என்னதான் ஊடகங்களும் குறிப்பாக டிவி சேனல்களும் அதன் அரசியல்
விவாதங்களில் பங்கேற்கும் உலகின் நிகரற்ற சிந்தனைச் சிற்பிகளும், அந்த சிந்தனைச் சிற்பிகளுக்குத்
தலைமைத் தாங்கும் நெறியாளர் என்ற பெயரில் உலவும் வெறியாளர்களும், ‘ ‘வெள்ளத்தையெல்லாம்
மக்கள் மறந்துட்டாங்க; அதிலும் குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு செய்யப்பட்ட வெள்ள
நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் கோக்கு மாக்கு நிறுவனங்கள் எல்லாமே பாராட்டு தெரிவித்திருக்கின்றன.
அகில உலகமே பாராட்டுகிறது; அதிலும் குறிப்பாக அத்தனைப் பெரிய வெள்ளத்துக்குப் பிறகு
எந்த விதமான தொற்றுநோயும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதில் இந்த அரசின் மெச்சத்தகுந்த
பணிகள் பாராட்டப்பட்டிருக்கின்றன’ என்று பலவாறாகவும் ஏதோ வெள்ளம் வந்தது இந்தப் பகுதி
மக்கள் எல்லாரும் செய்த பூர்வ ஜென்ம பலன் என்பது போலவும் வெள்ளம் வராத பகுதிகளிலில்
இருந்தவர்கள் எல்லாரும் வாழத்தகுதியே இல்லாத கழிசடைகள் என்பதுபோலவும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தாலும்,
பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வளவு எளிதாக அந்த சோகத்தைக் கடந்து செல்கிறவர்களாக இல்லை.
ஒரு வாழ்நாளில் தாங்கள் பார்க்கவிரும்பாத சோகத்தை நேரில் பார்த்தவர்கள்
அவர்கள். இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எவ்வளவு மோசமான மனிதகுலத்திற்கும்
இவ்வளவு கோரமான, கொடுமையான, சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உளப்பூர்வமாக வேண்டிக்கொள்பவர்கள்
அவர்கள். தங்களின் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அவர்கள். அவர்களின் நிம்மதி,
வாழ்வுக்கான ஆதாரம், வாழ்வின் மகிழ்ச்சி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட
அந்த நிகழ்வு தங்கள் வாழ்நாளில் ஏற்பட்டுவிட்ட ஒரு கொடுங்கனவு நினைத்து மறுகுகிறவர்கள்
அவர்கள்.
அது, அந்த சோகம் ஒரு வாழ்நாள் அல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்கமுடியாத ஒரு சோகம் அது.
அது, அந்த சோகம் ஒரு வாழ்நாள் அல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்கமுடியாத ஒரு சோகம் அது.
‘அந்த சோகம் ஒன்றுமே இல்லை. அது சாதாரணம்தான்’ என்று அந்த சோகத்தை
ஒன்றுமில்லாததாக்கி, ‘நிவாரணப் பணிகளும் தொற்றுநோயும் ஏற்படாமல் காத்ததுதான் மிகப்பெரிய
சாதனை – புண்ணியம்’ என்பதுபோல் பேசித்திரியும் மகாக் கனவான்கள் இந்த ஜென்மத்திலேயே
எத்தனைப் பெரிய பாவங்களுக்கு அடிமையாகி எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளைச் சந்திக்க இருக்கிறார்கள்
என்பது அறம் சார்ந்த ஒரு விஷயம். ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம்
சொல்வது இவர்களுக்காகத்தான்.
இது ஒருபுறமிருக்க அந்த ஆர்.கே. நகரில் செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்குக்
காரணமான ஜெயலலிதா தேர்தலில் நிற்கிறார். அவருக்கு எதிரான ஒரு வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன்
என்ற ஒரு வழக்கறிஞரை திமுக நிறுத்தியிருக்கிறது.
ஒரு பிரபலமான வேட்பாளரை இன்னொரு பிரபலமான வேட்பாளர்தான் வெற்றிபெற
முடியும் என்பது நம் தேர்தல்களில் தேவையற்றது. இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக
போற்றப்படவேண்டிய காமராஜரை பெ.சீனிவாசன் என்ற சாதாரண ஒரு இளைஞர்தான்
தோற்கடித்தார்.
அண்ணாவை வென்ற பரிசுத்த நாடார் என்பவரை யாருக்கும் தெரியாது.
ஜெயலலிதாவை பர்கூரில்
தோற்கடித்த சுகவனம் யார் என்றே தெரியாத ஒரு வேட்பாளர்தான். உலகப் பெரு நடிகர்களில்
ஒருவராக இருந்த சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத்
தெரியாது.
அப்படியிருக்க ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க யாரோ ஒரு வேட்பாளர் போதும்.
அப்படியிருக்க ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க யாரோ ஒரு வேட்பாளர் போதும்.
மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் கடைவிரித்திருக்கும் விஜயகாந்த் தலைமையை ஏற்ற தொண்டர்களான விடுதலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொகுதிக்கு
இரண்டு நாட்களுக்கு முன்பே ‘பதியம்’ போடுகிறார்கள். ‘டெல்லியின் கேஜ்ரிவால் ஷீலா தீக்ஷித்தைத்
தோற்கடித்ததுபோல் இங்கேயும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க ‘பிரபலமான’ ஒருவர் வேண்டாமா?’ என்கிறார்கள்.
சரி திருமாவளவன்தான் இங்கே போட்டியிடப்போகிறார் என்கிற சம்சயத்தை இரண்டு நாட்களுக்கு ஏற்படுத்துகின்ற யுக்தியாகத்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு இருக்கிறது.
இதோ, இன்றைக்கு வசந்திதேவிதான் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வசந்திதேவி முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர். பெரிய கல்வியாளர்.
நல்ல பண்புகளும் திறமைகளும் கொண்டவர். மகளிர் ஆணையத் தலைவியாகவும் பதவி வகித்தவர்.
பல்வேறு தலைப்புகளில் காலச்சுவடு இதழில் பல நல்ல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தவர்.
ஜெயலலிதாவை எதிர்க்க மிகச்சிறந்த வேட்பாளர்.
எனக்கு ஒரேயொரு சந்தேகம்தான் தோன்றுகிறது.
ஜெயலலிதாவை ‘எதிர்க்க’ சிம்லாவே போதும் என்கிறபோது எதற்காக வசந்திதேவி?
வசந்திதேவி எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை என்பது சிறுகுழந்தைக்குக்கூடத் தெரியும்.
ஆனால் வசந்தி தேவியைக் களமிறக்குவதன்மூலம் படித்த மக்களிடையே, ஓரளவு விஷயம் தெரிந்த
மக்களிடையே சிம்லாவுக்குப் போகக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முயல்வதுதான் வசந்திதேவியைக்
களமிறக்கியிருப்பதன் ‘சூட்சுமம்’.
விடுதலைச் சிறுத்தைகள் வேறொரு வேட்பாளரைப் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய
ஓட்டுக்களைவிடவும் ஐந்தாயிரம் ஆறாயிரம் ஓட்டுக்களை வசந்திதேவி நிச்சயம் அதிகம் பெறுவார்.
அந்த ‘அதிகபட்ச ஓட்டுக்கள்’ சிம்லாவுக்குப் போகாமல் இருப்பதற்கான யுக்திதான் இது.
ஆக ஜெயலலிதாவின் வெற்றியை எப்படியாவது ‘உறுதி செய்வது’ என்பதுதான்
வசந்திதேவியைப் போட்டியிட வைப்பதன் ‘ரகசியம்’.
அப்படியெல்லாம் இல்லை. திருமாவின் ராஜதந்திரம் இது. அவருடைய மிகச்சிறந்த அரசியல் சாதுர்யம், யுக்தி என்றெல்லாம் பேசப்படுமேயானால் - திருமா அவர்களுக்கு ஒரு கேள்வி.
ஜெயலலிதாவை வெற்றிகொள்ள மிகச்சிறந்த வேட்பாளர் இவர்தான். இவர் சாதாரணமானவர் இல்லை. மிகத்தேர்ந்த கல்வியாளர். திறமைகள் அதிகம் வாய்க்கப்பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் என்று திருமா சொல்வாரேயானால் அவரிடம் இந்தக் கேள்வி.

எனக்குத் திருமாவளவனைத் தெரியும். அவரது பகுத்தறிவு தெரியும்.
அரசியல் அறிவு தெரியும். இன்றைக்கு இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களிலும் –கலைஞரை
விட்டுவிட்டுப் பார்த்தோமானால் - திருமா அளவுக்கு அரசியல் அறிவும் தெளிவும் ஆற்றலும்
பெற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பும்
மரியாதையும் உள்ளது.
ஆகவே அவரிடம் இந்தக் கேள்வி-
ஆகவே அவரிடம் இந்தக் கேள்வி-
எல்லாத் தகுதிகளும் திறமைகளும் பெற்ற வசந்திதேவியை வெறும் ஒற்றைத்
தொகுதியில் வெற்றிபெற வைப்பதுமட்டும்தான் உங்கள் குறிக்கோளா?
அந்தம்மாவின் திறைமையை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டாமா?
ஆகவே இப்போதே ஒன்று செய்யுங்கள்.
எப்படியும் உங்கள் 'முதல்வர்' வேட்பாளர்மீது படித்தவர்களுக்கும்
விவரம் அறிந்தவர்களுக்கும் நல்ல அபிப்ராயமில்லை.
அவரும் பத்திரிகைக்காரர்களைக் கேவலமாகப் பேசுவதும் அவர்களிடம் நாக்கைத் துருத்திக்கொண்டு பாய்வதும் பொது இடங்களில் அருகில் இருப்பவர்களை கைநீட்டி அடிப்பதுமாக இருக்கிறார்.
ஆகவே அவரை மாற்றிவிட்டு நீங்கள் சொல்லியுள்ளபடி “அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற கல்வியாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவியை’ தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று சொல்லி அறிவியுங்கள்.
இதனைச் செய்வீர்களா திருமா?

உங்கள் அரசியல் யுக்திக்கு அப்போது படித்தவர்கள் மத்தியில் எத்தனை
ஆதரவு பெருகுகிறது என்பதை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
அப்படியில்லாவிட்டால் இது ஜெயலலிதாவின் பி டீம் செய்கின்ற சில்லுண்டித் தனங்களில் ஒன்றாகப் போகக்கூடிய ஆபத்துதான் அதிகம்.
அப்படியில்லாவிட்டால் இது ஜெயலலிதாவின் பி டீம் செய்கின்ற சில்லுண்டித் தனங்களில் ஒன்றாகப் போகக்கூடிய ஆபத்துதான் அதிகம்.