Sunday, April 19, 2015

மணிரத்தினத்தின் செல்லுலாய்ட் கவிதை - ஓ, காதல் கண்மணி!


மணிரத்தினத்திற்கு கண்மணி என்ற வார்த்தையின் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு போலும். பல படங்களில் இந்த வார்த்தையைக் காதலின் மந்திரம்போல் பயன்படுத்தி வந்திருக்கிறார். ‘இருவர்’ படத்திலிருந்து இது தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ‘உன்னொடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண வேளையிலும் மறவாது கண்மணியே’ – என்ற வார்த்தைப் பிரயோகத்தை அழுத்தமாகவே வைரமுத்துவின் துணையுடன் அந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தார். இப்போது இந்தப் படத்தின் தலைப்பாக மட்டுமின்றி அவரது பேட்டிகளிலும் பாடல்களிலும் வசனங்களிலும் கண்மணி சுழன்று சுழன்று வருகிறது.

மணிரத்தினத்தின் அரசியல் தாக்கங்கள் பற்றித் தனியாக விவாதித்துக் கொள்வோம். அவர் தமது கருத்தாக என்ன சொல்லவருகிறார் என்பதுபற்றியும், சினிமா மீடியத்தைப் பயன்படுத்தி பல்வேறு முக்கியமான விஷயங்களில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது பற்றியும் ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. தமது படைப்புக்களின் மூலம் அவர் சொல்ல நினைக்கும் ‘அரசியல் சித்தாந்தங்களில்’ கண்டிப்பாக எனக்கும் ஒப்புதல் இல்லை. அதிலும் குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், இலங்கைப் பிரச்சினையிலும் தனிப்பட்ட ஏதாவது ஒரு குடும்பத்தையோ அல்லது தனிப்பட்ட ஒருவரையோ நிறுத்திவைத்து அவர்கள் இழப்பில் ஏற்படும் சோகங்களைக் கடைவிரித்துப் பெரிது படுத்தி அதனை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொதுப்புத்தியாக மடைமாற்றி அரசியல் பேசும் ‘வாதங்களை’ ஒப்புக்கொள்ள முடியாது.

பொதுத்தளத்தில் உருவாகும் ஒட்டுமொத்தக் கருத்திற்கு ஆதரவாக வேண்டுமானால் அதையொட்டிய தனிப்பட்டவர்களின் சோகங்களை, இழப்புக்களை அடையாளம் காட்டலாமே தவிர தனிப்பட்டவர்களின் சோகங்களை அடையாளப்படுத்தி பொதுத்தளத்தின் உணர்வுகளையே மட்டுப்போகச் செய்வது ஏற்புடையது அல்ல. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் இந்தவகை வாதங்களைத்தாம் ஊடகங்கள் பெரிதுபடுத்தி மக்கள் முன் வைத்து வருகின்றன.

இந்தவகையிலான வாதங்களை நாம் ஒப்புக்கொள்கிறோமா என்பது வேறு. ஒரு கலைஞனை அல்லது படைப்பாளரை எந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம், போற்றுகிறோம் அல்லது புறம் தள்ளுகிறோம் என்பது வேறு.

திரையுலகைப் பொறுத்தவரை மணிரத்தினம் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். அவரது படங்களில் இருக்கும் கலை நேர்த்தி சாதாரணமான ஒன்றல்ல. அற்புதமானதொரு கதை சொல்லி. 

பாடல்களை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் சரி, முழுமைப் பெற்ற பாடலாக திரையில் அவர் முன்வைக்கும் காட்சிகளும் சரி உயர்வான ரசனைகள் கொண்டவை.

படங்களில் அதிலும் குறிப்பாகப் பாடல்களில் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதன்முதலில் தமிழுக்குக் காட்டியவர் ஸ்ரீதர். ‘ஈஸ்தடிக் சென்ஸ்’ என்றால் என்னவென்பதைக் காட்சிகள் மூலம் அவர்தான் முதன்முதலில் தமிழுக்கு உணர்த்தினார். பாடல் காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமையும் தனித்தனியாகப் பிரதி எடுத்து வீட்டில் சட்டம் போட்டு மாட்டிவைத்துக்கொண்டால் தனிப்பட்ட ஓவியம் போன்று இருக்கும் என்பதுபோல் ஒரு புதிய அழகியல் வார்ப்படத்தைத் திரையில் செய்து காட்டியவர் அவர். (இவ்வகையிலான காட்சிகள் அவரது வெண்ணிற ஆடை படத்தின் ‘சித்திரமே சொல்லடி’ பாடலிலும் காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு படத்தின் பல பாடல்களிலும் காணலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களை நெஞ்சில் ஓர் ஆலயம், தேன்நிலவு, சுமைதாங்கி என்று பல படங்களில் பார்க்கமுடியும்) வின்சென்டையும் அவருடைய உதவியாளர்களையும் வைத்துக்கொண்டு பல படங்களின் பாடல் காட்சிகளை உயிரோவியங்களாக வடித்துவைத்தவர் அவர்.

(“அவரைப் போல ஒரு பாடல் காட்சியாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய படங்களில் முயன்று பார்க்கிறேன். முழுமையாக வெற்றி பெற்றதாகச் சொல்லமுடியாது. ஆனால் நெஞ்சிருக்கும்வரை படத்தில் ‘முத்துக்களோ கண்கள்’ அந்தவகையில் நான் முயன்று பார்த்த பாடலாகச் சொல்லலாம். ஏனெனில் அதனைக் காட்சிப்படுத்திய வகையில் எனக்கு நிறைய சுதந்திரம் அளித்தார் ஸ்ரீதர். ஆனால் அவர் துணையுடன் செய்த பாடலாகத்தான் அதனையும் சொல்லமுடியும்” என்று ஒருமுறைச் சொன்னார் அவரது ஒன்றுவிட்ட தம்பியும் பிரபல இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன்.)

ஒரு படத்தைக் காட்சி காட்சியாக செதுக்கித்தரும் விற்பன்னர்களில் தமிழில் ஸ்ரீதருக்குப் பிறகு உடனடியாக யாரும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக இந்த வரிசையில் பார்த்தோமென்றால் ஸ்ரீதருக்குப் பின் வந்த இயக்குநர்களில் பாடல் காட்சிகளை ‘அழகுபடுத்திய’ முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்தினம்.

ஒரு நல்ல இயக்குநரை வெறும் ஒரு கதைசொல்லியாகவும், மெசேஜ் சொல்லும் ஒருவராகவும் மட்டுமே பார்க்கத் தொடங்கினால் சமுதாயத்திற்கான முதல் சிறந்த இயக்குநராக பராசக்தி படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சுவையும், அதற்குப் பிறகு கே.எஸ். கோபால கிருஷ்ணனையும், மல்லியம் ராஜகோபாலையும் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

சினிமா என்றாலேயே ‘காட்சி அழகு’ என்பதைத் திரையில் காட்டிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு அடுத்தபடி மணிரத்தினம்தான். பாடலின் அழகு, பூக்களையும் கதாநாயகியையும் அழகாகக் காட்டுவது மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதை சொல்லும்போது அந்த உணர்வுக்கான சூழலைத் திரையில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அதற்கான தாக்கங்களைக் காட்சிகள் வாயிலாகவும், நடிகர்களின் அசைவுகள், பாடல்கள் வாயிலாகவும், அதன் வரிகள், இசை வாயிலாகவும் பார்ப்பவனிடம் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு இருக்கிறது. இதனை அழகியல் பூர்வமாகச் சித்தரிக்கும் கலையும் திறமையும் எல்லா இயக்குநர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. இந்தித் திரைப்படங்களில் இதனைப் பிரமாதமாகச் செய்தவர்களாக இயக்குநர்கள் சாந்தாராமையும், ராஜ்கபூரையும் சொல்வார்கள். தமிழில் ஸ்ரீதரையும் மணிரத்தினத்தையும்தாம் சொல்லவேண்டும்.

ஸ்ரீதர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறவராக மணிரத்தினம் இருக்கிறார்.
மணிரத்தினத்தின் அழகியல் வெளிப்பாடுகள் வெளிநாட்டுச் செவ்வியலைச் சார்ந்ததாக இருக்கிறது.

வெளிநாட்டுப் படங்களின் செவ்வியல் அழகுகளை  அப்படியே ஒத்தியெடுத்த மாதிரி பல காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்க முடியும்.

வெளிநாட்டுப் படங்களில் இருப்பதுபோலவே தன்னுடைய படங்களிலும் அதே அழகுகளைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு நல்ல படைப்பாளி அத்தனை எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது. இத்தகைய எண்ணம் ஒரு ஒளிப்பதிவாளருக்கு எழலாம். எடிட்டருக்கு எழலாம். இசையமைப்பாளருக்கு எழலாம்.

வெளிநாடுகளில் சுற்றிப்பார்க்கச் செல்லும் பிரதமர் அங்கு தன்னை வியக்கவைத்த கட்டிடத்தையோ, நினைவுச் சின்னத்தையோ, பாலத்தையோ, ஏர்ப்போர்ட்டையோ- ஏதோ ஒன்றைத் தன்னுடைய நாட்டிற்கும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைப்பதை நாம் பாராட்டுகிறோமா இல்லையா?

அதனையே ஒரு கலைஞன் செய்யும்போது ‘அவன் காப்பியடிச்சுட்டான்’ என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் அவர் மீது வைக்கிறவர்களாக இருக்கிறோம்.

இந்த ஃபார்முலா தமது அதீதமான சொந்தத் திறமைகளை நிரூபித்துப் பின்னர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற அளவில் செயல்படும் திறமை மிகுந்த கலைஞர்களுக்குத்தாம் பொருந்துமே அல்லாமல், ஒவ்வொரு படத்திற்கும் தமக்கான அத்தனை சரக்குகளையும் கூசாமல் வெளிநாட்டுப் படங்களிலிருந்து உருவிக்கொண்டு வந்து கல்லாக்கட்டும் பேர்வழிகளுக்கெல்லாம் பொருந்தாது.

எத்தனைக் கலையழகுடன் தங்களுடைய படங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் ஒரு இயக்குநருக்கான அடையாளங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சொல்லவந்த ‘சேதிகளையும்’ தாண்டி அவர்களை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த அழகுகள் அவர்களின் பெயர் சொல்லும்.

மணிரத்தினம் படங்களில் பல்வேறு காட்சிகளிலும் காட்சித்தொகுப்புகளிலும் இந்த அழகுகளைக் காணலாம். குறிப்பாக பாடல் காட்சிகளை முத்துச்சரங்கள் போல் கோர்த்துத்தருகிறவர்களில் கை தேர்ந்தவர் மணிரத்தினம். இதனை அவருடைய முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’யிலிருந்தே(கன்னடம்) பார்க்கலாம்.

எல்லாம் சரி; ஆனால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இணைய சமுதாயம் மணிரத்தினத்தை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு விகடனில் வந்திருக்கும் மணிரத்தினத்தின் பேட்டிக்கான பின்னூட்டங்கள் சாட்சி.

இந்த வார விகடனில் மணிரத்தினத்தின் பேட்டி வந்திருக்கிறது.

அதே இதழில் இளையராஜாவின் பேட்டியும் வந்திருக்கிறது.

இளையராஜா ஜெயகாந்தனைப் பற்றிப் பேட்டியளித்திருக்கிறார்.

மணிரத்தினம் பொதுவாக அவரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். இங்கே பின்னூட்டம் இட வந்தவர்கள் அச்சுபிச்சுவென்று எத்தனைப் பொறுப்பற்று கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நேர்ந்தாலே இந்தச் சமூகம் என்ன காரணத்திற்காக ஒருவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்பதும் இன்னொருவரை என்ன காரணத்திற்காக மூர்க்கமாக முட்டித்தள்ளத் தயாராக இருக்கிறது என்பதும் புரிபடமாட்டேன் என்கிறது.

மணிரத்தினம் பேட்டிக்கு வந்திருக்கும் கருத்துக்களில் ஒரு சில;
1) 
  ‘God Father கதையை, காட்சிகளை பகல் நிலவு, நாயகன், சத்ரியன், அக்னி நட்சத்திரம் என பலமுறை கையாண்டவர். இப்போது தன் அலைபாயுதேவை மீண்டும் தழுவுகிறார்- வறட்சி’
2) 
  ‘இன்றைய ட்ரெண்டில் பாரதிராஜா, விக்கிரமன், பாசில், எழில், சசி, உதயகுமார், வசந்த், கே.எஸ்.ரவிகுமார், ஆகியோர் ஹிட் கொடுப்பது கடினம். இந்தப் படம் பிளாப் ஆனால் இந்த லிஸ்டில் இவரும் வருவார்’
3)   
‘இவர் copy paste king ஆச்சே. கதை சுடுறதுக்கு சொல்லியா தரணும்?’
4) 
  ‘நீங்க என்ன சொன்னாலும் உங்க படம் ஓடாது’
5) 
  ‘ஒவ்வொரு படத்துக்கும் ஓவரா பில்டப்பும் பீட்டரும் விடறீங்க. ஆனா படம் ஓட மாட்டேங்குது’
6) 
  ‘இவர் படத்தைத் தமிழர்கள் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது’
   
7) ‘தளபதி- பார்ட்-2? மூலக்கதை, திரைக்கதை, வசனம் மறுபடி வியாசரா?’
-இவை மணிரத்தினத்தின் பேட்டிக்கான சில பின்னூட்டக் கருத்துக்கள். இனி இளையராஜாவின் பேட்டிக்கான பின்னூட்டக் கருத்துக்களைப் பார்ப்போம்.

1) ‘இருவரும் தமிழின் இரண்டு கண்கள். அவர்களைப் பற்றி நாமே அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்’

2) ‘தமிழன்னையின் இரு செல்லக் குழந்தைகள். ஒன்று மற்றொன்றை உயர்த்துகிறது. அதனால் அதுவும் உயர்வு பெறுகிறது.’

3) ‘ஒரு சஹாப்தம் இன்னொரு சஹாப்தத்தை நினைவு கூர்கிறது’

4) ‘பெருமைக்குரிய ஒரு தமிழனைப் பற்றி பெருமைக்குரிய இன்னொரு தமிழன்’
-இவை இளையராஜா பேட்டிக்கு போடப்பட்டிருக்கும் கருத்துப் பின்னூட்டங்கள். இந்த இணைய சமூகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே புரிபடவில்லை. இந்த வித்தியாசங்களை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு இப்போது ‘ஓ காதல் கண்மணி’க்கு வருவோம்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வந்திருக்கிறது. குறிப்பாக மணிரத்தினத்தின் சில தொடர் தோல்விகள் அவரை முடக்கிப்போட்டிருக்கும் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். 
அந்தச் சோர்வும் முடக்கமும் துளிக்கூடத் தோன்றாவண்ணம் இளமைத்துள்ளலுடன் ஒரு படத்தை தைரியமாகத் தரமுடிவதற்கு அவருடைய கலை மேதைமையே காரணம்.

அவருடைய இலக்கு இன்றைய இளைய சமுதாயம். அவர்களைப் பற்றிய படத்தை அவர்களுக்காகவே எடுத்திருப்பதுபோல் அவர்களையே குறிவைத்து அடித்திருக்கிறார் மணிரத்தினம்.

அவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள், வாழ்க்கையை அணுகும் முறைகள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிச் செல்கிறார்.

லிவிங் டுகெதர் என்று வாழ ஆரம்பிக்கும் ஒரு ஜோடி தங்களுக்கான அன்றாடச் சிக்கல்கள் வரும்போது அதனை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதையும் தாங்கள் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்திற்கு எந்த அளவு உதவியாயிருக்கிறார்கள் என்பதையும் அழகுபடச் சொல்கிறார்.

காதல் கண்மணி படத்தில் என்ன சொல்லவருகிறார் என்பதை மேற்கண்ட விகடன் பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “மில்லினியம் ஆரம்பிச்சப்ப இளைஞர்கள் ரெபெல் ஆனாங்க. ஒரு குட்டிப் புரட்சிக்காரன் மாதிரி. ஆனா அந்தப் புரட்சியெல்லாம் அவங்க அப்பா அம்மா குடும்பத்துக்கு எதிரா மட்டுமே இருந்தது. படிப்பு, வேலை, கல்யாணம்னு எல்லாமே குடும்பம் சொல்றதுக்கு எதிரா செய்யணும்னு தீர்மானவா இருந்தவங்களைப் பிரதிபலிச்சவர் ‘அலைபாயுதே’ மாதவன்.

இப்போ குடும்பத்தை மட்டும் எதிர்க்கலை. எல்லாருக்கும் எதிரா எல்லா விஷயங்களுக்கும் எதிரா புரட்சி பண்றாங்க.’நான் இப்படித்தான். என்னை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது’ன்னு தன் செல்ஃபைத் தக்கவச்சுக்கற முயற்சி. செல்ஃபி தலைமுறை. சமூகத்தின் so called சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படக்கூடாதுங்கற ஒரே அஜெண்டா மட்டும்தான் அவங்களுக்கு. அவங்க வாழ்க்கையில் காதலுக்கு என்ன ரோல்? அதை மட்டும் படத்தில் பேசியிருக்கோம்” என்கிறார்.

மிக மிகக் கவனமாக கத்தி மேல் நடக்க வேண்டிய கதை.

காட்சிச் சித்தரிப்புகள் பல இடங்களில் ‘இது ரொம்பவும் ஓவரோ’ என்று தோன்றவைக்கிறது. 

நண்பனின் திருமண வைபவத்தின்போது சர்ச்சில் ஒரே வரிசையில் உட்கார்ந்துகொண்டு படத்தின் நாயகனும் நாயகியும் செல்போன் நம்பரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கேயே செல்போனில் காதல் தொடங்குவதெல்லாம் டுபாக்கூர் கற்பனை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் எந்த சர்ச்சிலும் அப்படியெல்லாம் பூஜை நேரத்தில் பேசிக்கொண்டிருக்க அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் விட்டுவிட மாட்டார்கள். எழுந்து வெளியே போ என்று விரட்டிவிடுவார்கள். படத்தில் சின்ன முகச்சுழிப்புடன் அக்கம்பக்கதிலிருப்பவர்கள் ஸ்ரீராமுக்கு குளோசப்பில் முகத்தைக் காண்பிக்க காதலர்கள் பாட்டுக்குத் தங்கள் காதலை ஆரம்பித்துத் தொடர்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான வேண்டாத விஷயங்கள் சொற்பம்தான்.

மும்பையும், மும்பைத் தெருக்களும், மின்சார ரயில்களும் மழையும் படத்தின் போக்கை 
முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. ஸ்ரீராம் தமது பங்கிற்கு அழகியலைச் சேர்த்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் தம்முடைய எல்லாப் பாடல்களையுமே சர்வதேச மோஸ்தரில்தான் போட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார் போல. எல்லாப் பாடல்களுமே சம்பிரதாய வடிவங்களிலிருந்து விலகிச்சென்றுதான் ஒலிக்கின்றன. அத்தனை இரைச்சல்களுக்கு மத்தியிலும் கொஞ்சூண்டு இசையையும் சேர்க்கிறார் என்பதுதான் ஒரே ஆறுதல். அரேபிய கஜல் பாணியில் அமீன் பாடும் பாடலும் மனதில் உட்கார்ந்துகொள்கிறது. ‘மலர்கள் கேட்டேன் வனத்தினைத் தந்தனை’ நம்முடைய பாணிக்கு ஏற்றதாக இருப்பதால் படத்தில் இன்னமும் முழுமையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவைக்கிறது.

கதாநாயகனும் கதாநாயகியும் முகத்தோடு முகம் வைத்து உரசிக்கொண்டிருப்பதும், ஒரு முகத்திற்கும் அடுத்த முகத்திற்கும் அங்குலம்கூட இடைவெளி இல்லாமல் இருப்பதும், முத்தமிட்டுக்கொள்வதும்தாம் மொத்தப் படத்தின் முக்கால்வாசி ஃப்ரேம்கள்.

இப்படி லிவிங் டுகெதரில் இருக்கும் காதல் ஜோடிகள் எத்தனை விரைவில் ஆஸ்பத்திரியின் கைனகாலஜி செக்ஷனுக்குப் போய் நிற்க நேரிடும் என்றும் அங்கே இருக்கும் சூழலைப் பார்த்து ஏற்படும் பதைபதைப்பும், அடிவயிற்றில் கவ்வுகின்ற பயத்தையும் பாசாங்குகள் எதுவும் இல்லாமல் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்!
துல்கர் சல்மான் என்ற மம்முட்டி மகன் கதாநாயகனாக ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தமிழில் வலம்வர முடியுமா என்பதை இன்னமும் இரண்டொரு படங்கள் ஆனபிறகுதான் சொல்லமுடியும்.

கதாநாயகி நித்யா மேனன். பல இடங்களில் கொள்ளை அழகு. நடிப்பில் பல இடங்களில் கதாநாயகனையும் தாண்டி ஸ்கோர் பண்ணுகிறார். சில இடங்களில் காஜல் அகர்வாலையும் சில அசைவுகளில் மீனாவையும் நினைவு படுத்துகிறார். நித்யா மேனன் ஒரு பெரிய ‘ரவுண்டு’ வருவார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

ஒரு இளம் காதல் ஜோடி. அல்லது ஒரு இளம் கண்மணி ஜோடி……………. இவர்களுடன் இவர்களுக்கு இடம் தரும் வயதான பிரகாஷ்ராஜ், லீலா தாம்சன் ஜோடி. இவர்கள் இருவருக்குமான கணவன் மனைவி உறவு, பந்தம் பாசம் பிணைப்பு அத்தனையும் உறுத்தல் இல்லாமல் சொல்லப்படுகிறது. 

அத்தனை வயதிலும் ஒருவருக்கொருவர் எந்த அளவு பாசத்தால் பிணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ஒரு இணை ஜோடி சேர்வது என்பது வெறும் செக்சுக்காக மட்டுமே இல்லை என்பதையும் எந்தவிதக் குறியீடுகளும் வசனங்களும் இல்லாமல் அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.


ஒரு சாதாரண ஒற்றை வரி சம்பவத்தை இருபது நிமிட பரபரப்புடன் கூடிய கிளைமாக்ஸாக மாற்றுவதற்கு மணிரத்தினம் போன்ற தேர்ந்த இயக்குநர்களால் மட்டுமே முடியும். லிவிங்டுகெதர் என்ற, இளைய தலைமுறையை வசீகரிக்கும் ஒரு மாயச்சுழல் மேல் இயல்பான தமது பார்வையை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மணிரத்தினம்.

36 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய "புதுப் புது அர்த்தங்கள்...!"

Amudhavan said...

வாருங்கள் தனபாலன், தங்கள் கருத்திற்கு நன்றி.

காரிகன் said...

உயிரே படம் வரை தொடர்ந்து படங்கள் பார்த்த நான் அதன் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் பார்த்த படங்கள் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -2000-- கன்னத்தில் முத்தமிட்டால் --2002--நண்பன்--2012--. மற்ற எல்லாமே டிவியில் அல்லது பென் டிரைவ் மூலம்தான். நம் ஆட்கள் எடுக்கும் படங்களுக்கு இதுவே அதிகம் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதற்காக ஹாலிவுட் படங்கள் மட்டும் தான் பார்ப்பேன் என்ற க்ரீமி லேயர் சிந்தனை எனக்குக் கிடையாது. இன்செப்ஷன், டார்க் நைட் ரைசெஸ், கிராவிட்டி, இண்டெர்ஸ்டெல்லர் போன்ற படங்களையே நான் தியேட்டரில் பார்த்ததில்லை.

நண்பனுக்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து நான் பார்த்த படம் ஒ காதல் கண்மணி--2015.அதற்கு ஒரே ஒரு காரணம்தான். மணிரத்னம். வேறு யாருமில்லை. குரு, ஆயுத எழுத்து, ராவண், கடல் போன்ற மணிரத்தினத்தின் படங்களைத் துறந்து திடீரென காதல் கண்மணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்றால் ..அது எனக்கே தெரியவில்லை.. எதோ தோன்றியது மணி மீண்டும் மீண்டு வந்துவிட்டார் என்று. எனவே பார்த்தேன்.

படத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் புத்திசாலிகளின் பின் நவீனத்துவ வாரத்தை ஜாலங்களோடு மணியை பிய்த்து எறிகின்றன. பாவம் கன்னத்தில் முத்தமிட்டால், ராவண், கடல், ஆய்த எழுத்து படங்களை கொடுத்தபோதும் அவரை தூக்கிப் பந்தாடினார்கள். (தற்போது கன்னத்தில் முத்தமிட்டால் கிளாசிக் என்று பாராட்டுகிறார்கள்.) இப்போது ஒரு breeze movie மிக அழகாக பார்பவர்களை பரவசப்படுத்தும் விதத்தில் தான் இன்னும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று இளமையாக நிரூபித்திருக்கிறார் மணி . இத்தனை துள்ளலாக இளமை பொங்கிவழியும் live- the- moment வகை படத்தை இன்றைய இளைஞர்கள் கூட கொடுக்கமுடியாது. மணிரத்னத்தின் வசீகரம் குறையவில்லை. live in relationship என்ற கலாச்சார அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இதை எதிர்ப்பது இயல்பானதுதான்.

சிகரெட், குடிகார நண்பர்கள், குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த காமடி, போன்ற இன்றைய தமிழ்ப் படங்களுக்கு அத்தியாவசியமான அம்சங்கள் எதுவுமில்லாத ஒரு "சாதாரண" படம். பார்க்கும் கூட்டம் இந்தப் படத்தை கொண்டாடுகிறது. இதற்கு மேலே எழுதினால் ஒரு சினிமா விமர்சனம் போல ஆகிவிடும்.

காரிகன் said...

அமுதவன் சார்,

நீங்கள் இதுபோல சினிமா விமர்சனம் எழுதி நான் படிப்பது இதுதான் முதல் முறை. நான் படத்தைப் பார்த்ததும் சொல்ல நினைத்த பல கருத்துக்களை உங்கள் பதிவில் படிக்க முடிகிறது. அந்த மணிரத்னம்-இளையராஜா பின்னூட்டங்கள் பற்றி பேச விருப்பம். அதை பிறகு எழுதுகிறேன். நேர்த்தியான கட்டுரை. ஒரு சிறிய திருத்தம் பிரகாஷ் ராஜ் மனைவியாக நடித்தது லீலா சாம்சன். தாம்சன் அல்ல. அவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

Jayadev Das said...

\\
அதிலும் குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், இலங்கைப் பிரச்சினையிலும் தனிப்பட்ட ஏதாவது ஒரு குடும்பத்தையோ அல்லது தனிப்பட்ட ஒருவரையோ நிறுத்திவைத்து அவர்கள் இழப்பில் ஏற்படும் சோகங்களைக் கடைவிரித்துப் பெரிது படுத்தி அதனை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொதுப்புத்தியாக மடைமாற்றி அரசியல் பேசும் ‘வாதங்களை’ ஒப்புக்கொள்ள முடியாது. \\

அவரு என்ன வேணும்னா சார் செஞ்சாரு? அவரு பாத்த நெறைய இங்கிலீஷ் சி.டி யில ரெண்டு கதையை எடுத்தாரு, ஒன்னு காஷ்மீர் பிரச்சினைக்கும், இன்னொன்னு இலங்கைப் பிரச்சினைக்கும் மேட்ச் ஆச்சு, படத்தை முடிச்சிட்டாரு.

Jayadev Das said...


\\ ஆக இந்த வரிசையில் பார்த்தோமென்றால் ஸ்ரீதருக்குப் பின் வந்த இயக்குநர்களில் பாடல் காட்சிகளை ‘அழகுபடுத்திய’ முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்தினம். \\ ஸ்ரீதர் பாவம்.

\\அதனையே ஒரு கலைஞன் செய்யும்போது ‘அவன் காப்பியடிச்சுட்டான்’ என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் அவர் மீது வைக்கிறவர்களாக இருக்கிறோம். \\ மற்றவரைப் பார்த்து கற்றுக் கொண்டு பின்னர் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தவது வேறு, ஈயடிச்சான் காப்பியடித்து ஆங்கிலப் படங்களை பார்க்க முடியாதவர்களுக்கு அவர்கள் மொழியில் படமெடுத்துக் காண்பிப்பது வேறு. மணிரத்னம் செய்தது இரண்டாவது.

Jayadev Das said...


\\மணிரத்தினம் பேட்டிக்கு வந்திருக்கும் கருத்துக்களில் \\எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

\\இளையராஜா பேட்டிக்கு போடப்பட்டிருக்கும் கருத்துப் பின்னூட்டங்கள். \\ யாரோ முக்காடு போட்டுக் கொண்டு கருத்து போட்டுட்டு போயிடறாங்க, இடி வாங்குவது இளையராஜாவின் பெயரே!!

\\கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்!\\ படம் பூரா எல்லா அபத்தத்தையும் பண்ணிட்டு, கடைசியில் இது மாதிரி செய்யாதீகன்னு அறிவுரை சொல்றது, அதானே??!!

வருண் said...

மணிரத்னம் தன் தனிப்பட்ட வாழக்கையில், கவனமாக ஒரு பார்ப்பனரை அரேஞிட் மேரேஜ் பண்ணிக்குவார். ஜெயகாந்தன் தன்னுடைய கசினை கல்யாணம் செய்துகொள்வார். ஆனா சினிமாலையும், கதை களிலும் இவங்க ரெண்டு பேரும் அட அட அட!

படிக்காதவங்க. கூலித் தொழிலாளிகள், சிறு வயதிலேயே வியாபரம்னு இறங்கியவர்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கை, அதில் காட்டும் காதல் எல்லாம் ஏதோ சொர்க்கம்போலவும் அவர்கள் வாழ்க்கை என்னவோ வீணாப் போன ஒண்ணுனு நினைத்துக்கொண்டு பேசுவார்கள்.

அதேபோல்தான் இந்த லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது. இதுக்கும் கல்யாணம் பண்ணி வாழ்றதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உறவில் உள்ள இருவருக்கும் சட்ட திட்டங்கள் உண்டு,எல்லைகள் உண்டு. அது கணவன் மனைவிக்கு இடையிலுள்ள அதே அளவுக்கு உண்டு.

ஆனால் அறியாமையில் வாழும் ஜனங்கள், ஏதோ லிவ்-இன் ரிலேஷன்ஷிப்னா நாகரீகவாழக்கை என்பதுபோல் ஒரு பிரமை. லிவ்-இன் டுகெதெர் வாழ்ந்து அதன் பிறகு கல்யாணம் செய்து, ஒருவரை ஒருவர் வெறுத்து டைவோர்ஸ் எய்வதும் அதிக விழுக்காடுகள்தான்.
பார்த்து, பழகி, படுத்துப்பார்த்து தெரிவு செய்த ஆம்படையானும் பொம்மனாட்டியும் காலங்காலமாக சேர்ந்து வாழ்வதாக வரலாறும் இல்லை அப்படி எதுவும் நடக்கப் போவதும் இல்லை.

ஆண்-பெண் உறவென்றாலே, இனிமையாக ஆரம்பித்து பிறகு சாதாரணமாக ஆகி,பிறகு ஒருத்தை ஒருத்தர் வெறுப்பதுபோல் போறதுதான். லிவ்-இன் கல்ச்சல் இந்த ஆண்-பெண் உறவை மாற்றப் போவதில்லை.எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

ஒருபக்கம் மணிரத்னம் சுகாசினி போல அரைவேக்காடுகள் லிவ் -ன் ரெல்ச்ஷன்ஷிப்னா சொர்க்க வாழக்கை என்பதுபோலவும், இன்னொருபக்கம் கலாச்சாரக் காவலர்கள் அது தப்பு என்பதும் செம காமெடி. :))

Amudhavan said...

வாங்க காரிகன், ரொம்பவும் நிதானமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இப்போதெல்லாம் படங்கள் பார்ப்பதில்லை. தொடர்பில் இருக்கும் வேண்டியவர்கள், நெருங்கியவர்கள் அல்லது நண்பர்கள் இப்படி யாராவது சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் மட்டுமே பார்க்கிறேன். பார்க்கின்ற படங்களுக்கெல்லாம் விமரிசனமும் எழுதுவதில்லை. ஏனெனில் திரைப்படங்களுக்கான விமரிசனங்களை இப்போது ஆரவாரப்படுத்திக்கொண்டிருக்கும் சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களுக்கெல்லாம் முன்பே நானும் அகிலன் கண்ணனும் கணையாழியிலும் மற்ற இதழ்களிலும் எழுதியிருக்கிறோம். அந்தச் சமயங்களில் பாலகுமாரனும் சில படங்களுக்கு விமரிசனங்கள் எழுதினார் என்று ஞாபகம். தவிர, இப்போதெல்லாம் நிறையப்பேர் இணையத்திலேயே விமரிசனங்கள் எழுதுகிறார்கள். அவற்றில் ஒரு சிலர் நன்றாகவே எழுதுகிறார்கள்.
எந்தப் படமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் ரசிக மகா ஜனங்களும் குறைந்தபிற்பாடுதான் படங்களுக்குப் போகப் பிடிக்கும். எப்படியும் திங்கட்கிழமைக்குப் பிறகுதான் படங்களுக்குப் போவது. அதற்குள் எல்லா வகையான விமரிசனங்களும் வந்து ஒரு வழி ஆகியிருக்கும். எனவே விமரிசனங்கள் எழுதுவதில்லை. இந்தப் படத்தைக் கோயம்புத்தூரின் முக்கியஸ்தர்களில் ஒருவர் பெங்களூர் வந்திருந்ததனால் மணிரத்தினத்திற்காகப் பார்க்கப்போகலாம் என்று இரண்டாவது காட்சிக்கே கூட்டிச்சென்றார். வெறும் விமரிசனமாக இல்லாமல் சொல்லவந்த விஷயத்தைச் சொல்லப்புகும்போது அதற்குத் தொடர்புடைய என்னென்ன விஷயங்கள் உள்ளனவோ அவற்றையும் சேர்த்துச் சொல்லும் என்னுடைய பாணிக்கேற்ப இந்த விமரிசனத்தை எழுத நேர்ந்தது.
\\இத்தனை துள்ளலாக இளமை பொங்கிவழியும் live- the- moment வகை படத்தை இன்றைய இளைஞர்கள் கூட கொடுக்கமுடியாது. மணிரத்னத்தின் வசீகரம் குறையவில்லை.\\
உங்களுடைய இந்தக் கருத்து முக்கியமான ஒன்று.

Amudhavan said...

காரிகன் said...
\\அந்த மணிரத்னம்-இளையராஜா பின்னூட்டங்கள் பற்றி பேச விருப்பம். அதை பிறகு எழுதுகிறேன்.\\
எழுதுங்கள்..... ஏனெனில் இது என்ன மனப்பான்மை என்றே எனக்குப் புரியவில்லை. மிகவும் வினோதமாகத் தோன்றிற்று. அதனால்தான் அதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

Amudhavan said...

Jayadev Das said...
\\மணிரத்தினம் பேட்டிக்கு வந்திருக்கும் கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை\\

உங்கள் அபிப்பிராயத்தில் உறுதியாய் இருப்பது உங்கள் விருப்பம்.

\\இளையராஜா பேட்டிக்கு போடப்பட்டிருக்கும் கருத்துப் பின்னூட்டங்கள். \\ யாரோ முக்காடு போட்டுக் கொண்டு கருத்து போட்டுட்டு போயிடறாங்க, இடி வாங்குவது இளையராஜாவின் பெயரே!!\\

அப்படியா, யார் அது முக்காடு போட்டுக்கொண்டு வருவது? எதற்காக முக்காடு போடுகிறார்கள்? முக்காடு போட்டுக்கொண்டு கருத்துப் பதிவிடுவதன் காரணம் யாது? விளக்கினீர்கள் என்றால் அனாவசியப் புதிர்களிலிருந்து விடுபடுவேன்.





Amudhavan said...

Jayadev Das said...
\\கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்!\\ படம் பூரா எல்லா அபத்தத்தையும் பண்ணிட்டு, கடைசியில் இது மாதிரி செய்யாதீகன்னு அறிவுரை சொல்றது, அதானே??!!

இல்லை. நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்ட ஒரு காட்சியைப் பற்றித்தான், அந்தக் காட்சிக்காகத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன். நீங்கள் ஒட்டுமொத்த படத்தின் கிளைமாக்ஸிற்குச் சொன்னதாக நினைத்துவிட்டிருக்கிறீர்கள். இதோ அந்தப் பாரா உங்களுக்காக.....
\\இப்படி லிவிங் டுகெதரில் இருக்கும் காதல் ஜோடிகள் எத்தனை விரைவில் ஆஸ்பத்திரியின் கைனகாலஜி செக்ஷனுக்குப் போய் நிற்க நேரிடும் என்றும் அங்கே இருக்கும் சூழலைப் பார்த்து ஏற்படும் பதைபதைப்பும், அடிவயிற்றில் கவ்வுகின்ற பயத்தையும் பாசாங்குகள் எதுவும் இல்லாமல் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்!\\


Amudhavan said...

வருண் said...
\\ஒருபக்கம் மணிரத்னம் சுகாசினி போல அரைவேக்காடுகள் லிவ் -ன் ரெல்ச்ஷன்ஷிப்னா சொர்க்க வாழக்கை என்பதுபோலவும், இன்னொருபக்கம் கலாச்சாரக் காவலர்கள் அது தப்பு என்பதும் செம காமெடி. :))\\

லிவ்இன் ரிலேஷன் ஷிப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடு உண்டு.
மணிரத்தினமும் சுகாசினியும் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பை சொர்க்க வாழ்க்கை என்று சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியாது. (அந்த ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் ஜோடிகள் அப்படி நினைக்கிறார்கள் என்ற பிம்பத்தை வேண்டுமானால் அவர்களின் கோணத்தில் படம் சொல்லியிருக்கலாம்) அம்மாதிரியான சேதியை இந்தப் படமும் தரவில்லை. மணிரத்தினமும் எங்கேயும் சொல்லவில்லை. யதார்தத்தைப் பிரதிபலிக்க முயன்றிருப்பதாகத்தான் மணிரத்தினம் சொல்லியிருக்கிறார்.



சார்லஸ் said...

அமுதவன் சார்

///இந்த வார விகடனில் மணிரத்தினத்தின் பேட்டி வந்திருக்கிறது. அதே இதழில் இளையராஜாவின் பேட்டியும் வந்திருக்கிறது. இளையராஜா ஜெயகாந்தனைப் பற்றிப் பேட்டியளித்திருக்கிறார். மணிரத்தினம் பொதுவாக அவரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். இங்கே பின்னூட்டம் இட வந்தவர்கள் அச்சுபிச்சுவென்று எத்தனைப் பொறுப்பற்று கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நேர்ந்தாலே இந்தச் சமூகம் என்ன காரணத்திற்காக ஒருவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்பதும் இன்னொருவரை என்ன காரணத்திற்காக மூர்க்கமாக முட்டித்தள்ளத் தயாராக இருக்கிறது என்பதும் புரிபடமாட்டேன் என்கிறது? ///


இந்தக் கேள்வி உங்களுக்கும் பொருந்தும் . என்ன காரணத்திற்காக நீங்கள் இளையராஜாவை கடுமையாகச் சாடுகிறீர்கள் ?

என்ன காரணத்திற்க்காக ரகுமானை கொண்டாடுகிறீர்கள் ?

இளையராஜாவை பற்றிய உங்களின் பொறுப்பற்ற கருத்துக்களை வாசிக்கும்போது அதன் பின்புலம் புரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுங்களேன் !



காரிகன் said...

அமுதவன் சார்,

இங்கே இணையத்தில் நிறைய புனித பசுக்கள் இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த்,இளையராஜா, ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் இதில் அடக்கம். அதே சமயம் எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், டி ராஜேந்தர், விஜய், ரஹ்மான், மணிரத்னம், கமலஹாசன் போன்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.

மணிரத்னத்தை கடுமையாக விமர்சிக்கும் கும்பல் நீ எண்ணத பெருசா கிழிச்சுட்ட என்ற எண்ணம் கொண்டது. பார் இவனையே நான் எப்புடி கலாய்க்கிறேன் பாரு என்ற ஒரு நிமிட ஆணவம் இதன் திருப்தி. இரா என்றால் எல்லா புலன்களும் அடங்கிப் போய் வாய் மூடி காவடி தூக்கவேண்டும் என்ற விதி போலிருக்கிறது. இரா ஜெயகாந்தனை பாராட்டுவதில் பெரிய மர்ம முடிச்சு ஒன்றும் இல்லை. இருவரும் ஒரே படகில் சவாரி செய்பவர்கள். இராவை கண்மூடித்தனமாக பாராட்டுவதும் மணி ரத்னத்தை காலில் போட்டு மிதிப்பதும் ஒரே சிந்தனையின் வெளிப்பாடுதான். அதைச் சொன்னால் வேறு இடத்திற்கு பின்னூட்டங்கள் செல்லும். எனவே வேண்டாம். இப்போதே சால்ஸ் முழுவதும் பதிவைப் படிக்காமலே வெறும் இரா பெயரை வைத்துக்கொண்டு சிலம்பாட்டம் ஆடுகிறார் பாருங்கள்.

Arul Jeeva said...

அமுதவன் அவர்களே தாங்கள் சிறந்த பதிவாளர் என்பது குறித்து மகிழ்ச்சியே .நிறைய பதிவுகளைத் தாங்கள் எழுதியுள்ளபோதும் சில பதிவுகளையே என்னால் படிக்க நேர்ந்தது .(சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றியது ,பெண்கள் விரும்பும் பாடல்கள் ,மணிரத்தினத்தின் செல்லூலாய்டு கவிதை )நான் படித்த சில பதிவுகளில் தாங்கள் சொல்ல வந்த கருத்தை தாண்டி இளையராஜா என்ற தனிமனிதனை சாடுவதாகவே உள்ளது.உண்மையும்கூட .இதைவிடுத்து தாங்கள் எடுத்துக்கொண்ட கருத்தை தெளிவாக அலசிஆராய்வது இணைய நண்பர்களுக்கு உபயோகமாக இருக்குமென்பது எனது அபிப்பிராயம் .யோசித்து செயல்படுங்கள் .

Amudhavan said...

சார்லஸ் said...
\\இந்தக் கேள்வி உங்களுக்கும் பொருந்தும் . என்ன காரணத்திற்காக நீங்கள் இளையராஜாவை கடுமையாகச் சாடுகிறீர்கள் ? என்ன காரணத்திற்க்காக ரகுமானை கொண்டாடுகிறீர்கள் ? இளையராஜாவை பற்றிய உங்களின் பொறுப்பற்ற கருத்துக்களை வாசிக்கும்போது அதன் பின்புலம் புரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுங்களேன் !\\

வாங்க சார்லஸ், திரும்பத் திரும்ப வாதத்தை ஒரே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தும் கைங்கரியத்தைத் திறமையாகவே செய்துவருகிறீர்கள். இந்தப் பதிவில்கூட பிரதானமாக நான் பல விஷயங்களைப் பேசியிருக்கிறேன். இங்கே பின்னூட்டத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கிறவர்களும் அவை பற்றித்தான் அதிகமாகக் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரிவதெல்லாம் இ.ரா ஒருவர்தான். அவரைத் தாண்டி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேறு எந்தப் பக்கமும் எந்தவித உலகங்களும் இல்லை உங்களுக்கு.
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அது தொடர்பான பல விஷயங்கள் ஊடாக வரும்போது அவை பற்றியும் பேசிச் செல்வது என்னுடைய எழுத்துப் பாணி. அந்த வகையில்தான் விகடனில் மணிரத்தினத்தின் பேட்டி வெளிவந்திருக்கிறது. விகடன் டாட் காமில் அவை பற்றிய கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதனைப் பார்வையிட்டேன். அதே இதழில் இ.ரா பேட்டியும் வந்திருக்கிறது. அது பற்றிய கருத்துக்களும் அதே விகடன் டாட்.காமில் வந்திருக்கிறது.அதனையும் பார்வையிட்டேன். இரண்டு பேருமே சினிமாத்துறை சார்ந்த கலைஞர்கள். அவர்களைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்வதில் எதற்கு இத்தனை வேறுபாடுகள்?
அதிலும் ஒருவரைப் பற்றிப் பேசும்போது 'தமிழன்னையின் குழந்தை, பெருமைக்குரிய சகாப்தம், கண்கள்' என்று இன்னமும் என்னென்னமோ அடைமொழிகள் போட்டு எழுதுவதும், இன்னொருவரைக் காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு எழுதுவதும் எதனால்? என்ற யோசனைகள் வரவே கூடாதா என்ன?- அதனைப் பேசாமல் சுட்டிக்காட்டியிருக்கிறேனே தவிர என்னுடைய கருத்தாகவோ பதிலாகவோகூட எதையுமே சொல்லவில்லையே. என்னுடைய நோக்கம் சில நடுநிலையாளர்கள் முன்பு இவற்றை வைப்பது.......... அந்த நோக்கத்திற்கான பதில்கள் அற்புதமாக வந்துகொண்டிருக்கின்றன. 'ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இத்தனை நாட்கள் நாங்கள் இதனை இந்தக் கோணத்தில் பார்க்கவே இல்லை. மணியின் பதில்களைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோகூட கருத்தைச் சொல்லாமல் அவரைப் பற்றிய காழ்ப்புணர்வும், அதே போல இ.ரா சொல்லியிருக்கும் கருத்துக்கள் பற்றி ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாமல் அவரை மட்டுமே புகழ்ந்துரைத்தும் எழுதியிருக்கிறார்களே என்ன நடக்கிறது?' என்று- என்று படித்துவிட்டுக் கேட்கிறார்கள் பாருங்கள்....... இதுதான் நான் எதிர்பார்த்தது!

Amudhavan said...

சார்லஸ் said...
\\என்ன காரணத்திற்காக நீங்கள் இளையராஜாவை கடுமையாகச் சாடுகிறீர்கள் ? என்ன காரணத்திற்க்காக ரகுமானை கொண்டாடுகிறீர்கள் ? இளையராஜாவை பற்றிய உங்களின் பொறுப்பற்ற கருத்துக்களை வாசிக்கும்போது அதன் பின்புலம் புரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுங்களேன் !\\

என்னுடைய பதிவுகள் நெடுகிலும் பலமுறை சொல்லிவிட்டேன். நான் எந்த இடத்திலும் இளையராஜாவைச் சாடவே இல்லை. அவர் நடந்துகொள்ளும் விதம்பற்றிச் சில இடங்களில் சொல்லியிருக்கலாமே தவிர அவருக்கு இசை தெரியாது என்றோ, அவர் இசையமைப்பாளரே இல்லையென்றோ எங்காவது சொல்லியிருக்கிறேனா? விஸ்வநாதனுக்குப் பிறகுவந்த நல்ல இசையமைப்பாளர் அவர் என்பதும், ஒரு பத்தாண்டுகளுக்கு அவர் அசைக்கமுடியாத இடத்தில் இருந்தார் என்பதிலும், பல நல்ல பாடல்களை அவர் தந்திருக்கிறார் என்பதிலும் எனக்கு எப்போதுமே மாற்றுக்கருத்துக்கள் எவையும் இருந்ததே இல்லை.
நான் எதிர்ப்பதெல்லாம் 'அவர் மட்டுமே, அவர் ஒருவர்தான், அவருக்கு இணை இங்கே யாருமில்லை- இங்கே மட்டுமில்லை எங்கேயுமே யாருமில்லை' என்று அபரிமிதமாக அவருக்குக் கற்பிக்கப்படும் பிம்பங்களைத்தாம்.
அவர் வந்தபிறகுதான் தமிழ்ப் பாடல்கள் கிராமங்களுக்குச் சென்றன, பட்டிதொட்டியெல்லாம் தமிழ்ப் பாடல்களை எடுத்துச் சென்றவர் அவர்தான். பாடலுக்குப் பல்லவி அமைத்தவர் அவர்தான், சரணம் கண்டுபிடித்தவர் அவர்தான், பின்னணி இசையை..... அதுதாங்க இண்டர்லூட்...அதனைக் கண்டுபிடித்துத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். சிம்பொனி இசையமைத்தவர் அவர்தான்'- என்பதுபோன்று இன்னமும் என்னென்னமோ கதை அளந்து விடுகிறார்களே அவற்றைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறேன். இ.ரா ரசிகர்கள் தாங்கள் இதுநாள்வரை கொண்டிருந்த நம்பிக்கைகள் தகர்வதுபோல் தோன்றியதும், என்மீது, நான் இ.ராவை எதிர்க்கிறேன், சாடுகிறேன் என்பதாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றுகிறது.... நான் என்ன செய்யட்டும்?
தவிர, நான் எங்கேயும் ரகுமானை பொய்களும் புனைசுருட்டுகளுமாகத் தூக்கிவைத்துக் கொண்டாடியதும் கிடையாது. அதற்கான தேவையும் இல்லை.
ஆனால் அவரை இ.ரா ரசிகர்கள் 'ஒன்றுமே இல்லை' என்று சொல்லும்போது 'இல்லை அவர் உயரம் வேறு. ரகுமான் 'உம்' என்று ஒரு வார்த்தைச் சொன்னால் மில்லியன் கணக்கில் டாலர்களாகக் கொட்டிக்கொடுக்க பல வெளிநாட்டுத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர் எத்தனைக் கோடிகள் கேட்டாலும் தந்து அவரை ஒப்பந்தம் செய்ய இங்கேயும் பலபேர் வரிசையில் நிற்கிறார்கள். இன்றைய வணிக உலகின் நிலை இது என்பதும்( அவருக்கு எத்தனைக் கோடி கொடுத்தால் எனக்கென்ன? நான் அவரை ஒரு மியூசிக் டைரக்டராக ஏற்றுக்கொண்டதே இல்லை- என தட்டச்சு செய்ய பல கைகள் தயாராக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் திரையுலக வணிகம் என்பதும் யதார்த்தம் என்பதும் உங்களைத் தாண்டிய உலகம் என்பதும் வேறு.) அவர் ஆஸ்காரும், கிராமி அவார்டுகளும் வென்றவர் என்பதையும்தான் சொல்கிறேன். மற்றபடி அவரை 'இல்லாத ஒன்றை'ச் சொல்லி எங்கேயும் புகழ்ந்து போற்றுதல் செய்யவே இல்லையே!
மேலேயுள்ள பதிவில்கூட இப்படித்தானே எழுதியிருக்கிறேன்.
\\ஏ.ஆர்.ரகுமான் தம்முடைய எல்லாப் பாடல்களையுமே சர்வதேச மோஸ்தரில்தான் போட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார் போல. எல்லாப் பாடல்களுமே சம்பிரதாய வடிவங்களிலிருந்து விலகிச்சென்றுதான் ஒலிக்கின்றன. அத்தனை இரைச்சல்களுக்கு மத்தியிலும் கொஞ்சூண்டு இசையையும் சேர்க்கிறார் என்பதுதான் ஒரே ஆறுதல்.\\
இதுதான் நான் மேலே ரகுமான் பற்றி எழுதியிருப்பது. இது விமரிசனத்துடன் கூடிய கருத்தா, அல்லது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இ.ரா பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றனவே அந்தவகை போற்றிப் பாடும் புகழ் மோஸ்தரா?
திரும்பவும் சொல்கிறேன். ரகுமான் பற்றிய அதீதப் புகழுரைகள் என்னிடம் இல்லை. ஆனால் இ.ரா ரசிகர்கள் ரகுமான் என்ற பெயரைக் கேட்டாலேயே ரகுமான் மீதான விமரிசனங்களைத் தாண்டி எதற்காகவோ பயப்படுகிறார்கள் என்பதுமட்டும் உங்களின் இதுபோன்ற பதில்களிலிருந்து புரிகிறது.



வருண் said...

***காரிகன் said... அமுதவன் சார், இங்கே இணையத்தில் நிறைய புனித பசுக்கள் இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த்,இளையராஜா, ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் இதில் அடக்கம். அதே சமயம் எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், டி ராஜேந்தர், விஜய், ரஹ்மான், மணிரத்னம், கமலஹாசன் போன்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.***

காரிகன் அவர்களே!

நீங்கள் "பார்க்கும்" இணையத்தில்னு வேணா சொல்லலாம். இணையம் என்னும் கடலில் நீங்க கவனிப்பது ஒரு சில விடயங்களைத்தான். ஏன் நானும் அப்படித்தான். உங்க பார்வையில் இதுதான் தெரியுது.

அதிஷா விமர்சனம் எப்போதுமே சர்காஸ்டிக்காகவும் மிகவும் நெகடிவாகவும்தான் இருக்கும். ஏன் கொம்பனுக்கு எழுதிய 8 பாயிண்ட்சும் அப்படித்தான். அதேதான் "கண்மணி"க்கும் நடந்தது. That' how he writes review.


கொம்பன் விமர்சனம் எழுதும்போது உங்களுக்கு வலிக்கவில்லை. Because you just dont care! You might not even had a look at it. ஆனால் "கண்மணி"க்கு அதே அர்ச்சனை நடக்கும்போது பொங்கி எழுதுறீங்க, பாவம். படத்தை விமர்சிச்சவன் தரத்தை விமர்சிக்கும் அளவுக்குப் போயிட்டீங்கனா பார்த்துக் கோங்களேன்.

We all have prejudice. We all judge.. though we should no be judging. We all have weaknesses. We all get emotional when someone, who you admire for, is seriously criticized. We go to a level to criticize the"critic" personally. Please note: I am not saying "You". I am saying "We"!

Amudhavan said...

\\தாங்கள் சொல்ல வந்த கருத்தை தாண்டி இளையராஜா என்ற தனிமனிதனை சாடுவதாகவே உள்ளது.உண்மையும்கூட .இதைவிடுத்து தாங்கள் எடுத்துக்கொண்ட கருத்தை தெளிவாக அலசிஆராய்வது இணைய நண்பர்களுக்கு உபயோகமாக இருக்குமென்பது எனது அபிப்பிராயம் .யோசித்து செயல்படுங்கள் .\\

அருள் ஜீவா, மேலே சார்லஸூக்கு எழுதியுள்ள பதிலில் உங்களுக்கான பதிலும் இருக்கிறது. மேலும் 'எடுத்துக்கொண்ட கருத்தைத் தெளிவாக அலசி ஆராய்வது' என்று சொல்கிறீர்கள் பாருங்கள்... அங்கேதான் இ.ரா பற்றிய கருத்துக்களும் வருகின்றன. தெளிவாக அலசி ஆராயாமல் வெறுமனே மணிரத்தினம் படம் பற்றி மட்டுமே சொல்லிச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்கப்போவதில்லை. எல்லாவற்றைப் பற்றியும் 'தெளிவாக அலசி ஆராய்ந்ததால்தான்' இதுபற்றியும் பேச நேர்ந்திருக்கிறது.
இணையத்தில் தேவையே இல்லாமல் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே ஒரு கூட்டம் புகழ்ந்து தள்ளிக்கொண்டே இருந்தால் அதனைக் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களே.......... நியாயம்தானா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

Amudhavan said...

காரிகன் said
\\மணிரத்னத்தை கடுமையாக விமர்சிக்கும் கும்பல் நீ எண்ணத பெருசா கிழிச்சுட்ட என்ற எண்ணம் கொண்டது. பார் இவனையே நான் எப்புடி கலாய்க்கிறேன் பாரு என்ற ஒரு நிமிட ஆணவம் இதன் திருப்தி. இரா என்றால் எல்லா புலன்களும் அடங்கிப் போய் வாய் மூடி காவடி தூக்கவேண்டும் என்ற விதி போலிருக்கிறது.\\

மணிரத்தினத்தைக் கடுமையாக விமர்சிக்கும் கும்பல் 'நீ என்னத்த பெரிசா கிழிச்சுட்ட? என்ற எண்ணம் கொண்டது. பார் இவனையே நான் எப்படிக் கலாய்க்கிறேன் பாரு என்ற ஒரு நிமிட ஆணவம் இதன் திருப்தி' இது ஒரு அற்புதமான படப்பிடிப்பு. இதையேதான் அவர்கள் சிவாஜி உட்பட பலர் விஷயத்திலும் செய்கிறார்கள். இதனைச் சொன்னதும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பதில் 'நீ இ.ரா விஷயத்தில் இதைத்தானே செய்கிறாய்' என்பது. இந்தவகை பதிலை இணைய தளத்தில் பின்னூட்டங்கள் எழுதுவதில் புகழ்பெற்றவர் என்று கருதப்பட்ட வவ்வால்கூட வேறு வழி இல்லாமல் என்னுடைய சிவாஜி பற்றிய கட்டுரைக்கு வைத்திருந்தார்.
ஆனால் இ.ரா விஷயத்தில் நாம் தெள்ளத் தெளிவாக நம்முடைய விமரிசனத்தையும் கருத்துக்களையும் நியாயமான முறையில் வைத்துத்தான் மேலே செல்லுகிறோம் என்பதை இவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். அல்லது வேறு பதில் அவர்களிடமில்லை.

\\இராவை கண்மூடித்தனமாக பாராட்டுவதும் மணி ரத்னத்தை காலில் போட்டு மிதிப்பதும் ஒரே சிந்தனையின் வெளிப்பாடுதான்.\\

நான் அந்த இரண்டு பேரின் கட்டுரைகளுக்கு மறுமொழியாக வந்திருந்த கமெண்டுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதற்கான நோக்கமும் இதுவே தான்.
அல்லது இதற்கான சரியான பதிலை இ.ரா ரசிகர்கள் சொல்லவேண்டியதுதானே.





Anonymous said...

Amudavan sir.. I don't like watching Maniratnam films after breakup with Ilayaraaja.The songs of Ilayaraaja-Mani combination are superb and eternal.I have hardly seen only two movies in Rahman-Mani combine i.e., Roja & Alaipayudhey. I almost stopped seeing Mani's movies. Because of your film review, I will see this film.

சார்லஸ் said...

சார்

விகடனில் கீழ்க்கண்ட செய்திகளும் உண்டு.

எழுத்தாளர் வண்ணதாசன் சொன்னது - ' இளையராஜா வருகைக்குப் பின் இளையராஜா என்ற பெயரை இந்தத் தலைமுறையினர் தங்கள் குழந்தைகளுக்கு இட்டது போல , ஜெயகாந்தனின் பிரவேசத்துக்குப் பின் அல்லவா , போன தலைமுறைப் பெற்றோர்கள் அந்தப் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு இட்டார்கள் . '

ஜெயகாந்தனைப் பற்றிய நினைவலைகளில் இளையராஜாவின் பெயர் உச்சரிக்கப்படுவது தற்செயலானது , மற்றும் உண்மையான செய்தியும் கூட! உங்களைப் போன்றோரால் அது மிகைச் செய்தியாக பார்க்கப்படும்.
உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளரே ராஜா பற்றிச் சொல்கிறார் என்றால் சாதாரண ஒரு விமர்சகனின் பார்வையில் ராஜாவின் கட்டுரை பற்றிய ‘ஒரு சஹாப்தம் இன்னொரு சஹாப்தத்தை நினைவு கூர்கிறது’
என்ற கருத்துரை எந்த விதத்தில் மிகையானது ? மிகவும் சரியானதுதானே! ராஜாவும் ஜே.கே யும் அவரவர் துறையில் சகாப்தங்கள்தானே!


ஹனீபா பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்டது - ' ஹனீபா மேலவை உறுப்பினராக இருந்தபோது எம்.எல்.ஏ விடுதியில் தங்கினார். அறைக் கதவு தட்டப்பட்டது . திறந்தால் ஒல்லியான தேகத்தில் ஓர் இளைஞர் , "என் பெயர் ராஜா. பாவலர் சகோதரர்கள் என்ற பெயரில் இசைக்குழு நடத்தி வருகிறேன் . உங்கள் பாடல்களுக்கு இசை அமைக்க விரும்புகிறேன் " என்றார். மறுநாள் வந்து பார்க்கச் சொன்னார் ஹனீபா. அவரின் பாடலுக்கு இசையமைத்தார் அந்த இளைஞர். அது இசைத் தட்டில் பதிவாகி தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ...எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு..சலாம் சொல்லு ' என்ற அந்தப் பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா . அதுதான் ராஜாவின் முதல் பாடல். '

இங்கே ஹனீபா பற்றிய நினைவலைகளில் இளையராஜா பற்றிய செய்தியின் அவசியம் என்ன? ஏனென்றால் இளையராஜா தமிழ்த் திரையிசையின் தவிர்க்க முடியாத அடையாளம் . ராஜாவின் இசையில் பின்னர் பாடியுமிருக்கிறார் .
65 வருடமாக பலவிதமான பாடல்கள் பாடிய ஹனீபா ஒரு சகாப்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இளையராஜாவும் சகாப்தம் இல்லையா?

/// நான் எதிர்ப்பதெல்லாம் 'அவர் மட்டுமே, அவர் ஒருவர்தான், அவருக்கு இணை இங்கே யாருமில்லை- இங்கே மட்டுமில்லை எங்கேயுமே யாருமில்லை' என்று அபரிமிதமாக அவருக்குக் கற்பிக்கப்படும் பிம்பங்களைத்தாம்.///

மேற்குறிப்பிட்டுள்ள உங்களின் கருத்து மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு சில இசை ஞானங்களில் படைப்புகளில் அவர் செய்ததை யாரும் செய்யவில்லை என்பது உண்மைதான் ! எல்லாமே அவரால்தான் என்று யாரும் இணையத்தில் சொல்லியிருக்கவில்லை.

காரிகன் said...

வருண்,

இணையம் மிகப் பெரியது. நீங்கள் சொல்வதுபோல நான் பார்த்தவரையில் என் கண்ணில் அகப்பட்ட புனித பசுக்கள் பற்றியே சொல்லியிருக்கிறேன். நான் எல்லாவற்றையும் கரைத்து குடித்தவன் என்று சொல்லிக்கொள்வதில்லை. அது ஒரு செயற்கையான பிரமிப்பு.ஆனால் எதுவெல்லாம் தெரியுமோ அதன் ஆழங்கள் வரை செல்பவன்- முடிந்தவரை.

------கொம்பன் விமர்சனம் எழுதும்போது உங்களுக்கு வலிக்கவில்லை. Because you just dont care! You might not even had a look at it. ஆனால் "கண்மணி"க்கு அதே அர்ச்சனை நடக்கும்போது பொங்கி எழுதுறீங்க, -------

அது அப்படியல்ல. அவருடைய கொம்பன் விமர்சனமும் படித்தேன். ஆனால் பதில் எழுதவில்லை.காரணம் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. நான் எல்லா படங்களையும் பார்ப்பது இல்லை. அதிலும் கொம்பன், விருமாண்டி,பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம், நன்பேண்டா வகைப் படங்களை நான் பார்க்க விரும்புவதே இல்லை. எனவே அதற்கு என்னால் பதில் எழுத முடியாது போயிற்று. மேலும் அவர் எழுதும் எல்லாவற்றிக்கும் நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தும் கொம்பன் விமர்சனத்தில் அவர் இறுதியாக விஜய் பற்றி நக்கலாக குறிப்பிட்டு எழுதியிருந்த பாய்ண்டை வைத்து பதில் எழுத நினைத்தேன். உடனே நீ விஜய் ரசிகன் என்று குதிப்பார்கள் என்று விட்டுவிட்டேன். காதல் கண்மணி படம் நான் பார்த்ததினால் அதிஷா மட்டுமல்ல, இங்கே, மற்றும் இரண்டு மூன்று இடங்களில் என் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.அதில் ஒன்று கருந்தேள் ராஜேஷ் என்பவற்றின் தளம். படத்தை கடுமையாக அவர் சாடியிருந்தாலும் அவர் விமர்சனம் தரமாக இருந்தது.

http://karundhel.com/2015/04/o-kadhal-kanmani-2015-tamil.html#comment-10396

As for your points on prejudices and how judgemental we are sometimes... no words of protest. Agreed.

Amudhavan said...

Anonymous said...

\\ I don't like watching Maniratnam films after breakup with Ilayaraaja.The songs of Ilayaraaja-Mani combination are superb and eternal.I have hardly seen only two movies in Rahman-Mani combine i.e., Roja & Alaipayudhey. I almost stopped seeing Mani's movies. Because of your film review, I will see this film.\\

ஒரு வேடிக்கைப் பாருங்கள் அனானிமஸ், எனக்கு தயாளன் என்றொரு நண்பர் இருந்தார். அவர் ஆரம்ப காலத்திலிருந்தே இளையராஜா இசையமைத்த படங்கள் என்றால் பார்க்கவே மாட்டார். டிஎம்எஸ், சுசீலா போன்றவர்களை இ.ரா ஓரம் கட்டினார் என்பதால் இ.ராமீது கோபமான கோபம் அவருக்கு. டி.ஆர்.மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழிக்குப் பிறகு திரையில் ஒலிக்கவந்த ஒரேயொரு ஆண்குரல் அவருடையது. அதிலும் மற்றவர்களால் காட்ட முடியாத பாவங்களையெல்லாம் குரலில் கொண்டுவந்தவர் டிஎம்எஸ். அவரைப்போய் இந்த ஆளு ஓரங்கட்டுகிறாரே என்ற தீராத கோபம் அவரிடமிருந்தது. மேலும் எஸ். ஜானகியை அவருக்குப் பிடிக்காது. 'என்னப்பா இந்த ஆளு சுசீலாவை ஓரம்கட்டப் பார்க்கிறாரு. இந்தப் பொம்பளை ஜானகியைக் கொண்டுவந்து புகுத்தி அந்தப் பொம்பள தெளிவில்லாம கீச்சுக்கீச்சுன்னு கத்துது. அந்தக் குரலையே மறைக்கிற மாதிரி(ஓவர்லாப்பெல்லாம் அவருக்குத் தெரியாத வார்த்தைகள்) அந்த வார்த்தைக்கு மேல என்னத்தையோ மியூசிக்கைப் போட்டு....... இதெல்லாம் என்ன பாட்டு? நாங்கள்ளாம் வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டே எங்களை வளர்த்துக்கிட்டவங்க" என்பார். மணிரத்தினத்தின் படங்கள் தூள் கிளப்பிக்கொண்டிருந்தபோது 'இந்த மணிரத்தினம் என்னமோ நல்ல படங்களை எல்லாம் எடுக்கிறாராமேப்பா' என்று கேட்பார். அவரை வற்புறுத்தி சிந்துபைரவிக்குக் கூட்டிச் சென்றது ஞாபகம் இருக்கிறது.
மணிரத்தினத்திற்கும் இ.ராவிற்கும் தகராறு வந்து அதன் காரணமாக அவர் ரகுமானை அறிமுகப்படுத்திப் படம் எடுத்தபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் படம் பார்த்துவந்து ரோஜாவைப் பாராட்டிக்கொண்டிருந்தார்.
நீங்கள் மேலே எழுதியிருப்பதைப் படித்ததும் இந்த நண்பருடைய ஞாபகம்தான் வந்தது. அந்தக் காலத்திலிருந்தே மணிரத்தினத்திற்குப் பாவம், இரண்டு பக்கமும் இடிதான் போலும்.
என்னுடைய பதிவு படித்துவிட்டு அதற்காகவே ஓ காதல் கண்மணி படம் பார்க்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தோஷம்.

Amudhavan said...

சார்லஸ் said...
\\விகடனில் கீழ்க்கண்ட செய்திகளும் உண்டு.\\
சார்லஸ் முதலில் எந்த விஷயத்திற்கும் சப்ஜெக்ட் என்னவோ அதற்குள்ளிருந்து பேசப் பழகுங்கள். யார் எந்த விஷயம் பேசினாலும் அங்கே இ.ராவை எப்படியாவது கொண்டுவந்து நுழைத்து அதுபற்றியே பேச விழைகிறீர்கள். மற்றவர்களும் அவர் பற்றியே பேசவேண்டும் என்றும் நினைக்கிறீர்கள். இங்கு நீங்கள் கேட்ட கேள்விக்குக் குறிப்பாக ரகுமான் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியிருந்தேன். அதுபற்றி உங்களிடமிருந்து ஒரு வார்த்தைக்கூட இல்லை.
-"அவரை இ.ரா ரசிகர்கள் 'ஒன்றுமே இல்லை' என்று சொல்லும்போது 'இல்லை அவர் உயரம் வேறு. ரகுமான் 'உம்' என்று ஒரு வார்த்தைச் சொன்னால் மில்லியன் கணக்கில் டாலர்களாகக் கொட்டிக்கொடுக்க பல வெளிநாட்டுத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர் எத்தனைக் கோடிகள் கேட்டாலும் தந்து அவரை ஒப்பந்தம் செய்ய இங்கேயும் பலபேர் வரிசையில் நிற்கிறார்கள். இன்றைய வணிக உலகின் நிலை இது என்பதும்( அவருக்கு எத்தனைக் கோடி கொடுத்தால் எனக்கென்ன? நான் அவரை ஒரு மியூசிக் டைரக்டராக ஏற்றுக்கொண்டதே இல்லை- என தட்டச்சு செய்ய பல கைகள் தயாராக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் திரையுலக வணிகம் என்பதும் யதார்த்தம் என்பதும் உங்களைத் தாண்டிய உலகம் என்பதும் வேறு.) அவர் ஆஸ்காரும், கிராமி அவார்டுகளும் வென்றவர் என்பதையும்தான் சொல்கிறேன். மற்றபடி அவரை 'இல்லாத ஒன்றை'ச் சொல்லி எங்கேயும் புகழ்ந்து போற்றுதல் செய்யவே இல்லையே!"- என்றெல்லாம் சொல்லியிருந்தேன். அதுபற்றியெல்லாம் பேசாமல் விகடனில் இ.ரா பற்றி எத்தனை இடத்தில் வந்திருக்கிறது என்பதை எண்ணிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
யார் என்ன பேசினாலும், அல்லது நீங்களே வேறு ஏதாவது கேட்டு நான் அதற்கு பதில் சொன்னாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரேயடியாக ஜம்ப் அடித்து இ.ரா என்ற பாறை மீது போயமர்ந்து அங்கிருந்து வழுக்கிவிழும் வேலையை மட்டுமே தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.







Amudhavan said...

சார்லஸ் said...
\\அவரின் பாடலுக்கு இசையமைத்தார் அந்த இளைஞர். அது இசைத் தட்டில் பதிவாகி தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ...எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு..சலாம் சொல்லு ' என்ற அந்தப் பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா . அதுதான் ராஜாவின் முதல் பாடல். '\\
'- உங்களுக்குத் தெரிவதெல்லாம் இ.ரா ஒருவர்தான். அவரைத் தாண்டி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேறு எந்தப் பக்கமும் எந்தவித உலகங்களும் இல்லை உங்களுக்கு.' - நான் ஏற்கெனவே சொல்லியிருக்கும் இதனையே திரும்பத் திரும்ப மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாகூர் ஹனிபாவைப் பற்றி இங்கே எதற்கு? தவிர 'இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை' என்ற பாடலையும் அழைக்கின்றார் அண்ணா போன்ற பாடல்களையும்தான் நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் பாடலை நான் கேட்டதில்லை. இருக்கட்டும். அப்படியே இருந்தாலும் நாகூர் ஹனிபாவால் இ.ராவுக்குத்தான் பெருமையே தவிர, இ.ராவால் நாகூர் ஹனிபாவுக்குப் பெருமை இல்லை. தவிர அண்ணா, கலைஞர், திமுக மற்றும் அவரது ஆளுமை மிக்க கணீரென்ற குரல்தான் ஹனிபாவின் அடையாளங்களே தவிர, விஸ்வநாதன், சுதர்சனம், இளையராஜா, அனிருத்தெல்லாம் அவரது அடையாளங்கள் அல்ல.
\\இளையராஜா தமிழ்த் திரையிசையின் தவிர்க்க முடியாத அடையாளம் .\\
இந்த ஒரு வார்த்தையையும் தவறாமல் தூக்கிச் சுமந்துகொண்டு வந்துவிடுகிறீர்கள். இந்த உலகம் மிகப் பெரியது. நாம் வாழ்ந்துவரும் சமூகமும் மிகப்பெரியது. தங்கள் அடையாளத்தை வழங்கிச் சென்றிருக்கும் சாதனையாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். அன்றும் இருந்தார்கள். இந்நாள் சாதனையாளர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
நான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். தமிழ்த்திரை இசையின் நிரந்தர அடையாளங்களாக இங்கே வியத்தகு சாதனையாளர்கள் இருந்திருக்கின்றனர். எம்கேடி காலத்திலிருந்து தமிழ்த்திரை இசை தொடங்குகிறது என்று வைத்துக்கொண்டால்- எம்கேடி, பி.யூ.சின்னப்பா,பாபநாசம் சிவன், எஸ்விவெங்கட்ராமன், ஜி.ராமநாதன், எஸ்எம்எஸ், கேவிஎம்,சுதர்சனம், ஏ.எம்.ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி, விஸ்வநாதன், பட்டுக்கோட்டை, கவியரசர், மருதகாசி, சுரதா, டிஎம்எஸ், பி.சுசீலா, சந்திரபாபு, டி.ஆர்.மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி, பிபிஎஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்,வைரமுத்து, வித்யாசாகர் என்று நிறையப்பேரை அடையாளங்களாகக் கொள்வதைத் தவிர்க்கமுடியாது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். இதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. இல்லவே இல்லை.





சார்லஸ் said...

அமுதவன் சார்

மணிரத்தினத்தையும் அவரது படத்தைப் பற்றியும் பேச வந்த நீங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இளையராஜாவை இழுத்து வந்தீர்கள் . இந்தப் பதிவில் ராஜா பற்றிய விமர்சனம் தேவையில்லாத ஒன்றுதான் . அதனால்தான் நானும் விகடனில் சொல்லப்பட்ட செய்தியை கொண்டு வந்தேன் . அதுவும் உங்கள் பதிவில் உள்ள வார்த்தைகளிலிருந்துதான் விளக்கமும் கொடுத்தேன் . நான் செய்தால் தேவையில்லாதது என்கிறீர்கள். நீங்கள் செய்திருப்பது தேவையான செய்திதானா என்பதையும் கொஞ்சம் யோசிக்கலாமே !

Amudhavan said...

சார்லஸ் said...
\\மணிரத்தினத்தையும் அவரது படத்தைப் பற்றியும் பேச வந்த நீங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இளையராஜாவை இழுத்து வந்தீர்கள் .\\
சார்லஸ், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசும்படிச் செய்கிறீர்கள். நான் ஒன்றும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இ.ராவை இங்கே இழுத்துவரவில்லை. விகடனில் இரண்டு கலைஞர்களைப் பற்றிய பேட்டி வந்திருக்கிறது. மணிரத்தினத்துடையது ஒன்று; இளையராஜாவுடையது மற்றொன்று. இரண்டைப் பற்றியும் இணைய வாசகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு பேரைப் பற்றியுமே முன்முடிவுடன் கூடிய கருத்துக்கள். அதில் மணிரத்தினத்திற்கான பேட்டிக்கு எப்படி ரியாக்ட் செய்திருக்கிறார்கள், இ.ரா பற்றிய பேட்டிக்கு எப்படி ரியாக்ட் செய்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது ஒருவருக்கு 'மட்டும்' இணைய சமூகம் என்ன மாதிரியான லைசென்ஸ் கொடுத்து 'பாவித்து' வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன், அவ்வளவே!
இந்த ஒரு சுட்டிக்காட்டுதல் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களுக்குமான இணைய சமூகத்தின் அணுகுமுறையை எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதனை இ.ரா ரசிகர்கள் தவிர மற்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.



Anonymous said...

Amudavan sir.. Very Thanks for your reply. Really I pity of your friend Mr. Dayalan, since he stopped seeing movies of Ilayaraaja music. I think almost for a decade your friend would not have seen a single movie, since the 80s were ruled by Raaja sir. All best/good movies were coming with Ilayaraaja's signature. Atleast now he should watch those movies. Secondly, the reason for stopping Mani's movies by me after breakup with Ilayaraaja is that truly the films were no worth to watch, except those two films. Thank you sir.

Amudhavan said...

Anonymous said...
\\Amudavan sir.. Very Thanks for your reply. Really I pity of your friend Mr. Dayalan, since he stopped seeing movies of Ilayaraaja music. I think almost for a decade your friend would not have seen a single movie, since the 80s were ruled by Raaja \\
தங்களின் மீள் வருகைக்கு நன்றி அனானி. ஆனாலும் நீங்களோ நானோ பரிதாபப்படும் அளவிலெல்லாம் அந்த நண்பர் இருக்கவில்லை. அவர் தமது இலக்கிய அனுபவங்களோடும், வாசிப்பு அனுபவங்களோடும், குறிப்பாக அரசியல் அனுபவங்களோடும் இ.ரா இல்லாத இன்னபிற சினிமாக்களுடனும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்தாம்.
அவருடைய கேள்விகளுக்கும் சரி, அவரைப்போன்றே சிந்தித்த மற்றவர்களுடைய அதே கேள்விகளும் இன்றுவரைக்கும் பதிலிறுக்கப்படாமலேயே போய்விட்டன. அந்த இடம் பள்ளம் விழுந்தது விழுந்ததுதான். அதனை வேறு எந்த 'மாற்றும்' இதுவரை நிரப்பவில்லை. வேண்டுமானால் மாற்றங்கள் நிகழ்வது தவிர்க்கமுடியாதது என்ற ஒரு பதிலை வேண்டுமானால் சொல்லிக்கொண்டிருக்கலாம். இந்த ஒரு பதில் இ.ரா இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் தொண்ணூறைத் தாண்டிய இன்றைய நிலைக்கும் பொருந்தும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரோஜா, பம்பாய் படத்திற்குப் பிறகு மணிரத்தினத்தின் படங்கள் பெரும் வெற்றி பெறவில்லை என்றே நினைக்கிறேன். பின்னர் வந்த மணியின் படங்கள் விமர்சகர்களால் பாராட்டப் பட்டதாக தெரியவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அவை சிறந்த படைப்பாக பாராட்டப் பட்டு வந்திருக்கிறது. மணிரத்தினத்தின் படங்கள் முதல் முறை பார்க்கும்போது சற்று ஏமாற்றம் தரக் கூடியதாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். இன்னொரு முறை பார்க்கும்போது அதன் நுணுக்கங்கள் புரியத் தொடங்கும். ரகுமானின் இசையும் அதுபோலவே முதல் முறை கேட்கும்போது என்ன பாடல் இது என்று நினைக்கத் தோன்றும் . கேட்கக் கேட்க அதன் நுட்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். வைரமுத்து கூட ஒரு முறை ரகுமானின் இசை பற்றி குறிப்பிடும்போது அது ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும் என்று சொன்னதாக நினைவு. இது மணிரத்தினத்திற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.அது போல இந்தப் படமும் பிற்காலத்தில் சிறந்த படங்களில் ஒன்றாக இடம் பெறக் கூடும். ரகுமானின் பாடல்கள் ஹிட்டானாலும் படத்தின் வெற்றிக்கு அவை பெரும் அளவுக்கு உதவாமல் போவது மணிரத்தினத்தின் துரதிர்ஷ்டமே .

Amudhavan said...

பம்பாய் ரோஜாவுக்குப் பிறகு மணிரத்தினம் பெரும்பாலும் சமூகத்தில் அன்றைக்கு நடக்கின்ற முக்கியமான விஷயத்தை சினிமாவில் கதையாகச் சொல்ல நினைத்தது அவருடைய படங்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அந்த நேரத்து சம்பவங்களோ கதைகளோ பெரிதான பரபரப்பை உண்டுபண்ணலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கின்ற நிலையில் படம் ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்போது அந்தக் கருத்திலிருந்து முரண் படுகிறவர்கள் படத்தை முற்றாக நிராகரிக்க வாய்ப்புண்டு.
பொதுவான கதைகளைக் கையாளும்போது நல்ல இயக்குநர்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிடுகிறார்கள்.

பாடல்கள் ஒரு படம் வெற்றிபெறுவதற்குத் துணை நிற்கக் கூடுமேயாழிய பாடல்களால் ஒரு படம் வெற்றிபெறும் என்பது தவறான கருத்து. இது அந்தக் கால படங்களிலிருந்து இன்றைய படங்கள்வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும். எத்தனையோ எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும். ஆனால் பாடல்கள் மிகச் சாதாரணமாகவே இருந்திருக்கின்றன. ஆட்டுக்கார அலமேலு மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். பாடல்களெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம். என்னவொன்று படம் ஓடிவிட்டதென்றால் அந்தப் படத்திலுள்ள ஒரு பாடலோ இரண்டு பாடல்களோ நிச்சயம் ஹிட்டடித்துவிடும். இது இளையராஜாவுக்கும், ரகுமானுக்கும்கூடப் பொருந்தும். இ.ரா காலத்தில் எல்லாப் படங்களும் அவர் பாடல்களுக்காகவே ஓடின என்பது இணைய உலகம் கற்பித்துவைத்திருக்கும் ஒரு புருடா. அப்படியென்றால் 76-லிருந்து இன்றுவரை ஆயிரம் படங்கள் மகோன்னத வெற்றியை அல்லவா பெற்றிருக்கவேண்டும்? அப்படியா நடந்தது?
மற்ற விஷயங்களோடு பாடல்களும் நன்றாக இருந்தால் படம் வெற்றிபெறும். இப்போது காஞ்சனா ஓடுவதற்குப் பாடல்களா காரணம்?
பாடல்களுக்காக ஓடிய படங்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இது எண்ணிக்கையில் குறைவே.
ரகுமான் தமிழ் ரசிகர்களுக்காகப் பாடல்கள் போட்டுக்கொண்டிருந்ததைத் தாண்டி, இந்திய ரசிகர்களுக்காக என்றிருந்து- இப்போதைக்கு சர்வதேச ரசிகர்களுக்காகவும் பாடல்கள் என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கிறார். அதாவது அவருக்கான நிர்ப்பந்தம் என்னவென்றால் ஒரு பாடலுக்கு இசையமைத்துவிட்டால் அடுத்து வேறு மொழியில் படம் கிடைக்கும்போது அதற்காக இரண்டொரு பாடல்களுக்கு உழைத்தால் போதும். மற்ற பாடல்களை ஏற்கெனவே போட்ட படங்களிலிருந்து எடுத்து அப்படியே ஆளலாம் என்பது நிலைப்பாடு. இதனை அவர் சிறிது காலமாகவே செய்யத்தொடங்கிவிட்டார்.
இளையராஜாவின் சில பாடல்களைக் கேட்கும்போது 'என்ன இது கன்னடப் பாடலைக் கேட்கிறமாதிரி இருக்கிறதே' என்று தோன்றும் எனக்கு. இ.ரா ஏமாற்றவே மாட்டார். சிறிது நாட்களில் வரும் ஏதாவது ஒரு கன்னடப்படத்தில் அதே டியூனை அப்படியே பயன்படுத்துவார். அல்லது கன்னடத்தில் பயன்படுத்திய அதே டியூனைத் தமிழில் போட்டிருப்பார். இவையெல்லாம் இசையமைப்பாளர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள்.
அவரவர்களுக்குக் கிடைக்கின்ற தளத்தில் அவரவரும் விளையாடவே செய்கின்றனர்.

ஜோதிஜி said...

இந்த இரவு நேரத்தில் பதிவையும் அனைத்து விமர்சனங்களையும் பொறுமையாக படிக்க முடிந்தது. எனக்கு மணிரத்னம் படங்களை தொடக்கம் முதலே பெரிய அளவில் விருப்பத்துடன் பார்த்தது இல்லை. நான் இன்னமும் மனதளவில் கிராமத்தான் தான். எண்ணமும் செயலும் அப்படித்தான் உள்ளது. கடந்த சில வாரங்களில் மகள்களுடன் பார்த்த படங்கள் கொம்பன், மதயானைக்கூட்டம்,அரிமாநம்பி,ஐ,காக்கிச்சட்டை,வேலையில்லா பட்டதாரி, இன்னும் பல படங்கள். நமக்கு கிராமத்து பின்புலம் உள்ள படங்கள் தான் ஆர்வத்துடன் பார்ப்பதாக உள்ளது. குறிப்பாக மகள்களுடன் பார்க்கும் போது பலவற்றை கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மகள்கள் பள்ளியில் தோழிகளுடன் உரையாடிவிட்டு இந்தப்படம் பார்க்க வேண்டும் என்று ஒரு பட்டியலை கொடுப்பார்கள். அதில் ஒரு போதும் மணிரத்னம் படங்கள் இருந்தே இல்லை. அந்தப்படமெல்லாம் வேண்டாம்ப்பா என்று எளிதாக கடந்து விடுகின்றார்கள். ஏன் என்று எனக்கும் புரியவில்லை?

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\நான் இன்னமும் மனதளவில் கிராமத்தான் தான். எண்ணமும் செயலும் அப்படித்தான் உள்ளது\\

இந்த எண்ணமும் உணர்வும் மிக மிக நல்லதே. இந்த எண்ணம் உள்ளவர்கள் வாழ்க்கையில் செயற்கரியன செய்வார்கள். காமராஜர் எப்போதும் இப்படித்தான் நினைப்பார், நடந்துகொள்வார் என்று சொல்வார்கள்.

Anonymous said...

சார், உத்தம வில்லன் விமர்சனம் எழுதுங்களேன்.

Post a Comment