Tuesday, May 6, 2014

பதிவர்களே பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள்!

பதிவுலகில் நான்கைந்து நாட்களாக சில பதிவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வருத்தத்தையே தருகிறது. எதற்காகச் சண்டை? ஏதாவது முக்கியமான பிரச்சினையா? கொள்கை ரீதியான கருத்து மோதல்களா? என்றால் அப்படியெல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை.

இவர்களது பதிவுகளைப் படித்துப் பார்த்தால் ஏதோ கருத்து மோதல்கள் எதற்காகவோ ஒருவரோடொருவர் மோதிக்கொள்கிறார்கள், எதற்காகவோ ஆவேசப்படுகிறார்கள், எதற்காகவோ கறுவிக்கொள்கிறார்கள், எதற்காகவோ சவால் விட்டுக்கொள்கிறார்கள் எதற்காகவோ ஒருவரையொருவர் தூற்றிக்கொள்கிறார்கள் என்பது தெரிகிறதே தவிர-எதற்காக என்பது தெரியவில்லை!


சரி இப்படியே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எங்கே வந்தவுடன் நிற்கப் போகிறார்கள்? எதை அடைந்தவுடன் சமாதானமடையப் போகிறார்கள்? என்ன சாதகத்தை, என்ன பலனை அடைய, இப்படியெல்லாம் போராடுகிறார்கள்? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்கள்? என்பது புரியவில்லை.

யார் இப்படியெல்லாம் அடித்துக்கொள்வது என்று பார்த்தோமானால் மூன்று பேர்.

ஒருவர் வவ்வால்
இன்னொருவர் வருண்
மூன்றாமவர் ஜெயதேவ்.

மூன்று பேருமே இன்றைய தமிழ்ப் பதிவுலகில் குறிப்பிடத்தகுந்த பதிவர்கள்.

பதிவுலகில் ஏகப்பட்ட பதிவர்கள் இருக்கின்றனர். கூகிள் ஏற்படுத்தித் தந்துள்ள சாதகங்களைப் பயன்படுத்தித் தங்கள் எழுத்துக்களை உலகமெங்கும் கொண்டுசெல்லும் வசதியை எப்படி எப்படியோ பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். பலபேர் மொக்கைப் பதிவுகள் போடுவார்கள். நாம் எழுதியதுதான் எழுத்து. நமக்கிருப்பது கட்டற்ற சுதந்திரம், நம்மை யார் கேள்வி கேட்பது, நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் என்று எழுதுபவர்கள் இருக்கிறார்கள். வெறும் சம்பிரதாயமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். சம்பிரதாயத்திற்கும் கீழே எழுதி படிக்கிறவனைப் பதம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்………..

கூர்மையான கண்ணோட்டங்களோடு, வித்தியாசமான களங்களில், தளங்களில் தங்கள் எழுத்துக்களை எழுதி வெளியிடுகிறவர்கள் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்
நாம் நினைப்பதை எல்லாம் எழுதலாம் என்பது இணையம் நமக்குத் தந்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்.

ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டாலோ அல்லது கருத்துத் தெரிவிக்கும் தளங்களில் ஒன்றைத் திறந்துவைத்துக்கொண்டுவிட்டாலோ என்ன எழுதலாம் என்பதும் எப்படியெல்லாம் எழுதலாம் என்பதும் பலபேருக்குத் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம். இதில் சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம். ஆனால் சுய கட்டுப்பாட்டை நமக்கு எப்படி ஏற்படுத்திக்கொள்வது என்பதும் எது சுயக்கட்டுப்பாடு என்பது புரிவதில்லை என்பதும்தான் பிரச்சினை.

இதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்குத் தோதான ஒரு பத்திரிகையை மனதிற்குள் கொண்டுவாருங்கள்.(அது அயனாவரம் பத்திரிகையாகவும் இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகையாகவும் இருக்கலாம்) நீங்கள் எழுதியதை அந்தப் பத்திரிகைக்கு அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இதனைப் பிரசுரிப்பார்களா என்று ஒரு கணம் யோசியுங்கள். பிரசுரிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் தாராளமாக இணையத்தில் அதனை ஏற்றலாம். ‘இதைப்போய் அவர்கள் பிரசுரிப்பார்களா என்ன?’ என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றினால் அதனை நீங்கள் இணையத்தில் ஏற்றாமலேயே இருந்துவிடலாம்.

இந்த வகைக்குள் எல்லாம் வராமல் தன்னிச்சையாக தங்களுக்குள் வரித்துக்கொண்டுவிட்ட வரைமுறைகளுடன் எழுதும் பதிவர்கள் ஒரு ஐம்பது பேராவது இருப்பார்கள்.

அவர்களில் ஒரு இருபது இருபத்தைந்துபேர் பிரமாதமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்த விஷயஞானமும் நல்ல எழுத்தாற்றலும் வித்தியாசமான அணுகுமுறையும் கொண்டவர்களாக இந்த இருபது இருபத்தைந்து பேரைச் சொல்லலாம்.

மேற்கண்ட மூவரும் நிச்சயம் இந்தப் பட்டியலில் வருகிறவர்கள்தாம்.

ரிலாக்ஸ் பிளீஸ் என்ற வலைப்பூவில் எழுதும் வருண், தான் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே போட்டு உடைப்பதைத் தன் பாணியாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். நடுநடுவே சிறுகதைகள் எழுதுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்கிறார்.

தலைகீழ் பார்வையை எழுதும் வவ்வால், எந்தப் பிரச்சினை என்றாலும் ஏழு கடல்களிலும் மூழ்கி தோண்டியெடுத்து வருவதில் விற்பன்னர் என்று பேர் படைத்தவர். கட்டுரைகளில் அசாத்தியம் காண்பித்தபோதிலும் இவர் பிரபலமாகியிருப்பது பின்னூட்டம் போடுவதில்தான். அதில் இவர் ஒரு கில்லாடி என்றே பெயர் பண்ணியிருக்கிறார்.

ஜெயதேவ்தாஸ் ஆத்திகப்பதிவுகள் போடுவதில் மன்னர். அதிலும் ஆத்திகத்தை எதிர்ப்பவர்களுக்கு சளைக்காமல் பதில் கொடுப்பதில் இணையத்தில் இவருக்கு ஈடாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். வினவு தளத்தில் ஆத்திகம் பற்றிய ஒரு விவாதம் தீப்பிடித்துக்கொள்ள பத்துப் பதினைந்துபேர் இவருக்கு எதிராகத் திரண்டு வாதம் செய்தபோது சளைக்காமல் ஒற்றை ஆளாகவே நின்று அத்தனைப் பேரோடும் சமர் புரிந்து இருநூறு பின்னூட்டங்களுக்கும் மேல் வெற்றிகரமாகச் சமாளித்தவர் இவர் என்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல.

ஆக, இந்த மூன்று பேருமே தங்களுக்கென்று தனித்த அடையாளங்களை வைத்திருப்பவர்கள்தாம்.

ஒருவருக்கொருவர் எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல.

ஆனால் எதற்காகவோ இந்த மூன்றுபேரும் இன்றைக்கு இணையத்தில் முட்டிக்கொள்கிறார்கள்; மோதிக்கொள்கிறார்கள். எத்தனை வசவுகள் உள்ளனவோ அத்தனையும் வந்துவிட்டன. எவ்வளவு ஆபாசமாய் ஒருவரையொருவர் விளிக்கமுடியுமோ அவ்வளவும் விளித்தாகி விட்டது. ஒருவரையொருவர் எத்தனை தரம் தாழ்த்தமுடியுமோ அத்தனையும் தரம் தாழ்த்தியாகிவிட்டது. எவ்வளவு திட்டிக்கொள்ளமுடியுமோ அவ்வளவும் திட்டிக்கொண்டாகி விட்டது. மண்டை உடைந்து ரத்தம் கொட்டாததுதான் பாக்கி.
இந்த நிலையில் இருக்கிறது இவர்களுடைய சண்டை.

இன்னமும் தொடர்ந்து சண்டையிட்டு என்ன சாதிக்கப்போகிறீர்கள்?

நீங்கள் மூவரும் ஒன்றும் சின்னப்பிள்ளைகள் அல்ல; விவரம் தெரியாதவர்கள் அல்ல; படிக்காதவர்கள் அல்ல.

நிறையப் படித்தவர்கள், மெத்தப் படித்தவர்கள். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் பவனி வருபவர்கள்.

இத்தனைக்கும் வருண் இருப்பது அமெரிக்காவில். அமெரிக்காவில் நல்ல பொறுப்பில், நல்ல சம்பளத்தில் இருப்பவர் வருண்.

வவ்வால் இருப்பது சென்னையில். தொழில் என்னவென்று தெரியவில்லையே தவிர பெரிய பொறுப்பில் அல்லது பெரிய சம்பாத்தியத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர் வவ்வால்.

ஜெயதேவ்தாஸ் இருப்பது பெங்களூரில். சென்னை ஐஐடியில் படித்து பெங்களூரின் பெரிய நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாய் இருப்பவர்.

ஆக, மூவருக்கும் சமூக அந்தஸ்தும் சரி, பொறுப்புக்களும் சரி, சாதாரண மக்களைவிடவும் கூடுதலாகவே இருக்கின்றன எனலாம்.

மூவரும் மூன்று திசைகளில் இருந்துகொண்டு தொடர்ந்து சண்டையிட்டு எதைச் சாதிக்கப்போகிறீர்கள்?

இங்கே எதற்காக உங்களுக்குள் சண்டை ஆரம்பித்தது என்கிற விவகாரத்திற்கோ இந்த சண்டைக்கெல்லாம் காரணகர்த்தா யார் என்றோ, யார் மீது தவறு இருக்கிறது என்ற விவகாரத்திற்குள்ளோ நுழைய விரும்பவில்லை.

உள்ளே நுழைந்து பார்த்தால் எல்லாவற்றுக்கும் காரணம் ego clash ஆகத்தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இணையத்தில் கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படக்கூடாது என்பது அல்ல. கருத்து மோதல்கள் இருக்கலாம். வேகத்துடன் மோதிக்கொள்ளலாம். ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக்கொள்ளலாம்.

கருத்து மோதல்களில் தீப்பொறி பறக்கவும் செய்யலாம்.

ஆனால் அது பதிவுலகத்தை எரித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையா இல்லையா?

ஏதாவது ஒரு இடத்தில் யாராவது ஒருவர் நிறுத்திவிட வேண்டாமா?

தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி.

என்னுடைய பதிவுகளில் நான் காட்டமாக எதையும் எழுதுவதில்லை.

ஆனால் மாறுபட்ட கருத்தையோ கண்ணோட்டத்தையோ வைத்தாலேயே கோபம் கொண்டு சீறுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நான் எப்படி எதிர்கொள்கிறேன் தெரியுமா?
வாதங்களில் ஈடுபடுபவர்களை அல்ல, மிக மோசமாகவும் கேவலமாகவும் நடந்துகொள்கிற சில அனானிகளைப் பற்றித்தான் சொல்கிறேன்.

சில பொய்யான கற்பிதங்களை உடைத்தாலேயே(அதனை நல்ல வார்த்தைகளில் செய்திருந்தபோதிலும்) கோபம் கொண்டு, ‘விட்டேனா பார்’ கபர்தார்… ஆ… ஊ….. என்றெல்லாம் பேட்டை ரவுடிகள்போல சண்டித்தனம் செய்துகொண்டுவரும் சண்டியர்கள் இருக்கிறார்கள்.

ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமின்றி மிரட்டல் தொனியில் சாபமிடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தவகை சாபமிடுகிறவர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே வருத்தம் தோய்ந்த கவலை உண்டு.

இந்தவகை அனானிகள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்கள் சாபமிட்டால் அது நமக்கு பலித்துவிடும் அளவுக்கு இவர்கள் ஒன்றும் புத்தர்களோ புனிதர்களோ கிடையாது.

அத்தகைய உயர்ந்த ஞானமுக்தி நிலையில் தங்களைப் பொருத்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் இல்லை.

மிக மிக சாதாரண இயல்பு வாழ்க்கை வாழ்கிறவர்கள்தாம் இவர்கள். இவர்கள் ஒருவருக்கு இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும் என்றெல்லாம் மிரட்டல் சாபமிட்டால் அது அடுத்தவரைப் போய் பாதிக்குமா என்ன?

ஆனால் இம்மாதிரி விஷயங்களில் என்ன நடக்கிறது என்றால் இத்தகைய சாபங்கள் யார் தருகிறார்களோ அவர்களையே திரும்ப வந்து அந்த சாபமே தாக்கும் என்பதுதான் உண்மை.

அதுதான் இயற்கை.

இது பகுத்தறிவுக்கெல்லாம் அப்பாற்பட்டு நடைபெறும் ஒரு விஷயம்.

இந்த இடத்தில் மோசமான, அல்லது நெகட்டிவ்வான உதாரணம் வேண்டாம். ஒரு நல்ல உதாரணமாகவே சொல்கிறேன். ஒருத்தர் ஒரு ஆயிரம் ரூபாயை நமக்குத் தருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அதனை நான் வாங்கிக்கொண்டால்தானே அது என்னைச் சேரும்!

வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் என்றால் அது கொடுக்கவந்தவருடைய பாக்கெட்டைத்தானே மறுபடியும் சென்று சேரும்.

அதுபோலவேதான் சாபங்களும்….

சாபங்களை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? அதுவும் இணையத்தின் வழியாக வரும் சாபங்களையும் வசவுகளையும்?

எனக்கு இயற்கை சக்தி, ஆன்ம சக்தி போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. சில பயிற்சி முறைகளையும் கற்றிருக்கிறேன்.

நோ தாங்ஸ் என்று மறுத்துவிட்டால் – கவனியுங்கள், கோபம் எதுவுமின்றி அதனை எழுதிய அனானிக்கே போய்ச்சேரும் விதமாக திருப்பியனுப்பிவிட்டால் -நிச்சயமாக அதனை அனுப்பிய அனானியையே அது பன்மடங்கு வேகத்துடனும் வீர்யத்துடனும் சென்று தாக்கும் வல்லமையை அது பெற்றுவிடுகிறது. ‘அடப் பாவமே’ என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இது மோசமான அனானிகளை நான் எதிர்கொள்ளும் முறை.

நல்ல வேளையாக இந்த மூன்று பதிவர்கள் மத்தியிலும் இப்படிப்பட்ட அனானிகளெல்லாம் இல்லை.

இவர்களுக்கான ஈகோ யுத்தத்தை இவர்களாகவே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் மற்ற பதிவர்கள் மத்தியில் இது வரவேற்பையோ ஈடுபாட்டையோ உருவாக்கவில்லை என்பதை இவர்கள் உணரவேண்டும்.

உங்களின் தேவையற்ற கோபதாபங்களை விட்டுவிட்டு இயல்புக்கு வாருங்கள் நண்பர்களே.

தமிழ்ப் பதிவுலகம் இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

51 comments :

தி.தமிழ் இளங்கோ said...

” யாருய்யா! அது? ஊர் அமைதியைக் கெடுத்துக் கொண்டு? “ – நன்றாகவே ஒரு அதட்டல் போட்டீர்கள்.

பதிவர்கள் சண்டையைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். நானும் பாதிக்கப்பட்டு, இதுபோல ஒரு சண்டையை போட்டு இருக்கிறேன் (ஒரு பதிவை எழுதியதோடு சரி. கண்ணதாசன் சொன்ன குட்டிக் கதை ஞாபகம் வந்ததால் தொடரவில்லை)
.
அவரவர் வேலையை அவரவர் பார்ப்பது போல, அவரவர் கொள்கையை (?) அவரவர் பதிவுகளில் விளக்கினால் போதும். ஆனால் சிலர் அனாவசியமாக தனக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் தளத்திற்கு சென்று அடாவடி செய்யும் போதுதான் பிரச்சினையே உண்டாகிறது. அதிலும் இவர்களில் பெரும்பாலோர் ஊர் பேர் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள்.

உங்களது நல்லெண்ண முயற்சி நன்மையாகவே முடியட்டும்.
நன்றி!

த.ம.1


காரிகன் said...

அமுதவன் அவர்களே,
இப்போதுதான் அறிந்தேன். பயங்கர கலவரமே நடந்திருக்கிறது. (என்னது காட்ட பொம்மன தூக்குல போட்டான்களா?) எதையோ சொல்ல விரும்பினாலும், அந்தப் போர் இங்கேயும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மவுனியாக இருக்க வேண்டிய நிலை.

பால கணேஷ் said...

எனக்கும் கருத்து மோதல் என்கிற விஷயத்தைத் தாண்டி இப்படிச் சண்டை நடப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. வவ்வாலை நிறையவும் வருணைக் கொஞ்சமாகவும் ஜெயதேவ் தாஸைப் படிக்காதவனாகவும் இருக்கிறேன். இருப்பினும் மூவரும் விஷய்ம் நிரம்பிய அறிவாளிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.உங்கள் முயற்சி வென்று சண்டை ஒய்ந்தால் மிகமகிழ்வேன். (அதுசரி... நன்றாக எழுதுவதாக நீங்க சொல்லும் அந்த 20 பதிவர்களின் லிஸ்டை வெளியிடுங்களேன் ப்ளீஸ்.... தொடர்ந்து படிச்சு என்னை வளர்த்துக்க உதவியா இருக்கும்-)

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\அதிலும் இவர்களில் பெரும்பாலோர் ஊர் பேர் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள்.

உங்களது நல்லெண்ண முயற்சி நன்மையாகவே முடியட்டும்.\\

பலபேர் அலுவலகங்களிலிருந்தே செயல்படுவதாலும், தாங்கள் பணியாற்றும் இடங்களில் தங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கட்டும் என்பதற்காகவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.(இன்னமும் பல காரணங்கள் இருக்கக்கூடும்) நமக்கு அதெல்லாம்கூடத் தேவையில்லை. நம்முடைய முகமும் அடையாளமும் தெரியப்போவதில்லை. அதனால் நாம் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தங்களுக்குத் தாங்களே வரித்துக்கொள்கிறார்களே அதுதான் தவறாகப் போய்விடுகிறது.
உங்களைப் போலவேதான் நானும் எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்றே விரும்புகிறேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\இப்போதுதான் அறிந்தேன். பயங்கர கலவரமே நடந்திருக்கிறது. (என்னது காட்ட பொம்மன தூக்குல போட்டான்களா?) எதையோ சொல்ல விரும்பினாலும், அந்தப் போர் இங்கேயும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மவுனியாக இருக்க வேண்டிய நிலை.\\

இதையும் தாண்டிய சதிராட்டங்கள் இணையத்தில் நடந்துள்ளன. ஆனால் இங்கே சம்பந்தப்பட்ட மூன்று பதிவர்களுமே தனித்த அடையாளங்களுடன் உலா வருகின்றவர்கள்...... இந்தச் சண்டையை எதுவரை எடுத்துச் செல்லப்போகிறார்கள்? அதற்குப்பின் என்ன செய்யப்போகிறார்கள்?
அதனால்தான் இதுவே போதும் நிறுத்திக்கொள்ளுங்களேன் என்ற அன்புரை.

Amudhavan said...


பால கணேஷ் said...

\\ எனக்கும் கருத்து மோதல் என்கிற விஷயத்தைத் தாண்டி இப்படிச் சண்டை நடப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை.\\

உங்களைப் போன்றேதான் நிறையப்பேருக்குப் பிடிக்கவில்லை கணேஷ்.
\\ இருப்பினும் மூவரும் விஷய்ம் நிரம்பிய அறிவாளிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.உங்கள் முயற்சி வென்று சண்டை ஒய்ந்தால் மிகமகிழ்வேன். (அதுசரி... நன்றாக எழுதுவதாக நீங்க சொல்லும் அந்த 20 பதிவர்களின் லிஸ்டை வெளியிடுங்களேன் ப்ளீஸ்.... தொடர்ந்து படிச்சு என்னை வளர்த்துக்க உதவியா இருக்கும்-)\\

அவர்கள் மூவருமே விஷயம் நிரம்பிய அறிவாளிகள் என்பது உண்மை.
'அந்த லிஸ்டை' இப்போதே கொடுத்து அந்த 'லிஸ்டில் இல்லாதவர்கள்' என்னைத் திட்ட ஆரம்பித்துவிடும் காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்களே நியாயம்தானா?

வலிப்போக்கன் said...

என்னாது சண்டையா....???? அவர்களுக்குள் கட்டப்பஞ்சாயத்து பன்ன ஆட்கள் இல்லையா.....???????

Anonymous said...
This comment has been removed by the author.
Amudhavan said...

வலிப் போக்கன் said...

என்னாது சண்டையா....???? அவர்களுக்குள் கட்டப்பஞ்சாயத்து பன்ன ஆட்கள் இல்லையா.....???????

வாருங்கள் வலிப்போக்கன். பதிவுலகில் அதிகம் பேசாமல் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு பாரா அல்லது இரண்டு பாராக்கள் என்று மட்டுமே எழுதிவரும் நீங்கள் உங்கள் கருத்தையும் இங்கே இரண்டே வரிகளில் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லைதான்.

Amudhavan said...

Anand Ramakrishnan said...

\\உங்களை போல் எல்லோரும் இருந்தால் சண்டையே வராது.. மேலும் அங்கே பின்னூட்டம் இட்டது நான் தான் மன்னிப்பு கேட்டாலும் விட மறுக்கிறார்கள்.. பதிவு உலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவன் நான். யாரவது இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தால் நலமாக இருக்கும்.\\

வாருங்கள் ஆனந்தகிருஷ்ணன். உங்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. மன்னிப்பு கேட்டபிறகும் உங்களை விடாமல் காய்ச்சி எடுக்கிறார்கள் என்றால் அது தவறுதான்.
கவலையை விடுங்கள். நிச்சயம் பிரச்சினை சுமுகமாய் முடியும்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வணக்கம்,

ஏதேனும் அரசியல்ப்பதிவு வரும்னு நினைச்சேன் , என்னமோ நகைச்சுவைப்பதிவு போல தெரியுதே அவ்வ்!

கலைஞர் தொ.கா அதிகம் பார்ப்பிங்களோ, தமிழர்களே ,தமிழர்களே கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என செவிகளில் ரீங்காரமிடுகிறது :-))

#//பதிவுலகில் நான்கைந்து நாட்களாக சில பதிவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வருத்தத்தையே தருகிறது. எதற்காகச் சண்டை? //

சண்டை நடக்குதா சார், ,ஒன்னும் சத்தமே கேட்கலையே , யாரோ விசில் அடிக்கிறாங்கனு நினைக்கிறேன்!

எங்கேயாச்சும் சண்டை நடந்தா நானெல்லாம் அந்தப்பக்கமே போகமாட்டேன் , ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம் ,பரமசாது!

# ஆடிய ஆட்டம் என்ன ,ஓடிய ஓட்டம் என்ன?
தேடிய செல்வம் என்ன?

கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? என்ன?

வ்வூ..ஊவ்..ஊவ்!

பதிவுவரை பின்னூட்டம்,

மகுடம் வரை தமிழ்மணம்,

கூகிள் வரை அலெக்சா,

கடைசி வரை யாரோ?

#//யார் இப்படியெல்லாம் அடித்துக்கொள்வது என்று பார்த்தோமானால் மூன்று பேர்.

ஒருவர் வவ்வால்
இன்னொருவர் வருண்
மூன்றாமவர் ஜெயதேவ்.//

யார் சார் இவிங்களாம் எங்கேயோ கேள்விப்பட்ட பேருங்க மாரியே இருக்கு?

நீங்க சொன்னீங்களே ,என்ன சண்டைனு தேடிப்பார்த்தேன் , ரெண்டுப்பேரு தானே மாத்தி மாத்திப்பதிவு போட்டிருக்காங்க, வவ்வால் பேரு என்னமோ அக்யூஸ்ட் போல இருந்தாலும், சண்டைப்போடுறாப்போல பதிவொண்ணும் போடக்காணோமே? ஏதோ ஒரு ஏரோபிளேனை திருடிட்டாங்களாம், அமெரிக்காவாலேயே கண்டுப்பிடிக்க முடியலையாம் , இவரு கண்டுப்பிடிச்சுடுவேன் மாதிரி ஒரு மொக்கை பதிவு தான் போட்டிருக்கார் ,அவ்வ்!

ஒரு வேளை இனிமே சண்டைப்போடுறாப்போல பதிவு கிதிவு எழுதுவாராயிருக்கும், அதுக்குள்ள அவரையும் சண்டையில் சேர்க்கலாமா, கொஞ்சம் வெயிட் செய்துப்பார்ப்போம் ஆசாமி சண்டையில குதிக்கிறாரா இல்லை

'அமைதிக்கு பெயர் தான் சாந்தி

,அந்த அலைகளில் ஏதடி சாந்தி ,ஓம் சாந்தி ஓம் ...னு போறாரானு பார்ப்போமே!

#// தவிர-எதற்காக என்பது தெரியவில்லை!//

என்னோட அவதானிப்பை சொல்லுகிறேன்,

ஐன்ஸ்டீன் சொன்னதுலவே குறை சொல்லலாமா ,அவர் எம்மாம் பெரிய சயிண்டிஸ்ட்னு பொங்குறாங்க, எப்படி ராசா மட்டுமே இசையமைப்பாளர்னு நம்புறவங்ககிட்டே பேச முடியாதோ அதே போல "ஐன்ஸ்டீன் தான் அறிவியலின் பாதிக்கடவுள்" என நம்புறவங்கக்கிட்டேயும் பேச முடியாது அவ்வ்!

வவ்வால் said...

பாலகணேஷர்,

//வவ்வாலை நிறையவும்//

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் அதை தவிர என்ன சொல்ல?

எனவே

நன்றி!

#//அதுசரி... நன்றாக எழுதுவதாக நீங்க சொல்லும் அந்த 20 பதிவர்களின் லிஸ்டை வெளியிடுங்களேன் ப்ளீஸ்.... தொடர்ந்து படிச்சு என்னை வளர்த்துக்க உதவியா இருக்கும்-)//

எனக்கும் வேண்டும் ,நானும் வளரணும், உங்களூக்கு சொன்னால் எனக்கும் ஒரு காப்பி கொடுங்க!

ஸ்விஸ் பேங்க்ல கருப்பு பணம் வச்சிருக்கவங்க லிஸ்ட்டை விட ரொம்ப ரகசியமான லிஸ்ட்டா இருக்கும் போலவே அவ்வ்!

குட்டிபிசாசு said...

தங்களின் அன்பான அதட்டலுக்கு நன்றி. ஒருவேளை நீங்கள் இன்றுதான் இதுபோன்ற சண்டையை பார்த்தீர்களோ என்னமோ? நாம் எதாவது சொன்னால் "நீ என்ன அவனுக்கு ஜால்ராவா" என்று கேட்பார்கள். உங்களுடைய வயதிற்கும் பொறுமைக்கும் அந்த பிரச்சனை வராது.

குட்டிபிசாசு said...

//ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமின்றி மிரட்டல் தொனியில் சாபமிடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தவகை சாபமிடுகிறவர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே வருத்தம் தோய்ந்த கவலை உண்டு.//

இவர்கள் நமக்குத் தெரியாத அனானியாக இருந்தால் பரவாயில்லை. அதுவே நமக்குத் தெரிந்த ஒருவர் வேறொரு பெயரில் வந்து திட்டினால் என்ன செய்வது. ஒன்று நீங்கள் சொல்வது போல் தூற்றுவார் தூற்றட்டும் என்று போய்விடலாம். அதுவே சுலபமான நல்லவழியும் கூட. ஆனால் இத்தாக்குதல் மேலும் தொடர்ந்தால் பின்னூட்டமிட்டவரின் ஐபி, எவ்விடத்திலிருந்து எந்நேரத்தில் பின்னூட்டமிட்டார்கள், எழுதும்முறை என்று கொஞ்சம் ஜேம்ஸ்பாண்ட் வேலைசெய்தால் உண்மை தெரிய வரும்.

Anonymous said...

//பதிவு உலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவன் நான். யாரவது இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தால் நலமாக இருக்கும். நன்றி. //

ஆனந்த் ராமகிருஷ்ணன்,
பின்னூட்டத்தில் விதண்டாவாதம் செய்வது கூட பெரிய விஷயமல்ல. ஆனால், வவ்வாலுக்கெதிரா ஒரு blog தொடங்கி, அதில் comments-ஐ image ஆக பதிவாக போட்டது மிகப்பெரிய தவறு.

நீங்கள் அந்த blog-ஐ delete செய்தால், பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன்.

Angel said...

மிக அழகாக சொன்னீங்க ஐயா ...
ஒருவர் மனதும் புண்படாம சொன்ன உங்களுக்கே ஒரு மைனஸ் ஓட்டு :( போட்டிருக்காங்க யாரோ ..

Amudhavan said...

வவ்வால் said...
\\சண்டை நடக்குதா சார், ,ஒன்னும் சத்தமே கேட்கலையே , யாரோ விசில் அடிக்கிறாங்கனு நினைக்கிறேன்!

எங்கேயாச்சும் சண்டை நடந்தா நானெல்லாம் அந்தப்பக்கமே போகமாட்டேன் , ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம் ,பரமசாது!\\

\\#//யார் இப்படியெல்லாம் அடித்துக்கொள்வது என்று பார்த்தோமானால் மூன்று பேர்.

ஒருவர் வவ்வால்
இன்னொருவர் வருண்
மூன்றாமவர் ஜெயதேவ்.//

யார் சார் இவிங்களாம் எங்கேயோ கேள்விப்பட்ட பேருங்க மாரியே இருக்கு?\\


\\எனக்கும் வேண்டும் ,நானும் வளரணும், உங்களூக்கு சொன்னால் எனக்கும் ஒரு காப்பி கொடுங்க!

ஸ்விஸ் பேங்க்ல கருப்பு பணம் வச்சிருக்கவங்க லிஸ்ட்டை விட ரொம்ப ரகசியமான லிஸ்ட்டா இருக்கும் போலவே அவ்வ்!\\
சண்டைச் சச்சரவுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் பதிவுலகை இவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறவர் நீங்கள்தான். இதுதான் வவ்வால். ரொம்பவும் ரசித்துச் சிரித்தேன்.

Amudhavan said...

குட்டிபிசாசு said...
\\ஆனால் இத்தாக்குதல் மேலும் தொடர்ந்தால் பின்னூட்டமிட்டவரின் ஐபி, எவ்விடத்திலிருந்து எந்நேரத்தில் பின்னூட்டமிட்டார்கள், எழுதும்முறை என்று கொஞ்சம் ஜேம்ஸ்பாண்ட் வேலைசெய்தால் உண்மை தெரிய வரும்.\\

நம்மைச் சுற்றிலும் இணையத்தின் சந்துபொந்துகளெல்லாம் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்களா, அவர்களது உதவியுடன் அப்படிச் சிலரின் அடையாளங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். சில பெரிய மனிதர்களைப் பற்றி நான் எழுதும்போது அவர்களைப் பற்றி 'இப்படி' அநாகரிகமாய் வந்து வாந்தியெடுப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு எல்லைவரை பேசாமல் இருக்கலாம். எல்லைகள் மீறப்படும்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் அத்தனைத் தகவல்களையும் கொடுத்து இனிமேல் நீங்களாச்சு, இந்த அனானிகளாச்சு என்று சொல்லணுமில்லையா........!

வருண் said...

Amudhavan Sir: I am sorry that "this rough time" bothers you. I am not going to explain who started that and that "I am innocent in every count" and all. Because I know how things work in this internet world. What I think is, this ugly fight will go for a while and stop. When there is a start will be a stop too. I will stop when/if I really get busy. Right now, a "comedy series" has been just started and going on really well. Only couple of episodes have been finished so far with little effort. So, I am not sure I can stop it immediately. However I dont want TM to get mad at me and stop me from aggregating my blog posts in the future. I do care about that part. Let me see what I can do. I can not make any promises. I STRONGLY BELIEVE I HAVE ALL the RIGHT to TELL the WORLD THAT I DID NOT SHOW UP as an ANONYMOUS GUY and INSULTED anybody. That's where my "retaliation" got initiated. My conscience will kill me if I lie BOLDLY. That's me. But you know this is a very big world with all sort of people and I cant speak for others' consciences if they really have a good one. :)

Please do not respond to my post and run into trouble. You can publish or you can leave unpublished, it is up to you of course. This response is just to show you that I am considering your request. I am really sorry that it bothers you and other well-wishers in the blog world. But dont worry about me (if at all you do), I feel great. :) Let me stop here! :) Glad that you care!

Amudhavan said...

Alien said...
\\ஆனந்த் ராமகிருஷ்ணன்,
பின்னூட்டத்தில் விதண்டாவாதம் செய்வது கூட பெரிய விஷயமல்ல. ஆனால், வவ்வாலுக்கெதிரா ஒரு blog தொடங்கி, அதில் comments-ஐ image ஆக பதிவாக போட்டது மிகப்பெரிய தவறு.

நீங்கள் அந்த blog-ஐ delete செய்தால், பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன். \\

சரியான கருத்து ஏலியன். போகவேண்டிய ஊருக்கு வழி சொல்லியிருக்கிறீர்கள்.

Amudhavan said...

Angelin said...

\\மிக அழகாக சொன்னீங்க ஐயா ...
ஒருவர் மனதும் புண்படாம சொன்ன உங்களுக்கே ஒரு மைனஸ் ஓட்டு :( போட்டிருக்காங்க யாரோ ..\\

வாங்க ஏஞ்சலின், இவை எல்லாம் சேர்ந்ததுதான் பதிவுலகம்.

Amudhavan said...

வருண் said...
\\I know how things work in this internet world. What I think is, this ugly fight will go for a while and stop. When there is a start will be a stop too. I will stop when/if I really get busy. \\

நீங்கள் எழுதத் தொடங்கிவிட்ட 'சீரியல்கள்' மேலும் அதிகமான மனத்தாங்கல்களை ஏற்படுத்தாமல் இப்போதைக்கேனும் அமைதியான முறையில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய - மற்றும் பல பதிவர்களின் எண்ணம் வருண்.
நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் நிலை விரைவில் வர எங்களின் நல் விருப்பம்.

Anonymous said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

//நம்மைச் சுற்றிலும் இணையத்தின் சந்துபொந்துகளெல்லாம் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்களா, அவர்களது உதவியுடன் அப்படிச் சிலரின் அடையாளங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். சில பெரிய மனிதர்களைப் பற்றி நான் எழுதும்போது அவர்களைப் பற்றி 'இப்படி' அநாகரிகமாய் வந்து வாந்தியெடுப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு எல்லைவரை பேசாமல் இருக்கலாம். எல்லைகள் மீறப்படும்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் அத்தனைத் தகவல்களையும் கொடுத்து இனிமேல் நீங்களாச்சு, இந்த அனானிகளாச்சு என்று சொல்லணுமில்லையா........! //

அமுதவன் ஐயா,

நல்ல வேலை செய்தீர்கள். நீங்கள் இப்போது சொன்ன பதிலில் அனானி பின்னூட்டம் போட்ட பலபேர் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல முழித்துக் கொண்டிருக்கலாம். இனிமேல் வரவும் பயப்படுவார்கள். :)

வவ்வால் said...

அனானி ஆனந்து,

//ஆனால் வவ்வால் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏனென்றால் அவர் என் தாயைப்பற்றி அவதுறாக சொல்லியிருக்கிறார். அவர் அதை செய்தால் கண்டிப்பாக உங்கள் எண்ணம் போல் செய்கிறேன். //

என்ன கொடுமய்யா இது ? அநாகரிகமா பேச ஆரம்பிச்சது நீயா,இல்லை நானா?

அதுவும் ஒரு நாள் வெயிட் செய்துப்பார்த்துவிட்டு தான் உன்னை கலாய்ச்சேன்,இதுல நான் மன்னிப்புக்கேட்கனுமாம்ல அவ்வ்!

தம்பி அந்த பதிவை அப்படியே வச்சிக்க , வருங்காலத்துல மியூசியத்துல வைப்பாங்க அவ்வ்!

# ஈரோடா இல்லை கோவையா சொந்த ஊரு? ரெண்டுப்பேரும் ஒரே ஆளா இல்லை வேற ஆளானு நானே "கண்டுப்பிடிச்சுக்கிறேன்" ஹி...ஹி நமக்கு ஆராய்ச்சினா ரொம்ப புடிக்கும் :-))

உனக்கு சில லீகல் மேட்டர்லாம் தெரியாது , நான் அடிச்சா ஆப்பு ஸ்ட்ராங்கா இறங்கும், இப்போ கன்பியூஷனே உண்மையில எதுனா செய்யலாமா ,வேண்டாமா என்பது தான்,அதுக்கு நீ உருவாக்கி வச்சிருக்க பதிவு தான் கை கொடுக்கும் எனவே அவசரப்பட்டு டெலிட் செய்துடாதே :-))

வவ்வால் said...

அமுதவன் சார்,

//நீங்கள் எழுதத் தொடங்கிவிட்ட 'சீரியல்கள்' மேலும் அதிகமான மனத்தாங்கல்களை ஏற்படுத்தாமல் இப்போதைக்கேனும் அமைதியான முறையில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய - மற்றும் பல பதிவர்களின் எண்ணம் வருண்.//

விதி வலியது , அதாவது இயற்கையின் விதி வலியது,ஆனானப்பட்ட டைனோசரஸ் இனமே ஒரு விண்கல் மோதலில் இருந்த இடம் தெரியாம போய் ,இப்போ அரியலூரில் ஃபாசில் முட்டைகள் எடுக்கிறாங்க அவ்வ்.

ஹி...ஹி கயல்ழியின் காதல்கள் என ஒரு "நவரசம்" சொட்டும் தொடர்கதை ஒன்னு எழுதலாமானு பார்க்கிறேன் , அதை மட்டும் படமா எடுத்தா கேரளாவில சில்வர் ஜூப்ளி ஓடும்!!!

நான் கைய வச்சுக்கிட்டு சும்மா இருப்பதா ,இல்லையானு பூவா தலையா போட்டுப்பார்த்து தான் முடிவெடுக்கணும் ,மத்தபடி "ஆல் டீடெயில்ஸ்' கைவசம் :-))

திண்டுக்கல் தனபாலன் said...

அட போங்க சார்... வேற வேலையில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

/// அப்படியெல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை... எதற்காக என்பது தெரியவில்லை... ///

பிறகு ஏன் சார் நீங்கள்...?

திண்டுக்கல் தனபாலன் said...

///இதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.///

தளத்தில் அதற்கான அமைப்புகள் (settings) இருக்கிறதே...? பிறகென்ன...?

திண்டுக்கல் தனபாலன் said...

முடிந்தால்... (முதலில் நீங்கள்...?!!!!!) மூன்று பேரும் (தொழிற்நுட்ப பதிவுகள் தவிர்த்து) சமீபத்திய எனது 5 பதிவுகளுக்கு பின்னூட்டம் போடச் சொல்லுங்கள்... பார்ப்போம்...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Angry.html - செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!
http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html - பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?
முக்கியமாக http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Clay-Man.html - இது உடம்பா ? இல்லை விடுதியா ?
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/Selfishness.html - சுயநலம் தேவை...!
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/All-is-well.html - சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!

திண்டுக்கல் தனபாலன் said...

தி.தமிழ் இளங்கோ அவர்கள் இப்போது தான் அமைப்புகள் (Comment approval settings) மாற்றி உள்ளார்...

திண்டுக்கல் தனபாலன் said...

கவனிக்க : எனது (நம்ம) நண்பரின் (ஜோதிஜி அவர்கள்) தளத்தில் சமீபத்திய பதிவுகளில் சில விலங்குகள் தொல்லை குறைந்துள்ளது...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் நினைத்தாலும் சிலவற்றை சிலபேரை மாற்றவே முடியாது...

முடிவாக உங்கள் பதிவு நீங்கள் வெளியிட்டு மறுபடியும் revert to draft செய்து உள்ளீர்கள்...! சரி தானே...?

காலையிலே உங்களின் பதிவு எனக்கு வந்து விட்டது.... ??? !!!!

saamaaniyan said...

முதலில் இந்த பதிவுக்காக என் நன்றிகள் ! யார் யாருடன் சண்டையிட்டால் என்ன என்று எண்ணாமல் ஒரு மூத்த சகோதரரின் கண்டிப்புடன் எழுதியிருக்கிறீர்கள் !

வளைப்பூவுலகத்துக்கு மிக இளையவனான எனக்கும் அதிகம் கண்ணில்படுவது ஒருவருகொருவர் தூற்றிக்கொள்ளும் வார்த்தை பிரயோகங்கள்தான் !

இதற்கான காரணம் உங்களின் பதிவிலேயே ஒளிந்திருப்பதாக நினைக்கிறேன்... இது ஒருவிதமான உளவியல் பிரச்சனை !

ஓரளவுக்கு கல்வியறிவும், உலக ஞானமும் கொண்டவர்களால்தான் வலைப்பூ அரம்பிப்பது சாத்தியம். அப்படி பார்த்தால் வலைஞர்கள் அனைவருமே சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள்தான். படிப்பும் பண்பாடும் கொண்டவர்கள், நாகரீகமின்றி நடப்பவர்களை கண்டால் ஒதுங்கி போவதுதான் இயல்பாக நடக்கும்.... உண்மை வாழ்க்கையில் !

சமூகத்தின் அந்தஸ்து வரைமுறைகளுக்குள் வாழ்க்கையை அமைத்துகொண்டவர்கள் இணையத்தின் அடையாளமற்ற சூழலை தங்களுக்கு வடிகாலாக மாற்றிகொள்கிறார்கள் ! வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் " சாரி " சொல்லிய பழகிவிட்ட நமக்கு வலைப்பூவின் வடிவமற்ற அரூப முகமூடி " இறங்கி விளையாட " வாய்ப்பாக அமைந்துவிடுகிறது !

தெருவில் போகும் போது " ழேய் ! " என குடிபோதையில் வம்ப்புக்கிழுப்பவனுடன் சரிசமமாக நின்றால் " என்ன சார் ! நீங்க போயி ... " என சமூகம் நம்மை ஏசும்... அதுவே வலைப்பூவென்றால்... " இப்ப இன்னான்னுற நீ " என நமக்கு விலக்கபட்டதை சுலபமாய் பேசிவிடலாம் !

இணையத்தைன் அபத்தங்களில் இதுவும் ஒன்று !

இப்படி தூற்றிக்கொள்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்... " வாய்ப்பு கிடைக்கும்வரை அனைவரும் யோக்கியமே " என்ற சொல்லாடல் ஒன்று உண்டு, அதுபோல உங்களின் அடையாளங்கள் அறியப்படும் இடத்தில் நீங்கள் கண்ணியம் காப்பதில் ஆச்சரியம் இல்லை ! நீங்கள் யாரென்று தெரியாத இடத்தில் உங்கள் வாயிலிருந்து விழும் வார்த்தைகளே உங்களின் உண்மை குணத்தை தீர்மானிக்கும் !

நன்றியுடன்
சாமானியன்

( அமுதவன் சார், இணையத்தின் இளையவனான எனது வலைப்பூவுக்கு வருகைதந்து அதன் நிறை, முக்கியமாய் குறைகளை சுட்டிக்காட்டினால் மகிழ்வேன் ! )

saamaaniyan.blogspot.fr

Anonymous said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துரைகள் வெளியிடுவதில் உங்களின் சில சொடுக்குகளில் உள்ளது என்பதை சொல்லவே நேற்று சில தகவல்களை அனுப்பினேன்... அனைவரும் இது போல் செய்தால் பிரச்சனை ஏது...? மேலும் ஒரு பதிவில் http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html-இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...! என்னும் தலைப்பு வலைத்தளத்திற்கு மட்டுமல்ல...

Settings--> Posts and and comments--> Who can comment--> Registered User
Settings--> Posts and and comments-->Comment Moderation-->Always

இந்த இரு settings செய்து விட்டால் அனைத்தும் நலம்...

புரிதலுக்கு நன்றி ஐயா...

வருண் said...

என்ன சார் இங்கேயும் வந்து விக்கி நக்கி சண்டியர்த்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டான் போல?

அமுதவன் சார், இங்கேயும் அவனுக்கு செருப்படி கொடுக்கவா?

தேவையே இல்லாமல் கயல்விழி காதல் கதை அவன் ஆத்தா காமக்கதை னு பேசிக்கிட்டு இருக்கான்? கயல்விழி என்ன ? அவன் விக்கி நக்கி ஆத்தா காம ஸ்டோரி கூட எழுதலாமே? பூச்சாண்டி காட்டுறான் போல!

தேவையே இல்லாமல் சம்மந்தமில்லாத பதிவரை இழுத்தால் செருப்பு பிய்யும்! னு சொல்லி வைங்க! He needs to face legal consequences too if he talks about bloggers who have nothing to do with this issue.

ஏன் அடிபட்ட நாய் மாரி கொரைக்கிறான்?

* எவனாவது அனானியை வருண்னு சொல்றது

*கண்டவனையும் இவன் பொண்டாட்டி அப்பங்கிற மாரி மாமானு கூப்பிடுறது.

Ask him to watch out. Otherwise his mom's love story will come out too!

யாரை மிரட்டுறான்? அனானி நாயி! என்னவோ இவன் ஊர் பேரை அட்ரெஸை எல்லாம் கொடுத்து ப்ரஃபைல் இருக்க மாரி உதார் விடுறான். இவனும் ஒரு அனானி நாய்தான்! சொல்லி வைங்க சார்!

Please publish this otherwise remove his unnecessary comment about another blogger kayalvizhi, Sir. Thank you!

வவ்வால் said...

அமுதவன் சார்,

இடைஞ்சலுக்கு வருந்துகிறேன் , இப்பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிறேன் ,அதன் பின்னர் எதுவும் கருத்திட போவதில்லை!
------------------

மாமோய்,

//He needs to face legal consequences too if he talks about bloggers who have nothing to do with this issue.//

ஒரு அக்கியூஸ்ட்டே இப்படிலாம் பேசுதே ஹைய்யோ ஹையோ அவ்வ்!

எலே மாமா "அப்படி கிப்படி" ஒரு ஆசையில புகார் கொடுக்க போயிறாத 'நீ தானா அந்த "சைக்கோ வருணு' உன்னத்தான் இத்தினி நாளா தேடினோம்னு புடிச்சு உள்ள போட்டிருவாங்க.

நீ தொடர் எழுதுவியாம் ,நான் தொடர்கதை எழுதுவேணாம் , எதுநல்லா இருக்கோ அவிங்களுக்கு 'சாகித்ய அகாதமி' அவார்டு கொடுப்பாங்கலாம் :-))

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...

\\ நீங்கள் நினைத்தாலும் சிலவற்றை சிலபேரை மாற்றவே முடியாது...\\

தனபாலன், நீங்களாகவே முன்வந்து இணையத்தில் பலருக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்துவருகிறீர்கள் என்று தெரியும். அதற்காகப் பாராட்டுக்கள் உங்களுக்கு.
மேற்கண்ட உங்களின் வாசகம் மட்டும் இந்த விஷயத்தில் பலிக்காமல் போகட்டும். நன்றி.

Amudhavan said...

saamaaniyan said...
\\இது ஒருவிதமான உளவியல் பிரச்சனை !\\

\\ஓரளவுக்கு கல்வியறிவும், உலக ஞானமும் கொண்டவர்களால்தான் வலைப்பூ அரம்பிப்பது சாத்தியம். அப்படி பார்த்தால் வலைஞர்கள் அனைவருமே சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள்தான். படிப்பும் பண்பாடும் கொண்டவர்கள், நாகரீகமின்றி நடப்பவர்களை கண்டால் ஒதுங்கி போவதுதான் இயல்பாக நடக்கும்.... உண்மை வாழ்க்கையில் !

சமூகத்தின் அந்தஸ்து வரைமுறைகளுக்குள் வாழ்க்கையை அமைத்துகொண்டவர்கள் இணையத்தின் அடையாளமற்ற சூழலை தங்களுக்கு வடிகாலாக மாற்றிகொள்கிறார்கள் ! வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் " சாரி " சொல்லிய பழகிவிட்ட நமக்கு வலைப்பூவின் வடிவமற்ற அரூப முகமூடி " இறங்கி விளையாட " வாய்ப்பாக அமைந்துவிடுகிறது !\\

அருமையான படப்பிடிப்பு சாம், அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக உங்கள் தளத்துக்கு வருகிறேன்.

Amudhavan said...

வருண், வவ்வால்,ஆனந்தகிருஷ்ணன் மூவருக்கும் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இந்தப் பதிவின் தலைப்பை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன். 'பதிவர்களே, பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள்'.

Anonymous said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

இன்று சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டேன். அதுவும் நீண்ட நாளைக்குப் பிறகு. உங்கள் புத்தகத்தை படிக்கலாம் என்றால் அதற்கு முன்னால் நீங்க என்ன எழுதியிருக்கீங்க என்று பார்க்க உள்ளே வந்தால் என்ன பதில் எழுதுவது என்று யோசனையாய் இருக்கு.

சில சண்டைகள் நமக்கு சிலவற்றை கற்றுக் கொடுக்கும்.
பல சண்டைகள் நமக்கு பலவற்றை அனுபவமாக தந்து விட்டுச் செல்லும்.

நாம் தான் வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் (அவசர ஓட்டங்கள் முடிவுக்கு வந்து) இயல்பான நிலைக்கு வந்து விடுவேன். நிறைய பேசுவோம்.

நன்றி.

குறும்பன் said...

நான் மற்றவர்களின் பதிவை அதிகம் படிப்பதில்லை. வவ்வாலோட சரி. எனக்கு தெரிந்து வவ்வாலும் இராச நடையும் தான் நன்றாக சண்டை போடுவார்கள். அது ரசிக்கும் படி இருக்கும். எனக்கு தெரிந்து வவ்வால் வலிய சென்று சண்டை போடமாட்டார். மாற்று கருத்துக்களை சொல்லுவார் (இது சண்டையில் சேர்த்தி இல்லை). எனக்கு தெரிந்து அவர் பதிவில் சிலர் தேவையில்லாமல் "சண்டை" போடுவதை பார்த்துள்ளேன், அவரும் அதற்கு தக்க பதில் தருவதையும் பார்த்துள்ளேன்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் (அவசர ஓட்டங்கள் முடிவுக்கு வந்து) இயல்பான நிலைக்கு வந்து விடுவேன். நிறைய பேசுவோம்.\\
வாருங்கள் ஜோதிஜி, நீங்கள் மறுபடியும் இயல்பான நிலைக்கு வருவதற்கு ஏற்றபடி மத்தியில் புது அரசாங்கமும் சரியானபடிக்கு நிலை கொண்டுவிடும். அப்போதுதான் சில விஷயங்கள் தெளிவுக்கு வந்திருக்கும். பேசுவதற்கும் ஏதுவாக இருக்கும்.

Amudhavan said...

குறும்பன் said...
\\எனக்கு தெரிந்து வவ்வால் வலிய சென்று சண்டை போடமாட்டார். மாற்று கருத்துக்களை சொல்லுவார் (இது சண்டையில் சேர்த்தி இல்லை). எனக்கு தெரிந்து அவர் பதிவில் சிலர் தேவையில்லாமல் "சண்டை" போடுவதை பார்த்துள்ளேன், அவரும் அதற்கு தக்க பதில் தருவதையும் பார்த்துள்ளேன்.\\

ஆக எப்படியோ வவ்வாலுக்கு பதிவுலகில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எழுதும் பதிவுகளை விடவும் அவர் எழுதும் பின்னூட்டங்கள்தாம் மிக அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்றும் தெரியவருகின்றது.

வவ்வால் said...

குறும்பன்,

சரியான புரிதலுக்கு நன்றி!

#/எனக்கு தெரிந்து வவ்வாலும் இராச நடையும் தான் நன்றாக சண்டை போடுவார்கள். அது ரசிக்கும் படி இருக்கும். //

நீர் இம்புட்டு அப்பாவியா? அதெல்லாம் சண்டைனு சொன்னால் ,சண்டைக்கே கேவலம் அவ்வ்!

ரெண்டுப்பேரும் கலாய்ச்சிப்போம், என்ன நான் கொஞ்சம் கூடுதலா கலாய்ச்சிடுவேன் ,ஆனாலும் மனிதர் " ரொம்ப நல்ல்லவர்" தன்மையாக எடுத்துக்கொள்வார்!

இன்னும் சொல்லப்போனால் அவர் எனது நீண்ட நாள் வாசகர் மற்றும் பதிவுல நண்பர்,, 2006ல இருந்தே நம்மள தொடர்கிறார் ,அப்போ நட்டு என்ற பெயரில் வருவார்.

இணையத்தில் யாரையாவது ,என்றாவது சந்திக்கணும் என நேர்ந்தால் ராச நடைய சந்திக்கணும் என நினைத்துக்கொள்வேன் அவ்வ்!

#//எனக்கு தெரிந்து வவ்வால் வலிய சென்று சண்டை போடமாட்டார். மாற்று கருத்துக்களை சொல்லுவார் (இது சண்டையில் சேர்த்தி இல்லை)//

உண்மையிலே நான் சண்டையே போட்டதில்லை(அப்படித்தான் நினைக்கிறேன்), ஒரு மாற்றுக்கருத்தினை தான்ன் சொல்லுவேன் ,அவர்களாகவே அதனை "ஆவேசமாக" எடுத்துக்கொண்டு எப்படி நீ சொல்லலாம் என சர்வாதிகாரமாக பாய்கிறார்கள், அப்போ தான் பதிலுக்கு எதாவது சொல்லி வச்சிடுறது.

இணையத்தில் ஒரு கருத்தினை சொல்கிறார்கள், அதை படிப்பவர்கள் அனைவரும் அப்படியே ஏற்றுக்கொள்ளணும் என எப்படி எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை? ஒரு கொசுவுக்கு இருக்கும் காமன்சென்ஸ் கூட இருக்காதா அவர்களுக்கு அவ்வ்.

# அமுதவன் சார் போல வெகு சிலரே மாற்றுக்கருத்துக்கள் இல்லாமல் எக்கருத்தியலும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள், எனவே நிதானமாக அணுகுகிறார்கள் என நினைக்கிறேன்.

#//எனக்கு தெரிந்து அவர் பதிவில் சிலர் தேவையில்லாமல் "சண்டை" போடுவதை பார்த்துள்ளேன், அவரும் அதற்கு தக்க பதில் தருவதையும் பார்த்துள்ளேன்.//

அட சண்டைய போட்டாக்கூட போகட்டும்னு போகலாம்னு இருப்பேன், ஆனால் இதை எல்லாம் எழுதுறியே , இதில் எல்லாம் படிச்சு பட்டம் வாங்கி இருக்கியா ? எப்படி நீ எழுதலாம்னு கேட்கிறாங்க அவ்வ்!

தங்களின் மேலான கருத்த்திற்கு நன்றி!
---------------

அமுதவன் சார்,

//ஆக எப்படியோ வவ்வாலுக்கு பதிவுலகில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். //

ஹி..ஹி என்னையும் பிராபல்ய பதிவர் ஆக்கிடுவீங்க போல இருக்கே ,நமக்கு ரசிகலாம் இருக்காங்களானுலாம் தெரியாது ,ஏதோ காலம் தள்ளுகிறேன்.

#//அவர் எழுதும் பதிவுகளை விடவும் அவர் எழுதும் பின்னூட்டங்கள்தாம் மிக அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்றும் தெரியவருகின்றது.//

பதிவுலாம் மொக்கையாக இருக்குதே அதனால் இருக்கலாம் அவ்வ்(வள வளனு எழுதின பின்ன எப்படி இருக்கும்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது), ஆனால் பின்னூட்டங்கள் போற போக்கில எழுதுவது அதைப்போயி நல்லா இருக்குனு சொல்லுறிங்களே ,மக்கள் ரசனைய புரிஞ்சிக்கவே முடியல அவ்வ்!

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி!
------------

குறும்பன் said...

தங்களுக்கு வேண்டுகோள் - எழுத்தாளரான தாங்கள் பல நூல்களை எழுதியுள்ளீர்கள். தற்போது கூட ஜோதிஜி அவர்களின் இடுகை மூலம் தங்களின் இரு நூல்களை அறிந்தேன். ஏன் இப்ப பக்கத்தின் ஓரத்தில் தாங்கள் எழுதிய நூல்களின் பட்டியல்களையும் அல்லது நூற்களின் இணைப்பு உள்ள வலைப்பதிவை, அவை எங்கு கிடைக்கும் என்ற விபரத்தையும் தரக்கூடாது? அது பலருக்கு உதவும் அல்லவா?

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
பதிவர்களின் சண்டையை பற்றி எழுதி விட்டீர்கள். இப்போது ஒரு சிம்பனி சண்டை போய்க்கொண்டிருக்கிறது.

http://maattru.com/king-of-archestra-ilaiyaraaja/#comment-6171

சார்லஸ் said...

அட ஆமா அமுதவன் சார் !

நாமும் காரிகனின் பதிவுகளில் சின்னதாக சண்டை போட்டுக் கொள்வோம் . ஆனால் அநாகரிகமாக கருத்துப் பரிமாற்றங்களோ தனிப்பட்ட தாக்குதல்களோ நாம் செய்து கொண்டதில்லை. இந்த மூவரும் ஏன் இப்படி ஆனார்கள்?

சார்லஸ் said...

வவ்வால் சார்

நீங்கள் அடிக்கடி ( ஓவர் கடி ) அவ்வ் .. என்பதற்கு பதிலாக வவ்வ் .. என்று சொன்னால் உங்கள் பெயருக்கு பொருத்தமாக இருக்கும் . வலைத்தள சண்டையில் வடிவேலு மாதிரி வெடி போடுகிறீர்களே !

Post a Comment