பிரதமர்
மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் என்றவுடன் தமிழக பாஜக மிக மிக
சுறுசுறுப்படைந்தது. அதிலும் அவர்களுக்கு மிகவும் ராசியான மாவட்டமாக
கோயம்புத்தூரைக் கருதுவதால் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்பட்டது. “நாங்கள் இந்தக் கூட்டத்திலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை
ஆரம்பித்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் ஒரு பாஜக பிரமுகர். மோடியின்
தமிழ்நாட்டு வரைகையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
மிகப் பரபரப்பான தேர்தல் சம்பவங்கள் அங்கு அரங்கேறும் என்பதாக செய்திகள்
பரப்பப்பட்டன. பாஜக எம்மாதிரியான கூட்டணியுடன் களமிறங்கும் என்றெல்லாம் பல்வேறு
செய்திகள் உலவ விடப்பட்டன.
பாஜக ஒரு
மெகா கூட்டணி அமைப்பது முடிவாகிவிட்டது. தனித்துக் களமிறங்குவதாக பூச்சாண்டி
காட்டிக்கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் பாஜகவின் மடிப்புக்குள் வந்துவிட்டன.
பாமகவும், தேமுதிகவும், பாஜக தலைமையில் அணி சேர்ந்துவிட்டன. தேமுதிகவின் தலைவர்
விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வேகமாகப்
பரப்பப்பட்டது.
பாமக தேமுதிக இரண்டு கட்சிகளும் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டன. விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒரு செய்தியும் 131 சீட்டுக்கள் விஜயகாந்த்துக்கும், எழுபதோ எழுபத்தொன்றோ சீட்டுகள் பாமகவுக்கும் என்று ஒரு செய்தி அங்கலட்சணங்களோடு பத்திரிகைகளுக்குத் தரப்பட்டது. இந்தச் செய்தி யாரை சந்தோஷப்படுத்தியதோ இல்லையோ பாமகவை மிகவும் கோபப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். நாங்கள் யார் கீழேயும் இருக்கப்போவதில்லை. முதல்வர் வேட்பாளர் நான்தான். எங்களை ஒப்புக்கொண்டு, எங்கள் திட்டத்தை ஒப்புக்கொண்டு இங்கு வருபவர்கள் தாராளமாக பாமக அணியில் இணையலாம் என்று அன்புமணி கோபமாக ஒரு அறிக்கைக் கொடுத்தார்.
தேர்தல் முடிவு வருகிற வரைக்கும் டெல்லியின் கேஜ்ரிவால் நினைப்பில்தான் அன்புமணி இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இப்படியொரு செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
இதற்கடுத்து ரஜினியை மய்யமாக வைத்து இன்னொரு செய்தியை உலவ விட்டார்கள்.

இல்லை
இல்லை முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்தான். இதற்காகவே ரஜினிக்கு பத்மவிபூஷண்
வழங்கப்பட்டது. ரஜினியிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள். ரஜினியும்
ஒப்புக்கொண்டு விட்டார். விஜயகாந்தும் இந்த முடிவுக்குத் தலையாட்டிவிட்டார்.
என்பதாக இன்னொரு செய்தியும் ரகசியமாகப் பரப்பப்பட்டது.
கோவை
வரும் பிரதமரை ரஜினி சந்திக்கப்போகிறார் என்றொரு செய்தியும், இல்லை இல்லை
விஜயகாந்த் சந்திக்கிறார் என்றொரு செய்தியும் இறக்கைக் கட்டின.
இம்மாதிரியான
செய்திகளுக்கான முனைப்புகள் எடுக்கப்பட்டனவோ என்னவோ தெரியவில்லை. முதல்நாளே
விட்டால் போதும் என்று மலேசியாவுக்கு ஓட்டம் பிடித்தார் ரஜினி.(அதுவும்
பாஸ்போர்ட்டைக்கூட எடுத்துக்கொள்ள மறந்து புறப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்)
விஜயகாந்த்
பற்றிய தகவலே ஒன்றும் தெரியவில்லை. வழக்கம்போல் தன்னுடைய முடிவில் தேவுடு காக்கும்
வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.
இதற்கு
நடுவே குழம்பிய குட்டையில் அல்ல; நன்றாக இருக்கும் குட்டையைக் குழப்பி
விட்டுவிட்டு அதில் மீன் பிடிக்கும் வேலையை வழக்கமாகச் செய்யும் சுப்பிரமணியன் சாமி இன்னொரு
திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார்.
‘பாஜக கூட்டணியில் திமுக இணைகிறது. கூடவே
தேமுதிகவும் இணைகிறது. ஸ்டாலின்தான் முதலமைச்சர்’ என்றொரு தகவலை டுவிட்டரில் பரவ விட்டிருக்கிறார் சு.சாமி.
‘தமிழ்நாட்டிலே
நம்ம ஆட்கள் நமக்கு எல்லாமே பிரமாதமாக செய்துவைப்பார்கள். போய் நின்று
எல்லாவற்றுக்கும் தலைமை வகித்து போஸ் கொடுத்துவிட்டு டெல்லிக்குத் திரும்பிச்
செல்லலாம்’ என்ற கனவுடன் வந்த மோடிதான் பாவம்,
எதுவுமே நடக்காமலிருக்க வெறும் ‘ஆல்இண்டியா நியூஸை’ப் பேசிவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார்.
இதில் ஏமாந்துபோனவர்கள்தாம் யார் என்று தெரியவில்லை.