Friday, May 3, 2013

தமிழ்திரை இசையின் பொற்காலம்
தமிழ்த்திரை இசையின் வணிக விற்பனை இன்றைக்கு எங்கேயோ போயிருக்கிறது. அதனால்தான் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்கு எந்த அளவு விளம்பரங்கள் செய்கிறார்களோ அதற்குச் சிறிதும் குறையாத அளவுக்கு இசை வெளியீட்டிற்கும் விளம்பரங்களும் வித்தியாசமான விழாக்களையும் ஏற்பாடு செய்கிறார்கள்.


இருக்கிற அத்தனைப் பிரபலங்களையும் கலந்துகொள்ளவைத்து இசை வெளியீட்டை எந்த அளவுக்கு முக்கியமானதாகச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு முக்கியமானதாகச் செய்யத் துடிக்கிறது திரையுலகம்.

 ஒரே நாளில் மூன்று பெரிய நகரங்களில் இசை வெளியீடு என்று அறிவித்து தமிழகத்தின் மூன்று பெரிய நகரங்களுக்குப் பறந்து பறந்து சென்று விழாக்களில் கலந்துகொண்டு தம்முடைய படத்தின் பாடல்களை வெளியிட்டார் கமல்ஹாசன்

ஒரே நாளில் நூறு இடங்களில் இசை வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள் ஒரு புதிய படத்தயாரிப்பாளர்கள்

இசை குறுந்தகடுகள் வெளியீட்டையும் தாண்டி பண்பலை வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு, செல்போன்களின் ரிங்டோனுக்கு என்று பலவகைகளிலும் செலவாணியாகிக்கொண்டிருக்கின்றன திரைப்படப்பாடல்கள்.

திரைப்பட பாடல்களை மக்களிடம் ஒரு நீங்காத செல்வமாக பிரிக்க முடியாத உறவாகக் கொண்டுவந்து சேர்த்தவர்களைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டு இன்றைக்கும் நேற்றைக்கும் அதன்மூலம் யார் யார் பலன் பெற்றார்களோ அவர்களை மட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற சமூகமாக இருக்கின்றது இன்றைய உலகம்.

 

இந்தக் களேபரங்களிலிருந்து சற்று பின்னே சென்று இதற்காக உழைத்த, நிலம் வெட்டிச் சீர்படுத்தி விதை விதைத்து வேலிகட்டி அறுவடையும் செய்துகாட்டிவிட்டுப் போனவர்களை- அந்தச் சாதனையாளர்களை நினைவுபடுத்தி அவர்கள் செய்த சாதனைகள் என்னவென்பதை ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அணுகி ஒரு தொடர் பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறார் பதிவர் திரு காரிகன்.

ஏற்கெனவே பல்வேறு இசைகுறித்த பதிவுகள் வரும்போதும் அவற்றில் தவறுகள் இடம்பெறும்போது அதனைச் சுட்டிக்காட்டி அறிவார்ந்த வாதங்கள் புரிந்துவரும் அதே காரிகன் இன்றைக்கு அவருடைய தளத்தில் விருப்பு வெறுப்பற்று தமிழில் பல்வேறு சாதனைகள் புரிந்த இசையமைப்பாளர்கள் பற்றியும் அவர்கள் சாதித்த விவரங்கள் குறித்தும்  வியக்கத்தக்க சான்றுகளுடன் அருமையான பதிவுகள் எழுதி வருகிறார்.

இன்றைக்கு அவர் எழுதியிருக்கும் இந்தப் பதிவு தமிழ் இணையத்தில் நான் படித்த மிக முக்கியமான பதிவுகளில் ஒன்று.

தமிழ்த்திரை இசையை வளர்த்தவர்கள் நிறையப்பேர் என்றாலும் அதனை இன்றைக்கு இருக்கும் நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள். இணையத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்று பார்க்கும்போது இவர்களைப் பற்றிய மிகமிக முழுமையான பதிவு என்று இதனைச் சொல்லலாம். எத்தனை முழுமையாகச் சொல்லப்போனாலும் சில விஷயங்கள் விடுபட்டுப்போகும். அப்படி விடுபட்டுப்போன இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்றைக்கு இளையராஜா கானடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சென்று இசைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டிருக்கிறாரே, ஏ.ஆர்.ரகுமான் உலகமெல்லாம் சென்று இசைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டிருக்கிறாரே, இன்னிசைப் பறவைகள் என்றும் அபஸ்வரங்கள் என்றும் மெல்லிசை மெலடி என்றும் இன்னமும் என்னென்னவோ பெயர்களில் அங்கங்கே ஆர்க்கெஸ்டிராக்கள் வைத்துக்கொண்டு மக்கள் முன்னிலையில் மேடைகள் அமைத்து இசைக்கச்சேரிகளை பலரும் நடத்திக்கொண்டிருக்கிறார்களே அதனை முதன்முதலாக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தாம். இன்னிசைக் கச்சேரிகளை மக்கள்முன் கொண்டுவந்து நட்சத்திரப் பாடகர்களைக் கூட்டிவந்து மேடையிலேயே பாடவைத்தவர்கள் இவர்கள்தாம்.

தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தது மட்டுமின்றி பம்பாய்க்கும் (இன்றைய மும்பை) சென்று இன்னிசைக் கச்சேரிகளை நடத்தினார்கள். அப்படி நடத்தப்பட்ட ஆர்க்கெஸ்ட்ராக்களுக்கு அன்றைய இந்திப்படவுலகின் உச்ச நட்சத்திரங்களும் இசையுலகின் மகாமேதைகளும் வந்திருக்கிறார்கள். தாம் வந்தது மட்டுமின்றி தமக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றைப் பாடவேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி மேடைக்குக் கொடுத்தனுப்பியர் இசையமைப்பாளர்களில் மாமுனி என்றழைக்கப்படும் நௌஷத்.

உலகப்புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் தமக்குப் பிடித்த பாடல் என்று பலமுறை மீடியாக்களில் சொல்லியிருக்கும் பாடல் ‘அத்தான் என்அத்தான்’
இன்னமும் நிறைய எழுதவேண்டியிருக்கிறது. பிறிதொரு சமயம் எழுதலாம்.
இப்போதைக்கு தமிழ் திரைஇசைப் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகளில் ஒன்று இது. உங்களுக்காக இதனை இங்கே சிபாரிசு செய்கிறேன்.
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/

7 comments :

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களே,
தமிழ் மனத்தில் உலா வந்த போது உங்களின் இந்தப் பதிவைக் கண்டேன். கண்டதும் ஒரு கணம் திகைத்துவிட்டேன். என்னைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மட்டுமல்ல மாறாக என்னைப் போன்ற ஒரு சிறு பதிவரின் பதிவுகளை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது உண்மையில் உங்களின் மேன்மையான பண்பாட்டை காட்டுகிறது. அதற்கு எனது நன்றி. உங்கள் அனுமதி இன்றி இந்தப் பதிவை நான் தமிழ்வெளியில் இணைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
"இந்தக் களேபரங்களிலிருந்து சற்று பின்னே சென்று இதற்காக உழைத்த, நிலம் வெட்டிச் சீர்படுத்தி விதை விதைத்து வேலிகட்டி அறுவடையும் செய்துகாட்டிவிட்டுப் போனவர்களை- அந்தச் சாதனையாளர்களை நினைவுபடுத்தி அவர்கள் செய்த சாதனைகள் என்னவென்பதை-"

நான் எதற்க்காக இந்தப் பதிவுகளை எழுதுகிறேன் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள். உங்களின் இந்த பரந்த மனப்பான்மைக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Amudhavan said...

என்னுடைய மற்ற சாதாரணப் பதிவுகளுக்கெல்லாம் வந்து நிறைய பின்னூட்டமிடும் பதிவர்கள் யாரையுமே காணோம் என்பதிலிருந்தே அவர்களின் எண்ணம் என்னவென்பது புரிகிறது.வாதம் புரியவோ பதில் சொல்லவோ அவர்களால் முடிவதில்லை என்ற அவர்களின் கையறு நிலையும் புரிகிறது. உண்மையில் உங்களுடைய இந்தப் பதிவு என்னுடைய ஒரு தளத்தில் மட்டுமல்ல இசைபற்றி இங்கே பேசும் பலருடைய தளத்திலும் இணைக்கப்படவேண்டிய ஒன்று. உண்மையின் விவரங்களை மேற்பூச்சோ அலங்காரங்களோ இல்லாத விவரங்களை எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பது நியாயம்தானே.
தமிழ்வெளியில் இதனை இணைத்ததற்கும் நன்றி.

கீதமஞ்சரி said...

தமிழ்த் திரையிசைத் தொடர்பான பல அற்புதத் தகவல்களை தங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். காரிகன் அவர்களின் தளம் சென்றுபார்த்துக் கருத்திட்டேன். தமிழ்த்திரையிசையின் பொற்காலத்தை நித்தமும் போற்றி நினைவுகூர்பவள் என்ற முறையில் நானும் பெருமிதம் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

Amudhavan said...

தங்களைப் போன்று நாலும் தெரிந்து ரசனை கொள்பவரின் வருகை மகிழ்வை மட்டுமல்ல, பெருமையையும் தருகிறது கீதமஞ்சரி.

Anonymous said...

http://www.itwofs.com/tamil-others.html

=============================================
En manadhu ondru thaan [Film: Avan oru sarithiram]
Composer: MS Viswanathan
Inspired by Beethoven's Fur Elise!
Yes, inspired!
=============================================
Anubavam pudhumai [Film: Kaadhalikka Neramillai]
Composer: MS Viswanathan
Inspired by the Italian song Besame Mucho!
Yes, inspired! But very well Indianised by MSV!
=============================================
Paartha nyabagam illayo [Film: Pudhiya Paravai]
Composer: MS Viswanathan
Inspired by the song 'Sway with me'! Looking for more details. Posted here is sung by Dean Martin.
Listen to Paartha nyabagam | Sway with me
Inspired!
=============================================
Kalyana samayal saadham/ Vivaha bhojanammu [Film: Mayabazar]
Composer: Ghantasala
Partly inspired by the famous 'Laughing Samba'.
Listen to Kalyana samayal | Vivaha bhojammu | Laughing samba
Interesting inspiration, though!
=============================================
Adhe Kangal
Composer: Veda
One of Veda's most popular films, 'Adhe Kangal' had 2 prominent lifted songs. I had earlier posted a few Hindi versions of the 1964 Walt Disney classic 'Chim chim cher-ee' from the movie Mary Poppins. A Tamil version can be found in Adhe Kangal too (the song 'boom boom boom maattukkaran'), but a fairly good improvisation at that. Another lift from this movie was the song 'Oh oh ethanai azhagu' which was a direct lift from the Venturers hit, 'Pedal Pushers'.
Listen to Boom boom maattukkaran | Chim chim cher-ee
Listen to Oh oh ethanai azhagu | Pedal pushers
=============================================
Ayya Sami [Film: Or Iravu (1951)]
Composer: Sudarsanam
Lifted from Edmundo Ros's 1945 track, 'Chico chico'
Listen to Ayya Sami | Chico Chico
Also lifted by C Ramachandra in the film Samadhi (1950) for the song 'Gore gore'. See Hindi - Others, item 10.
=============================================
Ulagam Engum Ore Mozhi [Film: Nadodi (1966)]
Composer: M S Viswanathan
Inspired by the American folk song, 'Tom Dooley', made famous by The Kingston Trio, in 1958.
Listen to Ulagam engum | Tom Dooley
Like any other Indian inspiration M S Viswanathan has used the Pallavi (opening) but uses his own imagination further into the track.
=============================================
En Aattamellaam [Film: Alibaba & 40 thieves (1956)]
Composer: Dakshinamoorthy S
Inspired by a Middle Eastern track, 'Ya Habeebi Taala' by legendary singer Asmahan.
Listen to En Aattamellaam | Ya Habeebi Taala
The similarity in the first couple of lines is obvious, while there seems to be a conscious attempt on the part of the composer to deviate from the original and make it sound different!
=============================================
Palinginaal oru maaligai [Film: Vallavan Oruvan (1966)]
Composer: Veda
The song is a unabashed lift of the jazz standard, Frenesi. Frenesi was first composed by Alberto Dominguez and was later adapted as a jazz standard.
Listen to Palinginaal | Frenesi
The original has been performed and recorded by many famous artists including Frank Sinatra and Perez Prado (the version below!).

Amudhavan said...

வாங்க அனானிமஸ் ரொம்பவும் பாடுபட்டு திரு எம்எஸ்வி உட்பட பலரின் இன்ஸ்பிரேஷன்களைப் பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இளையராஜாவை மட்டும் மிகவும் கவனமாகத் தவிர்த்திருக்கிறீர்கள். இளையராஜாவின் சில தழுவல்களின் பட்டியலை திரு வவ்வால் தமது பதிவில் போட்டிருக்கிறார்.
இதெல்லாம் பரவாயில்லை. நீங்கள் வேதா தழுவல் பாடல்களைப் போட்டிருக்கிறார் என்ற பட்டியல் கொடுத்திருக்கிறீர்கள் பாருங்கள் அங்கேதான் உங்கள் பாட்டு ரசிப்பைப் பற்றி சந்தேகமே வருகிறது.
ஏனெனில் இசையமைப்பாளர்களில் வேதாவின் அடையாளமே அவர் மற்ற மொழிகளில் வந்த சிறந்த டியூன்களைத் தழுவி பாடல்கள் போடுவார் என்பதுதான். உண்மையில் அவரது படங்கள் வரும்போது எந்தெந்த பாடல்களை வேதா போட்டிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அவரது படங்களுக்குப் போவார்களாம். அவர் இசையமைக்கும் படங்களில் அவரது ஒரிஜினல் டியூன்கள் ஒன்று அல்லது இரண்டு இருந்தாலே அபூர்வம். அப்படி இருக்க ரொம்பவும் முனைந்து அவர் காப்பியடித்துப் பாடல்கள் போட்டார் என்று வேலை மெனக்கெட்டு தகவல் கொடுத்திருக்கிறீர்கள் பாருங்கள், நல்ல தமாஷ்!

Anonymous said...


அய்யா,

இ.ராசா காப்பிய நண்பர்கள் ஏற்கனவே எழுதிட்டாங்க. அதனாலதான் ஹி..ஹி..!

http://www.itwofs.com/

மேல உள்ள தளத்துக்குப் போனா எல்லோரையும் ஜீப்புல ஏத்தியிருப்பாங்க.

itwofs = indian inspired film music.

அதே அனானி

Post a Comment