Saturday, July 28, 2012

ஒலிம்பிக்ஸில் இளையராஜா


தற்போது உலகின் மொத்த கவனமும் பதிந்திருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இளையராஜாவின் இசையமைப்பும் இருக்கிறது என்ற செய்தி கடந்த இரண்டு மாத காலங்களாகவே இணையத்தில் இறக்கை கட்ட ஆரம்பித்துவிட்டது. நாம் பாட்டுக்கு நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளையராஜா பாட்டிற்கு அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதில் நம்முடைய இரண்டுபக்க கவனத்தையும் திசைதிருப்புகிற மாதிரியான இப்படியொரு செய்தி வந்ததுமே சரி இளையராஜா மறுபடி புதிதாக எதையோ சாதிக்கப்போகிறார் என்பதாகவும், அல்லது அவரது மேதைமைக்கு மரியாதை செய்யும்விதமாக ஒலிம்பிக்ஸ் கமிட்டி அவரைத் தேடிவந்து புதியதோரு பொறுப்பைக் கொடுத்து மறுபடி அவரையும் அவரது பாடலை விரும்பிக்கேட்ட கோடானுகோடி ரசிகர்களையும் அவரைத்தவிர இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் சில நூறு இணைய ரசிகர்களையும் பெருமையின் உச்சிக்கே கொண்டுசென்று உட்காரவைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கைப் புதியதாகத் துளிர்விட ஆரம்பித்தது.

நிறைய ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் இயக்குநர் டானி பாயில்தான் தொடக்கவிழாவின் கலை நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சரி ரகுமானுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பினால் ஏ.ஆர்.ரகுமானை அழைத்து ஏதாவது இசைக்கோர்ப்பு வேலைகளைத் தருவதற்கு வாய்ப்பிருக்கிறது இவர் எப்படி இளையராஜாவைக் கூப்பிட்டு எந்த அஸைன்மென்ட்டும் தருவார் என்ற சந்தேகம் எழவே செய்தது. ஆனால் இணைய இளையராஜா ரசிகர்களின் இசையறிவைக் கணக்கில்கொள்ளும்போது இளையராஜாதானே ஒரேயொரு இசைச்சக்கரவர்த்தி இவரைப் புறக்கணித்து உலகில் பெரிய எந்த நிகழ்ச்சியும் களைகட்ட முடியாதே என்பதனால் இந்தச் செய்திக்கும் சாத்தியம் இருக்கும்போலும் என்ற நினைப்பு ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது.
இதை மெய்ப்பிக்கும் விதமாகப் பத்திரிகைகளிலும் சில செய்திகள் வந்தன.
இளையராஜாவின் ஏதோ ஒரு பழைய பாடலிலிருந்து ஒரேயொரு அடியை மட்டும் எடுத்துப்போட்டு ஒரு இசைக்கோர்ப்பு செய்யப்படும் என்று ஒரு செய்தி வந்தது. வேறொரு கலைக்குழுவினர் அங்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அவர்கள் ஆடும் ஒரு பாட்டில் இளையராஜா இசையமைத்த ஒரு பிட்டுக்கு ஆடப்போவதாகவும் சொல்லியிருந்தனர். ஏதோ நம்ம ஆளுடைய இசை எப்படியாவது உலகை அசைத்துப்பார்க்கட்டுமே என்ற எண்ணம்தான் இருந்தது.

ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு பிரிட்டிஷ் தேசப்பாடல் பாடப்பட்டபோதும் சரி; மிஸ்டர் பீனைக் கதாபாத்திரமாக வைத்து ஸ்டார்வார்ஸ் இசையமைப்பாளர் சிம்பொனி இசையமைப்பை வழங்கியபோதும் சரி நம்ம மாஸ்டரின் பாடல் இன்னமும் வரவில்லையே என்றுதான் மனம் எண்ணியது. பிரதான நிகழ்ச்சியில் ஒன்றும் வரவில்லை. பின்னர் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் யாரும் அறியாதவண்ணம் ஒரு ஓரத்தில் எங்காவது இளையராஜா பாடலை நுழைத்துவிடும் சாகசத்தை எந்தக் கலைக்குழுவாவது செய்துவிட்டு வருமா என்பது தெரியவில்லை. அப்படி வந்தால் அவர்களுக்கு இணையத்தில் நடைபெறும் பாராட்டுக்கள் இமயத்தையும் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

இது இப்படியிருக்க தொலைக்காட்சியில் பார்த்த நமக்குத்தான் எதுவும் சரிவரப் பார்க்கவோ கேட்கவோ கிடைக்காமல் போயிருக்கலாம் லண்டனில் இருக்கும் என்னுடைய நண்பர் முனிராஜு நேரில் ஒலிம்பிக்ஸிற்குப் போயிருக்கிறார். அவரையாவது கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக தொலைபேசியில் அவரை அழைத்துக்கேட்டேன். "பிரதான நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த பாடல் எதுவும் இடம் பெற்றதா?" என்று கேட்டேன்.

"ஓ....இடம் பெற்றதே நான் கேட்டேனே" என்றார் அவர்.

"அப்படியா எப்போது?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"நிகழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியதா? அந்தச் சமயத்தில் இளையராஜா பாடல் இல்லாவிட்டால் எப்படி என்பதற்காக நானே அன்னக்கிளி உன்னத்தேடுதே என்று மெதுவாக என் காதுக்கு மட்டுமே கேட்கிறமாதிரி  பாடிக்கொண்டேன். அப்படியானால் இளையராஜா இசையுடன் ஒலிம்பிக்ஸ் துவங்கியதாகத்தானே அர்த்தம்!" என்றார் அவர்!

52 comments :

Anonymous said...

''.. நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை. ...''
இந்த நிலை எமக்கும் இருந்தது. இன்னும் பதில் தெரியவில்லை...நன்றி இதை அலசியதற்கு....
வேதா. இலங்காதிலகம்.

தனிமரம் said...

mm நானும் ரசித்தேன் ஆனால் ராஜா இசை என் காதில் வரவில்லை நாடுகள் அவதானித்த அவசரத்தில் !ம்ம்

காரிகன் said...

ஹலோ அமுதவன் சார், ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அதுசரி மிக ஆர்ப்பாட்டமாக எதிர்ப்பார்க்கப்பட்ட இளையராஜாவின் தேவலோக கானமான "அற்புத" காவிய பாடல் ஒங்கோப்பன் மவன்டா என்ற கவிதை நயம் சொட்டும் பாடல் லண்டன் ஒலிம்பிக்ஸில் இடம் பெற்றதா இல்லையா? தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமான இப்பாடல் எப்போது ஒலிம்பிக்ஸில் இசைக்கப்பட்டது? எனக்கு தெரிந்தவரை இல்லை என்றே தோன்றுகிறது.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

Amudhavan said...

கோவைக்கவி அவர்களே, தங்களின் வருகைக்கு நன்றி.
'மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை'....என்னுடைய இந்த வார்த்தைகளின் 'தொனி' உங்களுக்குப் புரிந்திருந்தால் மகிழ்ச்சியே.

Amudhavan said...

தனிமரம்.....நாடுகள் அவதானித்த அவசரத்தில் உங்கள் காதுகளில் ராஜா இசை விழவில்லையா? என் நண்பர் முனிராஜூ இன்னமும் கொஞ்சம் சத்தமாய் இளையராஜா பாடலை முணுமுணுத்திருக்கவேண்டும் போலும்.......

Amudhavan said...

வாருங்கள் காரிகன் உங்களை எதிர்பார்த்து நிறையப்பேர் படு உக்கிரத்துடன் காத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.நிறைவு விழா நடக்கட்டும். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த இசைக்கோர்வை இடம்பெறுகிறதா என்று பார்த்துக்கொண்டு அப்புறம் பேசுவோம்.

tekvijay said...

//அவரைத்தவிர இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை//

சின்ன திருத்தம், அவரை மாதிரி இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை என்று இருக்கவேண்டும். நேற்று வந்த அனிருத் கூட இசையமைப்பாளர் தான்.

Unknown said...

அன்பரே .. இளையராஜாவின் பாடல் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை மாறாக ரஹ்மான் இதற்காக பிரத்தியோகமாக இசைஅமைத்த ஒரு நிமிட MEDLEY பஞ்சாபி பாடல் இடம்பெற்றது . அதும் சில வினாடிகளில் நம்மை கடந்து சென்றது ..
இதோ ரஹ்மான் இசை அமைத்த அந்த ஒரு நிமிட பாடலுக்கான லிங்க்
http://www.youtube.com/watch?v=7Lt5zwlIQ1E

Amudhavan said...

'அவரை மாதிரி இசையமைப்பாளர்கள் இந்தப்பூவுலகில் பிறக்கவேயில்லை என்று இருக்கவேண்டும்'- இது என்னமாதிரியான ஷார்ப்பான கமெண்ட் என்று தெரியவில்லையே. இந்த வரிக்கு எஸ்எம்சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பராமன் தொடங்கி இன்றைய இமான்வரை யாரை வேண்டுமானாலும் சொல்லலாமே சிலிகான்....

Amudhavan said...

தங்கள் தகவலுக்கும் லிங்கிற்கும் நன்றி ரியாஸ்.

காரிகன் said...

திரு அமுதவனுக்கு, ஒரு அபூர்வமான பதிவை இணையத்தில் காண முடிந்தது. இதை எழுதுபவர் டி சவுந்தர் என்கிற ஒரு இசை ரசிகர். இவர் தமிழ் திரை இசை பற்றி நனறாகவே அலசுகிறார். படிக்க புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ஆனால் என்ன ஒன்று... இவரும் வழக்கமான இளையராஜா அடிவருடிகள் போல இளையராஜாவை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்கிறார்.(அது பரவாயில்லை அது அவரின் தனிப்பட்ட விருப்பம்)மற்றபடி மிக அருமையாக ரசிக்கும் விதத்தில் எழுதுகிறார். இதை நீங்கள் படிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. முடிந்தால் பதில் எழுதுங்கள்.
http://inioru.com/?p=29448&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4-2

R.S.KRISHNAMURTHY said...

எனக்குக் கேட்டதே! பக்கத்து வீட்டில் இருக்கும் இளையராஜாவின் தீவிர ரசிகர், தொலைக்காட்சியில் ஒலிம்பிக்ஸ் திறப்புவிழா நிகழ்ச்சிகளை MUTE செய்துவிட்டு, ராஜாவின் 4 பாடல்களை அலற விட்டிருந்தாரே! லண்டனுக்கே கேட்டிருக்குமே அது, உங்களுக்குக் கேட்கவில்லையா?

Amudhavan said...

தங்களின் தகவலுக்கு நன்றி காரிகன். நீங்கள் சொன்ன டி.சவுந்தரின் கட்டுரையைப் படித்தேன். இசை பற்றி மிகவும் ஆழமான புரிந்துணர்வுடன்கூடிய கட்டுரையை எழுதியிருக்கிறார். இளையராஜாவிடம் சவுந்தர் என்கிற அறிவுஜீவியான உதவியாளர் ஒருவர் இருந்தார். அவர்தானா இவர் என்பது தெரியவில்லை. இளையராஜாவைச் சார்ந்தே இவரது கருத்துக்கள் என்பதனைத் தாண்டி நிறைய விஷயங்களும் விவரங்களும் இவரிடம் இருக்கின்றன. மற்றபடி நீங்கள் அவரது பின்னூட்டத்தில் இட்டிருப்பவைதாம் என்னுடைய கருத்துக்களும்.
இளையராஜாவைப் புகழ்பவர்கள் எந்த ரூட்டில் வேண்டுமானாலும் சென்று அவரது புகழைப் பாடிக்கொண்டிருக்கட்டும். வெறும் பல்லவிகளால் மட்டுமே அவருடைய நிறையப்பாடல்கள் தற்சமயம்வரை நின்றிருக்கின்றன. அதனைத்தாண்டி பலவருடங்கள் நிற்கப்போவது கடினம். இதுபற்றியெல்லாம் நாம் நம் பாணியில் தொடர்ந்து செல்வோம்.
வேறொரு தளத்தில் யாருடனோ நிறைய சண்டைப்போட்டுக்கொண்டிருந்தீர்களே முடிந்துவிட்டதா?

Amudhavan said...

இளையராஜா ரசிகர்கள் ஒலிம்பிக் கொண்டாட்டங்களையெல்லாம் பார்க்கிறார்களா? ராஜா இசையில்லை என்று தெரிந்ததும் ஒலிம்பிக்ஸைப் புறக்கணித்துவிட்டார்கள் என்றல்லவா கேள்வி.

Anonymous said...

http://www.bbc.co.uk/radio/player/b01l33xj

Listen from 2:08:30 for the song.

காரிகன் said...

வேறொரு தளத்தில் யாருடனோ நிறைய சண்டைப்போட்டுக்கொண்டிருந்தீர்களே முடிந்துவிட்டதா?

அதையேன் கேட்கிறீர்கள்?நான் பொறுமை இழந்து பத்து பதிவுகளுக்கு பிறகு ஒருவருக்கு ஏன் இப்படி என்று கேட்டதற்கு ஆள் சூடாகிவிட்டார்.என்னை அறிவிலி மூடன் என்று ஏக வசனத்தில் கண்ணா பின்னா வென்று திட்ட ஆரம்பித்து விட்டார். நான் முடிந்தவரை தரத்துடனே அவருக்கு பதில் அளித்து வந்தேன்.கடைசியில் என்னை பரிசோதனை எலி என்றும் சும்மா டெஸ்டு செய்தேன் என்றும் ஜகா வாங்கியதில் சூடாக ஒரு பின்னூட்டம் போட்டேன் அதை அவர் வெளியிடாமல் தலையை வெட்டினேன் வெற்றி பெற்றேன் என்று புளகாங்கிதம் அடைந்து இன்னும் என்னை மறக்காமல் ஏன் பெயரை உச்சரித்தபடியே இன்னும் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.என் பின்னூட்டங்களை மறைத்துவிட்டு ஒரே கையால் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கிறார். பாவம் போகட்டும்.என்ன அவரால் எனக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்து வருகிறது.அதற்காக அவரை பாராட்டத்தான் வேண்டும்.உங்கள் பதிலில் இளையராஜாவின் பாடல்கள் பல்லவிகளால் மட்டுமே இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று சொல்லி இருந்தீர்கள். அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும். தயவு செய்து எழுதவும்.

Amudhavan said...

எல்லாவற்றையும் ஒரே இடத்தில் போட்டுக்கொட்டிவிடாமல் அவ்வப்போது இதுபற்றியெல்லாம் நிச்சயம் எழுதுகிறேன். இளையராஜாவைப்பற்றி இன்னமும் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. நன்றி காரிகன்.

suresh said...

//ஆனால் என்ன ஒன்று... இவரும் வழக்கமான இளையராஜா அடிவருடிகள் போல இளையராஜாவை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்கிறார்//

- அப்படியானால் எம்.எஸ்.வியை கடவுள் ரேஞ்சுக்கு வைத்து புகழ்பாடும் அமுதவன் அவர்களை எம்.எஸ்.வி அடிவருடி என்று சொல்லும் துணிவு உண்டா காரிகன் அவர்களே...?

Amudhavan said...

சுரேஷ் எம்எஸ்வியைக் கடவுள் ரேஞ்சுக்கு வைத்துப் புகழ்ந்ததாக எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. என்னுடைய தளத்திலேயே இசையமைப்பாளர்கள் பற்றியதும் இளையராஜாவை இன்றைய தலைமுறை மிக அதிகமாக விஷயமே தெரியாமல் தூக்கிவைத்துக்கொண்டாடுவதும் பற்றியதுமான பதிவுகள் நிறைய இருக்கின்றன. அதற்கான விளக்கங்களும் நிறையவே இருக்கின்றன. சரிவர மீண்டும் ஒருமுறைப் படியுங்கள். படித்துவிட்டு விவாதம் செய்ய வாருங்கள். விவாதிக்கலாம், காரணகாரியங்களுடன்.
அதெல்லாம் இல்லாமல் எனக்கு இன்னாரைத்தான் பிடிக்கும் அவரை நான் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிக்கொண்டு போவேன் என்றால் நீங்கள் கொண்டாடிக்கொண்டு போங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் பொது விவாதம் என்று வரும்போது வைக்கப்படும் விவரங்கள் விருப்பு வெறுப்பு பற்றியது அல்ல. இவற்றுக்கு வேறு தகவல்கள் தேவை.
அந்தத் தகவல்களின் அடிப்படையில் எஸ்விவெங்கட்ராமன் துவங்கி ஜிராமனாதனில் ஆரம்பித்து விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று வந்து கேவிமகாதேவனின் சாதனைகள் என்ற வரிசையில் அப்புறமாகத்தான் வருகிறார் விஸ்வநாதன். இப்படி விஸ்வநாதனே இவ்வளவு நேரம் கழித்துத்தான் வருகிறார் என்னும்போது இளையராஜாவின் இடம் எதுவென்பதை புரிந்துகொள்ளச் சொல்லும் முயற்சிகள்தாம் என்னுடைய பதிவுகள்.
இசை விற்பன்னர்கள் பங்குபெறும் இன்னிசை மழை போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் கலைஞர் டிவி போன்ற சேனல்களில் வருகின்றன. பார்த்து கொஞ்சம் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

suresh said...

திரு அமுதவன் அவர்களுக்கு என் வணக்கம். என்னை நிறைய தெரிந்து கொள்ளச் சொல்கிறீர்கள். புரிகிறது. என்னால் முடிந்தவரை கடைசிவரை தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். நன்றி.

நீங்கள் எம்.எஸ்.வியையும் அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்து புகழ்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். எம்.எஸ்.விக்கு பிறகு வந்த இளையராஜா எ.ர.ரஹ்மான் மற்றும் மற்ற இசையமைப்பாளர்களை காலில் தேய்த்து நசுக்க முயற்சிக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். எந்த பதிவில் நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று சொல்லக் கேட்டால் நான் விழிக்க கூடும். காரணம் உங்கள் பதிவிலுள்ள சொற்களில் அது வெளிப்படையாக இல்லை.... technically very clean... இங்கே உங்களது ஒரு கூற்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்...

// கோவைக்கவி அவர்களே, தங்களின் வருகைக்கு நன்றி.
'மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை'....என்னுடைய இந்த வார்த்தைகளின் 'தொனி' உங்களுக்குப் புரிந்திருந்தால் மகிழ்ச்சியே //

இந்த 'தொனி'தான் உங்கள் பதிவுகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றது... அது முழுக்க முழுக்க எம்.எஸ்.வியையும் அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்து புகழ்கிறீர்கள், எம்.எஸ்.விக்கு பிறகு வந்த இளையராஜா எ.ர.ரஹ்மான் மற்றும் மற்ற இசையமைப்பாளர்களை காலில் தேய்த்து நசுக்க முயற்சிக்கிறீர்கள் என்றுதான் எனக்கு புரிகிறது... இதில் என் புரிதல் கோளாறா? நீங்கள்தான் விளக்கவேண்டும்.

இளையராஜா மற்றும் மற்ற இன்றைய இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் எல்லாரும் அடிவருடிகள், சொம்பு தூக்கிகள் என்றழைக்கப்படும்போது மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் மட்டும் எப்படி குணவான்கள் ஆகமுடிகிறது...? (மறுபடி நான் எப்போது அடிவருடிகள் சொம்புதூக்கிகள் என்று சொன்னேன் என்று தயவுசெய்து கேட்காதீர்கள்... உங்கள் எல்லா பதிவுகளிலும் உங்கள் 'தொனி'யை அப்படிதான் நான் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன்)

மற்றபடி இசையச் செய்யும் எதுவுமே நல்ல இசைதான். நான் இசையமைப்பாளர்களின் பெயரையோ அல்லது அவர்கள் பராக்கிரமத்தையோ பார்ப்பது இல்லை... அது என்னுடைய குறையாக இருந்தால் தகுந்த காரணத்துடன் சொல்லுங்கள். தங்கள் காரணம் திருப்திகரமாக இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன்

Amudhavan said...

தங்களின் மறுவருகைக்கு நன்றி சுரேஷ். உங்கள் பதிலிலிருந்து சரியான காரணங்களுடன் சொல்லப்படும் கூற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்வளிக்கிறது.

மணிரத்தினத்தையோ பாரதிராஜாவையோ புகழுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை.ஆனால் அதற்காக ஸ்ரீதரையோ பீம்சிங்கையோ கே.பாலச்சந்தரையோ ஒன்றுமேயில்லை என்று சொன்னீர்களானால் அல்லது நினைத்தீர்களானால் அது தவறென்று சுட்டிக்காட்டும் பணியினைத்தான் நான் செய்துவருகிறேன்.

இளையராஜா நல்ல இசையமைப்பாளர் இல்லையென்று நான் எங்கேயுமே சொல்லவில்லை. ஆனால் இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் தொடங்குகிறது என்பதாகத்தான் இளையதலைமுறையினரின் அல்லது இணையத்தில் புழங்குகிறவர்களின் - பெரும்பாலானவர்களின் கருத்தியல் அமைந்திருக்கிறது. அதை இல்லையென்று காரணகாரியங்களுடன் சொல்லும்போது பல பேருக்குக் கோபம் வருகிறது.

இவருக்கு முன்பு ஒரு ஐம்பதாண்டுக்காலம் தமிழ் திரை இசையை இன்றைக்கு இருக்கும் அளவுக்கு, இளையராஜா போன்றவர்கள் எல்லாம் சுலபமாகப் பயணம் செய்து வேண்டிய அறுவடையைச் செய்துகொள்ளும் அளவு தயார்ப்படுத்தி வைத்திருப்பவர்களைச் சீண்டுவதேயில்லை(அவர்களும் ஒரு சிறு பிரிவினர்தான் என்பது வேறு விஷயம்) என்னும்போது அவர்களின் பெருமையையும் உயர்ந்தபட்ச பங்களிப்பையும் சொல்லவே கூடாது என்று நினைப்பது என்ன அராஜகம் என்பது புரியவில்லை.
'இசையச் செய்யும் எதுவுமே நல்ல இசைதான்' என்கிறீர்கள் இல்லையா? மிக நல்ல மனம். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தமிழ்த்திரை இசைக்கான வடிவத்தை உருவாக்கி இளையராஜாவரைக்கும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் மகோன்னதர்களின் பல நல்ல நூற்றுக்கணக்கான பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த இசையமைப்பாளர்களின் சில நல்ல பாடல்களையும் கேட்டு மகிழுங்கள். வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நலமாக இருக்கிறீர்களா?பெரும்பாலும் தமிழ் மணம் முகப்பு பக்கத்தையும் ஈழம் பகுதியையும் தாண்டி நான் எங்கும் செல்வதில்லை.அத்திபூத்தாற் போல் திரைப்படம் பகுதி வந்த போது உங்கள் பதிவு மிகவும் கால தாமதமாக காணக்கிடைத்தது.

மாற்றுக்கருத்துக்களை புறம் தள்ளி விட்டு இளையராஜாவுக்கு இன்னும் டமாரம் அடிக்கலாம்.எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றே இளையராஜாவும் தமிழகத்தின் இசைப்பொக்கிசம்.

Amudhavan said...

இளையராஜாவுக்கு வேண்டிய அளவு டமாரம் அடியுங்கள். விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு ஜெ பெரிய அளவு டமாரத்தையே அடித்திருக்கிறாரே.

காரிகன் said...

திரு சுரேஷ் அவர்களுக்கு, இணையத்தில் இளையராஜாவை பற்றி எழுதும் பலபேர் சொல்லும் ஒரு cliche ராஜா ராஜாதான் என்பது.பின்னர் அவரின் இசை உயிரை உருக்கும் மனதை என்னமோ செய்யும் என்று வார்த்தைகள் இன்றி குழப்பமாக எழுதவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.பொதுவாக அவர்கள் இசையை பற்றிய ஒரு விஸ்தாரமான சிந்தனை கிடையாது. டி சௌந்தர் என்னும் ஒரு மிக அருமையான இசை விமர்சகர் எல்லா இசை அமைப்பாளர்களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு வந்து கடைசியில் இளையராஜாவோடு நின்றுவிடுகிறார்.எ ஆர் ரகுமானை காப்பி என்று ஒரே வார்த்தையில் புதைத்து விடுகிறார். இன்னும் ஒரு இளையராஜா அபிமானி(மதிமாறன் என்பவர்) சின்ன சின்ன ஆசை என்ற பாடலை விட மணியே மணிக்குயிலே என்னும் இளையராஜாவின் பாடல் வெகுவாக சிறந்தது என்றும் சின்ன சின்ன ஆசையை விரும்பிய எல்லா காதுகளும் முட்டாள் காதுகள் என்று அடைமொழி இடுகிறார்.இன்னொருவர் இளையராஜாதான் தமிழ் இசையில் பாடலுக்கு முன் இசை பாடலுக்கு இடையே இசை என்று ஒரு புதிய வடிவத்தையே புகுத்தினார் என்று வாய்கூசாமல் மைக் இல்லாமல் கூப்பாடு போடுகிறார்.இவர்களைத்தான் நான் அடிவருடிகள் என்று சொல்கிறேன். நானும் கூட இளையராஜாவின் சிறந்த பல பாடல்களை இன்றுவரை விரும்பி கேட்பவன்தான்.ஆனால் என்னால் இளையராஜா என்றால் இசை என்றும் அவரே தமிழிசையின் பிதாமகன் என்றும் கண்டிப்பாக பிதற்ற முடியாது.திரு அமுதவன் எம் எஸ் வி யை கடவுள் அளவுக்கு புகழ்வதாக நீங்கள் சொல்வது ஒரு தேவை இல்லாத விவாதத்திற்கு பாதை போடுகிறது. எப்படி இளையராஜாவுக்கு பின் ரகுமானோ(இதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டீர்கள்)அதே போல எம் எஸ் வி க்கு பிறகுதான் இளையராஜா வருகிறார், இருக்கிறார், இருப்பார். அவரை தாண்டி சொல்லும் மேன்மையான இசைதிறன் இளையராஜாவிடம் இல்லை என்பது அவருக்கே தெரியும். எம் எஸ் வி போல யாரும் இங்கே கிடையாது என்று அமுதவன் சொன்னால் நீங்கள் அவரை அடிவருடி என்று விமர்சிக்கலாம்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி காரிகன். மிகவும் தெளிவாக எல்லா விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள்.வெறும் பாடலின் வரிகளை அல்லது படத்தின் தலைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு இளையராஜாவைப் புகழ்வதுமட்டுமே போதும் என்றே நினைக்கிறார்கள். இப்போதுகூட 'நீ தானே என் பொன்வசந்தம்' என்ற தலைப்புடன் இளையராஜாவுக்கு மகுடம் சூட்டி நிறைய பதிவுகள். என்னுடைய நண்பர் ஒருவர் பாடலைக்கேட்டுவிட்டுச் சொன்னார்;'நீ இல்லை என் பொன்வசந்தம்'
இதற்கு நாம் என்ன செய்வது?

காரிகன் said...

அமுதவன் அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டபடி தற்போது இளையராஜா இசை அமைத்திருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்களைப்பற்றி பல பதிவர்கள் புகழ் மாலை சூட்டினாலும் அதில் இரண்டு பதிவுகள் நியமானதாக இருக்கின்றன.அவற்றை நீங்கள் படித்திருக்கலாம்.இருந்தாலும் அப்படி இல்லாத பட்சத்தில் இதோ அந்த இரண்டின் லிங்க்.

http://chinnappayal.blogspot.com/2012/09/blog-post.html#comment-

http://pitchaipathiram.blogspot.in/2012/09/blog-post.html

Amudhavan said...

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தளங்களையும் படித்தேன். எப்படி இசை பற்றிய எல்லாத்தளங்களையும் ஒன்றுவிடாமல் படித்துவிடுகிறீர்கள்! ஆச்சரியம்தான்.... இரண்டாவது தளத்தில் உங்கள் கருத்துக்களையும் படித்தேன். இளையராஜா வந்தவுடன் விஸ்வநாதன் காணாமல் போய்விட்டார். ரகுமான் வந்தபிறகும் இளையராஜா அப்படியே நின்றார். இதெல்லாம் இளையராஜா ரசிகர்கள் அவர்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளும் சமாதானம்போல்தான் தெரிகிறது.

விஸ்வநாதன் ஃபீல்டில் எத்தனை ஆண்டுகள் முதன்மையானவராக நின்றார். ராஜா எத்தனை ஆண்டுகள் நின்றார் என்பதுதான் சரியான கணக்கு. இதிலும் விஸ்வநாதனின் எத்தனைப் பாடல்கள் ஐம்பது வருடங்கள் தாண்டியும் நின்றிருக்கின்றன. ராஜாவின் எத்தனைப் பாடல்கள் வருடங்கள் தாண்டி நிற்கப்போகின்றன என்பதுதான் கேள்வி.இங்கே விஸ்வநாதனுக்கு ஆகும் வயதையெல்லாம் இவர்கள் கணக்கில்கொள்ள மாட்டார்களா என்பதும் முக்கியமான கேள்வி.சினிமாவில் நீடிக்க வெறும் பாடல்களில் இனிமை மட்டுமே போதாது. இளையராஜாவை விட்டுவிட்டு மணிரத்தினம் ரகுமானை நாடிச்செல்ல ராஜா சரியான இசை அமைக்கவில்லை என்பது காரணமே கிடையாது என்பதையெல்லாம் புரிந்துகொண்டால்தான் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.

ஜாஸ்,ஃப்யூஷன்,ராக்,பாப் என்றெல்லாம் ஜல்லியடித்துக் கொண்டிருந்தால் விஷயம் தேறாது. புதியதை விரும்புபவர்கள் என்றொரு கூட்டம் எப்போதுமே உண்டு. இவர்களை நம்பி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஏதாவது செய்யலாம்.அன்றன்றைய பிசினஸுக்கு இந்தக்கூட்டத்தைத் திருப்தி செய்துதான் ஆகவேண்டும். பிரச்சினை என்னவென்றால் இன்னொருவன் வேறு புதிதாக ஏதேனும் செய்தால் சட்டென்று அங்கே தாவி விடுவார்கள்.
காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களுக்கு இலக்கணங்களே வேறு.அந்த இலக்கணங்கள் எம்எஸ்விக்குத்தான் பயங்கர அத்துப்படி.

suresh said...

திரு காரிகன்,

// எம் எஸ் வி போல யாரும் இங்கே கிடையாது என்று அமுதவன் சொன்னால் நீங்கள் அவரை அடிவருடி என்று விமர்சிக்கலாம். //

- இதற்கு திரு.அமுதவனுக்கு பதிலளிக்கும்போதே நான் சொல்லிவிட்டேன்.

// எம் எஸ் வி க்கு பிறகுதான் இளையராஜா வருகிறார், இருக்கிறார், இருப்பார். அவரை தாண்டி சொல்லும் மேன்மையான இசைதிறன் இளையராஜாவிடம் இல்லை என்பது அவருக்கே தெரியும் //

- அப்படியா...?

// எப்படி இளையராஜாவுக்கு பின் ரகுமானோ(இதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டீர்கள்) //

- மன்னிக்கவும். நான் யாருக்கு பின்னேயும் யாரையும் இருத்திப பார்ப்பதில்லை... எனக்கு இசை முறைபடிஎல்லாம் தெரியாது. தெரிந்தவரை, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, எ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. யார் முன்னே யார் பின்னே என்று பார்க்க எனக்கு தேவையே இல்லை. அவரவர் சப்தங்கள் எந்த இடங்களில் என் மனதை வருடுகிறதோ, ஒரு நன்றியை சொல்லிவிட்டு புன்னகைத்துக்கொள்வேன்.

// திரு அமுதவன் எம் எஸ் வி யை கடவுள் அளவுக்கு புகழ்வதாக நீங்கள் சொல்வது ஒரு தேவை இல்லாத விவாதத்திற்கு பாதை போடுகிறது //

- தேவை இல்லாத...? - அப்படியானால் அந்த விவாதத்தை தவிர்த்துவிடுவோம்... :)

// நானும் கூட இளையராஜாவின் சிறந்த பல பாடல்களை இன்றுவரை விரும்பி கேட்பவன்தான்.ஆனால் என்னால் இளையராஜா என்றால் இசை என்றும் அவரே தமிழிசையின் பிதாமகன் என்றும் கண்டிப்பாக பிதற்ற முடியாது //

- மிக உண்மை...

// இணையத்தில் இளையராஜாவை பற்றி எழுதும் பலபேர் சொல்லும் ஒரு cliche ராஜா ராஜாதான் என்பது.பின்னர் அவரின் இசை உயிரை உருக்கும் மனதை என்னமோ செய்யும் என்று வார்த்தைகள் இன்றி குழப்பமாக எழுதவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.பொதுவாக அவர்கள் இசையை பற்றிய ஒரு விஸ்தாரமான சிந்தனை கிடையாது. டி சௌந்தர் என்னும் ஒரு மிக அருமையான இசை விமர்சகர் எல்லா இசை அமைப்பாளர்களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு வந்து கடைசியில் இளையராஜாவோடு நின்றுவிடுகிறார்.எ ஆர் ரகுமானை காப்பி என்று ஒரே வார்த்தையில் புதைத்து விடுகிறார். இன்னும் ஒரு இளையராஜா அபிமானி(மதிமாறன் என்பவர்) சின்ன சின்ன ஆசை என்ற பாடலை விட மணியே மணிக்குயிலே என்னும் இளையராஜாவின் பாடல் வெகுவாக சிறந்தது என்றும் சின்ன சின்ன ஆசையை விரும்பிய எல்லா காதுகளும் முட்டாள் காதுகள் என்று அடைமொழி இடுகிறார்.இன்னொருவர் இளையராஜாதான் தமிழ் இசையில் பாடலுக்கு முன் இசை பாடலுக்கு இடையே இசை என்று ஒரு புதிய வடிவத்தையே புகுத்தினார் என்று வாய்கூசாமல் மைக் இல்லாமல் கூப்பாடு போடுகிறார்.இவர்களைத்தான் நான் அடிவருடிகள் என்று சொல்கிறேன்.//

- ம்ம்ம்ம்... இளையராஜாவின் ரசிகர்களுடைய ஆர்வக்கோளாறின் காரணமாக அநியாயமாக ராஜாவின் இசை அசிங்கப்படுவது வருத்தமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது.

Anonymous said...

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையே நம்பர் 1 .முதலில் அதை ஒப்புகொள்ளுங்கள்.அந்த பெயரை /அதன் பலனை விஸ்வநாதனுக்கு தாரை வார்க்காதீர்கள்.விஸ்வநாதனுக்கு எம்.ஜி.ஆர் மிகப் பக்க பலமாக இருந்தார். அதனால் "நான் தேவன்டா " புகழ் சிவாஜி " எம்ஜிஆர் படத்திற்கு சிறப்பாக இசையமைப்பதாக" விச்வனாதனிடமே கேட்டிருக்கிறா.அதற்க்கு விஸ்வநாதன் " அப்படி இல்லை , நீங்கள் இரண்டு பெரும் என் இரண்டு கண்கள் " என்று சமாதனம கூறியதாக அவரே கூறியிருக்கிறார்.எம்ஜிஆர், விஸ்வநாதன் மலையாளிகள் என்று சிவாஜி ஜால்ராக்கள் போட்டுகொடுத்திருப்பார்களோ தெரியாது.
திரு அமுதவன் அவர்களே !
உங்களுக்கு இசை பற்றிய வரலாற்று அறிவில்லை எனபது மட்டும் தெரிகிறது.இளையராஜவில் மீது காழ்புணர்வு இருக்கிறது.அதன் விளைவு தான் உங்கள் நையாண்டி கட்டுரைகள்.நீங்கள் சொல்லும் விஸ்வநாதனின் பாடல்கள் எல்லாம் ஹிந்தி பாடல்களிலிருந்து சுட்டவை தான்.[அவற்றையும் பட்டியல் போட முடியும்.]அவை கூட ஹிந்தி பாடல்களின் நிழல் தான்.அதனால் தான் தமிழ் மண்ணின் இசை அதனைத் தகர்த்தெறிந்தது.[அவற்றையும் பட்டியல் போட முடியும்.] இன்றைய ரகுமான் இசை அப்படியா ? நீங்கள் காதை போத்தின்னாலும் உள்ளூர் டிவி கண்டு கொள்ளப்போவதில்லை.அவர்கள் அதை ஒளிபார்ப்பியே தீருவார்கள்.கூடன்கூளம் அணுமின் நிலையம் போல.அணுமின் நிலையத்தை எப்படி நிறுத்த முடியாதோ ,அது போலவே ரகுமான், யுவன் சங்கர் ராஜா , விஜய் அந்தோனி போன்றோரின் இசையையும் உங்களால் நிறுத்த முடியாது.அதன் சூத்திர தாரிகள் யார் என்று கண்டு பிட்யுங்கள் பார்ப்போம்.
ரகுமான் ஊதிப் பெருக்கப்படுகின்றார்.கொலை வெறியின் வெற்றி [!] எப்படி நகைப்புக்குரியதோ அவ்வாறே ரகுமானின் பாடல்களும். ரகுமான் என்பவரை அவரது இசை மூலமே அறிந்தோம்.அவர் பற்றிய தனிப்பட்ட வன்மம் எனக்கு கிடையாது. "பாவம் பொடியனை பிடிச்சு ஏத்தி விட்டிருக்கிறார்கள்".அந்த பொடியன் என்ன செய்யும்.

கர்னாடக இசை , மேலைத்தேய இசை , நாடுப்புறஇசை எல்லாவற்றிலும் பாடித்தியம் உள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா எனபது குழந்தைக்கும் தெரியும்

அன்பன் தாஸ்

Amudhavan said...

தாஸ் யார் இங்கே வன்மத்தோடு எழுதுகிறார்கள் என்பதை அவரவர் வார்த்தைகளிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. இளையராஜாவைத் தூக்கிப் பிடிப்பதற்காக சிவாஜியின் ஜாதி பற்றிப் பேசுகிறீர்கள். விசுவநாதனும் எம்ஜிஆரும் மலையாளி என்கிறீர்கள். ஏஆர்ரகுமானையும் முஸ்லிம் என்று சொல்லாமல் இனம் பற்றிப்பேசுகிறீர்கள். இந்தமாதிரியான விவாதம்தான் உங்களுடையது எனில் நான் உங்களுடனான விவாதத்திற்கு வரவில்லை. இதில்வேறு, எனக்கு இசை பற்றிய வரலாற்று அறிவில்லை என்றுவேறு சொல்கிறீர்கள்.

மீண்டும் சொல்கிறேன். இசையை ரசிப்பதற்கு நல்ல மனமும் நல்ல இதயமும் நல்ல சூழலும் நல்ல பாடலும் மட்டும் இருந்தால் மட்டும் போதும். வரலாற்று அறிவு,ரசாயன பௌதிக அறிவெல்லாம் தேவையில்லை.
என்னவொன்று நல்ல இசை என்பதைத் தரம் பிரிக்க கொஞ்சம் பட்டய அறிவு தேவை. அது நிறையவே இருக்கிறது.
சிவாஜி எம்எஸ்வி கதைகள் எல்லாம் எடுத்து விட்டிருக்கிறீர்கள். நமக்கும் இப்படிப்பட்ட கதைகள் ஏன் இளையராஜா மற்றவர்களிடம் சொன்ன கதைகள் எல்லாம் இருக்கின்றன, நிறையவே தெரியும். உங்கள் போல் ஆத்திரத்தில் அவற்றையெல்லாம் இறைப்பது நாகரிகமில்லை.
விஸ்வநாதனின் நான் குறிப்பிட்ட எல்லாப் பாடல்களும் இந்தியிலிருந்து சுடப்பட்டவை என்றும் அதற்கான பட்டியல் உங்களிடமும் இருப்பதாகச் சொல்கிறீர்கள். தயவுசெய்து கொடுங்கள். எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும். நானும் தெரிந்துகொள்கிறேன்.
தமிழ் மண்ணின் இசை எதையோ 'தகர்த்தெறிந்தது' என்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எதைத் தகர்த்து எங்கே எறிந்திருக்கிறது? என்பதையும் தயவுசெய்து சொல்லுங்கள்.
கர்நாடக மேலைத்தேய நாட்டுப்புற மட்டுமின்றி செவ்வாய்கிரக புதன்கிரக வியாழன் கிரக இசையிலும் பாண்டித்யம் மட்டுமல்ல அவற்றையெல்லாம் கண்டுபிடித்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே என்பதையும் உங்களுக்காக வேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய வாதம் என்னவென்றால் பாண்டித்யம் மட்டுமே ஒரு பாடல் நின்று நிலைபெற போதாது என்பதுதான்.
வித்துவான் வே.நடேசமுதலியாருக்கு தண்டியலங்காரத்திலிருந்து தொல்காப்பியம்வரை தலைகீழ் பாடமாம்.ஆனால் நமக்கு நடேசமுதலியாரைத் தெரியுமா கண்ணதாசனையும் வாலியையும் தெரியுமா?
அப்புறம் முக்கியமான ஒன்று. விசுவநாதன் ராமமூர்த்தி பாராட்டு விழாவில் இளையராஜா பேசிய பேச்சு வரப்போகிறது. அதையும் பார்த்துவிட்டு அப்புறம் பேசுங்கள்.

Amudhavan said...

திரு சுரேஷ் நான் விலகிக்கொள்கிறேன். திரு காரிகன் உங்களுக்கு பதில் சொல்லுவார்.

suresh said...

// விஸ்வநாதனுக்கு எம்.ஜி.ஆர் மிகப் பக்க பலமாக இருந்தார். //

- எனக்குத் தெரிந்தவரை எம்.எஸ்.விக்கு மாற்றாக ஷங்கர் கணேஷை முன்னிருத்தியதே எம்.ஜி.ஆர்தான்.

எம்.எஸ்.விக்கு எஸ்.ஜி; கண்ணதாசனுக்கு வாலி; டி.எம்.எஸ்க்கு எஸ்.பி.பி. என்று நிறைய மாற்றங்கள், முக்கியமான மாற்றங்கள்... வெற்றிகரமான மாற்றங்கள்...

Anonymous said...

நீங்கள் சரியாக சில விசயங்களை பேசுகிறீர்கள்.[ இசையை ரசிப்பதற்கு நல்ல மனமும் நல்ல இதயமும் நல்ல சூழலும் நல்ல பாடலும் மட்டும் இருந்தால் மட்டும் போதும்.]

ஆனால் அது பற்றி எழுதுவதற்கும் நல்ல மனம் தேவை.உண்மையை ஒத்துக் கொள்ளும் மனம் தேவை.அந்த தார்மீக நேர்மை உங்களிடம் இல்லை.
உங்களிடம் விவாதிப்பது சாரமற்றது.
நன்றி வணக்கம்.
தாஸ்

காரிகன் said...

திரு சுரேஷ் அவர்களின் கருத்துக்கு நான் என்ன எழுதினாலும் உடனே அவர் நான் எழுதியதையே பேஸ்ட் செய்து அடடா, அப்படியா, மிக்க நன்று என்று ஒரே வார்த்தையில் உடன்படுவார் அல்லது தெரியாதது போல நடிப்பார். மீண்டும் மீண்டும் ஒரே மரத்தையே சுத்தி சுத்தி வருவது போல கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.இளையராஜா நன்றாக இசை அமைத்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகால தமிழ் திரை இசையில் அவருக்கு இப்படி பாடல்கள் அமைக்க சரியான களம் விட்டு விட்டு சென்றிருக்கும் பல இசை மேதைகளை பற்றி ஒன்றுமே தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் வீம்பாக நாட்டுப்புற, நகர்புற கிராமத்து நகரத்து இசையில் இளையராஜாதான் ஆட்சி செய்கிறார் என்று மேல உள்ள தாஸ் என்பவர்போல படிப்பவர்களை வாயடைத்துப்போக வைக்கும் பல "நல்ல உள்ளங்கள்" கொஞ்சம் பின்னால் திரும்பி பார்ப்பது நல்லது.அமுதவன் அவர்கள் சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஒருகாலத்தில் கர்நாடக சங்கீதத்தையே பிரதானமாக கொண்டு புரியாத பாணியில் பாடல்கள் அமைக்கப்பட்டபோது அதை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாதாரண பாமரன் காதுகளையும் அடையும்படி கர்நாடக சங்கீதத்தின் மகா பாரமான வீரியத்தை குறைத்து,மெல்லிசை கலந்து, ஆங்கில கலப்பிசையை சரியான விகிதத்தில் குழைத்துகொடுத்து, கேட்பவர்களின் உதட்டிலும் மனதிலும் சடாரென ஒரே கணத்தில் உட்காரவைத்து,அதையே மீண்டும் மீண்டும் அசை போட வைத்து,அத்தனை விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் பல புதுமைகளை பாடல்களுக்குள் செலுத்தி,இன்றுவரை உயிரோடு தினமும் ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்ச்சியூட்டும் இறப்பில்லா பல பாடல்களை நமக்கு இந்த மண்ணின் சொத்தாக படைத்திருக்கும் இசைமேதைகளை சூ என்று ஒரு கை அசைப்பின் மூலம் புறந்தள்ளுவது வினோதமான அநியாயமான மனப்போக்கு.இத்தனை வசதிகளை அவர்கள் செய்து விட்டு போனபின் வந்த திரு இளையராஜா, அந்த மேதைகள் விட்டு சென்ற பாதையில் சுகமாக தன் வண்டியை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.(இருந்தார் என்பதே பொருத்தம்) அந்தந்த காலத்தின் சிறப்புகளையும் அவரவர்களுக்குரிய புகழ்களையும் அவரவர்களுக்கு கொடுத்து விட்டு மற்றவர்களை தாராளமாக பாராட்டலாம். திரு சுரேஷ்ஷிடம் காணும் மன பக்குவம் தாஸ் என்பவரிடம் மருந்துக்கு கூட இல்லை.மைக்ராஸ்கோப் வைத்து பார்த்தால் கூட தென்படாது போலதெரிகிறது. எம் எஸ் வி யின் பாடல்கள் ஹிந்தி பாடல்களின் திருட்டாம். அப்படியானால் இளையராஜாவின் டார்லிங் டார்லிங் டார்லிங் (பிரியா பட பாடல்) போனி எம் குரூப்பின் சன்னி ஐ லவ் யூ போலவே ஒலிப்பது ஏன்?வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை திருடி அவர் போட்ட முரட்டுக்காளை பாடலை பற்றி நான் சொல்லவா?அதே பிரியா படத்தில் வரும் அக்கரைசீமை பாடல் சைமன் டூப்ரியின் கைட்ஸ் பாடலின் அப்பட்ட காப்பி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நீங்கள் கேட்டவை படத்தில் வரும் கனவு காணும் வாழ்க்கை உப்கார் என்ற ஹிந்தி படத்தின் கஸ்மே வாதே என்ற பாடலின் துல்லியமான நகல். மொசார்ட் பாக் என்று மேற்கத்திய மேதைகளின் இசைகோர்ப்பை சத்தமில்லாமல் உருவி உருப்படாத பாடல்களில் அதை பயன் படுத்தியவர் இந்த இளையராஜா.Check your facts you people like Dass, before you accuse greats like M.S.V. இளையராஜாவை பற்றி இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. சொன்னால் பலபேருக்கு உஷ்ணம் தலைக்கேறலாம்.எனவே இத்துடன் தற்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்.

Amudhavan said...

என்ன தாஸ் மறுபடியும் நீங்கள் அதே பழைய பல்லவியை 'இளையராஜாவுக்குத் தெரிந்த மேலைநாட்டு,ஜாஸ்,ராக்ஸ்,பாப் என்றும் சிவாஜி தேவர், ராமமூர்த்தி பிள்ளை கேவிஎம் பிராமணர்' என்றும் ஏதாவது சொல்வீர்கள் என்றுதான் பார்த்தேன். நல்லவேளையாக எதுவும் சொல்லாமல் விலகியிருக்கிறீர்கள்.
தவிர விசுவநாதன் இசையமைத்த அல்லது இசையமைப்பில் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாடல்களும் இந்தியிலிருந்து உருவப்பட்டவை என்பதற்கான பட்டியல் உங்களிடமிருக்கிறது என்றும் அதனை வெளியிடப்போவதாகவும் சுப்பிரமணிய சாமியைப்போல் அறிவித்திருந்தீர்கள். அந்தப் பட்டியலுக்குத்தான் ஆவலோடு காத்திருந்தேன். அந்தப் பட்டியல் வந்திருந்தால் என்னைப்போன்ற அல்லது திரு காரிகன் அவர்களைப்போன்றவர்கள் மட்டுமல்ல திரு எம்எஸ்வியே தாம் எந்தெந்தப் பாடல்களிலிருந்து உருவியிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்....ஜஸ்ட் மிஸ்ட்..ரொம்பவும் ஏமாற்றம்.

Amudhavan said...

சுரேஷ் அருமையான முறையில் சிலவற்றை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். சங்கர் கணேஷூக்கும் முன்னதாக எம்எஸ்விக்குப் போட்டியாக குன்னக்குடி வைத்தியநாதனை உருவாக்க நினைத்தார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபனுக்கே குன்னக்குடியை வைத்து சில பாடல்களெல்லாம் போடவைத்து அது எதுவும் தேறாது படமும் தேறாது என்பதனால்தான் மறுபடி விசுவநாதனைக் கூட்டி வந்தார். டிஎம்எஸ்ஸுக்கு எதிராக கேஜேஏசுதாஸையும் பின்னர் பாலசுப்பிரமணியத்தையும் கூட்டிவந்தார். தம்மை மட்டும் முன்னிறுத்திக்கொண்டு மற்ற எல்லாருக்கும் மாற்று ஒருவரை நிறுத்திக்காட்டுவதுதான் எம்ஜிஆரின் பாணி. கண்ணதாசனை ஒழித்துக்கட்ட வாலியை அழைத்துவந்து பிரபலப்படுத்தியவர் கடைசியில் கண்ணதாசனை 'ஒன்றும் செய்யமுடியாமல்' அவரை அரசவைக்கவிஞராக ஆக்கியதன் பின்னணியில் நிறைய அரசியல்.
சிவாஜி எம்ஜிஆர் என்ற இரண்டு கலையுலக இமயங்களின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உடன் பயணிக்கிறவர் எம்எஸ்வி. ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல் இளையராஜா இளையராஜாதான் என்று சும்மா பிதற்றிக்கொண்டு இருப்பதில் பிரயோசனமில்லை.

Amudhavan said...

'ஒரு காலத்தில் கர்நாடக சங்கீதத்தையே பிரதானமாக'........என்பதில் ஆரம்பித்து 'மற்றவர்களை தாராளமாகப் பாராட்டலாம்' என்ற வரிகள்வரை சிம்ப்ளி பிரமாதம்.
மிகப்பிரமாதமாய் எல்லாவற்றையும் உள்வாங்கியிருக்கிறீர்கள். உள்வாங்கினால் மட்டும் போதாது. அதனைச் சிறப்பாக வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான மொழி ஆளுமையும் வேண்டும். உங்களிடம் அத்தனையும் இருக்கிறது. திரைப்பாடல்கள் பற்றிய உங்கள் எழுத்து ஆலாபனை படித்துக்கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பாராட்டுக்கள்.

Amudhavan said...

மேற்கண்ட பதில் திரு காரிகனுக்கானது.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களுக்கு நீங்கள் என்னை பாராட்டி எழுதி இருப்பதற்கு எனது நன்றிகள். அதற்கு முன் நான் இதை உங்களிடம் சொல்லிவிட வேண்டும் இணையத்தில் நான் படித்துவந்த பல பக்கங்கள் இன்றைய அவரச,ஒழுங்கில்லாத,தரமில்லாத தமிழில் இருந்தன.காமென்ட் எழுதுபவர்களும் எதோ திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக பேசிக்கொள்வதை போல கொச்சயான வார்த்தைகளோடு எழுதியதை படித்து படித்து கொஞ்சம் நல்ல தமிழ் மீது அவநம்பிக்கையே வந்து விட்டது. அப்போதுதான் முதன் முதலாக உங்களின் ரகுமானா இளையராஜாவா என்ற பக்கத்தை காண நேரிட்டது. வழக்கம் போல ஒரு இளையராஜா பல்லவி பாடும் இன்னொரு ஆள் இதோ வந்து விட்டார் என்று உள்ளே நுழைந்தேன்... அடடா என்ன ஒரு ஆச்சர்யம்.. நீங்கள் இளையராஜாவையும் ரகுமானையும் தாண்டி நான் கருத்து கொண்டிருந்த படியே திரு எம் எஸ் வி, கே வி மகாதேவன் என்று இந்த கால ரசிகர்கள் மறந்து போன உண்மையான மேதைகளை பற்றி வியப்பான நடையில், தெளிவான நீரோட்டம் போல எங்கும்படிப்பதை நிறுத்தி விட முடியாத வகையில் எழுதி இருந்ததை ரசித்துப்படித்தேன். இப்படியான ஒரு எழுத்து நடை கண்டிப்பாக தற்போது இனையத்தில் வெகு அரிதாகவே காண முடிகிறது.பிறகு சுஜாதா கமல் முதல் சந்திப்பு என்ற பதிவை படித்தபோது இருவரையும் ஒரு காலத்தில் நான் அதீதமாக ரசித்தவன் என்பதால் அது எனக்கு ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வை கொடுத்தது.யார் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று பெயரை பார்த்தபோது அமுதவன் என்ற உங்கள் பெயர் உங்களின் பழைய பதிவை எனக்கு நினைவூட்டியது. அன்றிலிருந்து உங்களை நான் பின் தொடர்கிறேன். நீங்கள் என்னை பாராட்டி எழுதுவது உங்களின் பண்பை காட்டுகிறது.மற்றவர்களை பாராட்டுவதற்கு கூட ஒரு நல்ல மனம் வேண்டும். இதற்கும் நான் எம் எஸ் வி யையே உதாரணமாக சொல்வேன். அவர் எந்த பேட்டியிலும் யார் எப்படி உங்களால் இப்படி ஒரு அருமையான பாடலை கொடுக்க முடிந்தது என்று கேட்டாலும் அது கவிஞர் எழுதியது என்னுடன் இசை வாசித்தவர்கள் செய்தது பாடியவர்கள் நன்றாக பாடியது என்று ஒரு பாடலுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் பெருந்தன்மையோடு நினைவு கூர்வார். அந்த பண்பு சில இசைஞாநிகளிடம் காணக்கிடைக்காதது. எதோ தானே பாடல்களை உருவாகியது போன்ற பிரமையை கேட்பவர்களுக்கு ஏற்படுத்தி பார் நான் எவ்வளவு பெரிய ஆள் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு வித நார்சிஸ்ட் ஆளுமை அவர்களுடையது. இளையராஜாவின் பல பாடல்கள் வைரமுத்துவின் கவிதைகளால் இன்றுவரை பேசப்படுவதை அவர் ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை.

Amudhavan said...

மேற்கண்ட பதிவைப் படித்த ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு "சார் ஒரு விஷயம் தப்பாக எழுதியிருக்கிறீர்கள். திரு தாஸ் என்பவருக்கான பதிலில் டிகேராமமூர்த்தி பிள்ளை என்பதாக எழுதியிருக்கிறீர்கள். அவர் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. அவர் இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் இந்தத் திருத்தம் போட்டுவிடுங்கள்" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதி விஷயங்களை மக்கள் எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதும் ஒவ்வொருவரும் அவர் கொஞ்சம் பிரபலமடைந்துவிட்டாலேயே இன்ன சாதி என்பதைக்கொண்டுதான் அவரைப்பற்றிய அபிப்பிராயங்களுக்கு பெரும்பாலானவர்கள் வருகிறார்கள் என்பதும் ஆச்சரியமான கொஞ்சம் உறுத்தலான விஷயமாகவே இருந்தது.
எனக்கு ஜாதிகளில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது என்பதனால் இந்தத் தவறு நடைபெற்றிருக்கலாம் என்று அவரிடம் சொல்லிவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன். "ராமமூர்த்திபற்றி இந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் ராமமூர்த்தி சில மெட்டுக்கள் போட்டிருப்பார் இல்லையா அதில் ஒரு பாடலை உங்களால் சொல்லமுடியுமா?" என்றேன். "அதுவந்து... அதுவந்து...அதெல்லாம் தெரியாது. ஆனால் நான் அவரகளின் பாடல்களுக்கு ரசிகன்" என்றார்.
சரி நண்பரே நீங்கள் சொல்லியபடியே நீங்கள் சொன்ன தகவலை இங்கே தெரிவித்துவிட்டேன்.

Amudhavan said...

திரு காரிகன் தங்களின் விரிவான பதிலுக்கும் என்னுடைய தமிழ்பற்றிய கருத்திற்கும் நன்றி. இணையத்தில் தமிழ் எழுதுபவர்களை அவர்கள் தமிழுடன் உறவாடுகிறார்களே என்பதற்காகவாவது பாராட்ட வேண்டியதுதான்.எழுத எழுத தமிழ் அவர்களுக்கு வசமாகிவிடும்.

ஆனால் இணையத்தில் உடைக்கப்பட வேண்டிய தவறான கற்பிதங்கள் நிறைய உள்ளன.தங்களுக்கு ஏதோ ஒன்று பிடித்துவிட்டால் அதுஒன்றுதான் உலகிலேயே மிகவும் சிறந்தது அதற்கு ஒப்பானது இன்னொன்று கிடையாது என்ற மனோபாவம் நிறையப்பேருக்கு இருக்கிறது.தான் வைத்ததுதான் சட்டம் தான் சொல்லியதுதான் வேதம் என்பதுபோன்ற எதேச்சாதிகார மனப்பான்மைதான் இது.
அதற்கு ஏற்றாற்போல் இவர்களுக்கு இணையத்தின் மூலம் பதில் சொல்லவேண்டியவர்களுக்கு இணையத்தின் தொடர்புகள் அவ்வளவாக இல்லை.அந்த இடம் வெகு தொலைவுக்குக் காலியாக இருக்கிறது. அதனால் 'இது வேறு உலகம் இங்கே எல்லாமே நாம் நினைத்தபடி; நாம் நிர்ணயித்தபடி' என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இளையராஜா பற்றிய என்னுடைய பதிவுகளுக்குப்பின் நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் ஒன்றைப் புரிந்திருக்கலாம். இதுநாள்வரை இளையராஜாதான் இளையராஜா மட்டும்தான் என்று ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த சிலர் இப்போதெல்லாம் 'எம்எஸ்விக்கு எந்தவகையிலும் குறைந்தவர் இல்லை இளையராஜா. எம்எஸ்வி ஒரு இமயம் என்றால் இளையராஜா இன்னொரு இமயம்' என்கிறமாதிரி பம்ம ஆரம்பித்திருக்கிறார்கள்.இளையராஜா ரசிகர்களுக்கு சரியானவேளையில் பாடம் கற்பித்திருக்கிறார் ஜெயலலிதா.'இல்லையில்லை சரியான இசைதேவன் இளையராஜாதான்.எம்எஸ்விக்கு எதற்காக பாராட்டு என்று ஏகப்பட்ட பதிவுகள் போடவேண்டியதுதானே.

அப்புறம் இந்த நாட்டுப்புற இசை. இதனைத் தமிழ்த்திரையில் மிக வெற்றிகரமாக பயன்படுத்தி மக்களை அங்கீகரிக்கச் செய்தவர் கேவிமகாதேவன். அதனையே இளையராஜா செய்ய ஆரம்பித்ததும் நாட்டுப்புற மெட்டைத் தமிழர்களுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான். மக்களின் இசையைக் கொண்டுவந்தார்,கிராமத்து ஆன்மாவைக் கொண்டுவந்தார் என்று என்னென்னமோ பிதற்றி அதனை இவர்களாகவே அங்கீகரித்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்துவருகிறார்கள்.இந்தக் கற்பிதத்தையும் தகர்க்க வேண்டும்.

தவிர நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. இளையராஜாவின் மனப்போக்கு எத்தகையது என்பதை இந்தத் தலைமுறை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. இதோ அதனை நம்முடைய குமுதம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்போகிறது. இளையராஜாவை ஆராதிப்பதற்கென்றே தொடங்கப்பட்டிருக்கும் கேள்விபதில் அது. ஆனால் நம்முடைய இசைஞானி அதையெல்லாம் கவிழ்த்துவிடுவார். அவருடைய குணம் அது. கேள்விபதில்களைப் படிக்கிறீர்கள் இல்லையா? அவரை தெய்வம்போல் நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு சம்மட்டி அடிகள் ஆரம்பமாகிவிட்டன. போகப்போகப் பாருங்கள் அவருக்கு இருக்கும் புகழில் பாதியையாவது அவரே நிர்மூலம் பண்ணிவிட்டுத்தான் ஓயப்போகிறார்.'அவர் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும் அவர் இசைதான் எங்களுக்கு உயிர் அவர் பாடல்கள் மட்டுமே எங்களுக்குப் போதும்' என்கிறமாதிரி இவர்களே சமாதானம் சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் பொறுமப் போகிறார்கள். ரசிகர்களுக்கான இளையராஜாவின் கச்சேரி ஆரம்பமாகிவிட்டது.

காரிகன் said...

எனக்கு தெரியாத சில விஷயங்களில் என் சகோதரன் எனக்கு சொல்வதுண்டு. அதில் ஒன்றுதான் தமிழ் திரை இசையில் நாட்டுப்புற பாடல்களை அறிமுகப்படுத்தினது மட்டுமில்லாது
அதை பிரபல்யமாக்கியதும் கே வி மகாதேவன் என்பது. நீங்கள் தமிழில் நாட்டுப்புற இசையை கொண்டுவந்தவர் எம் எஸ் வி தான் என்று சொல்லி இருந்தால் நீங்கள் கூட ஒரு எம், எஸ் வி அடிவருடி என்று என்னாலேயே தீர்மானிக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் உண்மையை சொல்பவர் என்பதை உங்களின் பதில் முடிவாக உறுதி செய்துள்ளது. கே வி மகாதேவனின் வண்ணக்கிளி படப்பாடல்கள் அந்த காலத்தின் நாட்டுப்புற இசையை அப்படியே வெளிகொணர்ந்த பாடல்கள். எதோ ஒரு வித தவறான என்னவோட்டதினால் இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களின் அரசன் என்று தமிழக மக்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் சொல்வது போல இப்போது இளையராஜா விசில்கள் பம்முவது உண்மைதான்.ஆயிரம் பதிவுகள் அவர்கள் மெனக்கெட்டு இளையராஜா பற்றி எழுதினாலும் இனிமேல் ராஜாவால் இன்னொரு ராஜாங்கம் செய்ய முடியாது. போனவர் போனவர்தான்.இளையராஜாவின் சில நல்ல பாடல்களை நான் விரும்பினாலும் அவரே தமிழ் இசையே முதலில் சீரழித்தவர் என்பதால் அவரை ஒரு உயர்வான இடத்தில் வைத்து என்னால் புகழாரம் சூட்ட முடியவில்லை.

suresh said...

எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் ஒருமுறை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது...

"நான் ஏன் சமூக சீர்திருத்தங்களைப்பற்றி எழுதுவதில்லை அப்படின்னு கேட்கறாங்க. நானும் எழுத வந்தபுதிதில் இந்த உலகை மாற்றியமைக்க வேண்டும். புரட்டி போடவேண்டும் திருத்தியமைக்க வேண்டும் அப்படின்னு நினைச்சது உண்டு.. போக போக புரிந்துகொண்டேன், இங்கே ஒரு மண்புழுவைக்கூட திருத்தமுடியாது என்பதை... "

- என்று நகைச்சுவையாக சொல்லியிருந்தார். ஆனால் அந்த நகைச்சுவையில் எவ்வளவு ஆழமும் அழுத்தமும் இருந்தது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமழ் மக்கட்தொகையில் பத்து சதவிகிதம் இணையம் உபயோகிப்பவர்கள் இருக்கலாம். அதில் பத்து சதவிகிதத்தினர் ப்ளாக் படிப்பவர்கள். அதற்குப்பின் எழுதுபவர்கள் என்று கணக்கு எடுத்தால் ஒரு ஆயிரம் பேர் மிஞ்சுவார்கள். இதில் இளையராஜாவை தூக்கிப்பிடிக்க, ரஹ்மானை தூக்கிபிடிக்க, எம்.எஸ்.வியை தூக்கிபிடிக்க, என்று ஆளாளுக்கு ஒருவரை தூக்கிப்பிடித்துகொண்டுதான் இருப்பார்கள். இதில் யார் யாரை மாற்றப் போகிறார்கள்... எதற்காக மாற்றவேண்டும்...

- என்பதான கேள்விகள் என் மனதில் எழுந்தாலும் திரு.காரிகன் சொன்னதுபோல் நல்ல தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு இடமாகவே இத்தளங்களைப் பார்க்கிறேன்...

மற்றபடி எனக்கான நல்ல இசை என்பது என் மனதைப் பொறுத்த விஷயம் என்பதை உறுதியாக நம்புகிறேன். கே.வி.எம்மின் இசை ஒரு விதத்திலும் எம்.எஸ்.வியின் இசை ஒருவிதத்திலும், இளையராஜாவின் இசை ஒருவிதத்திலும், ரஹ்மானின் இசை ஒருவிதத்திலும் என் மனதை வருடியிருக்கிறது. இதில் விட்டுப்போன என் அபிமானத்துக்குரிய திரு.எ.எம்.ராஜாவின் இசை... :) மறக்கவே முடியாத அனுபவம் அது.

இங்கே நான் இப்பொழுது பதிவு செய்ய நினைத்த செய்தி என்னவென்றால், இவர்களைத்தவிரவும், கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் பலப்பல இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றிஎல்லாம் நாம் விவாதிப்பதேயில்லை. ஒருபாடல் செய்தார்களோ ஓராயிரம் பாடல் செய்தார்களோ... எண்ணிக்கை இங்கு கணக்காகாது. ஒரு பிள்ளை மட்டுமே பெற்ற தாய் ஏழு பிள்ளை பெற்றவளைவிட எந்த விதத்திலும் குறைந்துபோவதில்லை. ஆனால் அத்தகைய மற்ற இசையமைப்பாளர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த நான்கைந்து பேர்களை மட்டுமே விவாதிக்கிறோமே.. அது ஏன்..?

ஏனென்றால் இவர்கள் அனைவரும் சாதித்தவர்கள் - அதனால்தான்; இவர்கள் trend setters. - அதனால்தான்; எந்தவொரு இசையமைப்பாளருக்கும் அவருடைய பிரான்ட் இசையை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் வென்றது இவர்கள் மட்டும்தான்.

வாழ்த்திவிட்டு போவோமே... என்ன பிரச்னை...?

இதுவே வேறு எந்த நாட்டவர்களாக இருந்திருந்தாலும் இத்தனை மேதைகள் தங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூரை ஏறி கூவியிருபார்கள்... என்ன செய்வது.. நாம் தமிழர்களாயிற்றே... மேலே ஏற முயற்சி செய்பவர்களின் காலைபிடித்து கீழே இழுத்து எல்லோரும் சேர்ந்து குழியில் விழுவதுதான் நம் குலவழக்கம்... கலாச்சாரம்... மாற்ற முடியுமா என்ன...?

யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்...

திரு காரிகன் அவர்களே... எந்த காரணத்திற்காகவும் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி...

Amudhavan said...

சுரேஷ், விடாப்பிடியாக உங்கள் கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள்.அதுவும் சரியான முறையில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றி. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதே அடிப்படையில்தான் நானும் இங்கே பதிவுகளை எழுதியிருக்கிறேன். திரு காரிகனும் அதே அடிப்படையில்தான் அவரது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். பிரச்சினை என்னவென்றால் இம்மாதிரி எந்தவித அடிப்படையும் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே இங்கே ஒரு சிலர் உயர்த்திப் பிடிக்கிறார்கள். தவறான புரிதல்களுடன் அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்கிறார்கள். இல்லையப்பா இதைவிடவும் சாதித்த மனிதர்கள் இவருக்கு முன்னமேயே நிறைய இருக்கிறார்கள். அவர்கள் போட்டுவைத்த சாலையில்தான் இவரே பயணிக்கிறார் என்பதை மட்டும்தானே இங்கே சொல்கிறோம்.
'மக்களின் பேரபிமானம் பெற்றவர் ரஜனி மட்டும்தான்' என்று ஒருவர் சொல்லப்புகுந்தால் 'இல்லை இவருக்கு முன்பே எம்ஜிஆர் இருந்தார்' என்ற செய்தியைக்கூடச் சொல்லக்கூடாது என்றால் எப்படி?
சென்ற ஜனவரி மாதப் பதிவுகளில் 'நன்றி நண்பர்களே நன்றி' என்ற ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதில் எது தமிழ்த்திரை இசை? என்று ஒரு கேள்விப்பட்டியலை வைத்திருக்கிறேன். அதில் விடுபட்ட பெயர்கள் சில இருக்கலாம். அந்தப் பட்டியலுக்கு இதுவரை மாற்றுக்கருத்துள்ள நண்பர்கள் யாரும் முறையான பதில்கள் சொல்லவில்லை. அந்த கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லிவிட்டு நண்பர்கள் அவர்கள் குறிப்பிடும் அந்த 'ஒரேயொருவரை' உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்றால் வாருங்கள் நாம் எல்லாரும் சேர்ந்தே அவரை உயர்த்திப் பிடிப்போம்.

காரிகன் said...

குமுதத்தில் இளையராஜாவின் கேள்வி பதில் என்ற புதிய பகுதியை படிக்க நேரிட்டது. அமுதவன் அவர்கள் சொன்னது போலவே இளையராஜாவின் விசில்களுக்கு இது ஒரு பேரிடியாக இருக்கப்போகிறது என்பது அவரின் முதல் பகுதியிலேயே தெரிந்துவிட்டது. கீழே உள்ள லிங்க் அதை உறுதி செய்கிறது. இதை கண்டிப்பாக நீங்கள் படிக்கவேண்டும்.

http://www.saravanakumaran.com/2012/09/blog-post_15.html

Amudhavan said...

காரிகன் நீங்கள் சொன்னபிறகு சரவணகுமரனின் பதிவைப் படித்தேன். நொந்துபோய் ஆனாலும் இளையராஜாவின் மீதான பற்றை விடமுடியாமல் எழுதியிருக்கிறார். அதிலும் முற்பிறவி- இந்தப்பிறவி பற்றிய கேள்விபதிலை விட்டுவிட்டிருக்கிறார்.(இந்த லிஸ்டில் அதுதான் டாப்) அல்லது இளையராஜாவின் பெயரை மிகவும் கெடுக்கும் என்ற நல்ல எண்ணத்தினால் அதனை விட்டிருக்கலாம். மூன்றாவது இதழில் குமுதம் ஆசிரியர்குழு தனி கவனமெடுத்து 'இளையராஜா பாணி' பதில்கள் எதுவும் இடம்பெற முடியாமல் செய்திருக்கிறார்கள். அல்லது, தடுத்திருக்கிறார்கள். போகப்போகப் பார்க்கலாம். இது எப்படிப்போய் முடிகிறது என்று.
அவர் இதைவிடவும் மோசமாக மிகப்பெரும் தமிழறிஞர்கள் மத்தியில் நடந்துகொண்ட சம்பவம் ஒன்றும் இருக்கிறது. உடனிருந்தவன் என்ற முறையில் அந்தச் சம்பவத்தை தகுந்த நேரம் வந்ததும் வெளிப்படுத்தலாம் என்று இருக்கிறேன்.
இது ஒருபுறம் இருக்க விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கான பாராட்டு விழாவில் இளையராஜா பேசிய பேச்சு அடுத்த ஞாயிறன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஸ்வநாதன் பற்றிய தமது கருத்தை நேர்மையாகவும் மிகச்சரியாகவும் சொல்லியிருக்கிறார் இளையராஜா. அவருடைய இந்தப் பேச்சுக்குப் பிறகு ராஜா ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் கவலையாக இருக்கிறது.

Anonymous said...


msv கொப்பி அடித்த சில ஆங்கில பாடல்கள்.
http://www.youtube.com/watch?v=iA-GUjgkJfM

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்தது நண்பனே
http://www.youtube.com/watch?v=uORPxmsBJoE

அனுபவம் புதுமை
http://www.youtube.com/watch?v=2ZSADBhXBm4
http://www.youtube.com/watch?v=GRMs-mIsrGQ

என் மனது
http://www.youtube.com/watch?v=BIt3ZKDqMTU
http://www.youtube.com/watch?v=LQTTFUtMSvQ

உலகமெங்கும் ஒரே மொழி (அப்பட்டமான)
http://www.youtube.com/watch?v=IByYHs8BTGc
http://www.youtube.com/watch?v=kynvHq8R6jw

SAYONARA - NINAITHAALE INIKKUM
http://www.youtube.com/watch?v=htpIjzJAq8g
http://www.youtube.com/watch?v=unfzfe8f9NI&ob=av3n

பார்த்த ஞாபகம்
http://www.youtube.com/watch?v=_scVrJf6buE
http://www.youtube.com/watch?v=YsgL35RCGcc
(copied tune )

copy விடயத்தில் எல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள். எவருமே விதி விலக்கல்ல. எவருமே புனிதரும் அல்ல. ராஜாவும் அல்ல அமுதவன் துதிக்கும் விஸ்வநாதனும் விதிவிலக்கல்ல.

அமுதவனின் இக்கட்டுரையில் ராஜா மீதான விமர்சனத்திற்க்கு அப்பால் அவர் மீதான காழ்ப்புணர்வும் வெளிப்பட்டு நிற்க்கிறது. இதை அமுதவன் மறுத்தாலும் அது ஏனையவர்களுக்கு தெளிவாக தெரியும்.



நான் விஸ்வநாதன் copy அடித்த பாடல்களின் விபரத்தை தந்தான் நோக்கம் அமுதவன் விஸ்வநாதன் copy யே அடிக்க மாட்டார் என்றவகையில் குறிப்பிட்டிருந்தார். " அந்தப் பட்டியல் வந்திருந்தால் என்னைப்போன்ற அல்லது திரு காரிகன் அவர்களைப்போன்றவர்கள் மட்டுமல்ல திரு எம்எஸ்வியே தாம் எந்தெந்தப் பாடல்களிலிருந்து உருவியிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.."

"இது ஒருபுறம் இருக்க விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கான பாராட்டு விழாவில் இளையராஜா பேசிய பேச்சு"
நீங்கள் பழைய பஞ்சாங்கம் போல் உள்ளது. ஏற்கனவே இணையத்தில் அடிபட்ட ஒரு பழைய நகழ்ச்சியை ஏதோ புதிதாக ரசிகர்கள் பார்க்க போவதாக அறிக்கை விட்டு கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்களை அப்டேட் பண்ணுங்கள்.
http://www.youtube.com/watch?v=2iUm-CJ6lII

kumaran

காரிகன் said...

திரு அமுதவன் ,உங்களை போன்றவர்கள் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வது ஒரு விதத்தில் உண்மையை அதன் உண்மையான போக்கில் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பதே என் எண்ணம்.இளையராஜா பற்றி இங்கு சிலர் கொண்டிருக்கும் தவறான (அதாவது அவர் ஒரு ஞானி யோகி மிகவும் நல்லவர் போன்ற ) கருத்துக்கள் உண்மை வடிவம் பெற உங்களை போன்றவர்கள் நிறைய பேசவேண்டும் என்று விரும்புகிறேன். வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி என்று வேடம் போட்டுகொண்டு ஒரு சித்தர் போல பேசுவதாலே ஒருவர் ஞானி ஆகிவிட முடியாது. இளையராஜா தன்னுடைய இளமை காலத்தில் என்னவெல்லாம் பேசினார் என்பதை நான் அரசல் புரசலாக கேள்விபட்டிருந்தாலும் அதை உறுதியாக் சொல்லமுடியாத இடத்தில் இருக்கிறேன்.நீங்களோ அப்படி அல்ல .. நீங்கள் கண்டிப்பாக அடுத்த பதிவை இது பற்றி எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்... கடைசியாக எம் எஸ் வி பற்றி இளையராஜா சொன்னது அவரின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது..இருந்தும் அதுதான் உண்மை..எம் எஸ் வி போன்ற மாமேதைகள் இல்லாமல் இளையராஜா ஒரு காற்றில் கரைந்து போன சங்கீதம் ...

MUKUNTHAN said...

நான் நேற்று இட்ட எந்தவித அநாகரிகமான வார்த்தைக்கும் பயன்படுத்தாத YOUTUBE லிங்க் போட்ட என்னுடைய பின்னோட்டத்தை நீக்கியதன் மூலம் வெளிபட்ட தங்களின் நேர்மையை கண்டு நான் வியர்ப்படைய வில்லை. நான் எதிர்பார்த்தது தான்.

Amudhavan said...

முகுந்தன் நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள்? எதற்கு வியப்படையாமல் போனீர்கள்? புரியவில்லை. கொஞ்சம் வியப்படையுங்கள். உங்கள் பின்னோட்டத்தை எதற்காக நீக்கவேண்டும்? மாறாக நீங்கள் நினைப்பதுபோல் அல்லது எதிர்பார்ப்பதுபோல் அதிக நேரத்தை இணையத்தில் செலவிடுபவன் அல்ல நான். என்னுடைய பணிகள்போக இணையம் பக்கம் வருகிறேன். அதற்குள்ளாக அவசரப்பட்டு தீர்ப்புகூறி இன்னொரு பின்னோட்டம் எழுதினால் எப்படி?
விஸ்வநாதன் காப்பியே அடிக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? ஆங்கிலப்பாடல்கள் மட்டுமல்ல சில இந்திப்பாடல்களும்கூட அவர் இசையில் தமிழில் வந்துள்ளன. இளையராஜா ரசிகர்கள் மட்டும்தான் அவருக்கு இல்லாத பெருமைகளை எல்லாம் எடுத்துவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது -பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திரு தாஸ் என்பவர் விஸ்வநாதனின் நான் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் இந்தியிலிருந்து சுட்டவை என்று குறிப்பிட்டிருந்தார்.அவருடைய பிரபலமான பாடல்கள் எல்லாமே காப்பியடிக்கப்பட்டவை என்பது போன்றே குறித்திருந்தார். அதற்காகத்தான் நான் அதுபோன்று கேட்டிருந்தேன்.
நீங்கள் சொல்லும் இளையராஜாவின் பேச்சு முன்னொரு நிகழ்வில் பேசியதாக இருக்கும். நான் சொல்வது போனவாரம் சென்னையில் நடைபெற்ற முதல்வரானபிறகு ஜெயலலிதா நடத்திய விஸ்வநாதன் ராமமூர்த்தி பாராட்டு விழாவில் இளையராஜா பேசியது. இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி பிள்ளையார் சதுர்த்தியன்று ஒளிபரப்பானது. இரண்டாம் பகுதி வருகிற ஞாயிறு 23-09-2012 அன்று ஒளிபரப்பாகவுள்ளது. அதனைத்தான் குறிப்பிடுகிறேன். இதற்கே பழைய பஞ்சாங்கம் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிட்டால் எப்படி? நீங்கள் மாடர்ன் என்சைக்ளோபீடியாவாக இருந்து என்ன சாதித்திருக்கிறீர்கள்? சொன்னால் தெரிந்துகொள்ளலாம்.

Amudhavan said...

வாருங்கள் காரிகன் நிதானமாக ஒவ்வொன்றாகப் பேசலாம். இளையராஜா அந்த நிகழ்வில் பேசிய text கிடைத்துவிட்டபோதிலும் மக்களுக்கு குறிப்பாக அவருடைய 'ரசிகப்பெருமக்களுக்கு'அவராலேயே சொல்லக்கிடைக்கட்டுமே என்பதுதான் நம் ஆசை. உங்கள் தளத்துக்கு வந்து பதிவுகளைப் பார்வையிட்டேன். மறுபடி படித்துவிட்டு கருத்து எழுதலாம் என்றிருக்கிறேன். தமிழ்த்திரை இசை பற்றி உங்கள் தளத்தில் எழுத ஆரம்பியுங்களேன்.நிறைய ஆரோக்கியமான அடிதடிகளை உங்களால் உருவாக்கமுடியும். செய்யுங்களேன்.

காரிகன் said...

இணையத்தில் ஆங்காங்கே இளையராஜாவையும் ரகுமானையும் ஹாரிஸ் ஜெயராஜையும் பற்றி சிலாகித்து பலபேர் பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையான நீரோட்டம் போன்ற இசையை கொடுத்த எம் எஸ் வி பற்றி எழுதவோ இங்கு வெகு சிலரே வருகின்றனர். அதில் திரு அமுதவன் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் எழுதும் பதிவுகள் நியாயமாக இருப்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து கிடையாது..ஒரு சில இளையராஜா விசில்கள் வேண்டுமானால் குற்றம் சொல்ல முன்வரலாம். அதிலும் பெயரில்லாத ஒருவர் எம் எஸ் வி காப்பி அடித்தார் தெரியுமா என்று மார் தட்டுகிறார் சட்டையை மடிக்கிறார். எம் எஸ் வி யும் மற்றவர்கள் போலத்தான் அவருக்கு பெரிதாக ஒன்று தெரியாது என்ற ரீதியில் கருத்து சொல்ல இங்கே யாருக்கும் அருகதை இல்லை என்று நினைக்கிறேன். அது இளையராஜாவாக இருந்தாலுமே. எம் எஸ் வி யை ஒரு பழைய ஆள் என்று ஒதுக்கி அவரின் பாடல்களை புறக்கணிக்கும் (அல்லாத கேட்க்காத) ஒரு கூட்டத்தினர் இங்கே வந்து சிறுபிள்ளைதனமாக கருத்து சொல்வது அவர்களின் "மூளைக்கூர்மையை"காட்டுகிறது.

Post a Comment