Saturday, April 4, 2015

பெண்கள் விரும்பும் பாடல்கள்

பெண்கள் விரும்பும் திரைப்படப் பாடல்கள் குறித்து ஒரு பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்று மார்ச் 2015 உயிர்மை இதழில் வந்துள்ளது. ‘கூட்டாளிகளின் குரல்கள்’ என்ற அந்தக் கட்டுரையை ஜா. தீபா என்பவர் எழுதியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே சரியான நிலையைத் தொடுகிறார் அந்தப் பெண்மணி. அவர் அந்தக் கட்டுரையை இப்படித் தொடங்குகிறார். ‘சில நேரங்களில் மனம் வெட்கம் அறிவதில்லை. பேருந்தில் யாரோ ஏதோ புத்தகத்தைப் படித்தால் அதற்கு என்ன? இறங்குவதற்குள் அது என்ன புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா? நிச்சயமாக. இதுபோன்ற அல்ப மனம்கூட இல்லாமல் எனக்கென்ன என்று இருந்துவிடுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதனால் சில சமயங்களில் வாய்விட்டும் கேட்டுவிடுவதுண்டு. “அது என்ன புத்தகங்க?”

சமீபத்தில் இதுபோன்ற அல்பத்தனங்களில் இன்னொன்றும் கூட சேர்ந்துவிட்டிருக்கிறது. 

பேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் காதுகளில் மாட்டியிருக்கிற ஹெட்ஃபோனில் அப்படி என்ன பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? இது சுவாரஸ்யமிக்க கேள்வியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சில பெண்கள் தங்களையும் அறியாமல் புன்னகைக்கிறார்கள். சிலர் தூங்கிவிழுகிறார்கள். இன்னும் சிலர் அவசரமாகப் பாடலை மாற்றுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்யும்போது ‘யதார்த்தமாக’ கண்கள் அவர்கள் செல்போனை கவனிக்கையில் சில வேளைகளில் கண்டுபிடித்தும் விடலாம். 

அப்படியானதொரு பார்வையில் ஒரு பெண் லயித்துக் கேட்டுக்கொண்டிருப்பது Hits of 60s என்பதாக அந்தப் பெண்ணின் மொபைல் திரை காட்டியது. 

என்னுடைய மேலான ஆச்சரியத்திற்குக் காரணம், அந்தப் பெண் இருபத்தைந்து வயதிற்குள்ளும், அதிநவீன உடையில் காணப்பட்டதும்தான். 

அந்தப் பெண்ணிற்கு இந்தப் பாடல்களை யார் அறிமுகம் செய்து வைத்திருப்பார்கள்? உலகளவில் வெளியாகிற சமகால இசை உடனுக்குடனே கிடைக்கிறபோது அவள் அந்தக் காலத்துப் பாடல்களை ஏன் கேட்க விரும்புகிறாள்?’ என்று இப்படிக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார் அவர்.

அதாவது இன்றைய மொத்த ஜனத்தொகையும், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் அனைவருமே ‘ஒருவருடைய’ பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கின்றனர் என்றும் அனுபவிக்கின்றனர் என்றும், அவருடைய பாடல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஒரு தவறான பிம்பம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அல்லது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

‘அவருடைய’ பாடல்கள் மட்டுமே கேட்கத் தகுந்தவை என்றோ அல்லது அவருடைய பாடல்களுக்கு இணையாக இதுவரை எந்தப் பாடல்களும் வந்ததில்லை என்றோ, இனிமேலும் வரப்போவதில்லை என்றோ அந்தக் ‘கற்பிதம்’ தவறாக வலியுறுத்தப்படுகிறது.

அவருக்கு முன்பிருந்தே பாடல்கள் இருந்துவந்த போதிலும் அவையெல்லாம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றும் அப்படித் துருப்பிடிக்க ஆரம்பித்தபோது வந்த இசைப்பிதா இவர்தானென்றும், துவண்டுகிடந்த இசையைத் தூக்கிப்பிடித்த மகான் இவர் ஒருவரே என்றும் கற்பிதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

இதற்கு நடுவே அந்த இசையமைப்பாளர் சிம்பொனி இசைக்கு முயற்சிக்க, ‘சிம்பொனி இசையமைத்த ஒரே இந்தியர், ஒரே ஆசியர்’ என்றெல்லாம் புகழ் மாலைகள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன. 

‘இதுவரையிலும் பூலோகம் கண்டிருக்கவே முடியாத இசைப் படைப்பாளர்’ என்றும் ‘இப்படியொருவர் இதுவரையிலும் பிறந்ததே இல்லை’யென்றும் கொண்டாடினார்கள்.

பிறகு பார்த்தால் அவர் சிம்பொனி அமைக்க முயற்சித்தார் என்றும் அந்த முயற்சி கூடிவரவில்லை என்றும் வெற்றிபெறவில்லை என்றும் தகவல்கள் வந்தன. 

இந்தத் தகவல்களையெல்லாம் அறியாமலேயே அல்லது அறிந்துகொள்ள முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே தொடர்ந்து புகழ்மாலை சூட்டிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் இணைய உலகிலும் அச்சு ஊடகங்களிலுமாக உருவாகிவிட்டிருந்தது.

இசையை வைத்து இந்த அரசியல் உருவாகியிருந்ததே தவிர இதற்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை.

எல்லாத் துறைகளிலும் எத்தனையோ பகீரத முயற்சிகள் இங்கே காலந்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளும் அவற்றில் அடங்கும். அதற்கென்று பயிற்சிகள் பெறுவதும், காலத்தைச் செலவழிப்பதும், உடலை வருத்திக்கொள்வதும், சிந்தனையைச் செலுத்துவதும், திறமையைச் செலுத்துவதும் நடைபெறும்.

எல்லாமே அந்த விஷயம் வெற்றிபெற்றால்தான் பயன்தரும்.

அல்லாமல் ஏதோ காரணத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டால் அத்தனையும் விரயம் என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதற்கான முயற்சிகள் செய்ததாலேயே, அதனை அடைந்துவிட்டதாகவும், சாதித்துவிட்டதாகவும், வெற்றிபெற்றுவிட்டதாகவும் கருதவும் கூடாது. அதனை சாதனையாகச் சொல்லிக் கொண்டாடவும் கூடாது. இதுதான் உலக வழக்கம், மரபு, அடிப்படையான நேர்மை.

பட்டங்கள் பெற்று ஐஏஎஸ் தேர்வுக்கு பகீரத முயற்சிகள் செய்துவிட்டதனாலேயே ஒருவன் ஐஏஎஸ் என்று தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாது. முடியாது. அதற்கான மொத்தத் தேர்வுகளிலும் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் இளையராஜா சிம்பொனிக்கு வாசித்ததையே சிம்பொனியில் சாதித்துவிட்டார் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

அது இல்லையென்று சுட்டிக்காட்டியதும் ‘அதற்கு முயற்சி செய்தாரா இல்லையா’ என்று காகிதக் கோபுரம் கட்டினார்கள். அதைவிடக் காமெடியாக ‘அவருக்கு அதற்கான திறமையும் தகுதியும் இருக்கிறதா இல்லையா?’ என்று கொனஷ்டைக் கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆக அவர்களின் எண்ணமெல்லாம் சிம்பொனி வெளிவந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் சிம்பொனி இசையமைத்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை எவ்விதத் தடங்கல்களும் 
இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.

ஏனெனில் இணையத்தில் வருவதை அப்படியே நம்புவதற்கு இங்கே நிறைய ‘அப்பாவி ஆடுகள்’ தயாராக இருக்கின்றன.

சரி, ஜா. தீபாவின் கட்டுரையைத் தொடர்வோம். அவர் மேலும் சொல்கிறார்…………’பிடித்த பாடல்களைத் தரவிறக்கம் செய்து நினைத்த நேரத்தில் கேட்கும் வசதி அநேகமாய் அலைபேசி இருக்கும் எல்லாருக்குமே இருக்கிறது. அதே சமயம் தனக்கு விருப்பமான ஒரு பாடலைக் கேட்க எல்லாரும் காத்திருந்த காலம் என்று ஒன்றும் இருந்தது. அதிலும் வானொலியோ மின்சாரமோ கூட இல்லாத வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களை எப்படி எப்போது கேட்டிருப்பார்கள்?

திகட்டத் திகட்டப் பாடல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த ஏராளமான ஊடகங்கள் வந்தடைந்த காலத்திற்கு முன்பு மனம் விரும்பிய பாடல்கள் டீக்கடையிலோ, யார் வீட்டு வானொலியிலோ ஒலிபரப்பப்பட்டால் நின்று கேட்பதற்காக ஒரு டீயைச் சொல்லிவிட்டு ஊதி ஊதிக் குடிக்கும் வாய்ப்பும் சாக்குபோக்கும் ஆண்களுக்கு இருந்தது. அதே சமயம் பாடலைக் கேட்கவேண்டும்போல் இருந்தாலும் தவறாக யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எதையோ மறந்துவிட்டு யோசிப்பதுபோல நிற்பதுவும், தயங்குவதுபோல நடப்பதுவும் என பெண்களுக்கும் சில சாக்குப்போக்குகள் இருந்தன.

ஆனால் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் பார்த்தால் மிகவும் பிடித்த ‘முல்லைமலர் மேலே’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘நீரோடும் வைகையிலே’ போன்ற பாடல்களைக் கேட்கவேண்டும் போல் இருந்தால் அப்போதைய காலகட்டத்துப் பெண்கள் என்ன செய்திருப்பார்கள்? அதற்கும் வழி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் சுதந்திரமான வழிதான். யாரும் இல்லாத நேரங்களிலும், குழந்தையைத் தாலாட்டுகிறவகையிலும் அப்பாடல்களைப் பாடிப் பாடித் தீர்த்திருக்கிறார்கள்.’ – என்று நீள்கிறது கட்டுரை.

இந்தப் ‘பாடிப் பாடித் தீர்ப்பது’ என்பதுதான் பல பாடல்கள் அந்தக் காலம்தொட்டு இன்றைக்கு வரைக்கும் நீடித்துவிளங்குவதன் ரகசியம்.

இப்படிப் பாடித் தீர்ப்பதற்கு அந்தப் பாடலின் மெட்டும், பாடலின் வரிகளும் எளிமையாகவும் அதே சமயம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.

புரிவது மட்டுமின்றி பாடலின் வரிகளிலும், மெட்டிலும் ஒரு வசீகரம் இருக்கவேண்டும். குறிப்பாக பாடலின் வரிகள் அழகைச் சுமந்ததாக இருக்கவேண்டியது அவசியம். 

இந்த வசீகரத்தை உணர்ந்து அதனை இலக்கியத்தரம் குன்றாமல் கொடுத்துப் புகழ் அடைந்தவர்களில் பெரும்புகழ் அடைந்தவர்தான் கண்ணதாசன். 

அதனால்தான் எத்தனையோ கவிஞர்கள் இருக்க இன்றைக்கும் மகா கவிஞராகக் கொண்டாடப்படுகிறார் அவர். அவரை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பா வரிசைப் படங்களில் பாடல்கள் யாவும் காலங்களைத் தாண்டியும் நிற்பதற்குக் காரணம் அந்தப் பாட்டுவரிகளின் ஜீவன்தான்.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கர்நாடகத்தில், அதிலும் பெங்களூரில் ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களை எல்லா மொழியினரும் கொண்டாடிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இன்றைக்கும் தமிழ்ப் படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அதுவெறும் திரைப்படங்கள் பார்ப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது) அன்றைக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையைப் படங்களோடு இணைத்துப் பார்த்துக்கொண்டார்கள். பாடல் வரிகளில் ஆறுதலும் சுகமும் தேடினார்கள்.

அப்படித் தேடியவர்களுக்கு கண்ணதாசனின் பல தத்துவார்த்தப் பாடல்கள் பற்றுக்கோடுகளாக இருந்தன.

‘போனால் போகட்டும் போடா, வீடுவரை உறவு, சட்டிசுட்டதடா கை விட்டதடா, மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், ஆறுமனமே ஆறு, நினைக்கத் தெரிந்த மனமே, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஏன் பிறந்தாய் மகனே, பிறக்கும்போதும் அழுகின்றாய், அச்சம் என்பது மடமையடா, வந்தநாள் முதல் இந்தநாள் வரை, உடலுக்கு உயிர் காவல், வாழநினைத்தால் வாழலாம், உள்ளம் என்பது ஆமை, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, எங்கே நிம்மதி, அண்ணன் என்னடா தம்பி என்னடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ போன்று எண்ணற்ற பாடல்கள்………..(வெறும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வந்த கண்ணதாசன் பாடல்கள் மட்டுமே இவை. மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் வந்த பாடல்களையெல்லாம் பட்டியலிட்டால் அது எங்கோ போய் நிற்கும்) 

இந்தத் தத்துவார்த்தப் பாடல்கள் இல்லாமல், காதல் பாடல்கள், காதல் தோல்விப்பாடல்கள், குடும்பம் பாசம் உறவு, சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என்று மனிதர் ‘அடித்து ஆடாத’ துறையே இல்லை.

இவருடைய பல பாடல்களை சேகரித்து வைத்த கன்னட நண்பர்கள் உண்டு.

நான் பணியாற்றிக்கொண்டிருந்த பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்த பல கன்னட நண்பர்கள் பாடல் ரிகார்டுகளை வாங்கி வீட்டில் வைத்து என்னைத் தேடிவந்து பல பாடல்களை சொல்லச்சொல்லிக் கன்னடத்தில் எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பல வார்த்தைகளுக்குக் கன்னடத்தில் அர்த்தமும் கேட்டு எழுதிக்கொள்வார்கள்.

கன்னடத்திரையுலகில் மிகப்பெரும் பாடலாசிரியராக ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் பாடல்கள் எழுதி மிகப்புகழ்பெற்ற கவிஞராக வலம்வந்த திரு ஆர்.என்.ஜெயகோபாலை ஒருமுறை ஒரு உணவுவேளையில் அவருடைய அண்ணன் வீட்டில் சந்திக்க நேர்ந்து இந்த விஷயத்தைச் சொன்னபோது “கண்ணதாசன்தானே சார் எங்களுக்கெல்லாம் கைடு” என்றார் ஒற்றை வரியில்.
பாடலின் வசீகரம் ஒருபுறமிருக்க காந்தம்போல் கவர்ந்திழுக்க வேண்டியது அந்தப் பாடலின் மெட்டு. மெட்டும் வரிகளும் கலந்து ஒரு அற்புதமான லயத்தில் இணைந்துவிட்டால் அந்தப் பாடல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும் உன்னத நிலைக்குச் சென்றுவிடும். எழுபது வரையிலான பாடல்கள் இன்றும் நிலைத்து நின்றிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

அப்படியில்லாமல் மெட்டுக்கள் சுமாராக இருக்க வரிகளை மட்டுமே நம்பி நிற்கும் பாடல்கள் காட்சியின் சிறப்புக்களை வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மிக அருமையான பாடல் என்ற பட்டியலுக்கு வராது.

அதேபோல் வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வெறும் இசையை மட்டுமே நம்பி, வாத்தியங்களின் சத்தங்களுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் பாடல்களும்  கேட்பதற்கு வேண்டுமானால் வித்தியாசமாக இருந்து அந்த நேரத்திற்கான இன்பத்தைத் தரலாமே தவிர, கேட்பவர்களின் மனதில் படிந்திருந்து எந்தக் காலத்திலும் நின்று நிலைக்கும் வாய்ப்புக்களை மிகவும் குறைந்தே பெறமுடியும்.

வெற்றிபெற்ற பாடல்கள் என்பன வரிகளும் இசையும் அதிஅற்புதமாக ஒன்றிணைந்து முயங்கிக் கிடக்கும் பரவசநிலையை எய்திய வடிவம் என்பதே சாலவும் பொருந்தும். 

ஒரு பாடல் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அந்தப் பாடல் கேட்டவுடன் மனதில் பதிந்துவிட வேண்டும்.

அதன் வரிகள் மனதிற்குள் எழுத்துச் சித்திரங்களாக உருமாறி என்றென்றைக்கும் முணுமுணுப்பதற்குத் தோதாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வரிகளை முணுமுணுக்க வைக்க அதன் இசை, வரிகளுடன் இணைந்து கூடவே வருதல் வேண்டும்.

நம்மைப் பாடத்தூண்ட வேண்டும்.

அப்படிப் பாட முடியாதவர்கள் ‘ஐயோ யாராவது இந்தப் பாடலைப் பாட மாட்டார்களா? கேட்க வேண்டுமே’ என்ற ஆவலை மனதிற்குள் எழுப்புவதாக அமைந்திருக்க வேண்டும்.

இந்த நிலைகளைத் தாண்டி வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் பாடலின் வரிகளை பேச்சுவழக்கில் மக்கள் எடுத்துக்காட்டுக்களாக வழங்குவதாக இருத்தல் வேண்டும்.


இதையும் தாண்டி இலக்கிய அரங்குகளிலும் வாதப் பிரதிவாதங்களிலும் அந்தப் பாடல்கள் சொல்லப்படுபவையாக பேசப்படுபவையாக அமைந்திருத்தல் வேண்டும்.

 இப்படி அமைந்துவிட்டால் அந்தப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் கடந்துநிற்கும் பாடல்களே. இப்படி அமைந்த பாடல்களால்தான் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரமும், கவியரசர் கண்ணதாசனும் வாலியும் மற்றும் சிலரும் இன்னமும் நினைக்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை அந்தக் கட்டுரையும் பேசுகிறது. அந்தப் பெண்மணி சொல்கிறார். “வரி பிசகாமல் இத்தனைப் பாடல்களையும் இதுபோன்ற பெண்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்? சமையலறையில் இருந்தபடி எங்கிருந்தோ வரும் ஒரு பாடலின் வரியினைக் கேட்டுத் தேய்ந்த பின்னர் முணுமுணுத்தபடி அதனைத் தொடரும் அளவுக்கு எத்தனை தடவை அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பார்கள்? கேட்டது பாதி. படித்தது மீதி.

‘வரும்போது வேட்டைக்காரன் பாட்டுப் புஸ்தகம் வாங்கிட்டு  வாங்க’ என்று கணவனிடம் சொல்லியனுப்பும் பெண்கள் பலரும் இருந்தார்கள்.’ என்பவர் மறக்கமுடியாத ஒரு பெண்மணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்………….

 ‘இப்படிப் பாடக் கற்றுக்கொண்ட ஒரு பாட்டியை எட்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறேன். சேரன்மகாதேவியில் இருந்தார். அவருடைய குரல் வளத்திற்காகத் தெருவினரால் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது அவர் இருந்த வீடு. நீர்நிலைத் தொட்டிக்குக் கீழே இருக்கும் கால்பங்கான அறைதான் என்றாலும் அதுவும் வீடுதான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் பாட ஆரம்பித்துவிடுவார்.

எல்லாமே அக்மார்க் பழைய பாடல்கள்!

அதிலும் கல்யாணியும், சுபபந்துவராளியும் சண்முகப்பிரியாவும் பற்றியிழுக்கும் நீளமான பாடல்கள். ஒரு காலத்தில் மேடைப் பாடகியாக இருந்தவர் அவர்’ என்கிறார் ஜோ.தீபா.

பாட்டு வரிகள் இல்லாமல் பாடல்கள் என்றால் வெறும் இசை மட்டுமே போதும், பாடல் என்பதே வெறும் இசையால் ஆனதுதான்  என்ற எண்ணம் மேலை நாட்டுத் தாக்கத்தினால் உருவான ஒன்று. வாத்தியக்கருவிகளினால் உருவாகும் இசை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமே. ஆனால் அந்த நாட்டு பிரம்மாண்ட வாத்திய இசைகளுடன் நம்முடைய வாத்தியக்கருவிகள் இசையை ஒப்பிடமுடியாது.

நம் நாட்டின் இசைக்கருவிகள் வேறு. மேலை நாட்டின் இசைக்கருவிகள் வேறு.

நம் நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இசை இரு வடிவங்களைக் கொண்டது. ஒன்று கர்நாடகம், இந்துஸ்தானி என்ற மரபு ரீதியான இசை. அந்தக் காலத்தில் அரண்மனைப்போன்ற தர்பார் மண்டபங்களில் வாசிக்கப்பட்ட வாத்தியக்கருவிகளைக் கொண்டு இந்தவகையான இசை இசைக்கப்பட்டது.

மற்றொன்று நாட்டுப்புறப் பாடல்கள் வழியில் எளிய வாத்தியக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இசை. இதில் கொட்டாங்கச்சி, புல்லாங்குழல் முதல் எளிய மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தாங்களே தயாரித்துக்கொண்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கப்படும் இசை.

விஞ்ஞானத்திலும் நவீனத்திலும் நம்மை விட எப்போதுமே பல ஆண்டுகள் முன்னணியிலிருக்கும் மேலை நாட்டினர் பிரம்மாண்டமான இசைக்கருவிகளை உபயோகித்து அவர்களின் இசையை வடிவமைத்திருந்தனர்.

இந்த அத்தனை இசையையும் இணைக்கும் முயற்சிகளைத் திரைப்படங்கள் செய்தன.

ஆரம்ப காலத்து இசையமைப்பாளர்களான எஸ்விவெங்கட்ராமன் போன்றோர் கர்நாடக இசையை அடிப்படையாக வைத்தே இசையமைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜி.ராமனாதன் போன்றவர்கள் இந்தியில் இசைக்கப்படும் வடிவத்தையும் சில ஆங்கிலப்பட இசைவடிவங்களையும் துணிந்து தமிழுக்குக் கொண்டுவந்தனர்.

இவரது பாணியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் மொத்த இசையின் பாணியையே மாற்றியமைக்கும் புரட்சியில் ஈடுபட்டனர். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை அத்தனையையும் எளிமைப்படுத்தி, பெரிதாக இசை ஞானம் இல்லாதவரையும் ஈர்க்கும் படியான, இசை தெரியாதவர்களும் முணுமுணுக்கும் படியான  எளிமையான அதே சமயம் இனிமையான இசையின் புதியதொரு வடிவத்தை உருவாக்கி மெல்லிசை என்று அழைக்கவும் செய்தனர். 

அந்த மெல்லிசைதான் இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான் அவர்கள் கண்ணதாசனால் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கவும் பட்டனர்.
இவர்கள் ஏற்படுத்திய பாணிதான் தமிழ்த்திரையுலகில் பல்வேறு மாறுதல்களையும் கடந்து இன்னமும் பல்வேறு இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இவர்களுக்குப் பின் வந்த அத்தனை இசையமைப்பாளர்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் பாணி இதுதான். இதுவேதான்.

இவர்களுடைய காலகட்டத்தில் இவர்களுக்குப் போட்டியாக, இணை ஓட்டத்தில் இவர்களுக்கு சமமாகவே வந்துகொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன்.

கே.வி.மகாதேவன் தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மெல்லிசை ஒரு பக்கம் போய்க்கொண்டே இருக்க தமக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டார் அவர்.

அதுதான் நாட்டுப்புற இசை.

இன்றைய இளையதலைமுறை கருதிக்கொண்டிருப்பதுபோல் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையைக் கொண்டுவந்தவர் இளையராஜா கிடையாது. கொண்டுவந்தவர் என்பது மட்டுமல்ல அதனை நிலைநிறுத்தியவரும் கே.வி.மகாதேவன்தான். மகாதேவன் வெற்றிகரமாகப் பவனிவந்துகொண்டிருந்த அதே பாணியை இ.ராவும் தொடர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்..

ஏனெனில் கே.வி.எம் நாட்டுப்புற இசையில் போட்டிருக்கும் பாடல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல, நூற்றுக்கணக்கான பாடல்கள்.

நூற்றுக்கணக்கான பாடல்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதம் ஹிட் ரகம்தாம். ஒரு படத்தில் ஆறு அல்லது ஏழு பாடல்கள் என்றால் இரண்டு பாடல்கள் மெல்லிசை, இரு பாடல்கள் சுத்தமான கர்நாடக இசை, இரு பாடல்கள் நாட்டுப்புற இசை என்பதுபோல் ஒரு கணக்கு வைத்துக்கொள்வார் கேவிஎம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் பிரிவுக்குப் பின்னர் மொத்த இசையுலகமும் விஸ்வநாதனின் கைகளுக்குள் வந்துவிட்டது.

மற்றவர்களின் ராஜ்ஜியத்தில் இசையுலகம் வந்தபோது அவர்கள் செய்த  ஆடம்பர அட்டகாசங்களைப் போல் இல்லாமல், தம்மைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டுக்கொள்வதற்கு முயற்சிகள் ஏதும் செய்யாமல்  ‘தம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மட்டுமே இயங்கியவர் விஸ்வநாதன்.

அவருக்குப் பின்னால் வந்த இளையராஜா ஆரம்பித்து தேவா. ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் என்று இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் வரைக்கும் இசையில் அடிப்படையாக என்ன சாதித்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் ஒற்றை மனிதராகவே சாதித்துவைத்துவிட்டுப் போயிருப்பவர் எம்எஸ்வி.

தொழில்நுட்ப ரீதியிலும் இதுவரையிலும் பயன்படுத்தாத, புதிதாக வந்திருக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்றவகையிலும், பிற இசைகளைக் கோர்ப்பது, கலப்பது என்றவகையிலும், எக்கோ, ஸ்டீரியோ, டால்பி, டிஜிட்டல் என்று நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது என்றவகையிலும்தாம் இளையராஜாவோ, ரகுமானோ, ஹாரிஸ் ஜெயராஜோ இன்னபிற இசையமைப்பாளர்களோ புதிதாக ஏதாவது செய்யமுடிகிறதே தவிர, பாடல்களின் அடிப்படை விஷயங்களில் விஸ்வநாதனைத் தாண்டி இதுவரையிலும் யாராலும் எதுவும் செய்யவும் முடியவில்லை- செய்யப்போவதும் இல்லை என்பதும் உண்மை.

காரணம் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒவ்வொரு துறையிலும் இதுபோல் நிறைவான, அத்தனை சாதனைகளும் செய்துவிட்டுச் செல்லும்  பெருங்கலைஞர் ஒருவர் வருவார். தமிழின் அதிர்ஷ்டம் தமிழுக்கு – தமிழ்த்திரைத்துறைக்கு, அப்படி முக்கியமான மூன்று துறைகளுக்கு முக்கியமான மூன்று சாதனையாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

ஒருவர் சிவாஜிகணேசன்

இன்னொருவர் கண்ணதாசன்,

மூன்றாமவர் எம்எஸ்விஸ்வநாதன்….

-இந்த மூன்று பெரும் சாதனையாளர்கள் போட்டுவிட்டுப் போயிருக்கும் ராஜபாட்டையில்தான் மற்றைய சாதனையாளர்கள் இன்றைக்கும் நடைபோட்டு அவரவர்களுடைய சாதனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மூன்று பேரின் சாதனைகளைத் தாண்டி ஏதாவது செய்யமுடியுமா என்றால் மேலோட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மாறுதல்கள் செய்து வித்தியாசமாகத் தோன்றச் செய்ய முடியுமே தவிர அடிப்படையிலான பெரிய மாறுதல்கள் எதுவும் செய்துவிடமுடியாது.

செய்வதற்கும் ஒன்றும் இல்லை.

உதாரணத்திற்கு, திருக்குறளில் உள்ள கருத்துக்களைத் தாண்டி புதிதாக எந்தக் கருத்தும் சொல்லிவிடமுடியுமா என்ன? வேண்டுமானால் விஞ்ஞானம், சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர், ஐபாட் என்று இப்படி ஏதாவது சொல்லலாம்.

நான் சொல்லவந்தது அடிப்படை விஷயங்கள் பற்றி.

பாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

அடிப்படையிலான வித்தியாசங்களையும் பாடல்களில் செய்துகாட்டியவர் அவர்.

கிளி பேசும் வார்த்தைகளோடு ஒரு பாடல் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா?’ என்று சர்வர் சுந்தரம் படத்திலே ஒரு பாடல்-

பாரதியின் கனவுக்காட்சிகளோடு ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்றொரு ‘கை கொடுத்த தெய்வம்’ படப்பாடல்-

பச்சைவிளக்கில் ரயிலின் ஓட்டச் சத்தத்தைப் பின்னணியில் வைத்துப் பின்னப்பட்ட ‘கேள்வி பிறந்தது அன்று’ என்ற பாடல்  (இந்த மூன்று பாடல்களும் ராமமூர்த்தியுடன் இணைந்திருந்த சமயத்தில் போட்டது)-

ஸ்வரம் சொல்லச் சொல்ல ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்துபார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி’ என்றொரு பாடல் –

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ என்று ஏகப்பட்ட மிமிக்ரி சத்தங்களுடன் ஒரு பாடல்-

‘இருமனம் கொண்ட திருமணவாளன்’ என்று அவர்கள் படத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு கதாநாயகன் வாயைத் திறக்காமல் வயிற்றிலிருந்து பேசும் வென்ட்ரிலோகிஸம் (ventriloquism) என்ற வகையில் பேசவைத்து ஒரு பாடல்……………….
 என்பது போல, பாடல்களின் இத்தகைய வடிவமெல்லாம் அதுவரை யாரும் சிந்தித்திராதது. 

திரைப்படத்துறையில் எந்த இசையமைப்பாளரும் யோசித்துப் பார்க்காத வடிவங்களில் அமைக்கப்பட்ட பாடல்கள் இவை.

இதுபோன்ற பாடல்களுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது.

இம்மாதிரியான சோதனைக் களத்தில் அமைந்த பாடல்களை வேறு எந்த இசையமைப்பாளராவது முயன்றாரென்றால் சோதனை முயற்சிகளில்தாம் கவனம் செலுத்துவார்களே தவிர மெட்டுக்களின் ‘இனிமையை’ அவர்களால் காப்பாற்ற முடியாது. 

ஆனால் விஸ்வநாதனைப் பொறுத்தவரை மெட்டுக்கள்தாம் முதலில். மற்றவையெல்லாம் அதன்பிறகுதான்.

சாதாரணப் பாடலோ சாதனை முயற்சி பாடலோ பாடல்களின் மெட்டுக்களில் இனிமை வழியும்.

அதனால்தான் அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பாடல்கள் இனிமையாக இருக்கும். ஒரு ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமை இல்லாமல் ‘பேசுவதுபோன்று’ இருக்கும்.

மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை உள்நுழைந்து பார்த்தோமானால் (இவர்களில் அந்தக் காலத்து ஏ.எம்.ராஜாவையோ சுதர்சனம் போன்றவர்களையோ சேர்க்கவில்லை) ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமையுடன் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் பல்லவியைத் தாண்டிவிட்டால் பல்லை இளிக்கும்.

வெறும் பல்லவிக்கு மட்டும் இசையமைத்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் ஓகே வாங்கிவிட்டு சரணத்தை எப்படியோ கொண்டுவந்து எப்படியோ இழுத்துக்கொண்டுபோய் எப்படியோ முடித்து வைப்பது என்ற பிசினஸ், போங்காட்டம் எல்லாம் இவரிடம் இல்லவே இல்லை. 

இதுதான் விஸ்வநாதன்!

அதனால்தான் உயிர்மை கட்டுரையில் அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே கவனத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது.

அவர் சொல்கிறார் “ ஒரு பத்திரிகையில் வாசகி ஒருவர் இப்படி எழுதியிருந்தார். ‘என் கணவருக்கு ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலென்றால் உயிர். அடிக்கடி என்னைப் பாடச்சொல்லிக் கேட்பார். அவர் இறந்தபிறகும் அவரை நினைத்து தவம் போல ஒவ்வொரு இரவும் அந்தப் பாடலைப் பாடுகிறேன்’ என்று. நான் கவனித்ததில் பல பெண்களுக்குப் பிரியமாக இருந்திருக்கிறது இந்தப் பாடல். இதுபோன்று பெண்களின் விருப்பங்களுக்கு உரியவைகளாக இன்னும் அனேகப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. காதலின் உட்சரடுகளை மறைமுகமாகவும், அழகியலோடும் வெளிப்படுத்திய பாடல்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக்கொண்டு அதனோடவே வாழ்ந்தும் வருகிறார்கள்.’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை.

இம்மாதிரியான மொத்தத் தகவல்களையும் உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கிவைத்துக் கொண்டாடும் மனநிலை அறிந்தோ அறியாமலோ இணையத்தில் ஒரு சிலரால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு கொள்கை போலவும் லட்சியப் பிடிப்பு போலவும் தொடர்ந்து செய்துவருகிறார்கள் சிலர்.

அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும், ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டும் நமக்கென்ன வந்தது என்று இருந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதை ஆபத்தானது. மற்ற எல்லாரையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டிய தேவை என்ன?

ஆயிரம் பொய்யைச் சொல்லி மற்றவர்களுக்கு அகழி தோண்டவேண்டிய அவசியம் என்ன?

சிம்பொனி அமைத்ததாகச் சொல்கிறார்கள்.

அதைவிடவும் கூடுதலாகக் கேட்கவே காதுகள் கூசும்படியான ஒரு பொய் என்னவென்றால் ‘இ.ரா தான் தமிழ்ப் பாடல்களை முதன்முதலாக கிராமங்களுக்கும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்றவர்’ என்பதாக ஒரு பச்சைப் புளுகைக் கொளுத்திப் போடுகிறார்கள்.

கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஒலிக்காத பாகவதர் பாடல்களா? எம்ஜிஆர் பாடல்களா?  சிவாஜி பாடல்களா? கண்ணதாசன் பாடல்களா? டிஎம்எஸ் பாடல்களா? பிபிஸ்ரீனிவாஸ் பாடல்களா? சீர்காழி பாடல்களா? சந்திரபாபு பாடல்களா? டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களா? பி.சுசீலா பாடல்களா? எல்.ஆர். ஈஸ்வரி பாடல்களா? கே.பி.சுந்தராம்பாள் பாடல்களா?

எந்தப் பாடல்கள் கிராமங்களில் ஒலிக்காமல் இருந்தது?

எந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவாமல் இருந்தது?

எந்தப் பாடல் கிராமத்தின் உயிர்நாடியைத் தொட்டு உலுக்காமல் இருந்தது?

பட்டிகளிலும் தொட்டிகளிலும் பரவிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றைப் பாடிப் பாடித்தானே தமிழ்ச்சமூகம் வளர்ந்திருக்கிறது?

ஐம்பதுகளிலிருந்து பட்டிதொட்டிகளில் நடைபெறும் வைபவங்களை ஒலிபெருக்கிகள்தானே கோலாகலக் கொண்டாட்ட அனுபவங்களாக மாற்றியமைத்தன….அந்த ஒலிபெருக்கிகளில் எல்லாம் ஒலித்தது என்ன?

ஊரின் நடுவே அரசாங்கம் அமைத்த ஒலிபெருக்கிகளில் மாலை வேளைகளில் ஒலித்த பாடல்கள் எந்தப் பாடல்கள்?

அல்லது, எந்தப் பாடல்களையும் கேட்காத செவிடர்களாகத்தான் எம் தமிழர்கள் 1976வரை இருந்தார்களா, அல்லது 1976 வரை தமிழகத்தில் தமிழர்களுக்குக் காதுகளே முளைக்கவில்லையா? 

அட மொண்ணைகளே, பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் பரவியதால்தானே ஐயா எம்ஜிஆர் என்ற ஒரு திரைப்பட நடிகருக்கு மிகப்பெரிய பிம்பம் ஏற்பட்டு பெரிய தலைவர்களில் ஒருவராய் உயர்ந்து தமிழக ஆட்சியையே பிடிக்கமுடிந்தது?

திரும்பத் திரும்ப பராசக்தி வசனத்தையும், மனோகரா வசனத்தையும் பட்டிகளும் தொட்டிகளும் கேட்டதால்தானே ஐயா கலைஞர் கருணாநிதி என்ற ஒருத்தர் ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்ற முடிந்தது?

யாரையோ பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா பொய்களில் புரள்வது? இப்படியெல்லாம் பேச கொஞ்சம்கூட வெட்கமாய் இல்லையா உங்களுக்கு?

இன்னொரு புரட்டுவாதமும் இப்போது பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த எண்பத்தேழு வருடங்களாக உலகம் முழுவதும் திரைப்படங்களில் ஈடுபடுபவர்களின் உச்சபட்ச கனவே ஆஸ்கார் அவார்டைப் பெறுவது என்பதுதான்.

ஆஸ்கார் வென்றுவிட்டால் ஒரு திரைப்படக் கலைஞனுக்கு அதற்குமேல் எந்த அவார்டு பற்றியும் கவலை இருக்க நியாயமில்லை.

இப்படி உலகம் முழுமைக்கும் ஆஸ்கார் மீது இருக்கும் மதிப்பின் காரணமாகத்தான்  ‘என்னுடைய லட்சியம் எப்படியும் ஆஸ்கார் வெல்லுவதுதான்’ என்ற தனது கனவைப் பேட்டிகள் மூலமும் 
பேச்சுக்களாகவும் விடாமல் பதிவு செய்துவந்தார் கமல்ஹாசன்.

அவருக்கு இருந்த எண்ணற்ற ரசிகர்களின் காரணமாகவும், வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் அர்ப்பணிப்பின் காரணமாகவும், அவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாகவும் ஆஸ்கார் அவார்டு பெறும் முதல் தமிழர், ஏன் முதல் இந்தியர் கமல்ஹாசனாகத்தான் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பையும், பிரமையையும் அவருடைய பேட்டிகளும் பேச்சுக்களும் தமிழர்களிடம் ஏற்படுத்தவே செய்தன.

கமல்ஹாசனை அவரது ரசிகர்களும் பத்திரிகைகளும் ‘ஆஸ்கார் நாயகன்’ என்றும் ‘உலக நாயகன்’ என்றும் அழைக்கவும் ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது அவர் தேர்ந்தெடுத்துச் செய்த பல படங்கள், வேடங்கள், அல்லது பாத்திரங்கள் ஏற்கெனவே வேறு அயல்நாட்டு மொழிப்படங்களில் மற்ற நடிகர்கள் ஏற்றுச் செய்ததாகவே இருந்தன.

சொந்தமாகச் செய்த சில வேடங்கள் அல்லது பாத்திரங்கள் ஆஸ்கார் படப் போட்டிகள் அளவுக்கு அவரைக் கூட்டிச் செல்வதாக இருக்கவில்லை. முடிந்தவரை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒன்றும் தேறாது என்ற முடிவுக்கு வந்தபின்னர் தம்முடைய நிலைமையை உணர்ந்த கமல்ஹாசன் திடீரென்று ஒரு பல்டி அடித்தார். 

‘ஆஸ்கார் அவார்டு என்பது அமெரிக்கப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு அவார்டு என்றும் ஆகவே அந்த அவார்டு பெறுவது காரியசாத்தியமில்லை என்றும் ஒரேயொருபிறமொழிப் படத்திற்குத்தான் ஆஸ்கார் அவார்டு வழங்கப்படுமென்பதால் அதிலொன்றும் தமக்குப் பெரிதான நாட்டமில்லை என்றும் தாம் ஆஸ்கார் அவார்டு பற்றிப் பேசவே இல்லையென்றும்’ ஒரே போடாகப் போட்டார்.

பாவம், அவருடைய ரசிகர்கள்தாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. 

அவன் ஆஸ்காரைக் கண்டானா, கியாஸ்காரைக் கண்டானா? ஆஸ்கார் என்ற சிந்தனையை அவனுடைய மண்டைக்குள் ஏற்றி வைத்ததே இவர்தானே?

சரி சகலகலா வல்லவனை சூப்பர்ஹிட் ஆக்கிய தனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று வாயை மூடிக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக்கொண்டான் ரசிகன். ஆஸ்கார் இந்த இடத்தில் நின்றுவிடவில்லை. அது வேறுமாதிரி தமிழனிடம் தொடர்ந்தது.

சிம்பொனிக்காரருக்கு ஆஸ்கார் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்குமா என்பது நமக்குத் தெரியவில்லை.


இந்தச் சமயத்தில்தான் ரோஜா என்ற ஒரேயொரு படத்தின் மூலம் அதுவரைத் தமிழில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு பெரிய இசையமைப்பாளரைச் சாய்த்துவிட்டு, இந்திக்கு நுழைந்து இந்திப்பாடல்கள் மூலம் மொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, வந்தே மாதரம்- மா துஜே சலாம்…. (தாய்மண்ணே வணக்கம்) என்ற தேசபக்திப் பாடல் மூலம் திரைப்படத்தையும் தாண்டி அறுபது கோடி, எழுபது கோடி என்ற அளவில் மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கிறான் ஏ.ஆர்.ரகுமான் என்ற ஒரு தமிழ் இளைஞன்.

ஒட்டுமொத்த இந்தியாவும் கண்களை கசக்கிக்கொண்டு பார்க்கிறது அந்த இளைஞனை.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று வலம் வந்த அவனுடைய இசை சாம்ராஜ்யம் கடல்கடந்து பறக்கிறது.


ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கிறான் என்ற செய்திகள் வருகின்றன.

வியப்பதா அண்ணாந்து பார்ப்பதா என்ற சிக்கல் தீருவதற்குள் –

இரண்டு கைகளில் இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிக்கொண்டு பணிவுடன் நிற்கிறான் அவன்!

மொத்த உலக நேயர்கள் அவ்வளவு பேரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஆஸ்கார் மேடையிலே நின்று “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் உச்சரிக்கிறான்.

உடம்பு சிலிர்க்கிறது.

தமிழ்த்திரை இசையைப் புரட்டிப்போட்ட இசையமைப்பாளர் இந்த இளைஞன்தான் என்று யாரும் சொல்லவில்லை.

உலக இளைஞர்களெல்லாம் முணுமுணுப்பது இவர் பாடல்களைத்தாம் என்று யாரும் பரிவட்டம் கட்டவில்லை.

ஆனால் நம் மண்ணில் வேர் விட்ட ஒரு விருட்சம் உலக அரங்கை எட்டிப்பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆஸ்கார் என்பது திரைப்படங்களுக்கு மட்டுமானது. இசைக்கென்றே உலக அரங்கில் உச்சபட்ச பரிசொன்று இருக்கிறது. அதற்கு கிராம்மி அவார்ட் என்று பெயர் என்பதை எல்லாரும் அறிவதற்குள்ளாகவே-

இரண்டு கிராம்மி அவார்டுகளையும் கையிலேந்தி நிற்கும் அந்த இளைஞனை வியக்காமல் இருக்கமுடியுமா என்ன!

ஆனால் அந்த வியப்பும் மகிழ்ச்சியும் தமிழகத்தில் பலருக்கு ஒரு பெரிய வயிற்றெரிச்சலையே கிளப்பியிருக்கிறது என்பதுதான் சோகம்.

தமிழரான ஏ.ஆர். ரகுமான் உலக ரீதியில் புகழ் பெறுகிறார் எனும்போது வீறு கொண்டு எழுந்து பாராட்டவேண்டிய, கொண்டாட வேண்டிய, பெருமைப்பட வேண்டிய தமிழ் சமூகம் வயிறு காய்ந்து புழுத்துப் புழுங்குகிறது என்பது எத்தனைப் பெரிய அவமானம்………………..?

‘ஆஸ்கார் என்பது பெரிய பட்டமா? அதுவும் விலைக்கு வாங்கக்கூடிய பட்டம்தான்’ என்று எழுதித் தங்கள் ஆத்திரத்தையும் ஆசாபாசத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள் பலபேர்.

பணம் செலவழித்தால் எத்தனை ஆஸ்கார் வேண்டுமானாலும் வாங்கமுடியும் என்று உள்காயத்துக்கு வெளியிலிருந்தே பற்றுப் போடுகிறார்கள் சிலர்.

அந்த அகடமியில் உறுப்பினர்களாக உள்ள ஆறாயிரம் பேரின் இறுதி ஓட்டுக்கள்தாம் ஆஸ்காரைத் தீர்மானிக்கிறது என்பதனால் ஆஸ்கார் என்பது ஸ்ரீரங்கம் ஓட்டுக்கள் என்ற நினைப்புத்தான் பலபேருக்கு இருக்கிறது போலும். ஆஸ்கார் அகடமி உறுப்பினர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற வாக்காளர்களா என்ன?

உலகமே கொண்டாடும் பெரிய பெரிய அமைப்புக்களில் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்ககூடும்தான்.

அது மிகப்பெரிய அமைப்பு என்பதனால் அந்த அமைப்பிற்கு எதிராக சில கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கும்தான்.

அப்படியொரு எதிர்ப்புக்கட்டுரையை எடுத்து சேமித்துவைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ஆஸ்கார் என்று பேசினாலேயே போதும் தயாராக வைத்துள்ள அந்தக் கட்டுரையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து காப்பிபேஸ்ட் செய்துவிட்டு மூச்சுவாங்க வேண்டியதுதான் சிலரின் இன்றைய வேலை.

இந்த இடத்தில் இது சம்பந்தமாய் ஒரேயொரு யோசனை சொல்லத்தோன்றுகிறது.

ஆஸ்கார் அவார்டு வாங்குவது அத்தனை சுலபம் என்பதும், காசு செலவழித்தால்
 வாங்கிவிடலாம் என்ற நிலைமையும் இருக்கும்போது எதற்காக இன்னமும் சும்மா இருக்கிறீர்கள்?
அதுதான் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறீர்களே ஆளுக்கு ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ போட்டு செலவழித்து உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளருக்கு அந்த அவார்டை ‘வாங்கிக்கொடுத்துவிட வேண்டியதுதானே’?

அல்லது, அவரே மிகப்பெரும் செல்வந்தர்தானே?

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சம்பாதித்தவர்தானே?

அதில் துளியுண்டு பணத்தை எடுத்து வீசியெறிந்து ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டு ‘இதோ பாருங்க இது ஒண்ணும் பெரிய அவார்டே இல்லை. தெரிஞ்சுக்கங்க’ என்று உலகிற்குக் காட்டவேண்டியதுதானே!

இப்படிச் செய்தால் நாமும் ஆஸ்கார் பற்றிய பெரிய பெரிய கற்பிதங்களை எல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமான பல வேலைகளில் இறங்கித் தங்கள் ஆதங்கத்தைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திவருகிறார்கள் சிலர்.

ஆஸ்கார் அவார்டு பாடல்கள் என்று இ.ராவின் பாடல்களை ஒவ்வொன்றாகத் தம்முடைய வலைப்பதிவில் போட ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். அவருடைய கூற்று என்னவென்றால் குறிப்பிட்ட அந்தப்  பாட்டு ‘போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை’ என்ற ஒரே காரணத்தினால்தான் அது ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் ஆஸ்கார் பெற முழுத்தகுதி உடையது இந்தப் பாடலும் அவர் குறிப்பிடவிருக்கும் மீதிப் பாடல்களும் என்பதாகும்.

வலைத்தளம் நடத்தும் என்னுடைய நண்பர் ஒருவர் “சார் இந்த ஐடியா நல்லாருக்கு. நான் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதிவச்சிருக்கேன். பிரசுரத்துக்கு அனுப்பினதில் ஒரு பயலும் போடலை. அதுக்கென்ன, ‘நோபல் பரிசு பெறும் தகுதியுடைய கதைகள்’ என்று போட்டு தினந்தோறும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு வருகிறேனே” என்றார்.

இதாவது பரவாயில்லை. என்னுடைய பக்கத்து வீட்டுப் பையன் தோளில் கிடாரை மாட்டிக்கொண்டு திரிகிறவன் “சார் நான் கிடாரில் நிறையப் பாடல்கள் வாசித்து ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன். உங்களிடம் தருகிறேன்….‘கிராம்மி அவார்டு பாடல்கள்’ என்று தினசரி ஒன்றாகப் போட்டுவருகிறீர்களா?” என்று கேட்டான்.

“இவையெல்லாம் மனப்பிறழ்வின் உச்சம். பேசாமல் இருங்கள்” என்று சொன்னேன்.

சரி போகட்டும்……………அந்தப் பெண்மணியின் கட்டுரைக்கு வருவோம். ‘இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட எல்லை விரிவு படுத்தப்பட்டு ‘அடிரா அவளை…வெட்டுரா அவளை’…. ‘பொம்பளைங்களே இப்படித்தான்’…. ‘வேணாம் மச்சான் வேணாம்…… இந்தப் பொண்ணுங்க காதலு’ என்று கள்ள ஒப்பாரிகளை முன்வைக்கிறது இன்று. இந்தப் பாடல்களும் பெருமளவில் ரசிக்கப்படுகிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதையெல்லாம் வாசிப்பதற்கு நல்லவேளை இப்போது பாட்டுப் புத்தகங்கள் பரவலாக விற்பனையாவதில்லை என்பதைத்தான் ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார் அவர்.

பாட்டுப்புத்தகத்தின் தேவை ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி எழுதினால் அது இன்னொரு விவாதக்களத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

53 comments :

காரிகன் said...

அமுதவன் சார்,

கை குடுங்க. பிச்சு எடுத்துடீங்க. அதிரடி. ஆஹா.. நீண்ட நாள் கழித்து ஒரு சரவெடி சத்தம் வெடிக்கும் கட்டுரையைப் படித்த ஆனந்தம். நிறைய எழுதியிருக்கிறீர்கள். எதனைப் பாராட்டுவது என்று குழப்பம்.
எனவே இது நீண்ட பின்னூட்டமாக இருந்தால் மன்னிக்கவும்.

அந்த ஜா தீபா என்பவரின் கட்டுரையை நான் படிக்கவில்லை. நீங்கள் லிங்க் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெண்களின் மனதை துல்லியமாகப் படம் பிடித்திருக்கும் எழுத்துக்கள். ஏனென்றால் என் சகோதரி கூட இதே கருத்தை வேறு வார்த்தைகள் கொண்டு சொல்லியிருக்கிறார். பெண்கள் பெரும்பாலும் ஏன் ஒரு சினிமாப் பாடலைப் பாடியபடி இருக்கிறார்கள் என்பதன் அடிநாதம் அவர்களால் ஆண்கள் போன்று தங்களுக்கு விருப்பமான பாடலை கேட்க முடியாத இயலாமை என்பது மனதைப் பிசைகிறது.

நான் எனது பதிவு ஒன்றில் ஒரு சென்னை இளைஞன் இரா பாடலை தன் மொபைலில் ரசித்துக் கேட்டான் என்று எழுதியதும் அதை குறித்து குதியாட்டம் போட்ட பல இராவாசிகள் நான் மற்றொரு பதிவில் மற்றொரு இளைஞன் இராவுக்கு முந்திய பாடல்களை உயிர் என்று அழைத்ததைக் குறித்து மௌனியாக இருந்தார்கள். இரா பற்றி பேசினால் என் எழுத்து எத்தனை வீரியம் பெறும் என்று உங்களுக்குத் தெரியும். அதைப் பிடித்துகொண்டு சகதி வீச ஒரு கூட்டமே வேட்டியை மடித்துக்கொண்டு காத்திருக்கும்.உங்கள் எழுத்து சொல்லும் உண்மையை உள்வாங்ககூடிய மனதிடம் அவர்களிடம் இல்லை என்பது கண்கூடாக தெரிந்ததுதான்.

இராவின் சிம்பனி பற்றி புதிதாக என்ன சொல்வது? தன் காலத்திற்குப் பிறகு அதை இரா தன் பரிசாக வழங்க இருப்பதாக ஒரு இராவாசி தந்து கட்டுரை ஒன்றில் எழுதி "வேற ஏதாச்சும் பேசுங்கப்பா" என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். பரிதாபம். இந்த சிம்பனி சங்கதியே ரஹ்மான் புகழ் உச்சியில் ஏறிக்கொண்டிருந்த சமயத்தில் இராவினால் திடீரெனெ முன்வைக்கப்பட்ட ஒன்றுதான். இதைப் புரிந்துகொண்டால் இந்த பின்னணியில் இருக்கும் புள்ளிகளை யாருமே எளிதில் இணைத்து ஒரு படம் வரைந்துவிடலாம்.

எம் எஸ் வி - டி எம் எஸ், பி சுசீலா - கண்ணதாசன் காலகட்டம் நமது தமிழிசையின் உச்சம். ஒரேமுறைதான் இந்த உச்சம் தொட முடியும். இதென்ன கேடயமா வருடா வருடம் கைமாறிச் செல்வதற்கு? இராவாசிகள் என்னத்தை வேண்டுமானாலும் பிதற்றிக்கொண்டு திரியட்டும். இணையத்தைத் தாண்டிய வெளி உலகில் மக்கள் சொல்லும் உண்மை இராவை ஏறிட்டும் பார்க்கவில்லை. எம் எஸ் விக்குப் பிறகே அவர் வந்தார். வருகிறார். வருவார்.

.....இன்னும்..

Umesh Srinivasan said...

பெண்களுக்குப் பிடித்த பாடல்களில் தொடங்கி எங்கெங்கேயே பயணித்து விட்டீர்கள் அமுதவன் சார். இசையமைப்பாளர்களை விடவும் அவர்களின் அடிப்பொடிகள் செய்யும் சேட்டைகள்தான் சகிக்க முடியாதுள்ளன. இனிய பாடல்களை யார் வழங்கினாலும் பாரபட்சமின்றி ரசிக்கும் மனநிலை ஏனோ எல்லோருக்கும் அமையாதது தூரதிர்ஷ்டமே.

Amudhavan said...

காரிகன் said..
\\நீண்ட நாள் கழித்து ஒரு சரவெடி சத்தம் வெடிக்கும் கட்டுரையைப் படித்த ஆனந்தம். நிறைய எழுதியிருக்கிறீர்கள். எதனைப் பாராட்டுவது என்று குழப்பம். எனவே இது நீண்ட பின்னூட்டமாக இருந்தால் மன்னிக்கவும்.\\

வாருங்கள் காரிகன், நீண்டவையாக இருப்பினும் சகலவற்றையும் அலசும் உங்கள் பின்னூட்டங்கள் தேவைப்படும் பதிவு இது. எனவே நீங்கள் முழுமையாக எழுதுங்கள்.

Amudhavan said...

Umesh Srinivasan said...

\\பெண்களுக்குப் பிடித்த பாடல்களில் தொடங்கி எங்கெங்கேயே பயணித்து விட்டீர்கள்\\
ஆமாம் உமேஷ், சில விஷயங்களைச் சொல்லும்போது எதுஎதையோ அலச வேண்டியிருக்கிறது. சிந்தனை இழுத்துப்போகும் எல்லா இடங்களுக்கும் போய்வருவது என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பதிவையே எழுத ஆரம்பித்தேன்.

\\இசையமைப்பாளர்களை விடவும் அவர்களின் அடிப்பொடிகள் செய்யும் சேட்டைகள்தான் சகிக்க முடியாதுள்ளன. இனிய பாடல்களை யார் வழங்கினாலும் பாரபட்சமின்றி ரசிக்கும் மனநிலை ஏனோ எல்லோருக்கும் அமையாதது தூரதிர்ஷ்டமே.\\
மிகச்சரியான கருத்து இது. சில அபத்தமான கருத்துக்களைப்
பார்க்கும்போது அவர்கள் தெரிந்துகொண்டே வேண்டுமென்றேதான் இப்படியெல்லாம் சொல்லுகிறார்களா, அல்லது அறியாமலேயே சொல்லிக்கொண்டிருக்கிறார்களா என்ற குழப்பம் எழுகிறது. தெரிந்தே சொல்கிறார்களோ, அறியாமையில் சொல்கிறார்களோ உண்மைகளை யாராவது எடுத்துச் சொல்லியாக வேண்டுமல்லவா? 'தமிழ்ப் பாடல்களை முதன்முதலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் இ.ராதான்' என்று எழுதுகிறார்கள். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா என்ன?
நீங்கள் சொல்லுவதுபோல் இனிய பாடல்களை யார் வழங்கினாலும் பாரபட்சமின்றி ரசிக்கின்ற மனநிலை இருந்தால் வம்பு தும்புகளுக்கு இங்கே இடமில்லாமல் இருக்குமில்லையா? இத்தனை நாட்களும் அப்படித்தானே இருந்தது?


கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான அலசல்
தம +1

Amudhavan said...

கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நீல வண்ண கேள்விகளுக்கு பதில் கிடையாது...

எந்த மாற்றதையும் ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும்...

Amudhavan said...

வாங்க தனபாலன்........... நீலவண்ணக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். பல பேருக்கு அந்தத் தகவல்கள் எல்லாம் தெரியாமலேயே அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விஷயம்.
மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. அதே சமயம் உண்மைகள் புதைக்குழிக்குள் போய்விடக்கூடாது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எம்.எஸ்.வி மிகப் பெரிய ஜீனியஸ்.தன் பாடல்களால் எம்;.ஜி.ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு கூடுதல் பெருமை சேர்த்தவர். அவர்களோடு நெருக்கமாக இருந்தும் உரிய தகுதி இருந்தும் அவருக்கு பதில் மரியாதையாக ஒரு தேசிய விருதுகூட வாங்கித் தரவில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.நினைத்திருந்தால் செய்திருக்க முடியும். எம்.எஸ்.வியின் பாடல்கள் இரு பெரும் ஜாம்பவான்களுக்கு பெருமை சேர்த்தது.அவை எம்.ஜி ஆர் பாடல்கள் சிவாஜி பாடல்கள் என்று அறியப்பட்டனவே தவிர எம்.எஸ்.வி பாடல்கள் என்று அடையாளம் காணப்படவில்லை. பாடல் தொகுப்பு புத்தகங்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள்,, இளையராஜா பாடல்கள் என்று பார்த்திருக்கிறேனே எம்.எஸ். வி தொகுப்பு பாடல்கள் என்று பார்த்த நினைவு இல்லை.ஆனால் கண்ணதாசனுக்கு மட்டும் அவரது பாடல்களுக்கான அங்கீகாரம் கிடைத்த நிலையில்
எம்.எஸ்.விக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\எம்.எஸ்.வி மிகப் பெரிய ஜீனியஸ்.தன் பாடல்களால் எம்;.ஜி.ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு கூடுதல் பெருமை சேர்த்தவர். அவர்களோடு நெருக்கமாக இருந்தும் உரிய தகுதி இருந்தும் அவருக்கு பதில் மரியாதையாக ஒரு தேசிய விருதுகூட வாங்கித் தரவில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.நினைத்திருந்தால் செய்திருக்க முடியும்.\\

உங்களுடைய ஆதங்கம் நியாயமானது முரளிதரன். எம்எஸ்விக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைக்கவில்லைதான். எம்ஜிஆர் நினைத்திருந்தால் அவரது ஆட்சிக்காலத்தில் பலவற்றைச் செய்திருக்கமுடியும். அவருடைய கணக்குகள் எப்போதுமே சூழ்ச்சிகளும் சூட்சுமங்களும் கொண்டவை.
கண்ணதாசனை முழுமூச்சோடு எதிர்த்தவர் அவர். அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் வாலியையும் தொடர்ந்து புலமைப்பித்தனையும் இன்னும் யார் யாரையுமோ கொண்டுவந்தார். முடியவில்லை என்றதும் தாமே போய் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அரசவைக் கவிஞர் என்ற பதவியில் உட்காரவைத்து கவிஞர் எழுதிவந்த ஒரு கட்டுரைத் தொடரை மேற்கொண்டு வராமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். இப்படிப்பட்ட புறத்தேவைகள் எதுவும் அவருக்கு எம்எஸ்வியால் ஏற்படவில்லை.
கருணாநிதியின் கணக்குகள் வேறு. அவருக்கு எப்போதுமே எம்எஸ்வியுடன் நெருக்கமோ நட்போ இருந்ததாகத் தெரியவில்லை. தமது படங்களுக்குக்கூட ராம மூர்த்தியையும், சுதர்சனத்தையும்தான் பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். வணிகத்தேவைக் கருதி மு.க.முத்து படத்துக்கு எம்எஸ்வி பணியாற்றியிருக்கக்கூடும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் எம்எஸ்வி- ராம மூர்த்தி இருவருக்கும் பாராட்டு விழா எடுத்தார். ஜெ.வின் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நான் கூட இந்தச் செய்கையைப் பாராட்டி ஒரு பெரிய பதிவை எழுதியிருக்கிறேன்.
பாட்டு புத்தகங்களும், பாடல் தொகுப்பு சிடிக்களும் இவரது பெயரில் வராமல் இருப்பது அன்றைய சூழலின் விளைவுகளே. இளையராஜா காலத்துக்குப் பிற்பாடுதான் இசைமைப்பாளர்கள் பெயரால் பாடல்கள் அறியப்பட்டன. அது அப்படியே தொடர ஆரம்பித்துவிட்டது அவ்வளவுதான்.

காரிகன் said...

இசை என்றால் பாடல் அது வெறுமனே இசையை மட்டுமே கொண்டிருப்பதல்ல. மேற்கத்திய இசை வடிவங்களில் இசை மட்டுமே உள்ள செவ்வியல் பாணி மக்களின் இசை வரும் வரை ஆதிக்கத்தில் இருந்தது உண்மைதான். பொதுவாக உலகம் வியந்து போற்றும் மொசார்ட், பெய்டோவன், பாக் போன்றவர்களின் இசை குரலிசை இல்லாத ஒன்றே. அது இசை மூலம் ஏகாந்தத்தை உருவாக்கும் உன்னத படைப்பின் வெளிப்பாடு. அன்றைய காலகட்டத்தில் அது ஒரு வேண்டப்பட்ட இசைத் துடிப்பு. இதில் பெய்டோவன் மக்களுக்கான இசையை தனது சிம்பனி வழியே உருவாக்கினார். இதில் கவிதை சேர்ந்தது இசையின் அடுத்த பரிமாணத்தை அடைந்தது. உலகின் மிகப் பெரிய புரட்சிகள், சத்தமில்லாத மாற்றங்கள் வெளிச்சத்தை கண்டதே மனித எண்ணத்தில் உதித்த சிகப்பு வார்தைகளினால்தான். Let there be light என்று விவிலியம் சொல்கிறது கடவுள் பேசிய முதல் வார்த்தையாக. அதுவே ஒரு இசைதான். எனவேதான் இசையின்றி எதுவுமில்லை என்று ஒரு கருத்தே இருக்கிறது. நான் இதை நம்புகிறேன். இது பற்றி ஒரு பதிவே எழுதலாம்.

நம் தமிழிசையில் கவிதை இல்லாத இசையை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. பாகவதரின் பாடல்கள் முதல் இன்றைய அனிரூத் இசை வரை கவிதை கலைந்த பாடல்கள் மக்கள் மனதில் வேரூன்றியதாக நினைவில்லை. இது மெல்லிசை என்ற அபாரமான இசை வடிவம் கடினமான சாஸ்திரிய ராகங்களை உடைத்து மக்களின் மனதில் சுலபத்தில் உட்காரும் எளிமையான கவிதை கொண்டதன் விளைவே. செந்தமிழ்த் தென் மொழியாள் என்று பாடிய கவிதை இசையை அரவணைத்துக்கொண்டதின் பாதிப்பு என்றுமே தொலைந்து போகாது. இடையே சில இடைச் செருகல்கள் வெறும் இசையை மட்டும் பிராதனப்படுத்தி தான் என்ற அகந்தைக்கு உருவம் கொடுத்தாலும் தமிழிசை என்ற நீண்ட பாரம்பரிய நதி ஓட்டத்தில் அது கரைந்து காணாமல் போய்விடும். அவ்வாறான இசையை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சில வெற்றுவேட்டுகள் இது புரிந்ததினால்தான் தாறுமாறாக குதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

.......இன்னும்..........

Anonymous said...

I don't know why you both Amudavan & Kaareigan are averse to Rajaa. His music is close to my heart. I shall thank him for filling my major part of my life with his music. You people are expressing your views, as if you are music gods. Please stop your comments are irritating.

Amudhavan said...

Anonymous said...
\\I don't know why you both Amudavan & Kaareigan are averse to Rajaa. His music is close to my heart. I shall thank him for filling my major part of my life with his music. You people are expressing your views, as if you are music gods. Please stop your comments are irritating.\\

அனானி நீங்கள் யாரென்று தெரியவில்லை. இந்தத் தளங்களுக்கோ அல்லது இணையத்திற்கோ புதிதா என்றும் புரியவில்லை. நாட்டில் ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல் வெகு வெகுளியாகவும், அப்பாவியாகவும் எழுதியுள்ளீர்கள். His music is close to my heart- என்கிறீர்கள். உண்மைதான் பலருக்கும் எம்எஸ்சுப்புலட்சுமியின் இசையிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயின் இசையைத் தொடர்ந்து விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையும், எம்எஸ்வி இசையும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையும்கூட இதயத்திற்கு மிக நெருக்கம்தான்.
I shall thank him for filling my major part of my life with his music....... என்கிறீர்கள். இதுவும் அப்படியே உண்மைதான். நான் மேற்சொன்னவர்களும் இன்ன பிறரும் இதே போன்றுதான் பல கோடிக்கணக்கான மக்களுக்கு இருந்துவருகிறார்கள். என்னவொன்று with his music என்பதை with their music என்று போட்டுக்கொள்ள வேண்டும்.
You people are expressing your views, as if you are music gods. என்கிறீர்கள். இந்த வார்த்தைகளையும் நீங்கள் இ.ரா ரசிகர்களைப் பார்த்துத்தான் சொல்லவேண்டும். ஏனெனில் இவர்கள் மட்டுமல்ல, இவர்கள் யாரைக் கொண்டாடுகிறார்களோ அந்த இ.ராவையே இசைக்கடவுள் என்றுதான் அழைக்கிறார்கள்.
\\Please stop your comments are irritating.\\ இந்த வார்த்தைகளையும் நீங்கள் இ.ரா ரசிகர்களுக்காகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்பதாகவே நான் எடுத்துக்கொள்ளுகிறேன்.
என்னுடைய பணியை சுலபமாக ஆக்கியதற்காக உங்களுக்கு நன்றி.


காரிகன் said...

நாட்டுப்புற இசையை வெற்றிகரமாக தமிழ்த் திரையில் அறிமுகம் செய்தவர்கள் ஜி ராமநாதன் மற்றும் கே வி மகாதேவன். 76க்கு முன்பு வரை எந்த தமிழ்க் கிராமங்களிலும் பாடல்களே ஒலிக்காதது போன்று இராவாசிகள் எழுதுவதும் பேசுவதும் வாடிக்கைதான். இராவின் நாட்டுப்புற இசை கே வி எம் இசையின் நீட்சியாக இருந்தாலும் அதை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்று மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு நாட்டார் பாடல்களுக்கு ஒரு புதிய வெளிச்சம் அளித்தார் இரா. அவர் இசையில் நாட்டுப்புற இசை மக்களின் அருகே வந்தது என்பது மிகையில்லாத உண்மை. ஆனால் அவர்தான் முதலில் இதைச் செய்தார் என்பதெல்லாம் வேடிக்கைப் பேச்சு.

எம் எஸ் விக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் செய்த புரட்சிகள் (சினிமா இசை என்பதே மரபுகளை மீறும் ஒரு இசை வடிவம் என்பதால் இந்த புரட்சி என்ற வார்த்தைக்கே இங்கே அர்த்தமில்லை.) அடிப்படியான அம்சங்களை திருத்தி அமைக்கும் முயற்சிகள் கிடையாது. தொழில்நுட்பம் இசையை அணைத்துக் கொண்ட ஒரு accessory என்று வேண்டுமானால் அவைகளை சொல்லலாம். இந்த தொழில் நுட்பம் 50,60,70,80,90கள் என்று நவீன பரிணாமம் அடைந்தது. அப்போது என்ன சாத்தியமோ அது நடந்தது. எனவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அதுவே எல்லாம் என்று தீர்மானிப்பது முரணானது.

-----கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஒலிக்காத பாகவதர் பாடல்களா? எம்ஜிஆர் பாடல்களா? சிவாஜி பாடல்களா? கண்ணதாசன் பாடல்களா? டிஎம்எஸ் பாடல்களா? பிபிஸ்ரீனிவாஸ் பாடல்களா? சீர்காழி பாடல்களா? சந்திரபாபு பாடல்களா? டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களா? பி.சுசீலா பாடல்களா? எல்.ஆர். ஈஸ்வரி பாடல்களா? கே.பி.சுந்தராம்பாள் பாடல்களா? எந்தப் பாடல்கள் கிராமங்களில் ஒலிக்காமல் இருந்தது? எந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவாமல் இருந்தது? எந்தப் பாடல் கிராமத்தின் உயிர்நாடியைத் தொட்டு உலுக்காமல் இருந்தது? பட்டிகளிலும் தொட்டிகளிலும் பரவிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றைப் பாடிப் பாடித்தானே தமிழ்ச்சமூகம் வளர்ந்திருக்கிறது? -----

ஆணித்தரமான கேள்விகள். இங்கே அமுதவனையும் என்னையும் குற்றம் சொல்லும் அனானி (இன்னும் பலர் )இதற்கு முதலில் ஒரு திருப்தியான பதிலை தயார் செய்துகொண்டு வாருங்கள். மேலே உள்ள கேள்விகள் உண்மையில்லையா? நமது தமிழ் சமூகத்தில் பாடல்களே கேட்கப்படாமல்தான் தமிழர்கள் எழுபதுகளின் மத்தி வரை வாழ்ந்து வளர்ந்து வந்தார்களா? இதில் நகைமுரண் என்னவென்றால் எம் எஸ் வி பாடல்களைக் கேட்டுத்தான் தனது இசை ஆர்வத்தை மெருகேற்றிக்கொண்டதாக இரா வே சொல்லியிருக்கிறார்.

இராவை விமர்சித்தால் அது வன்மம் என்ற அளவிலேயே இராவாசிகளின் பார்வை இருப்பது ஒரு பாசிச போக்கு. ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கர் வாங்கினார் என்று மட்டிதனமாக மிக சல்லித்தனமாக பேசும் இராவாசிகள் தங்கள் மனம் கவர்ந்தவரை மற்றவர்கள் விமர்சித்தால் மட்டும் அதில் இல்லாத அரசியலைத் தேடுவது ஏன் ?

...இன்னும்...

Amudhavan said...

வேறு எந்தவகையிலும் பதில் சொல்ல முடியாதவர்கள்தாம் அனானி என்ற பெயரில் ஒட்டுமொத்த பதிவுக்கும் சேர்த்து சிறுசாக ஒரு முனகல் புலம்பலை ஆங்கிலத்தில் கசியவிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
காரிகன், உங்கள் தாளக்கச்சேரி இன்னமும் முடியவில்லை என்று தோன்றுகிறது. தொடருங்கள்......

Amudhavan said...

காரிகன் said...
\\எம் எஸ் விக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் செய்த புரட்சிகள் (சினிமா இசை என்பதே மரபுகளை மீறும் ஒரு இசை வடிவம் என்பதால் இந்த புரட்சி என்ற வார்த்தைக்கே இங்கே அர்த்தமில்லை.) அடிப்படியான அம்சங்களை திருத்தி அமைக்கும் முயற்சிகள் கிடையாது. தொழில்நுட்பம் இசையை அணைத்துக் கொண்ட ஒரு accessory என்று வேண்டுமானால் அவைகளை சொல்லலாம். இந்த தொழில் நுட்பம் 50,60,70,80,90கள் என்று நவீன பரிணாமம் அடைந்தது. அப்போது என்ன சாத்தியமோ அது நடந்தது. எனவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அதுவே எல்லாம் என்று தீர்மானிப்பது முரணானது.\\
மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் காரிகன், 'தொழில்நுட்பம் இசையை அணைத்துக்கொண்ட ஒரு accessory' இந்த தொழில் நுட்ப உபகரணங்கள் எல்லாத் துறைகளிலும்தாம் வந்தன. இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் பாடிக்கொண்டே நடித்ததில் உள்ள சிரமத்தை நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்க்ள். மதிப்பிற்குரிய திருமதி எம்எஸ் சுப்புலட்சுமி அவர்களைச் சந்தித்தபோது தாம் மீரா படத்தில் நடித்தபோது பாடிக்கொண்டே நடித்ததையும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அதற்கேற்ப வாத்தியக்கோஷ்டி வாசித்துக்கொண்டே நடந்து வந்ததையும் சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார். திரு ஹொன்னப்ப பாகவதரும் அந்தக் காலத்துப் பாடல்களை எப்படி ரிகார்டிங் செய்வார்கள் என்பதையெல்லாம் சொல்லியிருக்கிறார். அது அப்படியே ஜி.ராமனாதன் காலத்திலிருந்து இன்றைய இமான் காலம் வரை நாள்தோறும் மாறிக்கொண்டேதான் வந்திருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான உபகரணங்கள் எல்லாத் துறைகளிலும் நடக்க........ இ.ரா காலத்தில் நடந்த தொழில்நுட்ப உபகரணங்களை ஏதோ அவரே 'கொண்டுவந்துவிட்டதுபோல்' அவருக்கான பெருமையாக அதனை உபயோகித்து ஜோடித்தார்கள்.

\\இராவை விமர்சித்தால் அது வன்மம் என்ற அளவிலேயே இராவாசிகளின் பார்வை இருப்பது ஒரு பாசிச போக்கு. ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கர் வாங்கினார் என்று மட்டிதனமாக மிக சல்லித்தனமாக பேசும் இராவாசிகள் தங்கள் மனம் கவர்ந்தவரை மற்றவர்கள் விமர்சித்தால் மட்டும் அதில் இல்லாத அரசியலைத் தேடுவது ஏன் ?\\
மிகச்சரியான வார்த்தையால் சாடியிருக்கிறீர்கள். காசு கொடுத்து வாங்கிய ஆஸ்காரை இவர்களும் இவர்களுடைய ஆசானுக்காக காசு திரட்டி 'வாங்கிக்கொடுத்துவிட்டு' அப்புறம்
பேசலாமே.
His music is close to my heart - என்று ஏதோ இந்த உலகம் மிகவும் சிறியது என்பதுபோன்றும் , அதில் இவர்களும் இ.ராவும் மட்டுமேதாம் இருக்கிறார்கள் என்பது போன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கும் எத்தனையோ பேருடைய இசை இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவது போல ஒரே ஒருவரை மட்டுமே தூக்கிப்பிடித்து பஜனை பாடிக்கொண்டிருக்கும் கோஷ்டி இப்போது வேறு வேடம் பூணப் பார்க்கிறது.
ஒரு தெருவில் பத்து வீடுகள் இருக்க ஒரேயொரு வீட்டில் மட்டும் 'இந்த வீட்டில் பத்தினிகள் இருக்கிறார்கள்' என்று போர்டு மாட்டியிருந்ததாம். 'ஏனய்யா இப்படி எழுதிவைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு "நாங்கள் எங்கள் வீட்டில் இருப்பவர்களை மட்டும்தானே சொன்னோம். மற்ற வீடுகளைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே" என்று 'நியாயம்' பேசினார்களாம். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் கதை.



Anonymous said...

அருமையா சொன்னீங்க அமுதவன்.
குண்டு சட்டிக்குள்ள குதிரையை ஒட்டுகிறவர்களுக்கு, வெளி உலகத்தை பற்றி தெரியாது.

Arul Jeeva said...

பெண்கள் விரும்பும் பாடல்கள் என்று ஆரம்பித்து பதிவின் 95%இளையராஜா மற்றும் அவர் அபிமானிகளை வசைபாடுவதாகவே உள்ளது தங்களின் பதிவு .ஏனய்யா இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ?உங்களுக்கு ஒத்து ஊத காரிகன் வேறு தாரை. தப்பட்டையுடன் கிளம்பிவிடுகிறார் .சுதந்திர திருநாட்டில் அவரவர்கள் விருப்பத்தை வெளியிட உரிமையில்லையா?

Arul Jeeva said...

பெண்கள் விரும்பும் பாடல்கள் என்று ஆரம்பித்து பதிவின் 95%இளையராஜா மற்றும் அவர் அபிமானிகளை வசைபாடுவதாகவே உள்ளது தங்களின் பதிவு .ஏனய்யா இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ?உங்களுக்கு ஒத்து ஊத காரிகன் வேறு தாரை. தப்பட்டையுடன் கிளம்பிவிடுகிறார் .சுதந்திர திருநாட்டில் அவரவர்கள் விருப்பத்தை வெளியிட உரிமையில்லையா?

Amudhavan said...

Alien said...
\\அருமையா சொன்னீங்க அமுதவன். குண்டு சட்டிக்குள்ள குதிரையை ஒட்டுகிறவர்களுக்கு, வெளி உலகத்தை பற்றி தெரியாது.\\

இ.ரா ரசிகர்கள் அத்தனைப் பேரின் மாய்மாலங்களுக்கும் உங்களின் ஒற்றை வரி பதில் போதுமென்று நினைக்கிறேன் ஏலியன்.

Amudhavan said...

Arul Jeeva said.
\\பெண்கள் விரும்பும் பாடல்கள் என்று ஆரம்பித்து பதிவின் 95%இளையராஜா மற்றும் அவர் அபிமானிகளை வசைபாடுவதாகவே உள்ளது தங்களின் பதிவு \\

வாருங்கள் அருள் ஜீவா, தமிழ்ப்பாடல்கள் என்று ஆரம்பித்து, அல்லது திரையிசைப் பாடல்கள் என்று ஆரம்பித்து 95% கூட அல்ல, நூறு சதவிகிதமும் இணையத்தில் வெறும் இ.ரா பற்றிய போற்றுதலும், அவருக்கான புகழாரமும் , அவரைப் பற்றிய செய்திகளும் மட்டுமே இருப்பதுதான் சரியான ஒன்று என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் நினைப்பு சரியல்ல, வேறு விஷயங்களும் இருக்கின்றன என்பதைத்தானே இங்கே சொல்லியிருக்கிறேன்!

\\சுதந்திர திருநாட்டில் அவரவர்கள் விருப்பத்தை வெளியிட உரிமையில்லையா?\\

தாராளமாக உரிமையுண்டு. ஆனால் தவறான செய்திகளையும், தவறான தகவல்களையும், தவறான கட்டுக்கதைகளையும் உண்மைபோல சொல்லிக்கொண்டிருக்க நிச்சயம் இடமில்லை என்பதை மட்டும்தான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

காரிகன் said...

ஆஸ்கர் என்ற பெயரை தமிழ்நாட்டில் பெரிய அளவில் பிரபலப் படுத்தியது திரு கமல்ஹாசன்தான். மூன்றாம் பிறை சலங்கை ஒலி படங்களுக்கு பிறகு அவரின் நடிப்பை மக்கள் பாராட்டியதில் அவருக்கு தலை கால் புரியாமல் நான் ஆஸ்கார் வாங்காமல் ஓயமாட்டேன் என்று தாய் மீது சத்தியம் செய்யாத குறையாக பல பேட்டிகளில் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ரசிகர்களும் இவரை விட்டால் வேற ஆள் நம்ம நாட்டில இல்லப்பா என்ற எண்ணம் வேரூன்றிவிட எண்பதுகளில் கமலஹாசன் ஆஸ்கார் நாயகன் என்றே அறியப்பட்டார். அதில் அவருக்கு பெரிய கர்வம் வேறு. கமல் ஒரு நாள் ஆஸ்கார் வாங்கியே விடுவார் என்றே இங்கே பாதி ஜனம் நம்பிக்கொண்டிருந்தது. நாயகன் படம் வந்ததும் இதான்யா நடிப்பு என்று வாய் பிளந்தார்கள் நம் மக்கள். "சிவாஜிவையே மிஞ்சிட்டாண்டா" என்று சிலர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் ஆஸ்கார் மட்டும் ஒரு கனவாகவே இருந்தது. ஆஸ்கார் என்பது அமெரிக்கர்கள் தங்கள் படங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஒரு லோக்கல் விருது. அதில் நம் ஊர் ஆட்கள் விருது வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். வேண்டுமென்றால் பெஸ்ட் பிக்சர் என்று ஒரு உப்புக்குச் சப்பாணியாக ஒரு அவார்ட் உண்டு என நாங்கள் அப்போதே பேசிக்கொள்வோம். என்னிடம் கமல் பற்றி விவாதம் செய்யும் நண்பர்களிடம் நான் இதைச் சொல்லி, கமல் ஒரு முழு நீல... மன்னிக்கவும் ..நீள ஆங்கிலப் படத்தில் நடித்தால் ஒழிய அவரால் ஆஸ்கார் பற்றியே நினைக்க முடியாது என்பேன். கேட்பவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்து எதோ கோமாளியைக் கண்டதுபோல சிரிப்பார்கள். இன்றைக்கு கமலுக்கு இந்த உண்மை தெரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

ஆஸ்கார் நாயகன் திடீரென உலக நாயகனாக அரிதாரம் பூசிக் கொண்டு தேவர் மகன்,குணா, மகாநதி,அன்பே சிவம், ஹே ராம், ஆளவந்தான் என்று விதம் விதமாக நம்மை வதைத்தார். இந்த சமயத்தில் கொஞ்சம் கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் சத்தமே இல்லாமல் ஒரு தமிழன் அந்த இடத்தை அடைந்தான். உண்மையில் இது நாம் பெருமைப் படவேண்டிய ஒரு சாதனை. ஆனால் அதைப் பெற்றது ரஹ்மான் என்பதால் இராவாசிகள் அதற்கும் ஒரு ஐந்து பைசா கூட பெறாத பல வேடிக்கைக் கதைகளை சொல்கிறார்கள். எதோ பெரிய நெட்வொர்க்,சிண்டிகேட் என்ற அளவில் ரஹ்மான் under the table டீல் செய்துகொண்டு இரண்டு ஆஸ்காரை வென்றார் என்று அசிங்கமாக புளுகித் தள்ளுகிறார்கள். ஆனால் எதோ ஒரு தனிப்பட்ட ஒரு வலைப்பூவில் ஒரு தனி ஆள் தனது விருப்பப்படி உலக இசை அமைப்பாளர்கள் என்ற பட்டியல் போட்டு அதில் 9வது இடத்தை இராவுக்கு கொடுத்ததும் அதை உலக மகா சாதனை போல போகிற இடமெல்லாம் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். காரணம் புரியாமலில்லை. ஆஸ்கார் உயர்ந்த விருது கிடையாது என்பது எனக்கும் தெரிந்ததே. ஆனால் இன்றைக்கு இந்தியாவில் ஆஸ்கார் என்றால் மக்களின் மனதில் தோன்றும் முதல் முகம் ரஹ்மான்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதை இராவாசிகள் பாராட்ட வேண்டாம். அதை சிறுமைப் படுத்தாமல் இருந்தாலே போதும். இதற்கிடையில் இராவின் ஆஸ்கார் பாடல் வரிசை என்று ஒரு பதிவு தொடர்ச்சியாக தற்போது இணையத்தில் உலா வருகிறது. விபரம் தெரியாதவர்கள் அடடே நம்மாள் இந்த ஆஸ்கார ரஹ்மானுக்கு முன்னாடியே எப்போவோ வான்கிட்டாருப்பா என்று நினைக்கும் படி தனக்குப் பிடித்த இராவின் பாடல்களை குறிப்பிட்டு இதுவெல்லாம் ஆஸ்கார் வாங்க வேண்டிய பாடல்கள் என்று பின்குறிப்பு வரைகிறார் அதை எழுதும் இராவாசி. அவரவர் சுதந்திரம். என்னத்தை வேண்டுமானாலும் எழுத்தித் தள்ளலாம். யாரும் தலையிட முடியாது.

தமிழ்ப் பாடல்களில் பெண்களை இழிவாக பகடி செய்யும் பாணியை கொண்டுவந்ததே இராதான். வாடி எ கப்பக்கிழங்கே பாடல் ஒரு நல்ல சான்று. அவர் இதுபோன்று நிறைய சாதனைகள் செய்திருக்கிறார். அதையெல்லாம் நான் இங்கு குறிப்பிட்ட விரும்பவில்லை. இரா ஆரம்பித்த இந்த "உயர்ந்த" சிந்தனை தற்போது வெட்டுறா அவள கொல்லுடா அவள என்று வந்து நிற்கிறது. இதில் இராவாசிகள் எய்தவரை விட்டுவிட்டு அம்புகளை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். சுத்தம்.

இன்னும் எழுத ஆசைதான். ஆனால் இப்போதே பலருக்கு உஷ்ணம் தலைக்கேறும் என்று தோன்றுகிறது. இதை வைத்துக்கொண்டு சில ஆசாமிகள் மிகவும் "கண்ணியமான" முறையில் உங்களுக்குப் பின்னூட்டம் இடலாம்.

Anonymous said...

அமுதவன் அவர்களே,
இ.ரா. அவர்களின் பாடல்களை எல்லாம் (சில பாடல்களை தவிர), இசையமைப்பாளர் திரு. மூக்கையா (or xyz) என்ற பெயரில் வெளியிட்டு பாருங்கள். இராவாசிகளே அதை கேட்க மாட்டார்கள்.
இவர்கள் எல்லாம் இசையை ரசிக்க வில்லை. "அவரின்" இசை என்கிற மாயையை ரசிக்கிறவர்கள். இவர்களுக்கு அவர் மூச்சு விட்டாலே அது இசை மாதிரி தான் கேட்கும்.

அரவிந்த் said...

ஐயா.. எனக்கு சில சந்தேகங்கள்.
உங்களுக்கு இளையராஜா பிடிக்காதா அல்லது அவரை மிகையாக போற்றி எழுதப்படும் பதிவுகள் பிடிக்காதா?
ராஜாவைப் பிடிக்காது என்றால் சரி, உங்களிடம் இருந்து வேறு எதுவும் எதிர் பார்க்க முடியாது. அவரைப் பற்றிய மிகையான பதிவுகள்தான் பிரச்சினை என்றால், நீங்களும் ஏன் அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள். பதிவுகள் என்பதே யாரும் நம் படைப்புகள் (என்று நாம் எண்ணுவதை) எழுதுவதுதான். அது ஆஸ்கார் பெற தகுதியான பாடல், நோபல் பெற தகுதியான இலக்கியம் என அவரவர்கள் எண்ணுவதுதானே. அதற்கு ஏன் நீங்கள் தாம் தூம் என குதிக்கிறீர்கள். (தயவு செய்து இந்த வீட்டில் மட்டும் பத்தினி என்ற மகா மட்டமான உவமையை சொல்லி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம்).

\\தவறான செய்திகளையும், தவறான தகவல்களையும், தவறான கட்டுக்கதைகளையும் உண்மைபோல சொல்லிக்கொண்டிருக்க நிச்சயம் இடமில்லை என்பதை மட்டும்தான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\\

பதிவர்கள் அனைவரும் பொதுவாக கேள்விப்பட்டதையும், மனதில் தோன்றுவதையும் தான் எழுதுவார்கள். எதற்குமே அவ்வளவாக ஆதாரம் இருக்காது. நீங்களும் அப்படித்தான். நீங்களும் முடிந்தால் \\‘எலந்தப் பயம்’ என்ற ஒற்றைப் பாடல் ‘பணமா பாசமா’ படத்தை இருபத்தைந்து வாரங்களுக்கும் மேல் ஓட வைத்த கதை எத்தனைப்பேருக்குத் தெரியும்? அந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டுதான் அதுவரை வெளிவந்த தமிழ் இசைத்தட்டுக்களிலேயே அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்று ஹெச்எம்வி நிறுவனம் அறிவித்த கதை தெரியுமா?\\ இதற்கான ஆதாரம் மட்டும் கொடுங்களேன்.

\\கங்கை அமரனை எனக்கு நேரில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. இளையராஜாவை ஒரு ஏழெட்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அண்ணன் பாஸ்கருடன் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஆனால் கங்கை அமரனை இளையராஜா பெங்களூரில் ஆர்க்கெஸ்டிரா நடத்த வந்தபோது ஒரேயொரு முறை சந்தித்து ஒரு ஒருமணி நேரம்போல பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்\\ (உங்களுடைய பழைய பதிவில் இருந்து)
நீங்கள் இந்த நேரங்களில் உங்களுடைய சந்தேகங்களை (சிம்பொனி இசை பற்றி, ராஜாவின் மிகைப்படுத்தப்பட்ட சாதனைகள் பற்றி) யாராவது ஒருவரிடம் கேட்டு சொல்லி இருக்கலாமே. அல்லது சுஜாதா அவர்களிடமாவது கேட்டு, அவர் செய்தது சிம்பொனி கிடையாது என்று சொல்லி இருக்கலாமே. எப்படி ராஜாவின் தீவிர ரசிகர்கள் எந்த வித ஆதாரமும் இல்லாமல் உங்களிடம் சண்டை போடுகிறார்களோ, நீங்களும் அதே போல சண்டை போடுகிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல எல்லோருடைய பாடல்களும் ஒலித்தது, அதே இடங்களில் காலம் மாறியபோது ராஜாவின் பாடல், பின் ரஹ்மான், தேவா என இப்போது அனிருத் வரை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் பாணியிலேயே சில கேள்விகள்:
\\பாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.\\ அப்ப கேவிஎம் என்ன கம்மியா கொடுத்திருக்கிறாரா?
\\சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம், சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன், சிவாஜி நடிப்புலகின் டிக்ஷனரி\\ அப்ப பாகவதர் காலத்து ஆட்களுக்கு நடிப்பே வல்லியா? இல்ல சிவாஜிக்கு அப்புறம் தமிழ்நாட்டுல யாருமே நடிக்கலியா?

எப்படி என்னுடைய மேற்கண்ட கேள்விகள் எல்லாம் விதண்டாவாதமாக உங்களுக்குத் தோன்றுமோ, அதே போலத்தான் உங்கள் பதிவும். உங்களுக்கு சினிமாத் துறையில் பழக்கம் உள்ளது, எனவே முடிந்தால் நீங்களாவது எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பதிவிடுங்கள். பொத்தாம் பொதுவாக எழுத வேண்டாம்.
\\‘என்னுடைய லட்சியம் எப்படியும் ஆஸ்கார் வெல்லுவதுதான்’ என்ற தனது கனவைப் பேட்டிகள் மூலமும் பேச்சுக்களாகவும் விடாமல் பதிவு செய்துவந்தார் கமல்ஹாசன்.\\ அட இதுக்காவது ஆதாரம் கொடுங்களேன் பார்க்கலாம். எந்த பத்திரிகை, எப்போது வந்தது.

உங்களுக்கு எப்படி எம்எஸ்வியோ அதே போல அவர்களுக்கு இளையராஜா. அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தயவு செய்து எம்எஸ்வி, கண்ணதாசன் மற்றும் சிவாஜி அவர்களின் மரியாதையை நீங்கள் கெடுத்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் மற்றவர்களைப் பற்றி தவறாக எழுதினால், அவர்கள் இவர்களைப் பற்றி தவறாக எழுதுவார்கள். முடிந்தால், அவர்களைப் பற்றிய சுவையான செய்திகளைப் பகிருங்கள்.

வருண் said...

அமுதவன் சார்: இவ்வளவு தூரம் உங்களை மற்ற இசையமைப்பாளர் திறமையை பேச வைத்து இருக்காங்க என்றால், இளையராஜாவை கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது..

இளையராஜா, மற்றவர்கள் போலல்லாமல் வேறொரு பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவர் சாதனைகளை எல்லோரும் மிகவும் புகழ்ந்தார்கள்னு நினைக்கிறேன். அவர்போல் பின்புலத்தில் இருந்து மேலே வருவது, வந்து கொடிகட்டிப் பறப்பது இதெல்லாம் கடினம்னு நானும் நம்புறேன்.

கலைஞர்கள் திறமைமிக்கவர்கள்..இருந்ந்தாலும் அவரகளுக்கு மற்றவர் மனதறிந்து தன்னிலை குறைத்து பேசத் தெரியாது. இதில், கமலும், இ ராவும் நிச்சயம் அடங்குவார்கள். அவர்கள் பரம ரசிகர்களை கேக்கவே வேணாம்..

சண்டியர்கரன் னு ஒரு கமல் விசிறி, கமல் படங்கள் வெற்றி டேட்டா கொடுக்கிறேன் என்று உண்மைபோல பல கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடுவார்..அவர் சொல்ற டேட்டாக்கள் எல்லாம் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான் "அடேங்கப்பா, இவர் எம்ம்மாம் பெரிய கமல் விசிறி" என்பதே.நீங்கள் பார்த்த இ ரா அபிமானிகள் அவ்வகையே சாரும் என்று தெளிவுபடுகிறது..

எனக்கு இசை நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது. ஆனால் இ ரா நிச்சயம் ஒரு திறமைமிக்க இசை அமைப்பாளர்தான். கமல் ஒரு திறமை மிக்க நடிகர்தான். ஆஸ்கர் கிடைக்காததால் இவர்கள் ரகுமானைவிட குறைந்தவர்கள் இல்லை. அதே சமயத்தில் இவர்கள் எம் எஸ் வி சிவாஜியைக் காட்டிலும் இவர்கள் அதிக திறமை உள்ளவர்கள் உயர்வானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

இளையராஜா புகழ்பரப்பிகள் பதிவை வாசிக்காதவங்க (iபொதுவாக 99% வாசகர்கள்) நீங்கள் இ ரா வை நாமும் இன்னும் புகழ்ந்து தள்ளவேண்டாம் என்று அவர் தகுதிக்கேற்ற சரியான இடத்தில் அவரைக் கொண்டுவர முயல்வதை தவறாக புரிந்துகொள்வதைத் தவிர்ப்பது கடினம். அவர்களைப் பொருத்தவரையில் நீங்களும், காரிகனும் "இளையராஜா/அவர் விசிறிகள் அவதூறு பரப்புபவர்கள்!" என்கிற பட்டத்தைத்தான் தருவார்கள். நீங்கள அதை வாங்கி ஓரமாக வைத்து விடுங்கள்! :)))

Amudhavan said...

காரிகன் மிக நீண்ட........ நீள நீளமான கருத்துச் சார்ந்த பின்னூட்டங்களை எழுதியதற்கு நன்றி. ஒவ்வொரு பாராவையும் உங்கள் பார்வையில் அலசி எல்லாவற்றையும் கண்களை மூடிக்கொண்டு பாராட்டாமல், சில விஷயங்களில் உங்களுக்குச் சரியென்று பட்ட கருத்துக்களையும் சேர்த்தே சொல்லி நிறைவு செய்திருக்கிறீர்கள். இதற்கென சிரமம் பாராமல் பொறுமையுடன் நேரம் செலவழித்த உங்களுக்கு மறுபடியும் நன்றி சொல்லிக்கொள்ளுகிறேன்.
நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நிச்சயம் இ.ரா ரசிகர்களிடம் என்னவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர்களிடம் இப்போதெல்லாம், தொடர்ந்து சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பதற்கு பொய்க்கதைகளும், புனைசுருட்டுக்களும்கூடக் குறைந்துபோய்விட்டன என்பதுதான் சோகத்துக்குரிய ஆனால் வரவேற்புக்குரிய விஷயம்.

Amudhavan said...

Alien said...

\\இவர்கள் எல்லாம் இசையை ரசிக்க வில்லை. "அவரின்" இசை என்கிற மாயையை ரசிக்கிறவர்கள். இவர்களுக்கு அவர் மூச்சு விட்டாலே அது இசை மாதிரி தான் கேட்கும்.\\

ஆஹா, ஏலியன் நீங்கள் என்னசொல்லவருகிறீர்கள் என்று புரிகிறது. அதை அவர்கள் ரசித்துக்கொண்டிருப்பது தனிப்பட்ட விஷயம். அதனை எல்லாரும் ரசிக்கவேண்டும், கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறார்களே அதனை மட்டும்தான் நாம் விமர்சிக்கிறோம்.

Amudhavan said...

அரவிந்த் said..
\\அட இதுக்காவது ஆதாரம் கொடுங்களேன் பார்க்கலாம். எந்த பத்திரிகை, எப்போது வந்தது.\\
அட, யாருப்பா இந்த அரவிந்த் இங்கே வந்து இத்தனை திராபையான அபத்தமான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருப்பது?
'இ.ராவின் பாடல்கள் மட்டுமே குறி; இ.ராவின் பாடல்களில் மட்டுமே வெறி' என்று செயலாற்றிக்கொண்டிருந்தால் இப்படித்தான் உலகில் எதுவுமே தெரியாமல் மண்டூக மண்ணாங்கட்டியாய்க் கிடக்கலாம். உலகில் எந்த மிகப்பெரிய கலைஞரையும் மாமனிதர்களையும் இ.ராவுக்கு இணையாக - ஏன் இணையாக? - இ.ராவுக்கு இணை இங்கே யாருமில்லை என்றே சொல்லிக்கொண்டு திரியலாம். எல்லாரும் அப்படியில்லை என்பதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
'பதிவர்கள் எல்லாரும் மனதில் தோன்றுவதைத்தான் எழுதுவார்கள். எதற்கும் ஆதாரமெல்லாம் இருக்காது' என்பதுபோல் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அதுதான் பதிவுலகின் விதி என்பது போலவும், பதிவர்களுடைய இலக்கணமே மனதில் என்னென்ன தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் எழுதித்தள்ளிவிட்டுப் போவதுதான் அதற்கு எந்தவித அடிப்படையோ அறிவு ஞானமோ கிடையாது என்பதுபோலவும் இருக்கிறதே. ............படிக்கிறவனும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஆய்ந்து பார்ப்பதோ, பரிசோதனை செய்வதோ கூடாதா? உண்மைதானா என்பதையும் பார்க்கக்கூடாதா? அவனுக்கும் சுயசிந்தனை, பட்டறிவு எதுவுமே இருக்கக்கூடாதா? அப்படி இருப்பவன் பதிவுலகம் பக்கமாக வரவே கூடாது என்பதும் கட்டுப்பாடா?
என்ன சொல்ல வருகிறீர்கள்?
பதிவுலகத்தை நான் அப்படிப் பார்க்கவில்லை. நீங்கள் சொல்கிற மாதிரி பதிவுலகம் இருந்தால் 'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு' என்று பதிவுகலம் பற்றி முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
அச்சு ஊடகத்தைத் தொடர்ந்து வரும் அறிவியல் சார்ந்த இன்னொரு ஊடகமாகத்தான் இதனை நான் பார்க்கிறேன். இங்கு 'சாதனை செய்த எல்லாரும் அதற்கென அங்கீகாரங்கள் பெற வேண்டும்' என்றுதான் நான் பார்க்கிறேனே அல்லாமல் யாரோ பத்துப் பேருக்கு மட்டுமே பிடித்த ஒருவரை மட்டும் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம். மற்ற எல்லாரையும் காலில் போட்டு மிதிப்போம். கேட்டால் 'நீ அவர்களை அப்படி நினைத்தால் நான் இவரை இப்படி நினைப்பேன். எனக்கு அதற்கான உரிமை இருக்கிறது என்று வாதாடுவேன்' என்று சொன்னால் என்ன அர்த்தம்?
எம்எஸ்வியைப் போல இனிமையான மெட்டுக்களை எம்எஸ்வியை விட யாரும் அதிகமாகக் கொடுத்ததில்லை என்று நான் எழுதியிருப்பதற்கு 'அப்ப கேவிஎம் என்ன கம்மியாகக் கொடுத்திருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்........... இதுதான் சரியான முறையான வாதங்களுக்கான பாதை. அதிலும் எம்எஸ்விக்கு பதில் சொல்ல நீங்கள் கேவிமகாதேவனைத் துணைக்கு அழைத்திருக்கிறீர்களே இங்குதான் உங்களின் அடாவடித்தனம் வெளிப்படாமல் நேர்மையும் நாணயமும் பளிச்சிடுகிறது. சபாஷ், கேவிஎம்மின் இனிமையான பாடல்களைப் பட்டியலிடுங்கள்..... நாமெல்லாம் சேர்ந்தே கொண்டாடி ரசிப்போம்....(தொடர்கிறேன்)

Amudhavan said...

பதிவுக்கான ஆதாரங்கள் எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்று நீங்கள் ஒப்புக்கு எழுதினாலும், ஆதாரம் கொடுங்கள், ஆதாரம் கொடுங்கள் என்று நீங்கள் போட்டிருக்கும் பட்டியல்களைப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்டு மடக்கிவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்திருப்பது தெரிகிறது.
அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்பதுபற்றி அறிந்துகொள்ளாமல், அச்சு ஊடகங்களின் படிப்பறிவு எதுவுமே இல்லாமல், விஷயஞானம் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு இணைய ஆதாரம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது. தேவையும் இல்லை.
பணமா பாசமாவின் எலந்தப் பயம் பற்றிய பாடலுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். அந்தப் படம் வெளிவந்த ஆண்டின் குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகளின் ஒரு வருடத் தொகுப்பு பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிவந்து விடுங்கள். அதில் அந்தப் பாடலின் வெற்றி, அந்தப் படத்தின் வெற்றி பற்றிய தகவல்கள், படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பேட்டி, அந்தப் பாடலுக்கு நடித்த விஜயநிர்மலாவின் பேட்டி, பாடலை எழுதிய கண்ணதாசனின் பேட்டி, பாடலுக்கு இசையமைத்த கேவிஎம்மின் பேட்டி, பாடலைப் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியின் பேட்டி, ரிகார்டுகள் விற்ற அன்றைய சரஸ்வதி ஸ்டோர்ஸ் அதிபரின் பேட்டி, பாடலைக் கொண்டாடிய ரசிகர்களின் பேட்டிகள் என்று எல்லாமே நிறைய இருக்கின்றன.
கமல்ஹாசன் ஆஸ்கார் பற்றிப் பேசியதற்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டால் படிக்கிறவர்கள் கேள்விக்கேட்டவரைப் பற்றித் தவறாக நினைக்க ஏதுவாயிருக்கும் என்றே நினைக்கிறேன்.
சிவாஜி பற்றிய கமெண்டுகளுக்கும் சரி 'உங்களுக்கு எம்எஸ்வி எப்படியோ அவர்களுக்கு இ.ரா அப்படி' என்பதுபோன்ற கோக்குமாக்கான கமெண்ட்டுகளுக்கும் சரி, பதில் சொல்லிக்கொண்டிருப்பது அர்த்தமற்ற வேலை என்றே நினைக்கிறேன். இவற்றை ஒரு விமர்சனம் என்று சொல்லும் தகுதிகூட அதற்கில்லை என்பது என்னுடைய கருத்து.
'முடிந்தால் அவர்களைப் பற்றிய சுவையான செய்திகளை எழுதுங்கள்' என்ற அட்வைசுடன் உங்கள் பின்னூட்டத்தை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்பும் 'சுவையான' செய்திகளைத் தரும் பதிவுகள் நிறைய இருக்கின்றன. அங்குபோய்ப் படித்துக்கொள்ளுங்கள்.

Amudhavan said...

வருண் said...
\\இளையராஜா, மற்றவர்கள் போலல்லாமல் வேறொரு பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவர் சாதனைகளை எல்லோரும் மிகவும் புகழ்ந்தார்கள்னு நினைக்கிறேன். அவர்போல் பின்புலத்தில் இருந்து மேலே வருவது, வந்து கொடிகட்டிப் பறப்பது இதெல்லாம் கடினம்னு நானும் நம்புறேன். \\

வாருங்கள் வருண், என்ன முதலில் உங்க பெயரை நகலெடுத்து அந்தப் பெயரில் அங்கங்கே போலியாக எழுதிக்கொண்டிருந்தவர்கள் இப்போது வருண் என்ற பெயரில் பதிவுகளே எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் நோக்கம் என்னவாம்?
இ.ரா மிக மிக சாதாரண இடத்திலிருந்து வந்தார் என்பது உண்மைதான். ஆனால் பிரபலமாகவிருக்கும் பல பெரிய மனிதர்களின் பின்புலத்தைப் பார்த்தோமென்றால் அவர்கள் மிகவும் மோசமான பின்புலத்திலிருந்து வந்தவர்களாக இருப்பது சில தலைமுறைகளாகவே நடைபெற்றுத்தான் வருகிறது. இதற்கடுத்த தலைமுறையில் இது படிப்படியாய்க் குறைந்துபோகும். சிவாஜி, எம்ஜிஆர் எல்லாரும்கூட அப்படி வந்தவர்கள்தாம். சோற்றுக்கே கஷ்டப்பட்ட வாழ்க்கைதான் சிவாஜி மற்றும் எம்ஜிஆருக்கானது. கேவிமகாதேவன் ஒரு ஓட்டலில் டேபிள் துடைத்துக்கொண்டிருந்தவராக இருந்து வந்தவர்தாம். எம்எஸ்வியும் ஆரம்பத்தில் எடுபிடி வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தவர்தாம். ஆக, இதை மட்டுமே பெரிதாக்கிக் கொண்டாடுவதிலிருந்தும் நாம் விடுபட்டாக வேண்டும். சினிமாவைப் பொறுத்தவரை இங்கே ஏதோ காரணத்தால் வெற்றி பெறவேண்டும். வெற்றி மட்டும் பெற்றுவிட்டால் இங்கே ஜாதி, மதம், மொழி, இனம் எதற்கும் இடமில்லை. வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். இந்த ஜாதியையும் மதத்தையும் இனத்தையும் கொண்டாடுவதென்பது பத்திரிகை மற்றும் ரசிகர்களின் வேலை. அதனால் நான் இந்தக் கண்ணோட்டத்தில் எதையும் அணுகக்கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி அணுகுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. என்ன செய்வது?
\\ஆனால் இ ரா நிச்சயம் ஒரு திறமைமிக்க இசை அமைப்பாளர்தான். கமல் ஒரு திறமை மிக்க நடிகர்தான். ஆஸ்கர் கிடைக்காததால் இவர்கள் ரகுமானைவிட குறைந்தவர்கள் இல்லை. \\
ஏறக்குறைய இதே கருத்தைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால் அதே சமயம் இவர்கள் - இ.ராவின் ரசிகர்கள் -ரகுமானை மிகவும தரம் தாழ்ந்தமுறையில் கேவலப்படுத்தி எழுதுவதையும் அனுமதிப்பதற்கில்லை. நம்முடைய மனத்தராசுகளில் யாருக்கு எந்த இடம் என்பது வேறுவிஷயம். ஆனால் சமூக நிலைகள், சமூக அந்தஸ்துகள், அவற்றையொட்டிய அங்கீகாரங்கள் என்று சில இருக்கின்றன. நான் பல சமயங்களில் சொன்னதுபோல மோடியை நான் ஒரு தலைவராக ஒப்புக்கொள்வதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்தான் என்பதை நான் ஒப்புக்கொள்வதும் அந்த மரியாதையைத் தருவதும் கட்டாயம் இல்லையா? இது பன்னீர் செல்வம் தொடங்கி ரகுமான்வரை எல்லாருக்கும் பொருந்தும். உலக அளவில் இன்றைக்கு ரகுமானின் திரைப்பட மார்க்கெட் என்பது சாதாரணமானதல்ல என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் விஷயம்தான். அந்த நிலைமையை அடைவது என்பதும் ஒன்றும் சாதாரண விஷயமல்ல.


அரவிந்த் said...
This comment has been removed by a blog administrator.
அரவிந்த் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

அதே ஆட்கள்தான் சார். முதலில் ஒரே பெயரில் 50 பதிவுகள் வெளியிட்டவர்கள், இப்போ இதுபோல் பலருடைய பெயரில் ஒரே தளத்தில் இருந்து பதிவிடுறாங்க. அவர்களுக்கு பெயர் முக்கியமல்ல! தன் தளத்திற்கு எப்படியோ ஆட்களை ஏமாற்றி வரவைக்க வேண்டும். அதற்குத் தேவையான தலைப்பு மட்டும் தேர்ந்தெடுத்த இவர்கள் இப்போது. பதிவுலகில் தெரிந்த பெயரை வைத்து எழுதினால் அப்பெயர் உள்ளவர்கள் நட்பு வட்டம், வாசகர்கள், அப்பதிவுக்கு வருவார்கள் என்று இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் தளத்திற்கு வந்து எப்படியோ தப்பித் தவறி அங்கே உள்ள "கமெர்சியலில்" தெரியாமல் தொட்டுவிட வேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு முக்கியம். பதிவுலகில் கொஞ்சம் பரிச்சயமான பெயர்களை எடுத்துப் போட்டு பதிவிடுறாங்க. அதில் "வருண்" என்பதும் ஒரு பெயர். இன்னும் பலருடைய பெயர்களில் எழுதுறாங்கனு நினைக்கிறேன். இவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் ஒரு சிலருக்குத்தான் புரியும். தமிழ்மணத்தில் நம்மைப்போல் ஆட்கள் நிர்வாகத்தில் இருந்தால் இதுபோல் தளம் நடத்துபவர்களை (காசு சம்பாரிக்க மட்டுமே, 100 பெயர்களில் பதிவிட்டு ஒரே தளத்திற்கு அழைத்துச் செல்ல முயலும் இவர்களை), கண்டுபிடித்து இதுபோல் "வேஷித்தனம்" செய்து வியாபார நோக்கில் மட்டுமே நடத்தும் தளங்களை திரட்டுவதில் இருந்து அத்தளங்களை நீக்கலாம். ஆனால் நம் நிலையில் எதுவும் செய்யமுடியாது சார். தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்மணம் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்ப் போவது பரிதாபத்திற்குரியது. ஷோஷியல் மீடியா (முகநூல், ட்விட்டர்) மேலெழுந்து பதிவுலகத்தை அழிக்கும் இச்சூழலில், தமிழ்மண நிர்வாகத்தின் ("எவன் என்ன செய்தால் எனக்கென்ன ? வந்தால் வா, வராட்டிப் போ, ") அசட்டைத்தனத்தால் பதிவுலகம் விரைவில் இன்னும் வேகமாக அழியும் என்றே தோன்றுகிறது.

Arul Jeeva said...
This comment has been removed by a blog administrator.
Arul Jeeva said...

அமுதவன் அவர்களே. தங்களை பண்பாளர் ,சிறந்த எழுத்தாளர் ,நல்ல பதிவாளர் அனுபவசாலி என்றறிந்தோம் .ஆனால் இன்னும் குறுகிய வட்டத்திற்குள் தான் இருக்கிறீர்கள் .தங்களை ஆதரிப்பவர்களின் பின்னூட்டங்களை ஆகா ஓகோவென புகழ்ந்து பிரசுரிக்கும் தாங்கள் மாற்றுக் கருத்துரைப்பவர்களின் பின்னூட்டங்களை பிரசுரிக்க மறுப்பது ஏன்/?

காரிகன் said...

அமுதவன் சார்,

அபத்தமான கருத்துக்கள் என்று சொல்லிக்கொண்டு எழுதப்பட்டவைகளுக்கு நீங்கள் செய்த அறுவை சிகிச்சை அவசியமானதுதான்.

Arul Jeeva said...

அமுதவன்

Amudhavan said...

Arul Jeeva said...
\\தங்களை ஆதரிப்பவர்களின் பின்னூட்டங்களை ஆகா ஓகோவென புகழ்ந்து பிரசுரிக்கும் தாங்கள் மாற்றுக் கருத்துரைப்பவர்களின் பின்னூட்டங்களை பிரசுரிக்க மறுப்பது ஏன்/?\\
அருள் ஜீவா நீங்கள் இதனை ஆத்திரத்திலும் அவசரத்திலும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களுடைய அத்தனைப் பின்னூட்டங்களும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இங்கே பிரசுரிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றனதானே? நீங்கள் என்ன என்னையும், என்னுடைய கருத்துக்களையும் ஆதரித்துக்கொண்டா இருக்கிறீர்கள்?
திரு அரவிந்த் எழுதிய முதல் பின்னூட்டத்திற்கு நானும் பதில் எழுதினேன். அதற்கடுத்து அவர் இன்னமும் ஒரு பின்னூட்டம் எழுதினார். அதனையும் பிரசுரிக்கவே செய்தேன். அதனைப் படித்துவிட்டு என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். "மாற்றுக்கருத்து என்று சொல்லிக்கொண்டு வரம்பு மீறி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பாணி உங்கள் பதிவுகளில் வேண்டாமே. நீக்கிவிடுங்கள். நாங்கள் படிக்கவிரும்பவில்லை" என்றார். "இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாருமே பண்புடனும் நாகரிகத்துடனும்தாம் எழுதுவார்கள் என்று சொல்வதற்கில்லை. இதற்கு பதில் எழுதுகிறேன் . அதனைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்" என்றேன். அந்தச் சமயத்தில்தான் இந்தப் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு ஒரு பிரபல பதிவர் பதிலளித்திருந்தார். அவரது பதிலுடன் எனக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருந்தார். "இம்மாதிரிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் நாங்கள் படிக்கவிரும்பவில்லை" என்றும் தெரிவித்துவிட்டு மேற்படி அன்பருக்கு மிகவும் சூடாகவே பதில் சொல்லியிருந்தார். அதனால் உடனடியாக அவருடைய பின்னூட்டங்களை நீக்கிவிட்டேன். அந்தப் பிரபல பதிவரின் பதிலையும் பிரசுரிக்கவில்லை. அந்த பதில் மிகக் கடுமையான வார்த்தைகளில் இருந்தது. அந்தச் சமயம் தவறுதலாக உங்கள் பின்னூட்டமும் நீக்கப்பட்டுவிட்டது. வருந்துகிறேன். நீங்கள வழக்கம்போல் தொடர்ந்து எழுதலாம்.

வருண் said...

Arul Jeeva: Arvind was personally abusing Mr. Amudhavan. You are supporting that?

Are you blind or stupid? Arvind should learn how to debate without personal abuse. You must be blind/stupid to overlook such personal abuse in his responses.

There is nothing wrong in removing personal abuse responses no matter what contents were there in it.

In any case, you guys are going to sing the same song again and again. He shared is opinion. Take it or leave it!

அரவிந்த் said...

மன்னிக்க வேண்டும் அமுதவன் சார். இந்த ஒரு பின்னூட்டம் மட்டும் அனுமதிக்கவும்.
\\Arul Jeeva: Arvind was personally abusing Mr. Amudhavan. You are supporting that?\\ வருண் அவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது அவர் அமெரிக்காவில் உள்ளவர் என தெரிகிறது. எனவே ஆங்கிலம் நன்கு தெரியும் என நினைக்கிறேன். அதே போல எனது நீக்கப்பட்ட பின்னூட்டத்தையும் படித்திருப்பார் என நினைக்கிறேன். I made sarcastic comments only. I have not abused him. நான் அவரைப் பழிக்கவில்லை, அவரை கிண்டல் செய்தேன். தவறுதான். அதற்காக அவரிடமும், தனியே என்னுடைய பதிவிலும் நான் மன்னிப்பு கோரி உள்ளேன்.
\\Are you blind or stupid?\\ இதற்கு என்ன அ(ன)ர்த்தம் என்று தெரியுமா? இதற்கு நான் சொன்னதே பரவாயில்லை. அது சரி, ஆங்கிலத்தில் திட்டினால் 'பெரிய மனுஷன்' என்று அர்த்தம் போல.

உண்மையில் பிரச்சினை திசை மாறிப் போய் விட்டது. என்னுடைய அந்த கருத்துகளுக்கு மீண்டும் மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்தால் போதும். கிடைக்குமா?

அரவிந்த் said...

If you are really unbiased, either publish my comment or remove Varun's comment. Sorry again.

வருண் said...

***\Are you blind or stupid?\\ இதற்கு என்ன அ(ன)ர்த்தம் என்று தெரியுமா? இதற்கு நான் சொன்னதே பரவாயில்லை. அது சரி, ஆங்கிலத்தில் திட்டினால் 'பெரிய மனுஷன்' என்று அர்த்தம் போல.***

அரவிந்த்: நான் பெரிய யோக்கியன் என்று எங்கே சொன்னேன்??? நீங்கள் எழுதிய "கிண்டல்" ஏற்புடையதாக இல்லை. அமுதவன் அவர்கள் உங்க பின்னூட்டத்தை பிரசுரிச்ச உடன் வாசித்துவிட்டு நான் அவரை அகற்றச் சொல்லிய பின்னூட்டம்கூட அநாகரிகமானது என்று அதையும் அவர் வெளியிடவில்லை.

"நான் யோக்கியன், என் பின்னூட்ட்ம தரமானது" என்று நான் சொல்லவில்லை. உங்கள் "கிண்டலை" அருள் ஜீவா கண்டித்து இருக்கணும். அதை கண்டுக்காமல் போனாலாவது பரவாயில்லை. அதை "சிறப்பானது" என்பதுபோல் பாராட்டி பின்னூட்டமிட்டது தவறு. மற்றபடி நான் தெருப்பொறுக்கிதான். என்னை திட்டிட்டுப் போங்க! அமுதவன் என்னைப்போல் யாரையும் இகழ்வதில்லை. He does not deserve your "sarcasm". That's my whole point.

You are going to keep saying that I was only sarcastic, I did not mean to offend him. Fine. But your first two lines and last two lines were sadistic and you did offend him imho!

Thank you for the understanding.! Let us move on!

காரிகன் said...

Arvindh,

I had a feeling that you were genuine. That's why I commented on your blog so honestly. But if you persist in certain things which are no way your domain, I'm sorry that you are treading a fool's path. You deserve what you get. Either you respect a person's experience or his age. If neither is your answer, You will have to regret your choice.

அரவிந்த் said...

சில விஷயங்கள், இறுதியாக, தெளிவாக.

1. என்னுடைய அந்த பின்னூட்டம் முழுக்க முழுக்க வருணுக்காக. நடுவில் சில வார்த்தைகளை நான் விட்டு விட்டேன் அது மட்டுமில்லாமல் 'பெரிய மனுஷன்' என்ற வார்த்தை தவறாக போய் விட்டது. உண்மையில் அது என்னுடைய தவறுதான். நான் தெளிவாக யாரைக் குறிப்பிடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். அது நான் அமுதவனைக் குறிப்பிடவில்லை. ஆங்கிலம் பேசினால் பொதுவாக சொல்வார்கள் என்று (நானே) எண்ணிக்கொண்டு எழுதியது.

2. என்னுடைய பின்னூட்டத்தில் கிண்டல், கேலியும், சில கேள்விகளும் இருந்தன. நீங்கள் கிண்டல் கேலியையும், அருள் ஜீவா அந்தக் கேள்விகளையும் கவனித்து, அதற்காக பதில் எழுதினார்கள். யார் மீதும் நான் தவறு சொல்லவில்லை. நான் கேட்க வந்த கேள்விகளை மட்டும் ஒழுங்காக கேட்டிருக்க வேண்டும். அது மட்டுமின்றி அருள் ஜீவாவின் அந்தக் கருத்து தவறுதலாக நீக்கப்பட்டுள்ளது என்பதை அமுதவனே சொல்லி விட்டார்.

3. நான் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கூட சொல்கிறேன். நான் கிண்டலாக பின்னூட்டம் இட்டது தவறு. தெளிவாக சொல்லாமல் மீண்டும் பொத்தாம் பொதுவாக சொன்னதும் என்னுடைய தவறே. ஆனால் வருண் அவர்கள் ஆங்கிலத்தில் சொல்லியதும் தவறு என்று வருண் அவர்களுக்கு சொல்ல வந்தேன். அங்கே அந்த தவறு நிகழ்ந்து விட்டது. அதற்காகவே மீண்டும் ஒரு முறை, இரண்டு தவறுகளுக்காகவும் மீண்டும் கூட மன்னிப்பு கோருகிறேன். அந்த வார்த்தைகள் என்னைப் பொருத்தவரையில் only sarcastic, வருண் அவர்களைப் பொருத்தவரை sadistic, ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றி இருக்கலாம். எனவே, என்னை மன்னித்து, அதை இத்தோடு விட்டு விடுவோமே.

4. இந்தப் பதிவு சண்டை போடுவது போலவே போகிறது. அமுதவன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். சில பின்னூட்டங்கள் தவறான வார்த்தைகளோடு, ஆனால், நீங்கள் பதில் சொல்ல வேண்டி இருந்தால் (அல்லது விரும்பினால்), அந்த பின்னூட்டத்தை பிரசுரிக்காமல், அந்தக் கருத்துகளை/கேள்விகளை மட்டும் நீங்களே மீண்டும் தட்டச்சு செய்து, ஆள் பெயரைக் குறிப்பிட்டு பதில் மட்டும் எழுதலாம். இது என்னுடைய ஆலோசனை.

5. அமுதவன், காரிகன் இருவரும் வயதில் பக்குவப்பட்டவர்கள் (குறிப்பாக அமுதவன், ஏன் என அவருக்குத் தெரியும்) என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். இது போதும் என நினைக்கிறேன். நான் பின்னூட்டங்களைப் படித்தவுடன் பதில் சொல்லி விட வேண்டும் என உடனே ஏதாவது தட்டச்சு செய்து விடுகிறேன். இது கொஞ்சம் பொறுமையாக, நிதானமாக புரிந்து எழுதிய பின்னூட்டம்.

அமுதவன் அவர்கள் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லி இதை முடித்து வைக்க வேண்டுகிறேன். (இதையாவது காமெடியா நெனச்சு கொஞ்சம் சிரிங்க பாஸ். இதுக்கு மேல என்னால முடியலங்க. என்ன விட்ருங்க)

சரவணன் said...

இளையராஜாவின் பாமர ரசிகன் என்ற முறையில் ஒரு பின்னூட்டம்.
(1) *** பாடல்களின் அடிப்படை விஷயங்களில் விஸ்வநாதனைத் தாண்டி இதுவரையிலும் யாராலும் எதுவும் செய்யவும் முடியவில்லை- செய்யப்போவதும் இல்லை என்பதும் உண்மை. *****

20 வருடம் முன்னால் பிறக்காதது இளையராஜா தப்பா? அப்படி அவர் எம்.எஸ்.-இன் சமகாலத்தில் பணியாற்றியிருந்தால் எம்.எஸ். இன் இடம் என்னவாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எம்.எஸ். செய்யாத மேற்கத்திய இசையின் கவுண்டர் பாயிண்டிங் முறையில் சிட்டுக்குருவி படத்தில் என் கண்மணி பாடலை அமைத்து பாமரர்களிடம் கொண்டு சென்றவர் இ.ரா. ! இது ஒரு உதாரணம் மட்டுமே. என் தனிப்பட்ட கருத்து இந்தப் பாடலுக்கு இணையாக எம்.எஸ். ஒரு பாடலையும் கொடுக்கவில்லை என்பதே.

(2) **** நம் தமிழிசையில் கவிதை இல்லாத இசையை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. **** - காரிகன்

வாங்க காரிகன்! அதையும் செய்து காட்டியவர்தான் இ.ரா! 'ஹௌ டு நேம் இட்?' 'நத்திங் பட் விண்ட்' ஆகிய ஆல்பங்கள் உங்களுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். அவற்றைப் பின் தொடர்ந்தே நானெல்லாம் எல்.சுப்ரமணியம் போன்றவர்களின் ஃப்யூஷன் ஆல்பங்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
(3) **** பாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை ****

எப்படி சொல்கிறீர்கள்? எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இன்றும் ரசிக்கப்படும் மெலடி பாடல்களை அதிகம் கொடுத்திருப்பவர் இரா தான். (இது எம்.எஸ் இன் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல)

(4) எம்.எஸ் இன் சில பிரபல பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இம்மாதிரி இ.ராவின் பாடல்களைப் பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் பத்தாது என்பதால் தவிர்க்கிறேன்.

(5) பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்றவர் என்று சொல்லும் நிலை ஏன் ஏற்பட்டது என்று பார்ப்போம். இதற்கு இராவுக்கு முந்திய இசை அமைப்பாளர்களைக் கிராமங்களில் ரசிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அதுவரையில் கல்யாண மண்டபங்களில்தான் (+சிலோன் ரேடியோ) பாட்டுக் கேட்கும் வாய்ப்பு இருந்தது. இரா காலத்தில் கேசட் பிளேயர்கள் வர ஆரம்பித்தன. இவை மலிவாக இருந்ததால் டீக்கடைகளில் ஸ்டீரியோ வைத்து பாட்டு போட ஆரம்பித்தார்கள். இதனால் இசை ரசிகர்களின் கூட்டம் முன்பைவிடப் பெருகியது என்பது உண்மை. இது முதன்மையாகத் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் விளைவு என்றாலும் அப்படிப் புதிய தொழில் நுட்பம் வழியாகத் தன்னை நாடி வந்தவர்களைத் தன் இசையால் கட்டிப்போட்டவர் ராஜா என்பதும் உண்மை.

(6) ஆஸ்கார் பரிசு வேண்டுமானால் ஆங்கிலப் படத்துக்கு இசை அமைக்க வேண்டும். ஏனோ ராஜாவுக்குப் பிறமொழிப் படங்களில் ஈடுபாடு இல்லை. கிராமி விருதுக்காக அவர் முனைந்து ஆல்பம் வெளியிட்டிருந்தால் அதை அவர் எப்போதோ பெற்றிருப்பார். அவர் மெனக்கெடவில்லை, அவ்வளவே.

(7) ராஜா ரசிகர்கள் வெற்றுக்கூச்சல் போடுவது எனக்கும் பிடிப்பதில்லை. அப்படிக் கூச்சல் போட்டு நிரூபிக்க வேண்டிய இடத்தில் இரா இல்லையே. இதற்குப் பதில், உருப்படியான முயற்சிகளை நீங்கள் (ரசிகர்கள்) முன்னெடுத்திருந்தால் இந்நேரம் இரா பாரத ரத்னா பெற்றிருப்பார் ஐயா! லதா மங்கேஷ்கரையும், அப்துல் கலாமையும் விட எந்த விதத்தில் இளையராஜா குறைந்துபோய்விட்டார்?

(8) இரா ஆஸ்கார் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவில்லை-- சொன்னவர் இசைப்புயல் ஏ.ஆர்.ஆர்.

(9) இன்னும் 25 வருடம் சென்றால் எம்.எஸ்.வி. என்றால் யார் என்று கேட்கும் நிலைமைதான் இருக்கும். காரணம் அவர் வேகமாக மறக்கப்பட்டு வருகிறார். என்பதே உண்மை. (அப்படி நேர்வது சரி என்று சொல்லவில்லை, அது துரதிர்ஷ்டமே) ஆனால் இரா தமிழ் திரைப்படப் பாடல் கேட்க ஒரு ஆள் இருக்கும் வரை இருப்பார்.

(10) சிம்ஃபனியைப் பொருத்தவரை, திருவாசகம் சிம்ஃபனி அல்ல என்று அவரே அப்போதே தெளிவுபடுத்திவிட்டார். அதற்கு முன்பு 90-களில் அவர் சிம்ஃபனி இசை அமைத்தார், அது இசைத்தட்டாக வெளிவரவில்லை- அவ்வளவே என்பதுதான் என் புரிதல். ஜூபின் மேத்தா கண்டக்டர் மட்டுமே, கம்போசர் அல்ல. எனவே இதைச் செய்த முதல் இந்தியர் இரா என்பதுதான் சரி. அந்த இசைத் தொகுப்பு இசைத்தட்டு வடிவில் வெளியிடப்பட்டு மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை என்பதால் அவர் இசை அமைக்கவே இல்லை என்று ஆகிவிடாது.

(1/2) To be cont'd...

சரவணன் said...

(2/2) Continued from prev:

(11) நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. அதில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை‘ போன்ற பாட்டுகளை நூற்றுக்கணக்கான தடவை கேட்டு அலுத்துப் போயிருந்த நேரத்தில்தான் ஒரு பூங்காற்றாக எண்ட்ரி கொடுத்தார் இரா! மச்சானப் பாத்தீங்களா உள்ளிட்ட பாடல்களில் இருந்த ஃப்ரெஷ்னஸ் உடனடியாக வசீகரித்தது. அப்போது வீட்டுக்கு எதிரே ஒரு சவுண்ட் சர்வீஸ் கடை முகவரி மாறுதலாகி வந்தது. புதிய இடத்தை விளம்பரம் செய்ய அவர்கள் தினமும் மாலைகளில் ஸ்பீக்கரில் பாட்டு வைக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், ப்ரியா, இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களில் இராவின் மேஜிக் தொடர்ந்தது. என்னைப் போலவே ஒட்டு மொத்த தமிழ்நாடும் மீண்டும் பாடல்களை நோக்கி வந்தது. ஆச்சரியம் என்னவென்றால் ஆரம்ப காலப் பாடல்களில் இருந்த ஃப்ரெஷ்னஸ் இன்றும் குன்றாமல் இருப்பதுதான்!

(12) திரை இசையமைப்பாளர்கள் இமயமலையின் பல சிகரங்களைப்போல என்று கொண்டால், அதில் மிக உயர்ந்த 3 சிகரங்கள் எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான் ஆகியவர்களே. இதில் எவரெஸ்ட் யார் என்பதைக் காலமே தெளிவாகக் காட்டும். எனவே நான் இப்போது தீர்ப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை.

பிகு- பாட்டுப் புத்தகங்கள் இல்லாமல் போனாலும் பாடல் வரிகளைத் தரும் இணைய தளங்களாக மறு அவதாரம் எடுத்திருக்கின்றன என்பதை மறந்துவிட முடியாது.
சரவணன்

ஜோதிஜி said...

பதிவை படித்துக் கொண்டே வந்த போது ரகளையா அடித்து ஆடியிருக்கிங்களே? எப்போதும் கொஞ்சம் அடக்கி வாசிப்பீங்களே என்று யோசித்து, சிரித்து, ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு பின்நூட்டமும் படித்து முடித்த போது நான் சொல்ல விரும்புவது

இளையராஜா இசைக்கு ரசிகர்களாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேர்கள் அவரின் தனிப்பட்ட நடவடிக்கையைப் பற்றி தெரிந்ததும் வெறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகின்றார்கள். இளையராஜா என்பவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு மறுப்பதற்கில்லை. ஆனால் அவரும் அடுத்தடுத்த மாறிய காலகட்டத்தில் சாதாரணமானவராக மாறியதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததே இங்கே இது போன்ற விவாதங்களின் தொடக்கமாக உள்ளது.

நீண்ட நாளைக்குப் பிறகு பொறுமையாக படித்த பதிவு இது. வாழ்த்துகள்.

காரிகன் said...

சரவணன்,

எம் எஸ் வி காலத்தில் இரா இருந்திருந்தால் எம் எஸ் வி என்ன ஆகியிருப்பார் என்றால் இரா காலத்திலேயே ரஹ்மான் வந்திருந்தால் இரா என்ன ஆகியிருப்பாரோ அதுதான். உங்களின் புரிதலில் நேர்மை இல்லை.

நான் தமிழிசை என்று குறிப்பிட்டது தமிழ் திரை இசையை. இராவின் இசை முழுதும் இசை இருக்கும். கவிதை கூட இரண்டாம் மூன்றாம் பட்சம் தான். நீங்கள் உடனே ஹவ் டு நேம் இட் என்று இராவின் திரையிசை சாராத பரி"சோதனை" முயற்சிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள். என்னத்தைப் புரிந்துகொண்டீர்கள் என்று விளங்கவில்லை.

மேற்கத்திய கவுண்டர் பாய்ன்ட் எம் எஸ் வி இரவுக்கு முன்னரே மதன மாளிகையில் மந்திர மாலைகளா என்ற பாடலில் செய்துவிட்டார். jazz இசை எனப்படும் மேற்கத்திய பாணியை இராவிடம் கேட்கவே முடியாது. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? ராக் இசையின் வடிவமே இராவிடம் கிடையாது. எல்லாமே ஒரு வித மலிவான மேற்கத்திய பூச்சு கொண்ட தடாலடிப் பாடல்கள்தான். வெகு சில பாடல்களே தேறும். நான் பட்டியல் கொடுத்தால் அது ஒரு பதிவு அளவுக்கு நீளும்.

ஆஸ்கார் கிராமி என்பதெல்லாம் ரஹ்மான் வாங்கிய பின்னர்தான் இராவாசிகளுக்கே உறைக்கிறது. எங்க ஆள் எப்பவோ வாங்கியிருப்பார் என்று பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேலைக்காகாது. நிகழ்ந்ததை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அப்படியானால் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கே ஆஸ்கார் கிடைத்திருக்கலாம் என்று நான் சொல்வேன். விதாண்டவாத கருத்துக்கள் வேண்டாமே.

---(9) இன்னும் 25 வருடம் சென்றால் எம்.எஸ்.வி. என்றால் யார் என்று கேட்கும் நிலைமைதான் இருக்கும். காரணம் அவர் வேகமாக மறக்கப்பட்டு வருகிறார். என்பதே உண்மை---

நான் இந்த ஒரு கருத்திற்காகவே இந்தப் பின்னூட்டத்தை எழுத விரும்பினேன். நீங்கள் குறிப்பிடும் 25 வருடங்களில் இராவின் பெயர் இருக்குமா என்பது கேள்விக்குறி. எம் எஸ் வி யின் பாடல்கள் மறக்கப்பட்டுவிட்டால் அதற்கு தமிழ் பேசாத ஒரு சமூகம் இன்று தோன்றவேண்டும். அது நடைபெறும் சாத்தியமில்லை. அது எப்படி இராவாசிகள் இத்தனை வெறுப்பை எம் எஸ் வி போன்ற இசை ஜாம்பவான்கள் மீது உமிழ்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா என்றே சந்தேகம் வருகிறது. மிக மிக அபத்தமான மிக சல்லித்தனமான கருத்து.

சிம்பனி பற்றி நீங்கள் புதிதாக சொல்கிறீர்கள். பத்தோடு பதினொன்று என்று இதை வைத்துக்கொள்ளலாம். காசா பணமா?

இராவின் இசை உங்களை மயக்கியது என்பதால் அதுவே இந்த சமூகத்தின் அனுபவம் ஆகிவிடாது. இறுதியில் பாட்டுப் புத்தகத்தின் தேவை ஒழிந்தது பற்றி அமுதவன் கூறிய கருத்தின் கருவை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.

Amudhavan said...

சரவணன் said...
\\அவர் எம்.எஸ்.-இன் சமகாலத்தில் பணியாற்றியிருந்தால் எம்.எஸ். இன் இடம் என்னவாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.\\
அப்படித்தான் எண்ணிப்பார்த்தோம் சரவணன். ரொம்பவும் பயமாக இருக்கிறது. அப்படியே கொஞ்சம் முன்னால் போய் பீத்தோவன் காலத்தில் இ.ரா இருந்திருந்தால் பீத்தோவன் நிலை என்னவாகியிருக்கும்? மொசார்ட் காலத்தில் இ.ரா இருந்திருந்தால் மொசார்ட் நிலை என்னவாகியிருக்கும்? ஏன், கம்பர் காலத்திலும் திருவள்ளுவர் காலத்திலும் இ.ரா இருந்திருந்தால் அவர்களின் நிலை என்னவாகியிருக்கும்?

...........தமிழனை ஏன் எந்த மாநிலத்துக்காரனும், அல்லது எந்த நாட்டுக்காரனும் மதிக்கமாட்டேனென்கிறான் என்பதற்கு என்னுடைய நண்பர் அருமையான விளக்கம் சொல்லுவார். "பல பேர் புளுத்துப்போன சிந்தனைகளுடனேயே அலைந்து கொண்டிருக்கிறான்கள். நேரம் கிடைத்தால் அதனை உடனடியாக கடைவிரிக்கவும் செய்கிறான்கள். இதனைப் பார்க்கிறவர்கள் மொத்தத் தமிழனும் இப்படித்தான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் வரும் வினை இது" என்பார். உங்களுடைய அடுத்த கமெண்ட் இதனை நன்றாகவே மெய்ப்பிக்கிறது.
\\உருப்படியான முயற்சிகளை நீங்கள் (ரசிகர்கள்) முன்னெடுத்திருந்தால் இந்நேரம் இரா பாரத ரத்னா பெற்றிருப்பார் ஐயா! லதா மங்கேஷ்கரையும், அப்துல் கலாமையும் விட எந்த விதத்தில் இளையராஜா குறைந்துபோய்விட்டார்?\\
உங்களுடைய இந்தக் கமெண்ட்டிற்காகவே உங்களுக்கு பதிலெதுவும் சொல்லக்கூடாது. பதில் சொல்லும் தகுதியில் உங்கள் பின்னூட்டம் இல்லை என்று நினைத்தேன். காரிகன் இங்கே பதில் சொல்ல வந்துவிட்டதால் வேறு வழியின்றி நானும் சொல்லியிருக்கிறேன். ஐயா, உங்களுடைய சிந்தனைகள் இப்படித்தான் இருக்கும் என்றால் தாராளமாக அதனை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். இருபத்திநான்கு மணிநேரமும் இ.ரா பாடல்களைக் கேட்டுக்கொண்டு அதிலேயே மூழ்கிப்போய் முத்தெடுத்துக் கிடங்கள். உங்களை யாரும் கேட்கப்போவதில்லை. தயவு செய்து இந்தத் தளங்களுக்கெல்லாம் வந்து உங்கள் அற்புதமான பின்னூட்டங்களை எழுதி அசிங்கப்படுத்தாதீர்கள். நன்றி, வந்தனம்.



Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\இளையராஜா இசைக்கு ரசிகர்களாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேர்கள் அவரின் தனிப்பட்ட நடவடிக்கையைப் பற்றி தெரிந்ததும் வெறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகின்றார்கள். இளையராஜா என்பவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு மறுப்பதற்கில்லை. ஆனால் அவரும் அடுத்தடுத்த மாறிய காலகட்டத்தில் சாதாரணமானவராக மாறியதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததே இங்கே இது போன்ற விவாதங்களின் தொடக்கமாக உள்ளது.\\
வாங்க ஜோதிஜி, மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இதனைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஊரிலே ஆயிரம் விவகாரம் இருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு தினசரி நான்கைந்து தளங்களிலாவது இ.ரா பற்றிய பதிவுகளை விடாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் எல்லாமே கீறல் விழுந்த ஒரே ரிகார்ட். தவிர அறியாமையால் ஏகப்பட்ட பொய்ச்சரடுகள். இப்போது பொய்களைப் பற்றியெல்லாம் விவரித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் 'அவருக்கு இணையாக யாரும் வயலின் இசைத்திருக்கிறார்களா? மற்ற இசையமைப்பாளர்களுக்கு தபேலா என்றால் என்னவென்று தெரியுமா? இவர்தானே முதன்முதலில் சினிமாவில் பல்லவி, சரணம் என்றெல்லாம் ஆரம்பித்துவைத்தவர்' என்கிற ரீதியில் 'தகவல் சுரங்கங்களாக' இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன தெரியுமோ அவைதாம் தகவல்கள், தங்களுக்குப் பிடித்தவர் மட்டும்தான் உலகில் ஒரே சிறந்த நபர்' என்கிற மனப்பான்மை மட்டுமே இவர்களிடம் இருக்கிறது.

உங்களுடைய நுணுக்கமான பார்வைக்கு நன்றி.


Amudhavan said...

காரிகன் said...
\\இறுதியில் பாட்டுப் புத்தகத்தின் தேவை ஒழிந்தது பற்றி அமுதவன் கூறிய கருத்தின் கருவை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.\\
அவர் எதுவுமே புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களும் அவருக்குப் புரிபடுமா என்பதும் சந்தேகமே.


சரவணன் said...

**** தயவு செய்து இந்தத் தளங்களுக்கெல்லாம் வந்து உங்கள் அற்புதமான பின்னூட்டங்களை எழுதி அசிங்கப்படுத்தாதீர்கள். நன்றி, வந்தனம். *******

என் பின்னூட்டம் முட்டாள்தனமானது என்று நீங்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஏற்றுக்கொண்டிருப்பேன். ஏதோ எனக்குத் தெரிந்தது. யாரையும் அசிங்கப்படுத்தும் நோக்கம் இல்லை. இருந்தாலும் தளம் உங்களுடையது.. பின்னூட்டங்கள் பற்றி நீங்கள்தான் முடிவுசெய்ய முடியும். இனி பின்னூட்டம் எதுவும் எழுதவில்லை.

சரவணன்

vv9994013539@gmail.com said...

vaalthukal.

Post a Comment