Tuesday, July 22, 2014

சிவாஜிகணேசன் யார்?




சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம் அது. அவர் வெளிநாட்டிலோ, குறைந்தபட்சம் இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் சிவாஜி எந்த இடத்திலோ வைத்துக் கொண்டாடப்பட்டிருப்பார். அது சிவாஜிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்திருக்கும் என்று.

சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார்.

அது சிவாஜி.

இப்போது சிவாஜியா எம்ஜிஆரா என்ற கேள்வி வருகிறது.

“எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு.

மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு சிவாஜி விஷயத்தை மட்டும் பார்க்கும்போது சிவாஜி கணேசன் யார் என்பதையே இன்னமும் பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது. எத்தனையோ நடிகர்களில் இவரையும் ஒருவராக மக்கள் எண்ணிவிட்டார்களோ என்றே படுகிறது.

எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பிவந்து எம்ஜிஆரின் சமாதியில் இன்னமும் அவர் கட்டியிருந்த கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலி கேட்கிறதா என்று காதுகளை வைத்து கேட்டுச்செல்லும் கூட்டத்திற்கு சிவாஜிகணேசன் தேவையில்லை என்பது புரிந்துகொள்ளமுடிந்ததுதான்.

ஆனால் அவர்களை விடவும் மேம்பட்டு சமூகத்தின் சில விதிகளை நிர்ணயிக்கப் பிறந்தவர்கள்-
நம்முடைய பாரம்பர்யத்தையும் கலைகளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் அடையாளப்படுத்த இருப்பவர்கள்-

வரலாற்றைப் பேணிக்காத்து தொகுத்தளிப்பவர்கள்………………….. போன்ற மேல்நிலை மக்களுக்கும் சிவாஜி என்பவர் ‘மேலும் ஒரு நடிகர்’ மட்டும்தானா, திரையுலகில் வந்து போட்ட வேடத்தை நடித்துக்கொடுத்துவிட்டு சம்பாத்தியம் வாங்கிக்கொண்டு சென்றவர்தானா –

இப்படித்தான் சிவாஜியைப் பற்றி நினைக்கிறார்களா? என்பது உண்மையிலேயே புரியவில்லை.


சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், 

சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம், 

சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன், 

சிவாஜி நடிப்புலகின் டிக்ஷனரி, 

தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை. 

‘அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.

பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.

கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).

 மற்ற மாநிலங்களில் முத்துராமன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால்.

தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.


சிவாஜியும் கண்ணதாசனும் எவ்வளவு பெரிய கலைஞர்கள்………….”கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்…………………………! 
பெரிய கவிஞர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் மக்கள் அபிமானம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. உங்கள் கண்ணதாசன் மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர். 

அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது.
 கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை.

சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

சிவாஜிக்கு அந்த சிலையாவது அமைத்தார். கண்ணதாசனுக்கு எதையுமே அவர் செய்யவில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.


சிவாஜி என்பவர் திரைப்பட உலகிற்குக் கிடைத்த எத்தனையோ நடிகர்களில் ஒருவர் அல்ல.

சில கலைஞர்கள் உருவாகிறார்கள்.

சில கலைஞர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

சிலர் மட்டுமே தோன்றுகிறார்கள்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல;  திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன்.


சிவாஜிக்கு அடுத்து சிறந்த நடிகராகப் போற்றப்படும் கமலஹாசனை வைத்தே இதற்கான உதாரணத்தைச் சொல்லலாம்.

ஏனெனில் இன்றைய இளையதலைமுறை முற்று முழுதாக அறிந்த ஒரு நடிகர் கமலஹாசன்.

கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்றுவரை நடித்துவருபவர். ஒரு ஐம்பது அறுபது படங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகச்சிறந்த இயக்குநர்களின் கைகளுக்குச் சென்ற பின்னர்தான்-

பாலச்சந்தரால் பலமுறை புடம் போடப்பட்டு,

பாரதிராஜாவால் மிக அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டு,

மணிரத்தினத்தினால் சிறந்த தொழில்நுட்பமும் அழகிய திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டு திரும்பத் திரும்ப செதுக்கப்பட்ட பின்னரே அவரால் தம்மை ஒரு ‘சிறந்த நடிகராக’ நிலைநிறுத்திக்கொள்ளவும், மற்றவர்களைத் தம்மைப் பற்றிப் பேச வைக்கவும் முடிகிறது. அதற்கு முன்னால் கமல் நடித்த பல படங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.

 பெரிய நடிகராகவும், குறிப்பிட்ட நடிகராகவும் கமல் வந்தபிறகு தன்னை மிகுதியான அளவிலே செதுக்கிக்கொண்டார் என்பதும் புடம் போட்டுக்கொண்டார் என்பதும் உண்மைதான்.

 ஆனால் படங்களில் ஒரு புதுமையைச் செய்யவேண்டும் என்று நினைத்தாலோ, புதுமையான பாத்திரத்தில் தோன்ற வேண்டும் என்று நினைத்தாலோ அவருக்கு இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன.

முற்றிலும் புதுமையான ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும் என்று கமல் 
விரும்பினாரென்றால் உடனடியாக ஒரு ஐம்பது, ஏன்? இருநூறு டிவிடிக்களைப் பார்த்து ஒவ்வொரு காட்சியும் இப்படித்தான் இருக்கவேண்டும் இந்தக் காட்சியையே இப்படி வைத்துக்கொள்ளலாம். அல்லது, இந்தக் காட்சியில் இப்படி வைத்துக்கொள்ளலாம், இந்தக் காட்சியை இப்படிச் மாற்றிக் கொள்ளலாம், இந்த சீனை இப்படி வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் செப்பனிட்டு அழகுபடுத்தி முடிவெடுக்கும் வசதிகள் பெருகிவிட்டன.

மேக்கப் முதற்கொண்டு அத்தனை சினிமா உபகரணங்களையும் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் வசதி வந்துவிட்டது.

அதற்கான தொழில் நுட்பக்கலைஞர்களையும் அங்கிருந்தே கூட்டிவந்து எத்தனைச் செலவானாலும் ஏற்றுக்கொண்டு கமலால் அல்லது இன்னொரு நடிகரால் இந்த இடத்தை மிகமிகப் பிரமாதமாய் பூர்த்திசெய்துவிட முடிகிறது.

அதுமட்டுமல்ல, அப்படிச் செய்து ‘எடுக்கப்பட்ட’ படத்தை உடனடியாக அந்த இடத்திலேயே அப்போதேயே ரிகர்சல் பார்த்து சரியாக வரவில்லையென்றால் உடனே மறுபடியும் தான் நினைத்தமாதிரி உருவாக்கிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதனால் பார்க்கிறவர்களை ‘வியக்கவைக்கும்’ அளவுக்கு திரும்பத் திரும்ப வரும்வரைக்கும் அவர்களால் அதனைப் படமாக்கமுடியும்.

ஆனால் சிவாஜியின் காலம் அதுவல்ல.


நாடக மேடை………….. நாடக மேடையிலிருந்து நேரடியாக திரைப்பட உலகம் என்றிருந்த காலம்.


நாடக மேடையின் கருத்துருவாக்கம் என்பது தாங்கள் கேட்ட நாடோடிக் கதைகளிலிருந்தும் புராண இதிகாசங்களிலிருந்தும் ராஜா ராணி கதைகளிலிருந்தும் பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொண்டு அதற்கேற்ப படைப்புக்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலம்.


சமூக நாடகங்களுக்கான காட்சிகளும் கருப்பொருள்களும் அந்தந்த வட்டத்துக்குள்ளேயே உருவாகிக்கொண்டிருந்த காலம்தான் அது.


அந்தக் காலத்தின் சொற்ப நீட்சியிலேயே வந்து நடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது தலைமுறையில் வருகிறவர் சிவாஜி.

சிவாஜியின் காலத்தில் சினிமா என்பது ஏறக்குறைய ஒரு முழு வடிவத்தை அடைந்துவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதனை மேலும் மேலும் மெருகேற்றி மக்கள் வியப்புறும் கலையாக கொண்டுசெல்லும்  பெரும் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டிய தோள்களாக சிவாஜியின் தோள்களும் இருக்கின்றன.

சிவாஜிக்கு சமமாக இந்திப் படவுலகில் திலீப்குமார், ராஜ்கபூர், குருதத் போன்றவர்களும், தெற்கில் நாகேஸ்வரராவ், சத்யன், ராஜ்குமார் போன்றவர்களும் இருந்தார்கள் என்றாலும் இவருடைய நடிப்பின் ‘வீச்சுக்களுக்கு’ அவர்கள் என்றைக்குமே மிகப்பெரும் ரசிகர்களாகவும், 
வியப்பெய்தியவர்களாகவும் பல சமயங்களில் இவரைப் புகழ்ந்துரைத்தவர்களாகவும் இவரை அண்ணாந்து பார்த்தவர்களாகவும்தான்  இருந்திருக்கிறார்கள். 

பல சமயங்களில் ‘இவர் நடித்த வேடங்களை ஏற்க முடியாது; அந்த அளவு எங்களால் நடிக்கமுடியாது’ என்று பத்திரிகைகளிலேயே அந்த மிகப்பெரும் நடிகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் உண்டு. தவிர-

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

புராண இதிகாசப் பாத்திரங்கள், ராஜா ராணி பாத்திரங்களுக்கு அன்றைக்கு சிவாஜிக்கு முன்னோடியாக அவருக்கு முன்பிருந்த நாடக நடிகர்கள் இருந்தார்கள் என்பதை ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அந்த நாடக நடிகர்கள் அவர்கள் நாடகங்களில் செய்ததெல்லாம் அந்த வேடத்தைப் போட்டுக்கொண்டு தோன்றுவதும், பாடல்கள் பாடிவிட்டுப் போவதும்தான்.

இவைமட்டுமே அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது. 

சிவாஜி வருகிறார்.

முகபாவனைகளைக் கொண்டு வருகிறார்.

‘பாடி லாங்க்வேஜ்’ என்று சொல்லப்படும் ‘உடல் மொழியை’ எல்லாப் பாத்திரங்களிலும் கொண்டுவருகிறார்.

பேசும் வார்த்தைகளில் ஏற்றத் தாழ்வுகளையும், உச்சரிப்பில் வேறு வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வித்தியாசங்களைக் கொண்டுவருகிறார்.

நடை உடை பாவனைகளில் உயிர்ப்பைக் கொண்டுவருகிறார்.

 நவரச பாவங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் கண்களில் மட்டுமே காட்டமுடியும் என்ற சினிமாவுக்கான சேதியையும் கொண்டுவருகிறார்.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய்-

ஒரு பரிபூரணக் கலைஞராய்த் தம்மை நிலைநிறுத்திக்கொண்டுவிடுகிறார்.

எல்லாவித உணர்வுகளையும்….. அது சோகமாய் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி, 

வலியாய் இருந்தாலும், வேதனையாய் இருந்தாலும் சரி-

அதனை உணர்ந்து உள்வாங்கி உள்வாங்கியதை நுட்பமாக வெளிப்படுத்தும் திறமையும் கலையும் 
அவரிடம் இருந்தது.

படைப்பாற்றலின் வலியோடு அவர் எப்போதும் வாழ்ந்துவந்தவர் என்பதை அவர் நடிக்கும் சோகக் காட்சிகளிலிருந்து அறிய முடியும்.


அவலத்தின் அத்தனை வலிகளையும் தன்னுள் ஏற்று நடித்த நடிகர் அவர்.


அதனால்தான் உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜிகணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுத மனிதர்கள் மிகமிக அதிகம்.

மக்களை சுலபமாக வசீகரிக்கும் சூத்திரங்களையும், முட்டாளாய் அடிக்கும் தந்திரங்களையும் கற்றுக்கொண்டு அதனை மக்களிடம் பிரயோகித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தவரல்ல அவர்.

படைப்பின் வலிகளை எப்போதுமே சுமந்துகொண்டிருக்கத்  தயாராய் இருந்தவர். 

அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறான பாத்திரங்கள்,

வெவ்வேறான கதைக்களன்கள்,

வெவ்வேறான சூழல்கள் என்று தேடித் தேடி நடித்துக்கொண்டே இருக்க முடிந்தது அவரால்.
வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது.


வசன உச்சரிப்பு என்பது வாயைத் திறந்து வெறுமனே சேதி சொல்லுவது அல்ல என்பதை முதன் முதலாக தமிழர்கள் மூலம் இந்தியத் திரைக்கு அழுத்தம் திருத்தமாக அறிவித்தவர் சிவாஜிதான்.


தாய்மொழியை அதன் சரியான அர்த்தபாவங்களோடு, சரியான உச்சரிப்பு வேறுபாடுகளோடு அதன் கம்பீரம், அழகு இவையெல்லாம் கெடாமல் திரைக்குக் கொண்டுவந்திருக்கும் நடிப்புக்கலைஞர்கள்-

சிவாஜியைத் தவிர எத்தனைப்பேர் இருக்கக்கூடும்?

பாத்திரங்களைத் தத்ரூபமாகப் படைத்துக்காட்டும் எத்தனையோ நடிகர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் போலவே அவர்களால் வாழ்ந்துகாட்ட முடியும். 

ஆனால் தாய்மொழியைக்கூட சரிவர உச்சரிக்க முடியாது அவர்களால்.

நடிப்பை மறைத்துவிட்டு அவர்கள் பேசும் மொழியை மட்டும் கேட்டால் அவர்கள் பேசுகிறார்களா அழுகிறார்களா என்பது தெரியாது.

ஒன்று, குரலில் எந்தவித பாவங்களும் இருக்காது.

அல்லது வேண்டிய அளவில் அந்த பாவங்கள் அங்கே வெளிப்பட்டிருக்காது.

ஆனால்

நவரசத்தில் எத்தனை பாவங்கள் உள்ளனவோ அவை அத்தனையையும் பேச்சிலும் அதன் உச்சரிப்பிலும் கொண்டுவந்தவர் சிவாஜி.

அழுகையின் ஜீவனாகட்டும், 

உறவுகளின் நெகிழ்ச்சியாகட்டும், 

வலியின் வேதனையாகட்டும்,

ஆனந்தத்தின் சிதறலாகட்டும், 

பாசத்தின் துடிப்பாகட்டும், 

வீரத்தின் கூர்மையாகட்டும், 

வெற்றியின் ஓங்காரமாகட்டும், 

எஜமானின் மிரட்டலாகட்டும், 

அடிமைகளின் குழைவாகட்டும், 

நகைச்சுவையின் மதுரமாகட்டும், 

அரசனுக்கேயுரிய ராஜ கம்பீரமாகட்டும்-


அத்தனையையும் குரலிலேயே  கொண்டுவந்த மகா கலைஞன் உலகத் திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.


எத்தனை எத்தனை உணர்ச்சிகள் உள்ளனவோ அத்தனை உணர்ச்சிகளையும் அந்த 

உணர்ச்சிகளுக்கேயுரிய ஒலிக்குறிப்புகளுடன்,


ஏற்ற இறக்கங்களுடன்,


நேர வித்தியாசங்களுடன்,


சிறப்புத் தொனிகளுடன் வெளிப்படுத்தும் நுணுக்கம் அந்த மகா கலைஞனுக்கு மட்டுமே சொந்தம்.

அதனால்தான் பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா, ராஜாராணி, மக்களைப் பெற்ற மகராசி, தெனாலிராமன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, பலே பாண்டியா, சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், பாலும்பழமும், கர்ணன், கைகொடுத்த தெய்வம், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ராஜபார்ட் ரங்கதுரை, நவராத்திரி, வசந்த மாளிகை, வியட்நாம் வீடு, என்று தங்கப்பதக்கம் வரையிலும் வசன ராஜாங்கத்தை விதவிதமாக நடத்த அவரால் முடிந்தது.

இந்தப் படங்களின் வசன உச்சரிப்புகளைக் கேட்கும்போதுதான் ஒரு மனிதனால், ஒரு கலைஞனால் இப்படியெல்லாம் ஒரு மொழியை உச்சரிக்க முடியுமா என்ற வியப்பு மேலிடுகிறது.

இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர 

யாருமே இல்லை.


எங்குமே இல்லை.


எந்த மொழியிலும் இல்லை.


இதற்காக சிவாஜிக்கு இத்தகைய வசனங்களை எழுதித்தந்தவர்களையும் நாம் இங்கு நன்றியுடன் நினைவு கூரவேண்டியவர்களாக இருக்கிறோம்.

கலைஞர் கருணாநிதி, சக்திகிருஷ்ணசாமி, ஏஎஸ்ஏ சாமி, ஏபிநாகராஜன், ஸ்ரீதர், கேஎஸ்கோபாலகிருஷ்ணன், எம்எஸ்சோலைமலை, ஆரூர் தாஸ், பாலமுருகன், மல்லியம் ராஜகோபால், வியட்நாம்வீடு சுந்தரம், என்று தங்கப்பதக்கம் மகேந்திரன்வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

வசன உச்சரிப்புக்கு அடுத்து பாடலுக்கு வாயசைப்பு.

நடித்தவர்களே பாடிக்கொண்டிருந்த காலம்போய் பின்னணிக்குரல் ஆரம்பித்தபிறகு பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப வாயசைத்தவர்கள் சிவாஜிக்கு இணையாக யாருமே இல்லை.
ஆரம்பத்தில் சில பாடல்களுக்கு சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு வாயசைத்ததும், மிகவும் பிற்காலத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கும், யேசுதாஸ் மலேசியா வாசுதேவன் குரல்களுக்கும் வாயசைத்ததையும் நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் டிஎம்சௌந்தரராஜனின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.

அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம்.
இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது.

பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்.,

கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும்.

பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கண்ணதாசனின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும்.


பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும்.


இம்மாதிரியான பல நுணுக்கங்கள் வெகுஜன பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை.


ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு அந்தப் பாத்திரமாகவே மாறி அந்தப் பாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் திருப்பங்கள், உணர்வுகள், சின்னச்சின்ன அசைவுகள், நினைத்த மாத்திரத்தில் கோபம், அழுகை, சிரிப்பு, பாசம், மகிழ்ச்சி என்று மட்டுமல்லாது அந்தப் பாத்திரத்திற்கான பண்புகள் எத்தனை உள்ளனவோ அவை அத்தனையையும் கொண்டுவந்த நடிகன் இவருக்கு முன்பு தமிழ்த்திரையுலகில் யாரும் இல்லை.

தில்லானா மோகனாம்பாளில் ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வேடமாகட்டும்,

காவல் தெய்வத்தில் மரமேறி வேடமாகட்டும்,

மிருதங்கக் கலைஞனுடைய வேடமாகட்டும்,

டாக்டர் வேடமாகட்டும்,

அரசன் வேடமாகட்டும்,

சரித்திர வீரர்களின் வேடமாகட்டும்,

பிச்சைக்காரன்- பைத்தியக்காரன் வேடமாகட்டும்,

அந்த வேடங்களுக்குரிய துல்லியமான பண்புகளை உடல் மொழியிலும் முகத்திலும் பேச்சிலும் கொண்டுவந்தவன் அந்தக் கலைஞன்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதற்கான விளக்கத்தை இந்தக் கலைஞனின் ஒரு படத்திலிருந்து பார்க்கமுடியும்.

புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல். சௌகார் ஜானகி மேடையில் ஆடிக்கொண்டு பாடலைப் பாடிக்கொண்டிருக்க இவர் ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து கையில் சிகரெட் புகைய பாடலைப் பார்த்தபடி இருப்பார். அவ்வளவுதான்.

கவனியுங்கள்…………..வேறு எந்த நடிப்பும் இல்லை.

ஆனால் இவர் அந்த சிகரெட்டை இழுத்து இழுத்து வெளியேற்றும் ‘புகை வளையங்கள்தாம்’ அந்தக் காட்சி மொத்தத்துக்கும் ‘நடிக்கும்’.

ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு விதமான ‘நடையை’ நடந்துகாட்டிய நடிகனும் இவரைப்போல யாருமே இல்லை.


பாகப்பிரிவினையில் ஒரு நடை,

திருவிளையாடலில் ஒரு நடை,

ஆலயமணியில் ஒரு நடை,

பாலும் பழமும் படத்தில் ஒரு நடை,

பாபு படத்தில் ஒரு நடை,

உயர்ந்த மனிதனில் ஒரு நடை,

பார்த்தால் பசிதீரும் படத்தில் ஒரு நடை, என்று நடக்கும் நடையில் இத்தனை வித்தியாசங்களைக் காட்டியிருக்கக்கூடிய நடிகர்கள் நமக்குத் தெரிந்து எங்குமே யாருமே இல்லை.

கர்ணன் படத்தில் தேவிகாவின் ‘கண்ணுக்குக் குலமேது’ பாடல் ஆரம்பத்தின் போது, அங்கிருந்து அப்படியே வந்து அரியாசனத்தில் அமர்வதற்காக ஒரு நடை நடந்துவருவார் பாருங்கள்…………அப்படியே அள்ளும்.

அந்தக் கம்பீரத்திற்கு ஈடு இணையே கிடையாது.

நமக்கு முன்னே வாழ்ந்து காட்டிய மனிதர்களை அப்படியே தத்ரூபமாக கொண்டுவருவதற்கு அசாத்திய திறமை வேண்டும்.

அலெக்சாண்டர், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வரலாற்று மனிதர்களைக்கூடக் கொஞ்சம் கூட்டிக் குறைத்து செய்துகொள்ளலாம்.
ஆனால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற பாத்திரங்களை அப்படியே திரையில் கொண்டுவருதல் எளிதல்ல. நமக்கு சற்று முன்னால் வாழ்ந்த மனிதர்களின் வேடங்களையும் ஏற்றுச் செய்யும் தைரியம் அவருக்கு இருந்தது. அந்தப் படம் வெளிவந்ததும் படத்தைப் பார்த்த வ.உ.சி குடும்பத்தினர் “அப்படியே அப்பாவைப் பார்த்தோம்” என்று தியேட்டரிலேயே அழுததுதான் சிவாஜியின் முத்திரை.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் போது உணர்வுபூர்வமான நீண்ட வசனங்களை மூச்சுவிடாமல் பேசிவிட்டு கிரீன் ரூமுக்கு வரும் அவர், வந்ததும்  தொண்டை பாதிக்கப்பட்டு இருமி ரத்தம் கக்குவார் என்றும்-


வெந்நீரில் வாய் கொப்பளித்துக்கொண்டு அடுத்த காட்சிக்குச் செல்ல தயாராகிவிடுவார் என்றும் சொல்வார்கள்.


இந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் சிவாஜியை உச்சத்தில் நிறுத்தியிருந்தன.


ஒரு நடிப்புக் கலைஞன் என்பவன் எப்போதும் புதிய புதிய சோதனைகள் செய்துபார்க்கத் தயாராக இருக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தைத் திரையுலகில் கொண்டுவந்தவர் சிவாஜிதான்.

எத்தனை எத்தனைப் பாத்திரங்கள்….. அத்தனைக்குள்ளும் சர்வசாதாரணமாகப் புகுந்து வெவ்வேறு பரிமாணங்களை அந்தப் பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்துவதன் மூலம் பாத்திரங்களை வடிவமைக்கும்  சாமர்த்தியத்தை-

ஒரு கலை வடிவமாகவே ஆக்கிக்காட்டியவர் அவர்தான்.

எத்தனை உச்சத்தில் இருந்தபோதும் பாத்திரத்தின் தன்மையைத் தன்னுடைய இமேஜூடன் பொருத்திப் பார்த்து போலிப் பகட்டுகள் செய்துகொள்ள அவர் என்றுமே தயாராக இருந்ததில்லை.

எத்தனை அவலட்சண மேக்கப்பும் போட்டுக்கொண்டு நடிப்பார். இமேஜ் பற்றிய கவலை அவருக்கு இருந்ததில்லை. அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்…..

எத்தனை மகத்தான மனிதர் இவர்!

சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபு சிவாஜியின் கன்னத்தில் அறைய வேண்டிய காட்சி. “அப்படியே எடுங்க” என்று சொல்லிவிட்டார். கன்னத்தில் அறைவது என்று காட்சி இருந்தால் ‘அறைவதுபோல் நடிப்பது’ என்ற வரையறையெல்லாம் சந்திரபாபுவிடம் இருக்காது என்பதையும் நிஜமாகவே அறைவார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் நாம்.

இதேபோன்று பத்மினியிடம் அடி வாங்குவதுபோல் அமைந்த ஒரு காட்சியிலும் எந்தவித இமேஜையும் பார்க்காமல் நடித்தவர் சிவாஜி என்பதைப் புரிந்துகொண்டால்தான் எந்த நிலையிலும் திரைக்கு வெளியே தமக்கு ஏற்பட்டிருந்த புகழையும் செல்வாக்கையும் அவர் நடிப்புக்குள்ளே கொண்டுவந்து அலட்டிக்கொண்டதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

தன்னுடைய திறமை என்னவோ அதனை இந்த சமூகம் பயன்பெறுகிற முறையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் கடமைதான் ஒரு கலைஞனுடையது. இதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததோடு மட்டுமின்றி இதற்கு அப்பாற்பட்டுத் தன்னைக் கொண்டாடும்  சமூகத்திற்குத் தன்னுடைய கடமைகள் என்ற அளவில் நிறைய பொருளுதவிகளையும் செய்துகொண்டிருந்தவர் சிவாஜி.

கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலை சிவாஜியால் அமைக்கப்பட்டதுதான். பெங்களூரில் நாடகங்களுக்காகவென்று கட்டப்பட்ட ரவீந்திர கலாக்ஷேத்திரம் சிவாஜி நாடகம் நடத்திக்கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதுதான்.

சீனப்போரின்போது மிகப்பெரிய தொகையை நிதியாக வழங்கியதுடன் எல்லையோரத்தில் இருக்கும் ஜவான்களை மகிழ்விப்பதற்காக இவர் திரட்டிச்சென்ற கலைக்குழுவும் இன்றைக்கும் பேசப்படும் ஒரு விஷயம்..

சிவாஜியை தமிழின் சிறந்த நடிகராக, அல்லது நடிகர்களின் ‘முன்னோடியாக’ மட்டுமே பார்ப்பது சரியான பார்வையோ முறையான பார்வையோ அல்ல.


தமிழர்களின் கலை அடையாளமாக,


கலாச்சாரத்தின் அடையாளமாக அவரைப் பார்க்கவேண்டும்.


தமிழுக்குக் கலை அடையாளம் யார்? என்பது மிகமிக சாதாரணமான ஒரு கேள்வி.


இதற்கு சிவாஜியைத் தவிர யார் பெயரைச் சொல்லமுடியும்?


வங்கத்தில் அவர்களின் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக சத்யஜித்ரேயைச் சொல்கிறார்கள்.

கர்நாடகத்தில் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக ராஜ்குமாரைச் சொல்கிறார்கள்.
சொல்வதோடு மட்டுமல்ல, ராஜ்குமாரைக் கர்நாடகத்தில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிந்தால் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

ராஜ்குமாரைப் பற்றி கர்நாடகத்தில் எவனும் எந்த மூலையிலும் ஒரு வார்த்தைத் தவறாகப் பேசிவிட முடியாது.


அப்படிப் பேசினால் அவன் உயிரோடு வீட்டுக்குப் போகமுடியாது.

மகாத்மா காந்திக்கு இந்தியாவின் எல்லாப் பெரிய நகரங்களிலும் அவர் பெயரில் சாலைகள் இருப்பதுபோல கர்நாடகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ராஜ்குமார் பெயரில் சாலைகள் உள்ளன.

பல இடங்களில் அவர் பெயரில் நகர்கள் உள்ளன. அவர் சிலைகள் இல்லாத மாவட்டங்கள் இல்லை.

குறைந்தபட்சம் மார்பளவு சிலைகள் எல்லா மாவட்டங்களில் மட்டுமல்ல வட்டங்களில்கூட உண்டு.
இப்படியெல்லாம் கொண்டாடுகிறோமா சிவாஜியை?

யோசிக்கவேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்ட சிலை கூட பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது.

அந்த மகா நடிகனின் புகழ் இன்று கோர்ட்டுகளில் புரளும் சட்ட விதிகளுக்கும், சட்டங்களை அவிழ்த்தெடுத்துவந்து சாலைகளில் பதிய வைத்து மக்களிடையே நடைமுறைப்படுத்தும் காக்கிச் சட்டை மகான்களுக்கும், கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு மாநிலத்தின் எல்லா இயக்கங்களையும் விருப்பம்போல் அசைப்பதற்காக  பொம்மலாட்டக் கயிறுகளாய்த் தன் விரல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தற்கால ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்ப ஊசலாடுவதாக அமைந்து போயிருப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் சோகங்களில் ஒன்று.

இம்மாதிரியான சிக்கல்கள் தமிழனுக்கு மட்டுமேயான சிக்கல்கள். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்துக்காரர்கள், மற்ற இனத்தவர்கள் இம்மாதிரியான பிரச்சினைகளிலெல்லாம் அல்லாடிக்கொண்டிருப்பவர்களாக இல்லை.

மற்றவர்களுக்கெல்லாம் மொழி சார்ந்த, இனம் சார்ந்த, பண்பாடு சார்ந்த, கலை விழுமியங்கள், இலக்கியப் பரிவர்த்தனைகள் சார்ந்த அடிப்படையான எந்த  விஷயங்களிலும்  சிக்கல்கள் வருவதில்லை.

மற்றவர்கள் இதற்காகவெல்லாம் போராடும் தேவை இருப்பதில்லை.
இங்கேதான் தமிழ் நாட்டில்தான், தமிழ் இனத்தில்தான் இம்மாதிரியான பிரச்சினைகளெல்லாம் எழுகின்றன.

காரணம் தமிழனை, தமிழர்களை வழிநடத்துபவர்களாகத் தம்மை வரித்துக்கொண்டு விட்டவர்கள் ஆடும் அழுகுணி ஆட்டங்கள்…

தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள, நினைத்தபடியெல்லாம் ஆட, எவருக்குமே இல்லாத ஏகபோக உரிமை தங்களுக்கு மாத்திரமே- தங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும், தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கிறவரை நம் விருப்பம்போல் ஆட்டிவைக்கலாம்; அடித்துத் துவைக்கலாம், எதை வேண்டுமானாலும் உடைக்கலாம், அகற்றலாம், துடைத்தெடுத்துத் தூக்கி எறியலாம், வேண்டும்போது நட்டு நிறுவலாம் என்றெல்லாம்……………………………………..

இவர்களுக்குள் தோன்றும் தான்தோன்றித்தனமான எண்ணங்கள், தவறான சிந்தனைகள், மனமாச்சரியங்கள், உள்ளுக்குள் கெட்டித்து இறுகிப்போயிருக்கும் அடிமனதின் வெறுப்புக் கசடுகள்தாம் இவற்றுக்கெல்லாம் காரணம்.

கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால் மேலும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தாறுமாறாக மனதில் கிளைபதித்து ஊடுருவிப் போயிருக்கும் ‘தான்’ என்ற ஈகோ. அடுத்தது, 

தன்னுடைய செயல்களால் கோபப்பட்டு தன்னை மக்கள் தோற்கடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அடுத்த முறை நிச்சயமாக அதே இடத்தில் வந்து அமர்ந்து தான் நினைத்ததை முன்னைவிட வேகமாகச் செயல்படுத்தி மகிழலாம் என்ற அசைக்கமுடியாத யதார்த்தம்.

ஒரு ஈடு இணையற்ற கலைஞனைக்கூட ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடாமல் பல்வேறு பேதங்கள் சொல்லி மாய்மாலம் காட்டிப் புறக்கணிக்கும்  ஒரு சமூகத்தை மற்றவன் எப்படி மதிப்பான்?

மத்திய அரசாங்கம் எப்படி மதிக்கும்?

கர்நாடகத்திற்கு ‘பயப்படும்’ டெல்லி தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதன்  ‘மர்மம்’ புரிகிறதா?

தமிழனை எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் பிளவுபடுத்தி அரசியல் குளிர் காயலாம் என்ற ரகசியம் இந்த ஒரு விஷயத்திலேயே அம்பலமாகிறதா இல்லையா?

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாலங்கள்கள் கட்டுவதும், ரேஷன் வழங்குவதும், போக்குவரத்துகளை சரி செய்வதும் மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல.


ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.

இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.

அண்ணாவுக்கு ஆயிரக்கணக்கில் சிலைகள் இருக்கின்றன; பெரியாருக்கு, எம்ஜிஆருக்கு, மற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன.

கலையின் உச்சம் தொட்ட சிவாஜிக்கு திருச்சியில் ஒரு சிலை பல வருடங்களாகத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறதாம்.

சென்னையில் வைத்த சிலையைப் போக்குவரத்துக் காரணம் காட்டி அகற்றப்போகிறார்களாம்.

தமிழ்நாடு ஒரு மகா கலைஞனைக் கொண்டாடும் லட்சணம் இது.

அந்தக் கலைஞனுக்கு மென்மேலும் சிறப்புக்கள் செய்து கொண்டாடாவிட்டாலும் போகிறது. 

அவமானப்படுத்தாமலாவது இருங்கள்.

சிவாஜியைப் பற்றி நடிகர் சிவகுமார் எழுதிய ஒரு புதுக்கவிதை நினைவு வருகிறது. சிவாஜி யார் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கவிதை உதவும்.

பள்ளிப் படிப்பில்லை
பரம்பரைப் பெருமையில்லை
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்……………
ஆயினும்-
கலையுலகின் நாயகியை
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்றுத் திரையுலகில்
வரலாறு படைத்திட்டான்.
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவங்காட்டி
சிங்கக் குரலில்
தீந்தமிழ் வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள்
திரையில் –
அசைகின்ற ஓவியங்கள்……………….
கர்ணனாக கட்டபொம்மனாக
சிவாஜியாக செங்குட்டுவனாக
அரிச்சந்திரனாக அசோகனாக
அப்பராக ஐந்தாம் ஜார்ஜாக
பாரதியாக பொற்கைப் பாண்டியனாக
வ உ சியாக வாஞ்சியாக
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள்.
நடக்கும் நடையில்
நானூறு வகைக் காட்டினான்.
மரமேறிக்கு ஒரு நடை-
மனோகரனுக்கு ஒரு நடை-
சட்டிசுட்டதடா பாடலுக்கு ஒரு நடை-
போனால் போகட்டும் போடாவுக்கு ஒரு நடை-
மொத்தத்தில் நவரசங்களையும் நமக்கு
நவராத்திரியில் காட்டிவிட்டான்
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் - என்று
மானிட வரலாறு தொடர,
சிவாஜிக்கு முன்-
சிவாஜிக்குப் பின் - என்று
தமிழ்த்திரையுலக வரலாறு தொடரும்
வாழ்க சிவாஜி.

31 comments :

வருண் said...

அமுதவன் சார்: சிவாஜியின் பரம ரசிகன் நான். பதிவுலகில் ஒரு சில பெரியவர்கள், திரு அப்பாதுரை, திருமதி கீதா சாம்பசிவம் போன்றவர்கள், எதுக்கெடுத்தாலும் சிவாஜியின் நடிப்பை எதுக்கெடுத்தாலும் எகத்தாளாமப் பேசும்போது, "எல்லாருக்கும் எல்லாரையும் ரசிக்க முடியாது போல" என்கிற உண்மையை திரும்பத் திரும்ப கற்றுள்ளேன்.

மற்றபடி உங்க கட்டுரையை நான் ஆழ்ந்து படிக்கவில்லை!
எனக்குத் தெரிய ஒரு பெரியவர் சொல்லுவார். "நவரசத்தையும் முகத்தில் காட்டத் தெரிந்தவந்தான் முழுமையான நடிகன். அதில் சிறந்தவர் நம்ம நடிகர் திலகம்தான்" என்பது! :)

Yes, we were lucky that he was thamizhan and dravidian! :)

Anonymous said...

கறுப்பு வெள்ளை படங்களோட சிவாஜி நடிக்கிறதை நிறுத்தி இருக்கலாம். கோட்டு சூட்டு போட்டு லாரி டிரைவரா நடிச்சது எல்லாம் ரெம்ப கொடுமை

Amudhavan said...

வருண் said...
\\மற்றபடி உங்க கட்டுரையை நான் ஆழ்ந்து படிக்கவில்லை!\\
தயவு செய்து கொஞ்சம் நிதானமாய்ப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லுங்கள். நான் எழுதியிருக்கும் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று இது என்றே நினைக்கிறேன்.

Amudhavan said...


Anonymous said...

\\கறுப்பு வெள்ளை படங்களோட சிவாஜி நடிக்கிறதை நிறுத்தி இருக்கலாம். கோட்டு சூட்டு போட்டு லாரி டிரைவரா நடிச்சது எல்லாம் ரெம்ப கொடுமை\\
அதெல்லாம் பிற்காலத்தில் நடைபெற்ற சில குறைபாடுகளாக இருக்கலாம். இவை மட்டுமே ஒரு மாபெரும் கலைஞனைக் குறைவு படுத்திவிடாது. அப்படி அவர் வெறும் கறுப்பு வெள்ளைப் படங்களில் நடித்தபோது நீங்கள் எப்படியெல்லாம் அவரைக் கொண்டாடியிருக்கிறீர்கள் என்பதை முடிந்தால் தெரிவியுங்கள்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

தாங்கள் ஒரு சிவாஜி அபிமானி என்ற அடிப்படையில் இக்கட்டுரை இப்படி இருப்பதில் தவறில்லை, ஆனால் பொதுவாக ஒரு கருத்தாக்கம் என பார்த்தால் மிக அபத்தமான கருத்தாக்கம் கொண்ட கட்டுரை!

குறிப்பு:

மேற்கொண்டு வரும் கருத்துக்கள் ஒவ்வாது எனில் , புறக்கணிக்கவும்! உங்களை வருத்துவது எனது நோக்கமல்ல!

#//சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார்.

அது சிவாஜி.

இப்போது சிவாஜியா எம்ஜிஆரா என்ற கேள்வி வருகிறது.

“எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு.//

வரலாறு முக்கியம் அய்யா, சிவாசிலாம் கேமிரா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கும் முன்னரே "எம்.சி.ஆர்" வெற்றிகரமான நாயகர் ஆகிட்டார், எம்சிஆருக்கு இணையாக ஒருத்தரை கொண்டு வர வேண்டும் என அக்காலத்தில் சிலர் தம் கட்டித்தான் சிவாசியை நிறுத்தினார்கள், பராசக்தி படத்தில் நடிப்பிசை புலவர்.k.a.ராமசாமி நடிப்பதாக அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டு அவரை தூக்கிட்டு தான் சிவாசி இடம் பெற்றார் ,இதன் பின்னால் அப்போதைய திராவிட அரசியலுக்கும் இடமுண்டு, போராடி வாய்ப்பு வாங்கிக்கொடுத்து ஏ.எஸ் சாமி (எஸ்.ஏ ?) போன்றோரை எல்லாம் பின்னாளீல் சிவாசி அலைய விட்டதெல்லாம் வரலாறு :-))

# //தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.//

பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் கூட அதுக்காக கலைஞரை திட்டவா முடியும் என கேட்டது நீங்க தானே அவ்வ்!!!

கலைஞர் முதல்வராக நாட்டுக்கு ஒன்னும் செய்ய தேவையில்லை நடிகர்களுக்கு சினிமாவுக்கும் என்ன செய்தார் என்பது தான் உங்கள் தலையாய பிரச்சினையா , முடியலை அய்யா முடியல அவ்வ்!

வருங்காலத்தில் "மானாட மயிலாட" நமிதாவுக்கு சிலை வைத்தாரா கலைஞர்னு கேட்பாங்களோ அவ்வ்!

தொடரும்...

வருண் said...

அமுதவன் சார்: உங்க கட்டுரையை முழுவதும் படித்துவிட்டேன். :)

சிவாஜி ரசிகனான எனக்கு இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உங்களையும் சிவாஜி ரசிகராகப் பார்க்கப் பெருமையா இருக்கு. :) இத்தனை சிரத்தையுடன் நெறையா நேரம் செலவழித்து எழுதி இருக்கீங்க. ஆழமாகப் படித்துவிட்டுத்தான் நான் கருத்துச் சொல்லி இருக்கணும். :)

--------------

அனானியா ஒரு பெரியமனுஷன் வந்து எதையோ உளறுகிறார். முதல் மரியாதை, திருவிளையாடல், கர்ணன், கெளரவம், வசந்த மாளிகை போன்ற "கலர்"ப் படங்கள் எல்லாம் பார்த்தவராகத் தெரியவில்லை. இதைப்போல் முந்தா நேத்து மழையில் நேற்று முளைத்த காளான்கள் வந்து சும்மா எதையாவது இப்படி கறுப்பு வெள்ளையோட நிறுத்தி இருக்கணும்னு குருட்டுத்தனமா உளறுகிறது! இதுபோல் உளறும் அனானிகளுக்கு மறைந்து நின்னு கை தட்டும் பெரிய் மனுஷன்கள் கூட்டம் வேற ஒண்ணு வேற இருக்கும்!

சிவாஜினு வந்துவிட்டால் நான் கொஞ்சம் என்ன ரொம்பவே சென்ஸிடிவ். அவரைப் பற்றி அவரை, அவர் நடிப்பைப் பிடிக்காதவர்கள், ரசிக்கத் தெரியாதவர்கள் (இதுவும் பேச்சுச் சுதந்திரம்தான்) விமர்சிக்கும்போது எரிச்சலும் கோபமும் வரும். "சரி தொலைகிறான், அவனுக்குத் தெரிஞ்சது அவளோதான்"னு விட்டுவிட்டு போயிடுறது. மேதை ஜெயமோகன் கூட நெறையவே உளறியிருக்கிறார். தமிழ் இலக்கியம் தெரிந்த மரமண்டைகளுக்குக் கூட இந்த மாபெரும் கலைஞனை உணர முடியலைனா பார்த்துக்கோங்க!

உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். முரளி ஸ்ரீனிவாஸ், பம்மல் சாமிநாதன் மற்றும் சிலர் forumhub/mayyam தளத்தில் ஒரு திரி ஆரம்பித்து சிவாஜி படங்கள் நடிப்பு பற்றி நெறையவே எழுதி வருகிறார்கள்.

சிவாஜி அரசியலில் வெற்றியடையவில்லை என்பதை மையமாகக் கொண்டே அவரை எளிதில் இறக்கிவிடுவார்கள்.

மறுபடியும் உங்க இன்னொரு பதிவ் சொன்னதையே சொல்லுகிறேன்.

தமிழர்களை எல்லாம் நீங்க திருத்த முடியாது சார். அவர்களுக்கு நீங்க சொல்லுகிற அந்த இன உணர்வெல்லாம் கொண்டு வர முடியாது. அவர்களுக்கு எல்லாமே தெரியும்!

சிவாஜியை உணர்ந்தவர்கள், அவர் நடிப்பை ரசிக்கத் தெரிந்தவர்கள், அவர் திறமையை மெச்சி, தங்கள் ஆதங்கத்தை சொல்லிவிட்டுப் போக வேண்டியது.

எனக்கு எப்போவுமே என் மேல் நம்பிக்கை உண்டு. மற்றபடி யாரையும் திருத்த முடியும், மாற்ற முடியும் என்பதெல்லாம் ஒரு போதிலும் கெடையாது. அதுவும் ஜெயா, கலைஞர் போன்ர அரசியல்வாதிகளை எல்லாம் என்னைக்குமே நான் பெருசா நினைப்பதில்லை!

எனிவே, உங்களுடைய இந்தப் பதிவு தமிழனா ஒரு மாபெரும் கலைஞனுக்கு நீங்க செய்த ஒரு சின்ன உதவி. இந்தப் பதிவு ஒரு கோடி ஆண்டுகள் உயிருடன் வாழணும் என்று வாழ்த்திவிட்டு நான் நிறுத்திக்கிறேன். Thanks a lot!

ஜோதிஜி said...

அதிகாலையில் வாசித்த இந்த பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்று. பெரிதான விமர்சனம் எழுதி வைக்க ஆசை. ஆனால் எழுதத் தேவையில்லாத அளவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பக்கத்திலும் உள்ள நிறை குறைகளை அழகாக அலசியிருக்கீங்க. நாம் நம் இருக்கும் துறையில் எந்த அளவுக்கு தெளிவாக நாகரிகமாக நேர்மையாக இருந்தாலும் இங்கு எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும்? எந்த அளவுக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியும்? என்பதற்கு சிவாஜியே நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார். நான் இவரைப் பற்றி பல விசயங்களை மனதில் யோசித்த போதெல்லாம் என் எண்ணத்தில் என்னவெல்லாம் தோன்றியதோ அதிசயமாக நீங்க அனைத்தையும் எழுதியிருக்கீங்க.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம4

Amudhavan said...

வவ்வால் said...
\\மேற்கொண்டு வரும் கருத்துக்கள் ஒவ்வாது எனில் , புறக்கணிக்கவும்! உங்களை வருத்துவது எனது நோக்கமல்ல!\\

\\தொடரும்...\\
வாருங்கள் வவ்வால் நீங்கள் உங்கள் கருத்தை முழுவதுமாகத் தெரிவியுங்கள்.

Amudhavan said...

வருண் said...
\\உங்களுடைய இந்தப் பதிவு தமிழனா ஒரு மாபெரும் கலைஞனுக்கு நீங்க செய்த ஒரு சின்ன உதவி. இந்தப் பதிவு ஒரு கோடி ஆண்டுகள் உயிருடன் வாழணும் என்று வாழ்த்திவிட்டு நான் நிறுத்திக்கிறேன். Thanks a lot! \\

உங்களுடைய உணர்வுபூர்வமான இந்தப் பாராட்டிற்கு என்னுடைய இதயபூர்வமான நன்றி.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\அதிகாலையில் வாசித்த இந்த பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்று.\\

நன்றி ஜோதிஜி.

\\எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பக்கத்திலும் உள்ள நிறை குறைகளை அழகாக அலசியிருக்கீங்க. நாம் நம் இருக்கும் துறையில் எந்த அளவுக்கு தெளிவாக நாகரிகமாக நேர்மையாக இருந்தாலும் இங்கு எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும்? எந்த அளவுக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியும்? என்பதற்கு சிவாஜியே நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார்.\\

மிக அற்புதமான பாயிண்ட் நீங்கள் நினைத்திருப்பது....

\\நான் இவரைப் பற்றி பல விசயங்களை மனதில் யோசித்த போதெல்லாம் என் எண்ணத்தில் என்னவெல்லாம் தோன்றியதோ அதிசயமாக நீங்க அனைத்தையும் எழுதியிருக்கீங்க.\\
தங்கள் விமரிசனத்திற்கு மீண்டும் என் நன்றி.

Amudhavan said...

கரந்தை ஜெயக்குமார் said...

\\அருமை
தம4\\
தங்களின் வருகைக்கு நன்றி ஜெயக்குமார்.

தருமி said...

//உயர்ந்த மனிதனில் ஒரு நடை,// ஒன்றல்ல .. அந்தப் படத்தின் அந்த நாள் ஞாபகம் படத்தில் 14 வகை நடை என்று எண்ணிய நினைவுண்டு.

எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமான, நம்பவே முடியாத அதிசயம் - சேரன் செங்குட்டுவன் நாடகத்தில் அத்தனை அழகாக எழுதப்பட்ட பல்லுடைக்கும் வசனங்களை நடிப்போடும், உடல் அசைவுகளோடும் “ஒரே டேக்கில்” எப்படி மனிதன் பேசி நடித்தார் என்பது இன்றும் அதிசயமாகவே படுகிறது.

Amudhavan said...

வாருங்கள் தருமி....நீங்கள் சொல்வதுபோல் திரையுலகில் நம்பமுடியாத பல ஆச்சரியங்களுக்கு சொந்தக்காரர்தான் நடிகர்திலகம். அவரை வியந்துபோற்றாமல் தமிழகத்தின் உட்கட்சி அரசியலுக்குள் அவரைக்கொண்டுவந்து நிறுத்தி, (அவர் என்ன சின்ன பப்பாவா?அவர் ஏன் அந்த சுழலுக்குள் மாட்டிக்கொண்டார்? என்று உடனே ஒரு எதிர்வினை வரும்) அதற்கேற்ப அந்த மகா கலைஞனை ஆலவட்டம் சுற்றி அவமானப்படுத்திய காரியத்தைத்தான் தமிழர்கள் செய்தார்கள். இன்னமும் செய்துகொண்டும் இருக்கிறார்கள். தங்கள் விமரிசனத்திற்கு நன்றி.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நன்றி!

காலையிலேயே தொடர்ச்சியும் பின்னூட்டமிட்டேன்,ஏனோ வெளியாகவில்லை, பிலாக்கர் சொதப்பிடுச்சு போல,அதனையே மீண்டும் இடுகிறேன், தங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது எனினும் அப்பொழுது சொன்னதையே தான் இடுகிறேன்.

தொடர்ச்சி...

//அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது.//

கண்ணதாசனின் சேரமான் காதலிக்கு 70 களிலேயே
சாகித்ய அகதமி விருது கொடுக்க(வைக்கப்)பட்டது!!!

அக்கால சிறப்பான எழுத்தாளர்களுக்கு கூட அது எட்டாக்கனி , இன்னிக்கு கூட ஜெமோ. எஸ்.ரா போன்றொர்கள் ஏங்கும் ஒன்று :-))

ரோஹிணி ஹோட்டல் அருகே கண்ணதாசனுக்கு சிலை இருக்கு ,அது அவரே கட்டி வச்சதானு தெரியாது, ஆனால் சிலை, சாலைக்கு பெயர், வட சென்னையில் வியாசர் பாடி அருகே கண்ணதாசன் நகர் னு இன்னும் மக்கள் மறக்காத வகையில் நினைவு கூறப்படுகிறார் எனலாம்.

சிவாசிக்கும் அவ்வகையில் செவாலியே சிவாசி சாலை, சிலை , மணி மண்டபம் எல்லாம் (இடம் ஒதுக்கினாங்க ,இன்னமும் கட்டலை போல) என அரசு கவனிச்சு இருக்கு.

இன்றளவும் எம்.எஸ்.வி,க்கு ஒரு பத்மசிரி விருது கூட கிடைக்கலை, அதுக்காக யாரும் கவலைப்பட்டதாக தெரியலை, அதுவா நாட்டுக்கு முக்கியம்னு இப்போ கேட்பீங்களே , எனவே கவனிப்புகள் ஆளூக்கு ஆள் மாறித்தான் கிடைக்குது , அதான் உலகம்!!!

# //சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.//

தமிழனுக்கு ஏன் முழுமையான வரலாறு இல்லாம போச்சுனு இப்போ தான் புரியுது, இதே போல வரலாற்றில் வாயசைப்பை எல்லாம் எழுதுவதற்கு வரலாறெ இல்லைனு சொல்லிடலாம் அவ்வ்!

#//சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல; திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன்.//

ஷ்ஷ்ப்பா முடியலை, ஆனாலும் நீங்க அதி தீவிர சிவாசி வெறியரா இருப்பீங்க போல அவ்வ்!

அக்காலத்தில் இயக்குனர் சிரிதர் போன்றோர் தமிழ் சினிமாவை யதார்த்தப்பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதை அழித்து , நாடகப்பாணியில் அழுத்தியதில் ஒருவர் தான் சிவாசி, வணிகத்தில் அழுத்தி அழுக வைத்தது எம்சிஆர் :-))

#//பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது. //

பாட்டுப்பாடும் நாயகர்கள் என மரபை உடைத்தது எம்சிஆர், அவருக்கு பின்னர் சுமார் 10 ஆண்டு கழித்து வந்தவர் சிவாசி, ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில்(நானும் தமிழ் சினிமாவும் என நினைக்கிறேன்,அவர் பல சினிமா நூல்கள் எழுதி இப்போ நல்லா கல்லா கட்டுறார் என நினைக்கிறேன்) கூட இதனை குறிப்பிட்டதை படித்த நினைவு.

இன்னும் சொல்ல நிறைய இருக்கு, இதை சொன்னதுக்கே "நெற்றிக்கண்" திறந்தாலும் திறக்கலாம், நாம எல்லாம் மெய்யான நக்கீர பரம்பரை :-))

மீண்டும் சந்திப்போம்!

வவ்வால் said...

அமுதவன் சார்,

நன்றி!

ராஜ்குமார் அவர்களுடன் ஒப்பிட்டு அவரைப்போல ஊருக்கு ஊர் சிலை இருக்கானு கேட்கிறிங்க இது என்ன வகை லாஜிக்?

ராஜ்குமார் , எம்சிஆர் ஃபார்முலாவில் நடித்தார் ,எனவே எளிதில் மக்கள் அபிமானத்தினை பெற்று , அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார், எனவே ஒப்பிட்டாலும் எம்சிஆருடன் தானே ஒப்பிட வேண்டும்? எம்சிஆருக்கு தான் ஊருக்கு ஊர் சிலை இருக்கே!!!

எனவே தமிழன் கலை உணர்வுடன் இல்லைனு குறைப்பட்டுக்க தேவையில்லை :-))

இப்படி சொன்னதும் , எம்சிஆர் தமிழர் இல்லை, தமிழன் தமிழ் கலைஞரை கொண்டாடவில்லைனு சொல்லுவீங்களே அவ்வ்!

ராஜ்குமார் கூடத்தான் கனடர் இல்லை, அவர் தமிழர் , அவர் மனைவி கனடம், ஆனாலும் கர்நாடகாவில் கொண்டாடுகின்றனர்!!!
(ராஜ்குமார் கடத்தப்பட்டப்போது பல பத்திரிக்கைகளும் ,அவர் தமிழ் என்றே எழுதின, அதை வைத்து சொல்கிறேன்)

அப்படியே பார்த்தாலும் சினிமா ஒன்று தான் கலையா, வேறு கலைகளே இல்லையா? அவற்றை எல்லாம் கண்டுக்க கூட வெகுஜனம் தயாரில்லை, சினிமாவுக்கு நல்ல கவனிப்பும், வருமானமும் எப்பவும் இருக்கு, சோத்துக்கே வழியில்லாமல் செத்து மடிந்த நாடக , பொம்மலாட்ட, பாவைக்கூத்து, பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு கலைஞர்களின் பெயர்கள் கூட தமிழ்நாட்டில் யாருக்கும் தெரிவதில்லை, தமிழக கலைகள் என்றால் இவை போன்றவை தான் சினிமா அல்ல, அது ஃபிரஞ்ச் கலை :-))

#
சிவாசி மைக்ரோ லெவல் சப்ஜெக்ட்களில் அதிகம் நடிச்சார், எனவே குடும்பத்தினரை மட்டும் அதிகம் ஈர்த்தது, வெகுஜனம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் மேக்ரோ லெவல் சப்ஜெக்ட்களில் எம்சிஆர் நடித்தார் எனவே ஆட்சியையே மக்கள் தூக்கிக்கொடுத்தனர். எனவே சினிமா என்ற கலையை தமிழக மக்கள் வெறியோடு ஆதரித்து தான் இருக்கிறார்கள், இன்னமும் ஆதரிக்கிறார்கள், அடுத்த முதல்வரை கூட சினிமா கொட்டாயில தான் தேடிக்கிட்டு இருக்கான் தமிழன் :-))

ஆனால் நீங்கள் என்னமோ தமிழன் சினிமா கலையை கண்டுக்காம விட்டது போலவும் அதனால் சிவாசிக்கு பெருமை கிடைக்காம போனதாகவும் வருத்தப்படுறிங்க, தமிழ் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தவை, சிவாசி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசியல் ரீதியாக " தவறான நிலைப்பாட்டினை" அல்லது சூழலை உருவாக்கிக்கொண்டது ,அவரது "அரசு ரீதியான" அங்கீகாரத்துக்கு பாதகமானது.

திமுக சார்பில் இருந்து "திருப்பதி திருப்பமாக" காங்கிரஸ் தாவினார், நீண்ட கால காங்கிரஸ் விசுவாசியாக இருந்தும் ,அவருக்கு ஏன் கவனிப்பு இல்லாமல் போச்சோ? பின்னர் அங்கிருந்தும் கழண்டு தமிழக மக்கள் முன்னணிய்யோ என்னமோ உருவாக்கி , என் தமிழ் என் மக்கள்னு அரசியல் படமெல்லாம் எடுத்து கைய தான் சுட்டுக்கிட்டார்.

பின்னரும் சும்மா இல்லாமல் ஜெவின் வளப்பு மகனுக்கு பெண் கொடுத்து , அரசியல் சாயம் பூசிக்கொண்டதால் , பின்னர் ஆட்சிக்கு வந்த மஞ்சத்துண்டு "பாராமுகம்" காட்டினார், இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் ,ஆனால் என்னமோ "அவரை தமிழகமே" புறக்கணித்து விட்டாற்போல பேசுறிங்க அவ்வ்!

ஹாலிவுட்டின் "காட்ஃபாதர்" மார்லன் பிராண்டோவுக்கு அமெரிக்காவில் எத்தனை சிலை வச்சு எத்தனை அரசுகள் கொண்டாடியது என அமெரிக்கன் எவனும் இப்படி பொலம்புறாங்களானு தெரியலை, இத்தினிக்கும் மார்லன் பிராண்டோ, 1972 இல் காட்ஃபாதருக்கு கிடைச்ச ஆஸ்கார் விருதினை, செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளூக்காக புறக்கணிச்ச "உண்மையான" புரட்சி நடிகர்"

# தமிழனின் சினிமா வெறி நல்லா முத்திப்போய் தான் இருக்கு, இன்னும் ஏன் அதிகமாகவில்லைனு வருத்தப்படுறீங்களே அவ்வ்!

Amudhavan said...

வவ்வால் said...
\\வரலாறு முக்கியம் அய்யா, சிவாசிலாம் கேமிரா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கும் முன்னரே "எம்.சி.ஆர்" வெற்றிகரமான நாயகர் ஆகிட்டார், எம்சிஆருக்கு இணையாக ஒருத்தரை கொண்டு வர வேண்டும் என அக்காலத்தில் சிலர் தம் கட்டித்தான் சிவாசியை நிறுத்தினார்கள்,\\

வாருங்கள் வவ்வால் நீங்கள் தனித்தமிழ் உணர்வு கொண்டவரென்றும் அதனால்தான் சிவாஜியை சிவாசி என்றும் எம்ஜிஆரை எம்சிஆர் என்றும் எழுதுகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் இதே பின்னூட்டங்களில் ராஜ்குமார் என்றும், ஜெயின் வளர்ப்பு மகன் என்றும், ஹாலிவுட் என்றும் எழுதியிருப்பதைப் படித்தபின்தான் ஒரு கிண்டலுக்காகத்தான் சிவாஜியை சிவாசி என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்தது.
நீங்கள் சிவாசி என்றெழுதுவதால் அவருக்கு ஒரு மாற்றுக்குறைவு ஏற்பட்டு விடுகிறது என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்கள் அப்பாவி மனப்பான்மையில் நான் குறுக்கிட விரும்பவில்லை.
மற்றபடி, சிவாஜி காமிராவைப் பார்ப்பதற்கு முன்பேயே எம்ஜிஆர் கதாநாயகர் ஆகிவிட்டார் என்பதெல்லாம் சீனியாரிடி சம்பந்தப்பட்ட, வயது சம்பந்தப்பட்ட விஷயமே தவிர திறமை சம்பந்தப்பட்ட விஷயமல்ல.

\\பராசக்தி படத்தில் நடிப்பிசை புலவர்.k.a.ராமசாமி நடிப்பதாக அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டு அவரை தூக்கிட்டு தான் சிவாசி இடம் பெற்றார்\\
இவையெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயங்கள் இல்லையா? இன்றைக்குக்கூட அஜித் நடிக்கவிருந்த படத்தில் இன்னொருவர் நடிப்பதும், சிம்பு நடிக்கவிருந்த படத்தில் தனுஷ் நடிப்பதும் ...... என்று நிறைய நாள்தவறாமல் வந்துகொண்டே இருப்பதில்லையா?
சிவாஜியின் தாக்கம் பெரியது என்பதால் இம்மாதிரி தகவல்கள் எல்லாம் இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன.

\\போராடி வாய்ப்பு வாங்கிக்கொடுத்து ஏ.எஸ் சாமி (எஸ்.ஏ ?) போன்றோரை எல்லாம் பின்னாளீல் சிவாசி அலைய விட்டதெல்லாம் வரலாறு :-))\\
இம்மாதிரியான 'செய்திகளை' எல்லாப் பிரமுகர்கள் பற்றியும் சொல்லமுடியும். நீங்கள் விரும்பும் திரைப்பட பிரமுகர்கள் லிஸ்ட் கொடுங்கள். அவர்களைக் 'கைதூக்கி விட்டவர்களை' அலைய வைத்த கதைகளை நான் சொல்கிறேன்.
தமக்கு வாழ்வளித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளை ஒவ்வொரு தீபாவளிக்கும் மறக்காமல் வீடு தேடிச்சென்று அவருக்கு அன்பளிப்பு தந்து காலில் விழுந்து ஆசி வாங்கி வருவார் சிவாஜி என்பதுதானே கடைசி நாள்வரை இருந்த செய்தி. இந்த இடத்தில் இதையும் சேர்ந்தே எண்ணுவோம்.
தவிர இந்தக் கட்டுரை சிவாஜியின் மனிதநேயத்தையும் பண்புகளையும் சொல்லவந்த கட்டுரையும் அல்ல.

\\பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் கூட அதுக்காக கலைஞரை திட்டவா முடியும் என கேட்டது நீங்க தானே அவ்வ்!!!\\
அரசியல்வாதிகளின் ஊழல் என்பதை 'கலைஞர்மீது மட்டும்' என்று பார்ப்பதை மட்டும்தான் நான் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன். இந்திய நாட்டில் ஊழல் இல்லாமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதி யாரையாவது ஒருவரைச் சொல்லிவிட்டு தாராளமாக நீங்கள் இந்த வாதத்தைத் தொடரலாம். பெரிய கட்சியை நடத்தும் தலைவர்களை விடுங்கள்...நம்மூர் தெரு முனையில் நின்று கழுத்தில் பதினைந்து சவரண் செயினும் இரு கைகளிலும் மொத்தையான மோதிரங்களும் அணிந்து அரசியல் பேசும் கவுன்சிலர்களை அல்லது கவுன்சிலர்களாக வரப்போகிறவர்களை உங்களுக்கும் தெரியும்தானே! அவர்களிடம் புரளும் பணம் பற்றியும் தெரியும்தானே.

\\கலைஞர் முதல்வராக நாட்டுக்கு ஒன்னும் செய்ய தேவையில்லை நடிகர்களுக்கு சினிமாவுக்கும் என்ன செய்தார் என்பது தான் உங்கள் தலையாய பிரச்சினையா , முடியலை அய்யா முடியல அவ்வ்!\\
ஒன்றும் செய்யத் தேவையில்லை என்றா சொன்னேன்?
'பாலங்கள்கள் கட்டுவதும், ரேஷன் வழங்குவதும், போக்குவரத்துகளை சரி செய்வதும் மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல.
ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.
இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.'.........இது என் பதிவில் உள்ளது. இப்போதும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

\\வருங்காலத்தில் "மானாட மயிலாட" நமிதாவுக்கு சிலை வைத்தாரா கலைஞர்னு கேட்பாங்களோ அவ்வ்!\\
உங்களால் நமிதாவையும் சிவாஜியையும், அல்லது கலைஞரையும் நமிதாவையும் இணைத்து வாதிடுவது உங்களால் முடியும். அதுதான் உங்கள் நோக்கம் அல்லது கிண்டலடிக்கும் பாணி எனில் அந்த லாவணிக்கு நான் வரவேண்டாம் என்றே நினைக்கிறேன்.

Amudhavan said...

வவ்வால், பின்னூட்டங்களில் அடுத்தடுத்து வந்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் 'தொடரும்' போட்டு எழுதின முதல்வர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
//அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள்.\\
கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான ஆல்னஹள்ளி ஸ்ரீகிருஷ்ணாவும்(இவர்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலக்கதையான நாவலைக் கன்னடத்தில் எழுதியவர்) கவிஞர் ஆர்என் ஜெயகோபால் போன்றோரும் கேட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் கோணத்தில் நின்று பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளமுடியுமே தவிர, தமிழகச் சூழலில் நின்றுகொண்டு பார்த்து வியாக்கியானம் செய்யும்போது புரியாது.
கர்நாடகத்திலும் கேரளத்திலும் வங்காளத்திலும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் வழங்கப்படும் மரியாதையே வேறு. "உங்கள் ஊரில் அகிலனை இவ்வளவுதான் மதிப்பீங்களா?" என்று ஒருமுறை கேட்டார் தகழி.
கர்நாடகத்தில் இன்னமும் பெரிய எழுத்தாளர்களோ, கவிஞர்களோ ஏதாவது பொதுவிஷயம் பற்றி அறிக்கைகள் கொடுக்கும்போது இங்குள்ள முதல் அமைச்சர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று பதில் சொல்லி சமாதானப்படுத்திவிட்டு வருகிறார்கள்.
கண்ணதாசனை இலக்கியக்கூட்டங்களில் ஒரு மனிதனாகக்கூட பல பேர் நினைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நாற்பது வருடங்களாக இலக்கியப் பேச்சாளர்கள் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்து சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்று வந்து பாரதி பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறேன் நான்...................

சிவாஜி வாயசைப்பு பற்றியும் வசனம் பேசுவது பற்றியும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்ன பேசுவார்களோ அதை மட்டுமே பேசியிருக்கிறீர்கள். உங்களுடைய 'மைண்ட் செட்' அப்படி ஆகிவிட்டபிறகு எதை பதிலாகச் சொல்லியும் பிரயோசனமில்லை.
ராஜ்குமார் எம்ஜிஆர் பாணியில் நடித்ததால்தான் அவருக்கு மக்கள் அபிமானம் மிகுதியாக இருந்தது என்பதும் அவரை ஒப்பிட்டாலும் எம்ஜிஆருடன்தானே ஒப்பிடவேண்டும் என்றும் நீங்கள் நினைப்பது தவறான கற்பிதம். அவர் குடும்பப் பாங்கான ரோல்களிலும் புராணப்படங்களிலும் நிறைய நடித்தவர். அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரது துணைவியார் சிவாஜி பற்றியும் ராஜ்குமார் பற்றியும் என்னவெல்லாம் சொன்னார் என்பதெல்லாம் இங்கு தேவையில்லாத விஷயமாகப் போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.
சிவாஜியின் அரசியல் பிரவேச தோல்வியை வைத்து அவரைப் பற்றிப் பேசும் விவாதங்களில் பங்கேற்பதும் தேவையற்றது என்று நான் நம்புவதால் அதிலிருந்தும் விலகுகிறேன்.

Anonymous said...

வணக்கம், வவ்வால் ஒரு மாமேதை, அவரை விட யாரும் கருத்து சொல்ல அருகதை இல்லை என்று என்னும் ஒரு அவதார புருஷன். அவரை யாரும் கடிந்து கொள்ளாதீர்கள் (மீறினால் அவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்)
நன்றி! அனந்தராமகிருஷ்ணன்

வவ்வால் said...

அமுதவன் சார்,

நன்றி!

// ஒரு கிண்டலுக்காகத்தான் சிவாஜியை சிவாசி என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்தது.
நீங்கள் சிவாசி என்றெழுதுவதால் அவருக்கு ஒரு மாற்றுக்குறைவு ஏற்பட்டு விடுகிறது என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்கள் அப்பாவி மனப்பான்மையில் நான் குறுக்கிட விரும்பவில்லை.//

எம்.சி.ஆர்னும் சொல்லியிருப்பதால் ,அதுவும் ஒரு மாற்றுக்குறைவான செயல் என சொல்லாமல் விட்டீங்களே :-))

#//அரசியல்வாதிகளின் ஊழல் என்பதை 'கலைஞர்மீது மட்டும்' என்று பார்ப்பதை மட்டும்தான் நான் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன். இந்திய நாட்டில் ஊழல் இல்லாமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதி யாரையாவது ஒருவரைச் சொல்லிவிட்டு தாராளமாக நீங்கள் இந்த வாதத்தைத் தொடரலாம். //

கலைஞர்களில் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டவர்கள்( உண்மையில் அப்படியில்லை போதுமான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது) சிவாசி ஒருவர் மட்டும் தான் என என்பதை தான் மறுத்தேன்.

இந்தியாவை விடுங்க, தமிழக கலையுலகில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர் சிவாசி ஒருவர் மட்டும் தானா? எல்லாரும் நன்றாக சிறப்பிக்கப்பட்டார்கள் சிவாசியை மட்டும் புறக்கணித்தார்கள் என்பதை மெய்பித்துவிட்டு தாராளமாக உங்கள் குமுறலை தொடரலாம்.

டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பழம் பெரும் நடிகை தான் தமிழின் முதல் பேசும் பட நாயகி, பின்னாளில் மிஸ்.கமலா(1936) என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழின் முதல் பெண் இயக்குனர் என்ற பெயரும் கிடைத்தது, அது மட்டுமல்லாமல்ல் முதல் பெண் தயாரிப்பாளர், எடிட்டர் என பல சாதனைகள் படைத்தவர், அக்காலத்தில் ஹீரோக்கள் பெயருக்குலாம் முன்னதாக அவரது பெயரை போட்டுள்ளார்கள், போஸ்டரில் கூட அவரது பெயருக்கு அப்புறம் ஹீரோ பெயர் வரும், எம்சிஆர், நடித்த குலோபகாவலி படத்ததின் போஸ்டரில் கூட அவரது பெயருக்கு அடுத்து தான் எம்சிஆர் பெயர் இருக்கு, அப்படியான ஒரிஜினல் போஸ்டரை இணையத்தில் தான் பார்த்துள்ளேன்.

1964 இல் வறுமையில் வாடி செத்துப்போனார், இன்னிக்கு எத்தினி பேருக்கு இப்படி ஒரு நடிகை கலைச்சேவை செய்து செத்துப்போனது தெரியும், அக்காலத்தில் சிவாசிக்குலாம் தெரியாமலே வறுமையில் வாடி செத்துப்போனவருக்கு "என்ன அங்கீகாரம்" கொடுக்கப்பட்டது என சிவாசி கவலைப்பட்டிருப்பாரா, இல்லை அவரது ரசிக கண்மணிகள் கவலைப்பட்டிருப்பாங்களா?

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் காலம் தோறும் "புறக்கணிக்கப்பட்டவர்கள்" ஏராளம், இதில் ஓரளவு நல்ல கவனிப்பு கொடுக்கப்பட்டு செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர்களையே சொல்லி " தமிழனுக்கு கலை உணர்வு இல்லை" ஆட்சியாளர்கள் கண்டுக்கலைனு லாவாணி பாடும் பக்தர்கள் என்ன கொடுமை சார் இது அவ்வ்!

# //ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.
இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.'.........இது என் பதிவில் உள்ளது. இப்போதும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.//

நானும் கலை என்பது சினிமா மட்டுமா ,முதலில் அது தமிழனின் கலையா எனக்கேட்டேன் , அதனை கவனமாக தவிர்த்து விட்டு உறுதியாக இருக்கீங்களெ :-))

தமிழக மண்ணின் கலைகளான , தெருக்கூத்து ,வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து, பொய்க்கால் குதிரை போன்றவற்றை சொன்னேன் , அவர்களுக்கு கேவலம் கலைமாமணி கூட எட்டாக்கனி என ஏன் எவரும் கவலைப்படவில்லை?

எம்.எஸ்.விக்கு இன்றளவும் ஒரு பத்மசிரி கூட இல்லை என்பதையும் குறிப்பிட்டேன் கவனிக்கவேயில்லை, நான் சொன்னவர்களை எல்லாம் ஒப்பிட்டால் ,நீங்கள் சொன்னவர்கள் "சிறப்பான கவனிப்புடன்" இருந்துள்ளது புரியும்.

# //உங்களால் நமிதாவையும் சிவாஜியையும், அல்லது கலைஞரையும் நமிதாவையும் இணைத்து வாதிடுவது உங்களால் முடியும். அதுதான் உங்கள் நோக்கம் அல்லது கிண்டலடிக்கும் பாணி எனில் அந்த லாவணிக்கு நான் வரவேண்டாம் என்றே நினைக்கிறேன்.//

பெண்களீன் கலைச்சேவையை அலட்சியம் செய்யும் ஆணாதிக்க போக்கு!!!

மானாவாரியாக கண்டிக்கிறேன்!!!

# //ஆனால் 'தொடரும்' போட்டு எழுதின முதல்வர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.//

இப்படி தொடரும் போட்டு அடிக்கடி பின்னூட்டமிடுவது வழக்கமே, நீங்க கவனிச்சு இருக்க மாட்டின்க,

# //கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான ஆல்னஹள்ளி ஸ்ரீகிருஷ்ணாவும்(இவர்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலக்கதையான நாவலைக் கன்னடத்தில் எழுதியவர்) கவிஞர் ஆர்என் ஜெயகோபால் போன்றோரும் கேட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் கோணத்தில் நின்று பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளமுடியுமே தவிர, தமிழகச் சூழலில் நின்றுகொண்டு பார்த்து வியாக்கியானம் செய்யும்போது புரியாது.//

ஆல்னஹல்லி சிரிகிருஷ்ணா மற்றும் செயகோபால் பெயரில் கர்நாடகவில் ,நகர்கள் உருவாக்கப்பட்டு ,சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா, அவர்களுக்கு சாகித்த அகதமி விருது கொடுக்கப்பட்டுள்ளதா விவரம் தரவும்.

தொடரும்...

வவ்வால் said...

தொடச்சி...

# //"உங்கள் ஊரில் அகிலனை இவ்வளவுதான் மதிப்பீங்களா?" என்று ஒருமுறை கேட்டார் தகழி.//

அகிலனின் எழுத்தெல்லாம் எழுத்தா என செமோ கேலி செய்கிறாரே அப்போலாம் யார் கண்ணுக்கும் தெரியாம போயிடுதே அவ்வ்!

அகிலனுக்கு ஞான பீட விருது கொடுக்கப்பட்டுள்ளது, இன்றளவும் மதிக்கப்படுகிறார், ஊருக்கு ஊர் சிலை வைக்க மறந்துட்டாங்க அதுக்குனு இப்படியா அவ்வ்!

# //கர்நாடகத்தில் இன்னமும் பெரிய எழுத்தாளர்களோ, கவிஞர்களோ ஏதாவது பொதுவிஷயம் பற்றி அறிக்கைகள் கொடுக்கும்போது//

அவர்கள் யாரும் அரசியல் சாயம் பூசிக்கொள்வதில்லை ,எனவே கருத்துக்கு மதிப்பு கிடைக்குது!

நம்ம ஊர் எழுத்தாளர்கள் யாரும் மக்கள் நலனுக்காக வாயே திறப்பதில்லையே அது ஏன்?

முதலில் அவர்கள் மக்களுக்குக்கா வாய தொறக்கட்டுமே, அப்புறமா பேசிக்கலாம்.

#//கண்ணதாசனை இலக்கியக்கூட்டங்களில் ஒரு மனிதனாகக்கூட பல பேர் நினைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நாற்பது வருடங்களாக இலக்கியப் பேச்சாளர்கள் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்து சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்று வந்து பாரதி பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறேன் நான்................... //

சினிமாவுக்கு பாட்டெழுதினார் என்பதாலே இலக்கிய கூட்டங்களில் சிலாகிச்சு பேசியாகணுமா?

இங்குள்ள இலக்கிய கூட்டங்கள் என்பது குழு வாரியானது , பிரமிளை புகழும் இடத்தில் , சு.ராவை கழுவி ஊத்துவார்கள், இப்படியாக மவ்னி,ஆத்மநாம், க.நா.சு, குஅழகிரிசாமி, புதுமைப்பித்தன், வண்ண நிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் என தனி அணிகள் லாவாணிப்பாடும் கூட்டமே இருக்கு, இதுக்குலாம் பொதுவான சட்டதிட்டங்கள் இல்லை, அதெல்லாம் ஏன் செய்யலைனு நாம கேட்கப்படாது, கேட்க உரிமையும் இல்லை, கண்ணதாசனே சிறந்த கவிஞன் என நினைப்பவர்கள் சுயமாக இலக்கிய கூட்டம் நடத்தி பேசிக்க வேண்டியது தான் :-))

# //சிவாஜியின் அரசியல் பிரவேச தோல்வியை வைத்து அவரைப் பற்றிப் பேசும் விவாதங்களில் பங்கேற்பதும் தேவையற்றது என்று நான் நம்புவதால் அதிலிருந்தும் விலகுகிறேன்.//

அவரது அரசியல் பிரவேச தோல்வியை மட்டும் சொல்லவில்லை, பல்வேறூ அரசியல் நிலைப்பாடுகளையும் அதன் விளைவுகளையும் சொன்னேன், பொத்தாம் பொதுவாக நழுவுறிங்களே அவ்வ்!

வவ்வால் said...

விட்டுப்போனது,

கண்ணதாசனின் படைப்புகள் அரசுடமையாக்குவதாக அறிவித்தார் கலைஞர் ,அதனை எதிர்த்து நீக்க வச்சார் கண்ணதாசன் மகனும் கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான "காந்தி கண்ணதாசன். அரசுடமை ஆக்கினால் அந்நூலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம், மேலும் விலை குறையும் எனவே பலரும் படிக்கும் வாய்ப்பு உருவாகும், ஆனால் புத்தகங்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி போய்விடுமே என விட்டுக்கொடுக்கவில்லை, அப்படி இருக்கும் போது அரசு நல்லா கவனிக்கலைனு வருத்தம் வேறா -))

படைப்பு மக்களுக்கு போய் சேர கூட விரும்பாதவர்களுக்கு அரசின் மரியாதை மட்டும் அதிகம் தேவையா என்ன?

Amudhavan said...

வவ்வால் விடாமல் வந்து வாதம் புரிகிறீர்கள்.

இதற்கு பதில் சொன்னாலும் திரும்ப வந்து பேசுவீர்கள்.

அதற்கு பதில் சொல்லியபோதும் இன்னொரு வாதத்துடன் திரும்ப வருவீர்கள்.

இது வார்த்தைக்கு வார்த்தை அக்கப்போர் புரியும் விதண்டாவாதங்களுக்கான கட்டுரை அல்லவென்றே நினைக்கிறேன்.

இதன் தாத்பர்யம் புரிகிறவர்களுக்கு நான் சொல்லியுள்ள வாதங்கள் புரியும்.
சிவாஜி பற்றி இங்கே சொல்லியுள்ள வாதங்கள் எல்லாம் பலருடைய பல ஆண்டுக்கால நேர்மையான மனக்குமுறல்கள்தாம்.

சிவாஜி பற்றிய பல சிறப்புக்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பலவற்றை எப்படி வெளியே எடுத்துதச் சொல்வது என்பது பலருக்குத் தெரியாது. அதை நான் இங்கே இந்தக் கட்டுரையில் செய்திருப்பதாக நினைக்கிறேன்.

சென்ற கால்பந்து பதிவின்போது மாரடோனாவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவர் எப்படி விளையாடுவார் என்பதை நான் கவனித்ததைச் சொன்னேன். உங்கள் பதிலில் அவருடைய இன்னொரு சிற்றபம்சம் ஒன்றை நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதை ஒரு விளையாட்டு வீரனின் மற்றொமொரு சிறப்பாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கிருந்தது. சிவாஜி 'வாயசைப்பது' என்பது திரையுலகினரால் இன்னமும் வியப்புடன் பார்க்கப்படும் ஒரு அசாத்தியத் திறமை. உடனே இதெல்லாமா ஒரு சிறப்பு என்பதுபோல் கேலிபேச ஆரம்பிக்கிறீர்கள்.

தொடர்ந்து சிவாசி என்றே எழுதுகிறீர்கள்.........ஆகவே இதற்கெல்லாம் பதில் சொல்வது தேவையில்லை என்றே கருதுகிறேன்.
நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நன்றி!

//அதை ஒரு விளையாட்டு வீரனின் மற்றொமொரு சிறப்பாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கிருந்தது. //

பிரமாதம்!!!

இசைவான கருத்தெனில் ஏற்பதும் எதிரான கருத்தெனில் இகழ்வதும் "பொதுசன மனப்பக்குவம்" என்பதை உணரும் மனப்பக்குவம் எனக்கும் வாய்க்கப்பெற்றிருக்கு :-))

#//சிவாஜி பற்றிய பல சிறப்புக்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பலவற்றை எப்படி வெளியே எடுத்துதச் சொல்வது என்பது பலருக்குத் தெரியாது. அதை நான் இங்கே இந்தக் கட்டுரையில் செய்திருப்பதாக நினைக்கிறேன்.//

ராசா ரசிகர்கள் செய்வதற்கும் தாங்கள் செய்வதற்கும் பெரிதும் வித்தியாசமில்லை, அவர்களும் , ராசாவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி இசையமைப்பாளர்களே இல்லை, அவர் தமிழ் நாட்டில் பொறந்தது தமிழ்நாட்டின் அதிஷ்டம், அவரு மட்டும் வெளிநாட்டில் பொறந்திருந்தால் கிடைக்கும் மரியாதையே வேற என நினைத்து வாழ்கிறார்கள், அங்கணமே தாங்களும் ,ஆனால் உங்கள் ஆதர்சம் சிவாசி அவர்கள், அவ்வளவு தான் வித்தியாசம்!!!

என்னைப்பொறுத்த வரையில் நானறிந்த பொதுவான அளவுகோள்களின் அடிப்படையில் அணுகுகிறேன் ,எனவே வார்த்தைக்கு வார்த்தை விவாதம் செய்ய எனக்கும் விருப்பமில்லை, ஆனால் சொல்லாமல் போய்விட்டால் , இப்படி ஒரு கருத்துள்ளது என யாரும் அறியாமல் போய்விட வாய்ப்புள்ளது என்பதாலே பின்னூட்டமாக எனதுக்கருத்தினை பதிவு செய்து வைத்தேன் , வாய்ப்புக்கு நன்றியும் ,வணக்கங்களும்!

மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்!!!

Anonymous said...

வண்ணப்படங்களில் எனக்குத் தெரிந்து அதிகம் பிரபலமாகாத துணை, சாதனை போன்ற படங்கள் நன்றாக இருக்கும். அதுவே திரிசூலம் - பார்க்கவே முடியாது. அதேபோல கொளுத்தும் மத்தியான வெயிலில் கோட்டு, சூட்டு சகிதம் பார்க்கில கே.ஆர்.விஜயாவோடு டூயட் பாடும் படங்களும். பொதுவிலேயே சிவாஜி-கே.ஆர்.வி. படங்கள் என்றாலே தாங்க முடியாத அளவுக்கு செண்டிமென்ட்டல் மெலோடிராமா, ஓவர் ஆக்டிங் என்றுதான் இருக்கும்.

வியட்நாம் வீடு படத்தை சந்தானம் லொல்லு சபாவில் சூப்பராகக் கலாய்த்திருப்பார். ('எனக்கு ரிடயர்மெண்ட் கொடுத்து அனுப்பிட்டாண்டி' என்று சிவாஜி அழுதுகொண்டே சொல்ல, 'யோவ் பின்ன என்ன 58 வயசில அப்பாயிண்ட்மென்டா கொடுப்பான்?' என்ற வரி கலாய்ப்புக்குச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் அந்தப் படத்தின் சிக்கலை சரியாகவே படம் பிடித்துக் காட்டுகிறது.)

கௌரவம்-- வக்கீலாக (பெயர் ரஜினிகாந்த்!) வந்து, ஒரு கேசில் தோற்றவுடன் செத்துப்போவாரே அதுதானே. வக்கீல் என்றால் வழக்குகள் வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்வதுதான் புரஃபஷனலிஸம். தோல்வி என்றதும் செத்துப்போவது, இதற்கு பரிதாபப்பட்ட கவரிமானை (இந்தக் கற்பனையை உருவாக்கிந்து யார்) இழுப்பது ரசிக்கிற விஷயமே அல்ல.

ஸ்ரீதேவியோடு நடித்த சந்திப்பு எல்லாம் அவர் தவிர்த்திருக்க வேண்டிய படம்.

சிவாஜியைப் பற்றி எழுதுபவர்கள் ஒன்று ஒரேயடியாக ஏற்றுகிறார்கள்; அவர் தலைமுடி கூட நடிக்கும் என்று சொல்லி மிரட்டுகிறார்கள். அல்லது இன்னொரு தரப்பில் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அவருடைய படங்களில் இன்றைய நமது உலக, இந்திய படங்களை எளிதில் பார்க்க முடிகிற காலகட்டத்தின் புரிதல்களோடு பார்க்கும்போது சிலாகிக்கக்கூடிய படங்கள் எவை, சிவாஜிக்குப் பெருமை சேர்க்க இயலாத படங்கள் எவை என்று நடுநிலையோடு யாராவது எழுதினால் இன்றைய இளைஞர்களுக்கு அவரை எங்கிருந்து பார்க்க ஆரம்பிப்பது என்ற அறிமுகம் கிடைக்கும். அது இல்லாத நிலையில் 'வசனம் பேசியே கொல்லுவார்' என்ற ஒற்றை வரி பிம்பத்தோடு அவர் வளர்ந்துவரும் தலைமுறையால் நிராகரிக்கப்படுவது அவருக்கு இழைக்கப்படும் அநீதி.

சரவணன்

துரை செல்வராஜூ said...

>>> அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்..<<<

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் அந்த ஊர் மக்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் இடமாக இருந்தது என்று படித்திருக்கின்றேன்..

ஜோதிஜி said...

எனது மின் அஞ்சலில் உங்கள் பதிவுக்கு தமிழ் இளங்கோ அளித்த பின்னூட்ட தொடர்ச்சி மூலம் இந்தப் பதிவுக்கு மீண்டும் முன்பு போல காலை வேளையில் வந்து படிக்கத் தொடங்கினேன். முழுமையாக படித்து முடித்து, நாம் இந்தக் கட்டுரையை படிக்கவில்லையோ? என்று யோசித்த போது பின்னூட்டத்தில் என் கருத்தும் வந்துள்ளது குறித்து ஆச்சரியம். காரணம் மீண்டும் வந்து படித்த போது அப்படியே நேற்று எழுதியது போல நீங்க உருவாக்கிய தாக்கம் இன்றும் உருவானது. இந்த கட்டுரையை இன்னும் பத்து வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கும் அதே உணர்வை உருவாக்கும். உங்கள் உழைப்பு உன்னதமானது.

Amudhavan said...

அந்த மாபெரும் கலைஞனை இணைய நுனித்தட்டு மக்களுக்குச் சொல்வதில் மிகச்சிறிய பங்காற்றி இருப்பதாகவே இன்னமும் கருதுகின்றேன். ஒன்றுமே இல்லாததைக் கொண்டாடுவதுதான் இணையத்தினர் பணி என்பதாகவே போய்கொண்டிருக்கும் உலகில் இம்மாதிரியான கருத்தாக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பதிவை நினைவு வைத்துக்கொண்டு பகிர்ந்த திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும், மீண்டும் வந்து கருத்துப் பதிவு செய்திருக்கும் உங்களுக்கும் என் நன்றி.

Anonymous said...

வவ்வாலை முதலில் அடித்து விரட்டுங்கள் நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்

Siva said...

மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடுத்தவர் சிவாஜி.இதுவும் மிகையாக எழுதப்படட கட்டுரை.

Amudhavan said...

Siva said...
\\மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடுத்தவர் சிவாஜி.இதுவும் மிகையாக எழுதப்படட கட்டுரை.\\

சிவா, இம்மாதிரியான ஒற்றை வரி விமரிசனங்களையெல்லாம் கடந்து மிக அதிக அளவு உயரத்தில் இருப்பவர்தான் சிவாஜி. அவர் மிகை நடிப்பு நடித்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த மிகை நடிப்புப் படங்கள் எதுவும் இங்கே பேசப்படுவதில்லை. அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ஆரம்பித்து கறுப்பு வெள்ளைப் படங்கள் காலம் வரையிலும் அவருடைய திறமையும் கவனமும் குவிந்திருந்த காலத்தில் வந்த எந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு மிகையானதாக இருக்கவில்லை.
பின்னர் இப்படியொரு குறை அவரைப் பார்த்து வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அவருடைய மாபெரும் நடிப்பு சாம்ராஜ்யத்தின் முன் அதெல்லாம் எடுபடவில்லை. அவரைப் பிடிக்காதவர்கள் இம்மாதிரி எதையாவது சொல்லி அவர்களை அவர்களே சொறிந்துவிட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

Post a Comment