Monday, February 2, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்

                                

                           

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்களே அடிக்கொருதரம் அறிவிக்கிற மாதிரி தமிழகத்தின் ‘செல்லக்குரலுக்கான தேடல்’ என்ற அழகிய பெயருடன் நீண்ட நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி முடிவுபெறும் நிலைக்கு வந்தாகிவிட்டது.  நிச்சயமாக மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது இந்த நிகழ்ச்சி. மற்ற சேனல்களில் வரும் சீரியல் குப்பைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பெரியதொரு ஆதரவு இருக்கிறது என்பதே உவப்பிற்குரிய விஷயம்தான்.

ஒரு வருடம் பெரியவர்களை வைத்து நடத்தப்படும் இதே நிகழ்ச்சியை அடுத்த வருடம் சிறியவர்களை வைத்து நடத்துகிறார்கள் போலும். ஏனெனில் முந்தைய வருடம் ஃபைனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு ஜட்ஜாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று  ஆஜித் என்ற சிறுவனைத் தேர்வு செய்ய, சென்ற வருடம் எஸ்.ஜானகி பங்கேற்று திவாகர் என்பவரைத் தேர்வு செய்தார்.
அதனால் ஒரு வருடம் செல்லக்குரல்களுக்கான தேடலாகவும், அடுத்த வருடம் பொதுவான சிறந்த பாடகர் தேர்வாகவும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வளர்ந்துவிட்ட பெரியவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியை விடவும் சிறுவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான வீர்யமும் ரசிகக் கூட்டமும் நிச்சயம் அதிகம்தான்.

சின்னக்குழந்தைகளை வைத்து, அதிலும் பால்மணம் மாறாத பிஞ்சுக்குழந்தைகளை வைத்து சிரமமான ராகத்தையும், அவர்களுக்கு என்னவென்றே புரியாத வரிகளுடன் கூடிய பாடல்களையும் அவர்கள் மீது திணித்து அதனைத் தேர்ந்த தொழில்முறை சார்ந்த பின்னணிப் பாடகர்கள் எப்படிப் பாடியிருக்கிறார்களோ அதே தொனியில் அதே பாவங்களுடன் அதே உணர்வுகளுடன் பாடல்களை வெளிக்கொண்டுவரச் செய்யும் முயற்சி-

அடிப்படையில் யோசித்தால் அராஜகமானது என்றுதான் சொல்லவேண்டும்!

ஆனால் நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம், எம்மாதிரியான அலப்பறைகளுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதையும், இம்மாதிரியான அராஜகங்களுக்குத்தாம் இப்போது மதிப்பு என்பதையும் சேர்த்தே புரிந்துகொண்டால்தான் இதற்கான விடைகள் கிடைக்கும்.

உண்மையில் சில அசாத்தியங்களை ரசிக்கும், அதனைக் கொண்டாடும் மனப்பான்மையும் நம்மிடம் இருக்கிறது.

சின்னக்குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி செய்யும் சேஷ்டைகளை நாம் விரும்பி ரசிக்கிறோம்.

சின்னக்குழந்தைகளைக்குப் புடவைக் கட்டிப் பார்ப்பதும், சின்னப்பையன்களுக்கு வேட்டி ஜிப்பா அணிந்து பார்ப்பதும் நம்முடைய ரசிப்புப் பட்டியலில்தான் இருக்கிறது.

இப்போதெல்லாம் யார் வீட்டிற்குப் போனாலும் அந்த வீட்டுக்குழந்தை அதுபாட்டுக்கு அதன் கையிலிருக்கும் ஸ்மார்ட் போனில் நம்மைப் புகைப்படம் எடுத்து நம்மிடமே காட்டுவதை இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இதனையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.
எமர்ஜென்சிக்குப் பிறகு ஜனதா கட்சி மொரார்ஜி தலைமையில் பரபரப்பாக ஆட்சி அமைத்திருந்த நேரம்.

முதன்முதலாக நண்பர்களுடன் டெல்லி செல்லும் வாய்ப்பு வந்தது.

அப்போது ஒரு நண்பர் தன்னுடன் கிளிக்-3 காமிரா ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். அந்தக் காமிராவுக்காக அந்த நண்பருக்கு எங்கள் வட்டத்தில் ஒரு ஸ்பெஷல் மரியாதையே இருந்தது என்பதையும் புரிந்துகொண்டால்தான் இன்றைய டேப்லெட்டிலும் ஸ்மார்ட் போனிலும் சின்னக்குழந்தைக்கூட அபாரமான படங்களை எடுத்துத் தள்ளுவதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கால ஓட்டம் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

                         

விஜய் டிவி நடத்தும் இந்தப் போட்டியில் வெற்றிபெறப்போகும் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகிற பரிசுப் பொருட்களும் நினைத்துப் பார்க்கவே முடியாதவையாக இருக்கின்றன.

முதல் பரிசு பெறும் குழந்தைக்கு ஒரு வீடாம். 

அதற்கடுத்து வரும் குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்று பரிசுப்பொருளாம்.

அதற்கடுத்துவரும் குழந்தைக்கு ஒரு கிலோ தங்கமாம்………………. இவை பரிசுப் பொருட்கள்.

அந்தக் குழந்தைகள் மத்தியில் இந்த வயதிலேயே இம்மாதிரியான விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அவர்களை எம்மாதிரியான மனநிலைக்கு உட்படுத்தும், அவர்களை எம்மாதிரியான எதிர்கால இளைஞர்களாக உருவாக்கும் என்பதெல்லாம் மனோதத்துவ நிபுணர்கள் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.

ஏனெனில், இம்மாதிரி பதினாறு வயதிலேயே பல ஆயிரங்களும் லட்சங்களும் வழங்கப்பட்டு, அவர்கள் மீது புகழ் வெளிச்சமும் பரப்பப்படும் சில நடிகைகள் பிற்காலத்தில் எந்த அளவு தங்களை சர்வாதிகார மனம் கொண்டவர்களாக வரித்துக்கொள்கிறார்கள் என்பதையும்-
மற்ற அவ்வளவு பேரையும் எந்த அளவுக்குக் கேவலமானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதையும் –
எம்மாதிரியான வகையில் தங்களை இந்தச் சமூகத்திற்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான விபரீதங்களையும் நாம் கண்ணெதிரில் பார்த்தபடிதான் இருக்கிறோம்.

இது ஏதோ வெறும் நடிகைகளைப் பற்றி மட்டும் இல்லை. நடிகர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எக்கச்சக்க பணமும் எக்கச்சக்கப் புகழும் மிகச்சிறிய வயதிலேயே வந்துவிட்டால் அந்தப் பணத்தையும் புகழையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதாக எல்லாரிடமும் வந்துவிடுவதில்லை.

மிகப்பெரிய புகழையும் மிகப்பெரிய பணவரவையும் தாங்கிக்கொள்ளுவதற்கு அரியதொரு மனப்பக்குவம் வேண்டும்.

அந்த மனப்பக்குவம் பெரும்பாலானோரிடையில் இருப்பதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இவை இரண்டில் - அதுவும் புகழ் வெளிச்சம் என்பது இவர்கள்மீது சுத்தமாக இல்லை. ஆனால் இவர்களின் தகுதிக்கு மீறிய பணம் மட்டும் இவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. அல்லது சம்பளமாகவே கிடைத்துவிடுகிறது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே அந்த இளைஞர்கள் போடும் ஆட்டமும் நாம் பார்த்துவருவதுதான்.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலவுவதும் அவர்களுடைய வார்த்தைகளில் கிஞ்சிற்றும் மரியாதை இல்லாமல் ஒருவித தடித்தனம் இருப்பதும் இந்தப் பணம் படுத்தும் பாடுதான்.

இந்த லட்சணத்தில் இவர்கள் மீது புகழ்வெளிச்சமும் பட்டால் எப்படியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

நமக்குத் தெரிந்து அப்படியொரு மனப்பக்குவத்துடன் இருந்த இரண்டு பேராக எம்ஜிஆரையும் சிவாஜியையும் மட்டும்தான் சொல்லமுடியும்.

தற்கால இளைஞர்கள் மத்தியில் ஏ.ஆர்.ரகுமானையும் கிரிக்கெட் தெண்டுல்கரையும் சொல்லலாம்.

                                                  

இந்தச் சூழலில்தான் சூப்பர் சிங்கர் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகும் பரிசுப்பொருள்களையும் அங்கீகாரத்தையும் புகழ்வெளிச்சத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

தொடர்ந்துவரும் நிகழ்ச்சிகளில் இந்தப் பரிசுப் பொருள்கள் மேலும் அதிக அளவுக்கு உயரப்போகிறது என்கிற யதார்த்தமும் இப்போதே சுடுகிறது.

இது ஒருபுறமிருக்க நிகழ்ச்சிக்குச் செல்லுவோம்.

முதலில் இந்தச் சின்னஞ்சிறுசுகளை இந்த அளவுக்குத் தயார்ப்படுத்தி கேட்பவர்கள் பிரமிக்கிற அளவுக்குப் பாடச் செய்வதற்குப் பின்னணியில் இருக்கும் அனந்த் நிச்சயம் மிகப்பெரிய பாராட்டிற்கு உரியவர். ஏனெனில் இதற்கான பயிற்சி என்பது பல்வேறு டெக்னிக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் போட்டியின் இடையில் பேசும்போது தெரிவித்தார். இது ஒரு செயற்கரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தச் செயலை முதன்முதலாகச் செய்பவர் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் விஜய்டிவியின் அனந்த் அல்ல.

அதற்கும் முன்பே இதனைச் செய்தவர் அபஸ்வரம் ராம்ஜி.

அவர்தான் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மிகக் கஷ்டமான பாடல்களைக் கொடுத்து அவர்களைத் தயார்ப்படுத்தி அச்சு அசலாகப் பாடவைத்துக் கேட்பவர்களை பிரமிக்கவைத்தவர்.

நீண்ட நாட்களுக்கு இத்தகைய சாகசங்களை அவர் பல மேடைகளிலும் செய்துகொண்டிருந்தார். 

பொதிகை டிவியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

ஒரு பிரமுகர் வீட்டுத் திருமணத்திற்கு நானும் சுஜாதாவும் சென்றிருந்தோம். அபஸ்வரம் ராம்ஜி குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்யும் கச்சேரி அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது.  நாங்கள் ஒருபுறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அபஸ்வம் ராம்ஜி அங்கு வந்தார். “சார் தயவு செய்து இரண்டுபேரும் அங்குவந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு அவர்களை வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.

                      


“இருக்கட்டும் ராம்ஜி. நான் இங்கேயே இருக்கேன்” என்றார் சுஜாதா.

“இல்லை சார் ஒரு இரண்டு பாடல்களுக்கு நீங்கள் அங்கே வந்து உட்கார்ந்தால் அது என்னையும் குழந்தைகளையும் கவுரவப்படுத்தியதுபோல் இருக்கும். ஒரு இரண்டு பாடல்களைக் கேட்டுவிட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்துவிட்டுப் போங்கள்” என்றார்.

அவர் அழைத்தபடியே அந்த மேடையின் முன்பு சென்று அமர்ந்தோம். ஒரு சிறுவன் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே’ என்று ஆரம்பித்து செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடினான்.

இன்னொரு சிறுமி எம்எஸ்ஸின் ஒரு பாடலைப் பாடினாள்.

அத்தனை சுத்தம். அச்சு அசலாக அப்படியொரு க்ஸெராக்ஸ் பதிப்பு.

வியந்துபோன சுஜாதா (பொதுவாகக் குழந்தைகளை பெரியவர்கள் போல் இமிடேட் செய்ய வைக்கக்கூடாது  என்ற மனப்பான்மை கொண்டவர் அவர்) குழந்தைகளையும் ராம்ஜியையும் மனம்விட்டுப் பாராட்டினார்.

ராம்ஜியைத் தொடர்ந்து தற்சமயம் அனந்த் அதே பணியை விஜய் டிவியில் மிகச்சிறப்பாகவே செய்துவருகிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. 

பல வீடுகளில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே தயாராகிவிடுகிறார்கள் என்றும் 
கூறப்படுகிறது. பெண்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும் உணரமுடிகிறது. இத்தனைப் பெரிய நிகழ்ச்சியைத் தொகுத்துத் தரும் தொகுப்பாளர்களின் மாபெரும் அறுவையையும், ஜட்ஜ்களாக வரும் சில பின்னணிப் பாடகர்கள் மற்றும் பாடகியரின் ஈகோ கலந்த ஆய்வுகளையும் (இதில் எல்லாரையும் சொல்லவில்லை) சகித்துக்கொள்ளப் பழகிவிட்டால் நிச்சயம் செல்லக்குரல்களின் சில தென்றல் போன்ற வருடல்களுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி பல அரிய தகவல்களை சத்தமில்லாமல் உணர்த்திவிடுகிறது என்பதுதான் இதிலுள்ள விசேஷம்.

தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து பாடல்களுக்கு அடிமையாகிக் கிடப்பதுதான் நம்முடைய தமிழினம். பாடல்களை நாம் திரைப்படங்களின் மூலம்தான் அனுபவிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் ஒரு காலத்தில் நாடோடிப் பாடல்களாக இருந்திருக்கக்கூடும். தெம்மாங்குப் பாடல், நாட்டுப்புறப் பாடல், உழவுப்பாடல் என்று பல்வேறு வகையான பாடல்கள் இருந்தபோதிலும் அவை யாவும் ஒரு சில பாணியிலேயே உழன்று வந்தவைதாம்.

பாடும் பாணியும் மெட்டுக்களும் வேறுபட்டாலும் அவை எல்லாமே அடிப்படையில் ஒரு சில வரையறைக்குள்ளேயே அடங்கிவிடக்கூடியவைதாம்.

அதன்பிறகு கர்நாடக இசையின் காலம் ஆரம்பித்தது.

கர்நாடக இசைப்பாணியிலான பாடல்கள் அணிவகுத்தன.

திரையிசையையும் மேடைகளையும் அத்தகைய பாடல்களே ஆக்கிரமித்தன.

கர்நாடகப் பாணியிலான பாடல்கள் வந்தபிறகுதான் இசை அனுபவத்தில் மிகப்பெரியதொரு இடைவெளி ஆரம்பித்தது.

கர்நாடக இசை கற்றவர்களுக்கும் அந்த இசையின் பரிச்சயம் இல்லாதவர்களுக்குமான மிகப்பெரியதொரு கோடு நடுவில் போடப்பட்டது.

கர்நாடக இசை அறிந்தோர், அறியாதோர் என்றொரு பிரிவு மிக வேகமாக வளர ஆரம்பித்தது. 

கர்நாடக இசை கற்றவர்கள் மேலோர் என்றும் அதை அறியாதவர்கள் கொஞ்சம் கீழே இருப்பவர்கள் என்பதுமான வரையறை லேசாகத் தலைதூக்க ஆரம்பித்தது.

இது வேறு எந்த கலைவடிவமாக இருந்திருந்தாலும் இந்தப் பிளவு மேலும் மேலும் ஆழமாகப் போயிருக்கக்கூடும். இடையில் சாதி புகுத்தப்பட்டு  பல்வேறு பாதகங்களை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த இடைவெளியை இட்டு நிரப்பி திரையிசைக்கு வேண்டியது மெல்லிசைதான் என்ற நிலையை ஏற்படுத்தித் தந்தவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்தான்.

அன்றைய திரையுலகில் ஜி.ராமனாதனுக்கு அடுத்து  பிரபல இசையமைப்பாளர்களாக அறியப்பட்டு மிகப்பெரிய சாதனைகளையும் புரட்சிகளையும் இசையுலகில் கொண்டுவந்தவர்கள் இவர்கள் இருவரும்தான்.

இவர்களின் சாம்ராஜ்ஜியத்தில் நடைபெறாத சோதனை முயற்சிகளோ, பரீட்சார்த்தங்களோ, புதுமைகளோ, புரட்சிகளோ எதுவுமே கிடையாது.

அதனால்தான் இவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்று அறியப்பட்டார்கள்.

அதன்பிறகு நிறைய மன்னர்களும் ராஜாக்களும் வந்துவிட்டதனால் இவர்களை தற்போது 

மெல்லிசை மாமன்னர்கள் என்று குறிப்பிடுகின்றனர் விமரிசகர்கள்.

இவர்களுடைய அடியைப் பின்பற்றித்தான் இன்றைய இசையமைப்பாளர்கள்- இளையராஜாவிலிருந்து இன்றைய சங்கர்நாராயணன்வரை நடைபோடவேண்டிய கட்டாயத்தை இயல்பாகவே உருவாக்கிவிட்டிருப்பவர்களாக இவர்கள் இருவரையும்தான் சொல்லவேண்டும்.

52ல் துவங்கி 57ல் வேகமெடுத்த இவர்களின் இசைப்பயணம் 65ல் பிளவுபட்டபோதும் விஸ்வநாதன் பிரிந்துசென்று தனியொருவராக நின்று அவருடைய சாதனைகளில் சேதாரம் எதுவும் வராமல் பார்த்துக்கொண்டது அரியதொரு சாதனை.

இன்னமும் நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் ஆனபோதும் சிவாஜி என்றாலோ, எம்ஜிஆர் என்றாலோ கண்ணதாசன் என்றாலோ டிஎம்எஸ் என்றாலோ பி.சுசிலா என்றாலோ நினைவுக்குவரும் பாடல்கள் இவர்கள் இசையமைத்தவையாக மட்டுமே இருக்கும். இவர்களுக்கு இணையாக கூடவே பவனிவந்த இன்னொரு இசையமைப்பாளராக கே.வி.மகாதேவனையும் சொல்லவேண்டும்.

இந்த வரிசைக்குப் பின்னால்தான் எந்த வரிசையாயிருந்தாலும் வரவேண்டும்.
அத்தனை சாதனை. அத்தனை வெற்றி.

சினிமாவைப் பொறுத்தவரை சாதி மதம் மொழிக்கெல்லாம் இடமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதிய அடையாளங்கள் இருந்துகொண்டிருந்தாலும் அவை பொதுவான தளத்தில் வைக்கப்பட்டு இயங்குவதில்லை.

திரையுலகைப் பொறுத்தவரை இங்கு அடையாளப் படுத்தப்படுவது வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான்.

அதனால்தான் சினிமாவில் ‘மட்டும்’ சாதிய மற்றும் மொழி அடையாளங்களை அவ்வளவாகப் பார்க்கமுடியாது.

இங்கு எம்ஜிஆர் மலையாளியா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ரஜனிகாந்த் மராட்டியரா கன்னடரா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ஏசுதாஸ் மலையாளியா, எஸ்பிபி தெலுங்கரா, எம்எஸ்வி மலையாளியா என்பதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.

அதுபோலவே நடிகைகள் விஷயத்தில் சாதி, மதம், மொழி என்பதெல்லாம் என்றைக்கும் யாரும் பார்த்ததே இல்லை. அன்றிலிருந்து இன்றையவரைக்கும் நான்கைந்துபேரைத் தவிர தமிழச்சிகள் கதாநாயகிகளாக பவனிவந்ததே இல்லையென்பதும், அதனை ஒரு பொருட்டாகக்கூட யாரும் நினைத்ததில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் தெலுங்கர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் மட்டுமே கதாநாயகிகளாக நிறைந்திருந்த தமிழ்த்திரையில் தற்சமயம் வடநாட்டுப் பெண்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு திரையுலகை ஆக்கிரமித்துள்ளனர்.

சினிமாவில் கதாநாயகர்களும்(ஓரிருவரைத் தவிர) கதாசிரியர்களும் கவிஞர்களும் மட்டுமே ‘பெரும்பாலும்’ தமிழர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இந்தப் பாட்டையில்தான் தமிழ்த்திரையுலகம் அன்றிலிருந்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் இதனடிப்படையில்தான் அணுகவேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேடையில் அமர்ந்திருக்கும் ஜட்ஜூகளும் சரி, பாடவந்திருக்கும் சிறுவர் சிறுமியரும் சரி பெரும்பாலும் பிற மொழியினரே.

அவர்கள் பாடுவது மட்டும்தான் தமிழ்.

சினிமாவில் என்ன நடக்கிறதோ அதுதான் இங்கேயும் நடக்கிறது.

சினிமாவில் வெற்றிக்குத்தான் முக்கியத்துவம், வெற்றிக்கு மட்டும்தான் முதல் மரியாதை. முதல் மரியாதை என்ன மரியாதையே வெற்றிக்கு மட்டும்தான்.

தொடர்ச்சியான வெற்றி மட்டும் தரவில்லையென்றால் அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு அதன் பாதையில் போய்க்கொண்டே இருக்கும் திரையுலகம்.

சாதனை என்பதும், திறமை என்பதும், உழைப்பு என்பதும் இங்கே வெற்றியை மட்டுமே வைத்துக் கணக்கிடப்படும். வெற்றி மட்டும் தரவில்லையென்றால் (அதுவும் தொடர்ச்சியான வெற்றி) நீ எத்தனைப் பெரிய கொம்பனாக இருந்தாலும் திரையுலகம் கவலைப் படுவதில்லை. ‘தூக்கிக் கடாசிவிட்டுப்’ போய்க்கொண்டே இருக்கும்.

மிகப்பெரிய சாதனையாளர்கள் புறந்தள்ளப்படுவதும், சாதாரணர்கள் இமயத்துக்கும் அப்பால் கொண்டாடப்படுவதும் இங்கே சர்வசாதாரணம் என்பது இயற்கைக்குப் புலப்படாத ஒரு விதி.

அதே சமயம் திறமைக்கு மதிப்பே இல்லை என்றும் சொல்லமுடியாது.

திறமைக்குத்தான் மதிப்பு. கூடவே அதிர்ஷ்டமும் இருக்கவேண்டும்.(பகுத்தறிவு வாதங்கள் நாயடி பேயடி வாங்கும் இடங்களில் திரைத்துறையும் ஒன்று. பகுத்தறிவு வாதங்களை வைத்து இங்கே எந்த முடிவுக்கும் வரவே முடியாது)

பகுத்தறிவு இங்கே எதையுமே நிர்ணயிப்பதில்லை. மாறாக ‘அதிர்ஷ்டம்தான்’ இங்கே எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முடிவுகள் இன்னமும் சில நாட்களில் வந்துவிடும். முடிவு எப்படியிருக்கப்போகிறதோ என்பது ஒருபுறமிருக்க இங்கே போட்டிக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்கள் மீது ஒரு பார்வையை வீசுவோம்.

பாடியவர்கள் அத்தனைப்பேரும் சிறுவர் சிறுமியர்.

பெரும்பாலான பாடல்கள் சிக்கலானவை. பெரியவர்களே பாடத் திணறும் நுட்பம் கொண்டவை. 

மிகத் தீவிரமான பயிற்சி இல்லையென்றால் சாதாரண ரசிகர்கள் என்றில்லை ஓரளவு பாடத்தெரிந்து ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடும் நிலையில் இருப்பவர்கள்கூட சட்டென்று எடுத்துப் பாடமுடியாதவை.

அத்தகைய பெரும்பாலான பாடல்களை இந்தச் சிறார்கள் பாடியதை, அதுவும் சர்வசாதாரணமாகப் பாடியதை வியப்புக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும்.

நிச்சயம் அவர்களின் வயதுக்கும் ஞானத்துக்கும் அப்பாற்பட்ட பாடல்கள்தாம் பெரும்பாலானவை. 

அவர்கள் அதனை மிகச்சிறப்பாகப் பாடியதுதான் நிகழ்ச்சியின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம்.
இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் தொண்ணூறு சதம் நல்ல பாடல்களே.

தமிழின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களால் மிகத் தேர்ச்சியுடன் பின்னப்பட்டு மிகச்சிறப்பான நுணுக்கங்களுடன் இசையமைக்கப்பட்ட பாடல்கள் அவை. மெட்டிலும், பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், ஆர்க்கெஸ்ட்ரேஷனிலும், இவையெல்லாவற்றையும்விட பாடுகிறவர்களின் குரல் வளத்தாலும், உத்தியாலும் பிரமாதமாக அமைந்த பாடல்கள்.

சாதாரணப் பாடல்கள் என்று ஒரு வகை இருக்க – பாடல் போட்டிகளில் பாடுவதற்கென்றே சிறப்பான பாடல்கள் என்று சில இருக்குமல்லவா? அந்தவகையில் அமைந்த பாடல்கள் இவை.

அதனைத் தேர்ந்தெடுத்துப் பாடிய சிறார்களும் சரி; பாடவைத்த நிகழ்ச்சி அமைப்பாளர்களும் சரி பாராட்டுக்குரியவர்கள்.

அதே சமயம் அம்மாதிரி பாடல்களை உருவாக்கி நமக்களித்த அந்தப் பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரும் நம்முடைய வணக்கத்துக்குரியவர்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு உண்மையைப் பதிவு செய்யவேண்டும்.

போட்டிக்கென அமைந்த பெரும்பாலான பாடல்களின் இசைக்குச் சொந்தக்காரர்கள் எழுபதுக்கு முன் வந்த இசையமைப்பாளர்களாகவே இருக்கிறார்கள்.

ஜி.ராமனாதன் தொடங்கி, டி.ஜி.லிங்கப்பா, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, எம்எஸ்வி, கே.வி.மகாதேவன் என்றுதான் பெரும்பாலான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. அதுவும் கே.வி.மகாதேவன் பாடல்கள்தாம் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

இளையராஜா தொடங்கி ரகுமான் மற்றும் ஜிப்ரான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், இமான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் பாடல்கள் மிகக்குறைந்த அளவிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதிலும் இளையராஜா வருகைக்குப் பின்னர்தான் தமிழ்ப் படங்களில் இசை என்பதே ஆரம்பமாயிற்று, அவர் ஒருவர்தான் பாட்டுக்கு மெட்டமைத்தவர் அவர் இல்லாவிட்டால் தமிழனுக்கு இசை என்ற ஒன்றோ பாடல் என்ற ஒன்றோ கிடைத்தே இருக்காது, இசை என்றாலேயே அது இளையராஜாதான் என்ற மயக்கத்திலேயே இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரமாண்ட போட்டி நிச்சயம் ஒரு பெரிய ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.

ஏனெனில், அவ்வப்போது பல்வேறு சிரமமான கட்டங்களைத் தாண்டி வருவதற்குத் தேர்ந்தெடுத்துப் பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களாகவே இருந்தன.

கடைசி ரவுண்டுகளில் இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றைப் பாடினாலும், அதற்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமாக ஏ.ஆர்.ரகுமானின் மிகக் கடினமான பாடல்களை இந்தச் சின்னஞ்சிறுசுகள் அனாயாசமாகப் பாடியது ரசிப்பதற்குரியதாகவே இருந்தது.

ஸ்பூர்த்தி  என்ற ஒரு சுட்டிப்பெண், பெங்களூரைச் சேர்ந்தவள் பல பிரபலமான கஷ்டமான பாடல்களைப் பாடியது அசத்தல் ரகம். இத்தனைக்கும் அவளுடைய தாய்மொழி கன்னடம். 

அதிலும் அனுஷ்யா என்ற சின்னப் பெண் ‘புத்தம்புது பாட்டுவந்தா தாண்டவக்கோனே’ என்ற வித்யா சாகரின் அற்புதமான ஒரு பாடலைப் பாடியமுறை கேட்பவர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தது. ஜட்ஜ்கள் அத்தனைப்பேரும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று கைதட்டியதோடு அருகில்வந்து அந்தச் சிறுமியைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்தது நெகிழ்ச்சியூட்டிய ஒரு அனுபவம்.

                     


ஒவ்வொருவர் பாடி முடித்ததும் நீதிபதிகளாக வந்திருந்த கர்நாடக இசைப் பாடகர்களும், திரையிசைப் பின்னணிப் பாடகர்களும், சில இசையமைப்பாளர்களும் செய்த விமர்சனங்கள் அவர்களுடைய ஈகோவை விட்டுக்கொடுக்காமல் செய்யப்பட்டதுபோல் செயற்கையாகத் தோன்றினாலும், சில விமர்சனங்கள் உபயோகமுள்ளவையாகவே இருந்தன. அதிலும் எல்.மகராஜனுடைய விமர்சனங்கள் கனகச்சிதம்.

சில பாடல்களைத் தவிர பெரும்பாலான பாடல்களைக் கேட்கும்போது அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்கும்போது ஒரு பெரிய குறை தென்பட்டது.

அதாவது ஏதோ ரயிலைப் பிடிக்கவோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ ஓடுவதுபோன்ற அவசரத்துடன் பாடல்கள் பாடப்பட்டன.

பின்னணி இசையும் அதற்கேற்பவே வாசிக்கப்பட்டது.

இதுபற்றி ஜட்ஜ்களாக வந்திருப்பவர்கள் யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று காத்திருந்ததில் வியர்த்தமே மிஞ்சியது.

இந்தக் குறையை அவர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அதாவது ஒரு பாடல் எப்படிப் பாடப்பட்டிருக்கிறதோ அந்தத் தாள லயத்திலும் நேர லயத்திலும் இல்லாமல் படுவேகமாக ஓடி முடிந்திருந்தன ஒவ்வொரு பாடலும்.

ஒரு பாடல் எவ்வளவு நேரத்தில் முடியவேண்டுமோ அதற்கேற்ப இல்லாமல் அரை நிமிடம் முன்னதாகவே முடிந்திருந்தன என்பதுதான் விஷயம்.

இதனை யாரும் உணரவில்லை என்பது ஒரு சோகம்.

வேறொன்றுமில்லை. எம்பி-3 சிடிக்களில் திணித்து நிரப்பப்படும் பாடல்களைக் கேட்டுவிட்டு அதற்கேற்ப பாடுவதாலும் அதற்கேற்ப இசைப்பதாலும் வருகின்ற வினை இது.

இதைப்பற்றி பிரபல இசை விமரிசகர் ஷாஜிகூட ஏதோ ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்ததாக ஞாபகம்.

நூறு இருநூறு பாடல்களை, அல்லது நானூறு ஐநூறு பாடல்களை ஒரே சிடியில் திணிப்பதனால் வரும் மோசமான விளைவு இது.

நெருக்கியடித்துக்கொண்டு அத்தனைப் பாடல்களை ஒரே சிடியில் சேர்த்துத் திணிக்கும்போது இப்படிக் கைகால்கள் ஒடுங்கிப்போய் மூச்சுத்திணறிப் போய் அந்தப் பாடல்கள் தங்களின் சுயம் இழந்து ஏதோ ஒரு வேகத்துக்கும் எண்ணிக்கைக்கும் மட்டுமே ஈடு கொடுக்கமுடியும். நிச்சயமாக இனிமைக்கு அல்ல.

 பழைய பாடல்களின் ரசிகர்கள் இந்த ‘எம்பி- 3’ சிடிக்களை வாங்கி மோசம் போகாதீர்கள். உங்களின் இசை ரசனையையே கெடுத்துவிடக்கூடியவை அவை.


பழைய பாடல்கள் தேவையெனில் யூ டியூபில்வரும் பாடல்களுடன் கூடிய திரைக்காட்சிகளிலிருந்து ஒலியை மட்டும் பதிந்துவைத்துக்கொண்டு கேளுங்கள்.(விபரம் 
தெரிந்தவர்கள் மேற்கொண்டு வேறு எப்படி நல்லமுறையில் சேமிக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நலம்)


அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்குள் இந்தப் பிரச்சினைக்கு விஜய் டிவிக்காரர்கள் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்.

60 comments :

sekar said...

//அதாவது ஏதோ ரயிலைப் பிடிக்கவோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ ஓடுவதுபோன்ற அவசரத்துடன் பாடல்கள் பாடப்பட்டன.
எம்பி-3 சிடிக்களில் திணித்து நிரப்பப்படும் பாடல்களைக் கேட்டுவிட்டு அதற்கேற்ப பாடுவதாலும் அதற்கேற்ப இசைப்பதாலும் வருகின்ற வினை இது//

பாடல்களின் தரத்தை இளையராஜா காலத்திலேயே பாழ் செய்துவிட்டார். அவரின் பல பாடல்கள் இயல்புக்கு மாறாகப் பாடகரின் குரல்கள் மற்றும் இசைக்கருவிகள் வேகமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நன்றாகக் கவனித்தால் தெரியும் அவருடைய தந்திரம்.
கீதாஞ்சலி படத்தில் வரும் 'மலரே பேசு ' போன்ற பாடல் இதற்குச் சாட்சி.இது போல் பல பாடல்கள் உள்ளது.

suvanappiriyan said...

சிறந்த அலசல்.

Amudhavan said...

வாருங்கள் சேகர். அந்தக் காலத்திலேயே ஃபாஸ்ட் பீட்டில் பாடல்கள் போடுவார்கள். வேகமாக இருப்பதற்கென்றே போடப்படும் மெட்டு ப்ளஸ் தாளம் சேர்ந்தவையாக அவை இருக்கும். காதலிக்க நேரமில்லை படத்தில் ராஜஸ்ரீ நாகேஷ் ஆடுவதற்கென்றே அப்படி ஒரு பாடல் வேண்டுமென்று ஸ்ரீதர் கேட்க, 'மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்' என்றொரு பாடலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி அமைத்திருப்பார்கள். நீங்கள் சொல்லிய பாடலும் வேறு சில இ.ராவின் பாடல்களும் அந்தக் கண்ணோட்டத்தில் போடப்பட்டவையா என்பது தெரியவில்லை. இருந்தாலும் இது ஒரு புதிய தகவலாகத்தான் இருக்கிறது.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சுவனப்பிரியன்

வருண் said...

சுஜாதாவுடன் இருக்க உங்க புகைப்படம் ரொம்ப இயல்பாக நல்லாயிருக்கு சார். :)

சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிறுவர் சிறுமியரை இப்படி பாட வைப்பதெல்லாம் அவரவர் பெற்றோர்கள் தனிப்பட்ட விசயம், இஷ்டம் என்றாலும் என்னால் இதையெல்லாம் ரசிக்க முடியவில்லை!

இந்த வயதிலேயே ஒரு சிலர், எதிர்பார்த்த அளவு பாடாமல் இருக்கும்போது, அவர்களை நீதிபதிகள் கழட்டிவிடும்போது அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். இப்படி ஒரு "எம்பாரஸ்மெண்ட்" எல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இந்த வயதில் அவர்களிடம் இருக்குமா?

காரிகன் said...

திரு.அமுதவன்,

காலையில் கண்ணில் கண்டது முதலில் இந்தப் பதிவுதான். ஒரே மூச்சில் படித்துவிட்டேன். பல சங்கதிகளை உள்ளடக்கிய கலைடாஸ்கோப் பதிவு போல இருக்கிறது. வாழ்த்துக்கள். அதனால்தான் எங்கேயிருந்து துவக்குவது என்றுதான் தெரியவில்லை.

முதலில் ஒரு confession. நான் சூப்பர் சிங்கர் நிகழ்சிகளை மெனக்கெட்டு பார்ப்பவன் இல்லை. சானல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது திடுமென ஒரு காவியப் பாடல் பாடப்பட்டால் அங்கே நின்றுகொள்வேன் கொஞ்ச நேரம். பள்ளி நாட்களின் பாதிப்பு. எனவே இந்த நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. இருந்தும் நீங்கள் குறிப்பிடுவதுபோல இந்த நிகழ்சிகளில் பாடப்படும் பாடல்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான். கிளாசிக் என்றால் அது 70களுக்கு முன்னர்தான் என்பதே அது.

இன்றைக்கு தமிழகத்தில் அதிகமாக கேட்கப்பட்ட,ரசிக்கப்பட்ட, அறியப்பட்ட பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் எம் ஜி ஆர் பாடல்களுக்குத்தான். இதைத்தான் மன்னாதி மன்னன் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் தெளிவாக பதிவு செய்தார். இணையத்தில் அதிகம் பேசப்படுவதாக இளையராஜாவைப் பற்றி அவரது ரசிகர்கள் கொள்ளும் பெருமை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இந்த மகா உண்மையின் முன் உடைபட்டுப் போகிறது.யதார்த்த உலகின் இசை ரசனையும் மக்களின் விருப்பமும் இளையராஜாவை (இணையத்தில் இவர்கள் அடித்துக்கொள்வது போல) எம் எஸ் வி போன்ற இசை ஜாம்பவான்களுக்கு மேலே தூக்கி வைக்கவில்லை.

மிக முக்கியமாக எம் ஜி ஆருக்கு இளையராஜா இசை அமைக்கவேயில்லை. எனவே எம் ஜி ஆர் பாடல்களே இங்கு அதிகம் கேட்கப்படுகின்றன என்றால் அதன் செய்தி இளையராஜாவுக்கு அங்கு இடமில்லை என்பதாகத்தான் இருக்கும்.

அதே நிகழ்ச்சியில் (சங்கர்) கணேஷ் எம் ஜி ஆர் பற்றிக் குறிப்பிடும் போது அவர் எப்படி இதய வீணை படத்தின் பொன்னந்தி மாலைப் பொழுது பாடலை தேர்வு செய்தார் என்று மிகவும் சுவாரஸ்யமாக தெரிவித்தார்.
எம் ஜி ஆர் இசை அறிவும் ஞானமும் உள்ளவர் என்பது விஷயம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அவர் தனது படப்பாடல்களில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறவர் என்பது ஊரறிந்த தகவல். உன்னை விட மாட்டேன் என்றொரு படம் எம் ஜி ஆர்-இளையரஜா இணைப்பில் வருவதாக அப்போது செய்தி அடிபட்டது. அவருக்கு இளையராஜா இசை அமைத்திருக்கும் பட்சத்தில் இ.ராஜா அவரிடம் என்ன பாடுபட்டிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மேலும் எம் ஜி ஆர் போன்ற வலிமை மிக்க ஆளுமைக்கான இசை அமைக்கும் பாணி (திறமை!) இளையராஜாவிடம் கிடையாது . அவருக்கு அந்த இசை பாணி கொஞ்சமும் வராது. பாதி படத்துடனே எம் ஜி ஆர் அவரை திருப்பி கூட அனுப்பியிருப்பார் என்று யூகிக்கலாம் . படம் கைவிடப்பட்டது. இளையராஜா பிழைத்தார்.

இதேபோல சிவாஜிக்கு இ.ராஜா அமைத்த பாடல்கள் கூட ----தியாகம் படத்தின் நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு போன்ற வெகு குறைவான பாடல்களைத் தவிர------ சற்றும் பொருத்தமில்லாத வகையைச் சார்ந்தவைகள்தான்.

இறுதியாக இன்றைய டெக்னாலஜி எந்த அளவுக்கு இசையை சுருக்கி இருக்கிறது என்ற உங்களின் எண்ணம் எனக்கும் உண்டு. நான் எம் பி 3 வகை இசையை அறவே வெறுப்பவன். ஆடியோ சிடிக்களே எனது விருப்பம். அதில்தான் ஒரு இசையின் எல்லா இழைகளையும் நாம் கேட்கமுடியும். இருந்தும் ஒரு ஒப்பீட்டளவில் இன்றைய cd கூட பழைய எல் பி ரெகார்ட் எனப்படும் vinyl record துல்லியத்தின் முன் நிற்க முடியாது என்பதே உண்மை.

sekar said...

மன்னிக்கவும்,
நான் சொல்ல வந்தது பாடகர் பாடி பதிவு செய்யும் போது பதிவு செய்யும் கருவியில் வேகமாகப் பதிவாகும் படி செய்கிறார்கள். இதனால் இசைக் கச்சேரியில் அதே வேகத்தில் இசைக்க முடிவதில்லை.

ஜப்பானில் கல்யாணராமன் என்ற படத்தில் 'ராதே என் ராதே' பாடலில் சிறுவன் பாடும் குரல் பதிவு செய்யும் கருவியில் அவர் செய்த மாற்றமே.

Amudhavan said...

வருண் said...
\\சுஜாதாவுடன் இருக்க உங்க புகைப்படம் ரொம்ப இயல்பாக நல்லாயிருக்கு சார். \\

வாங்க வருண், அந்தச் சந்திப்பே ஒரு மறக்கமுடியாத சந்திப்பாக அமைந்துவிட்டதுதான் சோகம். ஏனெனில் சுஜாதாவுடனான கடைசி சந்திப்பாக அது அமைந்துவிட்டது. இதுபற்றி 'என்றென்றும் சுஜாதா' நூலில் விரிவாக எழுதியிருப்பேன்.

\\இந்த வயதிலேயே ஒரு சிலர், எதிர்பார்த்த அளவு பாடாமல் இருக்கும்போது, அவர்களை நீதிபதிகள் கழட்டிவிடும்போது அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். இப்படி ஒரு "எம்பாரஸ்மெண்ட்" எல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இந்த வயதில் அவர்களிடம் இருக்குமா?\\

இம்மாதிரியான பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகள் இதில் உள்ளன. நீங்கள் சொல்லும் பிரச்சினையும் மிக முக்கியமான ஒன்றே. ஆனால் புகழ் வெளிச்சமும் இன்னபிற பரிசுமழைகளும் இதுபற்றியெல்லாம் இப்போதைக்கு அவர்களை யோசிக்கவிடாது என்பதுதான் நிஜம்.


sekar said...

//எல் பி ரெகார்ட் எனப்படும் vinyl record துல்லியத்தின் முன் நிற்க முடியாது//

முற்றிலும் உண்மையே. இசைத்தட்டு விற்பனை மற்றும் பாடல் பதிவு தொழில் செய்த அனுபவத்தில் சொல்கிறேன்.
MP3 ல் நாம் கேட்கும் பாடல் 'தோராயமாக' பத்து மடங்கு தரம் குறைக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது பிறகு எப்படித் தரம் இருக்கும்.

Jayadev Das said...

தங்கள் பதிவுகளை "அமுதவன் எக்ஸ்பிரஸ்" என்று பெயர் வைத்து அழைக்கலாம்!! அவ்வளவு விறுவிறுப்பு!!

அமிதாப் பச்சனின் "கௌன் பனேகா குரோர்பதி உட்பட", எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியும் மக்களை கொஞ்ச நாள் தான் கட்டிப் போடுகிறது, பின்னர் போர் அடிக்க ஆரம்பித்து அதன் டி ஆர் பி ரேட்டிங் குறையத் துவங்கும். அப்போது இடைவெளி விட வேண்டியது அவசியமாகிறது. பல நிகழ்ச்சிகள் கைவிடப் படுதலும் நடக்கின்றது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசுத் தொகை அபரீதமாகத் தோன்றினாலும், அந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை ஒப்பிடும் போது அது பிசாத்து தொகை தான். இதை குழந்தைகள் வென்றாலும், அவர்களின் பெற்றோர்கள் தான் கையாள்வார்கள், எனவே சிறுவர்களுக்கு கணினி வல்லுனர்கள் போல அகம்பாவம் ஏற்படும் நிலைக்கு கொண்டு போக வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இறுதிப் போட்டியின் போது நடத்தப் படும் SMS வாக்கெடுப்பு மஹா அயோக்யத் தனம். அதை நேரடி ஒளிபரப்பாக காண்பிப்பதாகச் சொன்னாலும், காட்டப் படுவதென்னவோ பதிவு செய்யப் பட்ட காட்சிகளைத் தான். போட்டி முடிந்து சில மணி நேரங்கள் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டே இருக்கும். பரிசுகள் அறிவிக்கப் பட்ட பின்னரும், தொகுப்பாளர்கள் SMS வழியாக ஓட்டு போடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள், லட்சக் கணக்கில் ஆடுகள் ஓட்டுப் போடும், ஒவ்வொரு ஓட்டுக்கும் 6 ரூபாய் விஜய் TV க்குப் போய்க் கொண்டே இருக்கும்!! தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காசு வாங்கும் நாட்டில், TV யில் பாடும் பாடகரைத் தேர்ந்தெடுக்க எதற்கு காசு குடுத்து ஓட்டு போட வேண்டும் என்று யாரும் கேட்பதேயில்லை!!

\\ஜட்ஜ்கள் அத்தனைப்பேரும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று கைதட்டியதோடு அருகில்வந்து அந்தச் சிறுமியைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்தது நெகிழ்ச்சியூட்டிய ஒரு அனுபவம்.\\ இதெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த ஆடப் படும் நாடகங்கள். சில சமயம் அழுவார்கள், அல்லது சில சமயம் சிம்பு மாதிரி ஜட்ஜே எழுந்தே போய் விடுவார். அந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தேறும்போது போடப் படும் பின்னணி இசை, தொகுப்பாளர்கள் பில்டப் குடுப்பது, பெற்றோர்கள், நடுவர்கள், போட்டியாளர்கள் என கேமரா பலரது முகத்தையும் மாறி மாறி காண்பிப்பது, போட்டியில் இருந்து நீக்கப் பட்டு ஸ்லோ மோஷனில் போட்டியாளர் அரங்கை விட்டு வெளியேறும் போது போடப் படும் சோகமான பின்னணி முயூசிக்....... இதெல்லாமே பில்டப்புக்காக சேர்க்கப் படும் மாசாலாக்களே!!

\\நூறு இருநூறு பாடல்களை, அல்லது நானூறு ஐநூறு பாடல்களை ஒரே சிடியில் திணிப்பதனால் வரும் மோசமான விளைவு இது.\\ கரெண்டை எடுத்த தண்ணீரில் பயிரே விளையாதுன்னு கிளப்பின புரளி மாதிரியில்ல இருக்கு!! மூலப் பாடலிலேயே கோளாறு இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினை வரும்!! நான் தினமும் பென் டிரைவில் எவ்வளவோ திரைப் படங்களைத் திணிக்கிறேன், நன்றாத்தானே ஓடுகின்றன!! தரமான இணையத் தளங்களில் இருந்து எடுத்து எத்தனை பாடல்களைத் திணித்தாலும் அவை நன்றாகவே இருக்கும். மென்பொருளை திணிக்கவெல்லாம் இயலாது!! எதற்கும் இதுகுறித்து வல்லுனர்களை கேட்கிறேன்!!

\\பழைய பாடல்கள் தேவையெனில் யூ டியூபில்வரும் பாடல்களுடன் கூடிய திரைக்காட்சிகளிலிருந்து ஒலியை மட்டும் பதிந்துவைத்துக்கொண்டு கேளுங்கள்.\\ ஒலியின் தரம் அவ்வளவு நன்றாக இருக்காது. MP 3 பாடல்களுக்கென்றே நிறைய தளங்கள் உள்ளன, அவற்றில் இருந்து தரவிறக்கம் செய்தால் கேட்க நன்றாக இருக்கும்.

Amudhavan said...

காரிகன் said...

\\நான் சூப்பர் சிங்கர் நிகழ்சிகளை மெனக்கெட்டு பார்ப்பவன் இல்லை. சானல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது திடுமென ஒரு காவியப் பாடல் பாடப்பட்டால் அங்கே நின்றுகொள்வேன் கொஞ்ச நேரம். பள்ளி நாட்களின் பாதிப்பு. எனவே இந்த நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. இருந்தும் நீங்கள் குறிப்பிடுவதுபோல இந்த நிகழ்சிகளில் பாடப்படும் பாடல்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான். கிளாசிக் என்றால் அது 70களுக்கு முன்னர்தான் என்பதே அது.\\

வாருங்கள் காரிகன், நான்கூட தொலைக்காட்சிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தொடர்ந்து பார்ப்பவன் கிடையாது. இப்போதெல்லாம் தொலைக்காட்சி என்றாலேயே வெறும் செய்திகள், அவை தொடர்பான விவாதங்கள் மட்டும்தான் பார்ப்பது வழக்கம். தெரிந்தவர்கள் யாராவது பங்குபெறும் நிகழ்ச்சிகள் என்றால் மட்டுமே குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்.
சூப்பர் சிங்கர் எல்லாம் நமது பட்டியலில் இல்லை. அகஸ்மாத்தாக அன்றைக்குப் பார்த்தபோது ஏ.ஆர்.ரகுமான் ஜட்ஜாக உட்கார்ந்திருந்தார். அதனால் பார்க்க ஆரம்பித்தேன். தொடர்ந்தாற்போல சில சின்னப்பிள்ளைகள் மன்னவன் வந்தானடி பாடலையும், கண்ணுக்குக் குலமேது பாடலையும் இதுபோன்ற சில பாடல்களையும் அபாரமாகப் பாடுவதைக் கேட்டேன். அதனால் அந்த நேரங்களில் மட்டும் காம்பியரிங்கையும், நீதிபதிகளின் விமரிசனங்களையும் சகித்துக்கொண்டு கடைசி ரவுண்டை மட்டும் கேட்டேன். நீங்கள் சொல்வதுபோல் 70க்கு முன்னர் வந்த பாடல்களை மிக அபாரமாகவே சில சிறுசுகள் பாடின.

\\இன்றைக்கு தமிழகத்தில் அதிகமாக கேட்கப்பட்ட,ரசிக்கப்பட்ட, அறியப்பட்ட பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் எம் ஜி ஆர் பாடல்களுக்குத்தான். இதைத்தான் மன்னாதி மன்னன் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் தெளிவாக பதிவு செய்தார். இணையத்தில் அதிகம் பேசப்படுவதாக இளையராஜாவைப் பற்றி அவரது ரசிகர்கள் கொள்ளும் பெருமை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இந்த மகா உண்மையின் முன் உடைபட்டுப் போகிறது.\\

இதைத்தானே நாம் அன்றையிலிருந்து சொல்லிக்கொண்டு வருகிறோம். எம்ஜிஆர் பாடல்கள் என்பதைத் தாண்டியும் இந்தப் பாடல்களுக்குப் பல்வேறு பரிமாணங்களும், அடையாளங்களும் உண்டு. கண்ணதாசன் பாடல்கள், டிஎம்எஸ் பாடல்கள், சுசீலா பாடல்கள், பிபிஎஸ் பாடல்கள், சீர்காழி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட வழிகளில் இவை தமிழனை ஆக்கிரமித்திருக்கின்றன.
இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் நானும் கவிஞர் அறிவுமதியும் கோடைக்கானல் மலையின் பின்பகுதியில் ஆடலூர், பன்றிமலை முதலிய ஊர்களில் காலை முதல் மாலைவரை பயணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அங்கெல்லாம் இன்னமும் லவுட்ஸ்பீக்கர்தான். காலையிலிருந்து மாலைவரை எங்கு சென்றாலும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு லவுட்ஸ்பீக்கர் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே பழைய பாடல்கள்தாம். பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி சம்பந்தப்பட்டவை. ஒரு பெருமூச்சுடன் மாலையில் அறிவுமதி சொன்னார். "இவங்க இன்னமும் எழுபதை விட்டே வெளியே வரலையே. இவங்க எப்போ எண்பது தொண்ணூறு இரண்டாயிரத்துக்கெல்லாம் வந்து நாங்கள்ளாம் இவங்களை எப்பதான் தொடுவது?" என்று. அறிவுமதி இளையராஜாவின் சகாக்களில் ஒருவர். அவரிடம் பெருமளவு அன்பு பூண்டவர். இ.ராவுடன் பாசமும் நேசமுமாகப் பழகி வருபவர். அவருடைய கருத்து இது. இன்றைய பெரும்பாலான டிவி சேனல்களும் அதைத்தானே சொல்கின்றன.

\\இதேபோல சிவாஜிக்கு இ.ராஜா அமைத்த பாடல்கள் கூட ----தியாகம் படத்தின் நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு போன்ற வெகு குறைவான பாடல்களைத் தவிர------ சற்றும் பொருத்தமில்லாத வகையைச் சார்ந்தவைகள்தான்.\\
அந்தக் கூத்தை ஏன் கேட்கறீங்க, சிவாஜி படம் என்றாலேயே முதல்மரியாதையிலும் இன்னும் இரண்டொரு படங்களிலும் வந்ததுதான் பாட்டு என்றுதானே பல்வேறு பதிவுகளிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....

\\இறுதியாக இன்றைய டெக்னாலஜி எந்த அளவுக்கு இசையை சுருக்கி இருக்கிறது என்ற உங்களின் எண்ணம் எனக்கும் உண்டு. நான் எம் பி 3 வகை இசையை அறவே வெறுப்பவன். ஆடியோ சிடிக்களே எனது விருப்பம். அதில்தான் ஒரு இசையின் எல்லா இழைகளையும் நாம் கேட்கமுடியும். இருந்தும் ஒரு ஒப்பீட்டளவில் இன்றைய cd கூட பழைய எல் பி ரெகார்ட் எனப்படும் vinyl record துல்லியத்தின் முன் நிற்க முடியாது என்பதே உண்மை.\\
நீங்கள் சொல்வதைத்தான் திரு சேகரும் எழுதியிருக்கிறார். திரு ஷாஜியும் இதே கருத்தைத்தான் சொல்லியிருந்தார். ஜெயதேவ்தாஸ் ஏதோ மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறாரே.

Amudhavan said...

sekar said...

\\நான் சொல்ல வந்தது பாடகர் பாடி பதிவு செய்யும் போது பதிவு செய்யும் கருவியில் வேகமாகப் பதிவாகும் படி செய்கிறார்கள். இதனால் இசைக் கச்சேரியில் அதே வேகத்தில் இசைக்க முடிவதில்லை. ஜப்பானில் கல்யாணராமன் என்ற படத்தில் 'ராதே என் ராதே' பாடலில் சிறுவன் பாடும் குரல் பதிவு செய்யும் கருவியில் அவர் செய்த மாற்றமே.\\
\\முற்றிலும் உண்மையே. இசைத்தட்டு விற்பனை மற்றும் பாடல் பதிவு தொழில் செய்த அனுபவத்தில் சொல்கிறேன். MP3 ல் நாம் கேட்கும் பாடல் 'தோராயமாக' பத்து மடங்கு தரம் குறைக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது பிறகு எப்படித் தரம் இருக்கும்.\\
பாடல்கள் பதிவு செய்த டெக்னிகல் அனுபவங்களுடன் பேசுகிறீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.


Amudhavan said...

Jayadev Das said...

\\அமிதாப் பச்சனின் "கௌன் பனேகா குரோர்பதி உட்பட", எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியும் மக்களை கொஞ்ச நாள் தான் கட்டிப் போடுகிறது, பின்னர் போர் அடிக்க ஆரம்பித்து அதன் டி ஆர் பி ரேட்டிங் குறையத் துவங்கும். அப்போது இடைவெளி விட வேண்டியது அவசியமாகிறது. பல நிகழ்ச்சிகள் கைவிடப் படுதலும் நடக்கின்றது.\\

ஆமாம், இத்தனைக்குப் பிறகும் இந்த நிகழ்ச்சி மட்டும் அதே பரபரப்புடன் நடக்கிறது. மக்கள் சலிக்காமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது நான்காவது ஆண்டு நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

\\குழந்தைகள் வென்றாலும், அவர்களின் பெற்றோர்கள் தான் கையாள்வார்கள், எனவே சிறுவர்களுக்கு கணினி வல்லுனர்கள் போல அகம்பாவம் ஏற்படும் நிலைக்கு கொண்டு போக வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன்.\\

உங்களுடைய இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ள முடியாது. நான் உதாரணம் சொல்லியிருக்கும் நடிகைகளின் பணத்தைக்கூட அவர்களின் தாயார்கள்தாம் வாங்குகிறார்கள். நிர்வகிக்கிறார்கள். ஆனால் அந்த நடிகைகளுக்கு எப்படி அத்தனை கர்வம் வருகிறது?


\\போட்டி முடிந்து சில மணி நேரங்கள் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டே இருக்கும். பரிசுகள் அறிவிக்கப் பட்ட பின்னரும், தொகுப்பாளர்கள் SMS வழியாக ஓட்டு போடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள், லட்சக் கணக்கில் ஆடுகள் ஓட்டுப் போடும், ஒவ்வொரு ஓட்டுக்கும் 6 ரூபாய் விஜய் TV க்குப் போய்க் கொண்டே இருக்கும்!! தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காசு வாங்கும் நாட்டில், TV யில் பாடும் பாடகரைத் தேர்ந்தெடுக்க எதற்கு காசு குடுத்து ஓட்டு போட வேண்டும் என்று யாரும் கேட்பதேயில்லை!!\\

இம்மாதிரியான பல்வேறு அக்கிரமங்களுக்குப் பழகிவிட்ட ஆடுகள்தானே நம்முடைய மக்களெல்லாம்......

\\கரெண்டை எடுத்த தண்ணீரில் பயிரே விளையாதுன்னு கிளப்பின புரளி மாதிரியில்ல இருக்கு!! மூலப் பாடலிலேயே கோளாறு இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினை வரும்!! நான் தினமும் பென் டிரைவில் எவ்வளவோ திரைப் படங்களைத் திணிக்கிறேன், நன்றாத்தானே ஓடுகின்றன!! தரமான இணையத் தளங்களில் இருந்து எடுத்து எத்தனை பாடல்களைத் திணித்தாலும் அவை நன்றாகவே இருக்கும். மென்பொருளை திணிக்கவெல்லாம் இயலாது!! எதற்கும் இதுகுறித்து வல்லுனர்களை கேட்கிறேன்!!\\

ரசிக்கக்கூடிய உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் டிவியில் வரும் பாடலுடன் அல்லது யூ டியூபில் வரும் பாடலுடன் எம்-3 சிடியின் பாடல்களை ஒன்றாக ஓடவிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.
திரு ஷாஜி சோனியின் ஒலிப்பதிவுப் பிரிவில் இருக்கிறவர் என்று நினைக்கிறேன். அவர் இதுபற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.
இங்கும் திரு சேகரும், திரு காரிகனும் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களையே சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுடைய ஆரம்ப பாராட்டுக்களுக்கு நன்றி.






sekar said...

சின்ன விளக்கம்,
MP3ல் ஒரு பாட்டு 5MBயும் அதே track format audio CDல் பாடல் 50MBயும் (தோரயமாக) இருக்கும் புதுப் பாடல்களில் நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே உணரமுடியும். பழைய பாடல் இசைத்தட்டில் ரசித்துக் கேட்டிருந்தாலே வித்தியாசம் தெரியும்.

ஜோதிஜி said...

நான் சூப்பர் சிங்கர் குறித்து மனதளவில் என்னவெல்லாம் யோசித்து வைத்து இருந்தேனோ அதை அப்படியே நீங்க எழுதியிருப்பது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக உள்ளது.

ஆனால் பாதி நிலையில் கட்டுரையின் பாதை மாறி எங்கங்கோ போய் விட்டது. இரண்டு பகுதிகளாக தனித் தனியாக பிரித்து இருக்கலாமோ? என்று தோன்றியது.

முதல் பகுதியில் சிறிய வயதில் தாங்க முடியாத புகழ் வந்தால் என்னவாகும்? இரண்டாவது பகுதியில் அது சார்ந்த வாழ்ந்த பிரபல்யங்கள். என் மனதில் தோன்றியது இது.

அபஸ்வரம் ராம்ஜி நீங்க சொன்ன பிறகு தான் இந்த பெயரே மீண்டும் என் நினைவுக்கு வந்தது.

எத்தனை பிரபல்யங்களுடன் நீங்க எடுத்த புகைப்படத்தையும் பதிவில் வெளியிடுவது இல்லை என்ற என் கடுமையான கண்டனத்திற்கு இந்த பதிவில் வெளியிடுட்டுள்ள சுஜாதா உடன் நீங்க இருக்கும் புகைப்படம் கூல். அற்புதம்.

காரிகன் said...

ஆடியோ சிடி எனப்படும் டிஜிடல் தொழில் நுட்பம் ஒரு இசையின் எல்லா ஓசைகளையும் அதன் சிறு இழையைக்கூட விடாமல் பதிவு செய்து ஒலிபரப்பு செய்வது. எல் பி ரெகார்ட் எனப்படும் அனலாக் இசை வடிவம் இசையை அதன் உண்மையான தரத்தில் கொடுப்பது. எனவேதான் இன்றைக்கு மேலை நாடுகளில் இசைக் குழுக்கள் மீண்டும் எல் பி ரெகார்ட் வடிவத்தில் தங்களது ஆல்பங்களை வெளியிடுகிறார்கள். அங்கே turntable எனப்படும் இந்த எல் பி வகை இசை மீண்டும் உயிர்பெற்று வருகிறது.

எம் பி 3 ஒரு உண்மையான இசை வடிவமே இல்லை. சொல்லப்போனால் ஆழமாக இசையை நேசிப்பவர்கள் சற்றும் எம் பி 3 இசையை கேட்க விருப்பம் கொள்ள மாட்டார்கள். எம் பி 3 இசை என்பது எது மனித காதுகளுக்கு உரக்க கேட்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்பம். ஆடியோ சிடி யில் ஒளிந்திருக்கும் பற்பல சிறிய இசைத் துணுக்குகள், அதிக ஓசையில்லாத மெல்லிய சப்தங்கள் போன்றவை இந்த எம் பி 3 வடிவத்தில் ஒரேடியாக நசுக்கப்பட்டு தூர எறியப்படுகின்றன. எனவே எம் பி 3 இல் நாம் கேட்பது மிகப் பிரதானமான மனித குரல், தாளம், மற்ற ஒலிமயமான இசைக் கருவிகளின் ஓசை மட்டுமே.

எம் பி 3 யிலேயே பிட் வேகம் என்ற அம்சம் உண்டு.128 என்பது வெகு சாதாரணமாக கிடைப்பது. பாடல் மட்டுமே கேட்கும். தலையை ஆட்டிவிட்டு போய்விடலாம். பழைய வானொலில் பாடலைக் கேட்கும் தரம். 192 கொஞ்சம் பரவாயில்லை ரகம். படிப்படியாக உயர்ந்து 320 என்பதுதான் எம் பி 3 யின் உச்சம். இதைக்கூட ஒரு துல்லியமான இசைக்கு அருகே என்றுதான் சொல்ல முடியும். 50% கூட ஒரு ஆடியோ சி டி இசையின் பிரதி கிடையாது இது. இதுதான் தி பெஸ்ட். ஆனால் இந்த பெஸ்ட் ஒரு ஆடியோ சி டி தரத்திற்கு முன் மண்டியிட்டுவிடும். பாடலைச் சுருக்குவதே எம் பி 3 தொழில்நுட்பம். பின் எங்கேயிருக்கும் உண்மையான தரம்?

ஒரு அழகான ஓவியம் அதன் வண்ணங்களால் மட்டுமே சிறப்படைவதில்லை. அதினுள்ளே இருக்கும் வெற்றிடங்களும் வண்ணமில்லாத பகுதிகளும் சாதாரணமாக கவனம் பெறாத சிறிய கோடுகளும் சேர்ந்தே அந்த ஓவியத்தை அழகு பெறச் செய்கின்றன. அவற்றை எல்லாம் எடுத்துவிட்டு வெறும் வண்ணத்தை மட்டும் சட்டம் போட்டு மாட்டி வைப்பதுதான் எம் பி 3.

Amudhavan said...

sekar said...
\\சின்ன விளக்கம், MP3ல் ஒரு பாட்டு 5MBயும் அதே track format audio CDல் பாடல் 50MBயும் (தோரயமாக) இருக்கும் புதுப் பாடல்களில் நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே உணரமுடியும். பழைய பாடல் இசைத்தட்டில் ரசித்துக் கேட்டிருந்தாலே வித்தியாசம் தெரியும்.\\

ரசித்துக்கேட்டிருப்பதால்தான் பழைய பாடல்களில் இப்போதைய எம்பி-3 யில் கேட்பது மிகவும் நாராசமாகக் காதில் விழ ஆரம்பித்த சமயம் , ஏன் இப்படி என்ற சந்தேகம் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தபோதுதான் இதற்கான விடையாக ஷாஜி எழுதியிருந்த கட்டுரை கிடைத்தது.
முதன் முதலில் இந்த வித்தியாசம் புலப்பட்டது பழைய இந்திப் பாடல்களைக் கேட்டபோதுதான். பிற்பாடுதான் எல்லாத் தமிழ் பாடல்களிலும் இதே தொந்தரவு இருப்பதை உணரமுடிந்தது. நன்றி சேகர்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...

\\ஆனால் பாதி நிலையில் கட்டுரையின் பாதை மாறி எங்கங்கோ போய் விட்டது. இரண்டு பகுதிகளாக தனித் தனியாக பிரித்து இருக்கலாமோ? என்று தோன்றியது. முதல் பகுதியில் சிறிய வயதில் தாங்க முடியாத புகழ் வந்தால் என்னவாகும்? இரண்டாவது பகுதியில் அது சார்ந்த வாழ்ந்த பிரபல்யங்கள். என் மனதில் தோன்றியது இது.\\

இது ஒரு கனமான சப்ஜெக்ட். இதுபற்றி எழுத ஆரம்பித்தால் பல பேருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும் என்பதற்காக எழுதவில்லை. இன்னமும் சொல்லப்போனால் சற்று அதிகமாக எழுதிவிட்டு பதிவில் வெளியிடும் சமயம் ஒரு மூன்று பாராக்களை நீக்கிவிட்டுத்தான் வெளியிட்டேன். பொதுவெளியில் எப்படி இருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க நம்மிடம் எந்த அளவு நட்புடன் இருக்கிறார்கள் என்பதையும் கணித்துக்கொண்டுதானே இயங்க வேண்டியிருக்கிறது.

\\எத்தனை பிரபல்யங்களுடன் நீங்க எடுத்த புகைப்படத்தையும் பதிவில் வெளியிடுவது இல்லை என்ற என் கடுமையான கண்டனத்திற்கு இந்த பதிவில் வெளியிடுட்டுள்ள சுஜாதா உடன் நீங்க இருக்கும் புகைப்படம் கூல். அற்புதம்.\\
தங்கள் பாராட்டிற்கு நன்றி. இந்தப் படம் நிறையப்பேரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதை தொலைபேசியில் பேசிய சிலரும் சொன்னதன் அடிப்படையில் உணரமுடிகிறது. பொதுவாக புகைப்படங்கள் வெளியிடுவதில்லை. இந்த விஷயம் எழுதும்போது வேறு இடத்தில் அமர்ந்திருந்த எங்கள் இருவரையும் அழைத்து மேடை எதிரில் உட்கார வைத்தார் ராம்ஜி என்பது நினைவு வந்ததனால் அதனை வெளியிட நேர்ந்தது.


Amudhavan said...

காரிகன் said...

\\இன்றைக்கு மேலை நாடுகளில் இசைக் குழுக்கள் மீண்டும் எல் பி ரெகார்ட் வடிவத்தில் தங்களது ஆல்பங்களை வெளியிடுகிறார்கள். அங்கே turntable எனப்படும் இந்த எல் பி வகை இசை மீண்டும் உயிர்பெற்று வருகிறது.\\

இதுபற்றிய ஒரு செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த நினைவு இருக்கிறது. கூடவே பழைய எல்பி ரிகார்டுகளின் நினைவைப் போற்றும்வகையிலோ அல்லது நூறு வருடங்களை முன்னிட்டோ மும்பையில் ஒரு இந்தி ரிகார்டு வெளியிடப்பட்டதாகவும் யார்யார் பதிவு செய்திருந்தார்களோ அவர்களுக்கு மட்டுமே அது விநியோகிக்கப்பட்டதாகவும்கூடப் படித்தேன்(பிரத்யேகமாக என்பதால் அதன் விலை மிகவும் அதிகம் என்றும் போட்டிருந்தது)
\\எம் பி 3 ஒரு உண்மையான இசை வடிவமே இல்லை. சொல்லப்போனால் ஆழமாக இசையை நேசிப்பவர்கள் சற்றும் எம் பி 3 இசையை கேட்க விருப்பம் கொள்ள மாட்டார்கள். எம் பி 3 இசை என்பது எது மனித காதுகளுக்கு உரக்க கேட்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்பம். ஆடியோ சிடி யில் ஒளிந்திருக்கும் பற்பல சிறிய இசைத் துணுக்குகள், அதிக ஓசையில்லாத மெல்லிய சப்தங்கள் போன்றவை இந்த எம் பி 3 வடிவத்தில் ஒரேடியாக நசுக்கப்பட்டு தூர எறியப்படுகின்றன. எனவே எம் பி 3 இல் நாம் கேட்பது மிகப் பிரதானமான மனித குரல், தாளம், மற்ற ஒலிமயமான இசைக் கருவிகளின் ஓசை மட்டுமே. \\

அடாடா என்ன அழகாக எத்தனை சுலபமாகப் புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள், மகிழ்ச்சி.

\\பாடலைச் சுருக்குவதே எம் பி 3 தொழில்நுட்பம். பின் எங்கேயிருக்கும் உண்மையான தரம்?\\

இந்தப் புதிய விஷயங்கள் நிறையப்பேருக்கு இப்போதுதான் முதல்முறையாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.



sekar said...

அமுதவன் அவர்களே எனக்கு நீங்கள் சினிமாத் துறைப் பற்றி நன்கு அறிந்தவர் என்ற முறையில் விளக்கம் தரவும்.

இளையராஜாவை அறிமுகப்படுத்தி அவரின் வெற்றிக்கு மூலமாக இருந்த இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் கேட்கிறேன் சினிமா உலகம் அவர்களைப் புறக்கணித்த பிறகு தன் வாழ்வாதாரத்திக்காகச் சைக்கிள் கடை நடத்தினார் என்று தெரியவந்தாது.

என் கேள்வி என்ன வென்றால் வணிகரீதியில் படம் எடுக்காமல் நல்ல படைப்பை மக்கள் மனதில் பதிக்க நினைத்த சில கலைஞர்களுக்குத் திரைஉலகம் தரும் பரிசு இதுதானா?
................................................................................................................

பின்குறிப்பு:
கருப்புப்பணம் என்ற கண்ணதாசன் நடித்து வந்த படத்தை அப்படியே ஜென்டில்மேன் பிரதி என்று எடுத்த சங்கர் கோடிக்கணக்கில் சம்பாரித்து விட்டார். புகளின் உச்சத்தில் இருக்கிறார்.

கன்னியாகுமாரி என்ற கமல் நடித்து மலையாளத்தில் (1974)ல் வந்த படத்தைப் பல ஜிகினா வேலை செய்து 16 வயதினிலே என்ற படத்தை எடுத்தவர் கோடிகளில் புரள்கிறார்

Jayadev Das said...

@காரிகன்

\\அவற்றை எல்லாம் எடுத்துவிட்டு வெறும் வண்ணத்தை மட்டும் சட்டம் போட்டு மாட்டி வைப்பதுதான் எம் பி 3. \\

ஒரு பாடலை அதன் உண்மையான தரத்தில் கேட்க, அதன் ஆடியோ சி.டி யை வாங்குவதோடு இன்னம் வேறு வழிகள் உள்ளனவா காரிகன்?

Amudhavan said...

sekar said...

\\இளையராஜாவை அறிமுகப்படுத்தி அவரின் வெற்றிக்கு மூலமாக இருந்த இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் கேட்கிறேன் சினிமா உலகம் அவர்களைப் புறக்கணித்த பிறகு தன் வாழ்வாதாரத்திக்காகச் சைக்கிள் கடை நடத்தினார் என்று தெரியவந்தாது. \\
தேவராஜ் மோகன் இடையில் பிரிந்துவிட்டார்கள். இவர்களில் மோகன் மறைந்த நடிகர் முத்துராமனின் மனைவியின் சகோதரர். திரு தேவராஜ் மட்டும் தனியே ஒரு படமோ இரு படங்களோ செய்தார் போலிருக்கிறது.
பின்னர் ஒரு கட்டத்தில் திரு தேவராஜ் மளிகைக்கடை வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன்.

காரிகன் said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொல்வது போல ஊடகங்களின் தூண்டுதலால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் வன்முறையாகவே என்றே நானும் கருதுகிறேன். ஒரு முறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் சூப்பர் சிங்கரில் பாடியபோது சரியாகப் பாடவில்லை என்றால் தன தந்தை அடிப்பார் என்று கூறினான். வயதுக்கு மீறிய உணர்வுடன் பாடல்களை பாட சொல்வது எந்த விதத்தில் சரியென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. பெற்றோரும் இதற்கு துணை போவது கொடுமை. அதில் கிடைக்கும் புகழும் பணமுமே இதற்கு காரணம் /பல மழலை மேதைகள் பிற்காலத்தில் ஜொலிக்காமலேகூட போய் இருக்கிறார்கள் .
அபஸ்வரம் ராம்ஜி நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் பார்த்ததாக நினைவு.
இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை விட wildcard சுற்றில் அனைவருமே அற்புதமாகப் பாடினார்கள்

இறுதிப் போட்டிக்கு கே.வி,மகாதேவன் பாடல்களே தேர்ந்தெடுக்கப் படுவது சூப்பர் சிங்கர் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது. சவாலான பாடல்களாக அமைந்திருப்பதே அதற்கு காரணம்.
இதுவரை நான் கவனித்ததில் இறுதிப் போட்டியில் கே.வி மகாதேவன் எம்.எஸ்.வி. இளையராஜா ரஹ்மான் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டிருக்கின்றன .
இந்நிகழ்ச்சியில் மனோ செய்யும் கோமாளித் தனங்கள் ஆரமபத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் இப்போதெல்லாம் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஆறுமாத இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும் .

காரிகன் said...

திரு ஜெயதேவ் தாஸ்,

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன்.

ஒரு பாடலை அதன் தூய்மையுடன் கேட்க நான்கு வழிகளே உள்ளன. முதலாவது லைவ் எனப்படும் அது உருவாகும் இடத்திலேயே கேட்பது. இரண்டாவது கசெட்டுகள். இப்போது அவை வழக்கொழிந்து போய்விட்டன. மேலும் கசெடுக்கள் துல்லிய தரம் இல்லை. மூன்றாவது இப்போதைய cd க்கள். நமக்கு கைக்கெட்டிய வரம் இந்த cd க்களே. இன்றைய நிலையில் இவைகளே ஒரு உண்மையான இசையின் தரத்திற்கு இணைவாக இருப்பவை.கடைசியாக எல் பி ரெகார்ட் எனப்படும் vinyl records. அதிக விலை. மேலும் இவற்றை இயக்க ஒரு பிரத்தியோக turntable எனப்படும் ரெகார்ட் பிளேயர் அவசியம். மற்றபடி ஐ பாட் போன்ற வஸ்துக்களில் நீங்கள் கேட்பது ஒரு விதமான flat music. ஆப்பிளின் வரவிற்குப் பிறகு இளைஞர்கள் இந்த மாதிரியான இசை வடிவதிற்க்கே பழகிவிட்டார்கள். அவர்களிடம் எல் பி ரெகார்ட் தரம் பற்றி பேசுவது முட்டாள்தனமானது. அவர்கள் அதை புரிந்துகொள்வது சிரமம். நான் எழுபதுகளைச் சேர்ந்தவன் என்பதால் இந்த வேறுபாடு எனக்கு சுலபத்தில் புரிகிறது.

உங்களின் கேள்விக்கான பதில் ஒன்றுதான். விலை அதிகமானாலும் ஒரு ஆடியோ சி டி யை வாங்கிவிடுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களாக இருந்தால். இன்னும் அதிகம் செலவழிக்க முடிந்தால் எல்பி ரெகார்டுகள் சிறந்தவை. ஆனால் தற்போது தமிழில் அவை வருவதில்லை என்றே நினைக்கிறேன். இரண்டுமே முடியாது என்ற பட்சத்தில் ஆப்பிளின் ஐ பாட் இசை கொஞ்சம் துல்லியமானது.

திண்டுக்கல் தனபாலன் said...

மனோதத்துவ நிபுணர்கள் முதலில் யோசிக்கவேண்டியது அக்குழந்தைகளின் பெற்றோர்களைப் பற்றி...

பதிவு இரண்டு பெரிய விசயங்களை அலசி உள்ளது... தவிர்த்திருக்கலாம்... தனி தனி பகிர்வுகளாக இருந்திருக்கலாம்...

சமீபத்திய பாடல்களை பாடி முதல் பரிசு பெற முடியாது என்பது என் எண்ணம்... பார்ப்போம்...

sekar said...

@காரிகன்
கேசட்டில் துல்லியமாகக் கேட்க முடியாது என்பது நாம் பயன்படுத்தும் கேசட் மற்றும் கேசட் பிளேயரின் தரத்தைப் பொருத்தது.

உண்மை என்னவென்றால் சினிமாப் பாடல்கள் முதல் பிரதி (master copy)ஒலி நாடாவில் தான் பதியப்படுகிறது.

sekar said...

நாமில் சிலர் இசையைச் சரியான தரத்தில் கேட்கிறார்களா? என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சும்.
.............................................................................
தரமாக இசையைக் கேட்காமல் பிறகு எப்படி இசை விமர்சனம் எழுதமுடியும்? அப்படியே எழுதினாலும் எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்.

நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா? என்பதைப்பற்றி ஷாஜி ஒரு பதிவில் சொல்கிறார் தெரிந்துகொள்ளுங்கள்.
(http://musicshaji.blogspot.in/2013/03/blog-post.html)

Anonymous said...

mp3 க்கும் ஒரிஜினல் பாடலுக்கும் உள்ள வித்தியாசம் உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். நன்றி அமுதவன்.

இது என்னுடைய கருத்து மட்டுமே!
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை எதுவுமே நான் பார்க்கிறதில்லை. இந்த மாதிரி நிகழ்சிகள் யாருக்கு உபயோகம் அல்லது மகிழ்ச்சியை கொடுக்குமென்றால், அந்த சிறுவர்களுடைய பெற்றோர்களுக்கும் அந்த சிறுவரை தெரிந்தவர்களுக்கு மட்டுமே. ஒரு மூன்றாவது ஆள் இந்த நிகழ்ச்சியை பார்த்தால், எந்த மகிழ்ச்சியையும் அது கொடுக்க போகிறதில்லை.
நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? பத்து சிறுவர்களை பாட வைத்து, முடிவில் நல்லா பாடினவர்களுக்கு பரிசு கொடுப்பது. பொது மக்களுக்கு கிடைப்பது என்ன? ஒரு நாள் program இல் நான்கைந்து பாட்டு கேட்கலாம், அவ்வளவுதான். மீதி எல்லாமே, தாஸ் குறிப்பிட்டது போல Recorded நாடகங்களே. இந்த பாடல்களை, கேட்பதற்கு நாம் ஏன் ஒரு மணி நேரத்தை விரயம் செய்ய வேண்டும். நாம் CD இன் மூலமாகவே கேட்டுக்கொள்ளலாமே. மக்கள் எதற்காக பார்க்கிறோம் என்று தெரியாமல், நேரத்தை விரயப்டுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

Sekar / Kaarikan,

Is there any way to convert mp3 to track format audio(original)?

காரிகன் said...

சேகர் சொன்னது போல கருப்புப்பணம் படத்தின் உல்டாதான் ஜென்டில்மேன். கண்ணதாசன் (அவர்தான் ஹீரோ) பேசும் வசனங்கள் மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இறுதியில் வரும் அந்த நீதிமன்றக் காட்சி மிக பொருள் பொதிந்தது.

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

\\இறுதிப் போட்டிக்கு கே.வி,மகாதேவன் பாடல்களே தேர்ந்தெடுக்கப் படுவது சூப்பர் சிங்கர் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது. சவாலான பாடல்களாக அமைந்திருப்பதே அதற்கு காரணம்.\\

முரளிதரன், இசையமைப்பாளர்களைப் பற்றிப் பேசும்போது இம்மாதிரியான நிதர்சன உண்மைகளைப் பேசிச்சென்றால் இங்கு விவாதங்கள் எழுவதற்கு வாய்ப்பே இருக்காது. லெஜண்டுகளாக இருந்த விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலத்திலும் சரி, விஸ்வநாதன் தனியாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்திலும் சரி அவர்களுக்கு இணையாகவே வந்துகொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன். அதுவும் அவருடைய மெல்லிசை சார்ந்த பாடல்கள் பல சுமார் ரகத்தைச் சேர்ந்தவையே. ஆனால் கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை ஜி.ராமனாதனுக்குப் பிறகு இவரிடம் நெருங்குவதற்குக்கூட ஆளில்லை.

Amudhavan said...

காரிகன் said...
விலை அதிகமானாலும் ஒரு ஆடியோ சி டி யை வாங்கிவிடுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களாக இருந்தால். இன்னும் அதிகம் செலவழிக்க முடிந்தால் எல்பி ரெகார்டுகள் சிறந்தவை. ஆனால் தற்போது தமிழில் அவை வருவதில்லை என்றே நினைக்கிறேன். இரண்டுமே முடியாது என்ற பட்சத்தில் ஆப்பிளின் ஐ பாட் இசை கொஞ்சம் துல்லியமானது.

காரிகன் ஆப்பிளின் ஐ பாட் இசை துல்லியமானது என்பது சரிதான். ஆனால் ஆப்பிள் ஐபாடுக்கு எதிலிருந்து தரமிறக்குவது என்பதுதானே கேள்வி.

Amudhavan said...

Alien said...

வருகைக்கு நன்றி ஏலியன். உங்களுக்கு சேகரோ காரிகனோ பதில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சிபற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களில் பலருக்கு உடன்பாடுதான். ஆனால் நம் கண்ணோட்டங்களையும் கடந்து பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. பார்ப்பவர்களை விடுங்கள். பல லட்சம்பேர் காசு செலவழித்து ஓட்டுக்களே போடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

sekar said...

@Alien

//Is there any way to convert mp3 to track format audio(original)?//

ஒரு பெரிய புகைப்படத்தை சிறிய அளவு பிரதியாக எடுத்தால் சாதாரணப் பார்வைக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது.

அதே சிறிய அளவு படத்தைப் பெரிதாகப் பிரதி எடுத்தால் சாதாரணப் பார்வைக்கே தரமில்லாமல் தெரியும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//ஒரு பாடலை அதன் தூய்மையுடன் கேட்க நான்கு வழிகளே உள்ளன. முதலாவது லைவ் எனப்படும் அது உருவாகும் இடத்திலேயே கேட்பது.//
தற்போது ஒரே டேக்கில் எடுக்கப் படுவதில்லை அல்லவா.நாம் முழுமையாக கேட்கும் வடிவில் பாடகர் பாடும்போது இருப்பதில்லை . பின்னர் பல நுட்பங்கள் ஏற்ற இறக்கங்கள் சேர்க்கப் படுகின்றன மேலும் பாடலின் முழுப் பகுதியும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு செய்யப்படுவதில்லை. பல பகுதிகளாக பிரித்தே பதிவு செய்யப் பட்டு இணைக்கப் படுகின்றன குறிப்பாக புதிய பாடல்களுக்கு இது வெகுவாகப் பொருந்தும். ட்ரேக் பாடுவது நீண்ட நாட்களாக வழக்கத்தில் இருக்கிறது. ஒலிப்பதிவின்போது பாடுபவர் ஒருவர். அவரது ட்ரேக் நீக்கப் பட்டு வேறு ஒருவர் பாடுபவர்.எஸ்.பி.பி ஜேசுதாஸ் போன்றவர்கள் ஒரிஜினல் ரெகார்டிங்கை விட ட்ராக் அனுப்பப்பட்டு தங்கள் பாடி அனுப்புவதாக படித்திருக்கிறேன். எஸ்.பி பி யால் அவ்வளவு பாடல்கள் பாட முடிந்தமைக்கு காரணம் இந்த ட்ரேக் வசதிதான். ட்ரேக் பாடி பின்னர் பாடகராகப் புகழ்பெற்றவர்கள்பலர் உண்டு அவர்களில் மனோ,ஸ்ரீநிவாஸ் குறிப்பிடத் தக்கவர்கள் . இப்போது தொழில் நுட்பம் இன்னும் முன்னேற்றம் அடைந்துள்ளதால் ஒரே நேரத்தில் வேறு ஒரு இடத்தில் இருந்து கூட பாடமுடியும்.

காரிகன் said...

சேகர்,

----கேசட்டில் துல்லியமாகக் கேட்க முடியாது என்பது நாம் பயன்படுத்தும் கேசட் மற்றும் கேசட் பிளேயரின் தரத்தைப் பொருத்தது. ----

உண்மைதான். கசெட் ப்ளேயரின் தரமும் கணக்கில் உண்டு. கசெட்டுகள் ப்ளேயருக்குள்ளே சில சமயங்களில் சிக்கிக்கொள்ளும் வகையானவை.அது ஒரு அவஸ்தை.

ஹலோ ஏலியன்,

-----Is there any way to convert mp3 to track format audio(original)?---- என்ற உங்களின் கேள்விக்கு பதில்; There's no way an MP3 format music to be converted to original quality back. இணையத்தில் கிடைக்கும் இலவச எம் பி 3 பூஸ்டர், என்ஹான்சர் மென் பொருட்கள் எல்லாமே ஒரு அளவுக்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. 50 எம் பி(ஆடியோ சி டி) இருக்கும் ஒரு பாடலை வெறும் 5 எம் பி யாக(எம் பி 3) சுருக்கும்போதே அதன் உண்மை வடிவம், துல்லியம் எல்லாமே வெட்டப்பட்டு அந்த இசை ஒரு flat music காக மாறிவிடுகிறது.

"ஆள் அரவமற்ற மரங்களடர்ந்த ஒரு நீண்ட சாலையில் சத்தங்கள் குறைந்துவிட்ட ஒரு முன்னிரவின் ஏகாந்த அமைதியில் அவன் தனியே நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தான்." என்பதை "ஒருவன் இரவில் தனியாக நடந்தான்." என்று சொல்வதைப் போலத்தான் இது.

சார்லஸ் said...

அமுதவன் சார்

நல்ல பதிவு . சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நான் தொடர்ச்சியாக பல வருடங்கள் பார்த்து வருகிறேன் . அது ஒரு வீண் பொழுது போக்கு நிகழ்ச்சியாக சிலர் நினைக்கிறார்கள். ஏன்... நீங்களும் கூட நினைக்கிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி . இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி . பாடுவது எளிதான காரியமல்ல என உணர்த்தும் நிகழ்ச்சி . திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி . பாடல் உருவான விதம் , பாடியவரின் பெருமை , இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கு பகிரப்படுகின்றன . எல்லா இசையமைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது. நாடகத்தன்மையும் நடக்கும் . அது ஒரு ரேட்டிங் கூட்டும் உத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் .

காரிகன் said...

----ஆனால் ஆப்பிள் ஐபாடுக்கு எதிலிருந்து தரமிறக்குவது என்பதுதானே கேள்வி.---

அமுதவன் சார்,

ஆப்பிள் ஐ பாட் போன்று மிகச் சிக்கலான இசை இயக்கி இதுவரை வரவில்லை. அதிக விலை கொடுத்து இப்படி ஒரு அவஸ்தையை வாங்குவதுதான் இதில் முரண். ஆனால் தரம் என்றால் முதலிடம் ஆப்பிளுக்குத்தான்.

சாதாரண எம் பி 3 இசையை ஆப்பிள் ALAC (Apple Lossless Audio Codec.) என்ற இசை வகையாக மாற்றிக்கொள்கிறது. இந்த ALAC எம் பி 3 யை விட அதிக தரம் கொண்டது. எனவேதான் ஐ பாட் இசையில் துல்லியம் கிடைக்கிறது. இதைத் தவிர FLAC என்றொரு இசை வடிவம் இருக்கிறது. இதுவும் எம் பி 3 யை விட மேலானது. ஆனால் FLAC அதிக எம் பி கொண்டவை. எனவே சிறிய வடிவ எம் பி 3 யே இன்றைக்கு மிக பிரபலமாக இருக்கிறது.

எதுவாக இருந்தாலும் ஒரிஜினல் இசை என்றால் ஆடியோ சிடி ஒன்றே தற்போது உள்ள ஒரே நம்பிக்கை.

சார்லஸ் said...

சார்

அனுஷியா என்ற சிறுமி ' பறை ...பறை ' என ஆரம்பிக்கும் பாடலைப் பாடி இறுதியில் பாடலோடு ஒன்றி உணர்ச்சிவசப்பட்டு அழுததைப் பார்த்து அங்கிருந்த நடுவர்கள் உட்பட எல்லோரும் கண்கலங்கியதுடன் ஜேம்ஸ் வசந்த் அந்தக் குழந்தையை உச்சி மோர்ந்து முத்தமிட்டு " பல வருசங்களுக்கு முன்னால் ஜேசுதாஸ் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிய பாட்டைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த 30000 பேரும் அழுததைப் பார்த்தேன். அதன் பிறகு அரங்கமே அழுவதை இப்போது பார்க்கிறேன் " என்று சொன்னார் .

அவர் குறிப்பிட்ட அந்தப் பாடல் ' ஆராரிரோ ...பாடியதாரோ ... தூங்கிப் போனதாரோ ' .

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\மனோதத்துவ நிபுணர்கள் முதலில் யோசிக்கவேண்டியது அக்குழந்தைகளின் பெற்றோர்களைப் பற்றி...\\

வாங்க தனபாலன், நச்சென்று சொன்னீர்கள் பாருங்கள் ஒரு வார்த்தை மிகச்சரியான ஒன்று.

Amudhavan said...

சார்லஸ் said...
\\சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நான் தொடர்ச்சியாக பல வருடங்கள் பார்த்து வருகிறேன் . அது ஒரு வீண் பொழுது போக்கு நிகழ்ச்சியாக சிலர் நினைக்கிறார்கள். ஏன்... நீங்களும் கூட நினைக்கிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி . இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி . பாடுவது எளிதான காரியமல்ல என உணர்த்தும் நிகழ்ச்சி . திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி . பாடல் உருவான விதம் , பாடியவரின் பெருமை , இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கு பகிரப்படுகின்றன . எல்லா இசையமைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது. நாடகத்தன்மையும் நடக்கும் . அது ஒரு ரேட்டிங் கூட்டும் உத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் .\\

வாங்க சார்லஸ், உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்க இங்கே இதே பொருள் பற்றி திருவாளர்கள் வருண், ஜெயதேவ், டி.என்.முரளிதரன், திண்டுக்கல் தனபாலன், ஏலியன், சேகர், ஜோதிஜி, காரிகன் ஆகியோர் கொண்டிருக்கும் கருத்துக்கள்தாம் எனக்கும் சரியானவையாகப் படுகின்றன. தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

//ஆனால் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி . இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி . பாடுவது எளிதான காரியமல்ல என உணர்த்தும் நிகழ்ச்சி . திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி . பாடல் உருவான விதம் , பாடியவரின் பெருமை , இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கு பகிரப்படுகின்றன . //

சார்லஸ்,
இதில் தன்னம்பிக்கை எங்கே இருக்கிறது? இந்த பாடுகிற துறையும்(தொழில்) இருக்கிற ஆயிரக்கணக்கான துறைகளுள் ஓன்று அவ்வளவுத்தான். பாடுவது எளிதான காரியம் இல்லை தான். அது போல, எல்லா துறைக்கும் அந்தந்த துறைக்குறிய நுட்பங்கள், கஷ்டங்கள், உருவாகும் விதம், உருபாக்குவரின் திறைமை, பெருமை எல்லாம் உண்டு. மீதி எல்லா துறைகளும் இப்படி TV யில் காட்டப்படுகிறதில்லை. இந்த துறைக்கு மட்டும் முக்கியத்துவத்தை கொடுப்பதை தான் நான் விரும்புவதில்லை. நிகழ்ச்சியில் காட்டப்படுகிறதை பார்த்தால், ஏதோ இவர்கள் மட்டும் தான், உலக கஷ்டப்பட்டு பாடுகிறது போலவும், மற்ற துறையில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப easy ஆக வேலைபார்ப்பது போலவும் இருக்குறது. சந்திராயன் டிசைன் செய்த விஞ்ஞானிகள் கூட இவ்வளவு பீத்திகொள்ள மாட்டார்கள்.

என்னைபொருத்தவரயில், எனக்கு தெரியாதவர்களை போட்டியில்(டிவி) பார்க்கிறது, கென்யா - நியூசிலாந்து கிரிக்கெட் விளையாட்டுபோட்டியை பார்க்கிறதற்கு சமம். எந்த சுவாரசியமுமில்லை. மற்றவர்கள் கேட்டால், நான் நேற்று பார்த்தேன், என்று சொல்ல கூடிய நிலையில் இருப்பதற்காகவாவது, மக்கள் பார்க்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Anonymous said...

Thank you Sekar.
Thank you Kaarikan.

Anonymous said...

//ஒரு பெரிய புகைப்படத்தை சிறிய அளவு பிரதியாக எடுத்தால் சாதாரணப் பார்வைக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது.

அதே சிறிய அளவு படத்தைப் பெரிதாகப் பிரதி எடுத்தால் சாதாரணப் பார்வைக்கே தரமில்லாமல் தெரியும். //

Good explanation Sekar....I liked.

Anonymous said...

//"ஆள் அரவமற்ற மரங்களடர்ந்த ஒரு நீண்ட சாலையில் சத்தங்கள் குறைந்துவிட்ட ஒரு முன்னிரவின் ஏகாந்த அமைதியில் அவன் தனியே நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தான்." என்பதை "ஒருவன் இரவில் தனியாக நடந்தான்." என்று சொல்வதைப் போலத்தான் இது. //

Nice comparison Kaarigan. Thanks

Amudhavan said...

ஏலியனின் மீள் வருகைகளுக்கு நன்றி. அதுவும் நான் மீண்டும் கணிணி முன்பு அமரும்பொழுது சேகர் குறிப்பிட்ட எந்தப் பகுதியை, காரிகனின் எந்தப் பகுதியை நிச்சயம் பாராட்டவேண்டும் என்று இருந்தேனோ அதையே மிகக் குறிப்பாய்ப் பாராட்டியமைக்கும், திரு சார்லஸூக்குச் சொன்ன அருமையான விளக்கத்திற்கும் நன்றி.

Jayadev Das said...

\\ஒரு மூன்றாவது ஆள் இந்த நிகழ்ச்சியை பார்த்தால், எந்த மகிழ்ச்சியையும் அது கொடுக்க போகிறதில்லை.\\ இது வெறும் பாடல்களோடு முடிந்து போகும் சங்கதியல்ல. யார் அடுத்த ரவுண்டுக்கு போவாங்க, யார் வெளியேறுவாங்க, யாரு பைனலுக்கு வருவாங்க, யார் முதல் பரிசு வாங்குவாங்க என்று குதிரை ரேஸ் அல்லது கிரிக்கெட் மாதிரி இதையும் ஒரு சூதாட்டமாக்கி [பணம் கட்டி ஆடவிட்டாலும்] விடுகிறார்கள். லட்சக் கணக்கில் வரும் SMS களே இதற்க்குச் சாட்சி. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அறிமுகம்/சொந்தங்களாக இருக்கக் கூடும்.

\\Is there any way to convert mp3 to track format audio(original)?\\

கலர் ஃபோட்டோவை black & white ஜெராக்ஸ் எடுத்த பின்னாடி அதை வைத்து மீண்டும் ஒரிஜினல் கலர் படமாக கொண்டு வர முடியுமா? [ இதுக்கும் Nice comparison, Good explanation அப்பிடின்னு பாராட்டிடுய்யா........ இல்லாட்டி நான் தாங்க மாட்டேன். கண்டிப்பா...... நீ பாராட்டுவே....... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.........!!]

Amudhavan said...

சார்லஸ் said...
\\எல்லா இசையமைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . \\
சார்லஸ், நான் இந்தக் கட்டுரையை இங்கே எழுதுவதற்கான அடிநாதமே இந்த இடம்தான். அதிலும் குறிப்பாக இணையத்தில் மட்டும் புழங்குபவர்களில் பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் இசை என்றாலேயே குறிப்பிட்ட ஒருவர் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள். அவரிடமிருந்துதான் இன்றைய இசையே உற்பத்தியானது, அவரிடமிருந்து மட்டும்தான் இசை பெருகி வருகிறது, இந்தத் தலைமுறைக்கு இசையைக் கற்பித்தவரே அவர்தான், அவரே பிதாமகன் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லையெனில் நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வதுபோல 'நாங்கள் எல்லாரையும் உயர்வாகத்தான் நினைக்கிறோம், அவரை மற்றவர்களைவிட அதிக உயரத்தில் வைத்து நினைக்கிறோம்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறீர்கள் இல்லையா? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்ன நடக்கவேண்டும்? அவருடைய பாடல்களில் ஆரம்பிக்கப்பட்டு, அவருடைய பாடல்களில் தொடர்ந்து, அவருடைய பாடல்களில் உயரம் தாண்டுதல் நிகழ்ந்து , அவருடைய பாடல்களில் சிகரம் தொடுகிறார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்?
இங்கு பார்த்தால், அதுவும் அந்த டிவியே அறிவித்திருப்பதுபோல் இதுவரை ஓட்டளித்திவர்களின் எண்ணிக்கை மட்டும் நாற்பத்துமூன்று லட்சத்துச் சொச்சமாம்.(ஜெயதேவ் சொல்லுவது போல 'ஆடுகளின்' எண்ணிக்கை) இதுமட்டும் இப்படியென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை சர்வசாதாரணமாகக் கோடியைத் தொடும். அப்படிக் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் இந்த இசை நிகழ்ச்சியில் நீங்கள் சொல்லும் அந்த ஒருவர் ஒரு ஓரத்தில் 'அவரும் இருக்கிறார்' என்ற அளவிலேயே இத்தனைப் பெரிய நிகழ்ச்சியை வருடக்கணக்கில் நடத்த முடியும் என்றால் அதன் நிதர்சனம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறதா என்பதுதான். இங்கு யார்யாருக்கு என்னென்ன முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமோ அந்த முக்கியத்துவம் வழங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்திக்காட்டிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த நிகழ்ச்சி சொல்லும் சேதி என்பதுதான் தகவல்.

சார்லஸ் said...

ஏலியன் அவர்களே

காசுக்காகத்தான் எல்லா கலைகளும் இங்கு விற்கப்பட்டுக் கொண்டிருகின்றன என்பது தெரிந்ததே! விஜய் டி வி யும் அதைதான் செய்கிறது. அது ஒரு மறுபக்கம் . அதை விடுத்து இந்த நிகழ்ச்சி தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சியே ! திறமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது; உழைப்பின் அவசியம் புரிய வைக்கப்படுகிறது; இசையின் அடிப்படை உணர்த்தப்படுகிறது. ஒரு துறையில் இவ்வளவு விஷயங்கள் காட்டப்படும்போது மற்ற துறையிலும் முன்னேற எவ்வளவு திறன், உழைப்பு , காலம் அவசியம் என்ற நேர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

ஒருவரை ஒருவர் பாராட்டுவதும் வாழ்த்துவதும் நட்புறவில் மகிழ்வதும் கலாய்த்துக் கொள்வதும் விமர்சனங்களை எளிதாக எடுத்துக் கொள்வதும் இது போன்ற சொல்ல மறந்த இன்னும் பல விசயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் . வெறும் இசை நிகழ்ச்சியாக நான் பார்ப்பது கிடையாது .


நினைக்க மறந்த இசை வல்லுனர்கள் உயிரூட்டப்படுவதும் , ரசிக்க
மறந்த இசைக் குவியல்கள் கொட்டப்படுவதும் , ருசிக்கத் தவறிய பாடல்கள் பாடப்படுவதும் இந்த நிகழ்ச்சியின் முத்திரை . நாடகம், வணிகம், ஏமாற்று, சாதியம் , சம்பாத்தியம் என்ற குழந்தைகள் அறியாத ஒரு உலகத்திற்குள் மட்டுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேறு உலகத்தை அதில் பார்க்கிறேன்.



sekar said...

மோகன்லால் நடத்திய இசை நிகழ்ச்சி தங்களைத் திருப்திப்படுத்தவில்லை என்று நடந்த போராட்டத்திக்குப் பிறகு நிகழ்ச்சி நடத்தத் தான் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார்.
..........................................................................................................................................................
இளையராஜா இசையமைத்த 35% பாடல்கள் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தரக்குறையுடன் சந்தைப்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற வருவாயை திருப்பித் தராவிட்டாலும் பரவில்லை தன் ரசிகர்களை ஏமாளிகளாக நினைக்கவேண்டாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

Anonymous said...

//இது வெறும் பாடல்களோடு முடிந்து போகும் சங்கதியல்ல. யார் அடுத்த ரவுண்டுக்கு போவாங்க, யார் வெளியேறுவாங்க, யாரு பைனலுக்கு வருவாங்க, யார் முதல் பரிசு வாங்குவாங்க என்று... //

இந்தியா கலந்து கொள்ளாத உலககோப்பை போட்டியை பார்ப்பது போல.
யார் ஜெயித்தால், யார் வெளியேறினால், யார் முதல் பரிசு வாங்கினால் நமக்கென்ன. இது தான் என்னுடைய கருத்து. நீங்கள் சொல்வது போல் இலட்சகணக்கான பேர் பார்க்கிறார்கள் தான். அவர்களை பற்றி No Comments. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்ச்சியை பார்த்து (மூன்றாவது நபருக்கு) ஒரு மணி நேரத்தை வீணடிப்பது முட்டாள் தனம்.

//கலர் ஃபோட்டோவை black & white ஜெராக்ஸ் எடுத்த பின்னாடி அதை வைத்து மீண்டும் ஒரிஜினல் கலர் படமாக கொண்டு வர முடியுமா?//

சூப்பர் ஜெயதேவ். இது தான் தாஸின் டச்.
நம்ம நினைக்காதது அல்லது முடியாது என்று நினைக்கிற விஷயமெல்லாம், already உலகத்தில மற்றும் இணையத்தில இருக்கிறது அல்லவா? அப்படி இந்த track மாற்றுகிற விஷயம் ஓன்று இருந்து, நமக்கு தெரியாமல் போய்விடக்கூடாதே , அதனால் தான் கேட்டேன்.

சகாதேவன் said...

சூப்பர் சிங்கர் பற்றிய உங்கள் கருத்துக்கள் நானும் எண்ணியதுதான். உங்களைப் போல் அழகாக எழுத முடியாது. அபஸ்வரம் ராம்ஜியின் இசை நிகழ்ச்சி நெல்லையில் எங்கள் ரோட்டரி க்ளப்க்கு நிதி திரட்டுவதற்காக 1981ல் நடத்தினோம். "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.." டி.எம்.எஸ் பாடிய, எம்.எஸ்.வியின் கிருஷ்ண கானம் தொகுப்பின் முதல் பாட்டுடன் தொடங்கியது. அன்று பாடிய யாருமே பின்னணி பாடகர்கள் இல்லை. சபா நிறைந்த அந்த கச்சேரி மறக்க முடியாதது.

Amudhavan said...

சகாதேவன், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

காரிகன் said...

உங்கள் பதிவை ஒட்டிய மற்றொரு கட்டுரை. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிபற்றி.

http://inioru.com/44805/super-singer-junior/

Anonymous said...

சேகர் / காரிகன்,

ஒரு கேள்வி உங்களிடம்.

YouTube இல் இருக்கிற 720p / 1080p (HD Quality) வீடியோ வில் உள்ள ஆடியோ Original Track Format Audio தானா?

sekar said...
This comment has been removed by the author.
காரிகன் said...

ஏலியன்,

யூ ட்யூப் ஆடியோ compressed செய்யப்பட்ட ஒன்றுதான். இது AAC எனப்படும் Advanced Audio Coding வகையைச் சார்ந்தது . பொதுவாக இந்த AAC format தான் யு ட்யூபின் அடிப்படை ஆடியோ தரம். இது எம் பி 3யை விட மேலானது. தரம் உயர்ந்தது. 720p, 1080p வகை வீடியோக்களின் இசையும் இதே AAC தான். original audio வா என்று கேட்டால் இல்லை என்று தோன்றுகிறது. எந்த ஆடியோவையும் யு ட்யூப் தளம் compressed செய்ததுதான் ஏற்றுக்கொள்கிறது.

எனக்குத் தெரிந்தது இதுதான். தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு உங்கள் கேள்விக்கு ஆம் என்ற பதில் சாத்தியப்பட்டால் அதனை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

Anonymous said...

நன்றி காரிகன்.
I shall try to hear from YouTube instead of mp3 whenever possible.
It was entirely new information for me. I didn't know the real flavour of mp3.

Big Thanks to Amudhavan Sir for this post.

Ranjani Narayanan said...

உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பிக்க பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.

Anonymous said...

இந்த மாதிரி சின்னக் குழந்தைகளை வைத்து டிவியில் போட்டி நடத்துவதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டவைதான் ஹங்கர் கேம்ஸ் நாவல் வரிசை. இத்துடன் அழகிப்போட்டிகள், மாடலிங், காஸ்மெட்டிக்ஸ் இன்டஸ்ட்ரிகளின் மீதான விமர்சனமாகவும் கொள்ளலாம். இவற்றில் 24 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனித்தீவு ஒன்றில் விடப்படுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொல்ல, கடைசியில் எஞ்சுபவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இவை அப்படியே லைவ் ஆக டிவியில் ஒளிபரப்பாகும். இதெல்லாம் நடப்பது வருங்காலத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சியில். பிறகு அந்த ஆட்சியாளர்கள் கடைசி பாகத்தில் வீழ்த்தப்படுவார்கள்.

இந்தப்புத்தகங்களின் பிடிஎஃப் மற்றும் ஆடியோ வடிவங்கள் (சட்டபூர்வமாகவே) இலவசமாக இணையத்தில் உள்ளன. திரைப்படமாகவும் இதுவரை முதல் 2 பாகங்கள் வந்திருக்கின்றன.

சரவணன்

Post a Comment