Friday, June 28, 2013

சாருநிவேதிதாவும் இளையராஜாவும்






சாருநிவேதிதா அவ்வப்போது இளையராஜா பற்றி எழுதுவது வாடிக்கைதான். இந்த இணைய உலகில் அதாவது தமிழ் இணைய உலகில், ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. இந்த நாட்டின் பிரபலங்களில் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உங்களைப் பேச அனுமதிப்பார்கள். யாரை வேண்டுமானாலும் திட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். எந்தவித எதிர்ப்பும் வராது. அப்படியே வந்தாலும் அது வாதத்திற்கு வாதம் என்ற அளவில்தான் இருக்கும்.

மகாத்மாவைப் பற்றி விமர்சிக்கலாம். பண்டித நேருவைப்பற்றி விமர்சிக்கலாம். லால்பகதூர் சாஸ்திரியை, வல்லபபாய் பட்டேலை, மொரார்ஜி தேசாயை, பால் தாக்கரேயை, மோடியை, அத்வானியை, இந்திரா காந்தியை.......ஏன், தமிழகத்திற்கு வந்தால் பெரியாரை, ராஜாஜியை, காமராஜரை, அண்ணாவை, கலைஞரை ஜெயலலிதாவை இன்னமும் சிவாஜியை எம்ஜிஆரை, விஜயகாந்தை, விஜய்யை, அஜித்தை, சூர்யாவை........ யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கூடவே தாளம் போட இன்னும் இருபது பேர் கிடைப்பார்கள்.

ஆனால் தப்பித் தவறிக்கூட இளையராஜாவை மட்டும் விமர்சிக்கக்கூடாது. இது இணையம் பூராவும் பரவியிருக்கும் ஒரு விதமான மௌடீக கொள்கையாக இருக்கிறது. இது ஏனென்று தெரியவில்லை.

இதற்கு சமீபத்திய உதாரணம் பாரதிராஜா.

பாரதிராஜா விகடனில் இளையராஜாபற்றிக் கருத்து தெரிவித்திருந்தார். உடனே பாரதிராஜாவை உண்டு இல்லையென்று ஆக்கி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவருடைய துரதிர்ஷ்டம் இரண்டு நாட்கள் கழித்து அவர் விமர்சித்திருந்த மணிவண்ணன் திடீரென்று இறந்துவிடவே மொத்த இளையராஜா எதிர்ப்பு விமரிசனங்களையும் மடைமாற்றி பாரதிராஜா விமர்சித்ததால்தான் மணிவண்ணன் இறந்துவிட்டார் என்று பெயிண்ட் அடித்த விமரிசனமாகப் பண்ணிவிட்டார்கள்.

இதோ இப்போதுகூட அடுத்த விகடன் இதழில் இளையராஜா பற்றி பாரதிராஜா பதில் சொல்லப்போகிறாராம். கேள்வி மட்டுமே விகடனில் வந்திருக்கிறது. பாரதிராஜா என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியாது.ஆனால் இப்போதே பாரதிராஜாவை எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த ரசிகர்களாவது பரவாயில்லை. வினவுக்கு என்ன வந்தது?

வியப்பு என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைப்பேரையும் அல்லது அத்தனை விஷயங்களையும் கன்னாபின்னாவென்று பிரித்துக்கட்டி பிய்த்து உதறும் வினவு தளம் கூட இளையராஜாவை மட்டுமே உயர்த்திப்பிடித்து எழுதுகிறது. வினவு பாராட்டியிருந்த இன்னொரு பிரபலம்- இரண்டாவது பிரபலம்- ஷ்ரேயா கோஷல்.

அது கிடக்கட்டும். சாரு சில விஷயங்களில் மட்டும் எப்போதும் தமது கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை.அதில் ஒன்று இளையராஜா பற்றிய விஷயம்.

நான் இணையத்தில் அடிக்கடி சொல்லிவரும் அதே கருத்துக்களைத்தான் அவரும் சொல்லிவருகிறார். இளையராஜாவை விடவும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கெனவே தமிழில் இருக்கிறார்கள்.

இன்னொரு மிகப்பெரிய கோமாளித்தனம், இளையராஜாதான் பாடல்களில் இன்டர்லூட் எனப்படும் பின்னிசையைக் கொண்டுவந்தார்- என்பது. இப்படி எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது என்பதே வேஸ்ட். இவர்களாகத் தேடி பாடம் கற்றால்தான் உண்டு.

இரண்டாவது- படங்களில் வரும் பின்னணி இசை. பின்னணி இசை கோர்ப்பில், பின்னாட்களில் இளையராஜாவின் பங்கு பாராட்டுக்குரியதுதான். நல்ல பின்னணி இசை சேர்ப்பவர் இளையராஜா என்ற அளவில்தான் இது அடங்கும். ஆனால் இதையே உலக மகா இசையமைப்பாளர் ஆகா ஓகோ என்று இவர்கள் ஆடும் ஆட்டம் பரிதாபத்திற்குரியது. இதுபற்றிப் பிற்பாடு நிறைய எழுத இருப்பதால் இப்போதைக்கு இது போதும்.

ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் சினிமாவிலுள்ள பல்வேறு தொழில்நுணுக்கங்களிலும் நாள்தோறும் ஏற்பட்டுவரும் மாறுதல்களில் ஒன்றுதான் பின்னணி இசையில் இளையராஜா பின்னாட்களில் ஏற்படுத்திய மாறுதல். அதுவும் நிறைய இசையமைப்பாளர்கள் செய்த ஒன்றுதான். இந்த ஒன்றுக்காகவே உலகில் இவருக்கு இணையாக யாருமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் அலைவதுதான் கேவலமாக இருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
இளையராஜா பற்றிய சாருவின் கருத்து இது.

ஒருநாள் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் பத்துப் பதினைந்து பேர் வந்து விட்டனர்.  நான் விருந்தாளியாகவே இருந்தாலும் என்னைச் சந்திக்க புதிய நண்பர்களை அனுமதிப்பதில்லை.  அதிலும் ஒரு நண்பர் இளையராஜா விஷயத்தை வைத்து என்னை மடக்க வேண்டும்என்ற திட்டத்தில் நூறு கேள்விகளோடு வந்திருக்கிறார்.
வந்தவுடனேயே அவரை நாக்-அவுட் செய்து விட்டேன்.  இளையராஜாவை விமர்சித்தேனாநானாஎனக்கு அவரை ரெம்ப ரெம்பப் பிடிக்குமேகுணாவிலும் ஹே ராமிலும் அவர் மாதிரி வேறு யாரால் அப்படிப் போட முடியும்ஏ. ஆர். ரஹ்மானாஅவர் பாடல்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது.  கடல் மட்டுமே விதிவிலக்கு.
இப்படி ஐந்து நிமிடம் பேசியதுதான் நாக்-அவுட்.  நான் மேலே எழுதியதெல்லாம் பொய் அல்ல.  நிஜம்தான்.  ஆனாலும் எனக்கு இளையராஜாவைப் பிடிக்காது.  ஏனென்றால், அவரை விட ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள்.  அவர் பொன்மலை என்றால் இங்கே பல இமயங்கள் இருந்திருக்கின்றன.  விஸ்வநாதன் ராமமூர்த்தி duo-வை என்னவென்று சொல்வதுஒரு படம் என்றால் அதில் வரும் ஐந்து பாடல்களையும் சூப்பர் ஹிட் பண்ணுவார்கள் அவர்கஆனந்த ஜோதி ஒரு உதாரணம். கே.வி.மகாதேவனும் அப்படியே. கர்ணன் உதாரணம்.  இது போக, தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா போன்றவர்களின் படங்களுக்கெல்லாம் இசை அமைத்தவர்கள் யார்இன்றைக்கு யாருக்காவது பெயர் ஞாபகம் இருக்கிறதா?
என்னைப் பலருக்கும் பிடிக்காமல் போனதற்குக் காரணம், நான் இளையராஜாவை விமர்சித்ததுதான் என்று தெரிகிறது.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  ஏனென்றால் உங்களுக்கு இளையராஜாவை மட்டுமே தெரியும்.  எனக்கோ உலக இசை உள்ளங்கையில். உதாரணமாக, மெட்டாலிகாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள்.  இதைக் கேட்பதால்தான் என்னால் இன்னமும் 15 வயது இளைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்க முடிகிறது.  பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என் விசிறிகள்.  புத்தகம் அல்ல; இசை தான் எங்களை இணைப்பது.
ஓகே. இளையராஜா பற்றிக் கூட என்னோடு விவாதிக்கலாம்.  ஆனால் அதற்கு எனக்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டும்.  என் நேரத்தை என்னால் ஓசியில் தர முடியாது.  அதிலும் முன் அனுமதி இல்லாமல், எனக்குத் தெரிந்த உங்கள் நண்பர்களின் துணை கொண்டு என்னை சந்திப்பதை அத்துமீறல் என்றே நான் கருதுகிறேன்.  திபுதிபுவென்று இருபது பேர் புதிதாக வந்ததும் நான் மிரண்டே போனேன்.  எங்கள் வாசகர் வட்டக் கூட்டங்களில் அப்படி ஒருவர் கூட புதிய நபராக அனுமதி இல்லாமல் வருவதில்லை.  வருவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.

மேற்கண்ட சாருவின் எழுத்தில் ஒரு சிறு திருத்தம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த படங்களில் ஐந்து பாடல்கள் என்றால் ஐந்து பாடல்களும் ஹிட் என்கிறார். அவர்கள் இசையமைத்த படங்களில் ஐந்து பாடல்கள் அல்ல. ஆறு, ஏழு, எட்டு பாடல்கள் என்றுதான் பெரும்பாலும் இருக்கும். அத்தனைப் பாடல்களையும் தேனாமிர்தமாக ஆக்கிய கலைக்கு அவர்கள் மட்டுமே சொந்தக்காரர்கள். அவர்கள் இசையில் மிகக் குறைவான பாடல்கள் கொண்ட படம் கற்பகம். அந்தப் படத்தில் வெறும் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

1)     அத்தைமடி மெத்தையடி 2) பக்கத்துவீட்டு பருவமச்சான் 3)ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 4)மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா........கவிஞர் வாலியைக் கடைக்கோடிவரைக் கொண்டுசேர்த்தவை இந்தப் பாடல்கள்தாம். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம்....நான்கு பாடல்களையும் பாடியவர் ஒரே ஒருவர். பி.சுசீலா. வேறு குரல்களோ, ஆண் குரலோ படத்தில் கிடையாது. அந்தக் காலத்திலேயே இம்மாதிரியான சாதனைகளையெல்லாம் சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போனவர்கள் அவர்கள். இன்றுவரை யாராலும் இந்தச் சாதனைகளையெல்லாம் தொடக்கூட முடிந்ததில்லை.

இன்னொன்று கே.வி.மகாதேவனும் மிகப்பெரிய அற்புதங்களையெல்லாம் நிகழ்த்திக்காட்டிய இசையமைப்பாளர். அவருடைய சாதனைக்கு உதாரணம் கர்ணன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

சாரு, கர்ணனும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த படமே. நீங்கள் தில்லானா மோகனாம்பாளையோ, திருவிளையாடலையோ சொல்ல வந்தீர்களோ? இருக்கக்கூடும்.

சாருநிவேதிதா  எங்கோ ஒரு இடத்திற்குப் போனாராம். அங்கே அவருடைய ரசிகர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று உட்கார்ந்த இடத்தில் இளையராஜா பற்றி எப்படி எழுதலாம் என்று கேட்பதற்காகவே ஒரு கூட்டம் வந்ததாம். நல்ல கூட்டம்தான் போ.

சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே இது.

43 comments :

வருண் said...

***இன்னொன்று கே.வி.மகாதேவனும் மிகப்பெரிய அற்புதங்களையெல்லாம் நிகழ்த்திக்காட்டிய இசையமைப்பாளர். அவருடைய சாதனைக்கு உதாரணம் கர்ணன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ***

பழைய தமிழ் திரைப் படங்கள் விசயத்தில் நான் "ஞான சூனியம்"னு அப்பப்போ ஏதாவது இது மாரி ஒளறிக் கொட்டி கிளறி மூடுவார்!

Factual errors are acceptable. But it comes out from a critic especially when he is criticizing someone badly, he looks LIKE A REAL CLOWN and his article looks like a TRASH!

Anonymous said...

அதே போல் சிவகுமார் பற்றியும் சாரு FB இல் போட்ட ஒரு விமர்சனம் இருக்கின்றது. அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா ?

Anonymous said...

"இளையராஜாவை ‘மட்டும்’விமர்சிக்கக்கூடாது. இது இணையம் பூராவும் பரவியிருக்கும் ஒரு விதமான ‘மௌடீக கொள்கையாக’ இருக்கிறது. இது ஏனென்று தெரியவில்லை."

இது மொண்ணையான கருத்து. AR ரஹ்மான் ரசிகர்கள் ராஜாவை கழுவி கொண்டுதான் இருகின்றார்கள்.
ஒரு சின்ன திருத்தம். அவர்கள் விமர்சனங்கள் செய்வது பெரும்பாலும் ஆங்கிலத்தில். அதனால் உங்களை போன்ற பழைய பஞ்சாங்கங்கள் அதை படிக்கச் வாய்ப்பிருக்காது

BABU SIVA

Anonymous said...

"சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே இது."

நம்பிட்டோம்

காரிகன் said...

அமுதவன் அவர்களே
உங்களின்
இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் அவருக்குப்பின் வந்த இளம் இசையமைப்பாளர்களும்………………….
என்ற பதிவைப் படித்துவிட்டு இங்கே வருகிறேன். அதில் அனானியாக வந்தஒரு நபர் திருதாஸ் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அந்த தாஸ் யார் என்பது எனக்கு என்று சற்று புரிந்து விட்டது. ஆனால் அதை இப்போது நான் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்தபின் வெளியிடுகிறேன். இந்தப் பதிவைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் சாரு ஒரு மூன்றாந்தரனாமான எழுத்தாளர் என்பதில் எனக்கு கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை இருந்தும் அவரை சிலர் இழிவாக பேசுவதின் காரணம் அவர் இளையராஜாவை காட்டமாக விமர்சித்ததே. அதில் உண்மையும் இருக்கிறது. இதே சாரு தான் ஒரு முறை இளையராஜா போட்ட அனைத்து பாடல்களும் எம் எஸ் வி( டி கே ஆர்)இசையில் வந்த ஆனந்த ஜோதி படத்தின் நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா என்ற ஒரே பாடலுக்கு ஈடாகாது என்று குறிப்பிட்டிருந்தார். இது சற்று மிகையான வாக்கியம் என்றாலும் அவர் சொல்ல விழைந்தது ஒரு வகையில் உண்மையாகவே எனக்குப் படுகிறது.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வழக்கம் போல தெளிவான வாதங்களை முன் வைத்துள்ளீர்கள், ஆனால் இதுல சாரு மேட்டர் தான் காமெடியாகிப்போச்சு. சாரு கெக்கேபிக்கேனு தத்துவ முத்துக்களை உதிர்ப்பவர் என்பதால் ,அவரது கருத்துக்களை பெரும்பாலோர் ரசிப்பதில்லை,அது உண்மையாக இருப்பினும்!.

# மணி வண்ணன் மறைவுக்கு நினைவேந்தல் செலுத்தும் பதிவும் படிச்சேன், அப்போ பின்னூட்டமிட இயலாத நிலை, மணிவண்ணன் மீது பெரிதான அபிப்பிராயமெல்லாம் எனக்கு இல்லை,ஆனால் நீங்கள் எழுதியதைப்பார்த்தால் நல்லவிதமாக நினைக்கத்தூண்டுகிறது.

திரையுலகில் நுழையும் பொது ஒவ்வொருவரும் "லட்சியங்களுடன் தான் வருகிறார்கள், பின்னர் லட்சங்களுக்காக கிளிஷேவா படம் எடுக்க ஆரம்பிச்சுடுறாங்க, அதற்கு மணிவண்ணனும் விதி விலக்கல்ல.

கலைத்துறையில் பலருடன் நீங்கள் கொண்டிருக்கும் நேரடி அனுபவங்கள் ஆச்சர்யமுட்டுகின்றது. பல புதிய தகவல்களும் கிடைக்கிறது.

Anonymous said...

"...இதுபற்றிப் பிற்பாடு நிறைய எழுத இருப்பதால் இப்போதைக்கு இது போதும்..."

இன்னும் முடியலையா? இப்பவே பீதி கிளம்புதே!

Anonymous said...

Post is not very clear
:Raj kumar

Jayadev Das said...

சாரு வாயைத் திறந்தால் சாக்கடையை விட நாறுமே.

இளையராஜா நம்மை தனது இசையால் பல காலம் மகிழ்வித்தவர். அதற்க்கு மேல் நிறை குறை எல்லோருக்கும் இருக்கும்.

வினவிப் பொருத்தவரை, ரஞ்சிதானந்தாவையே ஆதரித்தவர்கள் என்ன காஞ்சி புறத்தில் இருப்பவர்கள் பிராமண இனமாம் இவர் OBC கள்ளச் சாமியாராம். ஐயோ.........ஐயோ.........


Anonymous said...

Have you ever read the Nandhalaalaa movie review of Charu Nivedita? Charu said Ilayaraja is exceptional in that movie since Myskin is his friend during that time...Charu is actually a "santharppavaathi" who keeps on saying that he won't compromise...

Anonymous said...

தமிழின் மிகப்பெரிய எழுத்தாளன் , [ இதை ஜெயமோகன் ,ராமகிருஷ்ணன் அறிந்தால் என்னை கொன்று போட்டு விடுவார்கள் ]நித்தியானந்தாவின் பக்தன் சாரு ரொம்ப விஷயம் தெரிந்தவராம் ! ஏனென்றால் தமிழ் படத்தில் ஸ்பெயின் நாட்டு இசையில்லை என்று புலமுபும் இசை மேதை.
நல்ல கூட்டு ! இசை விளங்கிடும்.

தான் மாட்டிக் கொள்ளும் இடங்களை ஒரு பாய்ச்சலாய் தாண்டி விடுவார்.!இல்லை என்றால் அவருடை " சிண்" சிலரை கொண்டு வருவார்.

அமுதவன் சாருவை தனக்கு துணைக்கு அழைத்திருக்கின்றார்.சாரு இளையராஜாவை மாட்டி விடுவதாக எண்ணி எம்.எஸ்.வீயை ஒருமுறை அம்மணமாக்கியிருந்தார்.

வினவுவைப் பற்றி புலம்பியுள்ளீர்கள் ! அவர்கள் எப்போதும் சரியாகத் தான் எழுதுகிறார்கள்.சொலல வேண்டியதைத் துணிவோடு சொல்பவர்கள்.அவர்கள் ஏதாவது எழுதியிருந்தால் சரியாகத்தான் இருக்கும்.

சாருவையே திருத்தி இருகின்றீர்கள்.அப்படியே காரிகனையும் கொஞ்சம் திருத்துங்கள்.
அமுதை பொழியும் நிலவே பாடலை ராமநாதன் இசையமைத்தார் என எழுதியுள்ளார்.

இளையராஜாவை எதிர்ப்பதாக எண்ணி வலிந்து பழையவர்களை இப்போதாவது கேட்கிறீர்கள்.அதற்கு இளையராஜாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

வாழ்த்துக்கள்

நம்பள்கி said...

இளையராஜா பெரிய இசை மேதை. அது எவ்வளவு உண்மையோ அதேமாதிரி G. ராமநாதன் மற்றும் S.M. சுப்பயா நாயுடுவும் பெரிய இசைக் கலைஞர்.

உத்தமபுத்திரன் யாரடி நீ மோகினி பாடல் வரவேண்டிய வருடம் 2000; ஆனால் அன்றே அந்தப் பாடல் ஒரு trend setter. இன்றும் அந்தப் பாடல் அந்த நடனத்தை அடிக்க வேறு பாடல் இல்லை (இது என் கருத்து; அவ்வளவே).

இளைய ராஜா தான் சென்னை பெண்களை [பாட்டுக்காக] இந்திப் படத்தை பார்ப்பதை விட்டு தமிழ் படம் பார்க்கவைத்தவர். இந்திப படம் மட்டும் பார்த்த என் நண்பிகள் சொன்ன கருத்து அவ்வளவே. இது தான் சரி என்று வாதிடமாட்டேன்.

தமிழிளல், பல இசை மேதைகளில்..இளைய ராஜாவும் ஒருவர்.

Amudhavan said...

வருண் said...
\\பழைய தமிழ் திரைப் படங்கள் விசயத்தில் நான் "ஞான சூனியம்"னு அப்பப்போ ஏதாவது இது மாரி ஒளறிக் கொட்டி கிளறி மூடுவார்!\\

அதனைக் கொஞ்சம்கூட சங்கோஜமில்லாமலும், ஒருவித சந்தோஷத்துடனும் தொடர்ந்து செய்வாரே அதை கவனித்திருக்கிறீர்கள்தானே!

Amudhavan said...

Anonymous said...

\\அதே போல் சிவகுமார் பற்றியும் சாரு FB இல் போட்ட ஒரு விமர்சனம் இருக்கின்றது. அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா ?\\

சாருவைப்பற்றி எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்று ஏற்கெனவே இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு மனிதர் ஆயிரம் குறைகளோடு இருந்தாலும் தப்பித்தவறி ஏதாவது ஒன்றைப்பற்றிக்கூடவா சரியாகச் சொல்லமாட்டார்? அவர் சிவகுமாரை என்ன சொல்லியிருக்கிறார் நெல்சன் மண்டேலாவை என்ன சொல்லியிருக்கிறார் என்பதுபற்றி எனக்குக் கவலையில்லை. இளையராஜாவைப் பற்றி அவர் சொல்லியிருந்தது என்னுடைய பார்வைக்கு சரியாக இருந்தது.
அதனால் அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் எதற்காக ஒப்புக்கொள்ள வேண்டும்? இந்தத் தொனியை எனது பதிவிலேயே தெரிவித்திருக்கிறேனே.

Amudhavan said...

காரிகன் said...
\\அனானியாக வந்தஒரு நபர் திருதாஸ் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அந்த தாஸ் யார் என்பது எனக்கு என்று சற்று புரிந்து விட்டது. ஆனால் அதை இப்போது நான் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்தபின் வெளியிடுகிறேன். \\

பதிவுலகில் ஒரே மாதிரியான 'தாஸ்கள்' இன்னமும் நிறையப்பேர் இருக்கிறார்கள் போலிருக்கிறதே. கண்டுபிடியுங்கள்........கண்டுபிடியுங்கள்...............

\\இதே சாரு தான் ஒரு முறை இளையராஜா போட்ட அனைத்து பாடல்களும் எம் எஸ் வி( டி கே ஆர்)இசையில் வந்த ஆனந்த ஜோதி படத்தின் நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா என்ற ஒரே பாடலுக்கு ஈடாகாது என்று குறிப்பிட்டிருந்தார். இது சற்று மிகையான வாக்கியம் என்றாலும் அவர் சொல்ல விழைந்தது ஒரு வகையில் உண்மையாகவே எனக்குப் படுகிறது. \\

இம்மாதிரி உண்மைகளையெல்லாம் சொன்னதற்காக சாருவை மட்டுமல்ல; இதனையெல்லாம் நினைவு படுத்தியதற்காக உங்களையும் சேர்த்தே திட்டப்போகிறார்கள்.

Amudhavan said...

வவ்வால் said...
\\வழக்கம் போல தெளிவான வாதங்களை முன் வைத்துள்ளீர்கள், ஆனால் இதுல சாரு மேட்டர் தான் காமெடியாகிப்போச்சு. சாரு கெக்கேபிக்கேனு தத்துவ முத்துக்களை உதிர்ப்பவர் என்பதால் ,அவரது கருத்துக்களை பெரும்பாலோர் ரசிப்பதில்லை,அது உண்மையாக இருப்பினும்!.\\

ஆமாம் வவ்வால், உங்கள் கருத்து சரியானதே. அவரது எல்லாக் கருத்துக்களிலும் அல்லது எல்லா எழுத்துக்களிலும் எனக்கும் உடன்பாடு இல்லை. அதற்காக அவர் சொல்வது எல்லாவற்றையும் புறக்கணிக்கவும் முடிவதில்லை. 'இளையராஜா' போல வெகுசில விஷயங்களைச் சரியாகவும் சொல்கிறார்.

\\# மணி வண்ணன் மறைவுக்கு நினைவேந்தல் செலுத்தும் பதிவும் படிச்சேன், அப்போ பின்னூட்டமிட இயலாத நிலை, மணிவண்ணன் மீது பெரிதான அபிப்பிராயமெல்லாம் எனக்கு இல்லை,ஆனால் நீங்கள் எழுதியதைப்பார்த்தால் நல்லவிதமாக நினைக்கத்தூண்டுகிறது.\\
என்னுடைய அந்தப் பதிவிலேயே மணிவண்ணன் சம்பந்தமான ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் மனோபாலாவும் நடிகர் மோகனும் பெங்களூர் வந்திருந்தார்கள் என்று எழுதியிருந்தேன், அதனைப் பெரும்பாலானோர் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது என்ன சிக்கல் என்று எழுதவில்லை. எழுதுவதாகவும் இல்லை. அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது வேறு. அவரது லட்சியங்கள் என்பது வேறு. அவரது லட்சியங்கள் பொய்யில்லை என்பது மட்டுமே என்னுடைய அபிப்பிராயம்.
அதெல்லாம் சரி, நீங்கள் பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று மக்களெல்லாம் கவலைப்பட்டுப் பின்னூட்டம் போடுமளவுக்கு டிமாண்ட் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது ஒரு சாதனையாகவே படுகிறது எனக்கு.

Amudhavan said...

Anonymous said...
\\"...இதுபற்றிப் பிற்பாடு நிறைய எழுத இருப்பதால் இப்போதைக்கு இது போதும்..."

இன்னும் முடியலையா? இப்பவே பீதி கிளம்புதே!\\

என்னங்க இதெல்லாம் இரண்டொரு பதிவில் முடிந்துவிடுகிற விஷயங்களா என்ன?

Amudhavan said...


Anonymous said...

\\ Post is not very clear
:Raj kumar\\

அப்படிங்களா? 'கிளியரா' எழுத முயற்சி பண்றோமுங்க.

Amudhavan said...

Jayadev Das said...
\\இளையராஜா நம்மை தனது இசையால் பல காலம் மகிழ்வித்தவர். அதற்க்கு மேல் நிறை குறை எல்லோருக்கும் இருக்கும்.\\

இளையராஜா நல்ல இசையமைப்பாளர் என்பதிலோ அவர் இசைமூலம் பலரைப் பலகாலம் மகிழ்வித்தவர் என்பதிலோ எனக்கும் எந்தவித அபிப்பிராயபேதமும் கிடையாது. ஆனால் சில இளையராஜா அபிமானிகள் சேர்ந்துகொண்டு செய்யும் செய்யும் நுண் அரசியலை, அல்லது பகிரங்க அரசியலை நீங்கள் அறியவில்லை அல்லது கேள்விப்படவில்லை என்று தெரிகிறது. கர்நாடக இசையின் 'புனிதத்தை' அவர் உடைத்துத் தூக்கிப்போட்டுப் பந்தாடிவிட்டாராம். இப்போதெல்லாம் கர்நாடக இசையை யாரும் பெரிதாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பதுபோல ஒரு வாதம்.
வேறொரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது ஒரு சாதி சங்கம் சார்பாக நடைபெற்ற கூட்டமொன்று முடியாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. அதில் ஒரு பாடகர் உணர்ச்சிவசப்பட்டுப் பாடிக்கொண்டிருந்தார். 'நீங்கள் காஞ்சி என்று சொன்னால் நாங்கள் பெரியார் என்று சொல்வோம். நீங்கள் தியாகய்யர் என்று சொன்னால் நாங்கள் இளையராஜா என்று சொல்வோம்'
அது நிச்சயம் திக சம்பந்தப்பட்ட அரசியல் கூட்டம் அல்ல; அப்போதுதான் ஐயையே இது என்ன என்னென்னவோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாடுகிறார்களே என்று தோன்றிற்று. பிறகு அதைத் தொடர்ந்து நடக்கும் கூத்துக்களையெல்லாம் பார்க்கும்போதுதான் இதில் அரசியல் வெகுவாகக் கலந்திருப்பது புரிந்தது.
அரசியல் எப்படியாவது தொலையட்டும். நமக்கு அது தேவையில்லை. கவலையுமில்லை.

இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் . ஆனால் 'தமிழின் ஒரே இசையமைப்பாளர் இவர்தான் என்கிறார்கள். உலகிலேயே இவருக்கு இணையான ஒருவர் இசையுலகில் இல்லை' என்கிறார்கள். முன்னோர்களையெல்லாம் புறக்கணித்து அவமானப்படுத்தும் செயலை ஏற்பதற்கில்லை.

\\வினவிப் பொருத்தவரை, ரஞ்சிதானந்தாவையே ஆதரித்தவர்கள் என்ன காஞ்சி புறத்தில் இருப்பவர்கள் பிராமண இனமாம் இவர் OBC கள்ளச் சாமியாராம்.\\

இது சம்பந்தமாய் வந்த தொடர்கட்டுரைகளில் எனக்கும் ஏற்புடைமை இல்லை. இளையராஜா பற்றிய கட்டுரையிலும் இவர்களின் வாதம் நகைப்பிற்கிடமாகத்தான் இருந்தது.

Amudhavan said...

Anonymous said...
\\Charu is actually a "santharppavaathi" who keeps on saying that he won't compromise...\\

சாரு சந்தர்ப்பவாதியாய் நிறையக் கருத்துக்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார் என்பது உண்மையே. ஆனால் இளையராஜா குறித்து எப்போதும் ஒரே விதமான கருத்தைத்தான் சொல்லிவருகிறார் என்றே நினைக்கிறேன்.

Amudhavan said...


Anonymous said...
\\வினவுவைப் பற்றி புலம்பியுள்ளீர்கள் ! அவர்கள் எப்போதும் சரியாகத் தான் எழுதுகிறார்கள்.சொலல வேண்டியதைத் துணிவோடு சொல்பவர்கள்.அவர்கள் ஏதாவது எழுதியிருந்தால் சரியாகத்தான் இருக்கும்.\\

வினவைப் பற்றி நான் ஒன்றும் புலம்பவில்லை. சமூகத் தளங்களில் எனக்கு மிகவும் பிடித்த தளம் வினவு. தமிழில் அப்படி இன்னொரு தளத்தைக் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு இணையாக 'பயப்படாமல்' எழுதுபவர்கள் யாரும் இல்லை. (சவுக்கு தளத்திற்குள் நிறைய உள் அரசியல் இருக்கிறது என்பதுபோல் உள்ளது)

வினவின் பல கட்டுரைகளைப் பாராட்டி நான் அவ்வப்போது எழுதும் கருத்துக்களை வினவின் பின்னூட்டங்களில் பார்க்கலாம். அதனால்தான் அவர்கள் தவறாக எழுதும்போது சுட்டிக்காட்டுகிறேன். இதனை அவர்கள் எழுதிய இளையராஜா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

வினவு தளம் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அவர்கள் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதல்ல. 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' குறள்தான் நமக்கு இந்த விஷயங்களில் எல்லாம் பாடம்.
\\சாருவையே திருத்தி இருகின்றீர்கள்.அப்படியே காரிகனையும் கொஞ்சம் திருத்துங்கள்.
அமுதை பொழியும் நிலவே பாடலை ராமநாதன் இசையமைத்தார் என எழுதியுள்ளார்.\\

ஆமாம். சபாஷ்மீனா படத்தைப்பற்றி எழுதும்போது டி.ஜி.லிங்கப்பாவை நினைவுபடுத்திய திரு காரிகன் தங்கமலை ரகசியம் பற்றி எழுதும்போது ஜி.ராமனாதன் என்றுதான் எழுதியிருக்கிறார். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு அவரும் உங்களுக்கு நன்றி கூறுவார்.

\\இளையராஜாவை எதிர்ப்பதாக எண்ணி வலிந்து பழையவர்களை இப்போதாவது கேட்கிறீர்கள்.அதற்கு இளையராஜாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\\

இந்தப் பாரா யாருக்காக என்றுதான் புரியவில்லை. நானெல்லாம் பழையவர்களை எப்போதுமே கேட்பவன். புதியவர்களின் எல்லாப் பாடல்களையும் முடிந்தவரை ஒருமுறையேனும் கேட்டுவிடுவது வழக்கம். நன்றாக இருந்து மனதுக்கும் பிடித்திருந்தால்தான் மறுபடி மறுபடி கேட்பது. இந்த லிஸ்டில் சமீபத்து வித்யாசாகர், ஹாரிஸ், ஜி.வி.பிரகாஷ்குமார், தாஜ்நூர், ஏன்,தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரும் உண்டு. (தேவிஸ்ரீ, கோவா பாடல்களை நன்றாகவே 'சுட்டுக்கொண்டு' வருகிறாரே)

Amudhavan said...


நம்பள்கி said...
\\இளையராஜா பெரிய இசை மேதை. அது எவ்வளவு உண்மையோ அதேமாதிரி G. ராமநாதன் மற்றும் S.M. சுப்பயா நாயுடுவும் பெரிய இசைக் கலைஞர்.\\

ஜி. ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு மட்டுமில்லை.இன்னமும் நிறைய மேதைகள் இருக்கிறார்கள் நம்பள்கி.

\\உத்தமபுத்திரன் யாரடி நீ மோகினி பாடல் வரவேண்டிய வருடம் 2000; ஆனால் அன்றே அந்தப் பாடல் ஒரு trend setter. இன்றும் அந்தப் பாடல் அந்த நடனத்தை அடிக்க வேறு பாடல் இல்லை (இது என் கருத்து; அவ்வளவே).\\

நீங்கள் சொன்னது உண்மைதான். அன்றைய அந்தப் பாடல் ஒரு trend setter தான். இசையில் மட்டுமில்லை. அந்தப் பாடலை கவனித்துப் பாருங்கள். அந்தப் பாடலில் சிவாஜியின் அங்க அசைவுகளையும், பாடிலாங்வேஜையும்தான், ரஜினி தம்முடைய முழு நடிப்பாகவும் ஸ்டைலாகவும் சுவீகரித்துக்கொண்டார். 'இதெல்லாம் ஒரு பாட்டும் இல்லை; இசையும் இல்லை' என்றெல்லாம் கூப்பாடு போடும் இ.ராஜா ரசிகர்களுக்காகத்தான் வலிந்து வலிந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பாடல் மட்டுமில்லை தமிழில் இதற்குப்பின் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பல பாடல்கள் trend setterதான். ஏன், விஸ்வநாதனின் பல பாடல்கள் trend setterதான். இவர்களுக்குப்பின்தான் இளையராஜா வருகிறார்.
\\தமிழிளல், பல இசை மேதைகளில்..இளைய ராஜாவும் ஒருவர்.\\
தமிழின் பல இசைமேதைகளில் இளையராஜாவும் ஒருவர்- என்று சொன்னதன் மூலம் நீங்கள் 'அவர்களிடம்' இருந்து சரியாக வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறீர்கள். 'அவர் மட்டுமே, அவர் ஒருவரே' என்றுதான் சொல்லவேண்டும்.

Amudhavan said...

\\இது மொண்ணையான கருத்து. AR ரஹ்மான் ரசிகர்கள் ராஜாவை கழுவி கொண்டுதான் இருகின்றார்கள்.
ஒரு சின்ன திருத்தம். அவர்கள் விமர்சனங்கள் செய்வது பெரும்பாலும் ஆங்கிலத்தில். அதனால் உங்களை போன்ற பழைய பஞ்சாங்கங்கள் அதை படிக்கச் வாய்ப்பிருக்காது

BABU SIVA \\

நமக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் பார்றா. ஆங்கிலமேதைகளும், அறிவுக்கொழுந்துகளும் பெர்னார்ட்ஷா பேரன்களும் இங்கேவந்து பின்னூட்டம் போடறாங்க.

Amudhavan said...

Anonymous said...

\\ "சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே இது."

நம்பிட்டோம் \\

நம்பிட்டீங்களா, சந்தோஷம்.

காரிகன் said...

"இளையராஜாவை எதிர்ப்பதாக எண்ணி வலிந்து பழையவர்களை இப்போதாவது கேட்கிறீர்கள்.அதற்கு இளையராஜாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்."

திருவாளர் அனானிக்கு,
ஜி ராமநாதன்,எ எம் ராஜா, கே வி மகாதேவன், சுதர்சனம், எம் எஸ் வி டி கே ஆர் போன்றவர்களின் பாடல்களை விரும்பி ஒருவர் கேட்டால் அதற்கு காரணம் இளையராஜாவா? சரிதான் போங்க. இளையராஜாவை சுற்றியே எல்லாரும் இருக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற ராஜா சிகாமணிகள் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். ஜி ராமநாதன் சுதர்சனம் போன்றவர்கள் அருகில் கூட இளையராஜா நெருங்க முடியாது. உயர்ந்த இசையை கேட்பவர்கள் இளையராஜாவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? இந்த வீண் பேச்சு வேறுவிதமான பாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். முதலில் உங்கள் பெயரை தைரியமாக சொல்லிவிட்டு கருத்து எழுத வாருங்கள். ஏன் இந்த பேடித்தனம்?

வவ்வால் said...

அமுதவன் சார்,

//அதனைப் பெரும்பாலானோர் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது என்ன சிக்கல் என்று எழுதவில்லை. எழுதுவதாகவும் இல்லை.//

அதனைக்கவனித்தேன், ஆகா பிரபலங்களுக்கு பிரச்சினை என்றால் கூட நாடிவரும் வகையில் பெரிய ஆளா இருந்திருக்காரே ,நாம தான் சாதாரணமா நினைச்சுட்டோம் போல இருக்குனு நினைச்சேன், அப்போது பின்னூட்டமிட முடியாததால் ,இப்போ சுருக்கமாக குறிப்பிடும் போது சொல்லவில்லை.

தனியாக எழுதுவீங்கனு நினைச்சேன், இப்படி எழுதமாட்டேன்னு சொல்லி ஏமாற்றிட்டிங்களே அவ்வ்!

முன்னர் ஒரு முறை யாரோ கிசு கிசு போல எழுதியதை படித்துள்ளேன், பாலைவன ரோஜாக்கள் படத்தினால் ,எம்ஜிஆரின் வெறுப்புக்கு ஆளாகி "மணிவண்ணனுக்கு" சில இடைஞ்சல்கள் வந்தது என, நீங்கள் குறிப்பிடுவது அச்சம்பவத்தினை ஒட்டியா?

# //நீங்கள் பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று மக்களெல்லாம் கவலைப்பட்டுப் பின்னூட்டம் போடுமளவுக்கு டிமாண்ட் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது ஒரு சாதனையாகவே படுகிறது எனக்கு.//

ஹி...ஹி சாதனையா ,அப்படிலாம் சொன்னால் சாதனைக்கே வந்த சோதனையாகிடும், நாம என்னமோ அவ்வப்போது கிறுக்கி வைக்கிறோம்,அதையும் நாலு பேரு படிக்கிறாங்கனு ஒரு மனத்திருப்திதான்.

நாம அடிக்கடி பதிவே எழுதாம வேடிக்கை மட்டுமே பார்ப்பது வழக்கம், வாசிப்புக்குத்தான் முன்னுரிமை, சாப்பிடும் போது கூட எதாவது பத்திரிக்கைய புரட்டினாத்தான் சோறு உள்ள இறங்குது :-))

நாம எழுதுவதுலாம் சாகவாசமத்தான் செய்வது,உங்களைப்போல நிறைய பேரு நல்லா எழுதும் போது ,அதை படிச்சிட்டு பின்னூட்டம் போட்டாலே , நம்மளுக்கு இணையச்சேவையாற்றிய திருப்தி வந்திடும், தனியா எழுதித்தான் சேவையாற்றனும்னுலாம் ஆசைப்படுவதில்லை :-))

வலையுலக நடப்புகளை விரல் நுனியில் வச்சிருக்கீங்களே, இனிமே கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும், கூடிய சீக்கிரம் ஒரு மொக்கை பதிவாச்சும் போட்டு மக்களின் ஏமாற்றத்தை போக்கிடுறேன் :-))
--------------

//நமக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் பார்றா. ஆங்கிலமேதைகளும், அறிவுக்கொழுந்துகளும் பெர்னார்ட்ஷா பேரன்களும் இங்கேவந்து பின்னூட்டம் போடறாங்க.//

நல்லா சொன்னீங்க,
இளையராசாவே இப்போ பழைய பஞ்சாங்கமாகிட்ட கதைக்கூட தெரியாமல் வெள்ளைக்கார தொறைகள் அலையிறாங்களே :-))

இப்போ அவரது இசையில் வரும் படங்களின் விமர்சனங்களை கவனித்தால் தெரியும்,இசையைப்பற்றி சொல்லும் போது, பழைய வாசனை அடிக்குது, வவ்வால் வாசம் அடிக்குதுனு கூட எழுதுறாங்க :-))
----------------

Amudhavan said...


காரிகன் said...
\\இளையராஜாவை சுற்றியே எல்லாரும் இருக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற ராஜா சிகாமணிகள் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். ஜி ராமநாதன் சுதர்சனம் போன்றவர்கள் அருகில் கூட இளையராஜா நெருங்க முடியாது. உயர்ந்த இசையை கேட்பவர்கள் இளையராஜாவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? இந்த வீண் பேச்சு வேறுவிதமான பாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.\\

காரிகன், உங்களைப்போல் இம்மாதிரி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் பாணியெல்லாம் நமக்கு வராது. உங்கள் பதிவுகளில் நீங்கள் எழுதுபவைகளுக்கு ஆகட்டும், மற்ற உங்களின் பின்னூட்டங்களுக்கு ஆகட்டும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன். இப்படிப்பட்ட சிறிது பயம் இருப்பதும் நல்லதுக்குத்தான்.

Amudhavan said...

வவ்வால் said...
\\ஆகா பிரபலங்களுக்கு பிரச்சினை என்றால் கூட நாடிவரும் வகையில் பெரிய ஆளா இருந்திருக்காரே ,நாம தான் சாதாரணமா நினைச்சுட்டோம் போல இருக்குனு நினைச்சேன்\\

அவங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்ட சமயத்தில் வந்தாங்க என்றுதான் சொன்னேனே அல்லாமல் அந்தச் சிக்கலைத் தீர்க்க என்னிடத்தில் வந்தார்கள் என்று அர்த்தமில்லை. தவிர நட்பு வட்டம் என்பதனால் என்னைத் தொடர்பு கொண்டார்கள் அவ்வளவுதான்.

\\எம்ஜிஆரின் வெறுப்புக்கு ஆளாகி "மணிவண்ணனுக்கு" சில இடைஞ்சல்கள் வந்தது என, நீங்கள் குறிப்பிடுவது அச்சம்பவத்தினை ஒட்டியா?\\

இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இது வேறு; அது வேறு.

\\இளையராசாவே இப்போ பழைய பஞ்சாங்கமாகிட்ட கதைக்கூட தெரியாமல் வெள்ளைக்கார தொறைகள் அலையிறாங்களே :-))\\

\\இப்போ அவரது இசையில் வரும் படங்களின் விமர்சனங்களை கவனித்தால் தெரியும்,இசையைப்பற்றி சொல்லும் போது, பழைய வாசனை அடிக்குது, வவ்வால் வாசம் அடிக்குதுனு கூட எழுதுறாங்க :-))\\

இந்த வெள்ளைக்கார தொரைங்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கவேண்டும். அப்படிப் புதியதாக வேண்டுமென்றால் அனிருத்தையும் தாண்டிக்கொண்டுதானே போகவேண்டும். இவர்கள் இ. ராஜாவிடமே உட்கார்ந்து ஜல்லியடித்துக்கொண்டு மற்ற அத்தனைப்பேரையும் காய்ச்சி ஊற்றிக்கொண்டிருப்பார்கள். கேட்பவன் எல்லாம் பிசாத்துக்கள் என்று நினைப்பு இவர்களுக்கு. பரிதாப நிலைக்கு வந்துவிட்டவர்களுக்குக் கோபம் வருவதில் வியப்பில்லை.

Anonymous said...

காரிகனின் பதிவுக்கு பின்னூட்டங்கள் கடுமையாக இல்லாமைக்கு காரணம் அவரின் பதிவில் உள்ள நேர்மை.
ஆனால் உன் பதிவில் சுத்தமாக இல்லை.

Amudhavan said...


Anonymous said...
\\காரிகனின் பதிவுக்கு பின்னூட்டங்கள் கடுமையாக இல்லாமைக்கு காரணம் அவரின் பதிவில் உள்ள நேர்மை.
ஆனால் உன் பதிவில் சுத்தமாக இல்லை. \\

சரி, காரிகனின் கருத்துக்களை நீங்களெல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தோஷமே.

Anonymous said...

//சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே //
இது எதிர்வினையாற்றல் அல்ல; நேர்வினையாற்றல். அதாவது அவரின் கருத்தை வழிமொழிகிறீர்கள்.
இளையராஜாவையோ அவரின் விசிறிகளையோ உங்களுக்கென்று ஒரு அபிப்பிராயம் அதைச்சொல்லிவிட்டுப்போங்களேன். அதற்குத்தானே பதிவு? இங்கே எப்படி சாரு வருவார்?
தைரியாமாக உங்கள் கருத்துக்களை எடுத்துவையுங்கள். சவாரி செய்ய குதிரையைத்தேடிதல் இழுக்க பெரியவரே!

காரிகன் said...

Anonymous said...
காரிகனின் பதிவுக்கு பின்னூட்டங்கள் கடுமையாக இல்லாமைக்கு காரணம் அவரின் பதிவில் உள்ள நேர்மை."

திரு அனானிக்கு,
என் பதிவை நேர்மை என ஏற்றுக்கொண்டது குறித்து மகிழ்ச்சி.இதே வார்த்தையை என் அடுத்த பதிவிலும் அதற்கடுத்த பதிவிலும் தெரிவித்தால் இன்னும் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்.

Amudhavan said...

Anonymous said...

\\இது எதிர்வினையாற்றல் அல்ல; நேர்வினையாற்றல். அதாவது அவரின் கருத்தை வழிமொழிகிறீர்கள்.
இளையராஜாவையோ அவரின் விசிறிகளையோ உங்களுக்கென்று ஒரு அபிப்பிராயம் அதைச்சொல்லிவிட்டுப்போங்களேன். அதற்குத்தானே பதிவு? இங்கே எப்படி சாரு வருவார்?\\

எதிர்வினையல்ல நேர்வினை என்று சரியாகவே சுட்டியிருக்கிறீர்கள். என்னுடைய அபிப்பிராயத்தை மட்டுமல்ல வரலாறு என்ன, நடைமுறை என்ன, இணையத்தில் நடைபெறும் தவறுகள் என்ன என்பதையெல்லாம்தான் இசை பற்றியும் இளையராஜா பற்றியும் நடைபெறும் விவாதங்களில் சொல்லிவருகிறேன். இணையத்தில் இது சம்பந்தமாய் கவனம் பெறாமல் இருந்த பல விஷயங்களையும் முன்வைத்துத்தான் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறேன். இதில் தைரியம் அல்லது தைரியக்குறைச்சல் என்ன வேண்டிக்கிடக்கிறது?
ஒரு விஷயத்தைச் சொல்லும்போது 'அட ஆமாம் நம்ம சேகர் கூட இதையே சொல்லியிருக்கிறாரே' என்று சுட்டிக்காட்டுவதில்லையா? அதுபோல்தான் சாருவும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

\\தைரியாமாக உங்கள் கருத்துக்களை எடுத்துவையுங்கள். சவாரி செய்ய குதிரையைத்தேடிதல் இழுக்க பெரியவரே!\\

வயது என்பது வருடத்திற்கு ஒருமுறை அல்ல வினாடிக்கு வினாடி அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது - உங்களுக்கும் சேர்த்துத்தான்!
அதனால் இந்தப் 'பெரியவரே' என்பதுபோன்ற விளிப்பும் இளிப்பும் வேண்டாம். ஐம்பது அறுபது மட்டுமல்ல, தொண்ணூறு வயதானபோதும் மனதாலும் உடலாலும் இளைஞர்களாயிருப்பவர்களும் உண்டு. மிகச்சின்ன வயதிலேயே மனதாலும் உடலாலும் கிழடுதட்டிப் போகிறவர்களும் உண்டு. நீங்கள் இதில் எந்த ரகம்?

suresh said...

@காரிகன்

// உயர்ந்த இசையை கேட்பவர்கள் இளையராஜாவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? //

"உயர்ந்த" இசை என்பது எது?

suresh said...

// இன்னொரு மிகப்பெரிய கோமாளித்தனம், இளையராஜாதான் பாடல்களில் இன்டர்லூட் எனப்படும் பின்னிசையைக் கொண்டுவந்தார்- என்பது. இப்படி எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது என்பதே வேஸ்ட். இவர்களாகத் தேடி பாடம் கற்றால்தான் உண்டு.//

தயவு செய்து ஏதாவது ஒரு லின்காவது கொடுத்து உதவுங்கள். நானும் நீங்க சொல்லிட்டே இருக்கீங்களேன்னு ஊரெல்லாம் தேடிபார்துட்டேன், கிடைக்க மாட்டேங்குது... இதை யார்தான் சொன்னார்?

// உலகில் இவருக்கு இணையாக யாருமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் அலைவதுதான் கேவலமாக இருக்கிறது //

நீங்க ஏன் சார் கேவலப்படுகிறீர்கள்? மொத்தமாக தமிழ் இசையையே இருட்டடிப்பு செய்து சாரு பேசும்போது எம்.எஸ்.வியையும் அவர்க்கு முந்தையவர்களையும் சேர்த்துதானே இருட்டடிப்பு செய்கிறார்? அவர் எழுதிய இசை பற்றிய கட்டுரைகளில் தமிழிசை பற்றி எங்கும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. பின் எப்படி அவர் இளையராஜாவைப் பற்றி குறைகூறும்போது மட்டும் எம்.எஸ்.வி, கே.வி.எம், பாகவதர், சின்னப்பா போன்றவர்கள் எல்லாரும் ஜாம்பவான்கள் என்று கூறுகிறார்? அவருடைய எந்த இசைப்பற்றிய கட்டுரையிலாவது குறிப்பிட்டு இருக்கிறாரா?

அப்படிப்பட்டவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி நீங்கள் இளையராஜாவை திட்டி ஒரு பதிவு எழுத வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. எந்த மேர்கோளுமே தேவை இல்லாமல் நீங்கள் இளையராஜாவை திட்டுவதற்கு "உங்களுக்கு" ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.

:)

காரிகன் said...

திருவாளர் சுரேஷ் அவர்களுக்கு,
உயர்ந்த இசை என்பது இளைஞர்களும் விடலைப் பசங்களும் கேட்கும் இசை இல்லை.காலத்தையும் வயது வித்யாசத்தையும் தாண்டியது என்று எடுத்துக்கொள்ளலாம். அதற்கு முன் இசைஞானி என்றால் என்ன என்பதை கொஞ்சம் விளக்கினால் நலமாக இருக்கும்.

Amudhavan said...

காரிகன் said...
\\இசைஞானி என்றால் என்ன என்பதை கொஞ்சம் விளக்கினால் நலமாக இருக்கும்.\\
காரிகன் அவர்களே நீங்கள் கேட்டிருக்கும் இந்தக் கேள்விக்கான பதிலைத் திரு சுரேஷ் மட்டுமல்ல மற்ற இளையராஜாவின் ரசிகர்கள் அல்லது பக்தர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளக்கட்டும். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் நீங்கள் கேட்டுவிட்டதால் எனக்கு நினைவு வருவதை மட்டும் சொல்லிவிடுகிறேன். கலைஞர் இளையராஜாவுக்கு அந்தப் பட்டத்தை வழங்கிய அன்றைக்கு முழுவதும் - அடுத்த நாள்வரையிலும் இளையராஜா அவர்களுடன் ஒன்றாகத் தங்கியிருந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.

suresh said...

காரிகன்,

இளைஞர்களையும் விடலைபருவத்தினரையும் நீங்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள் இன்று புரிகிறது. :)

எல்லோருமே அந்த பருவத்தை கடக்காமல் இருக்கமுடியாது. நீங்களும்தானே? அப்படிஎன்றால், அந்த பருவத்தில் நீங்கள் எந்த இசையைக் கேட்டுக்கொண்டு இருந்தீர்கள்?

மெல்லிசை மன்னர், இசைஞானி, அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார், உலகநாயகன், நடிகர் திலகம், புரட்சி தலைவர் தலைவி, திலகம், இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைங்க. இது எல்லாமே அவர்கள்பால் ஏற்படும் அன்பால் அல்லது அரசியல் காரணங்களால் அவ்வபோது வைக்கப்படும் பெயர்கள்.

அது சரி. அதோட அர்த்தத்தை என்கிட்டே ஏன் கேட்டீங்க...? :) :) :)

என்னோட பாயிண்ட் அன்னைக்கும் அதேதான் இன்னைக்கும் அதேதான்....

ஒன்றுக்கு பத்து பேர் நம் கலையின் பெருமை சொல்ல இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...

கே.வி.எம்மின் சப்தம் வேறு, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, ஏ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. மற்றபடி ஏழு ஸ்வரம்தான். ஒன்றோடு ஒன்றை கம்பேர் பண்ணி டென்ஷன் ஆகிக்காம இத்தனை ஜாம்பவான்கள் நம் காலத்தில் நம் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று உலகம் வியக்க சொல்லுவோம்.

மற்ற நாட்டவர்கள் காதில் புகை வரட்டும். :)

காரிகன் said...

கே.வி.எம்மின் சப்தம் வேறு, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, ஏ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. மற்றபடி ஏழு ஸ்வரம்தான். ஒன்றோடு ஒன்றை கம்பேர் பண்ணி டென்ஷன் ஆகிக்காம இத்தனை ஜாம்பவான்கள் நம் காலத்தில் நம் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று உலகம் வியக்க சொல்லுவோம்.

சுரேஷ் அவர்களே அதேதான். சரியாகச் சொன்னீர்கள். இப்படி புரிந்துகொண்டால் பிரச்சினையே இல்லை.இதைதான் பக்குவமான இசை ரசனை என்று சொல்கிறேன்.மேலும் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

suresh said...

திரு அமுதவன் / திரு காரிகன்,

பின்னூட்டங்களில் வரும் கருத்துகளுக்கு உரிய கவனமும், உரிமையும் கொடுத்து, கண்ணியமாகவும் சில சமயம் ரசிக்கக்கூடிய நக்கலோடும் உங்கள் தளத்தை கொண்டு செல்கிறீர்கள் என்பதை பாராட்டாக தெரிவித்துக்கொண்டு என்னுடைய சிறிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள முற்படுகிறேன். இந்த பதிவிற்கு தொர்டர்பில்லாததாககூட இது இருக்கக்கூடும்.

இங்கே இதை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை என்று பட்டால் தயவுசெய்து மன்னித்து புறக்கணித்துவிடவும்.

கிட்டத்தட்ட 700 பேர்கொண்ட இளைஞர்கூட்டதோடு தினமும் மாரடித்துக்கொண்டு இருப்பவன் நான். என் வேலை அப்படி. அவர்கள் பேச்சு, பழக்கவழக்கம், ரசனை, ஈடுபாடு, செயல்பாடு, குணாதிசயங்கள், உணவு, உடை, கேளிக்கை, கொண்டாட்டம், குடும்பம், காதல், மோதல், துக்கம் என்று பல சம்பவங்கள் நாள்தோறும் நடப்பதுண்டு.

எது நடக்கும்போதும் அவர்களுடைய இந்த பருவத்தை நான் என்னுடைய இளமைபருவத்தோடு பொருத்திப்பார்ப்பேன். 'இந்த விசயத்தில் இவன் இப்படி வினை / எதிர்வினையாற்றுகிரானே, இவன் வயதில் இதே போன்ற ஒரு சம்பவத்தில் நாம் எப்படி செய்தோம்' என்று யோசிப்பேன். ஒருவிதமான சுய அலசல்தான் இது.

suresh said...

சமயங்களில் என்னைவிட சிறப்பாகவே அவர்கள் செயலாற்றி இருக்கிறார்கள். அது எந்தெந்த இடங்களில் என்பதுதான் இங்கே முக்கியமானது.

அலுவலகப் பணியில் - ஆம், வேலையைப் பொருத்தவரை அவர்களின் analytical skills உண்மையிலேயே அதிசயக்கத்தக்கது. கொடுக்கப்பட்ட வேலையை deadline-க்குள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்கிற வகையில் அவர்களது அர்ப்பணிப்பு பண்பு, கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டது.

ஆனால் மற்ற எந்தவொரு விஷயத்திலும் அவர்களுக்கு இருப்பது ஒன்று ஒரு வித கனவக்குறைவு அல்லது ஆணவம் அல்லது அலட்சியப்போக்கு..... இந்த மூன்றில் ஏதாவது ஒன்று. நிச்சயமாக சொல்லமுடியும்.

பல இடங்களில் இதை நான் கவனித்து இருக்கிறேன்.

இதற்குமுன் நான் பணிபுரிந்த நிறுவனங்களில், அதாவது 90களில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் ஒரு குடும்ப உணர்வுடன் பணியாற்றியதாகவும் இப்போது வெறும் வியாபார உணர்வே மிஞ்சியிருப்பதாகவும் பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் சம்பளம் தர்றேன். நீ வேலை செய் இல்லாவிட்டால் இடத்தை காலி செய் என்று நிறுவனங்களும் நான் வேலை செய்கிறேன். நீ நான் கேட்பதைக்கொடு இல்லாவிட்டால் நான் இடத்தை காலி செய்கிறேன் என்று தொழிலாளர்களும் மல்லுக்கு நிற்பதுபோல் ஒரு உணர்வு.

முந்தைய காலங்களிலும் இதே பேரங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் நீ இல்லாவிட்டால் எனக்கு வேறு ஆள் என்று நிறுவனங்களும் சொன்னதில்லை இது இல்லாவிட்டால் எனக்கு வேறு நிறுவனம் என்று தொழிலாளர்களும் சொன்னதில்லை. பிரச்சனையை பேசி போராடி, வென்று தோற்று, வாழ்ந்து கெட்டுக்கொண்டுதான் இருந்தார்களே தவிர விட்டு ஓடிவிடவில்லை. அதனால்தான் அதில் ஒரு குடும்ப உணர்வு இருந்தது என்று சொன்னேன். பிரச்சனை இருக்கும். ஆனால் அதை தீர்வு நோக்கிதான் நகர்த்த முயற்சித்தார்கள். விட்டு ஓடியதில்லை. இப்போது குடும்ப உணர்வு குடும்பங்களிலேயே இல்லை.

suresh said...

90களில் வேலை இன்மை ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இப்போதோ வேலையே பிரச்சனை. வேலையில்லா திண்டாட்டம் குறைந்துவிட்டது என்று அரசாங்கம் சொல்கிறது. எனக்கென்னவோ, அன்று இருந்த அதே 1,00,000 வேலைவாய்ப்பு இன்று பலபேர் கைகளுக்கு மாறி மாறி போகிறது என்றுதான் தோன்றுகிறது. இன்று இருக்கும் வேலை நாளை இருக்காது. ஒருவிதமான uncertainity...

வாழ்வின் ஆதாரமான வருமானத்தை இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக கருத்தில் கொண்டுதான் அவர்களுடைய மற்ற எந்த அணுகுமுறையையும் ஆர்வத்தையும் கணக்கிட வேண்டியுள்ளது.

என் கணிப்புப்படி இன்றைய இளைஞர்கள் ஒருவிதமான comfort zone-க்குள் வாழவே விரும்புகிறார்கள். புதிய பரிசோதனைகளை அவர்கள் முயற்சித்துப்பார்க்க விரும்புவதில்லை. மற்றவர்கள் செய்து காட்டினால் நன்றாய் இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கே அது பிடிக்கிறதோ இல்லையோ, விமரிசனம் செய்வார்கள்; ஆலோசனைகள் சொல்லுவார்கள்.

இது, இன்றைய நிறுவனங்கள் அவர்களை groom செய்திருக்கும் லட்சணம்.

எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல், அதன் மூலத்தை ஆராயாமல் கண்ணில் தெரிவதை விமரிசனம் செய்வது, அல்லது ஆலோசனை சொல்வது... அந்த விமரிசனமும் ஆலோசனையும்கூட ரொம்பவும் மேலோட்டமாகவே இருக்கும். உள்ளார்ந்து வராது.

இங்குதான் அவர்கள்மேல் பழைய தலைமுறைக்கு ஒரு அவநம்பிக்கை வருகிறது. அந்த comfort zone mentalityதான் அவர்கள் மேல் அந்த அவநம்பிக்கையை ஊட்டுகிறது.

எதையும் ஆழ்ந்து பார்ப்பதில்லை. உணர்ந்து அனுபவிப்பதில்லை. மனம் கரைந்து அழுவதுமில்லை. மனம்விட்டு சிரிப்பதுமில்லை. வாய் விட்டு பாராட்டுவதுமில்லை. ஏன், விமரிசனம் கூட மனமார இருப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒருவித மேம்போக்குதான்.

இத்தகைய இளைஞர் கூட்டத்தில் தினமும் நாற்பது பேருடனாவது பிரயாணம் செய்கிறேன். பிரயானத்தின்போது, வேறென்ன... பாடல்கள்தான் பிரச்சனையே. fmல் பழைய பாடல் வந்தால் channel மாற்ற சொல்லுவார்கள். இப்படி போகும் விவாதம்....

suresh said...

"டிரைவர் அண்ணா சானெல் மாத்துங்க ப்ளீஸ்" - யாரோ ஒருவர்.

"ஏன்" - நான்

"போர் சார்"

"கேட்டிருக்கியா இந்த பாட்டை இதுக்கு முன்னாடி?"

"இல்ல சார்"

"பின்னே எப்படி போர்னு சொல்லரே?"

"கேட்டாலே தெரியலையா சார்?"

"நீதான் கேட்கவே இல்லையேப்பா?"

"இப்ப பாடிட்டு இருக்கில்ல சார்?"

"சரி.. கேட்டே இல்ல... முதல் ரெண்டு வரி பாடகூட வேண்டாம். சொல்லி காட்டு...."

சொல்ல முடியாது. மௌனமாகி விடுவார்.... :)

இதில் என்னை கொலைவெறி ஏற்றும் விஷயம் என்னவென்றால் தமிழ் இளைஞர்களும் வட இந்திய இளைஞர்களும்தான் வேண்டாம் பழைய பாடல் என்று புறக்கணிப்பது. ஆனால் மலையாளிகள் அந்த பழைய பாடலை விரும்பிக் கேட்கிறார்கள்.

என்ன கொடும சார் இது.....

நாங்கள் இளைய பருவத்தில் கவிஞர்களை கவனிப்போம். பாடகர்களை கவனிப்போம். வைரமுத்துவை கொண்டாடி இருக்கிறோம். பல திரைப்பாடல்களில் கண்ணதாசனையும் வாலியையும் கன்னபின்னவேன்று குழப்பிக்கொண்டு கட்டிபுரண்டு சண்டை போட்டிருக்கிறோம். எஸ்.பி.பியா டி.எம்.எஸ்ஸா என்று கழுத்தைப் பிடித்திருக்கிறோம். இன்று கவிஞர்களை யாரும் கவனிப்பதே இல்லை. கொடுமையிலும் கொடுமை தாமரை என்ற ஒரு பெண் கவிஞர் இருப்பது பெண்களுக்கே தெரியவில்லை. பாடகர்களின் குரலும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களை அவர்களால் சொல்ல முடிவதில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான்தான், ஹாரிஸ் ஜெயராஜ்தான், யுவன்தான், அணிருத்தான்.

ஒரு பாடலில் வேறு யாருமே இல்லை...

ஏன் இதை எல்லாம் இங்கே எழுதுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் :)

பிடித்திருந்தால் "like" போடவும், இல்லையென்றால் "unfriend" செய்துவிடவும்...

:) :) :) :) :) :) :) :) :)

Post a Comment