிபெருக்கிகளிலும், சேனல்களிலும் இடைவெளி குறையாமல் ஒலிக்க ஒளிக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் “நான் வீட்டில் எத்தனை சிடிக்கள் வாங்கிவைத்திருக்கிறேன் தெரியுமா? என்னுடைய ஐபாடில் இருப்பதெல்லாம் வெறும் அவருடைய பாடல்கள் மட்டுமே” என்பதுபோன்ற சவடால்கள் எல்லாம் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவித்துவம் பெற்றுத்தந்துவிடாது.

“எதுவும் ஒரு ஒழுங்கமைதியுடனும் கோர்வையுடனும் இருந்தால்தான் நினைவில் தங்கும். 

‘மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை’ 

என்ற வரியைச் சொல்லிப்பாருங்கள். ஒரு கோர்வை இருக்கிறது இல்லையா? ஒருமுறை படித்துவிட்டால் ஜென்மத்துக்கும் மறக்காது. எதிலும் கோர்வை வேண்டும். துண்டுத் துண்டாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் எத்தனை வலிமையாக இருந்தபோதிலும் சீக்கிரத்திலேயே மறந்துபோய்விடும்” என்பார் கொத்தமங்கலம் சுப்பு.

அம்மாதிரி இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்க வேண்டிய இளையராஜாவின் சில பாடல்கள் காணாமல் போய்விட்டதற்கு அவருடைய இந்தப் ‘புதுமையான’ இன்டர்லூடும் ஒரு காரணம். கோர்வை இல்லாததால் கவனம் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது. சாத்தியமில்லை. கவனம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் வாசிக்கமாட்டார்கள். பேசாமல் அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவார்கள்.

கங்கை அமரன் சொன்னார். “அண்ணனின் இந்த வகையான பிஜிஎம் எப்படி நிற்கப்போகிறது நிலைக்கப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். நாம விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிஜிஎம் பற்றிப் பேசணும்னா அதெல்லாம் யாராலும் முடியாத விஷயம். ஏன்னா அவங்களுடைய பிஜிஎம் ஒன்றே போதும். அதை மட்டுமே எடுத்துக்கொண்டு இன்னொரு முழுப்பாடலுக்கு இசையமைத்துவிட முடியும். அப்படிப்பார்த்தால் அந்த பிஜிஎம்மை மட்டுமே தனியாக எடுத்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புது மெட்டுக்களைப் போட்டுவிட முடியும். அப்படிப்பட்ட பிஜிஎம்கள் அவை.  

அவங்களுடைய எந்தப் பாடலை வேணும்னாலும் சொல்லுங்க நான் அதை அப்படியே பிஜிஎம் உட்பட வாயாலேயே இசைத்துக்காட்டிவிடுவேன். அந்த அளவுக்கு மனப்பாடம். மனப்பாடம் மட்டுமல்ல எங்க ரத்தத்துலேயே ஊறிப்போய்க்கிடக்கற பாடல்கள் அவர்களுடையவை”

அவர் மேலும் சொன்னார். “விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைச்சது ஆகட்டும், தனியா விஸ்வநாதண்ணன் இசையமைச்ச பாடல்கள் ஆகட்டும். அத்தனைப் பாடல்களும், வெறும் முக்கியமான பாடல்கள்னு இல்லை – அவங்களுடைய அத்தனைப் பாடல் கலெக்ஷனும் எங்களிடம் இருக்கு. ஒரேயொரு படம், ஒரேயொரு பாடல்கூட மிஸ் ஆகலை. அத்தனையும் இருக்கு. இந்தக் கலெக்ஷன் விஸ்வநாதண்ணனிடம்கூட இல்லை. விஸ்வநாதண்ணனே “பல பாட்டுக்கள் எங்கிட்ட இல்லை. குடுப்பா” அப்படின்னு என்னைக் கேட்டிருக்காரு. அந்த அளவுக்கு அந்த நாட்களிலிருந்தே பொக்கிஷம் போல் சேர்த்துவைத்திருக்கிறோம்”

இதனையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம் ஏதோ அண்ணனுக்கும் தம்பிக்கும் இப்போது ஆவதில்லை (இதுவே உண்மையா என்பது தெரியாது) என்பதனால் அவர் இப்போது இப்படிப் பேசுகிறார் என்பதுபோல் யாரும் பின்னூட்டம் போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். இருவரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டவர்தான் கங்கை அமரன்.

கங்கை அமரனிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைவிடவும் அவரைப்பற்றி நினைத்தால் உடனே ஞாபகம் வரக்கூடிய சுவாரசியமான சம்பவம் ஒன்றும் இருக்கிறது. கங்கைஅமரனுக்கு நிறைய பெயர்கள். கங்கை அமரன் என்பது மூன்றாவது பெயர் என்று நினைக்கிறேன். பிறந்தபோது வைத்த பெயர் வேறு. அதற்குப்பின்னர் அவருடைய பெயர் அமர்சிங். சினிமாவில் வாய்ப்புத்தேடிய சமயங்களில் அவரது பெயர் அமர்சிங்தான். தம்மை ஒரு பாடகராக நிலைநிறுத்திக்கொள்ளத்தான் அமரன் வந்தாராம். அப்படி வாய்ப்புத்தேடி கவிஞர் வாலியை அணுகியிருக்கிறார். வாலி சொன்னாராம். “உன்னுடைய பெயர் அமர்சிங். நீ பாடத்தெரியும் என்கிறாய். வா இப்படி. அமர். அமர்ந்தாயிற்றா சிங்” என்றாராம். இதையெல்லாம் கங்கை அமரன் சொல்லிக்கேட்கவேண்டும்.

ஆயிற்றா?




இதோ இன்றைய தினத்தந்தியில்(06-07-2013) இன்னொரு செய்தி வந்திருக்கிறது. இதுவும் கங்கை அமரன் பேசியதுதான். தேனான்டாள் பிலிம்ஸ் ராமநாராயணன் தயாரித்து இயக்கும் 126-வது படமான ‘ஆர்யா சூர்யா’ படவிழாவில் கங்கை அமரன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அவர் கூறுகிறார். “நான் இளையராஜாவின் பாடல்களைக் காப்பியடித்து இசையமைத்து இருக்கிறேன். 

அதேபோல் இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன் பாடல்களை காப்பி அடித்து இருக்கிறார். எத்தனைப் பாடல்கள் என்று என்னால் சொல்லமுடியும். எந்தெந்த பாடல்கள் என்பது எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.


இளையராஜாவுக்கு கிராமிய பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க முடியும் என்று முதலில் பேசினார்கள். சிகப்பு ரோஜாக்கள் படம் அதை மாற்றிக்காட்டியது. கர்நாடக சங்கீதமும் அவருக்குத் தெரியும் என்று நிரூபித்தது சிந்துபைரவி படம்” மேற்கண்டவாறு கங்கை அமரன் பேசினார் என்று சொல்கிறது தினத்தந்தி.

இந்தப் பதிவுக்கு முன்னர் இளையராஜா எழுதும் நோட்ஸ் பற்றிய பதிவொன்றை எழுதுவதாக டி.சௌந்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன். அதனை முந்திக்கொண்டது இந்தப் பதிவு.

இந்தச் செய்திகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதற்குக் காரணம் ‘இளையராஜாவையும் தமிழுக்குக் கிடைத்த நல்லதொரு இசையமைப்பாளர் என்ற பொதுப்பார்வையில் பாருங்கள்’ என்பதற்குத்தான். அதில்லாமல் ‘பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா, மொசார்டுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர், பாக்கிற்கு டியூஷன் எடுத்தவர்’ என்றெல்லாம் சொல்வதால்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. இதோ இப்போதுகூட ஃபேஸ்புக்கில் யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர் சொன்னார். ‘இளையராஜா தமிழ்நாட்டில் பிறக்காமல் வெளிநாட்டில் மட்டும் பிறந்திருந்தால் பீத்தோவனை விடவும் உயர்வாக மதிக்கப்பட்டிருப்பார்’ என்று எழுதியிருக்கிறார்களாம். கங்கை அமரன் ‘இளையராஜா எம்எஸ்வியைக் காப்பியடித்துப் பாடல்கள் போட்டார்’ என்கிறார்.


பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.

131 comments :

Krubhakaran said...

ஞாயிற்றை கை மறைப்பார் இல்.

Anonymous said...

நாங்க உலக அளவுல பெஸ்டுன்னு சொல்லல தமிழ் சினிமால பெஸ்ட்னு சொல்றோம் ஒத்துக்க தயாரா? அப்படியும் உங்களுக்கு மனசு வராது. பத்தோட பதினொன்னுன்னு சொல்ல உங்களுக்கு ஆசை. MSV நிறைய ஹிந்தி பாடல் தழுவி மெட்டு போட்டுள்ளார்.
ரஹ்மான் தற்போது இசையமைக்கும் பாடல்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கூட மனதில் பதிகிறது. ரஹ்மான் மத்த பாடல் சாயல் வரக்கூடாது என்று மெனக்கிட்டு மெட்டு போட்டு மனதில் பதிய விடாமல் செய்கிறார். புதுமை தேவைதான் மனதில் நீங்காத பாடல் தர வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்க வேண்டும். நீங்கள் ரொம்ப மெனக்கிட்டு பத்தோடு பதினொன்றாக ராஜாவை ஆக்க முயற்சி செய்கிறீர்கள்.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களே,
பதிவைப் படித்ததும் உடனே பின்னூட்டம் எழுவது அவசியப்படுகிறது.இத்தனை சமாச்சாரங்களை வைத்துகொண்டு இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று தெரியவில்லை. சபாஷ். சரியான போடு. இளையராஜாவை விமர்சித்தாலே அடித்துப் பிடித்துகொண்டு ஓடி வரும் கூட்டத்தினரிடையே இது போன்ற நியாயமான கருத்துக்கள் நிற்குமா என்று சந்தேகம் வருகிறது. அதற்காக தெரிந்தவைகளை சொல்லாமல் விட்டுவிட்டால் உண்மைகள் வெளிச்சத்திற்கு கண்டிப்பாக வராது. நான் எழுதிகொண்டிருக்கும் ஒன்பதாவது பதிவில் இளையராஜாவின் இடையிசையைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். (என் பதிவை வெளியிடமுடியாதபடி பிளாக்கரில் சில டெக்னிகல் பிரச்சினைகள்). விஷயம் என்னவென்றால் நீங்கள் தற்போது சொல்லி இருப்பதையே நான் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன். சரியான கணிப்பு.இளையராஜாவின் இடையிசை கோர்வையாக இல்லாமல் பாடலோடு முட்டி மோதிக்கொண்டு தனியாக ஒலிப்பதை சிலரே அடையாளம் கண்டுகொள்ள முடியும். அருமையான பதிவு. என் பாராட்டுகள் உங்களுக்கு. தொடர்ந்து கலக்குங்கள்.

Amudhavan said...

Krubhakaran said...
\\ஞாயிற்றை கை மறைப்பார் இல். \\
வாங்க கிருபாகரன், அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இங்கே ஐம்பதுக்கு முன்னால் இருந்தே நிறைய ஞாயிறுகள்.

Amudhavan said...

Anonymous said...
\\நாங்க உலக அளவுல பெஸ்டுன்னு சொல்லல தமிழ் சினிமால பெஸ்ட்னு சொல்றோம் ஒத்துக்க தயாரா?\\

அப்படிப்போடு! உலக அளவு பற்றிப் பேசுவதெல்லாம் போணியாகாது என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? சபாஷ். தமிழ் சினிமாலதான் எம்எஸ்வியின் பாடல்களைத் தழுவி நிறைய பாடல்கள் போட்டிருக்காருன்னு கங்கை அமரனே சொல்கிறாரே. அப்புறம் எப்படி பெஸ்ட்டும் டுவிஸ்டும்?

\\நீங்கள் ரொம்ப மெனக்கிட்டு பத்தோடு பதினொன்றாக ராஜாவை ஆக்க முயற்சி செய்கிறீர்கள்.\\

நான் எங்கே முயற்சி செய்கிறேன்? பலபேருக்குத் தெரியாத சில தகவல்களைச் சொல்லுகிறேன். உங்கள் கணிப்பில் சரிவுகள் நேருகின்றன என்றால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.

Amudhavan said...

காரிகன் said...
\\இளையராஜாவை விமர்சித்தாலே அடித்துப் பிடித்துகொண்டு ஓடி வரும் கூட்டத்தினரிடையே இது போன்ற நியாயமான கருத்துக்கள் நிற்குமா என்று சந்தேகம் வருகிறது. அதற்காக தெரிந்தவைகளை சொல்லாமல் விட்டுவிட்டால் உண்மைகள் வெளிச்சத்திற்கு கண்டிப்பாக வராது\\

வாங்க காரிகன், உங்களைக் கொஞ்சம் தாமதமாகத்தான் எதிர்பார்த்தேன். முன்னரே வந்துவிட்டீர்கள். 'இளையராஜாவை விமர்சித்தாலே அடித்துப் பிடித்து ஓடிவரும் கூட்டத்தினரிடம் இதுமாதிரி நியாயமான கருத்துக்கள்' மட்டுமல்ல எந்தக் கருத்துக்களுமே நிற்காது. எந்தக் கருத்துக்களும் நிற்காத - 'அவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்கள்' மட்டும் எப்படி நிற்கும்? கால ஓட்டத்தில் அவர்கள் கருத்துக்களும் அடித்துக்கொண்டு போகப்பட்டு உண்மைகள் மட்டுமே நிற்கும் நிலைக்கும்.

\\இளையராஜாவின் இடையிசை கோர்வையாக இல்லாமல் பாடலோடு முட்டி மோதிக்கொண்டு தனியாக ஒலிப்பதை சிலரே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\\

இந்தப் பாணிதான் அவரது சில நல்ல பாடல்களைக்கூட நிற்கவிடாமல் செய்கிறது என்பது எனது நீண்ட நாள் கருத்து. இந்த இன்டர் லூடைத்தான் என்னவென்றே புரிந்துகொள்ளாமல் ஒரு சிலர் கால்மாற்றி தலைமாற்றி கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்து நோட்ஸ் பற்றிய பதிவும் வருகிறது.

உங்கள் பதிவில் அடுத்த கட்டுரையைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்துவிட்டன.

Jayadev Das said...

இளையராஜா தனது இசையால் புகழ் பெற்றால் கங்கை அமரனின் வாயால் என்பது நகைச்சுவை. இளையராஜாபாடல்கள் ஹிட் ஆவது அவை இரசிக்கும்படியாக இருந்ததால் தான். வாயாலேயே இளையராஜா மாதிரி ஆகா முடியும் என்றால் மற்றவர்களும் ஆகியிருப்பார்கள்.

இளையராஜாவுக்கு கங்கை அமரன் டியூன் கொடுத்ததற்குப் பதில் அவரே அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாமே? அவரும் இசையமைத்தாரே, ஏன் வெற்றி பெற்று நிலைத்து நிற்க முடியவில்லை? ஐன்ஸ்டீனுக்கு அவர் பெட்டாட்டி தான் எல்லாம் சொல்லிக் குடுத்தார் என்று கூட கதைகள் உண்டு. கேட்பவர் எந்த அளவுக்கு கேனை என்பதைப் பொறுத்து இத்தகைய செய்திகள் விலை போகும்.

Anonymous said...

"இளையராஜாவுக்கும் கங்கைஅமரனுக்கும் இடையில் தகராறுகள் வந்து “இனிமேல் நீ ரிகார்டிங் இடத்திற்கு வரவேண்டாம்” என்று தம்பியை இளையராஜா கடுமையாகச் சொல்லிவிட்டார் என்று செய்தி."

தகராறு வரக்காரணம் கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செயதமைதான். இந்த முடிவுக்கு தூண்டியது இயக்குனர், தயாரிப்பாளர் பாலாஜி. வாழ்வே மாயம் படத்துக்காக பாலாஜி spb மூலம் அணுகியிருக்கிறார். வாழ்வே மாயம் ஒரு தெழுங்கு படத்தின் தழுவல். அந்த படத்தில் போட்ட பாடல்களை அப்படியே போடுமாறு தான் பாலாஜி கூறினார். ஆனால் கங்கை அமரன் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் தெழுங்கில் இருந்து எடுத்தார். மற்றைய பாடல்கள் அவரது உருவாக்கம். (மழைகால மேகம் தெழுங்கு தழுவல் பாடல் )

கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செய்தமைதான் தகராருக்கு காரணம்.

Anonymous said...

" ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று சொல்லி இரண்டு பாடல்களையும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடிக்காட்டியிருக்கிறார் அமரன்."

இந்த விடயத்தை ராஜாவே பகிரங்கமாக சொல்லிவிட்டார். முழுபாடல் அல்ல. பல்லவி மட்டும் கோயில் பாட்டை தழுவி இருந்ததாக.

Anonymous said...

Can you give some example songs for idaiisai....

Unknown said...

Ungal sariyana karutthukkalai thunivodu pathivu seithullamaikku paaraattukkal. Thodarndhu ezhuthungal.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//பிரபல பதிவர் வவ்வால் தம்முடைய ஒரு பதிவில் சில தழுவல் பாடல்களின் பட்டியலையும் அதற்கான இணைப்புகளையும் //

ஆஹ்ஹா என்னலாம் ஒரு வலைப்பதிவராக மதிப்பதே மிகப்பெரிய விடயம்,என்னைய போயி பிரபலப்பதிவர்னு சொல்லி இருப்பது தங்களின் தாராள மனதையே காட்டுகிறது,நன்றி!

வழக்கமாகவே என்மேல பாய ஒரு கூட்டம் இருக்கு,அது இன்னும் அதிகமாகிடுமே அவ்வ்!

# //இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார்.//

ரொம்ப உன்னிப்பாக பின்னணி இசையும் கவனிச்சி இருக்கீங்க, நீங்க சொன்னாப்போல தான் செய்திருப்பார், இன்னும் சொல்லப்போனால் பிரிலூட்ல கூட நிறைய "பிட்" ஓட்டி இருப்பார் :-))

இந்த வேலைய ராசா மட்டும் செய்தார்னு சொல்ல முடியாது,எல்லாருமே "பிட்" அடிக்கிறாங்க,ஆனால் அவங்க எல்லாம் "இராக தேவன்னு" சொல்லிக்கிறதில்லை :-))

பல பாடல்களில் பல்லவிக்கு அப்புறம் "ஏதேனும் ஒரு மேற்கத்திய பிரபல இசைத்துணுக்கை" லூப்பாக ஓட்டி ஒரு பாடலை ஒப்பேத்தும் வேலையையும் இசையமைப்பாளர்கள் செய்கிறார்கள்.

தற்போது பல பாடல்களில் பல்லவிக்கு அப்புறம் "டியுனே" இருக்காது வெறும் தாளக்கட்டு தான் இருக்கும், டெக்னிகலா, 4/2,8/4 தாளக்கட்டுனு சொல்லிட்டு எஸ்ஸாகிடுவாங்க.

பிட்டாக எடுப்பதை நீங்க சொன்னது போல ஒட்டி எப்படி ஒப்பேத்துறாங்கனா, முடியும் ஸ்வரத்தின் ஆரம்ப ஸ்வரமாக அந்த பிட்டு ஆரம்பிக்கும், அந்தாதி போல எனலாம் எனவே பளிச்சுனு கண்டுப்பிடிக்க முடியாது,ஆனால் உங்களப்போல காதுல "மைக்ரோஸ்கோப்" வச்சிருந்தா கண்டுப்பிடிச்சிடலாம் :-))

இராஜப்பார்வை படத்தில "அந்தி மழை" பொழிகிறது பாட்டில பாபப் பா ...பாபப்பா பாபப் பபாப்பா... னு ஆரம்பிச்சு அப்படியே மிருதங்கம் அடிப்பாரு அடுத்து பார்த்தால் "தாதர தாதரன்னானு வர வயலின் அப்படியே "பீத்தோவானின் சிம்பனி சொனாட்டா எண்-16 இன் ஆரம்ப இசையின் பிட்டு, டைட்டான் சொனாட்டா கடிகார விளம்பரத்திலவும் வரும்,ஆனால் விளம்பரத்துக்கு "பிட்" போட்டது ஏ.ஆர்.ஆர்.

இங்க என்ன புத்திசாலித்தனம்னா , மிருதங்கம் வாசிச்சது தான், அதுல எளிதாக எந்த இசையின் ஸ்வரங்களையும் "சிலபியாக" தோம் த திங்கின தொம்" என கொண்டு வரமுடியும், அப்படி செய்வதை "சாப்பு" என்கிறார்கள்,தாளம், லகு என சொல்வார்கள்,எந்த ராகமும் தாளமில்லாமல் பாட முடியாது, எனவே தான் "ஸ்ருதி மாதா,லயப்பிதா" என சொல்வது, கொன்னக்கோல் சாப்பின் அடுத்த வடிவம், தா தின்னா தானு வாயாலே வாசிக்கிறது.

எனவே மிருதங்கம் தாள வாத்தியம் என்பதால் அதன் மூலம் ,ஸ்வரத்தில் "ஜாயிண்ட் அடிக்காமல், லயத்துல "ஜாயிண்ட் அடிச்சு" சொனாட்டாவுடன் "சிங்க்" செய்து "கலப்பிசையாக்கி கேட்க புதுசா காட்டிப்புட்டார்.

ஹி...ஹி இதெல்லாம் என்னோட கண்டுப்பிடிப்பில்ல, இணையத்தில எப்போதோ வாசிச்சது தான் , ஏதோ நினைவில் இருப்பதை சொல்கிறேன், பிழை இருப்பின் திருத்தவும்.


தொடரும்...

வவ்வால் said...

# //எஸ்விவெங்கட்ராமனுக்கும் சிஆர் சுப்பராமனுக்கும் ஜி. ராமனாதனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? அவர்களின் இசை கட்டிப்போட்ட ரசிகர்கள் எவ்வளவு?//

சந்திர பாபு மூலம் "யோடெல்லிங்"(yodeling") ஜோடெலிங் என உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்) வகை வெஸ்டர்ன் கன்ட்ரி இசையை ஜி.ராமநாதன் போன்றவர்கள் தான் தமிழுக்கு கொண்டு வந்தார்கள் என நினைக்கிறேன்,தமிழில் ஏன் இந்தியாவிலேயே "யோடெல்லிங்" பாடுவதில் அப்பொழுது சந்திரபாபு தான் பெஸ்ட் எனலாம்,ஏன் எனில் அந்த வகை பாடல் & இசை அப்பொழுது இங்கு யாருக்குமே அறிமுகமேயில்லை, காரணம் யோடெல்லிங்கே அப்பொழுது தான் மேல்நாட்டிலும் புகழடைய ஆரம்பித்திருந்தது, இணையம், ஊடகம் எல்லாம் பெரிதும் வளராத காலத்தில் நவீன இசையை உடனே கொண்டு வந்திருக்கிறார்கள்,ஆனால் அவர்கள் எல்லாம் என்னமோ பழம் பஞ்சாங்கமாக அப்போ இசை அமைத்துக்கொண்டிருந்தாக " ராசா ரசிகசிகாமணிகளுக்கு" ஒரு நினைப்பு :-))

குங்குமப்பூவே கொஞ்சுப்புறாவே

தங்கச்சிலை போல வந்து மனதை தவிக்க விட்டாளே,

கட்டான முத்தழகி காணாத கட்டழகி,
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி :-))

#//ரோஜாமலரே ராஜகுமாரியை’க் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவர்கள் இன்றைக்கும் லட்சக்கணக்கில் இருக்கிறார்களா இல்லையா? (முரசு, மெகா டிவி, ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்களில் இந்தப் பாடல் நாள்தவறாமல் ஒருமுறையாகிலும் ஒளிபரப்பப்பட்டுவிடுகிறது.)//

அந்த பாடலை தொ.காவில் பார்க்கும் போதெல்லாம் "விஜயாபுரி வீரன்" ஆனந்தனுக்கும்,குமாரி"சச்சு"வுக்கும் என்னா மாதிரி பாட்டுனு ஆச்சர்யப்படுவேன் :-))

அவர்களுக்கு படத்தின் மூலம் கிடைச்ச "புகழை" விட அப்பாடலின் மூலம் கிடைத்த "ரீச்" இப்பவும் நிலைத்திருக்கு.

# //கங்கைஅமரனுக்கு நிறைய பெயர்கள். கங்கை அமரன் என்பது மூன்றாவது பெயர் என்று நினைக்கிறேன். பிறந்தபோது வைத்த பெயர் வேறு. அதற்குப்பின்னர் அவருடைய பெயர் அமர்சிங்.//

விடுதலைப்போராட்ட தியாகி "பகத் சிங்கு"டன் "சாண்டர்ஸ் கொலை வழக்கு,இன்னப்பிற வழக்குகளுக்காக தூக்கு தண்டனை அடைந்தவர் தான் அமர் சிங்க், இன்னொருவர் உத்தம் சிங், அவர்களது அண்ணன்,பாவலர் வரதராசன் ,கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால்,அமர் சிங்க், என்ற பெயரை கங்கை அமரனுக்கு வைத்தாராம், ஒரு பேட்டியில் கங்கை அமரன் சொன்னது.

ராஜா குடும்பம் ஆரம்பத்தில் கிருத்துவ மதத்திலே இருந்தது,ராசாவின் பூர்வாசிரம பெயர் டேனியல் ராசையா, அவர் இசையை கற்றுக்கொண்டதே சர்ச்சில் தான், அங்கிருந்த "பேண்டில்" சகோதரர்கள் அனைவரும் வாசிச்சார்களாம், ராசா பியானோ,மற்றும் கிதார் வாசிச்சாராம்,ஆனால் இதை எல்லாம் ராசா சொல்வதேயில்லை, கம்யூனிச மீட்டிங்கில் பாட்டுப்பாடி இசையைக்கற்றுக்கொண்டதாகத்தான் சொல்வார் ,என்னமோ கம்யூனிச கட்சி இசைப்பள்ளி நடத்துவது போல :-))
----------------

//பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.//

இதைத்தான் நானும் நினைப்பது, ராசா நல்லதொரு திரையிசை அமைப்பாளர், ஆனால் மிகை துதியாக இந்த அல்லக்கைகள் பேசி,எழுதி உள்ளப்பேரையும் கெடுத்துவிடுகிறார்கள்.
-----------------------------

# //கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று சொல்லி இரண்டு பாடல்களையும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடிக்காட்டியிருக்கிறார் அமரன்.//

கம்கை அமரன் நிறைய முறை கிராமியப்பாடல்களில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறோம் என ஒப்புக்கொண்டு சொல்லியுள்ளார், ஆயிரம் தாமரை மொட்டுக்களே,இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே என்றப்பாடல் அப்படியே "புரவி எடுப்பு" எனப்படும் தென்மாவட்ட கோயில் விழாக்களின் போது பாடப்படும் கிராமிய பாடலின் வடிவே. இதையும் சில பேட்டிகளின் போது சொல்லி இருக்கிறார்.

இப்படி எல்லாம் எடுத்தாளப்பட்ட இசையே,அதனை சம்பந்தப்பட்டவர்களே ஒத்துக்கொண்டாலும் நம்ம மக்கள் ராசா " கண்டுப்பிடிச்சதுனு தான் சொல்லிப்பாங்க :-))

வவ்வால் said...

காரிகன்,

//இத்தனை சமாச்சாரங்களை வைத்துகொண்டு இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று தெரியவில்லை. சபாஷ். சரியான போடு. //

அமுதவன் அவர்களைப்பற்றி முன்னர் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது தான், வெளியில் ,ஊடகத்தில் வராத பலத்தகவல்களின் சொந்தக்காரர் ,அடக்கி வாசிக்கிறார் என்றே நினைக்கிறேன்,அவர் மட்டும் முழு வீச்சில் தகவல்களை கொட்டினார் என்றால் இன்னொரு "ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்" தான் :-))


ஒவ்வொருப்பதிவிலும் "ஒரு எக்ஸ்குளுசிவ்" தகவல் கண்டிப்பாக இருக்கும்.

வவ்வால் said...

பிழை திருத்தம்,

மொசார்ட்டின் சிம்பனி சொனாட்டா -எண்-25 இசையின் ஆரம்பம், தவறாக பீத்தோவன் சிம்பனி சொனாட்டா எண் 16னு குறிப்பிட்டுவிட்டேன்,அது வேறு ஒரு பாடல்.

Bruno said...

:)

podaang... said...

அமுதவன் என்கிற சல்லிப் பயலுக்கு,
உன்னை முட்டாள், கேனயன், லூசு என்றெல்லாம் நான் சொல்லவில்லை, ஏன் என்றால் பெரிய ஆராய்ச்சி மயிரு செஞ்ச மாதிரி ஒரு செட்டப்பா இந்த கட்டுரை இருக்கு.ஆனா இளையராஜா ஒன்னும் பெரிய மசிரான் இல்ல அப்டிங்கறத முடிவு பண்ணிட்டு எழுதின கட்டுரை இது...அதுனாலதான் கங்கை அமரன் மாதிரி சல்லி பயல என்னமோ இளையராஜாவுக்கு சமமானவன் மாதிரி சொல்றீங்க...ஒரு எளிமையான கேள்வி..ராஜா தான் இவன வெரட்டி விட்டுட்டாரு இல்ல.. அதுக்கப்புறம் இவன் தனியா புடுங்குனது என்ன...ராஜா அப்டி...இப்டி.. ன்னு கிசுகிசு பேசலாம்..அத எந்தப் புடிங்கி வேணும்னாலும் பண்ணலாம்...ஆனா இவன் தனியா சாதிச்சது என்ன.,..ஒரு மசிரு கூட இல்ல அப்டிங்கிறது வரலாறு.. இவுரு இளையராஜாவுக்கு டியூன் போட்டு கிளிச்சாருன்னா அத இப்ப கிழிக்க வேண்டியதுதானே.

"""இளையராஜா பலரை தழுவி டியூன் போட்டாரு .."""

டேய்...புள்ள குட்டிங்கள யாவது படிக்க வையுங்கடா ...

Anonymous said...

எம்.எஸ்.வீ அடித்த காப்பி தேவாவை மிஞ்சி விடும்ஆதாரம் ஏராளம் உண்டு.கங்கை அமரன் மட்டுமல்ல இளையராஜாவும் எம்.எஸ்.வீயை போற்றுபவர் தான்.
ராஜா குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பது வெள்ளிடை மலை.

ரா.செந்தில்குமார் said...

அதே கங்கை அமரனுடன் பல மணி நேரங்கள் நான் செலவழித்தவன். மாங்குயிலே, பூங்குயிலே (ஏறு மயில், ஏறி விளை யாடும்முகம் ஒன்று) போன்ற சில பாடல்களை சொல்லி, அதன் மூலமாக விளங்கும் நாட்டுபுறபாடலகளை சொல்லியுள்ளார் என்பது வரை மட்டுமே உண்மை. அமரன் தனது நேர்பேச்சில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை சொல்லி சிலாகித்த விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்திருப்பார். ஆனால் நீங்கள் அது பற்றி எதுவுமே சொல்லாமல், ராஜாவை சாதாரண கலைஞர் என்ற வகையிலே நிறுவுவதற்காக மறைக்கிறீர்கள்.
அமரன் சொன்னது இதுதான். ராஜாவுக்கு வாசிக்கும் அதே இசை கலைஞர்கள்தான், தனக்கும் வாசித்தார்கள். ஆனால் ராஜாவிடம் வாசிக்கும் போதும் அவர்கள் கொடுக்கும் நுட்பத்தை, தன்னிடம் வாசிக்கும் போது அவர்களலேயே கொடுக்க முடிந்ததில்லை. ராஜாவுக்கு வாசிக்கும் போது மட்டுமே அவர்களது இசை வேறு ஒரு தளத்திற்க்கு எடுத்து செல்லபடுகிறது. இந்த நுட்பம் ராஜாவின் கடும் உழைப்பாலும், தவத்தாலும் மட்டுமே சாத்தியமான ஒன்று. உலக சந்தோஷங்களில் இருந்து தள்ளி நிற்க அவரால முடிந்த்து. என்னால் முடியவில்லை.

மற்றபடி, மெல்லிசை குழுவினரால் பிரதியெடுக்க முடிந்தால் தான் அது நல்ல இசை போன்ற உங்களது மதிப்பீடு குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

Amudhavan said...

Jayadev Das said...

\\இளையராஜாவுக்கு கங்கை அமரன் டியூன் கொடுத்ததற்குப் பதில் அவரே அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாமே? அவரும் இசையமைத்தாரே, ஏன் வெற்றி பெற்று நிலைத்து நிற்க முடியவில்லை?\\

வாங்க ஜெயதேவ்,கங்கை அமரனை ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் என்று ஸ்தாபிப்பதற்காகவெல்லாம் இந்தப் பதிவு எழுதப்படவில்லை. இங்கே பேசப்பட்ட பிரதான விஷயம்என்ன என்பதுதான் முக்கியம்.அதைச் சொல்லவந்த நேரத்தில் போகிற போக்கில் சொல்லிச்சென்றுள்ள விவரங்கள் சில, அவ்வளவுதான்.
கங்கை அமரன் இளையராஜாவுக்கு டியூன் கொடுத்ததற்கு பதில் அவரே அதனைப் பயன்படுத்தியிருக்கலாமே என்பது நியாயமான கேள்விதான். 'டியூன் கொடுத்த சந்தர்ப்பங்களில்' அவருக்கு மியூசிக் டைரக்டராகும் எதிர்கால சிந்தனை இருக்கவில்லையோ என்னமோ. அதுஒருபுறமிருக்க.......அன்றைய நிலையில் ராஜாவுக்கு அவரது இரு சகோதரர்களின் பங்களிப்புகள் ஏராளமாக இருந்தன - பாடல் கம்போசிங் உட்பட எல்லாவிஷயங்களிலும்.
இவர் இசையமைப்பாளராக வெற்றிபெறவில்லை என்பதற்காக இவருக்கும் இசைக்கும் சம்பந்தமேயில்லை என்றெல்லாம் சொல்லமுடியுமா என்ன?
தனியாக நின்று 'இசையமைக்கையில்' மாபெரும் மேதையான டி.கே.ராமமூர்த்தி அவர்களாலேயே பெரிதாக வெற்றிபெற முடியவில்லை என்னும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்!

Amudhavan said...

Anonymous said...
\\தகராறு வரக்காரணம் கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செயதமைதான். இந்த முடிவுக்கு தூண்டியது இயக்குனர், தயாரிப்பாளர் பாலாஜி. வாழ்வே மாயம் படத்துக்காக பாலாஜி spb மூலம் அணுகியிருக்கிறார். வாழ்வே மாயம் ஒரு தெழுங்கு படத்தின் தழுவல். அந்த படத்தில் போட்ட பாடல்களை அப்படியே போடுமாறு தான் பாலாஜி கூறினார். ஆனால் கங்கை அமரன் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் தெழுங்கில் இருந்து எடுத்தார். மற்றைய பாடல்கள் அவரது உருவாக்கம். (மழைகால மேகம் தெழுங்கு தழுவல் பாடல் )

கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செய்தமைதான் தகராருக்கு காரணம்.\\

சரியான தகவல்களுக்கு நன்றி நண்பரே.

Anonymous said...

Mudiya enna solla varinga? avanga isai methaigal. athai pesa nee yaru?

Amudhavan said...


Anonymous said...
\\" ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று ....\\

\\இந்த விடயத்தை ராஜாவே பகிரங்கமாக சொல்லிவிட்டார். முழுபாடல் அல்ல. பல்லவி மட்டும் கோயில் பாட்டை தழுவி இருந்ததாக.\\

யார் சொன்னார்கள் என்பது முக்கியமில்லை. அவர் அப்படிச் செய்ததையும் நான் தவறென்று சொல்லவில்லை. இதனைப் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.ஆனால்-

இங்குள்ளவர்கள் ராஜா பற்றி எழுப்பி வைத்து இணையத்தில் உலவ விடும் இமேஜூக்கு இவையெல்லாம் வலு சேர்க்கிறதா என்பதுதான் கேள்வி.

அப்படியில்லாவிட்டால் எதற்காக இப்படியெல்லாம் பில்ட்அப் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டால் கோபித்துக்கொள்கிறார்கள்.

இன்னொன்று நண்பரே...'முழுப்பாடல் அல்ல, பல்லவி மட்டும்' என்கிறீர்கள். திறமைசாலிகளுக்கு 'பல்லவி மட்டுமே' கிடைத்தால் போதாதா? மற்றவற்றை 'அவர்கள்' கவனித்துக்கொள்ள மாட்டார்களா என்ன?
இசையமைப்பாளர்களுக்கு 'வேண்டியதே' பல்லவி மட்டும்தான் என்பது தெரியாதா உங்களுக்கு?

Amudhavan said...


Anonymous said...

\\ Can you give some example songs for idaiisai....\\

விஸ்வநாதன் ராமமூர்த்தி, மற்றும் விஸ்வநாதன் இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்.

Amudhavan said...

J Mariano Anto Bruno Mascarenhas said...

\\ :) \\

வருகைக்கு நன்றி நண்பரே. பாராட்டுகிறீர்களோ திட்டுகிறீர்களோ இப்படி பொம்மை போடுவதற்குபதில் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போகலாமே.

Amudhavan said...

Viya Pathy said...

\\Ungal sariyana karutthukkalai thunivodu pathivu seithullamaikku paaraattukkal. Thodarndhu ezhuthungal.\\

பதி அவர்களே தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

Anonymous said...

@வௌவால்,

ஒரு மிகத்தவறான தகவலை கூறுகின்றீர்கள்.
"ராஜா குடும்பம் ஆரம்பத்தில் கிருத்துவ மதத்திலே இருந்தது,ராசாவின் பூர்வாசிரம பெயர் டேனியல் ராசையா, அவர் இசையை கற்றுக்கொண்டதே சர்ச்சில் தான், அங்கிருந்த "பேண்டில்" சகோதரர்கள் அனைவரும் வாசிச்சார்களாம், ராசா பியானோ,மற்றும் கிதார் வாசிச்சாராம்,ஆனால் இதை எல்லாம் ராசா சொல்வதேயில்லை, கம்யூனிச மீட்டிங்கில் பாட்டுப்பாடி இசையைக்கற்றுக்கொண்டதாகத்தான் சொல்வார் ,என்னமோ கம்யூனிச கட்சி இசைப்பள்ளி நடத்துவது போல :-))"

ராஜா குடும்பம் கிறிஸ்தவ பதிவில் இருந்தது உண்மை. ராஜாவின் ஜாதி என்ன எனபது யாவருக்கும் தெரியும். அந்த ஜாதி ஒடுக்குமுறையில் இருந்து விலக தான் கிறிஸ்தவ மதத்துக்கு ராஜாவின் தந்தையார் மாறினார். பிள்ளைகளையும் பெயர் மாற்றினார். அவர்கள் கிரிஸ்தவ மத கிரிகைகளை பின்பற்றவில்லை.
பண்ணியபுரத்தில் OR தேனியில் 1950 களில் piano வாசித்து pray பண்ணும் church இருந்தது என்று நீங்கள் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம்.

ராஜாவின் தந்தைக்கு மூணாவது மனைவின் பிள்ளைகளை தான் ராஜாவும் அமரனும். தாய் சின்னதாய் இந்து மதத்தவராகவே இருந்துள்ளார்.

ராஜா தன்ராஜ் மாஸ்டரிடமே மேற்கத்தைய இசை கற்றார். அவருக்கு கிட்டார் முதலே தெரியாது. தன்ராஜ் மாஸ்டர் மூலமே கற்று கொண்டார்.

இளையராஜா அண்ணன் வரதராஜன் மூலம் கற்றது பாடுவது ஹார்மோனியம் வாசிக்க கற்று கொண்டதும் தான்.

Amudhavan said...


podaang... said...

\\ அமுதவன் என்கிற சல்லிப் பயலுக்கு,
உன்னை முட்டாள், கேனயன், லூசு என்றெல்லாம் நான் சொல்லவில்லை,.....\\

இளையராஜாவை விமர்சித்து எழுதும்போது வரும் பின்னூட்டங்களில் கொஞ்சம் 'சுமாரான' வார்த்தைகளுடன் உள்ள பின்னூட்டம் இது என்பதனைத் தெரிவிக்கவே இதனை இங்கே வெளியிட நேர்ந்தது. இவர்களின் கோபம் இப்படித் தாறுமாறாக வெளிப்படும்போதே இவர்களுக்கு விவாதிக்கவோ பகிர்ந்துகொள்ளவோ ஏதுமற்றுப்போய் விஷயப்பற்றாக்குறையால் அல்லாடுகிறார்கள் தவிக்கிறார்கள், இயலாமையின் கோபம் கெட்டவார்த்தைகளில் வெளிப்படுகிறது என்பதும் தெரிகிறது. இவர்களுக்காகப் பரிதாபப்படலாம்.

\\டேய்...புள்ள குட்டிங்கள யாவது படிக்க வையுங்கடா ...\\

பாவம், இதையும் அவர் அவரது சகாக்களுக்குச் சொல்லித்தான் செய்யவைக்க வேண்டியுள்ளது.

Amudhavan said...


Anonymous said...

\\ எம்.எஸ்.வீ அடித்த காப்பி தேவாவை மிஞ்சி விடும்ஆதாரம் ஏராளம் உண்டு.கங்கை அமரன் மட்டுமல்ல இளையராஜாவும் எம்.எஸ்.வீயை போற்றுபவர் தான்.
ராஜா குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பது வெள்ளிடை மலை.\\

'ராஜா குருவை மிஞ்சிய சிஷ்யர்' என்பதை எந்த இடத்திலும் மறுக்கவே இல்லையே. ராஜா தமது குருவான ஜிகே.வெங்கடேஷை மிஞ்சிய சிஷ்யர்தான் சந்தேகமேயில்லை.

Amudhavan said...

வவ்வால் said...

\\சந்திர பாபு மூலம் "யோடெல்லிங்"(yodeling") ஜோடெலிங் என உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்) வகை வெஸ்டர்ன் கன்ட்ரி இசையை ஜி.ராமநாதன் போன்றவர்கள் தான் தமிழுக்கு கொண்டு வந்தார்கள் என நினைக்கிறேன்,தமிழில் ஏன் இந்தியாவிலேயே "யோடெல்லிங்" பாடுவதில் அப்பொழுது சந்திரபாபு தான் பெஸ்ட் எனலாம்,ஏன் எனில் அந்த வகை பாடல் & இசை அப்பொழுது இங்கு யாருக்குமே அறிமுகமேயில்லை, காரணம் யோடெல்லிங்கே அப்பொழுது தான் மேல்நாட்டிலும் புகழடைய ஆரம்பித்திருந்தது, இணையம், ஊடகம் எல்லாம் பெரிதும் வளராத காலத்தில் நவீன இசையை உடனே கொண்டு வந்திருக்கிறார்கள்,ஆனால் அவர்கள் எல்லாம் என்னமோ பழம் பஞ்சாங்கமாக அப்போ இசை அமைத்துக்கொண்டிருந்தாக " ராசா ரசிகசிகாமணிகளுக்கு" ஒரு நினைப்பு :-))\\

தமிழில் சந்திரபாபு செய்த இந்த யோட்லிங்கை இந்தியில் கிஷோர் குமார் செய்துகொண்டிருந்தார். மிகவும் பிரமாதமாகவே செய்துகொண்டிருந்தார். 'இதுதான் இவரது ஸ்டைல்போலும்' என்று நினைக்கிற அளவுக்கு நிறையப் பாடல்களில் செய்துகொண்டிருந்தார். சந்திரபாபுவுக்கு அடுத்து ஏ.எல்.ராகவனும் ஒரு சில பாடல்களில் இதனை முயன்று பார்த்திருக்கிறார்.

\\அவர்கள் எல்லாம் ஏதோ பழம்பஞ்சாங்கமாக அப்போ இசையமைத்துக்கொண்டிருந்ததாக ராசா ரசிக சிகாமணிகளுக்கு ஒரு நினைப்பு \\

யோட்லிங்கை விடுங்கள். எம்.எஸ்.ராஜு என்ற ஒரு இசைக்கலைஞரை வைத்துக்கொண்டு விசில்களின் மூலம் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சில பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள் பாருங்கள். அத்தனை அற்புதம். இவை பெரும்பாலும் சிவாஜிக்கு ஏற்படுத்தப்பட்டதாக இருந்தன.
அதைப்போலவே சதன் என்ற ஒரு இசைக்கலைஞர். அவரை வைத்துக்கொண்டு எம்எஸ்வி சதனை வாயாலேயே பல்வேறு சப்தங்களை எழுப்பவைத்து பல பாடல்களை உருவாக்கியிருப்பார். 'தத்தை நெஞ்சம் முத்தத்திலே' துவங்கி பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' வரையிலும் சதனின் திறமைகள் உபயோகித்துக்கொள்ளப்பட்டன.
அவள் ஒரு தொடர்கதையில் வரும் 'கடவுள் அமைத்துவைத்த மேடை' பாட்டில் இசையில் ஒரு புதிய ராஜாங்கமே நடத்திக்காட்டியிருப்பார் எம்எஸ்வி.
இந்தப் பாடலைப்போல ஒரேயொரு பாடலையாவது இவ்வளவு புதுமை மிளிர இளையராஜா போட்டிருக்கிறாரா என்பதை யோசித்துப்பார்க்கவேண்டும். சும்மாவே வந்து 'விஸ்வநாதனை மிஞ்சியவர் எங்கள் ராஜா' என்று வெற்று வார்த்தைகளைத் தட்டிவிட்டுப் போவதில் அர்த்தமில்லை.

\\ராஜா குடும்பம் ஆரம்பத்தில் கிருத்துவ மதத்திலே இருந்தது,ராசாவின் பூர்வாசிரம பெயர் டேனியல் ராசையா, அவர் இசையை கற்றுக்கொண்டதே சர்ச்சில் தான், அங்கிருந்த "பேண்டில்" சகோதரர்கள் அனைவரும் வாசிச்சார்களாம், ராசா பியானோ,மற்றும் கிதார் வாசிச்சாராம்,ஆனால் இதை எல்லாம் ராசா சொல்வதேயில்லை, கம்யூனிச மீட்டிங்கில் பாட்டுப்பாடி இசையைக்கற்றுக்கொண்டதாகத்தான் சொல்வார் ,என்னமோ கம்யூனிச கட்சி இசைப்பள்ளி நடத்துவது போல :-))\\

மேலே பலபேருக்குத் தெரியாத தகவல்களைச் சொன்னீர்கள் சரி; ஆனால் இறுதியாக ஒரு வார்த்தைப் போட்டீர்கள் பாருங்கள் 'என்னமோ கம்யூனிச கட்சி இசைப்பள்ளி நடத்துவதுபோல' என்று. அதுதான் வவ்வால் டச்!

\\இப்படி எல்லாம் எடுத்தாளப்பட்ட இசையே,அதனை சம்பந்தப்பட்டவர்களே ஒத்துக்கொண்டாலும் நம்ம மக்கள் ராசா " கண்டுப்பிடிச்சதுனு தான் சொல்லிப்பாங்க :-))\\

இந்த உண்மையை நிறையப்பேர் -ஆமாம், எதையுமே ஒப்புக்கொள்ளாத ராஜா ரசிகர்களைப்பற்றிக் கவலை இல்லை. அதைத்தாண்டிய 'நிறையப்பேர்' இந்தக் கற்பிதங்களையெல்லாம் உண்மையென்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவை உண்டாக்குவது மட்டும்தான் நோக்கம்.

Amudhavan said...

வவ்வால் said...
\\அவர் மட்டும் முழு வீச்சில் தகவல்களை கொட்டினார் என்றால் இன்னொரு "ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்" தான் :-))\\

இல்லை பிலிம்நியூஸ் ஆனந்தனுடன் ஒப்பிடாதீர்கள். அவரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றைச் சேகரித்து வைப்பதிலும் சம்பந்தப்பட்ட திரைத்துறையினர் கேட்கும்போது அதனை வழங்குவதிலும் அவருடைய அர்ப்பணிப்பும் ஆற்றலும் அளவிடற்கரியது. அவரது சாம்ராஜ்ஜியம் மிகமிகப் பெரியது. அவரது 'சேமிப்பு' அசாத்தியமானது.......
நாம ஏதோ கொஞ்சம் ஓரமாய் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பது அவ்வளவுதான்...!

Anonymous said...

ராஜாவை விமர்சித்தால் வரும் எதிர்ப்பைவிட ரஹ்மானை விமர்சித்து எழுதினால் வரும் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது என்ன சொல்வீர்களோ?

Umesh Srinivasan said...

KVM,மெல்லிசை மன்னர்,ராஜா,ரஹ்மான்,ஹாரிஸ் என எல்லாருக்கும் நிச்சயம் திறமை இருக்கு. அத்தோட அதிர்ஷ்டமும் இருந்துச்சு. இனிய பாடல்களை நமக்கு அள்ளி வழங்கியதற்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இது இனி வரும் சந்ததிகளுக்கும் பொருந்தும். இசையை ரசிப்போம், ஓவரா ஆராய்ச்சி தேவையா ஐயா?

suresh said...

நிஜமாகவே நீங்கள் இந்த கட்டுரையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

கங்கை அமரன் இளையராஜவைவிட புகழ்பெற்று இருக்க வேண்டியவர் என்று சொல்ல வருகிறீர்களா?

இளையராஜா இசைக்குக் காரணமே கங்கை அமரன்தான் என்று சொல்ல வருகிறீர்களா?

இல்லை, வழக்கம்போல், மற்ற இசையமைப்பாளர்களுக்கு முன்னால் இளையராஜா எல்லாம் ஒரு துரும்பு, அதை தூக்கிவைத்து கூத்தடிக்கிறார்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்கிறீர்களா?

இந்த முழு கட்டுரையைவிட உங்களின் சில பின்னூட்டங்கள் என்னை நிரம்ப சிந்திக்க வைத்தது. முக்கியமாக

// எம்.எஸ்.ராஜு என்ற ஒரு இசைக்கலைஞரை வைத்துக்கொண்டு விசில்களின் மூலம் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சில பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள் பாருங்கள். அத்தனை அற்புதம். இவை பெரும்பாலும் சிவாஜிக்கு ஏற்படுத்தப்பட்டதாக இருந்தன.
அதைப்போலவே சதன் என்ற ஒரு இசைக்கலைஞர். அவரை வைத்துக்கொண்டு எம்எஸ்வி சதனை வாயாலேயே பல்வேறு சப்தங்களை எழுப்பவைத்து பல பாடல்களை உருவாக்கியிருப்பார். 'தத்தை நெஞ்சம் முத்தத்திலே' துவங்கி பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' வரையிலும் சதனின் திறமைகள் உபயோகித்துக்கொள்ளப்பட்டன.
அவள் ஒரு தொடர்கதையில் வரும் 'கடவுள் அமைத்துவைத்த மேடை' பாட்டில் இசையில் ஒரு புதிய ராஜாங்கமே நடத்திக்காட்டியிருப்பார் எம்எஸ்வி. //

உண்மைதான்... அவர் காலத்தில் அது ஒரு ஈடு இணையற்ற இசை முயற்சி - ஆனால் தமிழை பொருத்தவரை மட்டுமே. வேறு யாருமே எங்குமே செய்யாத ஒரு முயற்சி அது என்பதை உங்களால் அறுதியிட்டு கூற முடியுமா?

//இளையராஜா வந்த காலத்தில் இளையராஜா ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டிருக்க இளையராஜாவுக்காகத் திரையுலகில் செய்யப்பட்ட ‘மவுத் பப்ளிசிடி’ சாதாரணமானதல்ல; அதனைப் பெரும்பாலும் பல்வேறு உத்திகளிலும் ‘ரூபங்களிலும்’ செய்துவந்தவர் கங்கை அமரன்தான்.//

// ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் ராஜாவுக்கான விளம்பரம் மட்டுமல்ல அவருக்கான ‘எல்லாமே’ அவரது இசைதான். அவரது இசையே போதுமானது. அதுவே மொத்த உலகையும் சுருட்டிக் கொண்டுவந்து அவரது காலடியில் கிடத்தும்’ என்பதுபோல் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். திரையுலகில் இதெல்லாம் வேலைக்காவாது.

எத்தனைத் திறமை எத்தனை வல்லமை இருந்தாலும் அங்கே நிற்கவும் நிலைக்கவும் ‘வேறுமாதிரியான’ சில ‘சப்போர்ட்டுகள்’ தேவைப்படுகின்றன. //
உங்களின் இந்த இடுகையில் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை, அத்தனையும் உங்கள் வார்த்தைகள்தான். இதில் "திரையுலகில் இதெல்லாம் வேலைக்காவாது.
எத்தனைத் திறமை எத்தனை வல்லமை இருந்தாலும் அங்கே நிற்கவும் நிலைக்கவும் ‘வேறுமாதிரியான’ சில ‘சப்போர்ட்டுகள்’ தேவைப்படுகின்றன" என்று சொல்லி இருப்பது மிகவும் பொதுப்படையானது இளையராஜாவிற்கு மட்டும் பொருந்துவது அன்று என்று நான் எடுத்துகொண்டு இந்த கேள்வியை கேட்கிறேன்.
அப்படியானால்
எம்.எஸ்.வியின் "சப்போர்ட்" யார்?
கே.வி.எம்மின் "சப்போர்ட்" யார்?
பீத்தோவனின் "சப்போர்ட்" யார்?
மொசார்ட்டின் "சப்போர்ட்" யார்?
பாக் "சப்போர்ட்" யார்?
நான் சொல்ல வருவது எல்லாம் இதுதான், இசைக்கு என்றில்லை எது ஒன்றிர்குமே முன்னோடி என்ற ஒன்று கட்டாயம் இருந்தே தீரும். முன்பே இவரால் சொல்லப்பட்டது என்பதே கிடையாது.
இதற்காக யாரும் யாரையும் தாழ்த்தி பேச வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குப்படவில்லை.
இல்லை... எனக்கு இளையராஜாவின் இசையில் பல சந்தேகங்கள் இருக்கிறது என்று இன்னமும் நீங்கள் நம்பினால், பல முக்கியபுள்ளிகளை சாதாரணமாக சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், நேரடியாக இளையராஜாவிடமே உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் அனைத்திற்கும் கறாராக பதில் கேட்டு வாங்க முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது...
இல்லை, இந்த பதிவிலும் இளையராஜாவை அவமானப்படுத்துவதுதான் என் நோக்கம் என்று நீங்கள் சொல்வீர்களானால், நன்றி... எல்லாமே நீங்கள் ஏற்கனவே உங்கள் பல கட்டுரைகளில் சொன்னதுதான். உங்களுக்கு முன்னாலும் பல பேர் சொல்லிச்சென்றதுதான். நான் சொல்ல வேறு ஏதுமில்லை.
கே.வி.எம், எம்.எஸ்.வி. அவர்களின் இசை போல, இளையராஜாவின் இசையும் காலத்தால் அழிந்துவிடாமல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கும்.

anno said...

எம்.எஸ்.வீ அடித்த காப்பி தேவாவை மிஞ்சி விடும்ஆதாரம் ஏராளம் உண்டு.

ராஜா குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பது வெள்ளிடை மலை.
அதில் எம்.எஸ்.வீயும் அடக்கம்.

அமுதவன் சார்,
ஒரு நாய் நிலவை பார்த்து குலைக்கிறது.அதைபார்த்து இன்னும் சில பைத்தியம் பிடித்த நாய்கள் குலைக்கின்றன.
ஆனால் நிலவு என்றென்றும் மக்களை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறது.
கங்கை அமரன் தான் இளையராவிடமிருந்தே காப்பியடிப்பதாக சமீ பத்திலும் கூறியிருக்கின்றார்.இங்கே சிலர் தப்பாக வாழ்வே மாயம் தான் அவர் முதலில் இசையமைத்தார் என்று கூற அதையும் உங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறீர்கள்.அதற்க்கு முன்பே அவர் பல படங்களுக்கு இசை வழங்கி உள்ளார்.சும்மா வதந்தஅகழி நம்பாதீங்க சார்.
எழுதும் பொது சில உண்மைகளை நேர்மையாக எழுத முயற்ச்சியுங்கள்.

வாழ்வே மாயம் படத்தில் " வந்தனம் " என்ற பாடல் அந்திமழை பொழிகிறது " பாடலில் சுட்டதாக மனோவின் நிகழ்ச்சியில் சொன்னார்.
தாங்கள் கிசு , கிசு பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர் என்பதை நிரூபித்து வருகிறீர்கள்.

Amudhavan said...

செந்தில்குமார் said...
\\அமரன் தனது நேர்பேச்சில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை சொல்லி சிலாகித்த விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்திருப்பார். ஆனால் நீங்கள் அது பற்றி எதுவுமே சொல்லாமல், ராஜாவை சாதாரண கலைஞர் என்ற வகையிலே நிறுவுவதற்காக மறைக்கிறீர்கள்.
அமரன் சொன்னது இதுதான். ராஜாவுக்கு வாசிக்கும் அதே இசை கலைஞர்கள்தான், தனக்கும் வாசித்தார்கள். ஆனால் ராஜாவிடம் வாசிக்கும் போதும் அவர்கள் கொடுக்கும் நுட்பத்தை, தன்னிடம் வாசிக்கும் போது அவர்களலேயே கொடுக்க முடிந்ததில்லை. ராஜாவுக்கு வாசிக்கும் போது மட்டுமே அவர்களது இசை வேறு ஒரு தளத்திற்க்கு எடுத்து செல்லபடுகிறது. இந்த நுட்பம் ராஜாவின் கடும் உழைப்பாலும், தவத்தாலும் மட்டுமே சாத்தியமான ஒன்று. உலக சந்தோஷங்களில் இருந்து தள்ளி நிற்க அவரால முடிந்த்து. என்னால் முடியவில்லை. \\

வாங்க செந்தில்குமார் தங்கள் வருகைக்கு நன்றி. கங்கை அமரனை நீங்கள் சந்தித்துப் பேசியதற்கும் நான் சந்தித்ததற்கும் நிறைய கால இடைவெளி இருக்கிறது என்பதனை நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்தின் மூலமே ஊகித்துக்கொள்ள முடிகிறது. நீங்கள் சந்தித்த காலத்தில் அவர் தனியாக இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் சந்தித்த சமயத்தில் கங்கை அமரன் தன் அண்ணனோடுதான் இருந்தார். எனவே அமரனுடைய இசைக்கு இசைக்கலைஞர்கள் வாசிக்கும் பிரச்சினையே அன்றைக்கு இருக்கவில்லை. அதனால் என்னிடம் எதுவும் சொல்லவும் இல்லை. நான் மறைக்கவேண்டிய அவசியமும் இல்லை.

\\மற்றபடி, மெல்லிசை குழுவினரால் பிரதியெடுக்க முடிந்தால் தான் அது நல்ல இசை போன்ற உங்களது மதிப்பீடு குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. \\

மெல்லிசைக்குழுவினரால் பிரதியெடுக்க முடிந்தால்தான் அது நல்ல இசை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அப்படி பிரதியெடுக்க முடிந்தால்தான் அது மேடைகளில் மறுபடியும் மறுபடியும் வாசிக்கமுடியும். அப்படியில்லாவிட்டால் வாசிக்க முடியாது என்ற நடைமுறை நிதர்சனத்தைத்தான் சொல்லியிருக்கிறேன்.

Amudhavan said...

Anonymous said...

\\ Mudiya enna solla varinga? avanga isai methaigal. athai pesa nee yaru?\\

அவங்க என்பது பன்மையாக ஒலிக்கிறது. நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?

Amudhavan said...

Umesh Srinivasan said...

\\ KVM,மெல்லிசை மன்னர்,ராஜா,ரஹ்மான்,ஹாரிஸ் என எல்லாருக்கும் நிச்சயம் திறமை இருக்கு. அத்தோட அதிர்ஷ்டமும் இருந்துச்சு. இனிய பாடல்களை நமக்கு அள்ளி வழங்கியதற்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இது இனி வரும் சந்ததிகளுக்கும் பொருந்தும். இசையை ரசிப்போம், ஓவரா ஆராய்ச்சி தேவையா ஐயா?\\

வாங்க உமேஷ். நீங்கள் ஆரம்ப வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள், அதுதான் என்னுடைய கட்டுரைகளின் அடிநாதம். இளையராஜாவுக்கு முன்பே தமிழ்த்திரை இசையை நமக்கு இசைமேதைகள் வழங்கிவிட்டார்கள். இளையராஜாவும் ஏன் ரகுமானும் வந்து அவர்களுடைய பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாரும் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திடீரென்று ஒரு மதம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது. ஒரேயொரு இசைக்கடவுள்தான் இந்த பூலோகத்தில் என்று பிரகடனப்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப மட்டுமே பூஜைகளும் புனஸ்காரங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தாங்கள் மட்டும்தான் இசை பக்தர்கள் என்று தண்டோரா போடப்படுகிறது.

இணையத்தின் பக்கங்கள் யாரையும் கேட்காமலேயே இவர்களுக்கு முற்று முழுசாய் ஒதுக்கப்படுகிறது. புதிய பக்தி இலக்கியங்கள் எழுதப்படுகின்றன.

ஒன்றும் புரியாத பல பலி ஆடுகள் புதிய மதத்தைத் தழுவவும் தயாராகின்றன. பல்லாண்டு காலமாய் பலரின் இசையை ரசித்துக்கொண்டிருந்த இணையத்தைப் பார்க்க மட்டுமே தெரிந்து பயன்படுத்தத் தெரியாத பல பெரியவர்கள் - செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பும் இல்லை. வசதியும் இல்லை.
இந்த சமயத்தில்தான் சில எதிர்க்குரல்கள் இதற்காக எழுந்திருக்கின்றன.
உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Amudhavan said...


suresh said...
\\நிஜமாகவே நீங்கள் இந்த கட்டுரையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.\\

வருகைக்கு நன்றி சுரேஷ். உங்களின் இந்தக் கேள்விக்கான எனது பதில் மேலே திரு உமேஷ் ஸ்ரீனிவாசனுக்குச் சொல்லியிருக்கும் பதிலிலேயே உள்ளது.

\\நேரடியாக இளையராஜாவிடமே உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் அனைத்திற்கும் கறாராக பதில் கேட்டு வாங்க முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது...\\

இளையராஜாவை சந்தித்தால் அவரிடம் பேச எனக்கு வேறு விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

\\கே.வி.எம், எம்.எஸ்.வி. அவர்களின் இசை போல, இளையராஜாவின் இசையும் காலத்தால் அழிந்துவிடாமல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கும். \\

ஆஹா, இளையராஜா ரசிகர்கள் இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி.

Amudhavan said...


Anonymous said...

\\ராஜாவை விமர்சித்தால் வரும் எதிர்ப்பைவிட ரஹ்மானை விமர்சித்து எழுதினால் வரும் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது என்ன சொல்வீர்களோ?\\

ரஹ்மானை இப்போது எதற்காக விமர்சிக்க வேண்டும்? அவர்தான் இசையின் ஒரே கடவுள் என்றெல்லாம் யாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களா என்ன?

suresh said...

உங்களை மகிழ்ச்சிப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சிதான். நான் இசையின் ரசிகன் என்பதை மட்டும் தாழ்மையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் - அது இளையராஜா இசையோடு நின்றுவிட நான் அனுமதித்ததில்லை.....

Amudhavan said...


anno said...

\\ஒரு நாய் நிலவை பார்த்து குலைக்கிறது.அதைபார்த்து இன்னும் சில பைத்தியம் பிடித்த நாய்கள் குலைக்கின்றன.
ஆனால் நிலவு என்றென்றும் மக்களை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறது.\\

இந்த உதாரணம் வெறும் இளையராஜாவுக்கு மட்டுமே உரித்தானதா? இல்லை ஜி.ராமனாதன். சுதர்சனம்.கேவிஎம், எம்எஸ்வி எல்லோருக்குமானதா என்பது புரியவில்லை.

\\கங்கை அமரன் தான் இளையராவிடமிருந்தே காப்பியடிப்பதாக சமீ பத்திலும் கூறியிருக்கின்றார்.இங்கே சிலர் தப்பாக வாழ்வே மாயம் தான் அவர் முதலில் இசையமைத்தார் என்று கூற அதையும் உங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறீர்கள்.அதற்க்கு முன்பே அவர் பல படங்களுக்கு இசை வழங்கி உள்ளார்.சும்மா வதந்தஅகழி நம்பாதீங்க சார்.\\

இன்னும் எத்தனை தடவை சொல்வது என்றே புரியவில்லை. இந்தப்பதிவில் நான் எங்கேயும் கங்கை அமரன் மிகச்சிறந்த இசையமைப்பாளர், ராஜாவையே மிஞ்சிவிட்டவர் என்றெல்லாம் எழுதவே இல்லையே.

\\எழுதும் பொது சில உண்மைகளை நேர்மையாக எழுத முயற்ச்சியுங்கள்.\\

ஒன்று செய்யுங்கள் anno, எவை எவை உண்மைகள்? அவைகளை நேர்மையாகச் சொல்வது எப்படி என்று ஒரு சிறிய பட்டியல் போட்டுவிடுங்கள்.

\\தாங்கள் கிசு , கிசு பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். \\

உங்கள் கண்டுபிடிப்பும் நன்றாகத்தான் இருக்கிறது.

Amudhavan said...

suresh said...

\\ நான் இசையின் ரசிகன் என்பதை மட்டும் தாழ்மையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் - அது இளையராஜா இசையோடு நின்றுவிட நான் அனுமதித்ததில்லை..... \\

அருமை.

Anonymous said...

இளையராஜாவை உலகம் காணாத மேதை என்று அளவுக்கு அதிகமாகப் புகழ்வது தவறு. அதே சமயம் தமிழ் இசையமைப்பாளர்களில் காலம் கடந்து நிற்கக்கூடிய பாடல்களை எண்ணிக்கை அடிப்படையில் அதிக அளவில் தந்தவர் ராஜாதான் என்பது புறவயமாக நிறுவத்தக்க உண்மை.

விஸ்வநாதன்- ராமமூர்த்தி திரையிசையை நவீனப் படுத்தியவர்கள் என்கிறார்கள். அவர்களது இன்டர்லூட்கள் முழுமையான இசைக்கோர்வைகள் என்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் என் போன்ற ராஜா பாடல்களைக் கேட்டு வளர்ந்த தலைமுறைக்கு அன்றும் சரி, இன்றும் சரி, அவை சலிப்பூட்டுகின்றன என்பதே உண்மை. ராஜாவின் இன்டர்லூட்களோ ரசனைக்குரியவையாக இருக்கின்றன. நின்னுக்கோரி வரணம் யாரால் மறக்க முடியும்?

பருவமே... பாடலில் வரும் ஹார்மோனியத் துணுக்கு..! இன்னும் இளையநிலா, இது ஒரு பொன்மாலைப் பொழுது, மன்றம் வந்த தென்றலுக்கு, பனி விழும் இரவு, செந்தூரப்பூவே, செண்பகமே, மண்ணில் இந்தக் காதல்... என நினைத்துப் பார்த்தால் ராஜாவுடைய புகழ்பெற்ற பாடல்கள் அனைத்திலுமே இன்டர்லூட் இரசிக்கத்தக்க வகையிலும் மனதில் பதிந்துவிடும் வகையிலுமே இருக்கிறதே.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இசை வரவர அதிகமாக 'பிராசஸ்' பண்ணப்பட்ட ஒன்றாக ஆவது இயல்பான வளர்ச்சி. இதனால் எம்.எஸ்வி பாடல்களை விட ராஜா பாடல்கள் மேடையில் இசைக்கக் கடினமாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ராஜா பாடல்களை விட இசைக்க இன்னும் கடினமாக இருப்பதும் பரிணாம வளர்ச்சியே.

நீங்களே சொல்லுங்களேன்.. எஸ்விவெங்கட்ராமன், சிஆர் சுப்பராமன், ஜி. ராமனாதன், எம்.எஸ்.வி. இவர்கள் பாடல்களை முரசு, சன் லைப் சேனல்களுக்கு வெளியே எப்போது கடைசியாக கேட்டீர்கள்? இதுவே ராஜா பாடல்கள், திரைப்படங்கள், எஃப். எம் ரேடியோ, மியூசிக் சேனல்கள், ஆட்டோக்கள், கார்கள் என எங்கும் ஒலித்தபடியே இருக்கின்றன. ராஜா பாட்டு ஒன்றாவது காதில் விழாத நாளே இருக்காது! அவருக்கு முன் வந்த இசையமைப்பாளர்களின் இசையெல்லாம் இப்போது இயற்கை மரணம் அடைந்து விட்டது. மியூசியத்தில் இருக்கும் ஃபாசில் ஸ்பெசிமன் போல அல்லது கற்காலப் பொருள்களைப்போல ஆர்வலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வளவே. மியூசியத்தில் இருப்பவை விலை மதிக்க முடியாத விஷயங்கள்தான். ஆனால் அவற்றைத் தாண்டி உலகம் வெகுதூரம் வந்துவிட்டது. அதென்னவோ இந்தப் பழமை படிதல் ராஜா இசைக்கு மட்டும் இருப்பதில்லை. அவை இன்றைக்கும் புது மெருகோடேயே இருப்பது என்ன மாயமோ! ரஹ்மான் வந்தபோது ராஜா இனி அவ்வளவுதான் என்றுதான் நானே நினைத்தேன். 20 ஆண்டுகள் கடந்து இன்று, ரஹ்மானின் பல சூப்பர் ஹிட்கள் போன இடம் தெரியவில்லை. இப்போது கேட்டால் பிடிப்பதும் இல்லை. ராஜா 70-80 களில் இசை அமைத்த பாடல்கள் இன்றும் ஒலித்தபடியே உள்ளன. அவற்றை யாரும் மறக்கவில்லை! இதுவே ராஜாவுக்கும் அவருக்கு முன்னும், பின்னும் வந்த இசையமைப்பாளர்களுக்கும் வித்தியாசம்.

ஆனால் ஒன்று, எனக்கு அவருடைய இசைதான் பிடிக்குமே தவிர ஆன்மீகம், தத்துவம், ஏன் இசையைப் பற்றியே அவரது உளறல்களோ, அவர் இயற்றும் 'வெண்பாக்களோ' அல்ல.

சரவணன்

Anonymous said...

வவ்வால்,
/// எனவே மிருதங்கம் தாள வாத்தியம் என்பதால் அதன் மூலம் ,ஸ்வரத்தில் "ஜாயிண்ட் அடிக்காமல், லயத்துல "ஜாயிண்ட் அடிச்சு" சொனாட்டாவுடன் "சிங்க்" செய்து "கலப்பிசையாக்கி கேட்க புதுசா காட்டிப்புட்டார். ///

அது போதுமே! திரை இசைக்கு அதற்குமேல் என்ன வேண்டும்? கேட்க கேட்சியாக இருக்க வேண்டும். இருக்கிறது. அதுதான் ராஜாவின் (அசுர) பலம்!

சரவணன்

விமல் said...

எத்தனை வடிவங்களிலும் நீங்க இளையராஜாவை தாழ்த்தி எழுதினாலும் அது எந்த சபையிலும் எடுபடப்போவதில்லை.ஏனென்றால் எல்லாவற்றிலும் திரிபுகளே உங்கள் எழுத்துக் .கலையாக இருக்கிறது.
இசை என்று பார்த்தால் தன்னை ALLROUNDER ஆக வளர்த்துக் கொண்டவர் ராஜா என்பது அவரது சகபாடி இசையமைப்பாளர்கள், மற்றும் ரசிகர்கள் ஏற்றுக்க்கொள்ளும் விசயம்.
அதை மறுப்பதற்கு நீங்கள் பிடித்த துருப்பு சீட்டு கங்கை அமரன்.அது கூட துருபிடித்த சீட்டாகி விட்டதில் கவலை தான். ராஜா இசையுடன் நின்றால நல்லது அவரது ஆன்மிகம் நமக்கும் ஒத்துவராது.

ரசிகன் said...

//நீங்களே சொல்லுங்களேன்.. எஸ்விவெங்கட்ராமன், சிஆர் சுப்பராமன், ஜி. ராமனாதன், எம்.எஸ்.வி. இவர்கள் பாடல்களை முரசு, சன் லைப் சேனல்களுக்கு வெளியே எப்போது கடைசியாக கேட்டீர்கள்? இதுவே ராஜா பாடல்கள், திரைப்படங்கள், எஃப். எம் ரேடியோ, மியூசிக் சேனல்கள், ஆட்டோக்கள், கார்கள் என எங்கும் ஒலித்தபடியே இருக்கின்றன. ராஜா பாட்டு ஒன்றாவது காதில் விழாத நாளே இருக்காது! அவருக்கு முன் வந்த இசையமைப்பாளர்களின் இசையெல்லாம் இப்போது இயற்கை மரணம் அடைந்து விட்டது. மியூசியத்தில் இருக்கும் ஃபாசில் ஸ்பெசிமன் போல அல்லது கற்காலப் பொருள்களைப்போல ஆர்வலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வளவே. மியூசியத்தில் இருப்பவை விலை மதிக்க முடியாத விஷயங்கள்தான். ஆனால் அவற்றைத் தாண்டி உலகம் வெகுதூரம் வந்துவிட்டது. அதென்னவோ இந்தப் பழமை படிதல் ராஜா இசைக்கு மட்டும் இருப்பதில்லை. அவை இன்றைக்கும் புது மெருகோடேயே இருப்பது என்ன மாயமோ! ரஹ்மான் வந்தபோது ராஜா இனி அவ்வளவுதான் என்றுதான் நானே நினைத்தேன். 20 ஆண்டுகள் கடந்து இன்று, ரஹ்மானின் பல சூப்பர் ஹிட்கள் போன இடம் தெரியவில்லை. இப்போது கேட்டால் பிடிப்பதும் இல்லை. ராஜா 70-80 களில் இசை அமைத்த பாடல்கள் இன்றும் ஒலித்தபடியே உள்ளன. அவற்றை யாரும் மறக்கவில்லை! இதுவே ராஜாவுக்கும் அவருக்கு முன்னும், பின்னும் வந்த இசையமைப்பாளர்களுக்கும் வித்தியாசம்.//

ஹலோ பாஸ்,

என்ன பேச(த்த)றீங்க?

இளையராஜாவுக்கு முன்னாடியே தமிழ்த் திரையிசையில் சாதிக்கப்பட வேண்டியவை எல்லாமே செய்து முடிக்கப்பட்டாச்சு!

திரும்பத் திரும்ப வந்து ராசா புகழ் மாலை பாடி புது மதத்த ஸ்தாபிக்கிறீங்க. உங்களுக்கு ராசாவப் பிடிச்சா உங்களோட வச்சிக்குங்க. ஏன் இணையத்த நாறடிக்கிறீங்க?

நீங்க ஏன் எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர் சுப்பராமன், எஸ் ராஜேஸ்வர ராவ், ஜி. ராமனாதன், சங்கர் கணேஷ், ட்டி.ஆர். பாப்பா, சந்திரபோஸ், வி.குமார், தேவா, ஹாரிஸ், இமான், தினா, எஸ்.ஏ. ராஜ்குமார் போன்றோரின் கானங்களைக் கேட்கக் கூடாது?

Vimal said...

ஒன்று செய்யுங்கள் anno, எவை எவை உண்மைகள்? அவைகளை நேர்மையாகச் சொல்வது எப்படி என்று ஒரு சிறிய பட்டியல் போட்டுவிடுங்கள்.-amudhavan

கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செய்தமைதான் தகராருக்கு காரணம்.\\

சரியான தகவல்களுக்கு நன்றி நண்பரே amudhavan

you meean this is correct information..? please think before write some facts.I give you some real fact.[ you writing is always based on non real things ] you are a revisionist.

Gangai amaran as music director.
-------------------------------------
Suvarillatha Chithirangal (1979)
Malargalae Malarungal (1980)
Mouna Geethangal (1981)
Ramaye Vayasukku Vanthutta (1980)
Tharayil Pootha Malar (1980)
Vaazhvey Maayam (1982)
Naal Ellaam Pournami (1983)

--------
please check the information and tell your friends.Do not tell lies.

Vimal said...

Mr.Amuthu
this is the real fact...
நீங்களே சொல்லுங்களேன்.. எஸ்விவெங்கட்ராமன், சிஆர் சுப்பராமன், ஜி. ராமனாதன், எம்.எஸ்.வி. இவர்கள் பாடல்களை முரசு, சன் லைப் சேனல்களுக்கு வெளியே எப்போது கடைசியாக கேட்டீர்கள்? இதுவே ராஜா பாடல்கள், திரைப்படங்கள், எஃப். எம் ரேடியோ, மியூசிக் சேனல்கள், ஆட்டோக்கள், கார்கள் என எங்கும் ஒலித்தபடியே இருக்கின்றன. ராஜா பாட்டு ஒன்றாவது காதில் விழாத நாளே இருக்காது!

You live in a fantasy world.

Anonymous said...

தமிழ் நாட்டில் என்ன பிரச்னை என்றால் , எழுத்தாளர்கள் தான் இசை பற்றியும் விமர்சனம் (?)
செய்கிறார்கள்.

தங்கள் இசை அறிவையும் மீறி தனிப்பட்ட சில காரணங்களுக்காக உங்கள் போன்றவர்களின் கட்டுரைகள் தான் அபத்தம்.

Anonymous said...

தெரியாத விஷயத்தைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் உணர்வது நல்லது.
இது தான் இந்த கட்டுரை சொல்லும் பாடம் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

ஒருவர் எழுத்தாளாராய் இருப்பதனாலேயே எதைப் பற்றியும் விமர்சனம் செய்யலாம் என்கிற அவல நிலை இங்கே நிலவுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு jargonகள் மூலம் ஒரு நம்பகத்தன்மையை வரவழைக்க முற்படுகிறார்கள். இதில் பெரும்பாலும் தங்கள் சொந்த கருத்தினையும் விருப்பு வெறுப்பகளுமே உண்மையான நிலை என்று தோற்றம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள்.

எந்தத் படைப்பினைப் பற்றியும் அத்துறை சார்ந்த வல்லுனர்களின்/அறிந்தவர்களின் வாயிலாக வருவதே சரி.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நீங்க சொன்னது போல கிஷோர்குமாரும் யோடெலிங்கில் பாடி இருக்கார்,எனக்கு சந்திரபாபு தான் நியாபகம் வரும் :-))

"கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடலை சுமாராக பாடினால் கூட கல்லூரி பாட்டுப்போட்டிகளில் பரிசு கொடுத்துடுவாங்க, ஏன் எனில் அப்பாடலை லைவாக பாட மிமிக்ரி போல ஏகப்பட்ட திறமை வேண்டும்,கடினமும் கூட, எனது கல்லூரிக்கால நண்பன் இப்பாடலை பாடியே பரிசு வாங்கிடுவான்.ஹி...ஹி நாங்கலாம் கல்லூரியில் கலைக்குழுவா சுத்தின கோஷ்டி,ஏகப்பட்ட மைம்,ஸ்கிட், பாட்டுப்போட்டினு போட்டு அடிக்கடி "கட்' அடிச்சு ஓ.டீ வாங்கிட்டு ஊர் சுத்துவோம் :-))

எம்.எஸ்.ராஜூ இப்பவும் திரைப்படங்களில் "சிறப்பு சப்தங்கள்" வேலை செய்துக்கொண்டிருக்கிறார்,பல படங்களில் பெயர் பார்த்துள்ளேன்.

#மேலும் அக்கால ரெக்கார்டிங் வசதியும் ரொம்ப கம்மி, டிராக்லாம் இல்லை, மோனோவில் லைவாக ரெக்கார்டிங் நடக்கும், கருவிகளும் நவீனமானவை அல்ல, கே.பி.சுந்தராம்பாள் பாடியதை ரெக்கார்டிங் செய்ய கூட முடியாத அளவுக்கு தான் ,அக்கால மைக்ரோபோனின்"ரேஞ்ச்" இருந்துள்ளது,எனவே அவரை "ஹால்ஃப் த்ரோட்டில்" பாட வைத்து தான் ஹெம்.எம்வி எல்.பி தட்டுக்கள் வெளியிட்டது எனப்படித்துள்ளேன்,அக்கால பாடகர்களின் குரலின்"காத்ரம்" அப்படி,இப்போ எல்லாம் "அப்பளம்" போல மெலிதான குரலில் தான் பாடுகிறார்கள் :-))

கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, சீர்காழி, டி.எம்.எஸ் போன்ற வெண்கல குரல் பாடகர்களின் குரலை சரியாக "சினிமாவுக்கு ஏற்றப்போல பாட வச்சு, இசையும் சேர்த்து இனிமையாக்க ரொம்பவே மெனக்கெடனும்,அத்தகைய கஷ்டம்லாம் இப்போ இல்லை என்பதால் ,இசை அமைப்பது டெக்னிகலா எளிதாகிடுச்சு.

# //நாம ஏதோ கொஞ்சம் ஓரமாய் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பது அவ்வளவுதான்...!//

என்ன ஒரு அவையடக்கம்!!!,எங்களுக்கு பில்ம் நியூஸ் ஆனந்தனையா தெரியும்,வலையில் உங்க அளவுக்கு ஆதாரப்பூர்வமாக திரைத்தகவல்களை யாரும் அளிப்பதில்லை,எனவே வலையில் நீங்க தான்'ஃபில்ம் நியூஸ்" !
------------
# //ராஜா குருவை மிஞ்சிய சிஷ்யர்' என்பதை எந்த இடத்திலும் மறுக்கவே இல்லையே. ராஜா தமது குருவான ஜிகே.வெங்கடேஷை மிஞ்சிய சிஷ்யர்தான் சந்தேகமேயில்லை.//

குருவை மிஞ்சிய சிஷ்யர்னு பெருமையாக சொல்லப்போய் வசமாக வாங்கிக்கிட்டாரே அனானி, ஹி...ஹி உங்கக்கிட்டே எடுத்துக்கொடுத்து அடி வாங்கனே ஆட்கள் வராங்களே :-))

# //J Mariano Anto Bruno Mascarenhas said...

\\ :) \\

வருகைக்கு நன்றி நண்பரே. பாராட்டுகிறீர்களோ திட்டுகிறீர்களோ இப்படி பொம்மை போடுவதற்குபதில் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போகலாமே.//

மரு.புருனோ ஒன்னியும் சொல்லாமல் போனது ஒருவகையில் நல்லது,இல்லைனா இன்னேரம் உங்கப்பதிவே "ரணகளம்" ஆகி இருக்கும் :-))

அவரு ஒன்னு சொல்ல,நான் பதிலுக்கு கலாய்க்கன்னு நான் ஸ்டாப் சரவெடியா வண்டி ஓடும்ல.

இப்போவும் நீங்க ம்ம்னு சொல்லுங்க,அவரு கையப்புடிச்சு இழுத்து வம்படிக்கிறேன் :-))
--------------------

வவ்வால் said...

அனானி,

//அந்த ஜாதி ஒடுக்குமுறையில் இருந்து விலக தான் கிறிஸ்தவ மதத்துக்கு ராஜாவின் தந்தையார் மாறினார். பிள்ளைகளையும் பெயர் மாற்றினார். அவர்கள் கிரிஸ்தவ மத கிரிகைகளை பின்பற்றவில்லை.
பண்ணியபுரத்தில் OR தேனியில் 1950 களில் piano வாசித்து pray பண்ணும் church இருந்தது என்று நீங்கள் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம். //

நானாக எதனையும் சொல்லவில்லை,படித்தது ,மற்றவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன்.

ராஜா குடும்பத்தினர் மதக்கிரியைகளைப்பின்ப்பற்றவில்லை எனச்சொல்வதன் மூலம் சர்ச்சில் வாத்தியம் வாசிக்கக்கற்றுக்கொள்ளவில்லைனு எப்படி சொல்ல வரிங்க?

நீங்கள் சொல்லி இருப்பது போல மூன்றாவது மனைவியான சின்னத்தாயின் பிள்ளைகளே ராஜா, அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோர், சின்னத்தாய் அவர்களை மணம் செய்யும் போதே ராஜாவின் தந்தை ,ராமசாமி கிருத்துவராக மாறி,டேனியல் ராமசாமியாகிவிட்டார், எனவே பிறக்கும் போதே கிருத்துவக்குடும்பத்தில் தான் பிறந்தார்கள், அனைவர் பெயருக்கும் முன்னால் டேனியல் என சேர்த்து பெயர் வைத்தார் அவரது தந்தையார்.

பள்ளி சான்றில் டேனியல் ராசையா என்றே கொடுக்கப்பட்டுள்ளது,அதே போல டேனியல் அமர்சிங்க், டேனியல் பாஸ்கர் என்றே பெயர்கள் , ராமசாமி டேனியல் பாஸ்கர் என்பதை சுருக்கி ஆர்.டி.பாஸ்கர் என கடைசி வரையில் ராஜாவின் அண்ணன் பெயரை வைத்திருந்தார்.

இரண்டாம் மனைவியின் மகன் பாவலர் வரதராஜன்ஆவார்,அவர் கம்யூனிச இயக்கத்தில் இருந்தார் , ஆர்மோனியம்ம் வாசித்தார் என்றால் அவருக்கு எப்படி வாசிக்க தெரிந்தது,தானாக வந்ததா?

தேனி மாவட்டம் கிருத்துவ மத பரவலுக்கு இந்தியாவில் முன்னோடியான மாவட்டம், மலைப்பிராந்தியம் என்பதால் பல எஸ்டேட்கள் வெள்ளையர்கல் வசம் இருந்தது, அங்குள்ள சர்ச்சுகளில் வெள்ளைக்கார ஃபாதர்களே பணிப்புரிந்தார்கள், கி.பி.1600 காலத்திலேயே சின்னமனூரில் கிருத்துவ தேவாலயம் கட்டப்பட்டு, கிருத்துவம் பரப்பப்பட்டுள்ளது, ராயப்பன் பட்டியில் 1854 இல் கட்டிய சர்ச் இன்றும் உள்ளது, இந்தியாவில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்று ராயப்பன் பட்டி,"பனிமய மாதா தேவாலயம்.

தேனியில் மிகப்பெரிய சர்ச் 1942 இல் கட்டப்பட்டுள்ளது, இன்றும் இருக்கு, அதற்கு முன்னரே சிறிய சர்ச் இருந்துள்ளது. இவை எல்லாம் மதுரை ஆச்ர்ச்பிஷப் டயோசின் தளத்தில் உள்ள தகவல்கள்.

இளைய ராஜா ஜூன் 3,1943 இல் தான் பிறந்துள்ளார், எட்டாம் வகுப்பு வரையில் கிருத்துவ மிஷனரிப்பள்ளியில் தான் படித்துள்ளார், எனவே சர்ச்சில் இசைப்பயில வாய்ப்புள்ளது.

சர்ச்சில் தினமும் பியானோ வாசிச்சு பிரே செய்யனும்னு அவசியம் இல்லை, கிருஸ்மஸ்,ஈஸ்டர் போன்ற நாட்களில் இசைக்க என குறிப்பிட்ட பாடல்களுக்கு மட்டும் பயிற்சிக்கொடுத்து ஆட்களை தயார் செய்வதும் வழக்கம். அப்படித்தான் இளமையில் "இசைக்கருவிகளை' இசைக்க ராஜா கற்றிருக்கிறார்.

தன்ராஜ் மாஸ்டரிடம் ராஜா இசைப்படிக்க சென்றது 1968 இல், அப்பொழுது 25 வாலிபனாக இருந்திருப்பார், அப்போ அது வரைக்கும் கொஞ்சம் கூட இசைக்கருவிகளை வாசிக்க தெரியாமலா, சினிமாவில் சேர சென்னைக்கு வந்திருப்பார்?

ஏற்கனவே கொஞ்சம் கற்று இருந்தார் மேற்க்கொண்டு முறைப்படி கற்று ,லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் தேர்வெழுதவே ,தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்துள்ளார்,அதுக்கூட முழுசாக முடிக்கவில்லை, அப்பொவே சினிமாவில் கிதார் &காம்போ வாத்தியக்காரராக வேலையும் செய்ததால் ,அடிக்கடி வகுப்புக்கு செல்லவில்லை என ஒழுங்கா வரதான்னா வா இல்லைனா வராத என மாஸ்டர் சொன்னதால் , தமக்கு கருவி வாசிப்பதில் பிரச்சினை இல்லை, தியரி எழுதுவது தான் கடினம் என ராஜாவே தனியாக படித்து " டிரினிட்டி" எக்ஸாம் எழுதி பாசானதாக,அவரே பெருமையாக பேட்டியும் கொடுத்துள்ளார்.

நீங்க சொன்னது போல .கிதாரே வாசிக்க தெரியாமல் எப்படி திரைப்படத்துக்கு வாசிச்சு இருப்பார்,அதுவும் தன்ராஜ் மாஸ்டரிடம் வகுப்புக்கு போயிட்டு இருக்கும் போதே?

கம்யூனிச கட்சியில் கிதாரெல்லாம் வாசிச்சு தான் பிரச்சாரம் செய்றாங்களா? கட்சியில் ஆர்மோனியம் வாசிச்சு பாட்டுப்பாடுவது,பறையடிப்பது எல்லாம் செய்வார்கள்,ஆனால் அதெல்லாம் ஏற்கனவே இசை தெரிஞ்சவங்க செய்ற கட்சிப்பணி,இதுக்காக மெனக்கெட்டு இசைப்பயிற்சிலாம் நடத்துவதில்லை :-))

Anonymous said...

அமுதவன் சார்

அதெப்படி கங்கை அமரன் உங்க கிட்ட ஒன்னு சொல்லறாரு ஆனா எல்லார்கிட்டையும் வேற ஒன்னு சொல்லறார்.

நீங்க எழுதி இருக்கிறத எல்லாம் கங்கை அமரன் கீழ உள்ள வீடியோவில் தெளிவாக மறுக்கிறார்

1. இளையராஜா தான் பிஸியாக இருந்த சமயம் மற்ற directors கிட்ட கங்கை அமரனை சிபாரிசு செய்தார். Neenga sandaingreenga

2. ஒரே insturmentalists தான் இருவரிடமும் பணி ஆற்றினாலும் இளையராஜா கொடுத்த இசையை அவரால் முடியவில்லை. Neenga gangai amaran rajavukku help pannarunnu solreenga

3. இளையராஜா பாட்டை தான் பயன்படுத்தி கொண்டதாக அவரே சொல்கிறார். Neenga oppositea solreenga

http://www.youtube.com/watch?v=-EpQSdoE6n8

Ithu vera gangai amarano..

Anonymous said...

//பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.//

அப்படி யாரும் சொல்லல சார். ஆனா என்னவோ இளையராஜாவே தன்னை அவ்வாறு சொல்லிக் கொண்டது போல் (அல்லது அவர் கேட்டு அவரின் சிஷ்யகோடிகள் சொல்கிறார்கள் என்றோ) நீங்களாகவே கற்பனையாக நினைத்துக்கொண்டு இளையராஜாவின் ரசிகர்களை வாருவதாக நினைத்துக் கொண்டு இளையராஜாவின் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் விசிறிகள், ரசிகர்கள், வெறியர்கள் இருப்பது நியதி. ஆனால் இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருமே அவரின் வெறியர்கள் போலவும், மற்ற இசையமைப்பாளர்களைத் தூற்றுவது போலவும் பொங்குவது உங்களின் கற்பிதம் மட்டுமே.

இளையராஜாவின் முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அபரிமிதமான ஈடுபாடு புரிந்து கொள்ளக்கூடியதே. உங்களையொத்த வயதில் உங்களைப்போல் மிகப்பலர் இருக்கலாம். ஆனால் அவர்கள் பலரும் இணையத் தொடர்பு இல்லாத தலைமுறையினர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இணையத்தில் இருந்திருப்பார்களேயானால் இளையராஜா vs முந்தைய தலைமுறை என (ராஜா vs ரஹ்மான் இணைய சர்ச்சைகள் போல) பல சர்ச்சைகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். அத்தலைமுறையின் பிரதிநிதி போல் இடுகைகளை இட்டு வந்த நீங்கள் சமீபத்திய இடுகைகளில் இளையராஜா மீது தனிப்பட்ட எரிச்சலில் ராஜாவின் மீது பொதுவெளியில் எறியப்படும் வசைகளைத் தேடியெடுத்துத் தொகுப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

உங்களின் கடந்த கால இடுகைகள் பலவற்றைப படித்தவன் என்கிற முறையில் சமீப காலங்களில் நீங்கள் எழுதிய இடுகைகள் சர்ச்சைகளைக் கிளப்பி புகழ்பெற நினைக்கிறீர்களோ எனவும் எண்ண வைக்கிறது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது வலைப்பதிவை வாசிப்பவர்களிடம் உங்களின் மதிப்பைக் குறைக்க வைத்திருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சற்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். சிலர் உங்களை ஏற்றிவிடுவது புரியும்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
சதன் என்பவரை வைத்து எம் எஸ் வி பல புதுமையான பாடல்களை அமைத்திருக்கிறார்.கடவுள் அமைத்துவைத்த மேடை இன்றுவரை புதுமையாகவே இருக்கிறது.அது போன்ற நவீன இசை அமைப்பு இதுவரை வரவில்லை என்பதே அந்தப் பாடலின் சிறப்பு.
வழக்கம் போலவே வவ்வால் கலக்கலாக பின்னி எடுக்கிறார். இளையராஜா கிருஸ்துவ மதத்தில் இருந்ததும் அதனால் இசையின் மீது அவர்க்கு பரிச்சயம் ஏற்பட்டதும் பலவிதமான மேற்கத்திய இசைக் கருவிகளை இசைக்கும் வாய்ப்பு கிடைத்ததும் உண்மையே.இதை அவர் என்றைக்கும் வெளிப்படையாக சொன்னதே இல்லை. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் மட்டுமல்ல அவரின் முதல் பாடலான அன்னக்கிளி உன்ன தேடுதே பாடல் கூட ஒரு நாட்டுப்புற மெட்டின் காப்பிதான் என்பதை என் நண்பன் ஒருவன் (தேனி பக்கத்தைச் சேர்ந்தவன்) சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இளையராஜாவை புகழ்வதற்கு தகுதிகள் தேவை இல்லை என்றும் அவரையே விமர்சனம் செய்தால் உனக்கு இசையைப் என்ன தெரியும் என்று கேட்பது என்ன லாஜிக்கோ தெரியவில்லை.
வாழ்வே மாயம் படத்தின் எல்லா பாடல்களையும் கங்கை அமரன் அமைத்தார் என்றும் மழைக்கால மேகம் பாடல் மட்டும் தெலுகிலிருந்து அப்படியே உருவப்பட்டதாகவும் படித்திருக்கிறேன். நீல வான ஓடையில் பாடல் கூட இப்படியே உருவாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை.
முன்தீர்மானித்தல் (prejudice) எண்ணம் கொண்டவர்களால் இளையராஜாவின் இசையைத் தாண்டி வெளியே வர முடியாது.இதனால்தான் கே வி மகாதேவன், எம் எஸ் வி -டி கே ஆர் போன்றவர்களின் interlude இசையை சலிப்பு என்று சொல்லத் தோன்றுகிறது. ரகுமானின் இசையை இப்போது யாரும் கேட்கவில்லை என்றும் இளையராஜாவின் இசையை மட்டுமே மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுவது எழுதியவரின் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் உண்டான கருத்தே அன்றி உண்மை அதில் சிறிதும் இல்லை. மேலும் ரகுமானின் வரவுக்குப்பின் இளையராஜா தன் சிம்மாசனத்தை இழந்ததை தமிழ்நாடே அறியுமே.சின்னச் சின்ன ஆசையினால் பெரிதாக பாதிக்கப்பட்டவர் அவர்தானே.

Krubhakaran said...

”சின்ன சின்ன ஆசையே” ”வீடு வரை உறவு” தானே.

Krubhakaran said...

ஆஸ்கார் வாங்கியது ”அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை” தானே.

Krubhakaran said...

சங்கீதம் 7 ஸ்வரங்கள் தானே

Devinth said...

ஓ உள்ளூர் வயித்தெரிச்சல் கோஸ்டியா?!!எழுதுங்க..எழுதுங்க :D

Anonymous said...

sir
nan ellam isai ketka arambitha kalathil rahman pinni eduthu kondirunthar...anaal konja natkalulluku piragu enadhu rasanai ilaiyaraja pakkam thirumbiyathu..nyapadi en pondra less than 30 years crowd rahmanai ketka vendum..allathu Harrisai ketka vendum..

Anaal naan mattum alla..en school, college, office ena pala idangalil rajavin rasigargal kanisamana allavu..majority illai endralum kanisamana raaja rasigargal undu..college kalathil ipadi internet illai..analum raja rasigargal nirayya undu..

nyappadi ungal msv, raja, rahman varisapadi parthaal indraiya generation suthamaga rajavai marakka vendum. athu nadakka villai.

Neengal eluthum blogae nalla utharanam. kalam mudintha oru kalaigan endral neengal eluthave vendame..devavai pattri neengal enn ezhuthuvathillai..Sariyo thavaro indru internetl athigam pesa paduvathu Raaja than..ithu markka mudiyatha unmai..

Thangaprakash Sengodan said...

///"""திடீரென்று ஒரு மதம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது. ஒரேயொரு இசைக்கடவுள்தான் இந்த பூலோகத்தில் என்று பிரகடனப்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப மட்டுமே பூஜைகளும் புனஸ்காரங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தாங்கள் மட்டும்தான் இசை பக்தர்கள் என்று தண்டோரா போடப்படுகிறது. இணையத்தின் பக்கங்கள் யாரையும் கேட்காமலேயே இவர்களுக்கு முற்று முழுசாய் ஒதுக்கப்படுகிறது. புதிய பக்தி இலக்கியங்கள் எழுதப்படுகின்றன.""""///

சத்யமான வார்த்தைகள்..நல்ல கட்டுரை.. பாராட்டுக்கள் திரு. அமுதவன். இளையராஜா ஒரு நல்ல இசை அமைப்பாளர் அவ்வளவே தவிர இசைஞானி என்பதெல்லாம் அபத்தம். 80 களில் வந்த பல பாடல்களில் இசையை தமிழுக்கு அளிப்பவனே தான்தான் என்கிற தோரணையில் பாடல் வரிகள் அமையபெற்றிருப்பதை காணலாம். அன்னக்கிளி யில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்கள்.. கிராமத்து வயல்களில் பாடப்பட்ட பாடல்களின் அன்றைய பல்வேறு வாத்தியங்களின் இசை கலப்பு தான் (இதுவும் கங்கை அமரன் சொன்னதுதான்). இன்று உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒரு பாடல் எந்த மொழியில்/நாட்டில் இருந்து தழுவப்பட்டது என்று துல்லியமாக தெரிகிறது... ஆனால் அது அன்று இல்லை .. நான் இசைப்பதுதான் உண்மையான இசை.. நான் தான் இசையின் கடவுள்.. என்னை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதி இல்லை... என்றெல்லாம் புகழுரை பரப்பப்பட்டு இருக்கிறது.. இன்றும் எனக்கு பிடித்த பாடல்கள் இளையராஜாவின் பாடல்கள் தான். ஆனாலும் அவரை இசைகடவுள் என்று முன்னிருதப்படுவதை தமிழிசையின்மேன்மைக்கு இழுக்கு என்பதே ஏன் நிலைப்பாடு. நன்றி.

Anonymous said...

எது எப்படியோ, எம்.எஸ்.வி யா, இளையராஜாவா, ரகுமானா என்ற விவாதம் ஓய்வதுமில்லை, இதிலிருக்கிற சூடும், சுவையும் தணிவதுமில்லை. முன்பு ஞாநி கூட இளையராஜாவை எதிர்த்து எழுதியிருந்தார்-- திருவாசகம் சிம்ஃபொனியைத் தாக்கியும், ராஜா வாத்தியக் கலைஞர்கள் பெயரைக் கேசட்டில் போட்டதில்லை, ரகுமான்தான் அந்த வழக்கத்தை ஆரம்பித்தார் என்று நீண்ட கட்டுரைகள்.

சரவணன்

விமல் said...

...//இளையராஜாவின் இசையை மட்டுமே மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுவது எழுதியவரின் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் உண்டான கருத்தே அன்றி உண்மை அதில் சிறிதும் இல்லை.//[ காரிகன் said ...]

ஆமாம் இவர் தான் தமிழ் நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடாத்தி முடிவு சொல்கிறார்.மற்றவர்கள் எல்லாம் தங்கள் ரசனையில் சொல்கிறார்கள்.
ஏன் காரிகன் நீங்கள் FM கேட்பதில்லியோ ..?

அபத்தமான பொய்களை எழுதும் பெரியவர் அமுதவனை தாங்கள் தடவுவதும் ,அவர் உங்களை தடவுவதும் தாங்கல சார்.அவர் தான் பொய்களை , ஆதாரமில்லாமல் எழுதுகிறார் என்றால் நீங்கள் ஏன் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.?நீங்களாவது கொஞ்சம் புத்தி புகட்டுங்களேன்.

அவர் ஆரம்பம் முதலே ஊகங்களை வைத்தே எழுதுகிறார்.அந்த ஊகத்தை யாரவது ஆம் சொல்லிவிட்டால் எகிறி பாய்கிறார்.
கங்கை அமரன் 1979 லியே தனியே இசையமைக்கத் தொடங்கி விட்டார்.இந்த ஒரு அல்ப சங்கதி கூட தெரியாதவர்.கரணம் அடித்துக்கு கொண்டே இருக்கிறார்.
அவர் எழுத்தெல்லாம் வெறும் ஊகம் தான்.அதில் குதர்க்கம் வேறு.

//..பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது//அமுதவன்...

இதற்க்கு எங்கும் ஆதாரமில்லை.இருந்தால் எங்கிருக்கிறது ? யார் என்று அந்த சுட்டியை தருவீர்களா?
அது தான் ஒரு எழுத்தாளனின் தார்மீகம்.

Annonimus.. said
// அத்தலைமுறையின் பிரதிநிதி போல் இடுகைகளை இட்டு வந்த நீங்கள் சமீபத்திய இடுகைகளில் இளையராஜா மீது தனிப்பட்ட எரிச்சலில் ராஜாவின் மீது பொதுவெளியில் எறியப்படும் வசைகளைத் தேடியெடுத்துத் தொகுப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.//

இந்த "கட்டுரைகளை " படித்ததில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவமும் இதே ,அதை அவர் தடாலடியாக சொல்லிவிட்டார்.
இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது தமிழர்களிடம் இருக்கும் [அழுக்கான ] பா.ம.க ராமதாஸ் முன்னிறுத்தும் கண்ணோட்டமோ ?..என சந்தேகம் வருகிறது சார்.



காரிகன் said...

விமல் அவர்களே,
வாக்கெடுப்பு நடத்தி முடிவு சொல்ல இசை இன்னும் அரசியலாக்கப்படவில்லை.அந்த அளவுக்கு இசையை நகர்த்திச் செல்லவும் யாராலும் முடியாது. நான் இயங்கும் மக்களிடம் உள்ள விருப்பத்தின் அடிப்படையிலேயே பல விஷயங்களை எழுதி இருக்கிறேன். எப் எம் மில் என்ன மாதிரியான பாடல்களை போடுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை.இளையராஜாவின் பாடல்களை நாள் முழுதும் ஒலிபரப்பும் எப் எம் இருப்பதுபோல எனக்கு தெரியவில்லை.அப்படி எல்லாம் பார்த்தால் அனிருத்தின் கொலைவெறி பாடலே அதிகமாக பிரபலம் ஆனது.அதற்காக அதையெல்லாம் கிளாசிக் என்று சொல்லிவிடமுடியுமா? நீங்கள் சொல்வதுபோல எல்லோருக்குமே ஒரு சார்பு இருப்பதை மறுக்க முடியாது. அதையும் தாண்டி உண்மைகளை பதிவு செய்வது ஒரு சவாலானது. அதையும் ஏன் குறை சொல்ல வேண்டும்?
அமுதவன் பொய்களை எழுதுவதாக நீங்கள் சொல்வதும் உங்களின் இளையராஜா பாசமே. இளையராஜாவின் இருபது வருட இசையை ஒதுக்கி விட்டு இசையை பதிவு செய்வது உண்மையாக இருக்க முடியாது. ரகுமான் பணம் கொடுத்து ஆஸ்கார் வாங்கினார் என்று சிலர் நக்கலடிப்பதும் உண்மை இல்லை. எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை. கடைசியாக இளையராஜாவின் இசையில் வந்த பத்தாயிரம் பாடல்களும்(எண்ணிக்கை தவறாக இருக்கலாம். அதற்காக இன்னொரு data கொடுக்கவேண்டாம்) தரமானவைதான் என்று உங்களால் உறுதி கூற முடியுமா? Every hero becomes a bore in the end என்று நான் (நான் மிகவும் மதிக்கும்) மெல்லிசை மன்னர் எம் எஸ் வி யைப் பற்றி எழுதினேன் என் பதிவில். இளையராஜாவுக்கும் அப்படித்தான் நடந்தது. எல்லோருக்கும் இதுவே நடக்கும்.

james said...

Naanum siriya vayathil mukala mukabula paadal eppo tv la poduvangannu thavam irundhavan.college ku pogum podhuthan raja padalgalai ketka aarambithen.ippoludhu andha paadalgal thavira edhum pidipadhillai.idhu ennudaya thavara,illai ARR andha idathai nirapa mudiyadhadhu avaradhu aalumai kuraichala?ennudaya sandhosam,dhukkam mattraya unarvugaluku yetra isai,paadal rajavinudayadhe.
anjali anjali anjali ennum andha paadalai ketkum podhu thaanagave sutri ulla vishayangalai vittu paadalil layikiren.paruvame paadal sellum valiyil ketka nerndhal ninru rasika ketka thoondukiradhu.idhellam ilayarajavin padalgalai ketkum bodhudhan thondrugiradhu.mattravargal paadalgalil appdi thondruvadhu illai. everybody does not has equal talents.some body has more than others like ilayaraja.

James.D

suresh said...

@james

innum konjam pinne senru msv kvm a.m.raja vaiyum kettu paarungal. athu oru puthu anubavaththai ungaluku kondukum. :)

Akbar said...

Ilaiyaraajavin Nermai Avar Kankalil Theriyum Avar Isaiyil Theriyum Matravar vaarthaigal avashiyam illai

Akbar said...

Ilaiyaraaja's honesty is seen in his eyes, in his music, in his straight forward words. No one else need to tell anything.

Sridhar said...

திரு.அமுதவன்

உங்கள் பதிவில், ராஜா சார் மீதான காழ்புணர்ச்சிதான் அதிகம் தெரிகிறது...கருத்து கூறுவது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், இதை ஒரு நடுநிலை பதிவாக என்னால எடுத்துகொள்ள முடியவில்லை.

உங்கள் வழியிலேயே ஒரே ஒரு பாடலை மட்டும் நானும் எடுத்துக் கொள்கிறேன் - "ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்" பாடலில் வரும் இடையிசையில் எவ்வளவு குட்டிப் பாட்டு உருவாக்க முடியும்? அது ஒரு situation பாடல், அதில் வந்த அந்த இடையிசை நியாயமே என்று பெரும்பாலனோர் ஒத்துக்கொள்வர் (என்னையும் சேர்த்து)

எல்லா கருத்துக்கும் ஆதரவான, எதிரான ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும்..இது, நீங்கள் குறிபிட்டுள்ள "திரு. MSVயும், மற்றவர்களும்..." என்ற கருத்துக்கு என்னுடைய மாற்றுக் கருத்து அவ்வளவே...மற்றபடி, 60,70 களின் திரைஇசைக்கு / இசைக் கலைஞர்களுக்கு நான் நல்ல ரசிகன்...

முடிந்தவரை, நடுநிலையான பதிவுகள் எழுதப் பாருங்கள்...நன்றி...

விமல் said...

காரிகன் சார் ,

//அதையும் தாண்டி உண்மைகளை பதிவு செய்வது ஒரு சவாலானது. அதையும் ஏன் குறை சொல்ல வேண்டும்?// [ காரிகன் ...said
அவர் ஒரு உண்மை விளம்பி என்று வைத்துக் கொண்டால் இந்த பிழையான தகவலை திருத்தியிருக்க வேண்டும் அல்லவா..?
//இளையராஜாவின் பாடல்களை நாள் முழுதும் ஒலிபரப்பும் எப் எம் இருப்பதுபோல எனக்கு தெரியவில்லை.//காரிகன் said
இளையராஜாவின் பாடல்களை நாள் முழுதும் ஒலிபரப்புகிறார்கள் என்று அப்படி இங்கே யார் சொன்னார்கள்..?

எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said
சொல்லி சொல்லியே நீங்கள் இருவரும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.[ இது உங்கள் கற்பனை அல்லவா.!] இப்படி அப்படி யார் சொன்னார்கள்? என்பதையே மீண்டும் , மீண்டும் கேட்கிறோம்.ஏதாவது ஒரு web தளத்தை காட்ட முடியுமா..?

தங்கள் பின்னூட்டத்தைப் படித்தால் நடுநிலை [ ? ] போல தோற்றம் தருகிறது.அது உண்மை இல்லை. உங்கள் முகம் வேறு.உங்களுக்கு இளையராஜாவை இழிவு படுத்த வேண்டும்.அதற்காக நீங்கள் இருவரும் பிடித்துள்ள "பிடி" அந்தக் கால இசையமைப்பாளர்கள் என்று நினைக்கின்றேன்.
எனக்கு இளையராஜா மேல் எந்த தனிப்பட்ட பாசமும் கிடையாது.

சரவணன் said...

இடையிசை (இன்டர்லூட் அல்லது பிஜிஎம்) பற்றி

அந்தக் காலத்தில் (எம்.எஸ்.வி., வி.குமார் போன்றவர்கள் காலம்) மொத்தப் பாடல் மூன்று நிமிடம் மட்டுமே. இளையராஜா காலத்தில் அது 5 நிமிடம் வரை நீண்டுவிட்டது. (முன்பு கேசட் பதியும்போது 1 மணி நேர கேசட்டில் பழைய பாடல் என்றால் 20 பதியலாம், புதிய பாடல் என்றால் 12 மட்டுமே முடியும்)

ஆக பழைய பாடல்களில் இடையிசை மிகக் குறைந்த நேரமே ஒலிக்கும். ராஜா காலத்தில் இடையிசையின் கால அளவு அதிகம். இதையும் கணக்கில் கொள்ளவேண்டும் தானே, அமுதவன் சார்?

சரவணன்

சரவணன் said...

இளையராஜா சுமார் 700 படங்களுக்கு இசையமைத்தார். என்றால், சுமார் 3500 பாடல்களுக்கு மேல். இவற்றில் அவருடைய பரம ரசிகர்கள் கூட இன்றும் கேட்பது சுமார் 350 பாடல்களே. இந்த 350 தாண்டி மற்றவற்றை யாரும் கேட்பதில்லை. எல்லா விவாதங்களும் இந்த 350 ஐ அடிப்படையாக வைத்தே நடக்கின்றன.

விமல் said...

கங்கை அமரன் 1979 லியே தனியே இசையமைக்கத் தொடங்கி விட்டார்.[ இளையராஜாவின் விருப்பத்துடனேயே.]
அப்போ அன்றல்லவா பிரிந்திருக்க வேண்டும் வாழ்வே மாய 1982 இல் வந்தது.

சரவணன்
நல்ல ஓர் point கொடுத்துலீர்கள்.ராஜாவின் பாடல்கள் 4.30 நிமிடங்களைத் தாண்டும்.
விழியே கதை எழுத்து பாடலின் இசைதட்டில் உள்ள வடிவத்தையும் , படலத்தில் உள்ள வடிவத்தையும் கேட்டு பாருங்கள்.படத்தில் வேண்டும் என்று நீட்டபட்ட்து போல bgm சப் என்று ஒலிக்கும்.

Anonymous said...

இளையராஜாவிற்கு இசை அறிவே கிடையாது என்பது போலவும் அவரின் பெரும்பாலான பாடல்கள் பிற பாடல்களின் தழுவல் என்பது தான் போலவும் பதிவிட்ட அமுதவனுக்கு நல்ல எழுத்தாற்றல். அன்னக்கிளி படத்தில் வரும் ஒரு பாடல் இளையராஜாவின் சொந்த ஊருக்கு அருகில் வயல் வேலை செய்யும் பெண்கள் பாடும் பாட்டுடைய தழுவல் தான் என்று அவரே சொல்லி உள்ளார். அது போல் அவர் தாயார் பாடிய ஒரு தாலாட்டு பாடலை "பூவே இளையபூவே" என்ற பாடலின் சரணமாக உபயோகித்ததாக அவரே சொல்லியதாக எங்கோ படித்தேன் ... இந்தப் பதிவின் மூலம் யாரை நீங்கள் தூக்கிப் பிடிக்க உள்ளீர்கள்? ஒருவரைத் தாழ்த்தி தான் இன்னொருவரைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை... இதையே தான் அவர்களும் செய்கிறார்கள் நீங்களும் செய்கிறீர்கள் ? இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை...

காரிகன் said...

தங்கள் பின்னூட்டத்தைப் படித்தால் நடுநிலை [ ? ] போல தோற்றம் தருகிறது.அது உண்மை இல்லை. உங்கள் முகம் வேறு.உங்களுக்கு இளையராஜாவை இழிவு படுத்த வேண்டும்.அதற்காக நீங்கள் இருவரும் பிடித்துள்ள "பிடி" அந்தக் கால இசையமைப்பாளர்கள் என்று நினைக்கின்றேன்.
எனக்கு இளையராஜா மேல் எந்த தனிப்பட்ட பாசமும் கிடையாது.

இளையராஜாவை இகழ்வதற்காக பழைய இசை மேதைகளை அரங்கத்திற்கு அழைத்துவருவதாக கூறியுள்ள திருவாளர் விமல் அவர்களே, எதற்காக எல்லோருமே இளையராஜாவை சுற்றியே சிந்திக்கவேண்டும்? ஒருவர் எனக்கு கே வீ மகாதேவனைப் பிடிக்கும் என்று சொன்னால் அதற்கும் காரணம் இளையராஜாதானா? என்ன முட்டாள்தனமான எண்ணம்? எனக்கு நடுநிலை இல்லை என்பது உங்களின் இளையராஜா மோகத்தினால் உண்டான கருத்து.இளையராஜாவின் மீது தனிப்பட்ட பாசம் கிடையாது என்று சொல்லும் நீங்கள் எதற்காக இத்தனை மெனெக்கெட்டு என் மீது குற்றம் சொல்ல துடிக்கிறீர்கள்? ஏனிந்த வெளிவேஷம்? நான் இளையராஜாவை விமர்சிக்கிறேன். அதையும் நடுநிலைமையோடு செய்கிறேன்.

சரவணன் said...

'கடவுள் அமைத்துவைத்த மேடை' வரிசையில் எம். எஸ்.வி.-யே இசையமைத்த அவர்கள் படத்தில் வரும் 'ஜூனியர்... ஜூனியர்' பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்!

Unknown said...

பிழை திருத்தம்,

மொசார்ட்டின் சிம்பனி சொனாட்டா -எண்-25 இசையின் ஆரம்பம், தவறாக பீத்தோவன் சிம்பனி சொனாட்டா எண் 16னு குறிப்பிட்டுவிட்டேன்,அது வேறு ஒரு பாடல்....///சிம்போனி என்பது வேறு சொனாட்டா என்பது வேறு ...முதலில் மொசார்ட் சொனாட்டா மொத்தமே பதினெட்டுதான் ..பீதொவேன் மொத்த சொனடா முபதயொன்று...மொசார்ட்டின் சிம்போனி மொத்தம் நாற்பதோன்று அதில் நீங்கள் குறிப்பிடும் இருபதிந்தம் symphonykum எந்த விதமான சம்மந்தமும் இல்லை.முதலில் மொசர்டின் சிம்போனி no 25 ketuirukreergala...

விமல் said...

இளையராஜாவை இகழ்வதற்காக பழைய இசை மேதைகளை அரங்கத்திற்கு அழைத்துவருவதாக கூறியுள்ள திருவாளர் விமல் அவர்களே, எதற்காக எல்லோருமே இளையராஜாவை சுற்றியே சிந்திக்கவேண்டும்?- காரிகன் said

இளையராஜாவை புகழ்ந்தும் பழைய இசையமைப்பாளர்களை உதாசீனம் செய்தும் ராஜா ரசிகர்கள் எழுதுவது போல ஒரு பாவனை செய்தே தாங்களும் ,அமுதவனும் இரட்டைக்குழந்தைகள் போல எழுதுகிறீர்கள்.

இளையராஜாவிற்கு இசை அறிவே கிடையாது என்பது போலவும் எழுதி வருகிறீர்கள்.அதனால் தான் கேட்கிறோம்.எந்த இணையத்தில் அல்லது எந்த BLOG இல் எழுதுகிறார்கள் என்று காட்ட வேண்டும் என்று கேட்கிறோம்.

காரிகன் said...

சரவணன் said...
இளையராஜா சுமார் 700 படங்களுக்கு இசையமைத்தார். என்றால், சுமார் 3500 பாடல்களுக்கு மேல். இவற்றில் அவருடைய பரம ரசிகர்கள் கூட இன்றும் கேட்பது சுமார் 350 பாடல்களே. இந்த 350 தாண்டி மற்றவற்றை யாரும் கேட்பதில்லை. எல்லா விவாதங்களும் இந்த 350 ஐ அடிப்படையாக வைத்தே நடக்கின்றன.

திரு சரவணன் அவர்களே,
மிக சரியான கருத்து.நானும் இதைத்தான் சொல்கிறேன். ஒரு முன்னூறு நானூறு பாடல்களை வைத்துக்கொண்டு இசையை உலகிற்கே அளித்தவர் இளையராஜா என்று துதி பாடும் கூட்டத்தாருக்கு இதெல்லாம் சுத்தமாகப் புரியப்போவதில்லை.இந்த எண்ணிக்கையைத் தாண்டி அவர் அமைத்த பெருமான்மையான பாடல்கள் மக்களின் நினைவுகளில் கொஞ்சம்கூட இல்லை.அதற்கு என்ன காரணம் என்று ஆராய முற்பட்டால் சில கடுமையான விமர்சனங்களை நாம் இளையராஜா மீது வைக்க வேண்டியுள்ளது.

டமால் டுமீல் said...

//ஒரு முன்னூறு நானூறு பாடல்களை வைத்துக்கொண்டு இசையை உலகிற்கே அளித்தவர் இளையராஜா என்று துதி பாடும் கூட்டத்தாருக்கு இதெல்லாம் சுத்தமாகப் புரியப்போவதில்லை.இந்த எண்ணிக்கையைத் தாண்டி அவர் அமைத்த பெருமான்மையான பாடல்கள் மக்களின் நினைவுகளில் கொஞ்சம்கூட இல்லை.//

Mr. காரிகன்,

உங்க பிரியத்துக்குரிய இசையமைப்பாளர்கள் போட்ட எல்லாம் பாடல்களும் ஹிட்டா என்ன?

வவ்வால் said...

நாதன் அவர்களே,

//சிம்போனி என்பது வேறு சொனாட்டா என்பது வேறு ...//
அப்படியா ? அப்போ இதைக்கொஞ்சம் பாருங்களேன்,விக்கிப்பீடியாவில் தப்பா போட்டிருக்காங்களா?

"he word sonata in music theory as often labels the abstract musical form as well as much as particular works. Hence there are references to a symphony as a sonata for orchestra. This is referred to by William Newman as the sonata idea, and by others as the sonata principle"

//The four-movement layout was by this point standard for the string quartet, and overwhelmingly the most common for the symphony. The usual order of the four movements was:
An allegro, which by this point was in what is called sonata form, complete with exposition, development, and recapitulation.
A slow movement, an Andante, Adagio or Largo.
A dance movement, frequently Minuet and trio or – especially later in the classical period – a Scherzo and trio.
A finale in faster tempo, often in a sonata–rondo form.
This four-movement layout came to be considered the standard for a sonata, //

"the sonatas of Beethoven would mean the works specifically labeled sonata, whereas Beethoven sonata form would apply to all of his large-scale instrumental works, whether concert or chamber."

http://en.wikipedia.org/wiki/Sonata

சொனாட்டா என்பத்உ ஒரு இசை வடிவம் , நான்கு பிரிவாக பொதுவாக இசைக்கப்படுவது,அதே போல வடிவில் இசை அமைக்கப்படுவதே சிம்பனியும், இங்கே குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது, ஆர்கெஸ்ட்ரா செட் அப் தான், ஃபுல் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவில் ஒரு சொனாட்டாவை வாசிச்சால் அது சிம்பனியாகிவிடும், சொனாட்டா என குறிப்பாக பெயரிட்டது அது "கன்செர்ட் மியுசிக் ஆர்கெஸ்ட்ராவிற்கு" என குறிக்க தான், சேம்பர் மியுசிக் எனப்படுவது சிம்பனி ஆகும், அதற்கு வாசிக்க எழுதிய இசைக்குறிப்புகளை சிம்பனி எனப்பெயரிட்டார்கள்.

சிம்பனி என்ற இசை வடிவப்பெயர் எல்லாம் பிற்காலத்தில் உருவானது,அதற்கு முன்னரே சொனாட்டா என்ற வடிவம் இருந்தது,எனவே சிம்பனி என பெயரிடப்படாத சொனாட்டாக்கள் ஆரம்பத்திலே உண்டு, அதனை சிம்பனியாகவும் வாசிக்கலாம். பின்னாளில் சிம்பனி வடிவம் வந்தப்பின்னரே தனித்தனியாக பெயரிட்டார்கள். பாக் காலத்தில் சிம்பனி என்றப்பெயரே இல்லை,அல்லது சிம்பனி வடிவம் பெரிதும் பயன்ப்பாட்டில் இல்லாமல் இருந்து இருக்கலாம்,அவர் fugue என்ற வடிவில் தான் இசைக்குறிப்புகளை உருவாக்கினார்,ஆனால் அவரது இசைக்குறிப்புகளை சிம்பனியாக வாசிக்கலாம்.
எனவே சிம்பனி என்பது தனிப்பட்ட ஒரு ஜந்து போல ரொம்ப தனியாக சொல்ல சொல்லுறிங்களே :-))

ஷ்ப்பா இவங்களுக்கு விளக்கம் சொல்லியே தொண்ட தண்ணி வத்தி போயிடும் போல இருக்கே அவ்வ்!

# அது சரி திருவாசகம் "பாடலுக்கு இசை அமைச்சதை "சிம்பனி"னு புளுகினப்போ நீங்க எங்கே போனிங்க சார் ?

"oratoria" எனப்படுவது சிம்பனி இசைக்கோர்வைக்கு பின்னர் இசை நாடகமாக /பாடல் எழுதி செய்வது, ஆனால் இசைக்கோர்வை என தனியாக இல்லாமல் பாடலுக்கு இசை அமைத்து பாடினால் சிம்பனியே அல்ல :-))

# //முதலில் மொசர்டின் சிம்போனி no 25 ketuirukreergala...//

முதலில் கேட்கலை ,கடைசியில் கேட்டிருக்கிறேன் :-))

இணையத்தின் புண்ணியத்தில் சில ,பல சிம்பனிகள் ,வெஸ்டர்ன் கிளாசிக், பாப் என பல இசைகளும் கேட்டிருக்கிறேன், வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியுசிக்கிற்காக இணைய வானொலிகள் நிறைய இருக்கு, ஆன் பண்னிவிட்டா அது பாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்குமுங்க,,நாம சைடில் மத்த வேலைய பாத்துக்கிட்டு இருக்கலாம்,காசா,பணமா :-))

நீங்க சம்பந்தமில்லைனு சொல்லுறிங்க,நமக்கு இதை சொன்னது ஒரு நண்பர் தான்,அவரு சொன்னப்பிறகு கேட்டா ,அட ஆமாம்லனு தோனுச்சு, அதையே சொல்லி இருக்கிறேன்,எனக்கு தானா இது இன்ன இசைனு கண்டுப்பிடிக்க எல்லாம் தெரியாது,ஆனால் வேற எங்கேயோ கேட்டாப்போல இருக்கேனு "ஒரு பல்பு" மட்டும் எரியும் :-))

இப்போ நீங்க என்ன சொல்ல வரிங்க,ராசா அப்படிலாம் "பிட்" அடிச்சதே இல்லைனா, அப்புறம் நான் தோண்டி எடுத்து பட்டியல் போட்டுறுவேன் :-))

வவ்வால் said...

காரிகன்,

//வவ்வால் கலக்கலாக பின்னி எடுக்கிறார். //

நன்றி!

ஹி...ஹி சும்மா லைட்டா பின்னூட்டம் போடுவோம்னு பார்த்தால் ,சொரண்டிவிடுறாங்க, அப்புறம் வேற என்ன செய்ய , குட்டைய கலக்கிட மாட்டோம் :-))

//இளையராஜாவை புகழ்வதற்கு தகுதிகள் தேவை இல்லை என்றும் அவரையே விமர்சனம் செய்தால் உனக்கு இசையைப் என்ன தெரியும் என்று கேட்பது என்ன லாஜிக்கோ தெரியவில்லை.//

இதாங்க பெரிய கொடுமை,யாராவது வந்து அவரு தான் இசைய "கண்டுப்பிடிச்சாருனு" சொன்னா கண்ண மூடிக்கிட்டு ஆமாம் போடுறாங்க, அது எப்படினு கேட்டால் உனக்கு இசை தெரியுமானு கேட்கிறாங்க, இந்த கேள்வியை, இசையக்கண்டுப்பிடிச்சாருனு சொன்னவங்களையும் பார்த்துக்கேட்கலாம்ல :-))
--------------

விமல்,

//இதற்க்கு எங்கும் ஆதாரமில்லை.இருந்தால் எங்கிருக்கிறது ? யார் என்று அந்த சுட்டியை தருவீர்களா?
அது தான் ஒரு எழுத்தாளனின் தார்மீகம்.//

இணையத்தில எதுவுமே வாசிச்சதே இல்லையா, ஏகப்பட்ட " ஃபிளெக்ஸ் பேனர்கள்" கிடக்கு இணையத்தில எதைனு சொல்ல, உலக இசை மேதைகள் செய்யாததை எல்லாம் ராசா செய்தாருனு ஒருத்தர் புத்தகம் கூட போட்டிருக்காரு, அதை கிழிச்சு நானும் தொங்க விட்டிருக்கேன், அதெல்லாம் தெரியாமல் எங்கே யாரு சொன்னா ஆதாரம் இருக்கானு கேளுங்க, எல்லாத்தையும் உங்களுக்கு "ஸ்பூன் ஃபீடிங்க்" செய்யனும் போல :-))

http://vovalpaarvai.blogspot.in/2013/05/blog-post_2815.html

காரிகன் said...

வவ்வால்,
இதுபோல விவரமாக எழுதினாலும் நடுவுல கொஞ்சம் விஷயத்த காணாம் என்கிற ரேஞ்சில் சில ராஜா ரசிகர்கள் சொன்னதையே சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் hobby horse ரைடர்கள். குதிரையில் இருப்பார்கள்.ஆனால் எங்கும் போகமாட்டார்கள்.நான் தற்போது எழுதியுள்ள பதிவில் மூன்றோ அல்லது நான்கு இடங்களில் மட்டுமே இளையராஜாவை விமர்சித்து இருக்கிறேன்.அதையும் விட்டேனா பார் என்று மல்லுக்கட்டிக்கொண்டு ஒருவர் எகிறுகிறார். போரடித்துப் போய்விட்ட இளையராஜாவின் கிராமத்து பாடல்களைக் கூட இன்னொரு முறை கேட்டுவிடலாம் போலிருக்கிறது ஆனால் இவர்களின் கூச்சல் ஹை டெசிபலில் அலறி நம்மை வாட்டி வதைக்கிறது.நீங்கள் ஏன் இளையராஜாவா இசையராஜாவா பகுதி இரண்டு எழுதக்கூடாது?

காரிகன் said...

மிஸ்டர் டமால் டுமீல்,
என் பிரியத்திற்குரிய இசை அமைப்பாளர்கள் அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் இல்லை.உண்மைதான். இதே practicality இளையராஜாவுக்கும் பொருந்தும் என்பதே என் வாதம். என் கருத்தின் இரண்டாவது வாக்கியத்தை மட்டுமே சிலர் எதிர்க்கின்றனர்.இது அறிவிலிகளின் செயல் இல்லையா?

சரவணன் said...

அப்படிப் பார்த்தால் எம்.எஸ்.வி. இசையமைத்த பல நல்ல பாடல் மெட்டுகள் கூட அவரது உதவியாளர் ஜோசப் கிருஷ்ணா உருவாக்கியவை என்றுகூட எங்கோ படித்த நினைவு...

Amudhavan said...

அப்படியானால் ஜோசப் கிருஷ்ணாவைக் கொண்டாடுங்களேன். எதற்கு இளையராஜாவைக் கொண்டாடுகிறீர்கள்?

Anonymous said...

Well said. Appreciate Raja's talent but do not worship him blindly. He is just the music director of one generation. MSV generation thinks MSV is the best, Raja's generation thinks Raja is the best, recent generation thinks ARR is best, after a decade there will be someone else.

Raja is the first Indian who composed symphony. ARR got Oscar and that is something that any other music director has not achieved yet. Appreciate good music from any composer, don't be a 'Naan pudicha mosalukku moonu kaal' idiot.

விமல் said...

//" அப்படியானால் ஜோசப் கிருஷ்ணாவைக் கொண்டாடுங்களேன். எதற்கு இளையராஜாவைக் கொண்டாடுகிறீர்கள்? // "- Amudhavan said...

இது தான் அமுதவன் வேண்டுவது.எப்படியாவது இளையராஜாவை கொச்சைபடுத்துவது.
கங்கை அமரனே சொல்லி விட்டார் இளையராஜா எம் .எஸ்.வீயை காப்பி அடித்து விட்டார் என்று , இளையராஜா சொல்லி விட்டார் எம்.எஸ்.வீ. துப்பிய எச்சில் தான் தனது இசை என்று!!
ஆக இளையராஜா படங்களுக்கு இசையமைக்கவே இல்லை.இதல்லவா இசை விமர்சனம்.
அப்படி என்றால் ரகுமான் என்ன சொன்னார் " ராஜா சார் இசை ஒஸ்கார் விருதுக்கு அப்பால் பட்டது "
ஆஹா ..ஆகா..ஆஹா ..ஆகா..
// 350 தாண்டி மற்றவற்றை யாரும் கேட்பதில்லை.//- காரிகன் said...
இவர் தான் வாக்கெடுப்பு நடாத்தி கண்டுபிடித்தார்.அப்படீன்னா எம்.எஸ்.வீ யின் 50 பாடல் தேறுமா?

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said

என்று சொல்லி சொல்லியே நீங்கள் இருவரும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.[ இது உங்கள் கற்பனை அல்லவா.!] இப்படி அப்படி யார் சொன்னார்கள்? என்பதையே மீண்டும் , மீண்டும் கேட்கிறோம்.ஏதாவது ஒரு web தளத்தை காட்ட முடியுமா..?
பல இருக்கிறதாம் என்கிறார் தலை கீழ் மனிதன்.அதில் ஒன்றை யாவது காட்டுங்கள் என்று தான் கேட்கிறோம்.

Amudhavan said...

Anonymous said...

\\Well said. Appreciate Raja's talent but do not worship him blindly. He is just the music director of one generation.\\

வாருங்கள் அனானிமஸ், இதையேதான் நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மற்ற எல்லாவற்றிலும் 'பழையவர்களைத்' தூக்கி எறிந்துவிடவேண்டுமாம். புதியவர்களையும் அங்கீகரிக்கக்கூடாதாம். ராஜா விஷயத்தில் 'மட்டும்' இந்தக்கண்ணோட்டம் செல்லுபடியாகாதாம்.
\\Raja is the first Indian who composed symphony. ARR got Oscar and that is something that any other music director has not achieved yet. Appreciate good music from any composer, don't be a 'Naan pudicha mosalukku moonu kaal' idiot. \\
உங்கள் கருத்து சரி; ஆனால் தகவல் தவறு. ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் பரிசுகள் வாங்கியவர்.
இளையராஜா சிம்பனி இசையமைக்க முயன்றவர். ஆனால் அது இன்னமும் வெளியிடப்படவில்லை. யாரும் அதனைக் கேட்கவில்லை. ராஜா இசையமைத்த சிம்பனி சிடி ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? அல்லது வேறு யாரிடமாவது இருக்கிறதா?
இல்லை....... அதற்கான முயற்சிகள் நடந்தன. அது ஏன் தோல்வி அடைந்தது என்பதற்கான காரணங்களை யாரும் இதுவரை கூறவில்லை. இளையராஜாதான் சொல்லவேண்டும். அவரும் சொல்லவில்லை. 'எங்க பிள்ளையும் ஐஏஎஸ் எழுதியிருக்கான்' கதைதான். ஐஏஎஸ் எழுதியது ஓகே. தேர்வாகி ஐஏஎஸ்ஸாக நியமிக்கப்படாதவர்களை ஐஏஎஸ் என்று எப்படிப் போட்டுக்கொள்ளமுடியும்?
போட்டுக்கொள்கிறார்கள்.
ஆஸ்கார் பற்றித் தமிழில் முதன்முதலில் பேச ஆரம்பித்தவர் கமல்தான். 'மருதநாயகம் படமெடுத்து ஆஸ்கார் வாங்கிக் காட்டுகிறேன்' என்றுகூடச் சொன்னார். படப்பிடிப்பு ஆரம்பித்து பல நாட்கள் ஷீட்டிங்கூட நடத்திவிட்டார். ஏதோ காரணங்களால் படம் எடுக்கப்படவில்லை. கமலிடம் ஆஸ்காருக்கான நோக்கமும் அதற்கான திறமைகளும் இருக்கலாம். அதற்காக படமும் வெளிவராமல், ஆஸ்கார் விருதும் பெறாத நிலையில் 'ஆஸ்கார் விருது வாங்கிய கமல்' என்று அவரை அழைக்கவும், இதற்காக அவரைக் கொண்டாடவும் முடியுமா என்ன?

விமல் said...

" ராஜா சார் இசை ஒஸ்கார் விருதுக்கு அப்பால் பட்டது "-- ரகுமான்

அப்போ அவர் [ ராஜா ]தான் சிறந்தவர் இல்லையா அமுதவன் சார்.ரகுமானே சொல்லி விட்டார் அப்படித்தான் உங்கள் எழுத்து சாதிக்க முனைகிறது.இல்லையா சார்.அபத்தம் ...அபத்தம்.

suresh said...

// அப்படியானால் ஜோசப் கிருஷ்ணாவைக் கொண்டாடுங்களேன். எதற்கு இளையராஜாவைக் கொண்டாடுகிறீர்கள்? //

- சார், இதுவும் அழுகுணி ஆட்டம்தானே..... :) :) :)

Anonymous said...

கங்கை அமரன் சொல்லியிருப்பவை உண்மை என்றே நம்புகிறேன். ஆனாலும் நடைமுறையில் 7 பாடல்களுக்கு இசையமைத்தவர் 700 படங்களுக்கு இசையமைத்தவரைப் பற்றி எது சொன்னாலும் (புகழ்ந்து சொன்னால் தவிர) மக்கள் நம்ப மாட்டார்கள். நம்புகிறார்களா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை என்று அமரன் சொல்லக்கூடும்.

சரவணன் said...

கங்கை அமரன் சொல்லியிருப்பவை உண்மை என்றே நம்புகிறேன். ஆனாலும் நடைமுறையில் 7 பாடல்களுக்கு இசையமைத்தவர் 700 படங்களுக்கு இசையமைத்தவரைப் பற்றி எது சொன்னாலும் (புகழ்ந்து சொன்னால் தவிர) மக்கள் நம்ப மாட்டார்கள். நம்புகிறார்களா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை என்று அமரன் சொல்லக்கூடும்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
இளையராஜாவின் சிம்பொனி பற்றி ப்ரூனோ என்பவர் எழுதிய பதிவு எதேச்சையாக காண நேரிட்டது.இதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் களைகட்டுகின்றன.இதோ உங்கள் பார்வைக்கு
http://www.payanangal.in/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

விமல் said...

காரிகன் , அமுதவன் அவர்களே

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said

என்று சொல்லி சொல்லியே நீங்கள் இருவரும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.[ இது உங்கள் கற்பனை அல்லவா.!] இப்படி அப்படி யார் சொன்னார்கள்? என்பதையே மீண்டும் , மீண்டும் கேட்கிறோம்.ஏதாவது ஒரு web தளத்தை காட்ட முடியுமா..?
பல இருக்கிறதாம் என்கிறார் தலை கீழ் மனிதன்.அதில் ஒன்றை யாவது காட்டுங்கள் என்று தான் கேட்கிறோம்.

மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.

Amudhavan said...

சரவணன் said...

\\கங்கை அமரன் சொல்லியிருப்பவை உண்மை என்றே நம்புகிறேன். ஆனாலும் நடைமுறையில் 7 பாடல்களுக்கு இசையமைத்தவர் 700 படங்களுக்கு இசையமைத்தவரைப் பற்றி எது சொன்னாலும் (புகழ்ந்து சொன்னால் தவிர) மக்கள் நம்ப மாட்டார்கள்.\\
எத்தனையோ ஊழல்புகார்கள் மற்றும் வேறு புகார்களை சம்பந்தப்பட்டவர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்களோ, அவர்கள் அணியில் இருந்தவர்களோ சொல்லப்போய் எத்தனையோ அரசுகள் கவிழ்ந்திருக்கின்றன. மேலைநாடுகளில் எல்லாம் அவர்களுடனேயே பணியாளர்களாக இருந்தவர்கள் சொன்னதெல்லாம் புத்தகங்களாக வந்து பெரிய பெரிய பரபரப்புக்களை எல்லாம் ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்போது பிரதமராக இருப்பவரைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமானால் ஜனாதிபதியாகிவிட்டுத்தான் சொல்லவேண்டுமா என்ன?ஒரு சாதாரண பத்திரிகையாளனே போதும்.

கங்கை அமரன் மிகப்பெரிய இசையமைப்பாளர் என்று யார் சொன்னது? அவருக்கான அடையாளங்களே வேறு. அந்தக் குடும்பச் சகோதரர்கள் அத்தனைப்பேருமே இசையில் தோய்ந்தவர்கள். "பல நாட்டுப்புற பாடல்கள் எங்கள் மண்ணிலிருந்து பெறப்பட்டவை. எங்கள் அம்மாவும் மற்ற பெண்களும் கழனியிலும் மற்ற விசேஷங்களிலும் பாடியவை. அவற்றையெல்லாம் நாங்கள் படத்துக்கேற்ற மாதிரி கொண்டுவருகிறோம்" என்பதை கங்கை அமரன் இளையராஜாவுடன் ஒன்றாக இருந்தபோதே பலமுறை சொல்லியிருக்கிறார். ஏன் இளையராஜாவே கூடச் சொல்லியிருக்கிறார். அதனால் கங்கை அமரன் வாயே திறக்கக்கூடாது என்றெல்லாம் சொல்ல நாம் யார்?
தவிர, ஏழு படம் எழுநூறு படம் சொந்தத் தம்பி என்பதெல்லாம் ஒருபுறமிருக்க 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற குறளுக்கேற்ப சிந்திப்பவர்கள் யாருமே இருக்கமாட்டார்களா என்ன?

Amudhavan said...

விமல் said...
// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said

என்று சொல்லி சொல்லியே நீங்கள் இருவரும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.[ இது உங்கள் கற்பனை அல்லவா.!] இப்படி அப்படி யார் சொன்னார்கள்? என்பதையே மீண்டும் , மீண்டும் கேட்கிறோம்.ஏதாவது ஒரு web தளத்தை காட்ட முடியுமா..?
பல இருக்கிறதாம் என்கிறார் தலை கீழ் மனிதன்.அதில் ஒன்றை யாவது காட்டுங்கள் என்று தான் கேட்கிறோம்.

மீண்டும் மீண்டும் கேட்கிறோம். \\

விமல் என்ற இந்தப் பச்சப்புள்ளை கத்தரிக்காய் சந்தையில் நின்றுகொண்டு "கத்தரிக்காய் கத்தரிக்காய் என்று அபாண்டமாய்ச் சொல்கிறார்களே அப்படி ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது இருந்தால் ஒன்றையாவது காட்டுங்களேன்" என்று ரொம்ப நேரமாய் அழுது அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு யாராவது கத்தரிக்காய்களைக் காட்டுங்களேன்.

காரிகன் said...

திரு விமல் அவர்களே, '
ரவி ஆதித்யா என்பவர் இளையராஜாவைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்.படித்துப்பாருங்களேன்.எத்தனை நகைச்சுவையாக இருக்கிறது என்று.

http://raviaditya.blogspot.in/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D

இதில் அவர் Bach என்ற மேற்கத்திய செவ்வியல் மேதையின் படத்தின் கீழே கொடுத்திருக்கும் காமெண்டை பாருங்கள். எத்தனை சிறுபிள்ளைத்தனம்.

http://raviaditya.blogspot.in/2010/01/blog-post_15.html?showComment=1374455448704#c915245779660621747

இதை தவிர இளையராஜா பக்தர்கள் என்று இன்னொரு

வேட்டைக்காரன் said...

// அவருக்கு யாராவது கத்தரிக்காய்களைக் காட்டுங்களேன்.//

அவரு நீங்க சொன்னதால்ல சொல்றாரு. நீங்கதான் காட்டுங்களேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

ஹி...ஹி..100 (நான் பார்க்கும் போது 99 தான் காட்டியிருக்கு)

//விமல் என்ற இந்தப் பச்சப்புள்ளை கத்தரிக்காய் சந்தையில் நின்றுகொண்டு "கத்தரிக்காய் கத்தரிக்காய் என்று அபாண்டமாய்ச் சொல்கிறார்களே அப்படி ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது இருந்தால் ஒன்றையாவது காட்டுங்களேன்" என்று ரொம்ப நேரமாய் அழுது அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு யாராவது கத்தரிக்காய்களைக் காட்டுங்களேன்//

அந்தப்பச்சப்புள்ளக்கு கண்னு கூட தெரியலை,என்னோடப்பதிவின் சுட்டிப்போட்டு அதில அந்த ரசிக சிகாமணியின் பதிவுக்கு சுட்டியும் இருக்கு, ஆனால் அதை போய் படிக்காமலே "காட்டுங்க,காட்டுங்க என்கிறார் :-))

# வாலி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள், தங்களிடம் இருந்து வாலி- எம்.எஸ்வி கால மலரும் நினைவுகளுடன் ஒரு நினைவேந்தல் கட்டுரை வரும் என ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு!

"உலகம் சுற்றும் வாலிபன்" படம் எடுக்கும் காலத்தில் எம்ஜிஆருடன் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் படத்துல் வாலி இல்லை என கேள்விப்பட்டு எம்ஜிஆரிடம் சென்று என் பேர் இல்லாம உங்க படமே வராது , அப்படி படம் எடுத்தா "உலகம் சுற்றும் (வாலி)பன்" என்று தான் பேரு வைக்கனும்னு சொன்னாராம் வாலி. எம்ஜி ஆருக்கு பல சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதி காலத்தால் நிலைத்தவர்.

Amudhavan said...

suresh said...

// அப்படியானால் ஜோசப் கிருஷ்ணாவைக் கொண்டாடுங்களேன். எதற்கு இளையராஜாவைக் கொண்டாடுகிறீர்கள்? //

- சார், இதுவும் அழுகுணி ஆட்டம்தானே..... :) :) :)\\

வாருங்கள் சுரேஷ், நீங்கள் என்னுடைய முந்தைய பதிவுகளில் ஒன்றான 'இளையராஜாவும் சாருநிவேதிதாவும்' பதிவில் இட்டிருக்கும் மிக நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். மிக அழகான அற்புதமான மனவியல் ரீதியான படப்பிடிப்பு அது. அதனை மிகவும் ஆழமாக உணர்ந்து ஓரளவு அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அது பின்னூட்டம் என்றில்லாமல் தனிப்பதிவாகவே வந்திருக்கவேண்டிய ஒன்று. இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் ரசனை எப்படியிருக்கிறது என்பதற்கு அது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அதற்கு உடனடியாகவே பாராட்டு எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மையால் அதனை அங்கே செய்யமுடியவில்லை. இங்கே பாராட்டுகின்றேன். இப்போதும் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுத முடியாததற்கு நேரமின்மையே காரணம்.

ஜோசப் கிருஷ்ணா விஷயம்.........எழுதியவர் அழுகுணி ஆட்டம் ஆடவில்லையென்றால் என்னுடைய பதிலும் அழுகுணி ஆட்டம் இல்லை.

Amudhavan said...


வேட்டைக்காரன் said...
// அவருக்கு யாராவது கத்தரிக்காய்களைக் காட்டுங்களேன்.//

அவரு நீங்க சொன்னதால்ல சொல்றாரு. நீங்கதான் காட்டுங்களேன்\\
ஏங்க வேட்டைக்காரன் நீங்க பேசறது நியாயமா இருக்கா? ஒன்றா இரண்டா எதையென்று எடுத்துக்காட்டுவது? ஒண்ணுமே தெரியாதவர் மாதிரி பேசினால் எப்படி எடுத்துக்கொள்வது? இல்லை நிஜமாகவே தெரியவில்லை என்றால் கொஞ்சம் சிரமமெடுத்து இணையத்தில் தேடட்டுமே. வவ்வாலும் காரிகனும் சொல்லுகின்ற இடங்களில் சென்றாவது படித்துப் பார்க்கட்டும். அல்லது என்னுடைய இளையராஜா பற்றிய பதிவுகளுக்கு ஆரம்பித்திலிருந்துவந்த பின்னூட்டங்களையாவது படித்துப் பார்க்கட்டும்.

Amudhavan said...


வவ்வால் said...
\\ஹி...ஹி..100 (நான் பார்க்கும் போது 99 தான் காட்டியிருக்கு)\\

\\தங்களிடம் இருந்து வாலி- எம்.எஸ்வி கால மலரும் நினைவுகளுடன் ஒரு நினைவேந்தல் கட்டுரை வரும் என ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு!\\

அடாடா! ஒவ்வொரு பதிவுக்கும் சர்வசாதாரணமாக நூற்றுச்சொச்சம் பின்னூட்டங்களுடன் ஹிட்டடிக்கிற பதிவராயிற்றே நீங்கள். நம்முடன் எல்லாம் எப்போதாவதுதான் நண்பர்கள் இப்படித் தொடர்ந்து பேசுகிறார்கள்.
நீங்களும் காரிகனும் சொல்லிவிட்டீர்கள். நானும் வாலிபற்றி எழுதவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் நேரமொதுக்க முடியவில்லை. ஆனாலும் எப்படியாவது நேரமெடுத்து எழுதிவிடுகிறேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\இளையராஜாவின் சிம்பொனி பற்றி ப்ரூனோ என்பவர் எழுதிய பதிவு...\\

தகவலுக்கு நன்றி காரிகன் அவசியம் படிக்கிறேன். உங்கள் பதிவுகள் நன்றாகக் களைகட்ட ஆரம்பித்துவிட்டதுபோல் உள்ளதே. பாராட்டுக்கள்.

காட்டைப் பாரேன் said...

//இளையராஜாவின் சிம்பொனி பற்றி ப்ரூனோ என்பவர் எழுதிய பதிவு எதேச்சையாக காண நேரிட்டது.இதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் களைகட்டுகின்றன.இதோ உங்கள் பார்வைக்கு
http://www.payanangal.in/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE //

அவர்ட்ட கே.வி.எம், எம்.எஸ்.வி முன்னாடி ரஹ்மான் ஒன்னுமில்ல அப்படின்னு சொல்லிப் பாருங்களேன்.

வேட்டைக்காரன் said...

//அந்தப்பச்சப்புள்ளக்கு கண்னு கூட தெரியலை,என்னோடப்பதிவின் சுட்டிப்போட்டு அதில அந்த ரசிக சிகாமணியின் பதிவுக்கு சுட்டியும் இருக்கு, ஆனால் அதை போய் படிக்காமலே "காட்டுங்க,காட்டுங்க என்கிறார் :-))//

வவ்வால் சார், அந்த இடுகையில,
================================================
காரிகன் , அமுதவன் அவர்களே

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said
================================================
என்று எங்கு எழுதியிருக்குன்னு சொல்ல முடியுமா?

விமல் said...

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said

என்று சொல்லி சொல்லியே நீங்கள் இருவரும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.[ இது உங்கள் கற்பனை அல்லவா.!] இப்படி அப்படி யார் சொன்னார்கள்? என்பதையே மீண்டும் , மீண்டும் கேட்கிறோம்.ஏதாவது ஒரு web தளத்தை காட்ட முடியுமா..?
பல இருக்கிறதாம் என்கிறார் தலை கீழ் மனிதன்.அதில் ஒன்றை யாவது காட்டுங்கள் என்று தான் கேட்கிறோம்.

மீண்டும் மீண்டும் கேட்கிறோம். \\

வேட்டைக்காரன் அவர்களே .

வருக வருக .

அவர்கள் கத்திரிக்காயை தான் காட் டுவார்கள். இவர்கள் இளையராஜாவை வசை பாட அப்படி சொல்லி [ // எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் ]

திரிக்கின்றாரகளே தவிர இங்கே யாரும் அப்படி எழுதியதாக நான் அறியவில்லை.
நான் கேட்ட கேள்விக்கு காரிகன் குறிக்கிட்டு ரவி ஆத்தியா எழுதிய ஒரு சிறு தவறை சுட்டி காட்டி ஓடுகிறார்.
[ ஏனென்றால் ராஜ ரசிகர்களுக்கு ஒன்றுமே தெரியாது : என்பதை தான் வலியுறுத்துகிறார் மாப்பிள்ளை ]

அந்த பெருமகனார் அமுதை பொழியும் நிலவே என்ற பாடல் இசையமைத்தவர் ராமநாதன் என்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ராஜாவின் இசையில் பாடவில்லை என்று காமடி பீஸ் விட்டவர்.

அமுதவனை கேள்வி கேட்டால் அவர் பதில் சொல்ல மாட்டார் போலிருக்கிறது,அப்படி ஒன்று இருந்தால் அல்லவா !!?? உடனே அவரது கை பாவை காரிகன் களத்தில் குதிக்கின்றார்.

இசையின் அரிச்சுவடியில் தான் இவர்கள் நிற்கிறார்கள்..

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.
என்று யார், எங்கே எழுதினார்கள் என்றும் ,ரவி ஆதித்யாவின் சுட்ட்டியை காட்டியது போல காட்ட பணிவுடன்" விமல் என்ற இந்தப் பச்சப்புள்ளை" கேட்கிறேன.

நீங்க எங்க headteacher சொல்லுங்க சார்.

மணி said...

இளையராஜா பற்றி கங்கை அமரன இன்னுமொரு முக்கிய தகவல்.

"ஒரு காதல் என்பது " பாடல் பற்றி.

கங்கை அமரன் தீபன்சக்கரவர்த்தியுடன் இணைந்து மலேசியா வாசுதேவன் மகன் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூறிவை.

கங்கை அமரன்: சின்னத்தம்பி பெரியதம்பி அப்படீங்கிற படம் யாரு மியூசிக் பண்ணினது கண்ணா ? யூகி நீங்க சொல்லுங்க ..
யுகேந்திரன் : நீங்க பண்ணினது தான் !
கங்கை அமரன்: இந்தப்பாட்டு இவ்வளவு நல்லாயிருக்கே .. நான் பண்ணியிருப்பேனா..? யோசிக்கனுமில்லே ..
இந்த ஒரு பாட்டு தான் அண்ணன் இளையராஜா மியூசிக் பண்ணினது அது தான் அந்த பாட்டை மட்டும் நீங்க பாடுறீங்க.மத்தப் பாட்டெல்லாம் நான் பண்ணினேன் ஐய்யா . நீங்க அத பாட மாட்டேன் என்கிறீங்க..இளையராஜா அந்த நேரத்திலே ரொம்ப பிசியா இருந்த நேரத்திலே ..எப்பவுமே பிசி தான்..வந்தாங்கன்னா ..இல்லை . டைம் இல்லே அவனை வச்சு பண்ணிக்குங்க அப்படீங்கிற மாதிரி சொல்லுவாங்க.அந்த நேரத்திலே அண்ணன்னோடே பாட்டை ஒரு கம்பனியிடம் வாங்கி சாங்கை போட்டாங்க.அந்த சாங்குக்கு மட்டும் அவர் பெயர் போட மனம் வரவில்லை.பாடல்கள் , இசை கங்கை அமரன் என்று போட்டிட்டோம்.அதால பல பேர் இது என்னுடைய பாட்டு என்று நினைசிருக்கீங்க.அவர்கிட்ட வாசிக்கிறவங்க தான் என்கிட்டேயும் வாசிப்பாங்க,அதே கீபோட்டு, அதே கிட்டார்.ஆனா சவுண்டை பாத்தீங்கன்னா அந்த மன்னன் பிச்சு வாங்கிட்டு இருப்பாங்க.பேஸ் கரெக்டா போயிட்டே இருக்கும்.தம்பி என்னப்பா பண்ணறது நாம யோசிச்சா ,,அந்த சவுண்டு வரவே வராது.இங்கே எத்தனை மியூசிக் டைரெக்டர் பண்ணுறாங்க , யோசிச்சு பாத்தீங்கன்னா ,அந்த சவுண்டு அப்படீங்கிறது அந்த ஆகச்தேசசன் என்கிறது ஒரு சிலருக்கு தான் அமையும்.எல்லாருக்கும் அமையாது.எல்லாரும் மியூசிக் படிச்சவங்க தான்.எல்லாமே தெரியும்,ச வுக்கு என்ன தேறும் ப வுக்கு என்ன தேறும்.அவங்க கிட்டே தான் கிளீனா வருதுன்னா , அத கத்துக்க முயற்சி பண்ணிக்கிட்டிருகோம்.

Amudhavan said...

கங்கை அமரன் இளையராஜாபற்றிப் பேசுகிறார். நிறையப் பேசுகிறார். புகழ்ந்துதான் பேசுகிறார்.புகழ்ந்துபேச வேண்டிய கட்டாயமும் கடமையும் அவருக்கு இருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் நிறையத் தகவல்களை லீக்பண்ணி விட்டுவிடுகிறார். அவர் இளையராஜாவைப் புகழ்ந்தால் அதை மட்டும் கப்பென்று பிடித்துக்கொள்ளும் ரசிகசிகாமணிகள் அவர் லீக் செய்யும் தகவல்களுக்கு மட்டும் கங்கை அமரனைத் தாறுமாறாகத் திட்டித்தீர்த்துவிடுகிறார்கள்.(கங்கை அமரனை அப்படி யார் திட்டியிருக்கிறார்கள்? ஒரேயொரு பதிவையாவது காட்டமுடியுமா, ஒரேயொரு சுட்டியையாவது காட்டமுடியுமா? என்று சிலர் இங்கே வந்து புரண்டு புரண்டு அழுது அடம்பிடிப்பார்களோ என்று கவலையாய் இருக்கிறது)

விமல் said...

அமுதவன் சார்
Hit and run என்பது உங்கள் பாணி போல் தெரிகிறது.

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.
என்று யார், எங்கே எழுதினார்கள் என்றும் ,ரவி ஆதித்யாவின் சுட்ட்டியை காட்டியது போல காட்ட பணிவுடன்" விமல் என்ற இந்தப் பச்சப்புள்ளை" கேட்கிறேன.

//நீங்க எங்க headteacher சொல்லுங்க சார். //

நான் கேட்ட கேள்விக்கு பதிலேதுமில்லாமல் தாவி பாய்கிறீர்கள்.

// ...சுட்டியையாவது காட்டமுடியுமா? என்று சிலர் இங்கே வந்து புரண்டு புரண்டு அழுது அடம்பிடிப்பார்களோ என்று கவலையாய் இருக்கிறது//அமுதவன்
/. பிரச்சினை என்னவென்றால் நிறையத் தகவல்களை லீக்பண்ணி விட்டுவிடுகிறார்.//அமுதவன்

அவர் லீக் பண்ணும் போது உங்களுக்கு தேவையானதை நீங்கள் பொறுக்குவது போலவே மற்றவர்களும் பொறுக்குகிறார்கள்.அதில் என்ன தவறு??.

உங்கள் பதிவுகள் காழ்ப்புணர்விலும் , உணமையை அடிப்படைகாக கொள்ளாத கேள்வி செவியன் பதிவாகவே கருத வேண்டியிருக்கிறது.

இளையராஜாவை பற்றி அவதூறாக எழுதுபவர்களின் ஆக்கங்ககளை காரிகன் உங்களுக்குப் பரிந்துரை செய்வதும் " கண்டிப்பாக ஓடிப்போய் பார்க்கிறேன் " என்று நீங்களும் கூத்தடிக்கின்றீர்களே ! நாங்க கேட்கும் சுட்டியை மட்டும் காட்ட மாட்டேன் என்கிறீர்களே !!.
அந்த மாயம் தான் என்னவோ??அங்கு ஏதாவது புதையல் ஒழித்து வைத்திருக்கின்றீர்களோ ?

அமுதவன் அவர்களுடன் உரையாடுவது அர்த்தமில்லை போல் தெரிகிறது.

கட்ட தொர said...

//.(கங்கை அமரனை அப்படி யார் திட்டியிருக்கிறார்கள்? ஒரேயொரு பதிவையாவது காட்டமுடியுமா, ஒரேயொரு சுட்டியையாவது காட்டமுடியுமா? என்று சிலர் இங்கே வந்து புரண்டு புரண்டு அழுது அடம்பிடிப்பார்களோ என்று கவலையாய் இருக்கிறது)//

அய்யா அப்படி யாரும் கேட்பதற்கு முன்னால்...
**
எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.
**

இதுக்கு பதிலச் சொல்லி அவங்க வாய அடைச்சிடுங்க.

Amudhavan said...


விமல் said...
\\அமுதவன் அவர்களுடன் உரையாடுவது அர்த்தமில்லை போல் தெரிகிறது.\\
மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

வேட்டைக்காரன் said...

//ஏங்க வேட்டைக்காரன் நீங்க பேசறது நியாயமா இருக்கா? ஒன்றா இரண்டா எதையென்று எடுத்துக்காட்டுவது? ஒண்ணுமே தெரியாதவர் மாதிரி பேசினால் எப்படி எடுத்துக்கொள்வது? இல்லை நிஜமாகவே தெரியவில்லை என்றால் கொஞ்சம் சிரமமெடுத்து இணையத்தில் தேடட்டுமே. வவ்வாலும் காரிகனும் சொல்லுகின்ற இடங்களில் சென்றாவது படித்துப் பார்க்கட்டும். //

வவ்வால் சொன்ன உலக சினிமா ரசிகன் இடுகையில ராஜா பற்றிய செய்தி மட்டுமே உள்ளது.

காரிகன் ஐயா, நீங்களாவது வந்து...

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.//

... எங்க படிச்சீங்கன்னு சொல்லக்கூடாதா?

வேட்டைக்காரன் said...

அடடா, இதற்காகத்தான் காரிகன் ஐயா படையல் வைத்தாரென்று இதுவரை தெரியாமல் போய்விட்டதே. தெரிந்திருந்தால் சிரமப்படுத்தியிருக்க மாட்டோமே!

நெடியவன் said...

போருக்கு வா என்று யார் கூப்பிட்டார்கள்
கூப்பிட்ட பின்னாலே ஏன் இந்த பொய்கள்..?
முந்தானைக்குள் முகம் புதைக்கும்பொய்யர்கள்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

// ஆனாலும் எப்படியாவது நேரமெடுத்து எழுதிவிடுகிறேன்.//

காத்திருக்கிறோம்,மிகவும் சுவையான ,புதிய தகவல்களுடன் வெகு சிலரே எழுதுகிறார்கள், அத்இல் குறிப்பிடத்தக்கவர் தாங்கள் என்பதால் , காத்திருத்தலும் தகும்!

# ஹி...ஹி நாம மொக்கை போடுவதால் ,பதிலுக்கு மொக்கை போட்டு பின்னூட்டங்கள் வருது,மற்றபடி விசேஷமா ஒன்னுமில்லை.

# இன்னும் சிலர் கத்திரிக்காய் மட்டுமில்லாமல்ல் கண்டங்கத்திரிக்காயும் பார்க்கோனும்னு நிக்குறாங்க, அவங்களையும் கண்டுக்கிட்டு வாரேன்!

-----------------

விமல் & வேட்டைக்காரன்,

// // எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் ]

திரிக்கின்றாரகளே தவிர இங்கே யாரும் அப்படி எழுதியதாக நான் அறியவில்லை.//

இன்னார் இதை செய்யலைனு பேர போட்டா எழுதுவாங்க? அப்படி எழுதினால் பொது வெளியில் தர்மசங்கடங்கள் வரும் என்ன்பது அறியாமலா இருப்பார்கள்,எனவே பெயரை எல்லாம் குறிப்பிடாமல், இளையராஜ மட்டுமே இப்படி செய்தார்,அப்படி செய்தார்னு எழுதுவாங்க,அது மறைமுகமாக அதுக்கு முன்னர் யாருமே செய்யலைனு சொல்வதாகும்,எனவே எம்ம்.எஸ்.வி.ராமநாதன், கே.வி.எம் எல்லாம் என்ன செய்தார்கள் என கேள்வி எழுவதும், பதில் சொல்வதும் இயல்பே.

உங்களுக்கு எல்லாம் பட்டவர்த்தமாக சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறிங்களோ, இப்போ உதாரணமா ,உங்க பகுதியில் வசிக்கும் ஒருவர் ,இந்த ஏரியாவிலே என் பொண்டாட்டி மட்டும் தான் பத்தினினு உங்க காதுபட சொல்லுறார்னு வச்சிக்கோங்க, நீங்க என்ன சொல்வீங்க? அப்போ என் பொண்டாட்டிலாம் என்னனு கேட்டா, நான் என்ன உன் பேரா சொன்னேனு சொல்லிட்டு போயிடுவான் :-))

எனவே இன்னார் தான்னு பேரு சொல்லாமல்ல் ,இவரு மட்டும் தான் இசை அமைப்பாளர்னு சொல்வதும் ,மற்றவர்களை மட்டம் தட்டுவதே,ஆனால்ல் நீங்களோ எங்கே பேரு சொல்லி எழுதி இருக்கு காட்டுனு "சின்னப்புள்ளத்தனமா" கேட்டுட்டு இருக்கீங்க.

இன்னும் மய்யம், TFM போன்ற இணைய தள உரையாடல்கள்,கட்டுரைகளை எல்லாம் படிச்சதே இல்லை போல,, பாவம் ஒன்னுமே தெரியாம வெள்ளந்தியாவே வளந்திட்டிங்க போல,பார்த்து சூதனமா இருந்துக்கோங்க,இல்லைனா புள்ளை புடிச்சிட்டு போயிடபோறான் :-))

வவ்வால் said...

அமுதவன் சார்,

// ஆனாலும் எப்படியாவது நேரமெடுத்து எழுதிவிடுகிறேன்.//

காத்திருக்கிறோம்,மிகவும் சுவையான ,புதிய தகவல்களுடன் வெகு சிலரே எழுதுகிறார்கள், அத்இல் குறிப்பிடத்தக்கவர் தாங்கள் என்பதால் , காத்திருத்தலும் தகும்!

# ஹி...ஹி நாம மொக்கை போடுவதால் ,பதிலுக்கு மொக்கை போட்டு பின்னூட்டங்கள் வருது,மற்றபடி விசேஷமா ஒன்னுமில்லை.

# இன்னும் சிலர் கத்திரிக்காய் மட்டுமில்லாமல்ல் கண்டங்கத்திரிக்காயும் பார்க்கோனும்னு நிக்குறாங்க, அவங்களையும் கண்டுக்கிட்டு வாரேன்!

-----------------

விமல் & வேட்டைக்காரன்,

// // எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் ]

திரிக்கின்றாரகளே தவிர இங்கே யாரும் அப்படி எழுதியதாக நான் அறியவில்லை.//

இன்னார் இதை செய்யலைனு பேர போட்டா எழுதுவாங்க? அப்படி எழுதினால் பொது வெளியில் தர்மசங்கடங்கள் வரும் என்ன்பது அறியாமலா இருப்பார்கள்,எனவே பெயரை எல்லாம் குறிப்பிடாமல், இளையராஜ மட்டுமே இப்படி செய்தார்,அப்படி செய்தார்னு எழுதுவாங்க,அது மறைமுகமாக அதுக்கு முன்னர் யாருமே செய்யலைனு சொல்வதாகும்,எனவே எம்ம்.எஸ்.வி.ராமநாதன், கே.வி.எம் எல்லாம் என்ன செய்தார்கள் என கேள்வி எழுவதும், பதில் சொல்வதும் இயல்பே.

உங்களுக்கு எல்லாம் பட்டவர்த்தமாக சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறிங்களோ, இப்போ உதாரணமா ,உங்க பகுதியில் வசிக்கும் ஒருவர் ,இந்த ஏரியாவிலே என் பொண்டாட்டி மட்டும் தான் பத்தினினு உங்க காதுபட சொல்லுறார்னு வச்சிக்கோங்க, நீங்க என்ன சொல்வீங்க? அப்போ என் பொண்டாட்டிலாம் என்னனு கேட்டா, நான் என்ன உன் பேரா சொன்னேனு சொல்லிட்டு போயிடுவான் :-))

எனவே இன்னார் தான்னு பேரு சொல்லாமல்ல் ,இவரு மட்டும் தான் இசை அமைப்பாளர்னு சொல்வதும் ,மற்றவர்களை மட்டம் தட்டுவதே,ஆனால்ல் நீங்களோ எங்கே பேரு சொல்லி எழுதி இருக்கு காட்டுனு "சின்னப்புள்ளத்தனமா" கேட்டுட்டு இருக்கீங்க.

இன்னும் மய்யம், TFM போன்ற இணைய தள உரையாடல்கள்,கட்டுரைகளை எல்லாம் படிச்சதே இல்லை போல,, பாவம் ஒன்னுமே தெரியாம வெள்ளந்தியாவே வளந்திட்டிங்க போல,பார்த்து சூதனமா இருந்துக்கோங்க,இல்லைனா புள்ளை புடிச்சிட்டு போயிடபோறான் :-))

விமல் said...

அமுதவன் , மற்றும் வவ்வால் அவர்களே

TFM இணையத்தில் உள்ளவைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள்.நாம் படிக்கவில்லை.எல்லோரும் எல்லா இணையதளமும் படிப்பதில்லை.அவகாசமும் கிடைப்பதில்லை.அதில் தவறும் இல்லை.குறிப்பிட்ட அந்த பகுதியை copy & Paste செய்து காட்டினால் உதவியாக இருக்கும் அல்லவா ? அதன் மூலம் நீங்க சொன்ன கருத்துக்கு வலு சேர்க்கும் அல்லவா.!!

// வவ்வால் சொன்ன உலக சினிமா ரசிகன் இடுகையில ராஜா பற்றிய செய்தி மட்டுமே உள்ளது. //
என்று தானே வேட்டைக்காரன் எழுதுகிறார்.ரவி ஆதித்யா என்பவர் எழுதிய ஒரு தவறான குறிப்பை வைத்து நக்கல் அடிக்கிறார் காரிகன்.

ராஜா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவரை பற்றி எழுதுகிறார்கள்.திரு.அமுதவன் , திரு.காரிகன் என்ன செய்ய வேண்டும் என்றால் பழையவர்களின் பெருமைகளை எழுத வேண்டும் அல்லவா.அதையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லையே!!

நீங்கள் சொல்லும் பழைய இசையமிப்பாளர்கள் என்னவிதத்தில் சிறந்தவர்கள் என்று ஆதாரத்துடன் எழுதுங்கள் பார்க்கலாம்.

// இணையத்தில எதுவுமே வாசிச்சதே இல்லையா, ஏகப்பட்ட " ஃபிளெக்ஸ் பேனர்கள்" கிடக்கு இணையத்தில எதைனு சொல்ல, // வவ்வால்.
ஒரு சுட்டியை காட்டும் என்றே கேட்கிறோம்- அவ்வ்!

// \\சந்திர பாபு மூலம் "யோடெல்லிங்"(yodeling") ஜோடெலிங் என உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்) வகை வெஸ்டர்ன் கன்ட்ரி இசையை ஜி.ராமநாதன் போன்றவர்கள் தான் தமிழுக்கு கொண்டு வந்தார்கள் என நினைக்கிறேன்,//
நல்ல சினிமா இசை வரலாற்று அறிவு!! அவ்வ்!


Anonymous said...
\\தகராறு வரக்காரணம் கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செயதமைதான். இந்த முடிவுக்கு தூண்டியது இயக்குனர், தயாரிப்பாளர் பாலாஜி.
// கங்கை அமரன் தனியாக இசை அமைக்க முடிவு செய்தமைதான் தகராருக்கு காரணம்.\\

சரியான தகவல்களுக்கு நன்றி நண்பரே. - Amudhavan said... அவ்வ்!

July 7, 2013 at 6:41 PM
நல்ல சினிமா இசை வரலாற்று அறிவு!! அவ்வ்!
சரியான தகவல் இதோ

Gangai amaran as music director.
-------------------------------------
Suvarillatha Chithirangal (1979)
Malargalae Malarungal (1980)
Mouna Geethangal (1981)
Ramaye Vayasukku Vanthutta (1980)
Tharayil Pootha Malar (1980)
Vaazhvey Maayam (1982)
Naal Ellaam Pournami (1983)

--------
please check the information and tell your friends.Do not tell lies.
July 8, 2013 at 10:08 PM
.///...இத்தனை சமாச்சாரங்களை வைத்துகொண்டு இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று தெரியவில்லை. சபாஷ். சரியான போடு. //- காரிகன் said... அவ்வ்!

இளையராஜா காப்பி என வவ்வால் 4 பாடல்களை எழுதா அதி பெருமையாக் பீத்துகிறார் அமுதவன்.
மெல்லிசை இரட்டையர் செய்த காப்பிகளை ஒரு இணையத்தில் கண்டேன்
காரிகனின் [ அவரது ப்லொக்கில் ] புண்ணியத்தில் கார்த்திக் என்பவர் தந்த சுட்டியை தொடர்ந்து பார்த்ததில் அற்ப்புதமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்பது தெரிய வந்தது.
இதோ அந்த சுட்டி.; http://inioru.com/?p=28740
/// Anonymous said...
தெரியாத விஷயத்தைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் உணர்வது நல்லது.
இது தான் இந்த கட்டுரை சொல்லும் பாடம் என்று நினைக்கிறேன்.
July 9, 2013 at 12:39 AM ////
மீண்டும் கேட்கிறோம்
// ...காரிகன் , அமுதவன் அவர்களே

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said
================================================
என்று எங்கு எழுதியிருக்குன்னு சொல்ல முடியுமா?
July 23, 2013 at 5:09 AM ...///

ஹீ ..ஹீ ...ஹீ ..ஹீ .... மியாவ் ...மியாவ்..மியாவ்

[ அதற்கும் ராஜாவைத் தான் நீங்கள் கும்பிட வேண்டும்.ஏனென்றால் " எம்.எஸ்.வீ. துப்பிய எச்சி ப் .. ப பாப்.... பெ ..பாப்.... பெ பே ..பே.பே !!!

Amudhavan said...

விமல் said...

\\திரு.அமுதவன் , திரு.காரிகன் என்ன செய்ய வேண்டும் என்றால் பழையவர்களின் பெருமைகளை எழுத வேண்டும் அல்லவா.அதையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லையே!!\\
\\நீங்கள் சொல்லும் பழைய இசையமிப்பாளர்கள் என்னவிதத்தில் சிறந்தவர்கள் என்று ஆதாரத்துடன் எழுதுங்கள் பார்க்கலாம்.\\
விமல், தமிழ்த்திரை இசை என்பது ஜென்சியில் தொடங்கி ஸ்வர்ணலதாவுடன் முடிவடைந்துவிடவில்லை. பாபநாசன் எஸ்விவெங்கட்ராமன் தொடங்கி இன்றுவரை பாய்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்ற அடிப்படையில் அமைந்தவையே என்னுடைய பதிவுகள். இதுபற்றித் தொடக்கமுதலே விரிவாகத்தான் எழுதிவருகிறேன். அவ்வப்போது, எழுதுகின்ற விஷயங்களுக்கேற்ப அடிப்படைச் செய்திகளை சேர்த்துத்தான் எழுதுகிறேன். உங்களுக்கு எல்லாமே புரியவேண்டும் என்று அவசியமில்லை. அப்படிப் புரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பேற்கவும் முடியாது.

என்னுடைய பதிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது என்பது எனக்குத் தெரியும். இன்றைக்கும் எத்தனை டிவி சேனல்கள் வெறும் இளையராஜாவுக்கு முந்தைய பாடல்களை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன என்பதுபற்றியெல்லாம்கூட ஏற்கெனவே குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். சில FM சேனல்கள் இளையராஜா காலத்துப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அவர்கள் பெரும்பாலும் 'இன்றைக்குக் கார் ஓட்டும் தலைமுறையினரை'க் குறிவைத்துத்தான் சேனல் நடத்துகிறார்கள். அதனால்தான் புதியபாடல்களையும் இளையராஜா காலத்துப் பாடல்களையும் அவ்வப்போது அதற்கும் முந்தைய பாடல்களையும் ஒலிபரப்புகிறார்கள். இந்த சிலபஸ் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனாலும் நல்லவேளையாக FM ரேடியோக்களின் ரீச் குறைச்சல்தான்.
நான் ஏற்கெனவே எழுத்துலகில் அறிமுகமானவன் என்பதால் என்னைச் சந்திப்பவர்கள் என்னுடைய திரையிசைப் பற்றிய பதிவுகளைப் படித்துவிட்டு நேரில் சந்திக்கும்போது எப்படி ரியாக்ட் பண்ணுகிறார்கள் என்பதில் எனக்கு நிறைவு. அவர்களுக்கெல்லாம் இணையத்தில் 'படிக்கமட்டும்தான்' தெரியும். பலபேருக்கு பின்னூட்டம் இடவெல்லாம் தெரியாது. அவர்களின் கருத்தை நான் பிரதிபலிக்கிறேன் என்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. பின்னூட்டம் இடும் தலைமுறை வேறு.

இன்றைய இளைஞர்கள் பற்றிய மனோபாவத்தைத் திரு சுரேஷ் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் என்னுடைய முந்தைய பதிவிற்கான பின்னூட்டத்தில். அப்படி இருப்பவர்களிடம் நான் எதைக்கொண்டுபோய்ச் சேர்க்கமுடியும்?

நீங்கள் கேட்கும் பல கேள்விகளுக்கான பதில்கள் என்னுடைய பதிவுகளிலேயே இருக்கின்றன. ஆனாலும் திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள். எது சொன்னாலும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியையே கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இயல்பு இரு வகையானதுதான். ஒன்று மைய நீரோட்டத்தை திசை திருப்பப்பார்க்கிறார்கள். அல்லது சில விஷயங்களைப் புரிந்துகொள்ளும் தன்மை அவர்களிடம் இல்லை. இவர்களுக்காக நான் எதற்கு மெனக்கெடவேண்டும்?
எதையாவது சொல்லிவிட்டு ஓடிவிடுவது என்றெல்லாம் எழுதுகிறீர்கள்.அப்படியெல்லாம் இல்லையென்பது என்னுடைய பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்துவருகிறவர்களுக்குப் புரியும்.

Amudhavan said...

இணையத்தில் இளையராஜா பற்றி என்ன அடிப்படையில் எழுதப்பட்டு வருகிறது என்பது எனக்குத் தெரியும். அவற்றில் எத்தனை தவறுதலான கற்பிதங்கள் என்பதும் தெரியும். அவை பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக நான் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருக்கிறேன். இன்னமும் இளையராஜா எழுதும் நோட்ஸ் பற்றி எழுத இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆகவே உங்கள் கேலியும் கிண்டலும் என்னை அணுவளவும் சீண்டாது.

இலக்கியச்சிங்கம் என்று கருதப்படும் திரு ஜெயகாந்தன் கூடவெல்லாம் நேரில் நிறைய நேரம் பல விஷயங்கள் பற்றிச் சூடான விவாதங்கள் எல்லாம் நிகழ்த்திய அனுபவங்கள் உண்டு. ஆகவே உங்களுடைய இற்றுப்போன வாதங்களுக்கெல்லாம் பயந்துபோய் ஓடிவிடுவதாகவெல்லாம் கற்பனை பண்ணிக்கொண்டு இறுமாந்துபோக வேண்டாம்.

தவிர நான் இங்கு பேசும் ஒரு சில விஷயங்களைப் பற்றி திரு இளையராஜா அவர்களுடனேயே பேசியிருக்கிறேன் என்பதையும் ஒரு சில இடங்களில் சொல்லியிருக்கிறேன். அது பற்றிய முழுமையான கட்டுரையை நான் இன்னமும் எழுதவில்லை. எப்போது எழுதவேண்டும் எங்கு எழுதவேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

நான் வெறும் இணையத்தில் மட்டுமே எழுதுகிறவன் அல்ல. பத்திரிகைகள், நூல்கள் என்று இன்னொரு தளமும் இருக்கிறது. அதனால் வெறுமனே நீங்கள் கேட்கும் ஒரே மாதிரியான புளித்துப்போன எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்க நேரமும் அனுமதிப்பதில்லை.

என்னுடன் உரையாடுவதில் அர்த்தமில்லை என்று சொல்லியபிறகு மீண்டும் உரையாட வரமாட்டீர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். வந்திருக்கிறீர்கள். அதே பழைய டிகேராமமூர்த்தி, எம்எஸ்வி, மகாதேவன் காரிகன் என்ற கேள்வியைத் தூக்கிக்கொண்டு. ஒரு விஷயத்தைப் பூடகமாகச் சொல்வது, உருவகமாகச் சொல்வது என்று எத்தனையோ உண்டு. 'கத்தரிக்காய் சந்தையில் நின்றுகொண்டு' என்று நான் சொல்லியிருப்பதுகூட உருவகம்தான். 'பனைமரத்தடியில் நின்றுகொண்டு பால் குடித்தாற்போல்' என்று எல்லாரும் சொல்வார்களே அதுவும் உருவகம்தான். இல்லை அப்படியே அச்சடித்த வார்த்தைகளில் வேண்டும் என்று ஒவ்வொன்றுக்கும் குரங்குப்பிடியாக அடம் பிடிக்க முடியாது. கூடாது. சிலவற்றுக்கான அர்த்தங்களை மட்டும்கூறி அவை பற்றி விவாதிப்பது என்பது ரொம்ப ரொம்ப சாதாரணமானதுதான். அதற்கு அப்படியே அந்த வார்த்தைகளையே காட்டு என்று சொல்வது நீதி மன்றத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சாதாரண விவாதங்களுக்கெல்லாம் தேவையில்லை.

'முன்னோர்கள் பற்றி யாரும் தவறுதலாக எழுதவில்லை' அதுதானே நீங்கள் சொல்லவருவது? ரொம்பவும் மகிழ்ச்சி. அப்புறம் எதற்காக அவர்களைத் 'தாண்டிவந்து' ஏழாவதாகவோ எட்டாவதாகவோ உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒருவருக்கு முதலாவதற்கான சிறப்பு மரியாதையைத் தருகிறீர்கள்?

உங்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லையா, சில விஷயங்களில் உடன்பாடு இல்லையா? அப்படியே விட்டுவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போங்கள். இல்லாவிட்டால் புறக்கணித்துவிடுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் நினைத்தபடிதான் ஒவ்வொருவரும் பின்னூட்டம் இடவேண்டும் என்று நினைப்பதும் எதிர்பார்ப்பதும் வேலைக்காகாது.

இனிமேல் வேறு விஷயங்கள் பேசுவதாக இருந்தால் தாராளமாய் வந்து பேசுங்கள். இல்லை திரும்பவும் காரிகன் எம்எஸ்வி டிகேஆர் கேவிஎம் என்று காப்பி பேஸ்ட்டை எடுத்துக்கொண்டுவந்துபோடும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதற்கில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். நன்றி.

விமல் said...


அமுதவன் sir

தங்களை மனம் வருத்தியதற்க்கு வருந்துகிறேன்.
எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கும் வவ்வே புட்டு வைக்கலாமே சார்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
இப்போதாவது கதவடைத்தீர்களே.இதை நீங்கள் எப்போதோ செய்திருக்கவேண்டும். இவர்களுக்காகவே app-engine என்று ஒரு மேதாவிகளின் தளம் இருக்கிறது. அங்கே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே விவாதிக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அருகே சென்று பார்த்தால் அவர்கள் ஆங்கிலத்தில் டிஸ்கஷன் நடத்துவது இளையராஜாவின் படு சப்பைப் பாடல்களைப் பற்றி. அதையும் பெரும் இலக்கிய ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருப்பார்கள்.ரொம்ப நகைச்சுவையாக இருக்கும்.பேசுவது எல்லாம் இளையராஜா, பாரதிராஜா,வைரமுத்து,கங்கை அமரன், வாலி போன்றவர்களைப் பற்றி. ஆனால் பேசும் மொழியோ ஆங்கிலத்தில். It's a height of hypocrisy. அந்த தளத்தில் உங்களையும் என்னையும் மற்றும் வவ்வாலைப் பற்றியும் காரமாக குறிப்பிட்டு நம் ஆட்கள் யாரும் அங்கே போகக்கூடாது என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி தடை கூட போட்டிருக்கிறார்கள்.

மேலும் வாலியின் இறப்புக்கு ஹரன் பிரசன்னா என்பவர் எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை இது. எவ்வளவு "நேர்மையாக"எழுதி இருக்கிறார்!

http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_26.html

SATHEES said...

// எம் எஸ் வி-டி கே ஆர், கே வி மகாதேவன் போன்றவர்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை.// - காரிகன் said

என்று எங்கு எழுதியிருக்குன்னு சொல்ல முடியுமா?

Raj Mohan. S said...

நீங்கள் கண்ணதாசனை எல்லோரையும் போல நேசிக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்திலிருந்து அறிவேன். திரைத் துறை மற்றும் திரையிசை ஜாம்பவான்கள் பற்றி அவ்வப்போது எழுதியவர் நீங்கள். மணிவண்ணன், TMS & PBS ஆகியோர் மறைந்த நேரத்தில் பதிவிட்ட நீங்கள் வாலியை கண்டுகொள்ளாதது வியப்பு + வருத்தமே.
பி.கு.: உங்கள் ஈமெயில் முகவரி இல்லாததால் இங்கு பின்னோட்டம் இட நேர்ந்தது.(உங்களை சென்றடையும் என்ற நம்பிக்கையில்))

Amudhavan said...

ராஜ்மோகன் அவர்களின் வருகைக்கும் எதிர்பார்ப்பிற்கும் நன்றி. வாலி அவர்களைப்பற்றி எழுதத் துவங்கி பாதியில் நிற்கிறது. என்னுடைய மகளின் திருமண வேலைகளில் மூழ்கியிருந்ததால் இணையத்துடன் நேரம் செலவிட முடியவில்லை. வருகிற 20-ம் தேதிக்குப் பின்னர்தான் இணையத்திற்கு வரமுடியும். அப்போது வாலியின் கட்டுரையை முடித்து பதிவேற்ற முடியும் என்று நினைக்கிறேன். சந்திப்போம் ராஜ்மோகன்.

Sankar said...

க(அ) ண்ணா ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோ.. நமக்கு அம்மா கைபக்குவம்னு ஒரு சாப்பட மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.. ஏனென்றால் நம்ம பிறந்ததிதிலிருந்து அவங்க கைப்பட தான் சாப்பிட்டுன்னு இருக்கிறோம், காதல் மனைவி வந்து அவ சமைச்சத விட அம்மா கைப்பக்குவம் அவங்களுக்கு மட்டும் தான்.. அம்மாவே பாட்டி கிட்டே இருந்து கத்துக்கினது தான்.. ஆனா பாட்டியையும் அம்மா விட ஒப்பிட முடியாது.. பாட்டி நல்லாவே பண்ணாலும்.. இந்த ப்ளாக் படிக்கிரவங்களுக்கெல்லாம் அம்மா என்றால் அது ராஜா சார் காலக்கட்டம் தான்.. தம்பி விஷயத்தில் அவர் எப்படி நடந்துக்கொண்டலும்.. அந்த கர்மா அவருக்கு சேரும்.. ஆனால் அவர் திறைமையை வெறும் கேள்வி அருமையோட அசிங்கபடுதுவது.. ஒத்துக்கொள்ள கூடியது அல்ல..
* எல்லாவற்றுக்கும் மேல எனக்கு இளையராஜாவை தம்பி, கர்வம், இன வெறி இப்படியான தனிப்பட்ட விஷயத்தில் பிடிக்காது..*

Amudhavan said...


Sankar said...
\\இந்த ப்ளாக் படிக்கிரவங்களுக்கெல்லாம் அம்மா என்றால் அது ராஜா சார் காலக்கட்டம் தான்..\\
தமிழ்த்திரை இசை என்பது வெறும் 'ப்ளாக் படிக்கிறவர்களுக்கு' மட்டுமானது அல்ல. அது அதையும் தாண்டி மிகமிகப் பெரியது. விசாலமானது.

Amudhavan said...

Sankar said...
\\இந்த ப்ளாக் படிக்கிரவங்களுக்கெல்லாம் அம்மா என்றால் அது ராஜா சார் காலக்கட்டம் தான்..\\

இது அம்மா சமையலா ஆட்டுக்குட்டி சமையலா என்பது ஒருபுறமிருக்க, அப்படியே அம்மா சமையல் என்றே வைத்துக்கொண்டாலும் பிரச்சினை என்னவென்றால் உங்க அம்மாவான இளையராஜா, நிறைய பதார்த்தங்களைப் பக்கத்து வீடான எம்எஸ்வி வீட்டிலிருந்து எடுத்துவந்து பரிமாறியிருக்கிறார் என்பதைத்தான் உங்க சித்தியான கங்கை அமரன் சொல்லியிருக்கிறார் என்பதுதான்.

Anonymous said...

Super comment sir

Post a Comment