Wednesday, September 26, 2012

தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா!


ஜெயலலிதா தமது விருப்பத்திற்கேற்ப நடத்தி முடித்த மெல்லிசை மன்னர்களுக்கான பாராட்டுவிழாவின் இரண்டாவது பாகத்தையும் ஜெயா டிவி 23-09-2012 அன்று ஒளிபரப்பிற்று. இதுவரை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே சாலச்சிறந்த நிகழ்ச்சியாக இதனையே சொல்லமுடியும். ரஜனியின் பேச்சை குளறுபடி செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியிருந்தார்களெனில் அவர்களின் பெருமை நிச்சயம் இன்னமும் கூடியிருக்கும்.(விஸ்வநாதன் ஆரம்ப காலத்தில் நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார் என்று சொல்லி யாரோ ஒருவருடைய படத்தைக் காட்டினார்கள். சி.ஆர்.சுப்பராமன் குழுவில் இருந்தார் என்று சொல்லி கிவஜவின் படத்தைக் காட்டினார்கள். இந்த இரண்டு தவறுகளையும் மன்னித்துவிடலாம்)

இப்படியொரு விழாவை திரைப்படத்துறையின் ஆகச்சிறந்த கலைமகன்களுக்காகவும் தலைமகன்களுக்காகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்த ஜெயலலிதாவை இதற்காக எத்தனைப் பாராட்டினாலும் தகும். ஏனெனில் நமக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்காக அவர் எது செய்தாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு துளியும் அரசியல் கலக்காமல் எடுக்கப்பட்ட ஒரு பாராட்டு விழாவாகவே கொள்ள வேண்டும்.

அவரே தமது உரையில் குறிப்பிட்டதுபோல் சின்னக்குழந்தையாக இருந்தபோது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து – அறியும் பருவம் வந்தபிறகு அந்த பாடல்களின் இசையனுபவத்தில் மூழ்கி – இன்றைய நாள்வரை அந்தப் பாடல்களின் இனிமையுடன் அவற்றுக்கான நிஜமான அனுபவங்களுடனும் பயணிக்கிறவர் அவர். ‘என்னுடைய உயிர் பிரியும்வரை இவர்கள் இசையமைத்த பாடல்கள் என்னுடன் கலந்திருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பாடல்களில் தோய்ந்தவராக மனம் பறிகொடுத்தவராக இருக்கிறார் அவர். 

இந்த விஷயத்தில் ஜெவின் கருத்துக்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போகிறபோக்கில் சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டுப் போகிற விஷயமாக இதனைக் கொள்வதற்கில்லை. கலைத்துறையில் திரைப்படக் கதாநாயகியாக ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த ஒரு கலைஞர்; கலைத்துறை சார்ந்த குடும்பச்சூழல் என்பதால் திரைப்படத்தில் அடியெடுத்து வைக்குமுன்னரே வீட்டிலேயே சங்கீதம், நாட்டியம் என்று கற்றுத் தேர்ந்தவர்; கர்நாடக இசை பற்றியும் நாட்டிய நாடகங்கள் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் மிக்க ஒருவர், தாம் ஈடுபட்ட ஒரு பிரிவு குறித்து – அந்தப் பிரிவில் மகத்தான சாதனைகள் புரிந்த இரு மகான்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை அவர் நினைத்த அளவில் பிரமாதமாய் பிரமாண்டமாய் செய்து முடித்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.


அவரது இந்த முடிவு ஒன்றும் சாதாரணமாக வந்ததாக நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் ஒருவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்து பிற்பாடு அதையே விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு தொடரும் மௌடிக ரசனை சார்ந்தது அல்ல அவருடைய இந்த ரசனை. அந்த விழாவிலேயே சிவகுமார் சொன்னதுபோல்  சென்னையில் அலிகான் என்பவரிடம் ஏராளமான இசைப்பாடல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து சுமார் அறுபதாயிரம் பாடல்களை (சரியாகப் படியுங்கள்- அறுபதாயிரம் பாடல்கள்) பதிவுசெய்து வாங்கிவைத்துக் கேட்டு உய்த்துணரும் உயர் ரசனைக்கு சொந்தக்காரராகத்தான் ஜெயலலிதா இந்த விழாவை எடுத்திருக்கிறார் என்பதையும் நாம் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.

சாதனையாளர்கள் வாழ்கின்ற காலமெல்லாம் பேசாமலிருந்துவிட்டு அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர் அவர்களுக்கென விழாவெடுத்து சிலைவைத்து தெருக்களுக்கும் கட்டடங்களுக்கும் அவர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்கள் பெயரால் விருதுகள் வழங்குவதும் அவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவதும் என்று தொடரும் இம்மாதிரி சம்பிரதாயங்களுடன் ஒப்பிடும்போது ஜெவின் இந்தச் செயல் மிகப்பெரும் பாராட்டுக்குரியது.

அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் ஜெவின் இந்தச் செய்கையில் துளிக்கூட அரசியல் கிடையாது. அவர் அரசியலில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுக்காலமும் பேசிய பேச்சுக்களை வைத்துப் பார்த்தாலும் ‘பத்ம விருதுக்கு இவர்களை நான் சிபாரிசு செய்தால் அதனை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தும் இடத்துக்கு நிச்சயம் வருவேன்” என்று குரல் உயர்த்திய அந்த ஒரு பாராவை விட்டுவிட்டுப் பார்த்தால் பேச்சு நெடுகிலும் துளிக்கூட அரசியல் இல்லை.

ஒரு நல்ல கலா ரசிகர் ஆட்சிபுரியும் இடத்திற்கு வந்தபிற்பாடு தாம் இத்தனைக் காலமும் கண்டு கேட்டு அனுபவித்து பிரமித்த அந்த உயர் கலைஞர்களுக்குத் தன்னுடைய அன்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் வெகுமதியையும் எப்படி நம்முடைய பாணியில் செலுத்தலாம் என்று தெரிவிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த விழா.
யோசித்துப் பாருங்கள்…………… இன்றைக்கு விசுவநாதன் ராமமூர்த்திக்குப் பாராட்டு விழா எடுப்பதனால் ஜெயலலிதாவுக்கு ஆகப்போவது என்ன?
இதிலே அரசியல் ரீதியாக அவருக்கு என்ன ஆதாயம் இருக்கப்போகிறது?

இந்தக் காயை நகர்த்துவதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் அவர் எந்தக் காயை வீழ்த்தப் போகிறார்? அவருக்குக் கிடைக்கப்போகும் வெற்றி என்ன?

ஒன்றுமே இல்லை.

ஆக, ஆத்மார்த்தமாக செலுத்தப்பட்ட நன்றி நவிலும் நிகழ்வாகவே இது பரிமளிக்கிறது. இதனை அவர் ஸ்டைலில் ஆளுக்கு ஒரு காரும் தங்கக் காசுகளாகவும் பொழிந்து தமது மரியாதையைத் தெரிவித்தார். இதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டும் அதே சமயத்தில் இளையராஜாவையும் வேறொரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும்.
முதல்வர் மட்டுமல்ல இளையராஜாவும் இதனை ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தும் விழாவாகவே மாற்றிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 
                                  

இங்கே பதிவுகளில் இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது நிறைய பதிவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான் என்றே தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் மட்டுமல்ல பிற ஊடகங்களும் இதே தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுவிழாவை ஒரு மிகப்பெரும் நிகழ்வாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவேண்டிய ஊடகங்கள் ரஜனி கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய ஒன்றுமில்லாத விஷயத்தை மட்டுமே ‘பேனைப் பெருமாளாக்கிய’ கதையாகச் சொல்லி  ஏதோ ஒரு பரபரப்புத் தேடுவதாக நினைத்து வெற்று உரலைக் குத்தி சில்லைப் பேர்த்திருக்கிறார்கள்.

இளையராஜா நிற்கும் இடம் எது என்பது இளையராஜாவுக்குத் தெரிந்திருக்கிறது. பாவம் இவர்களுக்குத் தெரியவில்லை.
தன்னுடைய உயரம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு அது தெரியவில்லை.

தம்மிடம் இருக்கும் சொத்து சொத்து எவ்வளவு என்பதற்கான சரியான கணக்கை அவர் வைத்திருக்கிறார். பாவம் ரசிகர்கள் ‘உலகமே உன்னுது தாண்ணே’ என்றே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசையில் சாதித்த முன்னோர்கள் நிறைய இருக்கிறார்கள். ஜி.ராமனாதன் நிறைய மாறுதல்களைச் செய்தவர். அதற்கு அடுத்தும் நிறையப்பேர் இருக்கிறார்கள். முதலில் பாடல்களை எழுதவைத்து அந்தப் பாடல் வரிகளுக்கு மட்டுமே மெட்டமைத்தவர் கே.வி.மகாதேவன். அது மட்டுமின்றி நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் தமிழ்த்திரையில் பெருக்கெடுத்தோடச் செய்தவர் அவர்தான்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகளோ இன்னமும் மகத்தானவை. இனிமை ததும்பிய ஓராயிரம் பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மட்டுமே. வேறு யாருடைய இசையிலும் ‘நின்று நிலைக்கும்’ பாடல்கள் இத்தனைத் தேறாது. தவிர மற்றவர்கள் ஒரு படம் இசையமைக்கிறார்கள் எனில் அதில் ஒரு பாடலோ இரண்டோ அல்லது மூன்று பாடல்களோ மட்டும்தான் தேறும். அவைதான் கொஞ்ச நாட்களுக்கேனும் வலம் வரும். மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் எந்தவொரு இசையமைப்பாளரின் படங்களாக இருந்தாலும் இதுதான் இயல்பு. தமிழில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த படங்களிலும் சரி, அதன்பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த பல படங்களிலும் சரி - அத்தனைப் பாடல்களும், ஆமாம் அத்தனைப் பாடல்களும் - தெவிட்டாத தேனமுதாய் நின்று 
நிலைக்கும் பேறு பெற்றவையாக இருந்தன, இருக்கின்றன! இம்மாதிரியான படங்கள் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதாவது இருக்கும்.

எண்பத்தாறு படங்களுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்கள் நானூற்று ஐம்பதுக்கும் மேல். தனியாய்ப் பிரிந்தபின்னர் ராமமூர்த்தியால் பெரிதாகத் தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. இருபது படங்கள்தாம் தனியாக இசையமைத்தார் என்றே தெரிகிறது.
ஆனால் அந்தக் காம்பினேஷன்……………………!

அற்புதங்களை இசையில் விதைத்துச் சென்ற சேர்க்கை அவர்களுடையது.

அவர்கள் பிரிந்து இன்றைக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து உட்காரவைத்து இருவருக்குமாக இந்தத் தமிழகம் விழா எடுக்கிறது என்றால் அவர்கள் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். 

அவர்கள் பிரிந்தது 1965-ல்! இப்போது விழா நடந்திருப்பது 2012-ல்.

தமிழ்த்திரை இசை என்றால் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, டிஎம்எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், பிபிஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி, சந்திரபாபு, ஜமுனாராணி, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் ராஜேஸ்வரி, ஏஎல் ராகவன் என்று இத்தனைப் பேரின் பங்களிப்புடன் வலம்வரும் சாகாவரம் பெற்ற பாடல்கள்தாம் நம்முடைய அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள். தமிழ்த் திரையின் அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள் இவர்கள் சம்பந்தப் பட்டவைதாம். இந்த - அத்தனை ஜாம்பவான்களின் பின்னணியிலும் இருக்கும் இசை முகவரிக்குச் சொந்தக்காரர்கள் இரட்டையர்கள் மட்டுமே.
இன்னமும் நூறு வருடங்கள் அல்ல, ஐநூறு வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்த்திரையின் சாதனையாளர்களாக சிவாஜியும் எம்ஜிஆரும் கண்ணதாசனும் கொண்டாடப்படுவார்கள் என்றால் அப்போதும் பேசப்படக்கூடியவர்களாக இருக்கப்போகிறவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியுமே.

ஏதோ இருபது பதிவர்கள் திட்டுவார்களே என்பதற்காக நாம் வரலாற்றை விட்டு ஓடிவிட முடியாது. அப்படித் திட்டுபவர்களால் எந்தப் புதிய வரலாற்றையும் உருவாக்கவும் முடியாது. இதற்கும் கண்ணதாசன் எழுதி இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல் வரிகளே பதில் சொல்கிறது; ‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது’

இளையராஜாவை மட்டுமே ரசிக்கிறவர்கள் ரசித்துக்கொண்டு போங்கள். ஆட்சேபணையே கிடையாது. “இளையராஜா ‘மட்டும்தான்’ நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர்” என்பது உங்கள் கருத்தா?

பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தில் குறுக்கிடும் எண்ணமே நமக்குக் கிடையாது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இளையராஜா மட்டும்தான் தமிழின் ஒரே இசையமைப்பாளர் என்பதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தைப் பொதுவெளியில் பரப்ப முயலாதீர்கள் என்பதை மட்டும்தான் வலியுறுத்துகிறோம்.

“மொழி படத்தில் ‘காற்றின் மொழி’ பாடலை என்றைக்குக் கேட்டேனோ அன்றிலிருந்து நான் வித்யாசாகரின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். இனி வித்யாசாகர்தான் என்னுடைய ஃபேவரிட்”

அப்படியா? மகிழ்ச்சி.

“மின்னலே படத்தில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்’ கேட்ட மாத்திரத்திலிருந்து எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்”

ரொம்பவும் மகிழ்ச்சி.

“ரோஜா படத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் பிடித்தது. காதலன் படம் வந்தது பாருங்க………அதுல சூப்பர் ஹிட்ஸ் தந்தாரு பாருங்க. அடட………, ஏ.ஆர்.ரகுமானுக்கு இணை யாருமே இல்லைங்க”

அப்படியா? ஓகே. வைத்துக்கொள்ளுங்கள்.

“ரொம்பச் சின்னப் பையன்சார் இவன். வெயில் படத்திலும் மதராசப் பட்டிணம் தெய்வத்திருமகள் படத்திலும் என்னமா ஸ்கோர் பண்ணியிருக்கான் தெரியுமா? இந்த வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார்? இளையராஜா ரகுமானையெல்லாம் ஒண்ணுமில்லாம செய்திருவான் போலிருக்கே”
ஜி.வி.பிரகாஷ்குமாரைப் பற்றி இப்படியொரு சிலாகிப்பு.

மாறுபாடான ரசனைகளும் மனநிலைகளும் கொண்ட மக்களிடமிருந்து இப்படியெல்லாம் விமரிசனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்பவை வேறு. உனக்குப் பிடித்தது இர்விங் வாலஸாக இருக்கலாம். உன்னுடைய பிள்ளைக்குப் பிடித்தது ஹாரிபாட்டராக இருக்கலாம். ஆனால் ஆங்கில இலக்கிய உலகம் அங்கீகரித்துக் கொண்டாடுவது சாமர்செட் மாமையும் பெர்னார்ட்ஷாவையும் மில்டனையும் இன்னும் வேறு பல முன்னோர்களையும் என்பதை மறந்துவிடக்கூடாது. இர்விங் வாலஸின் இடம் இவர்களுக்கு மிகவும் பின்னால்தான் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

இந்தக் கருத்தைச் சொன்னாலேயே நண்பர்கள் சீறுகிறார்கள். இவர்கள் சீறலையும் கோபத்தையும் தாண்டி டிஎம்எஸ்ஸும் பி.சுசீலாவும் கண்ணதாசனும் கணந்தோறும் தமிழர்கள் உள்ள இடங்களில் அவர்கள் பாட்டுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரஜனி சொன்னமாதிரி போனால் போகட்டும் போடா சட்டிசுட்டதடா எல்லாம் இன்னமும் கன்னடர்களாலும் உச்சரிக்கப்படும் பாடல்கள்.

இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லட்டும். நமக்கும் சம்மதமே. ஆனால் தமிழனுக்குக் காதுகள் முளைத்ததே இளையராஜா பாடல்கள் போட்டபிறகுதான் என்கிற மாதிரி பிதற்றித்திரிவதைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது.
ஆனால் நம்முடைய கவலையைக் களைகிற மாதிரியான நடவடிக்கைகளை இளையராஜாவும் கங்கை அமரனுமே எடுத்திருக்கின்றனர். ராஜா ரசிகர்களின் மருளையும் மருட்சியையும் போக்கும் விதமாக அவர்கள் இருவருமே முத்தாய்ப்பாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்பதனால் அதற்குப் போட்டியாக அன்றைய தினம் காலையில் மெகா டிவியில் இதைப் போன்றே ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும் மெகா டிவியில் அதன் உரிமையாளர் திருமதி ஜெயந்தி தங்கபாலு நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.(பார்ரா இங்கேயும் இவர்கள் இருவருக்கும்தான் பாராட்டுவிழா!) அந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன் பேசிய பேச்சு முக்கியமான ஒன்றாக இருந்தது.

“நாங்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் ஒலித்த பாட்டெல்லாம் இவங்களுடையதுதான். முதன்முதலாக விஸ்வநாதன் இசையில் மலர் எது  பாடலுக்கு அண்ணன் இளையராஜா வாசித்துவிட்டு வந்தார். அவ்வளவுதான்… எங்கள் கிராமம் பூராவும் கொண்டாடியது அதை. கிராமம் பூராவும் இதான் பேச்சு. எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டே ‘காலமகள் கண்திறப்பாள் சின்னையா’ பாட்டுத்தான். எங்களுக்குத் தெரிஞ்ச இசையெல்லாம் இவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான். கோரஸ் எப்படிப் பாடணும், தபலா எப்படித் துவங்கணும், எப்படித் தொடரணும் வாத்தியக்கருவிகளை எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும் எல்லாமே இவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். அவங்ககிட்ட யார் யார் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாசிச்சாங்களோ அவங்கதான் பிற்பாடு மியூசிக் டைரக்டர்ஸ். அவங்களுக்கு நாங்களெல்லாம் சரண்டர்தான். எங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அவங்கதான்” என்று பேசிக்கொண்டே வந்தவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னார். “இந்த சூட், இந்தக் கார், இந்த பங்களா எல்லாமே இவங்க போட்ட பிச்சை”.

இதை அப்படியே கவனத்தில் பதித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா நடத்திய விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கு வருவோம்.

“அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ. அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்” என்று உற்சாகமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் இளையராஜா. பிற்பாடு அவர் பேசியதும் ஏறக்குறைய கங்கை அமரன் பேச்சினை ஒட்டியே இருந்தது. “என்னுடைய மனசு நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக்கிடப்பது இவருடைய இசைதான். இதெல்லாம் அவர் போட்ட பிச்சை” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக அடுத்து சொன்னதுதான் மிகப்பெரிய வார்த்தை. நிச்சயமாக மிக மிகப் பெரிய வார்த்தை.

“அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது”-

என்று சொன்ன இளையராஜா அதற்குமேல் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றவராக ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.
ஜெயலலிதா எப்படி ஆத்மார்த்தமாக இந்த விழா எடுத்தார் என்று சொல்கிறோமோ அதே போல இளையராஜாவும் மிகவும் ஆத்மார்த்தமாக தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் இப்படிச் சொல்வதால் இளையராஜாவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

இளையராஜா அவர்கள் மீது மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் இரண்டு விஷயங்களில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. முதலாவது, விஸ்வநாதன் மீதான அவருடைய வெளிப்படையான என்றைக்கும் மாறாத இந்தக் கருத்திற்காக.

இரண்டாவது சம்பவத்தை நண்பர் ஒருவர் சொன்னார். கவியரசர் கண்ணதாசன் பிறந்த இடத்தைத் தரிசிப்பதற்காக சிறுகூடற்பட்டி கிராமத்துக்குப் போனாராம் இளையராஜா. அந்த கிராமத்தை அடைந்ததும் காரை அங்கேயே நிறுத்தி “அந்த மகாகவிஞன் பிறந்த ஊர் எனக்குப் புனிதமானது. இந்த மண்ணில் செருப்பு அணிந்து நடக்கமாட்டேன்” என்று சொல்லி செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடுதான் மொத்த கிராமத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாராம்.

29 comments :

R.S.KRISHNAMURTHY said...

ஜெயையும் ராஜாவையும் பற்றிய உங்கள் கருத்துக்களோடு 100% ஒத்துப் போகின்றேன் நான். இந்த ஒளிபரப்பில் இன்னொரு தவறு உண்டு. தன்னுடைய ‘பணம்’ படத்தின் மூலமாக இரட்டையர்களைச் சேர்த்துவைத்தது கலைவாணர் என்.எஸ்.கே.அவர்கள்.அதை ஒளிபரப்பில் குறிப்பிடவில்லை. ’பணம்’ படத்தின் டைடில்களில் ஸீனியாரிடி கருதி, ராமமூர்த்தி-விஸ்வநாதன் என்று குறிப்பிடவேண்டும் என்று என்.எஸ்.கே. சொன்னபோது ‘வேண்டாம், தம்பி விஸ்வநாதன் பெயரே முன்னால் இருக்கட்டும்’ என்று ராமமூர்த்தி சொன்னாராம்!அந்த அடக்கமும் தன் திறமையை ’வியாபாரம்’ செய்யத் தெரியாத குணமும் அவருக்குக் மிகக் குறைந்த படங்களையே கொடுத்தன. ஆனால் அவருடைய தனித்திறமையை அன்று ஒளிபரப்பான ‘அதோ அந்தப் பறவை போல’ பாட்டில் காணமுடிந்தது. வயலின்களோடு என்ன மாதிரி விளையாடியிருக்கிறார்கள், இரட்டையர்கள்! பாடலைக் கண்ட, கேட்ட அனைவருக்கும் சிலிர்த்திருக்கும். ராஜாவின் (மன்னிக்கவும்) அடிவருடிகள் அதைக் கண்டிருக்கவேண்டும். இந்த உலகத்துக்குத் திரும்பி வருவார்கள்!

நிகழ்ச்சியில் எனக்குக் குறையாகத்தெரிந்தது, அதிகமாக எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றது. எவ்வளவோ அருமையான பாடல்கள் (வேண்டுமென்றோ, தெரியாமலோ) விடுபட்டுப் போயின! மற்றபடி, ’ஜெ’க்கும் ராஜாவுக்கும் ஜே,ஜே!

Amudhavan said...

நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் வருகைக்கு நன்றி ஆர்எஸ்கே. பரபரப்பாகப் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பதிவுக்கு ஆரம்ப விமரிசனங்கள் விமரிசனமாகவோ விவாதங்களாகவோ இல்லாமல் மிக மோசமான கெட்டவார்த்தை வசவுகளாக வந்ததால் அவற்றை இங்கே இடம்பெறச் செய்யவில்லை. அதனால் உங்கள் விமரிசனம் முதலாவதாக இடம் பெறுகிறது.
ஒரு விஷயமும் தெரிந்துகொள்ளாமல் ராஜாவே அப்படிக்கூறி விட்டபிறகு நமக்குப் பேச என்ன இருக்கப்போகிறது என்ற ஆதங்கத்தில் கெட்ட வார்த்தை வசவுகளை அள்ளி இறைக்கும் இந்த நண்பர்களைப் பார்த்துப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
நாகூர் ஹனி என்ற இசைக்கலைஞர் என்னுடைய இந்தப் பதிவுகளிலேயே இளையராஜாவும் இன்னிசை மழையும் என்ற பதிவுக்குத் தமது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரிடமிருந்தெல்லாம் நிறைய தகவல்கள் நமக்குக் கிடைக்கவேண்டும்.
ராமமூர்த்தி பல நல்ல மெட்டுக்களுக்குச் சொந்தக்காரர் என்பதிலும் மிகத்தேர்ந்த வயலின் மேதை என்பதிலும் யாருக்கும் கருத்து பேதம் இல்லை.ஏதோ காரணத்தால் அவர்கள் விலகிவிட்டபின்னர் கிடைத்த ஓட்டப்பந்தய களத்தில் அவரால் ஓடமுடியாமல் போய்விட்டது என்பதுதான் கணக்கில் இருக்கிறது.தனியாகவே நானூற்றைம்பது படங்களுக்கு மேல் இசையமைத்து இசையில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியுமோ அத்தனையையும் புகுத்தி என்றென்றைக்கும் இவைதான் சாசுவதம், இதிலிருந்து தொடர்ந்துதான் மற்றவர்கள் பயணிக்கமுடியும் என்கிற அளவுக்கு அழுத்தமான பாதையைப் போட்டுவிட்டார் எம்எஸ்வி என்பதுதான் அவருக்கான பெருமை. அந்தப் பெருமையைக் கொண்டாட நினைத்ததால்தான் அவர் இசையமைத்த பாடல்களாக நிறைய இருந்தன என்று நினைக்கிறேன். தவிர அத்தனைப் பாடல்களையும் ஜெயலலிதா தாமாகவே தெரிவு செய்திருக்கிறார்.
இது ஒரு அடையாளம் தானே!
நல்ல இசையை அனுபவிக்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து பின்னோக்கிச் செல்வார்களேயானால் பல புதையல்கள் நிச்சயம்.

ஸ்ரீராம். said...

வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான் ராகம் பிடிபடுகிறது என்று ஒரு மு மேத்தா கவிதை வரும். அதுபோல இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள்தான் தேர்ந்தெடுத்த இசையை ரசிப்பதோடு அதை எடுத்துச் சொல்லவும் செய்கிறார்கள். எம் எஸ் வி ராமமூர்த்தி இசைக்கு இணையேது? ரஜினி பேசியதை பெரிது படுத்தினார்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது போல இளையராஜாவின் ரசிகர்கள் பற்றிய உங்கள் வரிகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது என் பணிவான அபிப்ராயம். அவரவர் ரசனை அவரவர்க்கு. ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்ல அடுத்தவர் பெயரை இழுக்கவே வேண்டாம் என்பது என் கட்சி! எனக்கு இளையராஜாவும் பிடிக்கும்! ஆர் டி பர்மனும் பிடிக்கும். சலீல் சவுத்ரியும் பிடிக்கும். எம் பி ஸ்ரீனிவாசனும் பிடிக்கும்! சுவாரஸ்யமான கட்டுரையாகப் படிக்கத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

காரிகன் said...

"நல்ல இசையை அனுபவிக்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து பின்னோக்கிச் செல்வார்களேயானால் பல புதையல்கள் நிச்சயம்."
மிகச்சரியான வாக்கியம். திரு அமுதவன் அவர்களுக்கு நன்றிகள் பல. தெளிவான மற்றுமொரு அமுதவன் கட்டுரை. நீங்கள் சொன்னதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை. இளையராஜா பொதுவாக தன் கால எந்த இசை அமைப்பாளரையும் உயர்த்தியோ மதித்தோ பேச மாட்டார். ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் என்று வந்து விட்டால் இளையராஜாவிடம் இருந்து ஆச்சர்யப்படும் விதத்தில் தன்னடக்கமான கருத்துக்கள் வருவது ஒரு வியப்பான நிகழ்வு.அந்த விஷயத்தில் இளையராஜாவை பாராட்டியே ஆக வேண்டும். உகளுக்கு வந்த பல பின்னூட்டங்கள் வசவுகளாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். இளையராஜாவின் ரசிகமணிகளிடமிருந்து வேற என்னத்தை நாம் எதிர் பார்க்க முடியும்? இளையராஜாவின் வீழ்ச்சியை தாங்கிக்கொள்ள மனமில்லாத ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள் இன்னும் 1980 களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அவர்கள் முன்னேயும் செல்ல மாட்டார்கள் பின்னேயும் போக மாட்டார்கள். அவர்களுக்கு எம் எஸ் வி யின் வரலாறு தெரியாது. தெரிந்தாலுமே அது எரிச்சலை கொடுக்கிறது. ரகுமானின் வெற்றி வெறுப்பை ஊட்டுகிறது.

சார்லஸ் said...

மீண்டும் அமுதவன் சாரையும் கிருஷ்ணமூர்த்தி சாரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . உங்களின் கருத்துக்கள் விமர்சனங்கள் எல்லாம் அருமை. அற்புதம் . ஆனால் இளையராஜாவின் அடிவருடிகள் என்று ரசிகர்களை 'குறைத்து ' சொல்வதை இன்னும் குறைக்க மாட்டேன் என்கிறீர்கள் . அக்கரைக்கு இக்கரை பச்சை . நாங்கள் இந்த கரையில் நின்று கொண்டு அந்த கரையில் நிற்கும் உங்களை பார்க்கிறோம் . இடையில் நாம் இருவரும் கடக்க முடியாத கால நதி ஓடிக் கொண்டே இருக்கிறது . இளையராஜாவின் எங்களைப் பொறுத்தவரை பிரமிப்பு ,வியப்பு ,அனுபவம் , தவம், ஊனில் கலந்த ஊட்டச்சத்து , நாடி நரம்புகளில் ஓடும் உயிர் என்று எத்தனையோ சொல்லலாம் . மாற்றம் என்பதே எங்களில் ஏற்படவே செய்யாது . உங்கள் அனுபவத்தையும் பிரமிப்பையும் நாங்களும் ரசிக்கிறோம் . எங்கள் ரசிப்பை கொச்சைப் படுத்தாதீர்கள்

Anonymous said...

கூடங்குளத்தில் மக்கள் தங்கள் உரிமைக்கு போராடுகிறார்கள்.இந்த அம்மையார் இங்கே பிடில் வாசித்து கொடிருக்கிறார்.அதைவிட இதுவா முக்கிய வேலை.இந்த இசையமைப்பாளர்களுக்கு சன்மானமாக தராரிப்பாளர்கள் கொடுத்துவிட்டார்கள்.இவர்கள் என்ன சும்மாவா இசையமைத்து கொடுத்து ,மக்கள் ரசிக்கிறார்கள்.உமக்கு அறிவில்லையா ? இதுவா உமக்கு சாவி கொடுத்த பயிற்சி?

SAAMI

Amudhavan said...

ஸ்ரீராம் உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி. அதே சமயம் 'அவரவர் ரசனை அவரவர்க்கு.ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்ல அடுத்தவர் பெயரை இழுக்கவே வேண்டாம்' என்கிறீர்கள். ரொம்ப நல்லது. இங்கே இன்னும் எத்தனை தடவைதான் இந்தக் கருத்திற்கு விளக்கம் சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் ரசனையிலும் உங்களுக்கு யாரைப்பிடிக்கிறது என்று சொல்கிறீர்களோ அந்தக் கருத்திலும் நமக்கு எவ்வித பேதமோ மாறுபட்ட கருத்தோ இல்லை. நீங்கள் உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் அனிருத் தான் என்று சொல்லிக்கொண்டு போங்கள் ஆட்சேபிக்கப்போவதில்லை. 'அவர் ஒருவர்தான்' என்ற பொதுக்கருத்து உருவாக்கம்தான் பிரச்சினையே. திருவிகவின் தமிழும் நல்ல தமிழ்தான். பரிதிமாற்கலைஞரின் தமிழும் நல்ல தமிழ்தான். ஆனால் ஒரு தமிழ் அறிஞரைக் குறிப்பிட்டுவிட்டு அவரை தமிழ்த்தாத்தா சாமிநாதய்யரை விடவும் பெரிதாகச் சொல்லும்போதுதான் குறுக்கிடவேண்டி இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன்.

Amudhavan said...

காரிகன், அடடா அடடா, என்ன ஒரு யதார்த்தமான படப்பிடிப்பு........'அவர்களுக்கு எம்எஸ்வியின் வரலாறு தெரியாது. தெரிந்தாலுமே அது எரிச்சலைக் கொடுக்கிறது. ரகுமானின் வெற்றி வெறுப்பை ஊட்டுகிறது' அதில் இளையராஜா வேறு இப்படிப் பேசியிருக்கிறார். என்னதான் செய்வார்கள் அவர்கள்?

Amudhavan said...

வாருங்கள் சார்லஸ் என்னுடைய கட்டுரையில் எந்த இடத்திலும் இளையராஜா ரசிகர்களை 'அடிவருடிகள்' என்றெல்லாம் குறிப்பிடவில்லை. பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் இடம்பெறும் எல்லா வரிகளுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது. மிக ஆபாசமாக வரும் வரிகளை இடம்பெறச் செய்வதில்லை அவ்வளவுதான்.'நாங்கள் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக் கரையில் நிற்கும் உங்களைப் பார்க்கிறோம்.இடையில் நாம் இருவரும் கடக்கமுடியாத கால நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.' அருமையாக விவரித்திருக்கிறீர்கள். உங்கள் கவிதை கலந்த விமரிசனத்தை ரசித்தேன்.கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட.
நீங்கள் ஏதோ ஒரு கரையில் நிற்கிறீர்கள் சரி; நீங்கள் நிற்பதற்கு எதிர்புறம் உள்ள அதே கரையில்தான் நாங்கள் நிற்கிறோம் என்று உங்களுக்கு யார் சொன்னது?
மற்றபடி உங்கள் கருத்துக்கு- இந்தப் பதிவில் நான் எதுவுமே சொல்லவில்லையே. நீங்கள் பதில் சொல்லவேண்டியது திரு இளையராஜா அவர்களுக்குத்தான்.

Amudhavan said...

அனானிமஸ், கூடங்குளத்து மக்கள் உயிர் பிரச்சினைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களுடனான போராட்டங்களுக்குத் தோள் கொடுத்துக்கொண்டிருந்த நீங்கள் இடையில் ஒரு சின்ன இடைவெளி எடுத்து இந்தப் பதிவைப் படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் கோபம் மிக மிக நியாயமானது.

இது ஏதோ கூடங்குளத்து மக்களுக்காக ஒலிக்கும் குரலாக இல்லாமல் இளையராஜா ரசிகராக இருந்து என்ன செய்யலாம் என்று தெரியாத ஆதங்கத்தில் ஒலிக்கும் குரலாகத்தான் இருக்கிறது.
ஒரேயொரு விண்ணப்பம். கூடங்குளத்துக்காக கடந்த ஒரு மாத காலமாக எந்தெந்த தளங்களில் என்னென்ன விவாதங்கள் செய்திருக்கிறீர்கள் என்ற பட்டியலை தயவுசெய்து தரமுடியுமா?

R.S.KRISHNAMURTHY said...

அநாநிமஸ் அவர்களுக்கான உஙகள் பதில் படித்தேன். மக்கள் எத்தனையோ காரணங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (போராட்டங்களின் காரணங்கள் நியாயமானவையா, இல்லையா என்கிற ஆட்டத்துக்கு நான் வரத் தயாரில்லை!!) எனக்குத் தெரிய வேண்டிய சமாசாரம், எத்தனை காரணங்களை (போராட்டங்களை) ஆதரித்து உணவு கூட உண்ணாமல் நண்பர் அநாநிமஸ் இருந்திருக்கிறார், இருக்கிறார் என்பதே!

kalaisangam said...

உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினைசெ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062.

(அல்லது )

cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்!கவியன்புடன்செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம்பேச : 8438263609விபரங்களுக்கு :

http://www.vahai.ewebsite.com/

http://tamilkavinjarsangam.yolasite.com/--------------------------------------

கட்டணம் இல்லை

---------------------------------


இது கவிஞர் பெருமக்களின் எழுச்சி நிகழ்ச்சி -சாதனை நிகழ்ச்சி - கவிஞர்கள் வாழ்ந்ததற்கானஅடையாளக் கல்வெட்டு - கவிஞரென்ற உலக அங்கீகாரம் - கவிஞர்களுக்கான களம்

காரிகன் said...

இளையராஜா கண்ணதாசனை மட்டுமே சிறந்த கவிஞர் என்று சொல்வார். வாலியை விட கண்ணதாசனை அவர் அதிகம் விரும்பியது அவர் பேட்டிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இளையராஜாவின் சில பக்தர்கள் கன்னதாசானை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கீழே உள்ள லிங்கில் பார்க்கவும். இதை படிக்கும் போது கண்டிப்பாக அமுதவன் அவர்களுக்கு கூட கோபம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த பதிவை எழுதி வரும் திரு மதிமாறன் என்பவர் ஒரு தீவிர இளயராஜா தொண்டர். தலைவர் ஒழுங்காக இருந்தாலும் தொண்டர்கள் போடும் ஆட்டம் கேலிக்குரியதாக இருக்கிறது..நீங்கள் உங்கள் பதிவில் சொன்னபடியேதான்
.http://mathimaran.wordpress.com/2012/09/21/558/

Amudhavan said...

காரிகன் அவர்களே மதிமாறனின் எழுத்துக்களை நானும் சமயங்களில் விரும்பிப் படிப்பதுண்டு. அவர் கண்ணதாசனை மட்டுமா கேவலமாக எழுதுகிறார், பாரதியை அதைவிடவும் கேவலமாக எழுதுகிறார். இருவரைப் பற்றிய அவரது அபிப்பிராயம் இதுதானென்றால் அவரது மற்ற கருத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை சுலபமாக ஊகித்துவிடலாம்.
இளையராஜாவைத் தம்முடைய பதிவின் முகப்பிலேயே அடையாளக்குறியீடாகவும் வைத்துள்ள அவர் முன்பு எம்எஸ்வியை முழுமையான அளவு பேட்டி கண்டு எழுதியிருந்தார் என்று ஞாபகம். அதனால்தான் அந்தத் தளத்தையே படிக்க ஆரம்பித்தேன். புதிய சிந்தனைக்கும் திறமையான எழுத்துக்கும் சொந்தக்காரரான அவர் பாரதியை எதிர்ப்பதுவும் கண்ணதாசனை எதிர்ப்பதுவும் பெரும்பான்மையினரின் கவனம் ஈர்க்கவே என்பதே எனது முடிவு. அதனால் இரண்டுபேரைப் பற்றி அவர் எழுதும்போதும் அதனை ஒரு சின்னச் சிரிப்புடன் கடந்துபோய்விடுவதுண்டு.

காரிகன் said...

இளையராஜாவின் இறங்கு முகத்தின் பல காரணங்களில் ஒன்றான இதை திரு முரளிதரன் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார். இது கேள்விப்பட்டதே என்றாலும் சில உண்மைகளை இளையராஜா அவர்கள் மறைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. சிலருக்கு இது புதிதாக இருக்கலாம்.

Amudhavan said...

இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சரியாகப் புரியவில்லை காரிகன். இன்னமும் கொஞ்சம் தெளிவாக அல்லது விரிவாக எழுதினீர்களென்றால் புரிந்துகொள்வது எளிமையாக இருக்கும். இளையராஜா எதை மறைத்துவிட்டார் என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லையே.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களுக்கு, முரளிதரன் என்பரின் ஒரு லிங்கை உங்களுக்கு கொடுக்க நினைத்து அதை தராமல் என் கருத்தை எழுதியதற்கு என்னை மன்னிக்கவும். இதோ அந்த தளத்தின் தொடர்பு. இனி இந்த தவறு நிகழாது.

http://tnmurali.blogspot.com/2012/10/blog-post_6.html?showComment=1349708945770#c8405412222402584639

Amudhavan said...

நன்றி காரிகன். திரு முரளிதரன் அவர்களின் பதிவைப் படித்தேன். அவருக்குத் தெரிந்த விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொன்னதுபோல் இளையராஜாவின் இறங்குமுகத்திற்கான பல காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். மணிரத்தினம் இளையராஜாவை விட்டு விலகுவதற்கும் ஒன்றல்ல பல காரணங்களே இருக்கக்கூடும்.
பொதுவாகவே பிரபலமாக இருக்கும் எவருமே அவ்வளவு சீக்கிரத்தில் இன்னொரு பிரபலத்தை விட்டு விலகிவிடுவதில்லை. எத்தனையோ விஷயங்களை சகித்துக்கொள்கிறார்கள். ஏன் சில அவமானங்களைக்கூட சகித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுகிறார்கள். அவர்களாலேயே முடியாத பட்சத்தில்தான் பிரிவு நேரிடுகிறது. இந்த விதி பொதுவானதே தவிர, நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களிடம் வேறு இலக்கணங்கள் உண்டு. மணிரத்தினம் இளையராஜா பிரிவுக்கு ஒன்றல்ல பல சமயங்களின் ஈகோ உரசல்கள் காரணமாக இருக்கலாம்.
பாரதிராஜாவிடம் தகராறு, வைரமுத்துவிடம் தகராறு, மணிரத்தினத்திடம் தகராறு, அன்றைக்கு மிகப்பெரிய தயாரிப்பாளராயிருந்த கோவைத்தம்பியிடம் தகராறு, பிரபுதேவாவிடம் தகராறு என்று நம்ம ராஜா நல்லாத்தான் ஒரு ரவுண்டு வந்திருக்காரு.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களுக்கு, நீண்ட நாள் இடைவெளிக்குப்பிறகு தொடர்பு கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது ஒரு அரிதான வலைதளத்தை உங்களுக்கு இணைப்பாக கொடுக்கிறேன். இரண்டாவது இணைப்பும் நீங்கள் படிக்கவேண்டியதே.

http://asokarajanandaraj.blogspot.in/search/label/M%20S%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%௮

http://parithimuthurasan.blogspot.in/2012/10/Ilayaraja.html

உங்கள் கருத்தை எழுதவும் நேரமிருந்தால்.


Amudhavan said...

காரிகன் அவர்களே நீங்கள் சொன்னபடி இரண்டுபேரின் பதிவுகளையும் பார்த்தேன். முன்னவர் நல்ல பாடல்கள் எங்கிருந்தாலும் ரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ரசித்த பாடல்களை மற்றவர்களும் ரசிக்கவேண்டும் என்று பகிர்கிறார். தியாகராஜபாகவதரிலிருந்து இளையராஜா சங்கர்கணேஷ் வரை எவருடைய இசையையும் ரசிக்கவேண்டும் என்ற அழகிய எண்ணம் மட்டுமே. ஆனால் 'சுசீலா அம்மா' என்றால் கூடுதலாக ஒரு பிரியம்.
அடுத்தவர் அவரே ஒரு நல்ல கவிஞராக இருக்கிறார். பல்வேறு விஷயங்களையும் பகிர்கிறார். முடிவில் அதற்குத் தொடர்பான அழகிய பாடலுடன் பதிவை நிறைவு செய்கிறார். பெரும்பாலும் பழைய பாடல்களாக இருக்கின்றன. இருவருமே வெற்றிகரமாக உலாவரும் பதிவர்களாகவே இருக்கின்றனர். ஆக இணையம் என்பது வெறும் இளையராஜா ரசிகர்களுக்கானது என்கிற 'மித்' இங்கே உடைந்து தவிடுபொடியாகி இருக்கிறது.
அது சரி, நல்ல பாடல்கள் ரசிக்கிறவர்களுடைய தளங்கள் உங்கள் கண்களுக்கு எப்படியும் தப்ப முடியாமல் இருக்கின்றனவே அது எப்படி?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... இசை மட்டுமல்ல... எந்தப்படைப்பையும் ரசிக்காமல், (கேட்காமல், பார்க்காமல், உணராமால், etc.,) படைப்பாளியை சிந்தித்து விமர்சிப்பதே இப்போதே வேலை...

படைப்பு மட்டுமல்ல... எல்லாவற்றையுமே...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

Amudhavan said...

வாருங்கள் தனபாலன், மன்னிக்கவும். திண்டுக்கல் தனபாலன்-தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. உங்களை கிட்டத்தட்ட எல்லாப்பதிவுகளிலும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இவர் எப்படி தினசரி எல்லாப்பதிவுகளுக்கும் சென்று கருத்திட்டுக்கொண்டிருக்காறார் என்று லேசான ஆச்சரியத்துடன். நீங்கள் சொன்னபிறகுதான் வலைச்சரம் சென்று பார்த்தேன். அவர்களுக்கும் நன்றி. உங்கள் பதிவுகளும் வித்தியாசமான கோணத்தில் உள்ளன. வாழ்த்துக்கள்.

Anonymous said...


“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல்
இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” - பாரதி

“யாமறிந்த இசைஞரிலே இளையராஜா போல்
விஸ்வநாதன் போல்
ராமநாதன் போல்
தமிழ்நாட்டில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” -

கவிதைக்கு கம்பன்
இசைக்கு இளையராஜா ... இதை
எந்த பாமரும் ஒத்துக் கொள்வான்
பண்டிதரும் ஒத்துக் கொள்வான்.


உங்கள் பதிவில் மீண்டும் காழ்ப்புணர்வு தவிர வேறு வெளிப்படவில்லை.சாதாரண ரஜனி ரசிகன் கூட இப்படி எழுத மாட்டான் .! இசை பாமரன் நீங்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள் !!

வே.மதிமாறன் எழுதுவதற்கு அறிவு நாணயமாக முடிந்தால் பதில் எழுதுங்கள்.சும்மா நாலு பேரை வைத்து கூச்சல் போடாதீர்கள்.
அந்த மேடையில் எம் எஸ் வீ யின் பாடல்கள் பாடப்பட்ட விதம் அவரை அவமானப்படுத்துவதாகவே இருந்தது.மோசமான பாடகர்கள்.
அன்புடன்
thas
ktthas@yahoo.co.uk

Amudhavan said...

உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் நான் எதுவும் பதில்சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

இதுபோன்ற விவாதங்களுக்குத்தான் இளையராஜாவே மேடையில் பதில் சொல்லிவிட்டாரே...."அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" என்று. இதன்பிறகும் நீங்கள் எதுவும் சொல்கிறீர்கள் என்றால் அது இளையராஜாவுக்கு நீங்கள் சொல்லும் பதிலாகத்தான் அமையும்.

யாமறிந்த புலவரிலே போல என்னாலும் நூறு பாடல்கள் நான் நினைப்பதைச் சொல்ல பயன்படுத்த முடியும். இசை என்றாலேயே அது இளையராஜாதான் என்று சும்மா கூப்பாடு போட்டு அகன்றுவிடுவதாலேயே எல்லா விஷயங்களும் நீங்கள் நினைக்கின்ற அல்லது விரும்புகின்ற அலைவரிசைகளுக்குள் அடங்கிவிடாது.
வே.மதிமாறன் என்ன எழுதிவிட்டார்? அவருக்கு எதற்கு பதில் சொல்லவேண்டும்?

அந்த மேடையில் எம்எஸ்வியின் பாடல்கள் எப்படிப் பாடப்பட்டன என்பதை வைத்தா தமிழ்த்திரை இசையுலகைப் பற்றிய சித்தாந்தம் எழுதப்படவேண்டும்?

என்னுடைய பாமரத்தனத்துக்கு நீங்கள் வருத்தப்படுவதை விட்டுவிட்டு தமிழ்த்திரை இசையுலகின் நிற்கப்போகும் பாடல்களை ஒரு பத்து வருடங்களுக்குக் கேளுங்கள்.
இல்லை கேட்டாயிற்று.எனக்கு இசை தெய்வம் இளையராஜாதான் என்று சொல்வீர்களேயானால் தாராளமாக நினைத்துக்கொள்ளுங்கள் ஒரு ஆட்சேபணையும் கிடையாது.

Anonymous said...

10 . Dance At the Gym - Mambo என்ற பாடலில் First Part [ படம்: West Side Story ] music: Leonard Bernstein இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் இருக்கும்.
” என்னைத் தெரியுமா ” [ படம்: குடியிருந்த கோயில் ] என்ற பாடலில் …ஆகா ரசிகன் …ஆகா ரசிகன் ..உங்கள் ரசிகன் என்ற வரிகளை பாடும் போது அந்தப் பாடலின் .

வேகம் அப்படியே வரும்
11 . Jezebel [ Million seller 1951 ] Frank Laine The Norman Luboff Choir இந்த பாடலை அடி ஒற்றி கீழே வரும் மூன்று பாடல்கள்

” சம்போ சிவ சம்போ ” [ படம்: நினைத்தாலே இனிக்கும் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
” பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ” [ படம்: சிவந்த மண் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


12. Rock around the clock – Bill Haley
விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை – P.B.ஸ்ரீநிவாஸ்

13. Do You Wanna Dance – Bobby Freeman
மலர் என்ற முகம் – வெண்ணிற ஆடை – L.R.ஈஸ்வரி

14 . Standing on the corner – Four lads 1956
வீடு நோக்கு ஓடுகின்ற – பதி பக்தி – T.M.சௌந்தரராஜன்

15 . Good Golly Miss Golly – Little Richard 1956
என்ன வேகம் சொல்லு பாமா – குழந்தையும் தெய்வமும் – T.M.சௌந்தரராஜன்
16 . Estrella Morente – my songs and poems

பட்டத்து ராணி பார்க்கும் – சிவந்த மண் – L.R.ஈஸ்வரி

17 . javier solis [ " payaso" ] இந்த பாடலில் கீழ் கண்ட பாடல்களின் சாயல்கள் தெரியும்.
தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி – T.M.சௌந்தரராஜன்
அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் – T.M.சௌந்தரராஜன் இந்தபாடலில் வரும் சிரிப்பு பகுதி மேல் சொன்ன பாடலை ஒத்திருக்கும்.

18 . Teri Pyaari Pyaari surat இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
கண் படுமே பிறர் கண் படுமே – P.B.ஸ்ரீநிவாஸ்

19 . Damaso Perez Pradd – bailando maribo இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – T.M.சௌந்தரராஜன் + L.R.ஈஸ்வரி

20 . Jose Padilla இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் – T.M.சௌந்தரராஜன்

கருத்து முரண்பாடுகளுகப்பால் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தாஸ்

Anonymous said...

ஐயா அமுதவன் அவர்களே

" .."அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" என்று இசைஞானி சொன்னது அவரது பெருந்தன்மையை தான் காட்டுகிறது.
ஆனால் நீங்கள் இதை ஏன் வலிந்து வில்லங்கமாகுக்குறீர்கள் என்பது புரியவில்லை.அது மன உங்கள் பக்குவம்.
ஒரு பேச்சுக்கு நான் கேட்கிறேன்
" ஹிந்தி இசையமைப்பாளர்கள் துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" மெல்லிசை மன்னர் சொல்வாரா ?அல்லது எப்போதாவது கூறியிருப்பாரா ?அவர் சொல்ல மாட்டார் !
சமீபத்தில் இணையத்தில் [ இனிஒரு.காம் inioru.com ] அகப்பட்ட ஒரு அருமையான கட்டுரையில் ஒரு அன்பர் ஒருவர் நுனிப்புல் மேயாமல் எல்லா இசையையும் பற்றி எழுதிய ஆக்கத்திலிருந்து தருகின்றேன்.

அல்லது எப்போதாவது கூறியிருப்பாரா ?

ஹிந்தி திரைப்படப்பாடல்களை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்

04 . Chale Aaj Tum Jahan Se [ படம்: Udan Khatola ] இசை : நௌசாத்
” சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ” [ படம்: பாவமன்னிப்பு ] – T.M.சௌந்தரராஜன்
05 . Dukh Bhare din beete re [ படம்: Mother India ] இசை : நௌசாத்

” எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி
06 . O..gadiWale [ படம்: Mother India ] இசை : நௌசாத்

” மஞ்சள் முகம் நிறம் மாறி ” [ படம்: கர்ணன் ] P.சுசீலா + குழுவினர்
07 . ” அழகே வா அறிவே வா ” [ படம்: ஆலயமணி ] 1963 – P.சுசீலா
Ruk Ja Rat Theher Ja Re [ படம்: Dil ke Mandir ] 1963 இசை : மதன் மோகன் …இந்தப் பாடலில் அழகே வா பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.


08 . ” Tum Muje Yun Bhula Na ” [ படம்: Pagla Kahin ka ] 1970 …
ஒரே பாடல் உன்னை அழைக்கும் – படம்: எங்கிருந்தோ வந்தான் – T.M.சௌந்தரராஜன் ** இசை: எம்.எஸ்.
09 . DIl ka Haal Sune Dilwala – -Shri420 – Mnnaadey + Lata music: Shanker Jaikishan

* சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர – படம்: புதையல் – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்தப் பாடலின் thaal ஒரே மாதிரி amஇருக்கும்.பாடலில் நிறைய சாயல்கள் தெரியும்.Strong Inspiration.
10 . ” Mera Pyar Bhi Tu Hai ” [ படம்: ] இசை :

தங்கத்தில் முகம் எடுத்து [ படம்: மீனவ நண்பன் ]
11 . SAWAN KE BADALO UNSE JA KAHO – RATTAN-1944 - ZOHRA BAI & KARAN DIWAN music::NAUSHAD

* உன்னைத்தான் நானறிவேன் – படம்: வாழ்க்கைப்படகு – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்த பாடலில் வரும் ” என் உள்ளம் என்னும் மாளிகையில உன்னையன்றி யார் வருவார் ” என்ற வரிகள் மட்டும்தான் எடுத்தாடபட்டிருக்கும்.வேறு எந்த இடங்களிலும் சம்பந்தம் கிடையாது.
12 . Main Aashinq Hoon Bacharonka – Film : Ashiq [1962] – Singer: Mugesh இந்த பாடலில் 01 :51 நிமிசத்தில் கீழே உள்ள பாடலின் சாயல் தெரயும்.

புன்னகையில் கோடி – படம் இதயக்கனி – T.M.சௌந்தரராஜன் மேலே உள்ள பாடலின் செயல் நன்றாக தெரியும்.

13 . Jag Dard E Ishq Jag – Anarkali – Lata Mangeshkar + Hemant Kumar Music: C .Ramachandra இசையமைத்த இந்தப் பாடல் , கீழ் கண்ட பாடல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த
பாடலாகும்.
* மயக்கும் மலை பொழுதே நீ போ போ – படம்: குலேபகாவலி – A.M.ராஜா + ஜிக்கி ** என்ற பாடலும்
14 . Dil Dhal Jaye hai raat – singer : rafi music: S.D.Burman

மௌனமே பார்வையால் ஒரு – கொடி மலர் – பி.பி. ஸ்ரீநிவாஸ்

15 . Aat Socha To – film: Hindustan Ki Zakham - Music: Madan Mohan என்ற இந்த பாடலை அடியொற்றி கீழ் கண்ட பாடலை விஸ்வநாதனும் ,இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள்.

தேடும் கண் பார்வை – மெல்லத்திறந்தது கதவு – எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ் ஜானகி
16 . Pekas Pekram Kijike – Film : mugal Eazam – lata Music : Nausad இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ்Anonymous said...

17 . Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad என்ற பாடலில் வரும் ஒரு சிறிய புல்லாங்குழல் இசையை ஆதாரமாகக் கொண்டு
பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை மெல்லிசைமன்னர் மிக அற்ப்புத
18 . தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் – படம் : பெற்ற மகனை விற்ற அன்னை பாடியர்கள் : A.M.ராஜா + P.சுசீலா இந்தப் பாடல் கீழ் வருகின்ற இசைமேதை நௌசாத் இசையமைத்த பாடலின் அகத்தூண்டுதலாகும்.
song :tere sadke balam -FIlm :Amar singer : lata

மேற்கத்தேய இசையை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்.
01 . ” Rhythm of the Rain ” The Cascades- ( Gomme ) 1963

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே [ படம்: எங்கமாமா ] T.M.சௌந்தரராஜன்
02 . ” Rock Around The clock ” bill Haley & The Comets 1956
விஸ்வநாதன் வேலை வேணும் [ படம்:காதலிக்க நேரமில்லை ]


03 . ” Lime Light Title Music ” [ படம்: Lime Light ] இசை : Charlie Chaplin
பந்தல் இருந்தால் கொடி படரும் [ படம்: பந்தபாசம் ] T.M.சௌந்தரராஜன் + எஸ் ஜானகி

04 . Stragers in the night Frank Sinatra
நல்லது கண்ணே கனவு கனிந்தது – ராமன் தேடிய சீதை – சௌந்தரராஜன் + சுசீலா

05 . Laura [ Hits of 1945 ] Woody Herman & HIs Orchestra இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே

” படைத்தானே படைத்தானே ” என்ற பாடலில் [ படம்: நிச்சயதாம்பூலம் ] பயன்டுத்தியிருப்பார்கள்.

06 . Coolwater [ Hits of 1945 ] Vaughn Monroe & Sons of Poineer இந்த பாடலின் வாடை
” யாருக்கு மாப்பிள்ளை யாரோ ” [ படம்: பார்த்தால் பசி தீரும் ] இந்தப் பாடலில் background இசையில் மெதுவாக வீசும்.
07 . Besame Mucho [ 1945 ] Jimmy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்

” அனுபவம் புதுமை ” என்ற பாடலில் [ படம்: காதலிக்க நேரமில்லை ] என்ற பாடலில் வரும் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே …என்ற வரிகளில் சுகமாக வந்து
போகும்.
08 . The Green Cockatoo [ 1946 ] Roberto Inglez & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
” தாபமும் வேகமும் தணித்திடும் பானமடா ” [ படம்: குலேபகாவலி ] இந்தப் பாடலில் அப்படியே வந்து போகும்.

09 . There ‘s No You[ 1945 ] Tommy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
” எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் ” [ படம்: சந்திரோதயம் ] என்ற பாடலில் வரும்.


09 . Across The Valley From the Alamo – [ 1947 ] The Mills Brothers இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் , குறிப்பாக தாளமும் ,கோரசும்
” வீடு நோக்கி ஒடுகின்ற நம்மையே ” [ படம்: பதிபக்தி ] என்ற பாடலில் வரும்

காரிகன் said...

குறிப்பிடப்பட்டுள்ள எல்லா தகவல்களுமே டி சவுந்தர் என்னும் இசை ஆராட்சியாளரின் தமிழ் இசையில் அக தூண்டுதல் என்னும் பதிவில் தெரிவிக்கப்பட்ட செய்திகளே. இதை படித்த உடனே நான் அந்த மேற்கத்திய பாடல்களை கேட்டு பார்த்ததில் எந்த ஒப்புமையும் இல்லை என்று கண்டேன். இரண்டு மூன்று இடங்களில் ஒரே மாதிரியான கோரஸ் மற்றும் வாத்திய அமைப்பே வருகிறது. அப்படி பார்த்தால் இளையராஜா பீதோவன் பாக் மொசார்ட் விவால்டி போன்ற மேற்கத்திய செவ்வியலை நூலிழை பிறழாமல் பிரதி எடுத்தவர்தான். இதே போன்ற ஒரு நீளமான லிஸ்டை எந்நாளும் கொடுக்க முடியும். தயவு செய்து அடக்கி வாசியுங்கள் இளையராஜாவின் விசில்களே.

Amudhavan said...

காரிகன், நீங்கள் பீத்தோவனுக்கும் மொசார்டுக்கும் போய்விட்டீர்கள். நாங்கள் எந்தெந்தப் பாட்டை எந்தெந்த பாட்டிலிருந்து போட்டிருக்கிறோம், எந்தப் பாடல் போட எந்தப் பாடல் அடிப்படை, எந்தப் பாடல் எந்த நாட்டுப்புற மெட்டிலிருந்து எடுத்திருக்கிறோம்,எந்தப் பாடல் கோவில் பஜனைப் பாடலிலிருந்து வந்தது,எந்த டியூனை எப்படி உல்டா செய்திருக்கிறோம் என்பது போன்ற நூற்றுக்கணக்கான விவரங்களைத்தான் தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லி வருகிறாரே கங்கை அமரன்!
இவையெல்லாம் எல்லா இசையமைப்பாளர்களுமே செய்வதுதான். செய்துதான் ஆகவேண்டும்.

எங்கள் இசையமைப்பாளர் 'மட்டும்'அப்படியில்லை, இவருக்கு இணையாக உலகிலேயே யாரும் இல்லை(தற்சமயம் எஸ்.ஜானகி பற்றிய மதிமாறனின் பதிவில் இப்படித்தான் வாதாடுகிறார் காசிமேடு மன்னாரு என்ற பெயரில் வந்திருக்கும் ஒரு 'அறிஞர்')என்றுதான் இன்னமும் சொல்லிக்கொண்டு உலவுகிறார்கள். இந்த மருளிலிருந்தும் இருளிலிருந்தும் வெளியே வாருங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம்.இவருக்கும் முன்பே ஆயிரம் சாதனைகள் செய்தவர்கள் பணிவுடன் இருக்கிறார்கள் அவர்களையும் மதியுங்கள் என்றுதான் சொல்லுகிறோம்.மற்றபடி மற்றவர்களை மதிப்பதும் மதிக்காததும் உங்கள் இஷ்டம். ஆனால் உங்களின் குருட்டாம்போக்கு கருத்துக்களைப் பொதுக்கருத்துக்கள் என்கிற மாதிரி பொதுவெளியில் பரப்பாதீர்கள் என்பது மட்டும்தான் நம்முடைய வாதம்.

Post a Comment