Wednesday, April 16, 2014

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர்?



இந்த வார்த்தை ஒன்றும் சாதாரண வார்த்தை அல்ல. சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு ஆட்சியையே கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவைத்த வார்த்தை இது. இப்படி ஒரு சிறிய புள்ளி கிடைத்ததும் அதனை அப்படியே திரித்து நூலாக்கி தமிழகத்தின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றுக்குக் காரணமாயிருந்த ஒரு கட்சியை மூட்டைக் கட்டி மூலையில் எறிந்த வார்த்தை.

இந்த வார்த்தையைக் கேட்டவர்கள் அப்படியே மலைத்துப் போனார்கள். ‘எத்தனைச் சாதாரணமானவர்கள், எவ்வளவு சாதாரண நிலையிலே இருந்து அரசியலுக்கு வந்தவர்கள், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலித்தவர்கள், கீழ்த்தட்டு மக்களுக்காகக் கட்சி நடத்துபவர்கள் இவ்வளவு ஒரு மோசமான ஊழலையா, இப்படி ஒரு பிரமாண்டமான ஊழலையா செய்வார்கள்? ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்றால் எப்படி? இப்படி ஒரு தொகையைக் கணக்குப் பாடத்தில்கூட எழுதிப் பார்த்ததில்லையே. இவ்வளவு பணத்தையா கொள்ளை அடித்தார்கள்?’ என்று வியந்தார்கள். மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இவ்வளவு பெரிய ஊழலைச் செய்தவராக ஆ.ராசா அடையாளப்படுத்தப்பட்டார்.

அத்தனைப் பணமும் ஆ.ராசாவுக்கும் அவரது தலைவர் கருணாநிதிக்கும் நேரடியாகக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாக ஒரு பிம்பம் புனையப்பட்டது.

மாபெரும் பொய்ச் சித்திரம் ஒன்று வானத்தைவிடப் பெரியதாக வரையப்பட்டு மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

இதனால் பலன் பெற நினைத்தவர்கள் திட்டமிட்டு இதனை பூதாகாரமாக்கினார்கள்.

ஊடகங்கள் தங்களின் அசுர பலத்தினால் இதனை எத்தனைப் பெரிதாகக் காட்டமுடியுமோ அத்தனைப் பெரிதாகக் காட்டின.

மக்களுக்கு மலைப்பு மட்டுமல்ல, கோபமும் தலைக்குமேலே கிளம்பியது.

‘இவ்வளவு பெரியதான ஒரு ஊழல், இத்தனைப் பெரிதான ஒரு திட்டம் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை மீறி, அந்தத் தலைமை அமைச்சரை ஆட்டுவித்துக்கொண்டிருப்பவர்களை மீறி, இந்த நாட்டின் நிதி அமைச்சரை மீறி, சம்பந்தப்பட்ட வலிமை வாய்ந்த அரசுத் துறைகளை மீறி ஒரு சாதாரண அமைச்சரால், அதுவும் ஆளும் கட்சியுடைய அமைச்சரால்கூட அல்ல, ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள அமைச்சரால்- சுயமாகத் தானே முடிவெடுத்துச் செய்யமுடியுமா?’ என்ற சாதாரணக் கேள்விகூட எந்த ஒரு குடிமகனுக்கும் வரவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் ‘வர’விடவில்லை.

திரும்பத் திரும்ப இந்த ஒற்றை வரியே நாடு முழுக்க பரப்பப்பட்டது. ‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியாமில்ல, ஆ.ராசா சுருட்டிட்டிராமில்ல’ என்ற வரிகளைத் திட்டமிட்டு நாடுமுழுக்கப் பரப்பினார்கள். 

பரப்பினவர்களின் நோக்கம் கலைஞர் கருணாநிதியைச் சிறுமைப் படுத்தி அவர்களுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்வதாகவும், தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவரை வரச்செய்வதாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் இதற்கான ஒட்டுமொத்தப் பலனை அறுவடை செய்தவர் ஜெயலலிதாதான்.

அவர் பாட்டுக்கு எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நீட்டப்பட்ட அறிக்கைகளில் கையெழுத்து மட்டும் போட்டுக்கொண்டிருந்தவர் அசால்ட்டாக சில நாட்கள் மட்டுமே தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

அனைத்துக்கும் காரணம் இந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்  கோடிதான்.

இந்தத் திட்டத்தில் ஊழலே நடைபெறவில்லையா, நடைபெற்ற ஊழலில் ஆ.ராசாவுக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்விகளுக்குள்ளேயெல்லாம் நான் போக விரும்பவில்லை.

இன்றைக்கு இந்த நாட்டில் கேவலம் ரோடு போடுவதிலிருந்து நடைபெறும் எல்லா விஷயங்களிலும் ஊழல் விளையாடாத இடமே இல்லை. 

சாதாரணமாக நகரசபை விவகாரங்களிலேயே ஊழல் புகுந்துவிடுகிறது நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், டான்சி ஊழல், மணற்கொள்ளை ஊழல் என்று நிறைய ஊழல்களைக் கேள்விப் படுகிறோம். அப்படியிருக்க பல ஆயிரம் கோடிகள் புரளும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் இருக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை.

ஊழல்கள் மற்றும் நிதி பெறுவது ஆகியன பற்றி சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் எம்எல்ஏ திரு பலராமன் ஒரு கருத்தைச் சொன்னார். “இந்த நிதி வாங்கறது ஊழல் இதெல்லாம் எல்லாக் கட்சிகளும்தான் பண்ணுகின்றன. இதையெல்லாம் ஒண்ணுமே செய்யமுடியாது. யார்கிட்ட இருந்தும் பணம் வாங்கலைன்னா அரசியல் கட்சிகள் கட்சியே நடத்த முடியாது. அவை பணத்துக்கு எங்கே போகும்? யார் கொடுப்பார்கள்? பொதுமக்கள் கொடுப்பார்களா? ஒரு ரூபாய்க்கூட தரமாட்டார்கள். 

மக்களிடமிருந்து பணம் வாங்கி கட்சி நடத்தமுடியுமா என்ன? அதெல்லாம் சும்மா பேச்சு. ஒருத்தனும் ஒரு பைசாகூடத் தரமாட்டான். எதோ இங்கே பார்வையாளர்களா உட்கார்ந்திருக்கிற மக்களிடம் கேட்டுப் பாருங்களேன். யாராவது ஒரு பைசா தரத் தயாராண்ணு? யாரும் தரமாட்டாங்க………….ஆக இந்த மாதிரிப் பணமெல்லாம் வேற இடத்துல இருந்துதான் வந்தாகணும்” என்றார். இது மிகவும் சத்தியமான வார்த்தை.

ஆக ஊழல்கள் எல்லாக் கட்சிகளிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. மேலே சொன்ன  எம்எல்ஏவைப் போல அதனை நியாயப்படுத்துவதும் என் நோக்கமல்ல. ஆனால் ஒட்டுமொத்த ஊழலையும் ஒருத்தரின் மீது மட்டுமே சுமத்துவதும், அதற்கு ஒரு கட்சியை மட்டுமே ஆளாக்குவதும் மற்றவர்கள் எல்லாம் தப்பித்துக்கொண்டு பதுங்குவதும்,
சம்பந்தமேயில்லாத ஒருவர் அதற்கான பலனை அறுவடை செய்துகொண்டு உத்தம வேடம் போடுவதும் ஏற்புடையது அல்ல என்பதுதான் இங்கே சொல்லவருவது.

‘இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். இதெல்லாம் மக்களிடம் போய்ச்சேராது’ என்று ஆரம்பத்திலிருந்தே அசட்டையாக இருக்க ஆரம்பித்தது திமுக. இதுதான் திமுக செய்த மிகப்பெரிய தவறு.

முதலில் இருந்தே இதனை சரியான முறையில் கையாளத் தவறிய திமுக கத்தி தன்னுடைய கழுத்தை அறுக்க ஆரம்பித்தபிறகுதான் விழித்துக்கொண்டு தடுக்க நினைத்தது. ஆனால், அதற்குள் விபரீதம் திமுகவின் கையை மீறிப் போய்விட்டதையும் பார்த்தோம்.

தணிக்கைக் கணக்காளரின் அறிக்கை ‘இந்தத் திட்டத்தினால் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு’ என்றுதான் இருந்தது.(பிறகு இந்த இழப்புத் தொகையே வெறும் முப்பதாயிரம் கோடிதான் என்று வந்தது வேறு விஷயம்)

ஆனால் இதனையே ‘ஆ. ராசா வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போன தொகை ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்று ‘கட்டமைத்தார்களே’ அந்த மகானுபாவர்களைத்தான் ஜெயலலிதா காலாகாலத்திற்கும் நினைத்து நினைத்துத் தொழ வேண்டும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த விவகாரங்களெல்லாம் வெட்ட வெளிச்சமாகி எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பிறகும்கூட சில இணைய உலகப் புலிகள் தொடர்ந்து ‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்றே எழுதிக்கொண்டிருப்பது கடைந்தெடுத்த கயமையைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்த இழப்பீடு தொகையைப் பற்றி கல்வியாளர் ரமேஷ் பிரபா ஒரு உதாரணம் சொன்னார். சுருளிராஜன் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வந்தது. மகன் சிக்கனமாக இருக்க வேண்டியதுபற்றி அவனுடைய தந்தை அவனுக்கு நிறைய யோசனைகள் சொன்னாராம். அந்த யோசனைகளைப் பயன்படுத்திய அந்தப் பையன் அடுத்த மாதமே அதற்கான பலனைத் தந்தையிடம் தெரிவித்தானாம். “அப்பா நீ சொன்னபடியே சிக்கனமா இருக்க ஆரம்பிச்சுட்டேன்பா. தினசரி அஞ்சு ரூபாய் மிச்சம் பிடிச்சுட்டேன்பா” என்றானாம்.

அப்பா வியந்து “தினசரி அஞ்சு ரூபாயா எப்படிடா மிச்சம் பிடிச்சே?”
“அதுவந்து ஸ்கூல்லருந்து திரும்பறதுக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்தே இல்லையா? தினமும் அஞ்சு ரூபா டிக்கெட். நான் அஞ்சு ரூபா டிக்கெட் எடுக்காமல் பஸ் பின்னாடியே ஓடி வந்துருவேன். அப்ப அஞ்சு ரூபா மிச்சம்தானே” என்றானாம்.

கேட்ட அப்பா தலையில் கைவைத்துக்கொண்டாராம். “அட முட்டாப்பய மவனே, மோசம் போயிட்டியேடா. அஞ்சுரூவா டிக்கெட் எடுக்காம நீ பஸ் பின்னாடி ஓடி வந்ததுக்குப் பதிலா ஆட்டோ பின்னாடி ஓடி வந்திருந்தா நாளொன்னுக்கு ஐம்பது ரூபாய் மிச்சம் புடிச்சிருக்கலாமே”டான்னாராம்!
கணக்காயரின் கணக்கு இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

சரி விஷயத்துக்கு வருவோம். இதில் திமுகவுக்குச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டது இருநூறு கோடிகள்.

இந்த இருநூறு கோடிகளை வைத்துத்தான் கலைஞர் டிவி துவங்கப்பட்டது என்றுதான் வழக்குப் பயணிக்கிறது.

இந்த இருநூறு கோடிகள் ஸ்பெக்ட்ரம் மூலம் திமுகவுக்கு வழங்கப்பட்டதா என்ற விவகாரத்திற்குள்ளெல்லாம் நுழைய விரும்பவில்லை.

ஆனால் எனக்கு இங்கே உதிக்கும் வேறொரு சந்தேகத்திற்கு விடை தேட வேண்டியிருக்கிறது.

அதாவது கலைஞர் டிவி என்ற ஒரு புதிய சேனல் துவங்க இருநூறு கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்கிற செய்தி நமக்கு இங்கே கிடைக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஒரு புதிய சேனல் துவங்க இருநூறு கோடி ரூபாய் தேவை.

சரியா?

அந்தக் கணக்குப்படி கலைஞர் டிவி துவங்கத் தேவைப்பட்ட அந்த இருநூறுகோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் மூலம், ஆ.ராசா மூலம் வந்து சேர்ந்தது. இதுதானே குற்றச்சாட்டு?

ரொம்பவும் சரி………………அப்படியானால் ஜெயா டிவி துவங்க ஒரு ‘இருநூறு கோடி’ எங்கிருந்து வந்து சேர்ந்தது?

மெகா டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

கேப்டன் டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

மக்கள் டிவி துவங்க எங்கிருந்து பணம் வந்தது?

இன்னமும் நிறைய அரசியல் கட்சிகள் அவரவரும் தனித்தனி சேனல்கள் வைத்திருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இந்த ‘இருநூறு கோடிகள்’ எங்கிருந்து வந்தன?

எப்படியோ அவதூறுகளும் முடிந்துவிட்டன; அறுவடையும் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலும் இதோ வந்துவிட்டது.

இதே ராசா திரும்பவும் தைரியமாய் மக்களைச் சந்திக்கிறார். அதைவிட தைரியமாய் கோர்ட்டுக்குப் போகிறார். பார்லிமெண்ட் விவகாரக் குழுவில் தாம் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்கிறார். எங்கே 
 வரவேண்டுமோ சொல் வருகிறேன் என்கிறார். எந்த ஊடகவியலாளரையும் அச்சமின்றி எதிர்கொள்கிறார்.

தேர்தலில் நின்றிருக்கிறார். 


அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வழக்கை அவர் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் விதம் அவர் மீதான வியப்பை அதிகப்படுத்துகிறது.

ராசா மீது சுமத்தப்பட்ட இந்த ஊழல், ஈழ விவகாரம், இரண்டு மணிநேர மின்வெட்டு இன்னோரன்ன விவகாரங்களால் ஜாக்பாட் அடித்த ஜெயலலிதா நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வந்ததும் பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் உற்சாகமாக எல்லாரையும் முந்திக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.

இவர் இறங்கிய வேகத்தைப் பார்த்த ஊடகங்கள் ‘நாற்பது தொகுதிகளிலும் அம்மாவே வெற்றி பெறுவார்’ என்றே எழுதின. அடுத்த பிரதமர் இவர்தான் என்றும் எழுதின. தமிழகத்துப் போஸ்டர்கள் எல்லாம் அடுத்த பிரதமர் என்றுகூட அல்ல, பிரதமரே ஜெயலலிதாதான் என்றும் உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாரும் இவர் முன்பு கைகட்டிக்கொண்டு இருப்பது மாதிரியெல்லாம் சென்னை முழுக்க தூள் கொட்டின.

நம்முடைய ஊடகங்களுக்குப் பெரிய பிரச்சினை.

ஊடகங்கள் ஒரு பக்கம் மோடியைப் பிரதமர் ஆக்குவதாக உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் பிரதமராவேன் என்று ஜெயலலிதாவும் களத்தில் இறங்கிவிட்டார்.
இப்போது என்ன செய்வது?

சிக்கல் என்னவென்றால் இருப்பது ஒரேயொரு இந்தியாதான்.

இரண்டு இந்தியா இருந்திருந்தால் ஊடகங்களுக்கு சுலபமாகப் போயிருக்கும். மோடிக்கு ஒரு இந்தியா, ஜெயலலிதாவுக்கு ஒரு இந்தியா என்று பிரித்துக் கொடுத்துவிட்டிருப்பார்கள்.

முடியவில்லை. இதுதான் ஊடகங்களின் பிரச்சினை.

ஏனென்றால் இந்தத் தேர்தலை நடத்துவதே ஊடகங்கள்தாம்.
மோடி, ஜெயலலிதா, மோடி, ஜெயலலிதா என்று எத்தனை ரவுண்டு வரமுடியுமோ அத்தனையும் வந்தாகிவிட்டது.

எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் உள்ளூர் விவகாரத்துக்குத்தான்  முக்கியத்துவம் தருவது என்ற கொள்கையில் விடாப்பிடியாய் இருக்கும் தினத்தந்திகூட ஒரு நாளைக்குப் பதினேழு பதினெட்டுச் செய்திகள் மோடியைப் பற்றியது என்று போட்டாகிவிட்டது. மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் பேசுகிறார்(அவர் மத்திய பிரதேசத்தில் பேசுவதற்கு தமிழ்நாட்டுக்காரன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை) என்பதுவரை தினத்தந்தி செய்தியாகிவிட்டது.

ஜெயலலிதா பற்றிய செய்திகளைக் கேட்கவே வேண்டாம். பக்கம் பூராவும் ஜெயலலிதா பேச்சுக்கள்தாம்) மிச்சமீதிக் கூட்டங்களிலாவது ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு அம்புலிமாமா கதையை எழுதிக் கொடுப்பார்கள். 
அவரும் அந்தக் கதையைப் படித்துவிட்டு கருணாநிதியை ஆசை தீர நான்கு வார்த்தைத் திட்டிவிட்டுப் போவார். சுவாரஸ்யமாய் இருக்கிறதோ இல்லையோ வித்தியாசமாகவாவது இருக்கும். தேர்தல் கூட்டங்களில் அம்புலிமாமா கதையும் இல்லை. வித்தியாசமும் இல்லை.

தேர்தல் கூட்டங்களிலேயே இத்தனை போரடிக்கும் உரை இவருடையதாகத்தான் இருக்கவேண்டும்.

தவிர, அந்த உரை படிக்கப்படுவதற்கு ஆகும் செலவு ஒவ்வொரு உரைக்கும் சுமார் ஒரு கோடி என்பது யோசிக்கவேண்டிய விஷயம். ஒவ்வொரு ஊரிலும் ஹெலிபேட் அமைக்க ஆகும் செலவே முப்பது முப்பத்தைந்து லட்சம் என்கிறார்கள். மற்றபடி ஹெலிகாப்டர் வாடகை, மேடைச் செலவுகள், மக்களைக் கூட்டிவர ஆகும் செலவு என்றெல்லாம் பார்த்தால் ஒவ்வொரு கூட்டத்திற்குமான செலவு ஒரு கோடி ரூபாய் என்கிறார்கள். இந்தச் செலவுகளுக்கான பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது என்பதை காங் பிரமுகர் பலராமனைத்தான் கேட்க வேண்டும்.

தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள். மக்களுக்கும் தனக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாத ஒரு முதலமைச்சரை அவர்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறார்கள்.

அவர் மக்களைச் சந்திப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளைச் சந்திப்பதில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. ஆனாலும் ஊடகங்கள் அவரை எந்தவகையிலும் விட்டுக்கொடுப்பதே இல்லை.

இந்த அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?

இந்தத் தேர்தலில் பார்த்தால் அம்மையாரின் ஆரம்ப சுருதி மட்டுமல்ல பத்திரிகைகளின் ஆரம்ப சுருதியும் மிகவே சுருங்கிவிட்டது.

சுருதி சுணங்கிப்போனதற்கு கூட்டமின்மை மட்டுமே காரணமில்லை. பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கும் ஒரு காரணம்.

வேறு ஏதோ காரணங்களுக்காக எப்போதோ நடந்திருக்க வேண்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தை என்னென்னவோ செய்து தள்ளிப்போட்டுக் கொண்டே வர, கோக்குமாக்கான நேரம் பார்த்து குரங்கு குதித்த கதையாக தேர்தல் நேரம் பார்த்து பவானி சிங் “கொடநாட்டிலே எண்ணூத்து முப்பத்து நான்கு ஏக்கர், சிறுதாவூரிலே……………” என்று பட்டியல் வாசிக்க ஆரம்பிக்க ஜெயலலிதா அதிர்ந்தாரோ இல்லையோ அதிர்ந்து போனவை நம் ஊடகங்கள்தாம்.

அட இது என்ன பெரிய விஷயம், எத்தனையோ விஷயங்களை இரும்புத்திரைப் போட்டு மூடியிருக்கிறோம். இதை மூட மாட்டோமா என்று ஊடகங்கள் நினைத்து இந்தச் செய்திகளை மூட ஆரம்பிக்க இது தேர்தல் நேரமென்பதால் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கலைஞரும் ஸ்டாலினும் திரும்பத் திரும்ப இதே செய்திகளைப் படிக்க…………….மற்ற திமுககாரர்கள் எல்லாரும் கூவித்தீர்க்க….வீட்டுக்கு வீடு கச்சிதமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டன திமுக ஆதரவு சேனல்கள்.

முதலில் அதிமுக சுலபமாக அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றவர்கள், அடுத்து முப்பத்தைந்து என்றார்கள், இருபத்தைந்து என்றார்கள், இப்போது இருபத்தி இரண்டு தொகுதிகளில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும், திமுக பதினாலு இடங்களைப் பெறும் பாஜக கூட்டணி மூன்று இடங்களைப்  பெறும் என்று இறங்கிவந்து நிற்கிறார்கள்.

யார் யார் எத்தனை இடங்களைப் பெறுவார்கள் என்பதைப் பிறகு பார்க்கலாம். ஊடகங்களாலும் இணையப் புலிகளாலும் ஒன்றுமேயில்லை என்று ஊதித்தள்ளப்பட்ட திமுகவுக்கு, அதிலும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பும் கூடும் மக்கள் கூட்டமும் தமிழக அரசியலில் நிச்சயம் வேறு கணக்குகளைப் போட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அரசியல் தலைவர்களில் யாருக்குமே கூடாத கூட்டம் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் ஸ்டாலினுக்குக் கூடியது என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் பாடம்.
 
இந்த முக்கிய மாறுதலைப் புறக்கணிப்பதற்கில்லை.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பேயே ஸ்டாலின் குறிப்பிடத்தகுந்த தலைவராகிவிட்டார் என்பதுதான் இங்கே உணர்த்தப்படும் செய்தி.

உடனடியாக, ‘கூட்டம் கூடினால் ஓட்டுப் போட்டுருவாங்களா? போன தடவை வடிவேலுக்குக்கூடத்தான் கூட்டம் கூடியது. ஓட்டுக் கிடைத்ததா’ என்று அனானிமஸ் பெயரில் தட்டச்சு செய்ய முனைவோர் ஒரு நிமிடம் நில்லுங்கள்.

ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் கூடவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போது இந்த ஊடகங்களும் இணையப் புலிகளும் என்ன எழுதியிருப்பார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

ஸ்டாலினையும் திமுகவையும் எத்தனைக் கேவலப்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்திருப்பார்களா இல்லையா?

தவிர, கூட்டத்துக்கு மக்கள் வருகை தராவிட்டால்தான் ஓட்டு விழும் என்பது என்ன லாஜிக் என்பதும் புரியவில்லை.

ஊடகங்கள் எல்லாவற்றையும் கட்டமைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஊடகங்களின் கட்டமைப்புகள் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

இதுபோலவே முன்பொரு தேர்தலில் மொத்த ஊடகங்களும் சேர்ந்து சொன்ன அத்தனைக் கணிப்புகளும் பொய்யாகிப் போனபோது முரசொலியில் கட்டம் கட்டி எழுதியிருந்த ஒரு பெட்டிச் செய்திதான் நினைவு வருகிறது.

ஹிண்டுவின் சிண்டு பறந்தது.

துக்ளக்கின் டோப்பி எகிறியது.

எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது………………என்பதுபோல் கேலி செய்திருந்தார்கள்.
  
இந்தத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

50 comments :

vijayan said...

வினையை விதைத்தவன் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும் அமுதவன்.காமராஜின் வாடகைவீட்டை எழைபங்காளனின் குடிசையை பாரிர் என எகத்தாளம் பேசியவர்கள்,ஆந்திரா வங்கியில் 9 கோடி இருப்பு என்று புழுதி இறைத்தவர்கள் தானே இந்த துண்டர்கள்.பரம யோக்கியரான காமராஜை இந்த அளவிற்கு கேவலபடுத்திய இந்த சர்க்காரியா புகழ் வீரர்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.

sekar said...

//அந்தக் கணக்குப்படி கலைஞர் டிவி துவங்கத் தேவைப்பட்ட அந்த இருநூறுகோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் மூலம், ஆ.ராசா மூலம் வந்து சேர்ந்தது. இதுதானே குற்றச்சாட்டு?

ரொம்பவும் சரி………………அப்படியானால் ஜெயா டிவி துவங்க ஒரு ‘இருநூறு கோடி’ எங்கிருந்து வந்து சேர்ந்தது?

மெகா டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

கேப்டன் டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

இன்னமும் நிறைய அரசியல் கட்சிகள் அவரவரும் தனித்தனி சேனல்கள் வைத்திருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இந்த ‘இருநூறு கோடிகள்’ எங்கிருந்து வந்தன?//

இந்த கேள்விக்கு பதில் யாரும் சொல்லமாட்டார்கள் உணரவும் மாட்டார்கள்.

எம்.ஞானசேகரன் said...

அருமையான விமர்சனம்? நடுநிலையான கேள்விகள்!

Amudhavan said...

vijayan said...
\\வினையை விதைத்தவன் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும் அமுதவன்\\

காமராஜர் பற்றி திமுகவினர் என்னென்ன பேசினார்கள், முரசொலியில் என்னென்ன எழுதினார்கள் என்பது பற்றியெல்லாம் எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன விஜயன். அது ஒரு பக்கம். அதே போல உங்கள் தியரியை நானும் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கிறேன். அதே போல இதே தியரிப்படி இன்றைக்கு பதவி பட்டம் சுகங்களை அனுபவிப்பவர்கள் என்னென்ன நல்வினைகள் ஆற்றியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள் என்னுடைய ஆதங்கத்துக்கான விடை கிடைக்கும். தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

sekar said...
வருகைக்கு நன்றி சேகர்

Amudhavan said...

கவிப்ரியன் கலிங்கநகர் said...
\\அருமையான விமர்சனம்? நடுநிலையான கேள்விகள்!\\

நன்றி கவிப்பிரியன்

தி.தமிழ் இளங்கோ said...

அரசு அலுவலகங்களில் ஆடிட் நடக்கும்போது தணிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட ஒரு பெரிய இழப்பை தனிப்பட்டவர்கள் சுருட்டி விட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. கருணாநிதியின் தோல்விக்கு குடும்ப அரசியலும் ஒரு காரணம். ஊடகங்கள் நடத்தும் கருணாநிதி எதிர்ப்பு அரசியல் பற்றி விலா வாரியாக விவரித்தீர்கள். கருணாநிதிக்குப் பிறகு யாரை எதிர்த்து என்ன அரசியல் பண்ணுவார்கள் என்று தெரியவில்லை.

Amudhavan said...

வாங்க தமிழ் இளங்கோ சார், ஊடகங்களின் தவறான கட்டமைப்பைச் சுட்டிக்காட்டுவதுதான் என்னுடைய பதிவின் நோக்கம்.

\\கருணாநிதிக்குப் பிறகு யாரை எதிர்த்து என்ன அரசியல் பண்ணுவார்கள்.............\\

இதில் மக்களுக்கு சரியான விஷயங்களை ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்,

குட்டிபிசாசு said...

தங்களின் கட்டுரையை முழுவதும் படித்ததும் முரசொலி (அ) விடுதலையில் வந்த கட்டுரை போல இருந்தது.

உதாரணமாக சில...

//இந்தத் திட்டத்தில் ஊழலே நடைபெறவில்லையா, நடைபெற்ற ஊழலில் ஆ.ராசாவுக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்விகளுக்குள்ளேயெல்லாம் நான் போக விரும்பவில்லை.//

//நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், டான்சி ஊழல், மணற்கொள்ளை ஊழல் என்று நிறைய ஊழல்களைக் கேள்விப் படுகிறோம். அப்படியிருக்க பல ஆயிரம் கோடிகள் புரளும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் இருக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை.//

//பிறகு இந்த இழப்புத் தொகையே "வெறும்" முப்பதாயிரம் கோடிதான் என்று வந்தது வேறு விஷயம்) //

// இதே ராசா திரும்பவும் தைரியமாய் மக்களைச் சந்திக்கிறார். அதைவிட தைரியமாய் கோர்ட்டுக்குப் போகிறார். பார்லிமெண்ட் விவகாரக் குழுவில் தாம் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்கிறார். எங்கே
வரவேண்டுமோ சொல் வருகிறேன் என்கிறார். எந்த ஊடகவியலாளரையும் அச்சமின்றி எதிர்கொள்கிறார். //

வவ்வால் said...

அமுதவன் சார்,

உடன்பிறப்பு நெடி அடிக்குதே அவ்வ்.

முன்னர் 2ஜீ ஊழல் பற்றி எழுதிய பதிவு ,அதில் ஒரு உடன் பிறப்புடன் ஊழலின் அனைத்து சாத்தியக்கூறுகள் பற்றியும் தெளிவாக பேசியுள்ளேன் ,படித்துப்பார்க்கவும்.

http://vovalpaarvai.blogspot.com/2012/11/2g-spectrum-scam-real-or-fabricated_24.html

# ஊழல் நடக்கவில்லை என யாராலும் மறுக்க முடியாது, ஒரு லட்சம் எழுபத்தாராயிரம் கோடிக்கா நடந்தது , அது தவறான தொகை என சொல்வதால் எல்லாம் "ஊழல் செய்ததை" இல்லை என நியாயப்படுத்திவிட முடியுமா?

# 2ஜீ யில் திமுக மட்டுமா குற்றவாளி எனக்கேட்பதெல்லாம் சரி , ராசா, கனிமொழியெல்லாம் உள்ள கிடந்த போது , இதைக்கேட்டுவிட்டு , கூட்டணியை விட்டு வந்திருக்க வேண்டியது தானே?

உள்ளப்போட்டப்பிறகும் மானமேயில்லாமல் ஒட்டிக்கிடக்க வேண்டிய அவசியம் என்ன?

# மத்தியில் நடக்கும் தேர்தலில் மாநில நிலையை மட்டுமே பேசிஓட்டுக்கேட்கும் திமுகவின் நிலைமைக்கு என்ன காரணம்/

கடந்த 10 ஆண்டுகால மத்திய ஆட்சியின் அவலத்தின் பங்கு தாரர்கள் தி,முகவும் தானே?

இல்லை கடந்த பத்தான்டும் நல்லாட்சி தான் மத்தியில் நடந்ததா அவ்வ்.

விரிவாக பேசலாம் , ஆனால் உடனே அம்மையாருக்கு சொம்பு தூக்குவதா முத்திரை கிடைக்கும் , அம்மையார் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ,ஆனால் திமுக,காங்கிரஸ் போன்றவர்கள் செய்த தவற்றின் பலனை அவர்கள் அடைவார்கள் என்கிறேன் அவ்வளவே.

குட்டிபிசாசு said...

முதலில் "ராசா தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார்" (ஊழலில் ஒதுக்கீடு கேட்காததுதான் மிச்சம்) என்றார்கள். கனிமொழியும் மாட்டியவுடன் "ராசா தான் காரணம். கனிமொழி நிரபராதி" என்றார்கள். தற்போது " 2ஜி ஊழல் அல்ல. நஷ்டம்" என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்தால் ஓட்டு கிடைக்காது என்று தெரியும். அதனால் தனியாக நின்றுவிட்டு ஜெயித்தபிறகு காங்கிரஸுடன் சேர்ந்துகொள்ள இப்போதே கருணா அச்சாரம் போட்டுவிட்டார்.

ஜெயலலிதா மோசவானவர் என்பதற்காக, கருணாநிதி யோக்கியன் ஆகிவிடமாட்டார்.

ஏன் ஊடகங்களில், இணையதளங்களில் கருணாநிதியை மட்டும் திட்டுகிறார்கள் எனப்து நீங்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும். இதுநாள்வரை இவர்கள் பேசி மக்கள் கேட்டார்கள். இணைய ஊடகங்கள் வந்த்பிறகு மற்றவர்களும் பேசுகிறார்கள். இவர்கள் கேட்கத்தான் வேண்டும். இதுவரை ஒன்றும் செய்யாத பொருளாதார மேதை (?) மன்மோகன் சிங்கே இணையத்தில் அல்லோலப்படிகிறார். கருணாநிதி எம்மாத்திரம்.

Unknown said...

அமுதவன் இப்படியே போனால் மனுஷ்யபுத்திரனுக்கு போட்டியாக வந்து விடுவீர்கள் ?

(........... தூக்குரதில )

"ஜெயலலிதா மோசவானவர் என்பதற்காக, கருணாநிதி யோக்கியன் ஆகிவிடமாட்டார். "

நிச்சயமாக குட்டி பிசாசு . இரண்டுமே சாக்கடைகள் தான் . கொஞ்சம் கூட வேறுபாடு கிடையாது .

சூப்பர் வௌவால் . ஆரம்பமே அதகளமாக இருக்கின்றது . உங்கள் அடுத்த கட்ட அதிரடியை காண ஆவலாக இருக்கின்றேன்

Amudhavan said...

குட்டிபிசாசு said...
\\தங்களின் கட்டுரையை முழுவதும் படித்ததும் முரசொலி (அ) விடுதலையில் வந்த கட்டுரை போல இருந்தது.\\

வாருங்கள் கு.பி, முரசொலியிலும் விடுதலையிலும் வரும் கட்டுரைகளை மிகவும் இளக்காரமாகப் பார்க்கும் தொனி உங்கள் வார்த்தைகளில் உள்ளது. கட்சி சார்ந்த கட்டுரைகள் தவிர முரசொலியிலும் விடுதலையிலும் வரும் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், மற்றும் இனம் சார்ந்த, மொழி சார்ந்த இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எல்லாம் அரிய வகையைச் சேர்ந்தவையே. இத்தகு கட்டுரைகள் தமிழில் கம்யூனிசப் பத்திரிகைகள் தவிர வேறு எந்தக் கட்சிப் பத்திரிகைகளிலும் வருவதற்கு வாய்ப்பில்லை. வரவும் முடியாது.

\\ஜெயலலிதா மோசவானவர் என்பதற்காக, கருணாநிதி யோக்கியன் ஆகிவிடமாட்டார்.\\

இதையே திருப்பிப் போட்டும் பொருள் கொள்ளலாம். அதனால் நான் இந்த இடத்தில் என்ன செய்கிறேன் என்றால் அவர்களிடமிருக்கும் மற்ற, அல்லது ஏனைய- தகுதிகளைப் பார்க்கிறேன். திறமையைப் பார்க்கிறேன். மொழிப்பற்றை இனப்பற்றைப் பார்க்கிறேன். அவர்களிடமுள்ள மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் அவர்களிடம் பழக அல்லது பார்க்க நேர்ந்தால் உங்களை அவர்கள் எப்படி நடத்துவார்கள் என்ற தனிமனிதப் பண்பையும் பார்த்து என்னுடைய மதிப்பீடுகளை அமைத்துக்கொள்கிறேன்.

\\உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும். இதுநாள்வரை இவர்கள் பேசி மக்கள் கேட்டார்கள். இணைய ஊடகங்கள் வந்த்பிறகு மற்றவர்களும் பேசுகிறார்கள். இவர்கள் கேட்கத்தான் வேண்டும்.\\
மற்றவர்கள் நியாயமாகப் பேசுவதை இங்கே குறை சொல்லவில்லை. அநியாயமாகப் பேசுவதைத்தான் கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் இவர்கள் மீது வைக்கின்ற அளவுகோள்களை மற்றவர்கள் மீதும் வைக்கிறீர்களா என்றுதான் கேட்கிறேன்.

இணைய ஊடகங்களில் இவர்கள் மீது 'சுமத்தப்படும் காரணங்களுக்கு' பின்னணியில் வேறுவகையான காரணங்கள் இருக்கின்றன. அதனை மறைத்து ஒரு சில காரணங்களை மட்டுமே அடுக்கி பிரச்சாரம் செய்கிறார்கள். அதனைத்தான் தவறு என்கிறேன்.

Amudhavan said...

வவ்வால் said...
\\முன்னர் 2ஜீ ஊழல் பற்றி எழுதிய பதிவு ,அதில் ஒரு உடன் பிறப்புடன் ஊழலின் அனைத்து சாத்தியக்கூறுகள் பற்றியும் தெளிவாக பேசியுள்ளேன்\\
வாங்க வவ்வால், உங்களின் அந்தக் கட்டுரையை ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போது முடிந்தால் மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

\\அது தவறான தொகை என சொல்வதால் எல்லாம் "ஊழல் செய்ததை" இல்லை என நியாயப்படுத்திவிட முடியுமா?\\

ஊழல் செய்ததை இல்லை என 'நியாயப் படுத்தும்' வார்த்தைகளோ அல்லது தொனியோ எங்கே இருக்கிறது. அதுதான் உங்களுக்கு அல்லது நம் எல்லோருக்கும் பதில் சொல்லும் விதமாக காங் முன்னாள் எம்எல்ஏ திரு பலராமன் சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறேனே. அவர் சொல்லியிருப்பதுதானே யதார்த்தம்!
அது ஒருபுறமிருக்க, 'அது தவறான தொகை என்பது தெரிந்தும்' அதை மட்டுமே , அதுவும் ராசாவும் கலைஞரும் கனிமொழியும் சேர்ந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியைக் கொள்ளையடித்தார்கள் என்று திரும்பத் திரும்பத் சொல்வது கயமைத்தனம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

\\# மத்தியில் நடக்கும் தேர்தலில் மாநில நிலையை மட்டுமே பேசிஓட்டுக்கேட்கும் திமுகவின் நிலைமைக்கு என்ன காரணம்/ \\
என்ன காரணம் எனில் ஜெயலலிதா தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மறைமுகமாக அறிவித்து அதற்காகக் காய் நகர்த்தியதுதான் காரணம்.

'இப்படிப்பட்டவர்' பிரதமராக எப்படி?' என்று ஒரு கேள்வியை எல்லார் மனதிலும் போட்டு வைத்தார்கள் பாருங்கள். அங்குதான் விடை இருக்கிறது.
இப்படி ஒரு ட்விஸ்டைக் கொடுத்த ஸ்டாலின் பாராட்டப்பட வேண்டியவர். தேர்தல் முடிவுகள் இதனை உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

Amudhavan said...

Shabir Hussain said..

\\அமுதவன் இப்படியே போனால் மனுஷ்யபுத்திரனுக்கு போட்டியாக வந்து விடுவீர்கள் ?\\

ஷபீர் ஹூசேன், யாருக்கும் போட்டியாக வர விரும்பவில்லை. அதே சமயம் இணையத்தில் சில தலைவர்களையும் சில பிரமுகர்களையும் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கும் நிலைமையும், அவர்களைப் பற்றிய ஒரேயொரு அல்பச் செய்தியாக இருந்தபோதிலும் எல்லாரும் சேர்ந்துகொண்டு அடித்துத் துவைத்துப் போடும் காரியமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

அதே போல இவர்களுக்கென்று சில 'புனிதப் பசுக்களையும்' வரையறுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மூச்சுக்கூட விடமாட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொள்வதாக இல்லை. எனக்கு எது சரியென்று படுகிறதோ அதனை அவ்வப்போது எழுதுகிறேன். எழுதுவேன்.
மற்றபடி வவ்வாலின் அதிரடிகளை நானும் வரவேற்பவன்தான்.

Jayadev Das said...

தமிழகத்தில் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு, தமிழன் ஸ்பெக்ட்ரம் பத்தியெல்லாம் புரிஞ்சு அதனால் வெகுண்டு ஜெ .விற்கு ஓட்டு போட்டதால்தான் என்பது நகைப்புக்குரியது. ஓட்டு போடும் அன்றைக்கு 1000 ரூபாய் தள்ளினால் யாருக்கு வேண்டுமானாலும் குத்துவேன் என்ற நிலையில் தான் தமிழக வாக்காளன் இருக்கிறான், அதற்கும் மேல் அவனுக்கு சிந்திக்கத் தெரியாது, சிந்திக்கும் வகையிலும் உங்கள் அபிமான தி.மு.க.அவர்களது அறிவுத் திறனை வளர விடவில்லை.

அடுத்து, தமிழகத்தில் இன்னின்ன கட்சிக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்றும் ஒரு கணக்கு இருக்கிறது. தேர்தல் வெற்றி என்பது யார் நல்லாட்சி செய்வார்கள் என்பது போய் வெறும் கூட்டல் கழித்தல் கணக்காகிப் போய் வெகு வருடங்களாகிறது. அந்த வகையில் காங்கிரஸ், தி.மு.க.தனித்து நின்றது, விஜயகாந்த் அ தி.மு.க. உடன் கூட்டணி போட்டது, கருணாநிதி கட்சியினர் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவிடாமல் தேர்தல் கமிஷன் ஸ்குரூவை டைட் செய்தது. இது எல்லாத்துக்கும் மேல் மக்களுக்கு கருணாநிதியின் இரண்டு மகன்களும் கூட்டு சேர்ந்து மாநிலம் முழுவதும் செய்த ஆக்கிரமிப்பு அதனால் மக்கள் மனதில் உண்டான வெறுப்பு இவை அனைத்தும் தான் தி.மு.க. தோல்விக்குக் காரணமேயொழிய, ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் காரணம் என்பதெல்லாம் நம்புவதற்கில்லை.

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,
// முரசொலியிலும் விடுதலையிலும் வரும் கட்டுரைகளை மிகவும் இளக்காரமாகப் பார்க்கும் தொனி உங்கள் வார்த்தைகளில் உள்ளது. //
அவர்களின் நடுசென்டர் நாத்திகம், சாய்வான மதச்சார்பின்மை பற்றி எனக்குள் கருத்து உண்டு. பிரச்சாரப் பத்திரிகைகளாகத்தான் இவற்றைப் பார்க்கிறேன். திட்டுவதாக இருந்தாலும், புகழ்வதாக இருந்தாலும் ஜாதி பார்த்து, மதம் பார்த்து செய்யும் பகுத்தறிவு எனக்கு தேவையில்லைங்க.

//அவர்களிடமிருக்கும் மற்ற, அல்லது ஏனைய- தகுதிகளைப் பார்க்கிறேன். திறமையைப் பார்க்கிறேன். மொழிப்பற்றை இனப்பற்றைப் பார்க்கிறேன். அவர்களிடமுள்ள மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் அவர்களிடம் பழக அல்லது பார்க்க நேர்ந்தால் உங்களை அவர்கள் எப்படி நடத்துவார்கள் என்ற தனிமனிதப் பண்பையும் பார்த்து என்னுடைய மதிப்பீடுகளை அமைத்துக்கொள்கிறேன்.//

நீங்கள்தான் கருணாவின் தமிழ்பற்று, இனமானம், மனிதநேயத்தை மெச்சிக்கொள்ள வேண்டும்.

அவருடைய வேடம் கலைந்து பல நாட்கள் ஆகிவிட்டது.

//மொழிப்பற்றை//
ஹிந்தி அரக்கி என்று சொல்லி இரண்டு தலைமுறைகளை முட்டாள்கள் ஆக்கிவிட்டு பேரனுக்காக ஹிந்தியில் பேசி ஓட்டு கேட்டவர்.
//இனப்பற்றை//
தமிழினமானம் என்று கதை எல்லாம் பேசிவிட்டு, காங்கிரசுடன் கூட்டுவைத்து ஈழவிவகாரத்தில் தமிழர்களின் கழுத்தறுத்தவர்.

பிள்ளைகளுக்கு எம்பி சீட்டு வேண்டுமென்றால், டெல்லி வரை போய் வருவார். போர் நிறுத்தம் செய்ய கடிதம் எழுதுவார்.

//தனிமனிதப் பண்பையும்//
இவரும் இவருடைய சகாக்களும் ஜெயலலிதாவைப் பற்றி அடிக்காத கமெண்டுகளா?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து செய்யும் அட்டூழியங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இவரைப் போல ஜெயலலிதா மட்டுமல்ல தமிழ், தமிழன், தமிழினம் என்று எங்களை கேணையர்களாக்கியர்வர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

Jayadev Das said...

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு வருமான இழப்பு என்பது சுருளிராஜன் கதையைப் போல அல்ல. நீங்கள் 2002 ஆம் ஆண்டு ஒரு வீட்டுமனையை 3 லட்சம் கொடுத்து வாங்கி போடுகிறீர்கள், அதை இன்றைக்கு 30 லட்சத்திற்கு வாங்க ஆள் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் ஒரு புரோக்கார் உங்களை ஏமாற்றி 2002 விலைக்கே இன்னொருத்தனுக்கு விற்கிறார் என்றால் உங்களுக்கு நஷ்டம் இல்லை தான், ஆனால் வந்திருக்க வேண்டிய மிச்சம் 27 லட்சம் இழப்புதானே?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இழப்பு பலவிதமாகக் கணக்கிடப் பட்டது, அதில் ஒன்று வாங்கியவர்கள் [அவனுங்களுக்கும் தொலைத் தொடர்புக்கும் சம்பந்தமேயில்லை, செல்போனுக்கு ஸ்பெல்லிங் தெரியாது, டவர் எப்படியிருக்கும்னு கண்ணால பார்த்தது கிடையாது] அடுத்த சில மாதங்களில் மற்ற நிறுவனங்களுக்கு லாபம் வைத்து விற்று விட்டார்கள். அந்த லாபக் கணக்கை வைத்தும் கணக்கிட்டாலே 1.76 லட்சம் கோடி வருகிறது.

நீங்கள் 30.000 கோடியாக குறைத்தார்கள் என்கிறீர்கள், பரவாயில்லை ஆனால் கபில்சிபல் ஊழலே நடக்கவில்லை என்கிறார், இதை எங்கே போய்ச் சொல்ல? ஆக ஊழலே நடக்கவில்லை என்று வாதத்திற்கு சொல்லிக் கொண்டு போகலாம், நிஜத்தில் அரசுக்கு வருமான இழப்பு ஏற்ப்பட்டது உண்மையே. மக்கள் நலத் திட்டங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் பங்குபோட்டு தின்னப் பட்டது, அதற்க்கு அரசியல் கட்சிகள் உடந்தையாக செம்பு தூக்கியிருக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்து நடந்த அயோக்கியத் தனம்.

ஊழல் இல்லாத கட்சி இல்லையா என்பது சரியான கேள்விதான். தேனெடுக்க போனவன் புறங்கையை நக்கினால் போகட்டும் என விட்டு விடலாம், மொத்த தேனையே சுருட்டுவது அக்கிரமம், பார்த்துக் கொண்டு வாழாதிருக்க வேண்டும் என்பதில் நியாயமேயில்லை.

நீங்கள் ஆரம்பப் பத்திகளில் தில்லு முல்லு கட்சியைப் பற்றி பாடியுள்ள பாசுரங்கள் எதுவும் ஜீரணிக்கத் தக்கவையே அல்ல. குடும்பம், கொள்ளை இதைத் தவிர இவர்கள் எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. ஜெ .வும் இவர்களைப் போலவே இன்னொரு அக்கறையில்லாத ஆள் என்பது மட்டுமே ஆறுதல்.

Amudhavan said...

Jayadev Das said...

\\ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு வருமான இழப்பு என்பது சுருளிராஜன் கதையைப் போல அல்ல. நீங்கள் 2002 ஆம் ஆண்டு ஒரு வீட்டுமனையை 3 லட்சம் கொடுத்து வாங்கி போடுகிறீர்கள், அதை இன்றைக்கு 30 லட்சத்திற்கு வாங்க ஆள் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் ஒரு புரோக்கார் உங்களை ஏமாற்றி 2002 விலைக்கே இன்னொருத்தனுக்கு விற்கிறார் என்றால் உங்களுக்கு நஷ்டம் இல்லை தான், ஆனால் வந்திருக்க வேண்டிய மிச்சம் 27 லட்சம் இழப்புதானே? \\
வாங்க ஜெயதேவ், விஷயம் கருணாநிதி அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டது என்றதும் சட்டென்று எரிச்சலாகி பதிலளித்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணம் அல்லது அந்த உதாரணம் இல்லாமலேயே கூட இந்த 'நஷ்டக்கணக்கு' விவகாரம் புரிந்த ஒன்றுதான். விஷயம் என்னவென்றால் அந்த ஒப்பந்தம் மூலம் நாட்டுக்கு அல்லது நாட்டின் நிதித்துறைக்கு அவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதைச் சொல்லாமல், அந்த மொத்த நஷ்டத்தையும் ரூபாய் நோட்டு நயாபைசா என்றெல்லாம் கணக்கிட்டு அந்த ஒருகோடியே எழுபத்தாறாயிரம் ரூபாயையும் ராசா எடுத்துக்கொண்டு ஓடிப்போய் கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார் என்று 'கட்டமைக்கப்பட்ட கதையைத்தான்' நான் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பணம் ராசா வீட்டிற்கும் கருணாநிதி வீட்டிற்கும் போனது என்று பரப்புரை செய்யப்பட்டதைத்தான் கயமைத்தனம் என்று சொல்லியிருக்கிறேன்.

\\ஆக ஊழலே நடக்கவில்லை என்று வாதத்திற்கு சொல்லிக் கொண்டு போகலாம், நிஜத்தில் அரசுக்கு வருமான இழப்பு ஏற்ப்பட்டது உண்மையே. மக்கள் நலத் திட்டங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் பங்குபோட்டு தின்னப் பட்டது,\\

ஊழலே நடைபெறவில்லை என்று எங்கே நான் சொல்லியிருக்கிறேன்? இதோ பாருங்கள் இதுதான் நான் எழுதியது........
\\இந்தத் திட்டத்தில் ஊழலே நடைபெறவில்லையா, நடைபெற்ற ஊழலில் ஆ.ராசாவுக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்விகளுக்குள்ளேயெல்லாம் நான் போக விரும்பவில்லை.

இன்றைக்கு இந்த நாட்டில் கேவலம் ரோடு போடுவதிலிருந்து நடைபெறும் எல்லா விஷயங்களிலும் ஊழல் விளையாடாத இடமே இல்லை.

சாதாரணமாக நகரசபை விவகாரங்களிலேயே ஊழல் புகுந்துவிடுகிறது நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், டான்சி ஊழல், மணற்கொள்ளை ஊழல் என்று நிறைய ஊழல்களைக் கேள்விப் படுகிறோம். அப்படியிருக்க பல ஆயிரம் கோடிகள் புரளும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் இருக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை.\\
மற்றபடி தேர்தலில் போனதடவை தோற்றதற்கான காரணங்களை இப்போது உங்கள் வாதங்களாலும் என்னுடைய பதில்களாலும் அலசுவதற்கு பதில் இன்னும் சில வாரங்கள் கழித்து நாடாளுமன்ற முடிவுகளையே அலசுவோமே.

Amudhavan said...

குட்டிபிசாசு said..
\\நீங்கள்தான் கருணாவின் தமிழ்பற்று, இனமானம், மனிதநேயத்தை மெச்சிக்கொள்ள வேண்டும்.

அவருடைய வேடம் கலைந்து பல நாட்கள் ஆகிவிட்டது.\\

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களோடு அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் முடிந்து விடுகின்றன. வரலாறு அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துள்ளது.


வருண் said...

என்னவோ போங்க சார். நீங்களாவது ஒரு நல்ல வித்தியாசமான கோணத்தில் கொஞ்சம் "கணக்கு டேல்லி ஆகுதானு பார்த்து சிந்திக்கிறீங்க. ஆனால் எனக்கென்னவோ நீங்க யாரையும் சிந்திக்க வைக்க முடியும்னு தோணலை. நம்மாளுகளுக்கு எல்லாம் தெரியும்.

யோசிச்சுப் பாருங்க, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபோது, நம் மக்களிடம் கப்பம் வசூல் செய்து அவர்களுக்கு (பயந்து) கப்பம் கட்டிய ராஜா எப்படி வீரராவார்? அல்லது உயர் வகுப்பை சேர்ந்த்வராவார்? ஆனால் அந்தத் தொழில் செய்தவரைத்தான் ஜமீனாகவும் ராஜாவாகவும் நம்மாளுக உயரத்தில் வைத்து கட்டி அழுது இருக்கான். அதே "ஜீன்" தான் இன்னும் நம் ரத்தத்தில் ஓடுது.

It is not MK's corruption which is responsible for everything It is always easy to rule us because we always hate our own people. We can be easily cheated and manipulated by "parasites". We strongly believe we are not qualified to be a ruler of our own. Even we prefer a "high class God" over our own "muniyasaami" We prefer a foreigner or some other "intelligent race" to rule us. That is our past history and of course today's reality as well.

ஆனால் ஒண்ணு , உங்களுக்கு , "இவரும் திமுக காரர்தான் போல" னு ஒரு பட்டம் கிடைக்க வாய்ப்பிருக்கு. :))))

bandhu said...

அமுதவன் சார்.. என்ன சொல்ல.. எப்போ 'எல்லாரும்தான் ஊழல் பண்றான்.. அதனால என்ன.. நீங்க சொல்ற அளவு கொள்ளை அடிக்கல.. ரொம்ப கொறைச்சல்.. அதுக்கு ஒண்ணுமே இல்லன்னு சொல்லல.. மத்தவன் கொள்ளை அடிக்கலையா? அவங்க யோக்யமா..' அப்படின்ற தொனியில எழுதியிருக்கீங்களோ .. அப்போவே .."இவரும் திமுக காரர்தான் போல"

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,

இணையத்தில் எதிர்கருத்து சொல்வது பலருக்கு கசப்பாகவே உள்ளது. நாம் ஒரு பக்கம் பின்னூட்டம் போட்டாலும் "வருகைக்கு நன்றி" என்று நழுவுபவர்களும் உண்டு, "நாயே! பேயே" என அர்ச்சிப்பவர்களும் உண்டு. தங்கள் பொறுமையான பதிலுக்கு நன்றி.

Amudhavan said...

வருண் said...
\\நீங்களாவது ஒரு நல்ல வித்தியாசமான கோணத்தில் கொஞ்சம் "கணக்கு டேல்லி ஆகுதானு பார்த்து சிந்திக்கிறீங்க. ஆனால் எனக்கென்னவோ நீங்க யாரையும் சிந்திக்க வைக்க முடியும்னு தோணலை. நம்மாளுகளுக்கு எல்லாம் தெரியும்.\\

வாங்க வருண், நீங்க நல்லா எழுதறீங்க. உங்களுடைய சிந்தனைகளெல்லாம் நன்றாகவே இருக்கு. என்ன ஒண்ணு அதிகமாய்க் கோபப்படறீங்க. மனசுல அப்போதைக்கு என்ன தோணுதோ அதை அப்படியே எழுத்துல கொட்டுறது உங்களுடைய 'பாணியா' இருக்கலாம்.
ஆனா கொஞ்சம் யோசிச்சு இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு கணம், ஒரே ஒரு கணம் யோசிச்சீங்கன்னா சிலவற்றை அல்லது சில வசைகளை நீங்க தவிர்க்கலாம்.
பதிவுலகில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். ஆனால் விஷய ஞானத்துடன் எழுதுபவர்கள் குறைச்சல். விஷயம் தெரிந்து எழுதும் - சிந்தித்து எழுதும் ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருவர்.

நிறையப் பேருடன் சண்டையில் மட்டுமே ஈடுபடுபவர் என்ற பெயர் உங்களுக்கு எதற்கு? வேண்டாமே.

மனதில் தோன்றியது சொன்னேன். ஏனெனில் நிறையப்பேர் சொல்வதும் இதைத்தான்.......

மற்றபடி, இந்தப் பதிவு பற்றி உங்கள் கருத்திற்கு நன்றி.

Amudhavan said...

bandhu said...
\\மத்தவன் கொள்ளை அடிக்கலையா? அவங்க யோக்யமா..' அப்படின்ற தொனியில எழுதியிருக்கீங்களோ .. அப்போவே .."இவரும் திமுக காரர்தான் போல"\\

இணையத்தில் இருக்கும் அதீத சுதந்திரத்தால் இங்கே பல விஷயங்களும் பேசப்படுகின்றன. ஆனால் திமுகவுக்கு சாதகமான எதையுமே இங்கே பேசக்கூடாது என்பது என்ன மாதிரியான சட்டம்?
இங்கே பேசப்படும் விஷயங்களில் சிலவற்றுக்கு மட்டும் குதிரைப் படாம் போட்டுக்கொள்ள வேண்டும். பெருவாரியாக எல்லாரும் என்ன சொல்கிறார்களோ அதையே நாமும் இயந்திரக் கிளிப்பிள்ளைபோல சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
திமுகவுக்கு சாதகமான விஷயம் என்று ஒன்றுகூட உலகத்தில் இருக்கக்கூடாது என்று இணையத்தில் இருப்பவர்கள் விதி செய்திருக்கிறார்களா?

அப்படியானால் அதற்கு நேர்மாறான நிலைமைதானே நடைமுறையில் இருக்கிறது?

ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் எதை உணர்த்துகிறது? இணைய நிலைமையையா காட்டுகிறது?
கலைஞரின் பல்வேறு முடிவுகளை விமர்சித்திருக்கிறேன். இலங்கை விவகாரத்தில் அவர் செய்த குளறுபடிகள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன்.
பிரபாகரனுடைய தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ உதவி செய்யவில்லை என்பதையெல்லாம் கண்டித்திருக்கிறேன். கண்டிப்பதோடு நின்றுவிட வேண்டும் வேறு விஷயங்களைப் பேசவே கூடாது என்றால் தவறு என்னிடமில்லை.

Raja said...

அய்யா,
கருணாநிதி ஒரு பிறவி கேடி.

//நீங்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களோடு அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் முடிந்து விடுகின்றன. வரலாறு அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துள்ளது.
//

அது அனைத்தையும் சீர்தூக்கிபார்த்தால் அதில் கருணாவின் பச்சையான சுயநலமும்,துரோகமும் மட்டுமே மிஞ்சும்.தங்களுக்கும் கண்டிப்பாக அதுபற்றி தெரிந்து இருக்கும். சவுக்கில் தற்பொழுது சர்க்காரியா அறிக்கை பற்றி வந்து கொண்டுள்ளது (அதற்கு முன்பே கருணாவின் சுயநல வரலாறு ஓரளவுக்கு தெரியும் ஏனெனில் எனது அப்பா,தாத்தா அனைவருமே தீவிர dmk தொண்டர்களாக இருந்தவர்கள் )

bandhu said...

நல்லவற்றை சொல்வது வேறு. அல்லாததை மழுப்புவது வேறு. பின்னது தான் வேண்டாம் என்கிறேன்.. முன்னது மட்டும் சொல்லலாமே!

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

பொது மக்களிடம் இன்னும் தி மு க வுக்கு (பயங்கர) செல்வாக்கு இருப்பது போல ஒரு தோற்றம் வருகிறது உங்கள் பதிவை படித்ததும். (தீவிர தி மு க விசுவாசிகளை கணக்கில் கொள்ள வேண்டாம்.) 96 இல் ஜெ எதிர்ப்பு அலையை கருணாநிதி நன்றாக பயன்படுத்திக்கொண்டார். (அதில் ரஜினியின் பஞ்ச் வேறு ஒரு உப விளம்பரம்). அதேபோல முந்தைய தேர்தலில் ஜெ இந்த ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியை வைத்து விளையாடினார். அவ்வளவே. முடிந்தது.

தி மு க வை விமர்சிக்கும் வேளையில் பாராட்டவும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. (இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் பட்டியலில் நானும் சேர்ந்துவிட்டேன்.) அரசியல் பற்றிய தீவிர பார்வை இருந்தாலும் இவன் அந்த ஆளு என்ற முத்திரையை தவிர்க்க விரும்புவதால் மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.

இவருக்கும் இல்லாமல் அவருக்கும் இல்லாமல் பேசாமல் எதோ ஒரு ஞானிக்கே ஒட்டு போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. அட நான் நம்ம ஆலந்தூர் ஞாநியைச் சொன்னேன். வேறு "எந்த" ஞானியையும் அல்ல.

Amudhavan said...

Raja said...

\\அது அனைத்தையும் சீர்தூக்கிபார்த்தால் அதில் கருணாவின் பச்சையான சுயநலமும்,துரோகமும் மட்டுமே மிஞ்சும்.தங்களுக்கும் கண்டிப்பாக அதுபற்றி தெரிந்து இருக்கும். சவுக்கில் தற்பொழுது சர்க்காரியா அறிக்கை பற்றி வந்து கொண்டுள்ளது (அதற்கு முன்பே கருணாவின் சுயநல வரலாறு ஓரளவுக்கு தெரியும் ஏனெனில் எனது அப்பா,தாத்தா அனைவருமே தீவிர dmk தொண்டர்களாக இருந்தவர்கள் ) \\
வாருங்கள் ராஜா, சவுக்கில் வரும் கட்டுரைகளை நானும் படிக்கிறேன். கருணாநிதி பற்றி மட்டுமல்ல, ஜெயலலிதா பற்றிய சவுக்கு கட்டுரைகளையும் வாசித்தால் ஒரு சமநிலை கிடைக்கக்கூடும். என்னவொன்று, சவுக்கு கலைஞருடைய ஆட்சியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் கலைஞரைப் பற்றிய தாக்குதலில் அதிக வீரியம் இருக்கக்கூடும்.
நீங்கள் வினவு ஜெயலலிதா பற்றி எழுதும் கட்டுரைகளை வாசிப்பதில்லையோ.......... அவற்றையும் வாசியுங்களேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\தி மு க வை விமர்சிக்கும் வேளையில் பாராட்டவும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது உண்மையே.\\

வாருங்கள் காரிகன், பாராட்டினால் பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல எதிர்த்தாலும் மூர்க்கமாக எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற 'இணையப் புரட்சியாளர்களின்' கூட்டத்தில் சேருவதாக இல்லை.

நமக்குச் சரியென்று படுவதைப் பாராட்டுவதிலும் தவறென்று படுவதைச் சாடுவது என்ற திசையிலும்தான் பயணிக்க விரும்புகிறேன்.
கண்ணதாசன் பற்றிய விஷயங்களில் கலைஞரின் போக்கையெல்லாம் விமர்சித்து நிறைய எழுதிவருகிறேன். போனவாரம்கூட ஒரு கல்லூரி விழாவில் பேசும்போது அதுபற்றிப் பேசினேன்.

ஆனாலும் இவர்களுக்கு அவரை எப்போதும் எல்லா விஷயத்திலும் எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதனைச் செய்வதற்கில்லை.

\\இவருக்கும் இல்லாமல் அவருக்கும் இல்லாமல் பேசாமல் எதோ ஒரு ஞானிக்கே ஒட்டு போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. அட நான் நம்ம ஆலந்தூர் ஞாநியைச் சொன்னேன். வேறு "எந்த" ஞானியையும் அல்ல. \\

நீங்க ஆலந்தூர் ஞாநியைச் சொன்னீர்களா? நான்கூட எங்கே கோவை ஞானிபற்றிச் சொல்லியிருக்கீறீர்களோ என்று நினைத்துவிட்டேன்.

Raja said...

ஐயா
சொல்ல மறந்துவிட்டேன். ஜெயலலிதா ஒரு சேலை கட்டிய கருணாநிதி என்பதில் முழுமையாக உடன்படுபவன் மற்றும் வினவின் தீவிர வாசகன். கருணாநிதியை எதிர்ப்பதால் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.கட்டுரை கருணாவை மென்மையாக கையாள்வதால், கருணாவை பற்றி மட்டும் எனது நிலைப்பாட்டை கூறினேன்.

Amudhavan said...

Raja said...
\\ஜெயலலிதா ஒரு சேலை கட்டிய கருணாநிதி என்பதில் முழுமையாக உடன்படுபவன்\\

ராஜா இது ஒரு அரசியல்ரீதியான மேம்போக்கான விமரிசனம் என்று மட்டுமே கருதுவேன். அதுவும் கருணாநிதியை மோசமாக வர்ணிக்க நினைப்பவர்கள் இப்படியொரு சொல்லாடலைக் கையாள்வதுண்டு. கலைஞரைப் பற்றிய அரசியல் மதிப்பீடுகளில் இம்மாதிரியான குறைகளை, குற்றங்களை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு, சங்கத்தமிழில் அவருக்கு இருக்கும் புலமை, கவிதையாக்கம், படைப்பாக்கங்களில் அவருக்கு இருக்கும் அதீத ஆற்றல், மொழியாற்றல் இவற்றினோடெல்லாம் ஜெயலலிதாவுக்குத் துளியும் சம்பந்தமேயில்லை.(உடனே இதையெல்லாம் நம்பி ஏமாந்ததுபோதும் வகை டெம்ப்ளேட் பின்னூட்டங்களுடன் யாரும் ஓடிவரவேண்டாம்)சும்மா போகிறபோக்கில் இப்படி எதையாவது அடித்துவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடில்லை.

வவ்வால் said...

அமுதவன் சார்,

2ஜீப்பதிவினை முன்னரே படிச்சிருக்கிங்களா ,அப்புறமும் எப்படினு கேள்வி இருக்கா?

#//ஊழல் செய்ததை இல்லை என 'நியாயப் படுத்தும்' வார்த்தைகளோ அல்லது தொனியோ எங்கே இருக்கிறது. அதுதான் உங்களுக்கு அல்லது நம் எல்லோருக்கும் பதில் சொல்லும் விதமாக காங் முன்னாள் எம்எல்ஏ திரு பலராமன் சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறேனே. அவர் சொல்லியிருப்பதுதானே யதார்த்தம்! //

ஜெனரலைஸ் செய்தாப்போல ,ஊழல் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது, என சொல்லி விடுவது , எல்லாமே ஊழல் தானே ஏன் 2ஜீக்கு மட்டும் தண்டனைனு கேட்பதாகிடுதே?

அது சரியா?

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என சொல்வதாகிறது அவ்வ்!

தப்பா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடினு சொல்லலாமானு கேட்கிறிங்க , அப்படி பலரும் சொல்லவில்லையே? பல ஊடகங்களிலும் மதிப்பிடப்பட்ட இழப்பு தொகைனு தெளிவா தானே சொல்லி இருக்காங்க?

100 பேர் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி இருவர் மட்டும் பலியானால் கூட செய்தித்தாளில் 100 பேர் சென்ற பேருந்து விபத்து-பலி2! என்று தான் தலைப்ப்பு கொடுப்பாங்க, பேருந்து விபத்தில் இருவர் பலி! என தலைப்பிட மாட்டார்கள்.

எல்லாம் கொஞ்சம் பெருசாக்கி படிக்கிறவங்களை பதற வைக்கத்தான் அதே போலத்தான் 2ஜீ ஊழலும், இதில் ஒரு லட்சத்து எழுபத்தாறா கொள்ளை அடிச்சாங்க எனக்கேட்பதெல்லாம் "பச்சைக்காமெடி' அவ்வ்!

#//'இப்படிப்பட்டவர்' பிரதமராக எப்படி?' என்று ஒரு கேள்வியை எல்லார் மனதிலும் போட்டு வைத்தார்கள் பாருங்கள். அங்குதான் விடை இருக்கிறது.
இப்படி ஒரு ட்விஸ்டைக் கொடுத்த ஸ்டாலின்//

என்னாத்த டிவிஸ்ட்டினாரோ அவ்வ்!

40 எம்பிக்கள் கிடைச்சாலும் பிரதமர் ஆவது என்பது அம்மையாரின் கையில் இல்லாத சமாச்சாரம் , ஒரு வேளை மோடிக்கோ அல்லது காங்கிரசுக்கோ பெரும்பான்மை கிடைத்தாலோ அல்லது ஆதரவு தேவையில்லைனாலோ எப்படிபிரதமராக முடியும்?

ரிமோட் சான்ஸ் தான் பிரதமராக உள்ளது ,எனவே அதனை தடுக்கவே பிரச்சாரம் என்பது " மத்திய ஆட்சி" பற்றி சாதனையாக சொல்லிக்கொள்ள ஒன்னுமே இல்லை என்பதை மறைக்கத்தான் :-))

வாஜ்பாய் காலத்தில் 5 ஆண்டு ,பின்னர் காங்கிரஸ் காலத்தில் 9.5 ஆண்டு என மத்தியில் தொடர்ந்து ஒட்டி வாழ்ந்த ஒரு கட்சிக்கு , சாதனையாக குறிப்பிட என்ன இருக்கு?

தமிழ்நாடு ஜிடிபி குறைச்சிடுச்சுனு சொல்லும் ஸ்டாலின் இந்தியாவின் ஜிடிபி குறைஞ்சது பத்தி பேசுவாரா? மத்திய அரசின் அங்கமாக இருந்த கட்சிக்கு அதில் பங்கு வேண்டாமா?

பணவீக்கம் ஏற்பட்டது, டாலர் சரிவு பற்றி எல்லாம் கூட்டணி அமைச்சரவை என்றப்பொறுப்பில் எதாவது வாய தொறந்து இருப்பாங்களா திமுக அமைச்சர்கள், எல்லாம் என்னமோ எம்.எல்.ஏக்கள் போலத்தான் டெல்லி போயும் இருந்தார்கள்.

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# உரமானிய ஊழலில் உள்ள போகும் சூழல் அழகிரிக்கு அதான் கடைசி வரையில் காங்கிரசுக்கு சொம்பு தூக்கினார்.

சேது சமுத்திர திட்டத்திலும் லம்பாக அடிச்சாங்க, அதெல்லாம் வெளியில் வராம அமுக்கிட்டாங்க, டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா , துறை ரீதியாக விசாரணைக்கே மனுப்போட்டது அதில் இருந்து தப்பிக்க ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்தது யாரோ?

இப்படி திமுக சார்பாக மத்தியில் இருந்த எல்லாருமே கூட்டுக்களவாணி தனம் செய்து விட்டு ,இப்போ என்னமோ மாநிலத்தேர்தல் போல மக்கள ஏமாற்றி பிரச்சாரம் செய்துக்கொண்டிருப்பதை "டிவிஸ்ட்னு' பாராட்ட கூட அரசியல் நுண்ணறிவு வேண்டும் :-))

# ஊடகம் எல்லாம் ஒருப்பக்க சார்பாக பேசுது ,கழகத்தினை கழுவித்தான் ஊத்துகிறார்கள் என்பது முழுக்க சரியா?

ஊடகங்களில் எப்பவுமே ஆளுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கும் அதுக்கு ஏத்தாற்போல எழுத செய்கிறார்கள்.

தினகரன், முரசொலி, தமிழ் முரசு ,முதல் சன் டீவி, கலைஞர் டீவி என ஊடக பலமில்லாமலா கழகம் இருக்கு?

அம்மையாரின் முதல் ஆட்சிக்கால ஊழல் என திரும்ப திரும்ப செருப்பு ,வாட்ச் என காட்டி தேர்தலில் வெல்ல "ஊடக" பலத்தினை திமுக பயன்ப்படுத்தவில்லையா?

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அடுத்த தேர்தலில் அம்மையார் தோற்கடிக்கப்பட்டார், அதே போல 2ஜீ ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் திமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டாமா?

அதுவும் ஆ.ராசா எல்லாம் மீண்டும் வென்றால் "ஊழல் செய்தால் சட்டம் தண்டிக்குதோ இல்லையோ ஜனநாயகம் தண்டிக்கும்" என்ற நம்பிக்கையே போய்விடாதா?

# நீங்க சொல்லும் இன உணர்வு, தமிழ் பற்று எல்லாம் சாயம் போய் ரொம்ப காலமாச்சு அவ்வ்.

தமிழ் அறிவு தான் ஆட்சிக்கு வர தகுதி என்றால் சாலமன் பாப்பையாவை ஆட்சி செய்ய சொல்லிடலாம் :-))

மஞ்சத்துண்டுக்கு நல்ல தமிழ் அறிவு இருக்கு புறக்கணிக்க முடியுமா என்றால், பேசாம அவரை செம்மொழி ஆய்வு மையத்துக்கு தலைவராக்கிடலாம் , தமிழை வாழ வைக்கட்டுமே,தமிழ் நாடு பிழைச்சுப்போகட்டும் :-))
-------------------
ஷபீர்,

நன்றி!

அதிரடிலாம் ஒன்னுமில்லைங்க ,மனசுல பட்டதை சொல்லிடுவேன் அவ்ளோ தான்,அமுதவன் சாரும் அனைத்து கருத்தினையும் ஆதரிப்பவர் என்பதால் நம்ம மீது பாயமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு!
--------------------

Raja said...

எனக்கு பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. யாரோ ஒருவர் பெரியாரை, ஏன் நமது புராணங்களில் நல்ல கருத்துகள் எவ்வளவோ இருக்கின்றன. அதை மட்டும் எடுத்துகொள்ளவேண்டியது தானே.ஏன் எதிர்கிறீர்கள் என கேட்பார். அதற்கு பெரியார், அனைத்து நல்ல கருத்துக்களும், மலத்தில் உள்ள அரிசியை போன்றது என்பார்.

கேடியாக இருந்தால் என்ன? அவரின் தொழில் திறமை யாருக்கும் வராது.அவருக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது என்பது, சினிமாவில், ஒரு ரௌடியை காதலிக்கும் கதாநாயகி போல் உள்ளது.

கருணாவை ஜெய அளவுக்கு யாரும் தாக்க முனைவதில்லை என்கிற ஒரே காரணத்துக்காக, கருணாவை மென்மையாக கையாள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஏன் கருணா, நல்லதே செய்யவில்லையா என்பது ஒரு வழக்கமான கேள்வி. ஆனால், எதற்காக அந்த நல்லதை செய்தார் என்று சிறிது ஆராய்ந்தால் கருணாவின் உள்நோக்கம் பல் இளித்துவிடும்.

இங்கு ஜெயா அவுட் ஆப் போகஸ் என்பதால், அவரை பற்றி எழுதவில்லை

Raja said...
This comment has been removed by a blog administrator.
Amudhavan said...

வவ்வால் said...
ஒளியின் வேகம் பற்றியெல்லாம் சீரியஸாக விவாதித்து முடித்துவிட்டுத்தான் 'லேசான விஷயமான' அரசியலுக்கு சாவகாசமாக வருவீர்கள் என்று நான் நினைத்தது சரிதான் போலிருக்கு......
திரும்ப நீங்களும் கருணாநிதியைப் பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் அதே குற்றச்சாட்டுக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அவையெல்லாமே உண்மைதான். நானும் உங்கள் பாணியிலேயே பதில் சொல்லவேண்டுமென்றால் இவையெல்லாம் சொல்லி அவர் தோற்கடிக்கப்பட்டு அந்த இடத்துக்கு நல்லகண்ணுவோ, அல்லது சகாயமோ அல்லது இன்னொரு நல்ல அரசியல்தலைவரோ வந்து உட்காருகிறார் என்றால் இவர் தோற்கடிக்கப்படுவதில் நியாயமிருக்கிறது. இப்போது உட்கார்ந்திருப்பவரை இவர் மீதான குற்றங்களுக்கு ஏற்பட்ட வடிகால் என்று எப்படிக் கருதமுடிகிறது என்பது புரியவில்லை. (இதுதான் யதார்த்தம் என்பது ஒரு பக்கம் இருந்தபோதிலும்.........)

\\ஊடகங்களில் எப்பவுமே ஆளுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கும் அதுக்கு ஏத்தாற்போல எழுத செய்கிறார்கள்.\\

அப்படியான நிலைப்பாடுகள் வெகு சொற்பம்தான். கலைஞர் எதிர்ப்பும், இளையராஜா ஆதரவும் இங்கே 'ஆளுக்கொரு நிலைப்பாடு' என்ற நிலைமையிலா இருக்கின்றன? கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடித்துக்கொண்டிருக்கிறார்களா இல்லையா?

\\# நீங்க சொல்லும் இன உணர்வு, தமிழ் பற்று எல்லாம் சாயம் போய் ரொம்ப காலமாச்சு அவ்வ்.

தமிழ் அறிவு தான் ஆட்சிக்கு வர தகுதி என்றால் சாலமன் பாப்பையாவை ஆட்சி செய்ய சொல்லிடலாம் :-))

மஞ்சத்துண்டுக்கு நல்ல தமிழ் அறிவு இருக்கு புறக்கணிக்க முடியுமா என்றால், பேசாம அவரை செம்மொழி ஆய்வு மையத்துக்கு தலைவராக்கிடலாம் , தமிழை வாழ வைக்கட்டுமே,தமிழ் நாடு பிழைச்சுப்போகட்டும் :-))\\

கலைஞர் பற்றிய உங்களின் மதிப்பீடு 'இவ்வளவுதான்' இவ்வளவு மட்டுமேதான் எனில் இதுபற்றி நான் உங்களோடு விவாதித்துப் பயன் இல்லை.

\\தினகரன், முரசொலி, தமிழ் முரசு ,முதல் சன் டீவி, கலைஞர் டீவி என ஊடக பலமில்லாமலா கழகம் இருக்கு?\\

இவையெல்லாம் கட்சி சார்ந்தவைதாமே? நான் சொல்லியிருப்பது வெகுஜன ஊடகங்களை. இதில் சன்டிவியை திமுகவினரே நம்புவதில்லை என்பது ஒரு தமாஷான விஷயமே.

Amudhavan said...

Raja said...
\\..................................\\
கருணாநிதியை இன்றைக்கு எதிர்ப்பவர்களின் கருத்துக்கள் என்னவோ அவற்றைத்தான் உங்கள் கருத்தும் பிரதிபலிக்கிறது. இத்தகைய கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.
உங்களிடமுள்ள அளவுகோள்களை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும், எல்லாரையும் அளந்துவிடமுடியும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

Raja said...

//உங்களிடமுள்ள அளவுகோள்களை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும், எல்லாரையும் அளந்துவிடமுடியும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.//

அனைவருமே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தாங்கள் உட்பட.ஆனால் அளவீடுகள் மாறிக்கொண்டே இருக்கும் எனவே எங்குமே பொதுவான அளவீடு என்பது கிடையாது என்பது எனது கருத்து

நீங்கள் அளந்தது உங்களுக்கு சரி. நான் அளந்தது எனக்கு சரி.

Jayadev Das said...

அமுதவன் சார்,

ஒரே ஒரு சந்தேகம். தி.மு.க ஊழல்களைப் பட்டியளிடுபவர்களிடம் தரப்படும் ஒரே பதில், ஜெ மட்டும் என்ன ஊழல் பண்ணவில்லையா, அந்தம்மா கொள்ளையடிச்சதை விட நாங்க அடிச்ச கொள்ளை கம்மி, அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடு........ என்பதாகவே இருக்கிறது. அதுசரி அந்தம்மா ஊழல் பண்ணியதால் இவர்களும் போட்டிக்கு ஊழல் செய்ய வேண்டுமா? இவர்கள் நால்லாட்சி தருவதை எந்த விதத்தில் அவர் செய்த ஊழல் தடுக்கிறது என்பது தான் புரியவில்லை.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//ஒளியின் வேகம் பற்றியெல்லாம் சீரியஸாக விவாதித்து முடித்துவிட்டுத்தான் 'லேசான விஷயமான' அரசியலுக்கு சாவகாசமாக வருவீர்கள் என்று நான் நினைத்தது சரிதான் போலிருக்கு......//

அப்படியெல்லாம் இல்லை, தொடர்ந்து "இவ்வரசியலை" பேச தயக்கம், ஏன் எனில் நீங்கள் அக்கால மதிப்பீடுகளின் படி மு.கவினை அளவிட்டுக்கொண்டு இன்னமும் இருக்கிறீர்கள்,நானோ தற்கால நடப்புகளின் படி மு.கவினை மதிப்பிடுகிறேன், இதில் விவாதம் செய்து "பெரிய மாற்றம்" உருவாகவா போகிறது எனவே வேடிக்கைப்பார்க்கலாம் என நினைத்தேன்.

ஹி...ஹி ஆனாலும் நமக்கு அந்தளவுக்கு கட்டுப்பாடுலாம் ஒத்துவரலை, எனவே ஆரம்பிச்சுட்டேன் :-))

#//(இதுதான் யதார்த்தம் என்பது ஒரு பக்கம் இருந்தபோதிலும்.........)//

அடைப்புக்குறியில் இட்டது தான் உண்மை, தமிழகத்தில் இரு துருவ அரசியலே நிலவுகிறது, ஒருவர் செய்யும் தவற்றினால் இன்னொருவர் முன்னிலை பெருவார், ஐந்தாண்டு கழித்து ,இவர் செய்த தவற்றின் பலனை அவர் மீண்டும் அடைவார் அவ்வ்.

இந்த ரெண்டுப்பேரும் இருக்கும் வரையில் எதுவும் பெருசா அரசியலோ,கொள்கையோ மாறப்போவது இல்லை எனினும் 5 ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரம் கிடைத்து விடும் சூழலே நிலவுகிறது ,தமிழக அரசியலில் ஒரு தேக்க நிலை தான் நிலவுகிறது.

ரெண்டுப்பேருக்கும் மாற்றாக யாராவது வரமாட்டாங்களானு பொது ஜனம் நினைக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு ஆனால் இன்னும் சரியான மாற்று கிடைக்கவில்லை, அப்படியான மாற்று சக்தியாக வி.காந்த் இருப்பாரோ என மக்கள் நினைக்கும் அளவுக்கு தமிழக அரசியலில் வரட்சி நிலவுது என்பதே யதார்த்தம்.

# இணையத்தில் கும்மியடிப்பதில் கழக சொம்புகளின் எண்ணிக்கையே அதிகம், ஆனால் நீங்களோ பாராட்டாதவர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுக்கிறிங்க அவ்வ்.

#//கலைஞர் பற்றிய உங்களின் மதிப்பீடு 'இவ்வளவுதான்' இவ்வளவு மட்டுமேதான் எனில் இதுபற்றி நான் உங்களோடு விவாதித்துப் பயன் இல்லை. //

மு.க வின் மீதான முந்தைய கால மதிப்பீடுகள் மட்டுமே உங்களிடம் எஞ்சி இருக்கிறது என்பதால் தான் நானும் விவாதித்து என்னாகப்போகிறது என்றே நினைத்து ஒதுங்கினேன் அவ்வ்!

கொள்கை, இனம்,தமிழ் என்பதை எல்லாம் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு "வணிக அரசியலில்" மு.க இறங்கி வெகு காலம் ஆகிவிட்டதால், அவரது பிம்பம் மெல்ல மங்கி விட்டது , இப்பொழுது முந்தைய பிம்பத்தின் நிழலில் அரசியல் களத்தில் இளைப்பாறி வரும் கடந்த காலத்தின் அரசியல் அடையாளமாக மட்டுமே மு.க இருக்கிறார் என்பது பொதுவாக பழைய பார்வை கொண்டோர்க்கு ஜீரணிக்கவியலாத உண்மையாக இருக்கிறது , உண்மையினை நேர்ப்பட ஏற்கவியலாமலும் , தமது கருத்தினை மாற்றிக்கொள்ள இயலாமலும் ஒரு விதமான அஜீரணக்கோளாற்றில் சிக்கி தவிக்கிறார்கள் எனலாம்.

#//இவையெல்லாம் கட்சி சார்ந்தவைதாமே? நான் சொல்லியிருப்பது வெகுஜன ஊடகங்களை. //

வெகு ஜன ஊடகங்கள் என எவற்றினை சொல்கிறீர்கள் என தெரியவில்லை, ஆனால் சில குறிப்பிட்ட ஊடகங்கள் "அம்மையார்" எல்லாம் அரசியலுக்கு வரும் முன்னர் இருந்தே எதிர் நிலைப்பாட்டில் தானே இயங்கி வந்தார்கள்,இன்றும் அது தொடர்கிறது ,எனவே புதுசா எதிர்க்க கிளம்பியதாக சொல்வது சரியா?

அப்படி அந்த ஊடகங்கள் எதிர்த்து ஆட்சிக்கே வரவிடாமலா செய்து விட்டார்கள், 5 முறை எப்படி ஆட்சிக்கு வர முடிந்தது.

மேலும் பல புதிய ஊடகங்கள் உருவானாலும் , அவையும் கூட மு.கவினை ஆதரிக்க விடாமல் செய்வது கழக குடும்ப வியாபார போட்டி ஆகும். ஊடகங்களிலும் வியாபார போட்டியாக கழக குடும்ப நிறுவனங்கள் இறங்கி செயல்ப்படுவதால் , தங்களது வியாபார போட்டியாளரின் அரசியலை ஏன் ஆதரிக்க வேண்டும் என நினைக்கலாம் இல்லையா?

# கழகத்தினரின் வியாபார மற்றும் பணம் ஈட்டும் யுக்திக்கு முன்னர் தமிழ் நாட்டில் யாரும் போட்டிகே வரமுடியாது.

பொறியியல் கல்லூரி நடத்தாத அமைச்சர்களே கழகத்தில் இல்லை எனும் அளவில் அனைவருக்குமே கல்லூரிகள் உள்ளன, பலரும் மெட்ரிக் பள்ளிகள் ,இன்னப்பிற கல்லூரிகள், பெரும் வியாபார நிறுவனங்கள் என வளர்ந்தது எப்படி?

வேறு எந்தக்கட்சியிலும் இப்படியான "பெரு முதலாளிகள்" இல்லை என தாராளமாக சொல்லலாம்.

Amudhavan said...

வவ்வால் said...
\\100 பேர் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி இருவர் மட்டும் பலியானால் கூட செய்தித்தாளில் 100 பேர் சென்ற பேருந்து விபத்து-பலி2! என்று தான் தலைப்ப்பு கொடுப்பாங்க, பேருந்து விபத்தில் இருவர் பலி! என தலைப்பிட மாட்டார்கள்.\\

வவ்வால், நீங்கள் மேற்கொள்ளும் ஜர்னலிச வகுப்புகள் சூப்பரோ சூப்பர். பாருங்கள் ரயில் விபத்துக்கள் நடந்தால் 3478பேர் பயணம் செய்த எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. 71 பேர் பலி, 2656பேர் பயணம் செய்த பாசஞ்சர் ரயில் கவிழ்ந்தது 36பேர் சாவு என்று செய்தி போடவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறீர்களா, அப்படியெல்லாம் போடமாட்டேனென்கிறார்கள் பரதேசிகள்.........சம்ந்தப்பட்ட ரயில் விபத்து 38 பேர் சாவு, சம்பந்தபட்ட ரயில் கவிழ்ந்து 9 பேர் மரணம் என்றுதான் போடுகிறார்கள்.

Amudhavan said...

Raja said...

\\நீங்கள் அளந்தது உங்களுக்கு சரி. நான் அளந்தது எனக்கு சரி.\\

ரொம்பவும் சரி.....காலம் என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

Amudhavan said...

Jayadev Das said...
\\அதுசரி அந்தம்மா ஊழல் பண்ணியதால் இவர்களும் போட்டிக்கு ஊழல் செய்ய வேண்டுமா? இவர்கள் நால்லாட்சி தருவதை எந்த விதத்தில் அவர் செய்த ஊழல் தடுக்கிறது என்பது தான் புரியவில்லை. \\
மேலோட்டமாய்ப் பார்க்கும்போது உங்கள் கேள்வி மிகவும் சரி..அந்தம்மாவை ஊடகங்கள் மட்டுமல்லாது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை என்று எல்லா முக்கியத் தூண்களும் சேர்ந்துகொண்டு எப்படி எப்படியெல்லாம் காப்பாற்றுகின்றன என்கின்ற தகவலையும் இணைத்துத்தான் இதையெல்லாம் பார்க்கவேண்டும் என்பதைத்தான் நானும் இன்னமும் ஒரு சிலரும் சொல்கிறோம்.

Jayadev Das said...

Raja
bandhu
குட்டிபிசாசு
வவ்வால்

எல்லோரும் வைத்த கருத்துக்கள் அருமை. அதிலும் வவ்வால் சிக்சரும் பவுண்டரியமா கலக்கியிருக்காரு. இவர்கள் எழுதியதிய அனைத்துமே கருத்துக்கள் எங்கும் சிறு பிழையும் இல்லை.

\\அந்தம்மாவை ஊடகங்கள் மட்டுமல்லாது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை என்று எல்லா முக்கியத் தூண்களும் சேர்ந்துகொண்டு எப்படி எப்படியெல்லாம் காப்பாற்றுகின்றன என்கின்ற தகவலையும் இணைத்துத்தான் இதையெல்லாம் பார்க்கவேண்டும் என்பதைத்தான் நானும் இன்னமும் ஒரு சிலரும் சொல்கிறோம். \\

அப்படியெல்லாம் காப்பாத்தியிருந்தா எப்படி சார் ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும் அந்தம்மா தோத்தாங்க?

இன்னொரு சந்தேகம், அந்தம்மா ஊழல் பண்ணி பணம் சேர்த்து எங்கெங்கேயெல்லாம் சொத்து வாங்கி போட்டிருக்காங்கன்னு இப்போ முத்தமிழ் வித்தவர் பட்டியல் போட்டு கிட்டு இருக்காரு. இது இவருக்கு இப்போதான் தெரிஞ்சதா? போனமுறை இவர்தானே ஆட்சியில் இருந்தார், ஏன் வழக்கு தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை? போன ஐந்தாண்டுகளில் ஒரு வழக்குகூட போடவில்லையே ஏன்?

Amudhavan said...

Jayadev Das said...

\\Raja
bandhu
குட்டிபிசாசு
வவ்வால்

எல்லோரும் வைத்த கருத்துக்கள் அருமை. அதிலும் வவ்வால் சிக்சரும் பவுண்டரியமா கலக்கியிருக்காரு. இவர்கள் எழுதியதிய அனைத்துமே கருத்துக்கள் எங்கும் சிறு பிழையும் இல்லை. \\
ஏன் நீங்கள் மட்டும் என்ன சாதாரணமான எழுத்தா எழுதுகிறீர்கள்? உங்களுடையதும் சிக்ஸர்கள்தான், பவுண்டரிகள்தான். உங்களோடெல்லாம் போட்டி போட எனக்கு வல்லமை கிடையாது. அதனால் நான் அடுத்த வேலைகளைப் பார்க்கச் செல்வதுதான் உத்தமம். போதுமா?

வவ்வால் said...

பாகவதரே,

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என ரசிக்கிறாரே,நன்றி!

மு.கவின் சக்தி ,எதிரணியை கூட ஒன்னாக்கிடுதே ,அப்போ மெய்யாலுமே மஞ்சத்துண்டு மகான் தான் :-))
-------------

அமுதவன் சார்,

//உங்களோடெல்லாம் போட்டி போட எனக்கு வல்லமை கிடையாது. அதனால் நான் அடுத்த வேலைகளைப் பார்க்கச் செல்வதுதான் உத்தமம். போதுமா?//

நீங்க ஒரு உத்தமமான படைப்பாளி , எவ்வகை எழுத்தென்றாலும் தெளிந்த நீரோடைப்போல ,சிக்கலில்லாமல் எளிமையாக எழுதி,வலிமையாக புரிய வைப்பீர்கள், நீங்களே இப்படி சொல்லலாமா?

எங்களை உத்தமவில்லனாக்கிட்டிங்களே , நாங்கல்லாம் யெஸ்டேர் டே ரெயினிங், டு டே மஷ்ரூமிங் ,என்னத்த வல்லமை ,நொள்ளமை இருக்கு அவ்வ்!

மு.கவின் அருமைப்பெருமைகள் சிறப்பானவை ,அவருக்கு இணை அவரே தான் ஆனால் என்ன அவை எல்லாம் கடந்த கால வரலாறு,நிகழ்காலம் புதிய வரலாற்றினை மாற்றி எழுதிவிட்டது , எப்படியாகினும் வரலாற்றினை படிப்பதிலும் விருப்பமே, அதுவும் உங்கள் எழுத்தில் படிப்பது, அமுதும் தேனும் கலந்த தமிழ் விருந்தாச்சே விடுவோமா, நல்லா ரசிச்சு இன்புறுவொம் என்றும்!!!

Amudhavan said...

வவ்வால் தங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் கருத்துக்களை மிகத் தெளிவாக எழுதி இருக்கீங்க. அதே போல இங்கே எழுதியுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக ராஜா மிகத் தெளிவாக கலைஞர் குறித்து எழுதியுள்ளார். உங்கள் அபிமானம் எனக்குப் புரிகின்றது. ஆனால் கலைஞர் குறித்து என் பார்வை.

20 வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் மாலன் நடத்திக் கொண்டிருந்த அக்னி (என்று நினைக்கின்றேன்) சார்பாக வலம்புரி ஜான், குமரி ஆனந்தன், கலைஞர் மூவர் சங்க காலத்தமிழ், இடைக்காலத்தமிழ், தற்காலத்தமிழ் என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் மேடைப்பேச்சில் பேசிய தொகுப்பினை பல வருடங்கள் பல நூறு முறை கேட்டு இருப்பேன்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தன் மொழியில் எட்ட முடியாத உயரத்தில் ஈடு இணை இல்லாத திறமை பெற்ற ஒரே நபர் கலைஞர் மட்டுமே. இது போல நிர்வாகத்திறமை, பேச்சாற்றால், நினைவாற்றல் போன்ற அனைத்திலும் எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்குச் சொந்தக்காரர் கலைஞர் மட்டுமே.

ஆனால் அரசியல் ரீதியாக அவரை ஒரு துளி கூட பாராட்ட முடியல. நீங்க சொன்ன மாதிரி காலம் தீர்மானிக்கும். அப்புறம் நீங்க சொன்ன இந்த ராசா குறித்து அவரது ஊழல் குறித்து மற்றவர்கள் சொன்னதை விட இந்த தேர்தலில் உள்ள தாக்கத்தை எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் (நீலகிரி தொகுதி) தொழிலாளர்கள் மூலம் பெற்ற தகவல்களை சமயம் கிடைக்கும் என் பதிவில் எழுத எண்ணம்.

சமீப காலமாக எதையும் நிதானமாக எழுத நேரம் இல்லாத காரணத்தால் எழுதுவதைப் பற்றி யோசிக்கக்கூட முடியல. இன்று தான் உங்கள் பதிவு பக்கமே வரமுடிந்தது. உங்கள் கலைஞர் அபிமானம் எனக்குத் தெரிந்ததே. அதை விட நண்பர்கள் அளித்த ஒவ்வொரு கரடு முரடான விமர்சனத்திற்கும் உங்கள் மென்மையான பதில்களை படித்த போது நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. நன்றி.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\உங்கள் கலைஞர் அபிமானம் எனக்குத் தெரிந்ததே.\\

அதனை அபிமானம் என்று சொல்லமுடியாது. மதிப்பு, மரியாதை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான்கைந்து தடவை அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் பழகியவிதம், காட்டிய மரியாதை, எத்தனை எளியவர்களாயிருந்தாலும் அவர்களை மதிக்கின்ற பண்பு இவையெல்லாம் அவர்பால் ஒரு மரியாதையை ஏற்படுத்தின.

சில பதிவர்களுக்காகவும், அவரை மரியாதையில்லாமல் ஆபாசமாகப் பேசுகிறவர்களுக்காவும், அவரைபற்றி எழுதுகிறவர்களையும் அதே ஆபாச உதாரணங்களைப் பூசுகிறவர்களுக்காகவும் சில பின்னூட்டப் புலிகளுக்காகவும் நான் அதனை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை.
ஏற்கெனவே பல இடங்களில் பல பதிவுகளில் பல பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறமாதிரி நான் விரும்புகிற தலைவர் காமராஜர்தான். இந்த அடிப்படையில்தான் நண்பர் தமிழருவி மணியனுக்கும் எனக்கும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நல்ல நட்பு ஆரம்பமானது. இன்றைக்கு அவருடைய 'அரசியல் பார்வை' எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அவரை நான் கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அரசியல் வேறு நட்பு வேறு.

\\இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தன் மொழியில் எட்ட முடியாத உயரத்தில் ஈடு இணை இல்லாத திறமை பெற்ற ஒரே நபர் கலைஞர் மட்டுமே. இது போல நிர்வாகத்திறமை, பேச்சாற்றால், நினைவாற்றல் போன்ற அனைத்திலும் எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்குச் சொந்தக்காரர் கலைஞர் மட்டுமே.\\

இந்த விஷயங்கள் நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. இவையெல்லாம் காலம் கடந்தும் நிற்கும். உலகிலுள்ள ஆயிரக்கணக்கான நூலகங்களில் கலைஞரின் பல படைப்புக்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அரசியல் காரணங்களுக்காகத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

\\ஆனால் அரசியல் ரீதியாக அவரை ஒரு துளி கூட பாராட்ட முடியல.\\

அவரது சில அரசியல் முடிவுகளில் எனக்கும் உடன்பாடில்லை. அந்தக் காரணத்திற்காக மேலே நீங்கள் சொன்னதெல்லாம் அழிந்துபோய்விட்டன என்று எதற்காக நான் நம்பவேண்டும்?
அரசியல் முடிவுகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. எமர்ஜென்சியில் நடைபெறாத அட்டூழியங்களா? அதற்காக இந்திரா காந்தியை லேசாகக்கூட இதுவரைக்கும் கண்டிக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். (எமர்ஜென்சியை எதிர்த்து விட்டு இந்திரா காலில் போய்விழலாமா என்று கருணாநிதியைக் கேள்விகேட்கிறார்களே அந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது இவருடைய அரசியல் சரிவுகள். இதற்கான காரணங்கள் என்ன என்பதுதான் தமிழகம் இதுவரை ஈடுபடாத ஆய்வு)
குஜராத்தில் நடைபெற்ற பச்சைப் படுகொலைகள் இன்றைக்கு மறைக்கப்பட்டுவிட்டு அதற்குக் காரணமான மோடியை 'வளர்ச்சியின் நாயகனாக்கி'க் கிட்டத்தட்ட பிரதமர் நாற்காலி அருகேவரைக்கும் கொண்டுவந்துவிட்டார்கள். கருணாநிதியின் 'அரசியலை' மட்டும் மறக்கமாட்டார்களா என்ன?
இங்கே மக்களைப் பொறுத்தமட்டில் எல்லாமே 'இதுவும் கடந்துபோகும்' ரகம்தான். மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் எல்லாமே மாறிப்போகும்.

Post a Comment