Sunday, October 13, 2013

இளையராஜாவின் சிம்பொனி வெளிவந்ததா? வெளிவரவில்லையா?



  
தமிழ்த்திரை இசை பற்றிய பதிவுகளை இணையத்தில் எழுதும்போது இளையராஜா பற்றிய இந்த ஒரு விஷயம் மட்டும் சரியான தகவல்களுடன் விவாதத்திற்கு வராமல், பல்வேறு தரவுகளை எடுத்துவந்து அலசாமல், 

‘இதோ பார் இதுதான் சான்று சிம்பொனி வந்திருக்கிறது’. இல்லாவிட்டால் ‘இந்தந்தக் காரணங்களால் வராமல் போய்விட்டது’ என்றெல்லாம் சரியான தகவல்கள் சொல்லப்படாமல்- கமுக்கமாய்க் கடந்துசெல்லப்பட்டு வருகிறது. 

“இந்த விஷயம் ஒரு புனிதப்பசுவைப் போல் காப்பாற்றப்படுவது ஏன் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார் என் நண்பர் ஒருவர்.

அது எத்தனைப் பெரிய விஷயமாக இருந்தாலும் எப்பேர்ப்பட்டவர்களைப் பற்றிய விஷயமாக இருந்தாலும், எப்படி யார் மூடிமறைக்க முயன்றாலும் இணையத்தில் மட்டும் அது நடக்காது. எப்படியும் உண்மைகளை வெளிக்கொணர்ந்துவிடுவார்கள். இணையத்தின் சிறப்புத்தன்மையே அதுதான் என்று சொல்லப்படுவதெல்லாம் மற்ற விஷயங்களுக்குத்தான். இந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் அந்தத் தாரகமந்திரம் பொருந்தாது என்பதுபோல்தான் விஷயங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

எப்படிப்பட்ட அரசாங்க ரகசியங்களாக இருந்தாலும்  வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்கள் பற்றிய விஷயங்களை அள்ளிக்கொண்டுவந்து வெளியே கொட்டுகிறார்கள்.

போலீஸ்துறையில் நடைபெறும் அக்கிரமங்களைக் கொஞ்சம்கூட பயப்படாமல் வெளியில் சொல்லுகிறார்கள்.

நீதித்துறையே தவறான தீர்ப்புகளை வழங்குகிறது என்றெல்லாம் அலசுகிறார்கள். சிபிஐயைக் கேள்வி கேட்கிறார்கள்.

நீரா ராடியா பல ‘படா படா சூராதி சூரர்களுடன்’ பேசிய டெலிபோன் தகவல்களையெல்லாம்கூட ஒற்றுக்கேட்டு ஒன்றுவிடாமல் இணையத்தில் ஏற்றிப் பிரித்து மேய்கிறார்கள்.

இளையராஜாவின் சிம்பனியை மட்டும் வந்ததா வரவில்லையா,

இருக்கிறதா இல்லையா,

அங்கீகரிக்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டுவிட்டதா?

அப்படி அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தால் எங்கே கிடைக்கிறது?

நிராகரிக்கப்பட்டிருந்தால் அது ஏன் சொல்லப்படவில்லை? என்கிற கேள்விகள் எல்லாம் அப்படியே அந்தரத்திலேயே தொக்கி நிற்கின்றன.

இளையராஜா சிம்பனிக்காக இசை அமைத்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது தெரியும். டோரன்டோவுக்கோ, பிலடெல்பியாவுக்கோ எங்கோ சென்றுவந்தார் என்பதும் தெரியும். அந்த இசையமைப்பு பதிவானதையும் சன் டிவி மிகப்பிரமாதமாய் இரண்டு வாரங்களுக்கு அந்த நிகழ்ச்சியை மிக ஆர்ப்பாட்டமாய் ஒளிபரப்பியதும் தெரியும். மீண்டும் மறுஒளிபரப்பு செய்ததும் தெரியும். அதுபற்றிய பேட்டிகளில் இளையராஜா கலந்துகொண்டு பேசியது தெரியும். இதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டுவிழா நடைபெற்றது தெரியும். அதுபற்றி எழுதாத தமிழ்ப் பத்திரிகைகளே இல்லையென்பதும் தெரியும். மற்ற பத்திரிகைகளிலும் இளையராஜா இதற்காகக் கொண்டாடப்பட்டார் என்பதும் தெரியும்.

இதோ சமீபத்தில்கூட ஒரு வெளிநாட்டுக்காரரை அழைத்துவந்து இளையராஜா சம்பந்தப்பட்ட விழாவொன்றில் கௌரவித்தார்கள். இளையராஜா அமைத்த சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கண்டக்ட் செய்தவர் இவர் என்று சொன்னார்கள். இத்தனையும் நடக்கிறது.


எல்லாம் சரி. சிம்பனி வெளிவந்ததா இல்லையா?


யாருக்கும் தெரியாது.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எதற்காக இப்படியொரு மூடுமந்திரம்?

எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு அலசித் துவைத்துக் காயவைக்கும் இணையத்தில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏன் யாருமே பேசத்துணிவதில்லை?

எதைக் காப்பாற்றுவதற்காக இப்படியொரு ரகசியத்தைப் பேணிப் பாதுகாத்துவருகிறார்கள்?

இளையராஜா என்பவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? அவரைப் போற்றிக் கொண்டாடப்படும் செய்திகள் மட்டும்தான் இங்கே பேசப்படவேண்டும். அவரைக் கேள்விக்குட்படுத்தும் மிகச்சிறிய விமர்சனங்களுக்கோ உண்மைச் செய்திகளுக்கோ கிஞ்சித்தும் அனுமதி கிடையாது என்பது என்ன மாதிரியான சண்டியர்த்தனம் என்பது தெரியவில்லை.

சிவாஜி கணேசனை ஒன்றுமில்லை என்று எழுதுகிறார்கள். கண்ணதாசனைக் குடிகார கவிஞன் என்கிறார்கள். எம்ஜிஆரை, மன்மோகன் சிங்கை, சோனியாவை, மோடியை எல்லாரைப் பற்றியும் கேள்விப் பட்டிராத கோணங்களில் எல்லாம் பிரித்துப்போட்டு விமர்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயம் வெளிவந்துவிட்டால் உடனே அந்த விஷயம் உண்மைதானா என்று கண்டறிய எத்தனைப் பிரயத்தனப்படுகிறார்கள்?

ஸ்டாலினுக்கு ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தின் பேரால் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று ஒரு செய்தி வந்தால் அது உண்மையான பல்கலைக் கழகமா? கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் உண்மையானதுதானா? என்றெல்லாம் பூமியைப் பிளந்து பதினைந்தாயிரம் அடி உள்ளே சென்று உண்மைத் தகவல்களை அள்ளி வருவார்களா மாட்டார்களா? கருணாநிதிக்கு ஏதோ ஒரு நாட்டில் ஸ்டாம்ப் வெளியிடுகிறார்கள் என்று செய்தி வந்தால் அது அரசாங்கம் வெளியிட்ட தபால்தலையா, இல்லை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்தால் அப்படி வெளியிட்டுக்கொள்ள முடியுமா என்றெல்லாம் துப்பறியும் கட்டுரைகள் வெளிவருகிறதா இல்லையா? கருணாநிதி தொடங்கி இன்றைய தமிழருவி மணியன்வரையிலும் அத்தனைப் பேரையும் எத்தனை எத்தனை விமர்சனங்களுக்கு ஆட்படுத்துகிறார்கள்? என்னென்ன விதமான கேள்விகளையெல்லாம் முன்வைக்கிறார்கள்…..

ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ, ஜெயகாந்தனுக்கோ, அல்லது கமல் ரஜினி போன்றவர்களுக்கோ ஏதோ ஒரு சிறப்புப் பட்டம் வழங்கப்படுகிறது என்றால் அது யாரால் வழங்கப்பட்டுள்ளது, அது உண்மையானதுதானா அல்லது டுபாக்கூரா அதனை வாங்குவதற்கு அல்லது பெறுவதற்கு இவர்கள் தரப்பில் என்னென்ன செய்யப்பட்டுள்ளது, யார் யார் முன்னின்று செய்தார்கள் அல்லது உண்மையானதாகவே இருக்கும்பட்சத்தில் அது எவ்வளவு சிறப்புக்குரியது என்பதுபோன்ற விவரங்கள் எல்லாமே இணையத்தில் அலசப்படுகிறதா இல்லையா? அதன் பூர்விகம் என்ன நதிமூலம் என்ன எல்லாமே தோண்டித் துருவப்படுகிறதா இல்லையா?

இவருடைய விஷயத்தில் மட்டும் என்ன நடக்கிறது?

ஏன் இந்த கனத்த மவுனம்? எதற்காக இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான ஜமக்காளப் போர்வை?


இவர் மட்டும்தான் மக்களின் அபிமானம் பெற்றவர், மற்றவர்களெல்லாம் மக்கள் தொடர்பே இல்லாதவர்கள் மக்களால் மதிக்கவே படாதவர்கள் என்று அர்த்தமா?

ஒன்று இதோ சிம்பனி வெளிவந்துவிட்டது என்று சொல்லப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் முயற்சி செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்படவில்லை என்ற செய்தியாவது அதிகாரபூர்வமாகச் சொல்லப்படவேண்டும்.

இதுவுமில்லாமல் அதுவுமில்லாமல் இருக்கிறதா?

பேசாமலாவது இருக்கவேண்டும். 

பண்ணைப்புரத்திலிருந்து பிலடெல்பியாவரை என்ற தலைப்பில் கட்டுரை வருகிறது.
சினிமாவிலிருந்து சிம்பொனிவரை என்று புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

மியூசிக் டைரக்டராயிருந்து மேஸ்ட்ரோவானவர் என்று புகழ்கிறார்கள். இவையெல்லாமே சிம்பொனி அமைத்தவர் என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள்தாமே? சிம்பொனி உண்மையிலேயே வெளியிடப்படவில்லை என்றால் “சிம்பொனி முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே யாரும் என்னை அதனோடு சம்பந்தப்படுத்திப் பேசாதீர்கள்” என்று இளையராஜா சொல்லவேண்டுமா வேண்டாமா?

ஒரு முறை இதுபற்றி விகடன் பேட்டியில் கேட்கப்பட்டபோது “அதுபற்றி இப்போது பேசவேண்டாம்” என்றுதான் சொன்னார் இளையராஜா.

எப்போது பேசலாம் என்பதை அவர் சொல்லவில்லை.

எனவே மூடுமந்திரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சிம்பனி அமைப்பது என்பது ஒரு பெரிய பகீரத முயற்சி. கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதுபோல. தேர்வு எழுதுவதற்காக விசேஷமாய்ப் படித்தது சரி; பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது சரி. அத்தனை முயற்சிகளையும் சேர்த்துவைத்து ஐஏஎஸ் பரீட்சை எழுதுவது சரி. ஆனால் தேர்வு செய்யப்படுவது என்று ஒன்றிருக்கிறதே. அங்கீகாரம் பெறுவது என்று ஒன்றிருக்கிறதே. தேர்வாகாவிட்டால் நம்மை ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியுமா என்ன? அங்கீகாரம் பெறாவிட்டால் ஐஏஎஸ் என்ற பந்தாவுடன் வலம் வரமுடியுமா என்ன?

ஆனால் அதுதான் இங்கே நடைபெறுகிறது. இளையராஜா சிம்பனி அமைத்தவர் என்றுதான் இன்னமும் லட்சக்கணக்கான மக்களால் நம்பப்படுகிறார்,

புகழப்படுகிறார்,

போற்றப்படுகிறார்.

இதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. யாருக்கும் இதுபற்றிய சந்தேகங்களும் இல்லை.

நான் இணையத்தில் இதுபற்றி லேசுபாசாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் உரிய பதில்கள் இல்லை. அதனைத் துருவி ஆராய்ந்து பதிவுகள் வெளியிடப்படவில்லை. வெறும் அர்ச்சனைகளும் வசவுகளும்தான் வருகின்றன.

இந்தப்போக்கு நேர்மையான நியாயமான ஒன்றாகத் தெரியவில்லை.

இதுபற்றி எழுதினாலேயே, இளையராஜாவை வசை பாடுகிறாய், தூஷிக்கிறாய், பொல்லாங்கு பேசுகிறாய் என்கிறார்கள். இது எதுவுமே உண்மையல்ல.

அவர் இசையமைத்த சிம்பொனி அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது மட்டும்தான் என்னுடைய கேள்வி. இதில் பொல்லாங்கு. தூஷணை, வசை எங்கிருந்து வந்தது?


இது ஒரு உண்மைத் தேடல் அவ்வளவே.


இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட என்னுடைய நண்பர் சந்திரசேகர் என்பவர் ஸ்கூட்டரைக் கொண்டுவந்து நிறுத்தி “வாங்க போய் விசாரிச்சிட்டு வந்துருவோம்” என்றார். அவர் ஒரு இளையராஜாவின் ரசிகர்.

“எங்கே பிலடெல்பியாவுக்கா?” என்றேன்.

“அட, அந்த சிம்பொனி வெளிவந்திருக்கா இல்லையா என்பதை நாம் எதற்காக இணையத்தின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்? அதைவிட வேறொரு சுலபமான வழி இருக்கு. அதற்கென்று ஒரு இடம் இருக்கு. அதுதான் சரியான இடம்., அந்த உரிய இடத்தில் போய் விசாரிச்சிருவோம். மியூசிக்வேர்ல்ட், பிளானெட் எம் ஆகிய இடங்களில் போய்க் கேட்டால் தெரிந்துவிடுகிறது. அப்படி அந்த இடங்களில் இவர் இசையமைத்த சிம்பொனி சிடி கிடைத்துவிட்டால் அப்புறம் நீங்கள் இதுபற்றிப் பேசக்கூடாது” என்றார்.

“பேசக்கூடாதா, அப்புறம்தான் நிறையப் பேசவேண்டும். சிம்பொனி இசையமைத்த ஒரு தமிழனின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றேன்.

“ஒரு நான்கைந்து சிடிக்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிவிடுகிறேன். இந்த சிடியெல்லாம் அறுபது எழுபது ரூபாயெல்லாம் இருக்காது. எப்படியும் நானூறு ஐநூறு ரூபாயாகத்தான் இருக்கும்” என்றபடியே வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தார்.

முதலில் இந்திரா நகரிலிருந்த சப்னா புக்ஹவுசுக்குச் சென்றோம். இது மிகப்பெரிய புத்தகக் கடை என்றாலும் மியூசிக்கிற்குத் தனி செக்ஷன் வைத்திருப்பார்கள். அவர்கள் மிகவும் சிரத்தையாகத் தேடிவிட்டு “இல்லை தீர்ந்துவிட்டிருக்கிறதுபோல” என்றார்கள். அங்கிருந்து பிளானெட் எம் கடைக்குச் சென்றோம். அங்கும் அக்கறையாகத் தேடிவிட்டு இல்லை என்றார்கள். நண்பர் மனம் தளரவில்லை. “இவனுங்களுக்கு இதுபோன்ற டேஸ்டெல்லாம் இருக்காது சார். வெறும் சினிமா பாட்டுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பானுங்க. வாங்க நாம பிரிகேட் ரோடு போயிரலாம்” என்று நேராக பிரிகேட் ரோட்டிற்கு ஸ்கூட்டரை விரட்டினார்.

“முதலில் மியூசிக் வேர்ல்ட் பார்த்துறலாம்” என்று பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார். இளையராஜா அடுக்கப்பட்டிருந்த வரிசைக்குச் சென்று தேடிப்பார்த்துக் கிடைக்காமல் டை கட்டியிருந்த இளைஞனைக் கேட்க ‘அட இதானே வேண்டும்’ என்ற பாவனையில் அந்த இளைஞன் மடமடவென்று சென்று ஒரு வரிசையில் உட்கார்ந்து ஆராயத்தொடங்கியதும் பாரத்தீங்களா எப்படி நம்ம செயல்பாடு என்பதுபோன்ற பார்வையை நண்பர் என்மீது வீச ஆரம்பிக்க, ‘சே, நாம்தான் தப்பாக விஷயம் தெரியாமல் இருக்கிறோம். சிடி வந்திருக்கிறது’ என்றுதான் தோன்றிற்று.


அந்த வரிசையைப் பார்த்துக் கலைத்துப்போட்டு, பக்கத்து வரிசைக்கு நகர்ந்து சென்று உட்கார்ந்து “இதுவா பாருங்கள்” என்று அந்த இளைஞன் எடுத்துக்காட்டியது HOW TO NAME IT. “இது இல்லை சிம்பொனி” என்றதும் அவன் மறுபடியும் தேடிவிட்டு “இல்லை சார் Out of stock என்று நினைக்கிறேன்” என்றான். “அந்த சிடி வந்திருக்கிறதா? என்பதைக் கொஞ்சம் செக் செய்யுங்கள்” என்றதும் “ஒன்மினிட் சார்” என்றவன் கம்ப்யூட்டரில் இருந்த லிஸ்டில் எதுஎதையோ தட்டி எங்கெங்கோ மவுசை இழுத்துக்கொண்டுபோய் கிளிக் செய்து ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப்பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி “இல்லை சார். அதனை வரவழைக்கவில்லை போலிருக்கிறது” என்று சொல்லி “பேர் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டு டயரி ஒன்றில் குறித்துக்கொண்டான்.

அடுத்து போன இடம் பிளானட் எம். அங்கும் இதே கதைதான் நடைபெற்றது. தேடுதேடு என்று தேடினார்கள். கடைசியில் இல்லையென்று கை விரித்தார்கள். நண்பருடைய முகம் இப்போது கொஞ்சம் இறுக்கத்துக்கு வந்திருந்தது. ஆனாலும் அவர் நம்பிக்கையை இழந்தமாதிரி தெரியவில்லை. “சார் மல்லேஸ்வரத்தில் குரு டிரேடர்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது. அவர்கள் வெறும் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட சிடிக்களை வைத்திருப்பவர்கள். அங்கே ஒரு நடைபோய் விசாரித்துவிட்டு வந்துவிடுவோமே” என்றார். எனக்கும் ஆசைதான். எங்கேயாவது கிடைத்துவிட்டால் நன்றாகத்தானே இருக்கும். “சரி போவோம்” என்றேன். அங்கும் போனோம். எம்எல்வசந்தகுமாரி, பித்துக்குளி முருகதாஸிலிருந்து பக்தி கர்நாடகம் இசை ஆல்பங்கள் என்று நிறைய வைத்திருந்தார்கள். இந்த ஒரு சிடி மட்டும் அவர்களிடமும் இல்லை.

“இதனை நான் விடுவதாக இல்லை. இந்த சிடி பெங்களூர் வராததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அடுத்த சனிக்கிழமை நான் சென்னை போகிறேன். அங்கே போய் சல்லடைப் போட்டாவது இந்த சிடியுடன்தான் வருவேன்” என்றார் நண்பர்.

“அப்படியே செய்யுங்கள். எனக்கு ஒரு மூன்றோ நான்கோ வாங்கிவந்துவிடுங்கள்” என்றேன்.

சென்னை சென்ற நண்பர் ஆழ்வார்பேட்டை, மவுண்ட்ரோடு என்று எங்கெங்கோ அலைந்திருக்கிறார். கடைசியில் அங்கும் அவருக்குக் கிடைத்தது ஏமாற்றமே. “அதுமட்டுமில்லை. இந்த சிடி வரவில்லையென்ற விஷயமே அந்தக் கடைக்காரர்களுக்குக்கூடத் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களே ஒவ்வொரு இடத்திலும் தேடுதேடென்று பல ஷெல்புகள் தேடிவிட்டுத்தான் அப்புறம் இல்லையென்கிறார்கள்” என்று வருத்தப்பட்டார் நண்பர்.

அப்படித்தான் இருக்கிறது. இன்னமும் விளங்கமுடியாத புதிர்களில் ஒன்றாகவே இந்த விஷயத்தைச் சிலபேர் வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இளையராஜாவோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களோ இந்தப் புதிரை விடுவிக்கவேண்டும். விக்கிலீக்ஸ் மூலம் உலகின் எத்தனையோ ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இன்றைய இணையத்தின் வீச்சுக்கு இதுவும் ஒரு அடையாளம். அப்படியிருக்கும்போது இதற்கு மட்டும் ஏன் இத்தனை ரகசியக்காப்பு?

இளையராஜா சிம்பொனி அமைத்தார் என்று சொல்லித்தான் அவருக்குப் பெருமை சூட்டவேண்டும் என்பதில்லை. அவர் பேர் சொல்வதற்கு அவர் இசையமைத்த எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்கின்றன. விஸ்வநாதனுக்குப் பிறகு வந்த நல்ல இசையமைப்பாளர் அவர். ஒரு பத்து வருடங்களுக்குத் தமிழ்த்திரை இசையுலகை ஆக்கிரமித்திருந்தவர் அவர். அந்தச் சமயத்தில் அவர் தந்த எத்தனையோ நல்ல பாடல்கள் அவர் பெயர் சொல்லும்.
  
இந்த சிம்பொனி விஷயத்தை யாராவது வெளிப்படையாக இணையத்திலாவது விளக்கினார்கள் என்றால் நல்லது.

86 comments :

வேட்டைக்காரன் said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

ரமேஷ் said...

இளையராஜா பற்றிய பதிவா? அதுவும் சிம்பனி பற்றியா? வசவுகளுக்கு காத்திருங்கள்.

ஜீவன்பென்னி said...

John Scott's Column

As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD 'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,

John Scott

SPURCE : http://webhome.idirect.com/~rlevy/current_question.html

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
சூட்டைக் கிளப்பும் பதிவாக எழுதியிருகிறீர்கள். இல்லாத பொருளை தேடும் அபத்தம் மட்டுமே இதில் உண்டு. அந்த மாய சிம்பனி சீடியை அலாவுதீன் பூதத்தால் கூட கொண்டுவர முடியாது, உங்கள் நண்பரிடம் நீங்கள் இதை சொல்லியிருந்தால் அலைச்சல் மிச்சமாகியிருக்கும். ஒருவேளை இளையராஜாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர்தான் ஞானியாயிற்றே!

தனிமரம் said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்! ப்தில் கிடைக்க் வேண்டும் இசை ரசிகர்களுக்கு.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நல்லதொரு புலனாய்வு,ஆனால் இதை என்னிடம் சொல்லி இருந்தால் , முன்னரே இதை ஆய்ந்து அலசி ,துப்பிய கதையை சொல்லி இருப்பேன் அவ்வ்!

//இந்த சிம்பொனி விஷயத்தை யாராவது வெளிப்படையாக இணையத்திலாவது விளக்கினார்கள் என்றால் நல்லது.//

நீங்க திருவாசகத்தினை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன், அதன் சிடி இருக்கு,நானும் கேட்டிருக்கேன்,இணையத்திலும் கிடைக்குது.

how to name it, nothing but wind, ஆகிய இரண்டு இசை தொகுப்புகளில் வேலை செய்தப்போவே அது சிம்பொனி என சொல்லித்தான் வேலை செய்தார், அதனாலேயே புன்னகை மன்னன் படக்காலத்திலேயே "மேஸ்ட்ரோ" பட்டம் போட்டுக்கிட்டார்.

ஆனால் மேற் சொன்ன இரண்டு ஆல்பங்களும் சிம்பனி என வெளியாகவில்லை, ஜஸ்ட் இசை ஆல்பங்களாக தான் வெளியாச்சு.

திருவாசகம் கதையும் அஃதே.

சிம்பனி என்றால் குரல் இல்லாமல் இசையாக இருக்கனும், திருவாசகம் ஆல்பத்தில் பாடியாச்சு எனவே அது சிம்பனி ஆகாது.

சிம்பனி இசைக்கு பின்னர் பாடல் எழுதி பாடலாம்,அப்படி செய்தால் ஒராட்டோரியோ, ஆனால் அது சிம்பனி அல்ல ,சிம்பனிக்கான ஒராடாரியோ என்பதால் சிம்பனி ஒராடோரியா என்பார்கள்.

திருவாசகத்தினை சிம்பனி ஒராடாரியோ என்று கூட அழைக்க முடியாது ,ஏன் எனில் அந்த இசைத்தொகுப்பு பாடல் இல்லாமல் சிம்பனியாக வெளியாகவே இல்லை.

பீத்தோவன் பல இசைக்குறிப்புகளை எழுதி வெளியிட்டார், ஆஆல் அவர் காலத்துக்கு பின்னரும் முன்னரே சிம்பனி எனக்குறீபிட்டு எழுதிய இசைக்கோர்வைகளை மற்றவர்கள் இசைத்து சிம்பனியாக வெளியிடவும் செய்தார்கள்,ஆனால் பீத்தோவானின் சிம்பனி இசைக்குறிப்பிற்கு குரலினை பயன்ப்படுத்தி வெளியிட்டவை சிம்பனி அல்ல ஆனால் சிம்பனிக்கான இசைனு வெளியிடப்பட்டது.

//Fantasy in C minor for Piano and Orchestra, Op. 80, by Ludwig van Beethoven (1808) (not a symphony, but one of only two major concerted works to involve a chorus - see also Busoni (below))//

http://en.wikipedia.org/wiki/List_of_choral_symphonies

இதெல்லாம் திருவாசகம் வந்த காலத்திலே ஆராய்ந்து விவாதமே ஓட்டிட்டேன், ஆனால் அது இன்னொருவர் பதிவில், அந்த பதிவு இன்னும் இருக்கா என்னனு தெரியலை, தேடினால் கிடைக்கலாம்.

குமரன், எஸ்கே என இரண்டுப்பதிவர்கள் அப்போ ரொம்ப நல்லா எழுதிக்கிட்டு இருந்தாங்க, அவர்களோடு தான் சிம்பனி விவாதம் அப்போ ஒடிச்சு, இதில் எஸ்கே என்பவர் திருவாசகம் சிம்பனிக்கு நிதி திரட்டியளித்தவர், அவரோ கதய கேட்டிங்கனா ,ராசா இப்படியாப்பட்ட அல்பமானு சொல்லிடுவீங்க :-))

ஜெகத் கசுபரும்,ராசாவும் சேர்ந்து அமெரிக்க தமிழர்களின் காசை செலவழிச்சு ,பேரு வாங்கிட்டாங்க என்பதே உண்மை அவ்வ்!

கடைசில ஜெகத்துக்கும் ,ராசாவுக்கும் முட்டிக்கிச்சு, எனவே பிரிந்துவிட்டார்கள்,சோனி நிறுவனம் இசை ஆல்பம் ,சிம்பனி அல்லனு தெரிந்துக்கொண்டு வெளியிடவில்லை, வேற யாரோ தான் வெளியிட்டாங்க.

சிம்பனி இசை தொகுப்பை வெளியிட லண்டன்,அமெரிக்கானு போகக்கூட தேவையில்லை, இந்தியாவில் இருந்தே செய்யலாம், அதற்கு சிம்பனி ஆர்கெஸ்ட்ரா இருந்தா போதும், இந்தியாவில் மும்பையில் மட்டும்,மும்பை பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா என சிம்பனி ஆர்கெஸ்ட்ரா இருக்கு, போயி பதிவு செய்து வெளியிடலாம் தான் ,யாரு ரெடி?

சிம்பனி என்ற தகுதியை யாரும் தர வேண்டியதில்லை, அந்த இசை அமைப்பாளரே சிம்பனி என சொல்லி வெளியிட வேண்டும்,ஆனால் அதன் பின்னர் அதை இசை விமர்சகர்கள் ஒரிஜினல் ஒர்க்கானு அக்கு வேரா ஆணி வேரா பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க :-))

ஒரு 17 வயசு பையன் தான் மிக இளம் வயது சிம்பனி மேதைனு கொஞ்ச நாள் முன்ன படிச்சேன்..


வெளிநாட்டில் சிம்பனி இசைச்சு ,பதிவு செய்ய "ஆபரேஷனல் காஸ்ட்" (சிம்பனி அரங்கம்,ரெக்கார்டிங், இண்ஸ்ட்ருமென்ட் பிளேயர் சம்பளம், கண்டக்டர் சம்பளம் போன்றவை)மட்டுமே சுமார் ஒரு லட்சம் டாலர் ஆகும், அதனால் தான் பலரும் சிம்பனி போடுவதில்லை அவ்வ்!

வவ்வால் said...

அமுதவன் சார்,

complete list of symphony music ஐ பட்டியலிடும் எந்த தளமும் ராசா பெயரை போட்டதேயில்லை, விக்கியில் கூட சிம்பனி பட்டியலை தொகுத்துள்ளார்கள்,அதிலும் ராசா பெயர் இருக்காது!

சிம்பனி என்பது இசைக்கோர்வையின் ஸ்ட்ரெக்சர் தான், அப்படி இசைக்குறிப்புகளை எழுதிவிட்டு , சிம்பனி என இசையமைப்பாளரே அறிவித்துக்கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் பட்டம் போல யாரும் கொடுக்க மாட்டார்கள், இல்லை அங்கீகரித்தோம்னு சொல்ல அமைப்பும் கிடையாது, ஒரே அங்கீகாரம் வெஸ்டர்ன் கிளாசிகல் இசை விமர்சகர்கள் ஒரிஜினல் ஒர்க்கா , நல்ல இசையானு ஆய்வு செய்வார்கள், காப்பி அடிச்சது தெரிஞ்சா, மானம் போயிடும் அவ்வ்!

எனவே தான் ராசா 3 முறை இசைக்கோர்வையில் ஈடுபட்டும் தானாக முன்வந்து 'சிம்பனி"னு அறிவிச்சு வெளியிடவேயில்லை.

இசைக்கு கண்டக்டர் வேலை செய்தவரின் பேட்டியில் கூட இதனை சொல்லி இருப்பார். ஏனோ அந்த பேட்டியை மக்கள் படிக்கவேயில்லை போல அவ்வ்!

Amudhavan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேட்டைக்காரன்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி ரமேஷ். எதற்காக இப்படி நடக்கவேண்டும் என்பது பற்றித்தான் நிறைய கேள்விகள் எழுப்பியிருக்கிறேன். ராஜா ரசிகர்கள் அந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும்.

Amudhavan said...

ஜீவன்பென்னி said...

\\John Scott's Column

As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:\\

தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பகிர்வை திரு வவ்வால் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\இல்லாத பொருளை தேடும் அபத்தம் மட்டுமே இதில் உண்டு. அந்த மாய சிம்பனி சீடியை அலாவுதீன் பூதத்தால் கூட கொண்டுவர முடியாது,\\

எப்படியும் கடைகளில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில்தான் தேடினோம் காரிகன்.

Amudhavan said...

வவ்வால் said...
\\நல்லதொரு புலனாய்வு,ஆனால் இதை என்னிடம் சொல்லி இருந்தால் , முன்னரே இதை ஆய்ந்து அலசி ,துப்பிய கதையை சொல்லி இருப்பேன்\\
பாருங்க நீங்க ஏற்கெனவே இதுபற்றியெல்லாம் புலனாய்ந்து இத்தனை எழுதியிருக்கீங்க. ஆனால் பல பேருடைய கவனத்துக்கு இதெல்லாம் போகவே இல்லை. என்னை விடுங்க, நான் எப்போதாவதுதான் இணையம் பக்கம் வருகிறவன். 2009லிருந்து படிக்க ஆரம்பித்து 2010 லிருந்துதான் இணையத்தில் எழுதவே ஆரம்பித்தேன். இங்கே நிறையப்பேர் பிறந்ததிலிருந்து இணையத்தில் உள்ளவங்கள்ளாம் இருக்காங்களே. அவங்களாவது இதப்பற்றியெல்லாம் சொல்லிப் புரியவைக்கக்கூடாதா?
வெறும் விமர்சகர்கள் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் என்பதற்காக சிம்பனி வெளியிட பயப்படுவார்களா?
ராஜாதான் இதனை வெளியிடவில்லையா?
அல்லது, ராஜாதான் வெளியிட வேண்டாமென்று தடுத்துவிட்டாரா?
ஜீவன்பென்னி பதிலும் உங்க பதிலும் சேர்ந்து இன்னும் குழப்பம் அதிகமாகிப் போயிருச்சே.
இப்போதைய நிலைதான் என்ன?

Amudhavan said...

தனிமரம் said...

\\நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்! ப்தில் கிடைக்க் வேண்டும் இசை ரசிகர்களுக்கு.\\
வாருங்கள் தனிமரம். இந்தக் கருத்திற்கு நன்றி. உங்களுடைய மேலும் இரு கருத்துக்கள் ஏனோ 'பப்ளிஷ்' போட்டும் பதிவேற மறுத்துவிட்டன. அந்தக் கருத்துக்களுக்கே பதிவேறுவதில் விருப்பமில்லை போலும்.

Amudhavan said...

வவ்வால் said...
\\குமரன், எஸ்கே என இரண்டுப்பதிவர்கள் அப்போ ரொம்ப நல்லா எழுதிக்கிட்டு இருந்தாங்க, அவர்களோடு தான் சிம்பனி விவாதம் அப்போ ஒடிச்சு, இதில் எஸ்கே என்பவர் திருவாசகம் சிம்பனிக்கு நிதி திரட்டியளித்தவர், அவரோ கதய கேட்டிங்கனா ,ராசா இப்படியாப்பட்ட அல்பமானு சொல்லிடுவீங்க :-))\\

அப்ப சிம்பனியை விடவும் சுவாரஸ்யமான வில்லங்கங்கள் நிறைய இருக்கு போலும். அப்பப்ப ஒண்ணு ரெண்டை எடுத்து விடறது..........

\\ஒரு 17 வயசு பையன் தான் மிக இளம் வயது சிம்பனி மேதைனு கொஞ்ச நாள் முன்ன படிச்சேன்..\\

சத்தம் போட்டுச் சொல்லிராதீங்க. எங்க ராஜாவுக்கு இணை இன்னொருத்தன் பிறக்கவே இல்லை. அந்தப் பையனுக்கு இண்டர்லூட் போடத்தெரியுமா என்ற ஒரேயொரு துக்கிணியூண்டு கேள்வியை வைத்தே உங்களை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.
\\வெளிநாட்டில் சிம்பனி இசைச்சு ,பதிவு செய்ய "ஆபரேஷனல் காஸ்ட்" (சிம்பனி அரங்கம்,ரெக்கார்டிங், இண்ஸ்ட்ருமென்ட் பிளேயர் சம்பளம், கண்டக்டர் சம்பளம் போன்றவை)மட்டுமே சுமார் ஒரு லட்சம் டாலர் ஆகும், அதனால் தான் பலரும் சிம்பனி போடுவதில்லை\\
எத்தனை செலவானால்தான் என்ன? இணையத்தில் இருக்கும் ராஜா ரசிகர்கள் ஒன்றுதிரண்டே அந்தத் தொகையைத் திரட்டி அவரை சிம்பனி அமைக்கவைத்து உச்சத்தில் உயர்த்திவைத்து அழகு பார்க்க மாட்டார்களா என்ன!

வவ்வால் said...

அமுதவன் சார்,

நான் பொதுவாக நாம பதிவு எழுதி தான் சொல்ல வேண்டும் என இல்லாமல் எந்தப்பதிவில் பேச ஆராம்பித்தார்களோ அங்கேயே வச்சு பஞ்சாயத்த கூட்டிருவேன், இதனால் பல பேர் கான்டாகி என்னோட பின்னூட்டத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு ,அவங்களா வெற்றி வெற்றி கூவிப்பாங்க :-))

திருவாசகம் சிம்பனியா இல்லையானு விவாதம் ஓடிய காலத்திலும் நான் ஆதாரப்பூர்வமாக சிம்பனிகள் என இது வரை உலக அளவில் சிம்பனி பட்டியலிடும் இணைய தளன்களில் ஏன் பெயர் வரவில்லை என பட்டியலை எடுத்து சுட்டிப்போட்டு கேட்டுவிட்டேன், அன்னிக்கே ஓடியவங்க தான் அப்புறம் பதிலே சொல்லவில்லை அவ்வ்!

இணையத்தில் பொறந்தது முதல் இருக்கவங்கனு சொல்லிக்கிறவங்க கிட்டே கொஞ்சம் என்ப்பேரை சொல்லி வர சொல்லுங்க, ஹி..ஹி ஓடியே போயிருவாங்க..சும்மா தற்பெருமைக்கு சொல்லவில்லை , என்னால அப்போ நிறைய பேரு ஓடிப்போயிட்டாங்களாம்,இப்பவும் என் மேல் ஒரு குற்றச்சாட்டா பலர் சொல்லுறாங்க :-))

# ஜீவன் பென்னி நான் சொன்னத தான் சொல்லி இருக்கார், விமர்சகர்கள் ஒரிஜினால இல்லையா, நல்லா இருக்கா இல்லையானு விமர்சிக்காமல் ஆஹா ,ஓஹோனா சொல்லுவாங்க?

ராசாவுக்கே "காண்பிடென்ஸ்" இல்லை நாம போட்டதுல பீத்தோவான்,பாக் இசை இருக்குனு கண்டுப்பிடிச்சு கிழிச்சா என்னா பண்ணுறதுனு ஒரு பயம் உள்ளுக்குள்ள, எனவே சிம்பனினு சொல்லிக்க தயக்கம் ,அவ்ளோ தான்.

# ராசா சிம்பனினு சொல்லிக்கிட்டதுல எதை தேடினிங்கனு சொல்லவேயில்லை?

ஹவ் டு நேம் இட் கேட்க வேண்டும் எனில் வீடு படம்(பாலு மகேந்திரா) பார்த்தால் போதும், அந்த ஆல்பம் தான் பின்னணி இசை.

நத்திங் பட் விண்ட் தான் சந்தியா ராகம்(பாலு மகேந்திரா) படத்தின் பின்னணி இசை , இது கொஞ்சம் அன் அபிசியல், ஏன் எனில் படத்தில் இசைனு எல்.வைத்தியநாதன் பேரு தான் வரும் அவ்வ்!

அதாவது ராசாவை கேட்காம அவரோட ஆல்பத்தின் இசைய பாலுமகேந்திரா பின்னணி இசையாக போட்டுக்கொன்டாராம்.

திருவாசகம் இசை இணையத்தில தாரளமா கிடைக்குது.

காரிகன் said...

இதற்கு மேலே ராஜா ரசிகசிகாமணிகள் சிம்பனி பற்றி எதுவும் பேச முடியாத அளவுக்கு வவ்வால் அவர்கள் வாயை அடைத்துவிட்டார். நன்றி வவ்வால்.
அமுதவன்,
சிம்பனியை விடுங்கள். எதோ போன ஒலிம்பிக்ஸில் இளையராஜாவின் கண்றாவியான பாட்டு ஒன்று இடம் பெறப் போவதாக வதந்தி கிளம்ப, அதை பற்றிக்கொண்டு ராஜா ரசிகர்கள் செய்த அலப்பறை இருக்கிறதே.. அது தாங்கமுடியாதது. இளையராஜா என்று ஒரு இசை அமைப்பாளர் இருப்பதையே அறியாத ஒலிம்பிக்ஸ் குழுவினர் அவரின் பாடலை ஒலிக்க இருப்பதாக யாரோ ஒரு திரியை கொளுத்திப்போட அதை வைத்து இந்த ராஜா ரசிகர்கள் ஏகப்பட்ட விவாதங்கள் செய்தது தனிக்கதை. "இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?" என்று ஒரு கோஷ்டி, "இந்தப் பாடலில் உலக விளையாட்டுக்கே உரிய அம்சம் இருக்கிறது" என்று இன்னொரு கோஷ்டி நகைச்சுவை பண்ண, கடைசியில் இளையராஜாவின் எந்தப் பாடலும் இடம் பெறவேயில்லை. இப்படி இல்லாத பெருமையை அவருக்கு கொடுத்து இந்த ராஜா ரசிகர்கள் செய்யும் அதகளம்ஒரு கோமாளித்தனம். இதையே அவர்கள் சிம்பனி என்ற விஷயத்திலும் செய்கிறார்கள். இதற்கு வீராவேசமாக பதில் சொல்லும்முன் சிம்பனிய முதல்ல கண்ணுல காட்டுங்கப்பா.

Anonymous said...

மிஸ்டர் அமுதவன் ரொம்ப தலைக்கனம் புடிச்சி ஆடாதீங்க உங்களுக்கு ஜால்ரா இந்த தலைகீழ் வவ்வாலா?
இசைஞானி சிம்பொனி வாசிச்சத நேற்று நடந்த செய்தி போல சொல்லியிருக்கீறீர்கள். அது பல வருஷம் ஆகி போச்சேயா. இது வரைக்கும் நீங்க தூங்கி கிட்டே இருந்தீங்களா சார். இப்ப என்ன உங்களுக்கு வேணும் '
இளையராசா இசைக்காக ஒண்ணுமே செய்யலை ஏன்னா அவருக்கு அந்த ஞானம் இல்லை காரணம் அவர் ஒரு ப...ன்.' போதுமா தல போங்க நிம்மதியா போய் தூங்குங்க தல

Amudhavan said...


Anonymous said...
\\இளையராசா இசைக்காக ஒண்ணுமே செய்யலை ஏன்னா அவருக்கு அந்த ஞானம் இல்லை காரணம் அவர் ஒரு ப...ன்.' \\

அனானி, கலைஞர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இம்மாதிரி சாதி பெயிண்ட் அடித்துவிட்டு அப்புறம் அவர்களை அணுகும் இழிகுணத்தை முதலில் விட்டொழியுங்கள். சாதியால் வேறுபாடு பார்ப்பது, மதத்தால் வேறுபாடு பார்ப்பது, கட்சி ரீதியாக வேறுபாடு பார்ப்பது என்று பல்வேறு காரணங்களை வைத்துக்கொண்டு பிரித்துப் பிரித்துப் பார்த்து ஏகப்பட்ட டிவிஷன்களை வைத்துக்கொண்டு செயல்படுவதால் மட்டும்தான் தமிழனை மத்திய அரசாங்கமும் சரி, மற்ற மாநிலத்துக்காரர்களும் சரி பைசாவுக்கு மதிப்பதில்லை. நீங்கள் சாதிய முறையில்தான் கருத்துக்களை அணுகுவீர்கள் என்றால் இந்தத் தளத்தில் உங்களுக்கு வேலை இல்லை. நடையைக் கட்டுங்கள்.

அதுவும் இளையராஜாவை இம்மாதிரி சாதி ரீதியில் அணுகுபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர் இவர்களையெல்லாம் கிஞ்சித்தும் மதிப்பதே இல்லை. அவர் பாட்டுக்கு ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் கட்டுவது, வீட்டில் நடக்கும் நவராத்திரி கொலுவின்போது வெறும் பிராமணப் பாடகர்களை தினந்தோறும் அழைத்துப் பாடச்செய்வது, அவர்களின் மனம் கோணக்கூடாது என்பதற்காக 'பெரியார்' படத்தைப் புறக்கணித்தது என்று அவாள் இவாள்களோடுதான் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இவர்கள்தான் 'நீங்கள் தியாகய்யர் என்று சொன்னால் நாங்கள் இளையராஜா என்று சொல்வோம்' என்று மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Bruno said...

;)

Anonymous said...

ilaiyarajavin symphonyai kettuvittu suppudu avaragal alitha petti ondru anandha vikatanl vanthathu..avar nana sagum munn rajavin symphony ketka vendum endru solla adutha nalle raja delhi sendru CD koduthathaga ninavu..

வவ்வால் said...

அமுதவன் ஸார்,,

அதெல்லாம் ஏற்கனவே இணையத்தில நிறைய விவாதிச்சுட்டாங்க,என்ன நம்ம மக்களுக்கு ஷார்ட் டெர்ம் மெமொரி லாஸ் :-))

# ஏற்கனவே திருவாசகvம் தயாரிப்புக்கு ஒரு லட்சம் டாலருக்கு மேல் திரட்டி செலவழிச்சவங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை, பத்தாதுக்கு என்னை வச்சு பணம் சம்பாதிக்க சிலர் திட்டம் போட்டாங்கனு புகார் தான் சொன்னாலாவது,டாலரு செலவழிச்சவங்களுக்கு கடசீல பட்ட நாமம் தான் அவ்வ்!
-------------------------


அனானி,

அதை ஏன் குப்புறடிச்சு படுத்துக்கிட்டு சொல்லுற?

இங்கே யாரும் உம்மை போல கேவல சிந்தனையில் பேசவில்லை,

நடக்காத ஒன்னுக்கு ஏன் வெத்துப்பெருமையடிச்சுக்கனும் என்று தான் கேட்கிறார்கள்.

உண்மையாவே சிம்பனி வெளியிடட்டும் எல்லாருமா சேர்ந்து பாராட்டுவோம், ஸ்கூல் படிக்கிற சின்னப்பையன் கூட சிம்பனி போட்டு இருக்காம்,ஏன் ஒரு கம்பியூட்டர் கூட சிம்பனி போட்டு இருக்காம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சிம்பனினு உலக ரெக்கார்டு!

அப்படி இருக்கச்சொல்லோ ராசா போட மாட்டாரா என்ன?

Anonymous said...

@வவ்வால் ,

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.
"யே புன்னகை மன்னன் படக்காலத்திலேயே "மேஸ்ட்ரோ" பட்டம் போட்டுக்கிட்டார்."

ஒரு மனசாட்சி உள்ள மனிதன் இவ்வளவு கேவலமாக பொய் சொல்லமாட்டான். இளையராஜா மேஸ்ட்ரோ பட்டம் போட தொடங்கியது சிம்பனி இசைக்காக லண்டன் போய் வந்த பின் தான். வவ்வாலுக்கு சரியாக தெரியாவிட்டால் பொத்திகிட்டு இருக்கலாம்.

(வௌவால் தனக்கு எல்லாம் தெரிந்தது போல் இதுவரை காலம் உளறிய கமெண்ட் கலீல் எத்தனை பொய் இருக்கின்றதோ யார் அறிவார் )

பாபு சிவா

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

அமுதவன் சார், நீங்க சி.டி . க்காக அலைந்த கதை சுவராஷ்யமா இருக்கு. இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? ரோஜா படம் வந்து "சின்ன சின்ன ஆசை" இந்தியா முழுவதும் மூலைக்கு மூலை சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது, ரஹ்மான் வெளிச்சத்தில் சூரியன் முன்னாடி மெழுகுவர்த்தி மாதிரி இளையராஜா ஆகிப் போன நேரம். பத்திரிகையாளர்களையே விரும்பாத அவர், திடீர்னு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தார். அதில், லண்டனுக்குப் போய் தான் சிம்பொனி அமைத்துள்ளதாகவும், அதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்தவர்கள் தன்னை Maestro என்று அழைத்ததாகவும் சொல்லி, இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறேன்னு அங்கேயே இளையராஜா அழ ஆரம்பித்து விட்டார். [ஆந்தக் கண்ணீர்!!]. இப்போ கற்பனை பண்ணி பார்த்தால் அது காமடியாகத் தெரிகிறது. அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட காலகட்டத்தில் CD -என்பதே கண்டுபிடிக்கப் படவில்லை, அது சில ஆண்டுகள் கழித்தே நம்மூரில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது, அப்போது வெறும் கேசட்டுகள் மட்டுமே இருந்தன. கேசட்டு போயிட்டு CD - என்று வந்து டெக்னாலஜியே மாறிப் போனாலும், காணமல் போன இளையராஜாவின் சிம்பொனி CD -மட்டும் இன்னமும் எங்கேயிருக்குதுன்னே தெரியலையே!!

Jayadev Das said...

Mistakes in the first comment is corrected in the second, sorry!!

Anonymous said...

@காரிகன்
"சிம்பனியை விடுங்கள். எதோ போன ஒலிம்பிக்ஸில் இளையராஜாவின் கண்றாவியான பாட்டு ஒன்று இடம் பெறப் போவதாக வதந்தி கிளம்ப, அதை பற்றிக்கொண்டு ராஜா ரசிகர்கள் செய்த அலப்பறை இருக்கிறதே.."

இதை ராஜா வின் தளத்தில் ஒரு தகவலும் இல்லை. ஆனால் ரஹ்மானின் தளத்தில் பதிந்திருக்கின்றார்கள்

In Summer 2012, Rahman composed a Punjabi song for the London Olympics opening ceremony, organised by Danny Boyle. It will be a part of a medley which will showcase Indian influence in the UK, according to Boyle's wishes. Another Indian musician, Ilaiyaraja's song from Tamil-language film Ram Lakshman (1981), has also been chosen as part of the medley.[86]

http://en.wikipedia.org/wiki/A._R._Rahman

Anonymous said...

" சாதியால் வேறுபாடு பார்ப்பது, மதத்தால் வேறுபாடு பார்ப்பது, கட்சி ரீதியாக வேறுபாடு பார்ப்பது என்று பல்வேறு காரணங்களை வைத்துக்கொண்டு பிரித்துப் பிரித்துப் பார்த்து ஏகப்பட்ட டிவிஷன்களை வைத்துக்கொண்டு செயல்படுவதால் மட்டும்தான் தமிழனை மத்திய அரசாங்கமும் சரி, மற்ற மாநிலத்துக்காரர்களும் சரி பைசாவுக்கு மதிப்பதில்லை. "

மற்ற மாநிலங்களில் சாதி பாகுபாடு இல்லையா ........ ஹஹஹஹஹாஹ்

உண்மையில் தமிழ்நாட்டில் தான் வடமாநிலங்களை ஒப்பிடும் போது சாதி, மத வன்முறைகள் குறைவு.

வடமாநிலத்தவர் தமிழர்களை வெறுக்க காரணம் ஹிந்தி தேசிய மொழி அமுலாக்கத்துக்கு தடையாக எதிராக இருந்தமை. ஏனைய அனைத்து மாநிலங்களும் ஹிந்தி கற்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் எதிர்ப்பு இன்றும் உள்ளது.
BABU SIVA

Bruno said...

அமுதவன் சார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா ?

Anonymous said...

"அதுவும் இளையராஜாவை இம்மாதிரி சாதி ரீதியில் அணுகுபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர் இவர்களையெல்லாம் கிஞ்சித்தும் மதிப்பதே இல்லை. "

அமுதவன் நீங்க டெக்நிக்கலாக அந்த சாதி விடயத்தை திசை திருப்பிகிண்றீர்கள்.

அந்த அனானி இளைராஜாவின் சாதி சொல்லி இழிவுபடுத்துகின்றார். ஆனால் நீங்க அதை திசை திருப்பி இளையராவின் தற்போதைய பார்ப்பன நட்பை இணைத்து வேறு திசைக்கு நகர்த்துகின்றீர்கள்.

கோபுரம் கட்ட காசு கொடுப்பது தனிப்பட்ட விருப்பம். பகுத்தறிவையே கொள்கையாக கொண்ட கருணாநிதியே சாய் பாபாவுக்கு மனைவி மூலம் கால் கழுவி ஆசீர்வாதம் வாங்கையில் ராஜா எம்மாத்திரம்.

"'பெரியார்' படத்தைப் புறக்கணித்தது "
பெரியார் படத்தை புறக்கணிப்பது தனிப்பட்ட விருப்பம். பெரியாருக்கும் ராஜாவின் சொந்த சாதிக்கும் என்ன தொடர்பு.
பெரியார் பார்ப்பனரையும் இந்து மதத்தையும் எதிர்த்தார். தலித்களின் விடுதலைக்காக பெரிதாக சாதிக்கவில்லை. (ஒன்றும் சாதிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை )

பெரியாரின் பிரபலமான வசனம் "புலைச்சியெல்லாம் ஜாக்கெட் போடறதால்தான் துணி விலை .."

ராஜா நாத்திகவாதியாக இருந்ததுவும் இல்லை. அப்போ தான் நம்பும் கடவுளை வெறுக்கும் ஒருவரை பற்றியா படத்துக்கு இசை அமைக்குமாறு கட்டாயப்படுத்த முடியும்.

பெரியார் தலித்களின் தலைவரும் அல்ல தலித்களுக்கு விடிவெள்ளியும் அல்ல.

அம்பேத்கார் படத்துக்கு ராஜா இசை அமைக்க மறுத்தா நீங்க குறை சொல்லலாம்

வவ்வால் said...

//அந்த வரிசையைப் பார்த்துக் கலைத்துப்போட்டு, பக்கத்து வரிசைக்கு நகர்ந்து சென்று உட்கார்ந்து “இதுவா பாருங்கள்” என்று அந்த இளைஞன் எடுத்துக்காட்டியது HOW TO NAME IT. “இது இல்லை சிம்பொனி” என்றதும் அவன் மறுபடியும் தேடிவிட்டு “இல்லை சார் Out of stock என்று நினைக்கிறேன்” என்றான். “அந்த சிடி வந்திருக்கிறதா? என்பதைக் கொஞ்சம் செக் செய்யுங்கள்” என்றதும் “ஒன்மினிட் சார்” என்றவன் கம்ப்யூட்டரில் இருந்த லிஸ்டில் எதுஎதையோ தட்டி எங்கெங்கோ மவுசை இழுத்துக்கொண்டுபோய் கிளிக் செய்து ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப்பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி “இல்லை சார். அதனை வரவழைக்கவில்லை போலிருக்கிறது” என்று சொல்லி “பேர் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டு டயரி ஒன்றில் குறித்துக்கொண்டான்.
//


அனானி பாபு,

ஹவ் டு நேம் இட் வந்த காலத்தில இருந்தே "மேஸ்ட்ரோ" கதை ஓடிக்கிட்டு இருக்கு,இன்னமும் அந்த ஆல்பத்தை சிம்பனி சொல்லிக்கிட்டு அல்லது நம்பிக்கிட்டு பலர் இருக்காங்க,அமுதவன் அவர்களுக்கு பெங்கலூரில் கிடைச்ச அனுபவமே அதற்கு ஒரு சாட்சி எனலாம்.

ஆமாம் நீர் எந்த ஆண்டு லண்டன் போன கதைய சொல்லிட்டு இருக்கீர்னாவது தெளிவா சொல்லும்.

பேரே வைக்காத ஒரு ஆல்பத்தை கூட சிம்பனினு சொல்லிக்கிட்டு இருக்காங்க,அதை ஒரு வேளை சொல்லுரீரா?

How to name it,(86)

Nothing but wind(88)

Un named album(93),

Thiruvaasakam(2005)

Ellaamee symphony nu plurality irukku avv!

Amudhavan said...

வவ்வால் said...

\\Ellaamee symphony nu plurality irukku avv!\\

ராஜேந்திரகுமார் 'ஙே'ன்னு ஒரு எழுத்தைப் பாப்புலர் பண்ணி தன்னுடைய அடையாளமாய் வச்சுக்கிட்டதைப் போல நீங்க அவ்வ்வுன்னு ஒரு வார்த்தையைப் பாப்புலர் பண்ணி உங்க அடையாளமாய் வைச்சுக்கிறதைப் பற்றி ஒண்ணும் ஆட்சேபமில்லை. ஆனா அதை ஆங்கிலத்திலும் கொண்டுவந்திருக்கீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க நீங்க!

வவ்வால் said...

அமுதவன் ஸார்,

ஹி...ஹி அவ்வ் நு தமிழில் தான் தட்டச்சு செய்தேன் ஆனால் இணைய மொழிமாற்று சேவை காலைவாரிடுச்சு அவ்வ்!

விக்கிப்பீடியாவில் ஆரம்பத்துல ராசா பேரை சிம்பனி போட்டு பட்டியலில் போட்டு இருப்பார்கள்,ஆனால் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லைனு ஒரு அடிக்குறிப்பும் கொடுத்திருப்பார்கள்,இப்போ சுத்தமா பேரயே தூக்கிட்டாங்க,இந்த ராசா மணிகள் விக்கிப்பீடியாவில் மருபடியும் பேர சேர்ந்து விடலாமே :-))

# ஒல்ப்கெங் அமெதியஸ் மொஸார்ட் சிம்பனி இசைக்குறிப்பை 8 வயசில எழுதிட்டாராம், 15 வயசுக்குள்ள ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் செய்து சிம்பனி கச்சேரிகள் பல நடத்திட்டார்!!!

#ரெஹ்மானின் கே.எம் இன்ஸ்ட்டியுட்டில் பயிற்சி எடுத்த சிங்கள இசையமைப்பாளர் "டான் டினேஷ் சுபசிங்கா" என்பவர் பெயர் கூட 2012 இல் சிம்பனி அமைத்த முதல் இலங்கையர்னு அதிகாரப்பூர்வமா போட்டிருக்கு.

கருணா நதி, என புத்தரைப்பற்றிய ஒரட்டோரியாவும்,சிம்பனி சொனாட்டாவும்,கேப்பல்லேஸ் உம் போட்டு இருக்காராம்,இதுக்கு நிதிஉதவி ராசபக்சேவாம் அவ்வ்!

ஏன் இப்படி நம்ம ஆளுங்கப்பேரு அதிகாரப்பூர்வமா வரலை?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி !!!
----------------------

காரிகன்,

என்னதான் விளக்கினாலும் ராசாமணிகளுக்கு புரியாது, காரணம் மூளை வளர்ச்சி அம்புட்டுத்தான் அவ்வ்! ,

Anonymous said...

"ஹவ் டு நேம் இட் வந்த காலத்தில இருந்தே "மேஸ்ட்ரோ" கதை ஓடிக்கிட்டு இருக்கு,"

உம்முடைய புழுகு கதையெல்லாம் என்னிடம் வேகாது. அதுக்கு வேற ஆளை பாரும்.

how to name it வந்த போது ஒருத்தரும் அதை கண்டுக்கவேயில்லை. அப்புறம் nothing but wind வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சமாவது அதை பற்றியும் பேச ஆரம்பிச்சாங்க.

"மேஸ்ட்ரோ" பட்டம் மேற்படி அல்பம் வெளிவந்த காலத்தில் ஏதாவது பட டைட்டில் இல் ராஜாவின் பெயருடன் மேஸ்ட்ரோ பட்டம் போடப்பட்டிருந்ததா ............இல்லையே .... அப்புறம் எப்படி அந்த அல்பங்கள் வந்த காலத்திலேயே மேஸ்ட்ரோ கதை இருந்தது என்று அல்பத்தனமாக பொய் சொல்கின்றீர்கள். நீர் ஒரு கடைந்தெடுத்த பொய்யன் வவ்வால்.

" திருவாசகம் சிம்பனியா இல்லையானு விவாதம் ஓடிய காலத்திலும் நான் " திருவாசக இசைக்கோர்வையை சிம்பொனி என்று இளையராஜா எங்குமே சொல்லவில்லை. சொல்லப்போனால் "அது சிம்பொனி அல்ல ஆரட்டோரியோ என்ற வகையில்தான் சேரும்" என்றுதான் சுஜாதாவிற்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியிருக்கிறார். (ஆரட்டோரியோ என்பது வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப்பட்ட புனிதமான கருத்துள்ள இசைப்படைப்பு - musical work for orchestra and voices on a sacred theme - சுஜாதா

ஜெயவேல் தாஸ் சொன்னவாறு "ல், லண்டனுக்குப் போய் தான் சிம்பொனி அமைத்துள்ளதாகவும், அதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்தவர்கள் தன்னை Maestro என்று அழைத்ததாகவும் சொல்லி, இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறேன்னு அங்கேயே இளையராஜா அழ ஆரம்பித்து விட்டார்."

இதுதான் நடந்தது. இதன் பின்புதான் இளையராஜா இசை அமைத்த படங்களுக்கு மேஸ்ட்ரோ இளையராஜா என்று போடப்படும் வழக்கம் இருந்தது. முதன்முதலில் ராஜ்கிரனின் படம் ஒன்றில் தான் போடப்பட்டதாக நினைவு. (வவ்வால் மாதிரி உறுதியாக தெரியாத விடயங்களை தெரிந்த மாதிரி அடித்துவிடும் பழக்கம் எனக்கு இல்லை )

மேஸ்ட்ரோ என்ற பட்டம் ஒன்று இருப்பதே ராஜா அறிக்கை விட்ட பின் தான் தமிழ் நாட்டில் பலருக்கு தெரியும் .

ஜெயவேல் நீங்க காமெடி பீஸ் மாதிரி பேசுறீங்க ( அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட காலகட்டத்தில் CD -என்பதே கண்டுபிடிக்கப் படவில்லை, அது சில ஆண்டுகள் கழித்தே நம்மூரில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது, )
cd 1993 இல் கண்டுபிடிக்கப்படவில்லையா ...... நீங்க எந்த கிரகத்தில் இருந்தீங்க.

1980 களில் cd கண்டுபிடிச்சுட்டாங்க. 1981இல் ஆடியோ cd வந்துவிட்டது. கமெண்ட் போடமுன் கொஞ்சமாவது தேடிப்பாருங்கள்.

BABU SIVA

Anonymous said...

"அவ்வ்வுன்னு ஒரு வார்த்தையைப் பாப்புலர் பண்ணி"

இந்த வார்த்தையை வவ்வால் ஒன்றும் பிரபலமாக்கவில்லை. வடிவேலுதான் இந்த வார்த்தையை பிரபலமாக்கினார்.
இந்த வவ்வால் அதை காப்பி அடிச்சுகிட்டு இருக்காரு

babu siva

Anonymous said...

ஜெயவேல் நீங்க காமெடி பீஸ் மாதிரி பேசுறீங்க ( அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட காலகட்டத்தில் CD -என்பதே கண்டுபிடிக்கப் படவில்லை, அது சில ஆண்டுகள் கழித்தே நம்மூரில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது, )
cd 1993 இல் கண்டுபிடிக்கப்படவில்லையா ...... நீங்க எந்த கிரகத்தில் இருந்தீங்க.

1980 களில் cd கண்டுபிடிச்சுட்டாங்க. 1981இல் ஆடியோ cd வந்துவிட்டது. கமெண்ட் போடமுன் கொஞ்சமாவது தேடிப்பாருங்கள்.

(இளையராவின் சிம்பனி cd யில் வெளிவந்தது என்று வவ்வால் மாதிரி நான் பொய் சொல்லபோவதில்லை. ஆனால் 1993 இல் cd கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஜெயவேல் முட்........தனமாக கூறிய கருத்துக்கு பதிலாகவே இதை தருகின்றேன் >)

babu siva

சார்லஸ் said...

அமுதவன் அவர்களே

இளையராஜாவின் சிம்போனி இசை ஒரு பதிவாகவோ சி. டி யாகவோ வெளிவரவில்லை என்பதுதான் உண்மை . அது ஏன் என்பது இளையராஜா மட்டுமே அறிந்த உண்மை . அவர் விருப்பு வெறுப்பில் நாம் தலையிட முடியாது . ஆனால் சிம்பொனி இசைக்காக அவர் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது . இசைத்தும் உண்மை , வெளியில் வராததும் உண்மை . இளையராஜா ரசிகர்களுக்கு இது தெரிந்ததுதான்!

வவ்வால் அவர்களே

திருவாசகம் ஒரு சிம்பொனி இசை அல்ல என்று எல்லா ரசிகர்களுக்கும் தெரியும் . நீங்களாக கற்பனை செய்து கொண்டு பேசுகிறீர்கள். இசையை அல்ல இசைஞனை பற்றிய குணாதிசயங்களில் அதிக அக்கறை காட்டுகிறீர்கள் . மனிதனுக்கு பல முகங்கள் உண்டு . நமக்கு வேண்டியது இளையராஜாவின் இசை முகம் . அதைப் பற்றி மட்டும் விமர்சிப்பதே நல்லது .

/// " ராசாவுக்கே "காண்பிடென்ஸ்" இல்லை நாம போட்டதுல பீத்தோவான்,பாக் இசை இருக்குனு கண்டுப்பிடிச்சு கிழிச்சா என்னா பண்ணுறதுனு ஒரு பயம் உள்ளுக்குள்ள, எனவே சிம்பனினு சொல்லிக்க தயக்கம் ,அவ்ளோ தான். " ///

இது நீங்க சொன்னது . யாருக்கு பயம் ? How to name it , Nothing but wind போன்ற ஆல்பம் வெளியிட்டபோதே மொசார்ட் போன்றவர்களின் இசையின் அகத் தூண்டுதலால்தான் அவை உருவானதாக இளையராஜாவே சொன்ன விஷயம் . அகத் தூண்டுதல் இல்லாமல் யாரும் இசை அமைக்க முடியாது . ஆக இளையராஜா யாருக்கும் பயப்பட தேவையில்லை . வெளியிடாமல் இருப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம் . நானும் உங்கள் பாதிப்பினால் சொல்லிகிறேன் அவ் ...!

காரிகன் said...

இங்கும் சால்ஸ் வந்து வழக்கமான பூசணிக்காயை சோற்றில் (சேற்றில்?) மறைக்கும் சதியை செய்கிறார். இளையராஜா சிம்பனி அமைத்தும் உண்மையாம் அது வெளியிடப்படாததும் உண்மையாம். என்ன புத்திசாலித்தனம்? வெளியில் வந்த பின்பே ஒரு விஷயத்தை நாம் உறுதி செய்யமுடியும். அதுவரை பாட்டிகள் சொல்லும் பூதம் கதை போலத்தான். ஒரு அனுமானத்தை மூலதனமாக வைத்து ஒருவரை டாக்டர் என்று அழைக்கும் முட்டாள்தனமே இது.
"இளையராஜாவின் இசையை மட்டுமே விமர்சிக்க வேண்டும்." இது இன்னொரு தப்பிக்கும் தந்திரம். இவர்கள் மற்றவர்களை பணம் கொடுத்து விருது வாங்கியதாக சொல்லும்போது இந்த பண்பாடு எங்கே போனதாம்? How To Name It, Nothing But Wind போன்ற ஆல்பங்கள் அக தூண்டுதலாம். சரிதான். இதையே மற்றவர்கள் செய்தால் காப்பி என்று கத்தியே ஒழித்துவிடுவார்கள்.சரி. அக தூண்டுதலால் எதோ செய்தாரே அதையாவது ஒழுங்காக செய்தாரா என்றால் அதுவுமில்லை.நல்ல முயற்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்.எனக்குத் தெரிந்த இளையராஜாவின் ரசிகனான என் நண்பர் ஒருவர் (ஜஸ்டின் என்று பெயர் ) இந்த இரண்டு ஆல்பங்களையும் வாங்கி வைத்திருக்கிறார். "என்ன, கேட்டாச்சா? எப்படி இருக்கிறது?" என்று வினவினால் ஒரு மாயச் சிரிப்புடன் "கொஞ்சம்தான் கேட்டேன். போரடிக்குதப்பா" என்று confession செய்துவிடுவார். என் நண்பர் கூறிய கருத்துக்காக என் மீது பாயாதீர்கள் சால்ஸ்.

காரிகன் said...

ஜெயதேவ் தாஸ் சி டி பற்றி கூறியிருக்கும் கருத்து திருத்தப்படக்கூடியதே(சி டிக்கள் 70 களின் இறுதியிலேயே கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன. 80 களில் மேலை நாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டன) என்றாலும்ஒரு விதத்தில் அவர் சொல்வது உண்மையே. அதாவது தமிழ் நாட்டில் மக்கள் பயன்பாட்டில் சி டிக்கள் அப்போது பரவலாக இல்லை என்பது உண்மைதான்.

காரிகன் said...

வவ்வால்
உங்களின் அவ்வ்... ஒரு தொற்று நோய் போல பரவுகிறது. வாந்தி வருகிறதாக்கும் என்று உங்களை ஒரு முறை நக்கல் செய்த சால்ஸ் கூட இப்போது அவ்வுகிறார்..பலே பலே.

Amudhavan said...


Anonymous said...

\\ilaiyarajavin symphonyai kettuvittu suppudu avaragal alitha petti ondru anandha vikatanl vanthathu..avar nana sagum munn rajavin symphony ketka vendum endru solla adutha nalle raja delhi sendru CD koduthathaga ninavu..\\

அனானிமஸ், சுப்புடு உடம்பு பூராவும் கிண்டல் பிடித்த மனிதர். 'எம்எல்வி ஸ்வரம் சொல்லும்போது வருவதுதான் சொல்லுக்கட்டு. மற்றவர்களிடம் வருவது பில்லுக்கட்டு'
'ஹேமமாலினியை ஆடல் அழகி என்கிறார்கள். இதில் இரண்டாவது பகுதி மட்டும் நிஜம்.' இம்மாதிரி ஒவ்வொருவரையும் விமர்சித்து வந்தவர். இளையராஜாவின் சிம்பொனி ஆர்ப்பாட்ட அதிரிபுதிரிகளைப் பார்த்தவர் 'நான் சாவதற்குள் இளையராஜா இசையமைத்த சிம்பொனியைக் கேட்க விரும்புகிறேன்'. என்று சொல்லியிருக்கக்கூடும். உடனடியாக இளையராஜா டெல்லி சென்று சுப்புடுவுக்குப் போட்டுக்காட்டியிருக்கவும் கூடும்.

யாரொருவர்- அவர் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் தன்னுடைய வீடு தேடி வந்து, அதிலும் இளையராஜா மாதிரி பிரபலமாக இருப்பவர்கள் தம்முடைய அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டுத் தன்னுடைய வீடு தேடி வந்திருக்கும்போது முகமன் கூறி வரவேற்று அதனைக் கேட்டிருப்பார். கேட்டவர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. 'இளையராஜா அமைத்திருப்பதுதான் சிம்பனி. இனி இதனை போற்றிப்பாடுவதே நம்பணி' என்கிறமாதிரி ஏதாவது சொல்லியிருக்கிறாரா தெரியாது.
மீண்டும் அதே கேள்விதான். இளையராஜா சிம்பனியை சுப்புடுவுக்குப் போட்டுக்காட்டினாரா சூரபத்மனுக்குப் போட்டுக்காட்டினாரா என்பது இருக்கட்டும். அது வெளிவந்ததா இல்லையா? வந்திருந்தால் எங்கே கிடைக்கிறது? வராவிட்டால் ஏன் வரவில்லை?

Amudhavan said...


\\வடமாநிலத்தவர் தமிழர்களை வெறுக்க காரணம் ஹிந்தி தேசிய மொழி அமுலாக்கத்துக்கு தடையாக எதிராக இருந்தமை. ஏனைய அனைத்து மாநிலங்களும் ஹிந்தி கற்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் எதிர்ப்பு இன்றும் உள்ளது.\\
BABU SIVA

பாபு சிவா நீங்கள் சொல்லியிருப்பதும் ஒரு காரணம்தான். அதுமட்டுமே காரணம் அல்ல. நான் கர்நாடகத்தில் வசிப்பவன் என்பதால் இங்கே மற்ற மொழிக்காரர்களும் அதிகம். அவர்கள் பொதுவாகத் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், எது எதற்காகத் தமிழனை வெறுக்கிறார்கள் என்பதெல்லாம் ஏகப்பட்ட அரசியல் சார்ந்தது. இவற்றிலிருந்தெல்லாம் எப்போது மீளப்போகிறோமோ தெரியவில்லை.

Amudhavan said...

Jayadev Das said..
\\ரோஜா படம் வந்து "சின்ன சின்ன ஆசை" இந்தியா முழுவதும் மூலைக்கு மூலை சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது, ரஹ்மான் வெளிச்சத்தில் சூரியன் முன்னாடி மெழுகுவர்த்தி மாதிரி இளையராஜா ஆகிப் போன நேரம். பத்திரிகையாளர்களையே விரும்பாத அவர், திடீர்னு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தார். அதில், லண்டனுக்குப் போய் தான் சிம்பொனி அமைத்துள்ளதாகவும், அதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்தவர்கள் தன்னை Maestro என்று அழைத்ததாகவும் சொல்லி, இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறேன்னு அங்கேயே இளையராஜா அழ ஆரம்பித்து விட்டார். [ஆந்தக் கண்ணீர்!!].\\
உண்மையைச் சொல்லப்போனால் ஜெயதேவ் ஒரு இளையராஜா ரசிகர். ஆனால் இளையராஜா ரசிகர்கள் இணையத்தில் செய்கின்ற அட்டகாசத்தைப் பார்த்து இம்மாதிரி நிஜங்களையெல்லாம் தேடிப்பிடிக்கிற பணியை ஆரம்பிச்சிட்டாரோ என்கிறமாதிரி படுகிறது.
'அப்படின்னா சிம்பொனி உண்மையில் வரல்லையா?' என்று நேரில் சந்தித்தபோது அவர் காட்டிய ஆச்சரியம், உண்மை இப்படியிருக்கும்போது எதற்காக சிம்பொனி இசையமைத்தவர் என்பதையே இவர்கள் எல்லாரும் சேர்ந்து திரும்பத் திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்திற்று.
பாபுசிவா, நீங்கள் எல்லாம் தெரிந்த மிகப்பெரிய அறிஞராக இருக்கலாம். அதற்காக ஏதோ ஒரு விவரத் தவறுக்காக ஜெயதேவ் போன்றவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதை எல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள். இங்கே இளையராஜாவுக்கு ஆதரவாகப் பேசுகிறவன் எல்லாம் மிகப்பெரிய சாம்ராட். அறிவுலகச் சக்கரவர்த்திகள். விமர்சிக்கிறவர்கள் எல்லாரும் காமெடிப் பீசுகள்., விவரம் தெரியாதவர்கள், இசை ஞானம் இல்லாதவர்கள், முட்டாள்கள்.......அப்படித்தானே?
வினவு தளத்தில் பத்துப்பதினாறு பேர் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்க..... தான் ஒருவராகவே அத்தனைப் பேரையும் வெற்றிகரமாகச் சமாளித்த ஜெயதேவின் வாதத்திறமை இப்போது நினைத்தாலும் வியக்கத் தோன்றுகிறது.

Amudhavan said...

J Mariano Anto Bruno Mascarenhas said...

\\அமுதவன் சார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா ?\\
எந்தத் தளத்தில் வந்து தரச்சொல்லுகிறீர்கள். தரலாம் என்று உங்கள் தளத்தைக் கிளிக்கினால் என்னென்னமோ விவரம் கேட்டு வம்பு பண்ணுகிறதே.

Amudhavan said...

charles said...

\\அமுதவன் அவர்களே

இளையராஜாவின் சிம்போனி இசை ஒரு பதிவாகவோ சி. டி யாகவோ வெளிவரவில்லை என்பதுதான் உண்மை . அது ஏன் என்பது இளையராஜா மட்டுமே அறிந்த உண்மை . அவர் விருப்பு வெறுப்பில் நாம் தலையிட முடியாது . ஆனால் சிம்பொனி இசைக்காக அவர் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது . இசைத்தும் உண்மை , வெளியில் வராததும் உண்மை . இளையராஜா ரசிகர்களுக்கு இது தெரிந்ததுதான்!\\
வாருங்கள் சார்லஸ் , இளையராஜா ரசிகர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் சிம்பனி அமைத்தார் என்பதைக் குறிக்கும் விதமாகப் பெருமைப் பாராட்டுகிறீர்களே, இதுவரை யாராவது ஒருத்தராவது 'அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த இசைக்கோர்வை இன்னமும் வரவில்லை. வெளியிடப்படவில்லை. அதனால் நாம் அந்த இசைக்கோப்பு வருகிறவரையில் சிறிது அமைதி காப்போம். சிம்பொனி அமைத்தவர் என்று சொல்வதை நிறுத்துவோம். சிம்பனி அமைத்ததைக் குறிக்கும் விதமாக மேஸ்ட்ரோ என்று அவரை அழைப்பதை நிறுத்தி வைப்போம். முடிந்தால் அது ஏன் வரவில்லை என்று அவரை நேரில் சந்திக்கும்போது கேட்டு மக்களுக்கு அறிவிப்போம்.' என்று நேர்மையாக எழுதியது உண்டா? இணையத்திலோ பத்திரிகையிலோ எங்காவது சொல்லியிருக்கிறீர்களா?
அல்லது அவர்தான் சொல்லியிருக்கிறாரா?

Amudhavan said...


Anonymous said...
\\கோபுரம் கட்ட காசு கொடுப்பது தனிப்பட்ட விருப்பம்.\\
\\பெரியார் படத்தை புறக்கணிப்பது தனிப்பட்ட விருப்பம்.\\
\\பெரியார் தலித்களின் தலைவரும் அல்ல தலித்களுக்கு விடிவெள்ளியும் அல்ல.\\
\\அந்த அனானி இளைராஜாவின் சாதி சொல்லி இழிவுபடுத்துகின்றார். ஆனால் நீங்க அதை திசை திருப்பி இளையராவின் தற்போதைய பார்ப்பன நட்பை இணைத்து வேறு திசைக்கு நகர்த்துகின்றீர்கள்.\\

பெரியார் போன்றவர்களுக்கெல்லாம் ஏகப்பட்ட உட்பிரிவுகள் ஏற்படுத்தி ஒரு சிறிய வட்டத்துக்குள் அவர்களை அடைப்பது, அம்பேத்கரை உயர்த்தி பெரியாரை இழிவு படுத்துவது என்ற இம்மாதிரி சின்னச்சின்ன வட்டங்கள் நிறைய இருக்கின்றன. நான் அவற்றுக்குள்ளேயெல்லாம் சிக்கிக்கொள்ள வேண்டாமென்று நினைப்பவன். என்னைப் பொறுத்தவரை பெரியார் ஒரு மிகப்பெரிய போராளி. சமூக சீர்த்திருத்தம் நடைபெறவேண்டி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடிய மிகப்பெரும் தலைவர்.(அவருடைய கடவுள் மறுப்புக்கொள்கையில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு) அவரது நாத்திக வாதத்திற்காகத்தான் இளையராஜா இந்தப் படத்தை மறுத்தாரா என்பது கேள்விக்குரியது.
இளையராஜாவின் பார்ப்பன நட்பையும் சரி, பார்ப்பன எதிர்ப்பையும் சரி நாம் இங்கே விரிவாக விவாதிக்கவில்லை. அதற்கான தேவையோ தளமோ அல்ல இது. ஆனால் அவரை ஒரு தாழ்த்தப்பட்டவர்களின் அடையாளமாக இவர்களே வரித்துக்கொண்டு 'நீங்கள் சங்கராச்சாரி என்றால் நாங்கள் பெரியார் என்று சொல்வோம் - நீங்கள் தியாகய்யர் என்று சொன்னால் நாங்கள் இளையராஜா என்போம்' என்றெல்லாம் பாட்டுக்கட்டி பாடுவதையெல்லாம் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
இணையத்திலேயே பெரியாரைக் கொண்டாடும் ஒருவர், பெரியாரிசம் பேசும் ஒருவர் இளையராஜாவைத்தான் தம்முடைய தளத்தின் முகப்பு அடையாளமாக வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்ததையும் இங்கே நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

குட்டிபிசாசு said...

ஐயா அனானி பாபுசிவா,

…//"மேஸ்ட்ரோ" பட்டம் மேற்படி அல்பம் வெளிவந்த காலத்தில் ஏதாவது பட டைட்டில் இல் ராஜாவின் பெயருடன் மேஸ்ட்ரோ பட்டம் போடப்பட்டிருந்ததா ............இல்லையே .... அப்புறம் எப்படி அந்த அல்பங்கள் வந்த காலத்திலேயே மேஸ்ட்ரோ கதை இருந்தது என்று அல்பத்தனமாக பொய் சொல்கின்றீர்கள். நீர் ஒரு கடைந்தெடுத்த பொய்யன் வவ்வால். //

…:) அல்பத்தையும் ஆல்பத்தையும் கொஞ்சம் விவரமாக எழுதவும். வேறு அர்த்தம் தொணிக்கிறது.

…அமுதவன்,

…//இணையத்திலேயே பெரியாரைக் கொண்டாடும் ஒருவர், பெரியாரிசம் பேசும் ஒருவர் இளையராஜாவைத்தான் தம்முடைய தளத்தின் முகப்பு அடையாளமாக வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்ததையும் இங்கே நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. //

அவர் மத சாதி அடிப்படையில் ஒருபட்சமாக எழுதக்கூடியவர். ஒருத்தரை ஓங்கி அடிப்பாங்க, ஒருத்தரை தடவி கொடுப்பாங்க. நடுநிலைவாதிகளாம்.

……ஜகத் காஸ்பர் ஒரு ப்ராடு. இவர் இளையராஜாவின் இசையில் திருவாசகம் என்று சொல்லி புலன்பெயர் ஈழத் தமிழர்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்தார். இதன் காரணமாகவே வெளியீட்டுவிழாவிற்கு வைகோ வேறு அழைக்கப்பட்டார்.

வவ்வால் said...

அனானி பாபு,

உமக்கு பத்திரிக்கைகள் படிக்கிற அளவுக்கு பக்குவமோ இல்லை பைசாவோ இப்போ தான் வாய்ச்சிருக்கும் என்றால் நான் என்ன செய்ய?

ஹவ் டு நேக் இட் காலத்திலயும் இதே புரளி ஓடிச்சு ,திருவாசகம் வந்தப்போவும் ஓடிச்சு, யாராவது கேள்விகேட்கும் போட்டு மட்டும் உம்மைபோல சிலர் சப்பைக்கட்டு சொல்கிறீர்கள்,ஆனால் அக்காலத்தில் என்னக்கதை சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறைத்து விடுகிறீகள் அவ்வ்!

நான் எல்லாத்தையும் ஆண்டோடு சொல்லிக்கேட்டாச்சு, இப்போ 93இல் போட்ட ஆல்பத்தைமாட்டும்ணு சொல்லுறிங்க,அப்போ திருவாசகத்தினை சிம்பனினு சொல்லிக்கவே இல்லை அப்படிட்தானே ?

ஹி...ஹி இக்கடச்சூடு....



மன்னு மோகனுக்கே சிம்பனி அல்வா கொடுத்திருக்கார் நம்ம ராசா இசப்பாட்டு வைக்கோ அவ்வ்!

கொஞ்ச காலம் கழிச்சு இப்போ உம்மை போல சில உத்தம ராசாமணிகள் வந்து திருவாசகத்தினை சிம்பனினு சொல்லவேயில்லைனு சாதிப்பீங்க, இதே கதைய தான் ஹவ் டு நேம் இட் காலத்திலயும் செய்தார்கள் அவ்வ்!

# சார்லஸ்,

நீங்களும் இதைப்படிச்சு வச்சுக்கோங்க பின்னாடி ஒதவும் :-))

" http://www.hindu.com/2005/06/22/stories/2005062207010500.htm "


வவ்வால் said...


காரிகன்,


காசாப்பணமா ? அவ்வ் தானே
சொல்லிக்கட்டும்,அதுக்குள்ளே அதை உருவாக்குனது வடிவேலுத்தானேனு அனானி பாபு அறச்சீற்றம் வேறக்காட்டுறார், ஹி..ஹி நான் என்ன அவ்வ் என்னோட கண்டுப்பிடிப்ப்னு என்னிக்கு சொன்னேன், இவரு எப்போ பார்த்தாருனு தெரியலை அவ்வ்!

இன்னிக்கு போய் ராசாவோட சிம்பனினு கேட்டால் "ஹவ் டு நேம் இட்" ஏன் எடுத்துக்கொடுக்கிறாங்கனு சிந்திக்க மாட்டேங்கிறார்கள், அந்தக்காலத்தில இருந்தே சிம்பனி கதைய ரீல் தேய தேய ஓட்டிக்கிட்டுத்தான் இருக்காங்க அவ்வ்!


யாராவது மடக்கி வச்சுக்கேட்டால் மட்டுமே ...நாங்க அப்படிலாம் சொல்லவேயில்லைனு "நல்லப்புள்ளையாகிடுறாங்க அவ்வ்!




BABU SIVA said...

"உமக்கு பத்திரிக்கைகள் படிக்கிற அளவுக்கு பக்குவமோ இல்லை பைசாவோ இப்போ தான் வாய்ச்சிருக்கும் என்றால் நான் என்ன செய்ய?"

ஐயா நான் பரம்பரை பணக்காரன், 4ஆம தலைமுறை படித்த குடும்பம். உம்மை போல் உண்டக்கட்டி தின்று வளர்ந்த குடும்பம் கிடையாது.

அடுத்து வைகோ செய்த வேலைக்கு இளையராஜா பொறுப்பு ஏற்க முடியாது. ராஜா பத்திரிக்கையாளர் மாநாட்டில் அப்படி சொல்லியிருந்தால் அவரை குற்றம் சொல்லமுடியும். அவருடைய பத்திரிகையாளர் மாநாட்டு பதிவுகள் தேவையான அளவு இணையத்தில் இருக்கின்றது. அவர் திருவாசகம் வெளியீட்டு விழாவில் கூட அப்படி சொல்லவில்லை.

உம்முடைய பொய் அம்பலமாகிவிட்டது என்றால் அதற்க்கு இவ்வளவு சப்பைகட்டு தேவையில்லை. ஒன்றும் தெரியாத மாதிரி வடிவேலு போல் போய்விடலாம்.

இளையராஜா தன்னை மேஸ்ட்ரோ என்று முன்பே பிரகடனப்படுத்தியிருந்தால் நிச்சயமாக (எள் என்றால் எண்ணையாக நிற்கும் இயக்குனர்கள் ) இயக்குனர்கள் தங்கள் படங்களில் ராஜாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் கொடுத்திருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காத போது உம்முடைய வாய் வாக்குமூலத்தை நம்ப நீர் என்ன அரிச்சந்திர வம்சமா ?

BABU SIVA

வவ்வால் said...

பரம்பரைப்பணக்கார அனானி பாபு!

ஆஹா நம்ம உண்டக்கட்டி வாங்கி துன்னதுலாம் தெரிஞ்சி வச்சிருக்காரே,ஒரு வேளை நம்மக்கிட்டே இருந்து உண்டக்கட்டிய புடுங்கி துண்ண. குருப்புல இருந்த ஆளா இருக்கு மோ அவ்வ்!

சரிப்பா நான் சொன்னக்காலத்துல மேஸ்ட்ரோனு பீத்திக்கவே இல்லைனு வச்சிப்போம்,நான் தப்பாவே சொல்லிட்டேன் இப்போ திருப்தியா, அப்போ எந்த காலத்தில இருந்த "மேஸ்ட்ரோ" பட் டம் போட்டுக்கிட்டார்? அப்போவாச்சும் சிம்பனி போட்டிருந்தாரா?

நீர் மானஸ்தன் உண்மைய சொல்லுவீர்னு நம்புறேன், இன்னிய தேதி வரைக்கும் சிம்பனி போடாமல் எப்படி மேஸ்ட்ரோனு படத்துல போட அனுமதிச்சார்?

அவருக்கு தெரியாமலே போட்டுட்டாங்க, அப்படி போட்டது இது வரைக்கும் ராசாவுக்கே தெரியாதுனு சொல்லிப்புடாதீர் அவ்வ்!

ஹி..ஹி ராசா சிம்பனினு சொல்லாமலே வைக்கோவா சொல்லிட்டார்,அதுவும் பேப்பர்ல வந்துப்போச்சி,எல்லாம் யாரோ வேண்டாதவங்க செஞ்ச சதித்தானே அவ்வ்!

Anonymous said...

"ஆஹா நம்ம உண்டக்கட்டி வாங்கி துன்னதுலாம் தெரிஞ்சி வச்சிருக்காரே,ஒரு வேளை நம்மக்கிட்டே இருந்து உண்டக்கட்டிய புடுங்கி துண்ண. குருப்புல இருந்த ஆளா இருக்கு மோ "

அப்படியெல்லாம் இல்லை. பரதேசிகளுக்கு உண்டக்கட்டி அள்ளி அள்ளி போட்டே சிவந்த கை எங்க பரம்மபரைக்கு.
ரெகுலராக உண்டக்கட்டி சாப்பிடும் கூட்டத்தை நமக்கு தெரியாதா
ஹஹஹஹஹா

"அப்போ எந்த காலத்தில இருந்த "மேஸ்ட்ரோ" பட் டம் போட்டுக்கிட்டார்? அப்போவாச்சும் சிம்பனி போட்டிருந்தாரா?"

அவர் சிம்பனி போடபோகின்றேன் என்று லண்டன் போய் வந்த நாளில் இருந்து போட்டுகிட்டு இருக்காங்க .....

"அப்போவாச்சும் சிம்பனி போட்டிருந்தாரா?"
தான் போட்டதாகத்தான் அவரு சொல்லுறார். என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும் ...........
ஆனா ஒரு சிம்பனி கொண்டக்டர் அவரு போட்டதாக சாட்சி சொல்லுறாரு.
எது எப்படி இருந்தாலும் எப்போவாது உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஆனா ஜங் மேஸ்ட்ரோ என்று ஜிவி பிரகாஷ்குமார் என்று ஒருத்தர் பட்டம் போட்டுகிட்டு இருக்காரு.
அதை யாரும் கேக்க மாட்டேங்க

BABU SIVA

Anonymous said...

Maestro (/ˈmaɪstroʊ/; Italian: [maˈestro]) (from the Italian maestro, meaning "master" or "teacher"[1]) is a title of extreme respect given to a master musician. The term is most commonly used in the context of Western classical music and opera. This is associated with the ubiquitous use of Italian vocabulary for classical music terms. The title of maestro may be bestowed upon composers, performers, impresarios, music directors, conductors and music teachers.

In the Italian opera world, the term is not only used for the conductor, but also for musicians who act as répétiteurs and assistant conductors during performances (maestro sostituto or maestro collaboratore). Even the prompter (maestro suggeritore) can be referred to by this title. (There is no agreement on how to address a woman conductor, as the feminine equivalent maestra denotes "schoolmistress" in Italian.)

There are similar concepts in many other cultures of the world; for example, a traditional term of respect for a master of Persian traditional music is the Persian word ostâd.


Music maestro AR Rahman turns 46 today

BBC
News - Ravi Shankar, Indian sitar maestro, dies


Maid accuses violin maestro Subramaniam of sexual harassment ..

When Mumbai children played for Maestro Zubin Mehta | NDTV.com

Maestro.... maestro.... maestro...!

Silly boys.

Amudhavan said...

அனானிமஸ், இளையராஜா சிம்பனி அமைத்தாரா இல்லையா, அது வெளிவந்ததா இல்லையா, அப்படி வெளிவரவில்லையெனில் சிம்பனி அமைத்ததைக் குறிக்கும் விதமாக அவர் ஏன் அழைக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார், போற்றப்படுகிறார் என்பதுதான் கேள்வி. உடனே மேஸ்ட்ரோ என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா என்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி, அரிசுவானா டிக்ஷனரி, விக்கிபீடியா தகவல் விக்காத மீடியா தகவல் என்று அங்கங்கே அலசி ஆராய்ந்து என்னென்ன அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் சேகரித்து வந்து கொட்டுவதெல்லாம் தேவையற்றது மட்டுமில்லை. இதைச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்துவந்த கூட்டம் இப்போது இதனை எப்படியாவது காப்பாற்றிக்கொள்வதற்கு என்ன பாடு படுகிறது என்பதையும் காட்டுவதாகத்தான் அர்த்தம்.
உண்மையில் இந்த மெக்சிகன் டிக்ஷனரி, மெக்கானிச டிக்ஷனரி எல்லாம் பார்த்தா பட்டம் போட்டார்கள்? பொதுப்புத்தியில் மேஸ்ட்ரோ என்பதை சிம்பனி அமைத்தவர் என்பதைக் குறிப்பிடும் விதமாகத்தான் அப்படிப் போட்டுக்கொண்டார்கள். இப்போது எப்படிடா ராஜாவைக் காப்பாற்றுவது என்று படுத்துப் புரள்கிறார்கள்.
யாராவது ஒருத்தனை ஒரு கெட்டவார்த்தை சொல்லி திட்டிவிடவேண்டியது. அப்படி ஏண்டா சொன்னாய் என்று கேட்டால் அந்த வார்த்தைக்கு என்னென்ன அர்த்தம் இருக்கிறது தெரியுமா என்று டிக்ஷனரியில் இருக்கும் எல்லா வார்த்தைகளையும் (நிச்சயம் ஒரு வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கும்தான்) தோண்டிக்கொண்டுவந்து கொட்டவேண்டியது. இதைத்தான் நிறையப்பேர் இணையத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். அதையே இங்கேயும் செய்து ஒப்பேற்றப் பார்க்காதீர்கள்.
கேள்வி ரொம்பவும் சுலபமானது........'சிம்பனி வந்ததா இல்லையா?' அவ்வளவுதான்.

வவ்வால் said...

சிவந்த கை அனானி சிவா,

"கைக்கு" அதிகம் "வேலை"கொடுத்தாலும் கை சிவந்துடும் "கையை" அதிகம் பயன்ப்படுத்தாதிங்க ‍:‍‍ ‍))

ஐ மீன் ஜால்ரா அடிக்க அதிகம் பயன்ப்படுத்தாதிங்க சொன்னேன் அவ்வ்!

//"அப்போவாச்சும் சிம்பனி போட்டிருந்தாரா?"
தான் போட்டதாகத்தான் அவரு சொல்லுறார். என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும் ...........
ஆனா ஒரு சிம்பனி கொண்டக்டர் அவரு போட்டதாக சாட்சி சொல்லுறாரு.
எது எப்படி இருந்தாலும் எப்போவாது உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கின்றோம்.//

இதத்தானே ராசாமணிகளா நாங்களும் கேட்டோம், தம் கட்டி கட்டபொம்மன் போல வீரவசனம் பேசிட்டு நாங்க சொன்னதையே சொன்னா எப்பூடி?

பதிவ ஒரு முறை நிதானமா படியும் இக்கேள்வி தான் எழுப்பப்பட்டுள்ளது!

# ஜங் என்றால் குப்பை அப்படி போட்டுக்கொண்டு யாரையோ கலாய்க்கிறாங்க,அதப்பத்தி மேஸ்ட்ரோ எனப்போட்டுக்கிறவங்க தான் கவலைப்படனும் அவ்வ்

______________________________

அனானி,

நீர் என்ன பரம்பரையா அகரமுதலி அச்சடிச்ச பரம்பரையா அவ்வ்!

இந்த எடிமலாஜி யாவாரம் எல்லாம் வேற எடத்துல வச்சிக்கலாம், நம்மக்கிட்டே வந்து யாவாரம் பேசினா செய்கூலி இல்லாமல் சேதாரமாகிடும் :‍‍‍ ‍‍‍–))

தலைமை கொத்தனாரை "மேஸ்திரி" என்பார்கள் அது போர்த்துக்கீசிய மொழியில் "mestere" என்பதில் இருந்து வந்தது, அதன் பொருளூம் "மாஸ்டர்" தான் , எனவே இனிமே "மேஸ்திரி" இளையராசா எனவும் அழைத்துக்கொள்ளூங்களேன் :‍‍–))

http://www.portuguesedictionary.net/pt-en/Mestre.html

அதே அனானி said...

//கேள்வி ரொம்பவும் சுலபமானது........'சிம்பனி வந்ததா இல்லையா?' அவ்வளவுதான்.//

இதுவரை இல்லை. போதுமா?

Amudhavan said...

அதே அனானி said...
//கேள்வி ரொம்பவும் சுலபமானது........'சிம்பனி வந்ததா இல்லையா?' அவ்வளவுதான்.//

\\இதுவரை இல்லை. போதுமா? \\

'அதே அனானி,' நீங்கள் என்ன அர்த்தத்தில் இந்த பதிலை இங்கே போட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஏதோ கோபத்துடனோ வீராப்புடனோ போட்டிருந்தீர்களானால் 'அந்த பதில்' தெரியாமல்தான் பதிவு எழுதப்பட்டிருப்பதாகவும், அதைச் சார்ந்து பதில் சொல்லும் இரண்டு மூன்று நண்பர்களும் பதில் தெரிந்துகொள்ளத்தான் பேசிக்கொண்டிருப்பதாகவும் நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் அர்த்தம் ஆகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

சார்லஸ் said...

அமுதவன் சார் .. வவ்வால் சார்

மேஸ்ட்ரோ என்ற பட்டம் யார் கொடுத்தார் என்பது பெரிய ஆராய்ச்சியில்லை . அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவரா இல்லையா என்பதை சொல்லுங்கள் . விக்கிப் பீடியாவிற்க்குள் நுழைந்து திருத்தி எழுதுங்கள் . அல்லது எந்த இசைக் கலைஞனாவது அவர் அந்த பட்டத்திற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்லிருப்பதைச் சுட்டிக் காட்டுங்கள் .

The word symphony is derived from Greek συμφωνία (symphonia), meaning "agreement or concord of sound", "concert of vocal or instrumental music", from σύμφωνος (symphōnos), "harmonious

மேற்கண்ட விளக்கப்படி பார்த்தால் திருவாசகம் ஒரு சிம்போனி அமைப்பே! ஹிந்து நாளிதழுக்கு எழுதி கேட்டு உங்கள் மறுப்பை சொல்லுங்கள் . அவர்கள் தெரியாத்தனமாக எழுதி இருக்கலாம். அல்லது மண்டபத்தில் யாராவது சொன்னதைக் கேட்டு எழுதி இருக்கலாம் .

வவ்வால் said...

சார்லஸ்!

//மேற்கண்ட விளக்கப்படி பார்த்தால் திருவாசகம் ஒரு சிம்போனி அமைப்பே! ஹிந்து நாளிதழுக்கு எழுதி கேட்டு உங்கள் மறுப்பை சொல்லுங்கள் . அவர்கள் தெரியாத்தனமாக எழுதி இருக்கலாம். அல்லது மண்டபத்தில் யாராவது சொன்னதைக் கேட்டு எழுதி இருக்கலாம் .//

மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா அவ்வ்வ்!

வேணாம்,விட்ருங்க ... முடியல.... வலிக்குது... அழுதுடுவேன் ... அவ்வ்!

பாட்டுப்பாடின இசைக்கோர்வையை சிம்பனினு இப்போ ராசாவேக்கூட சொல்லிக்க மாட்டார்,ஆனாலும் சளைக்காம நீங்க வந்து மீண்டும் சொல்லுறிங்களே ,எங்க மேல இரக்கமேயில்லையா... மி பாவம் கண்ணக்கட்டுது அவ்வ்!

காரிகன் said...

சிம்பனிக்கு இவ்வவளவு சிம்பிளாக விளக்கம் சொன்ன ஒரே ஆள் நம்ம சார்லஸ் தான்.

ஜோதிஜி said...

டெஸ்ட்

ஜோதிஜி said...

மின் அஞ்சல் மூலமாக பதிவுகளை பெறும் வசதியை தயை செய்து உருவாக்குங்களேன்.

ஜோதிஜி said...

//கேள்வி ரொம்பவும் சுலபமானது........'சிம்பனி வந்ததா இல்லையா?' அவ்வளவுதான்.//

\\இதுவரை இல்லை. போதுமா? \\

உள்ளே வந்து மேலும் கீழும் பின்னூட்டங்களுடன் ரெண்டு முறை படித்து முடித்து மண்டை காய்ந்த போது கடைசியில் மேலே உள்ள பதில் தான் என்னைக் காப்பாற்றியது.

அதே அனானி said...

//ஏதோ கோபத்துடனோ வீராப்புடனோ போட்டிருந்தீர்களானால் 'அந்த பதில்' தெரியாமல்தான் பதிவு எழுதப்பட்டிருப்பதாகவும், அதைச் சார்ந்து பதில் சொல்லும் இரண்டு மூன்று நண்பர்களும் பதில் தெரிந்துகொள்ளத்தான் பேசிக்கொண்டிருப்பதாகவும் நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் அர்த்தம் ஆகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.//

இடுகையை தொடக்கத்திலிருந்தே கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அடுத்தவரின் உணர்வை மாயக்கண்ணாடி வழியே அறிந்துகொள்ளும் மந்திரவாதியை எண்ணி பரிதாபப்படுவதைத் தவிர எனக்கும் வேறு வழியில்லை.

நன்றி.

வவ்வால் said...

அனானி,

//அடுத்தவரின் உணர்வை மாயக்கண்ணாடி வழியே அறிந்துகொள்ளும் மந்திரவாதியை எண்ணி பரிதாபப்படுவதைத் தவிர எனக்கும் வேறு வழியில்லை.//

நீர் ஏன் உம்மை நினைச்சே பரிதாபப்பட்டுக்கிறீர்/

தன்னை இனைச்சே சுய பச்சாதபம்/பரிதாபப்படுவதை கழிவிரக்கம் என்பார்கள், எனவே ரொம்ப கழியாம போய்ப்படும் :-))

Unknown said...

இனி யாரும் இல்லாத ஊருக்கு வழி கேட்டு போக மாட்டார்கள் !
பொன்னான நேரத்தை (வீணாக்கி ) செலவு செய்து மாய உலகில் இருந்து யதார்தத்தை நோக்கி பலரை திசை திருப்பும் உன்னத பதிவு ...........

இசை கடவுள் மறைவாக இருக்கலாம் , இப்படி (உண்மையை ) மறைத்து இருக்க கூடாது !

Amudhavan said...

riyaz ahamed said...
\\இசை கடவுள் மறைவாக இருக்கலாம் , இப்படி (உண்மையை ) மறைத்து இருக்க கூடாது !\\
ரியாஸ், 'இனி யாரும் இல்லாத ஊருக்கு வழி கேட்டுப் போகமாட்டார்கள்' - என்ற உங்கள் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை.
நீங்கள் யாரை 'இசைக்கடவுள்' என்று இங்கே விளித்திருக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி யாரும் இல்லை.

ஜோதிஜி said...

இந்த தகவல் பத்திரிக்கை உலகத்தில் உள்ள ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்தது. இளையராஜா உச்சத்தில் இருந்த போது அவர் நடந்து வரும் போது அவர் அனுமதி இல்லாமல் அவரை புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது பொது விதி. ஆனால் தெரியாத ஒரு நண்பர் படம் எடுக்க அவரை படாதபாடு படுத்தி விட்டார்கள். இது போல பல செய்திகள் உண்டு.

மேலே உள்ள நண்பர் சொன்னது போல அவரை இசைக்கடவுள் சென்று சொல்லி அவரை நம்ப வைத்து அவரும் நம்பி சம்பாரித்த காசை கோவில் கோவிலாக வாரி இறைத்தது தான் மிச்சம். நிறைய எழுதலாம். ஒரு திறமைசாலியை அநாவசியமாக தனிப்பட்டவிசயங்களை வைத்து எழுதினால் காழ்புணர்ச்சியோடு வன்மமாக பார்க்கின்றேன் என்று சொல்லக்கூடும் என்பதற்காக இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டு வருகின்றேன்.

இந்த பதிவில் உண்மையான என் விமர்சனத்தை எழுததாதற்கும் இதுவே காரணம்.

லைம் லைட் என்ற வெளிச்சம் எப்போதும் நம் மேல் படாமல் இருப்பதும், படக்கூடிய சூழ்நிலை உருவானாலும் விலகி இருக்கக் கற்றுக் கொள்வதிலும், பிரபல்யங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு நாம் வாழும் காலத்தில் முன் உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என் மரியாதையில் எப்போதும் இருக்கும் திரு. சிவக்குமார் அவர்கள்.

அவரிடமிருந்து இருந்து தான் இன்றைய இளையர்கள் மட்டுமல்ல நாளை தலைமுறையும் அவர் வாழும் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முடியும்.

Amudhavan said...

வாங்க ஜோதிஜி, உங்கள் வருகை ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரே நேரத்தில் நிறையப் பதிவுகளுக்கான பின்னூட்டங்களைப் போட்டிருக்கிறீர்கள். எல்லாமே சிறப்பானவையாக இருக்கின்றன. மிக்க நன்றி.
இளையராஜா பற்றிய நீங்கள் சொன்னதுபோன்ற தகவல்கள் நிறைய இருக்கின்றன. நாமென்ன அவருக்கெதிரான கட்சியா நடத்துகிறோம். எல்லாவற்றையும் சொல்லி அவரைக் குறைவு செய்துகொண்டே இருக்க?
விஷயம் என்னவென்றால் இணையத்தில் யாரையுமே விட்டுவைப்பதில்லை. 'இங்கே யாரும் பிரபலமில்லை; பெரியவனுமில்லை. யாராயிருந்தாலும் கிழித்துக் குப்பையில் போட்டுவிடுவோம்' என்ற மனப்போக்கில்தான் நிறையப்பேரை ஒன்றுமேயில்லாமல் செய்கின்ற போக்கில் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். 'ஆனால் ஒரேயொருவருக்கு மட்டும் அல்லது இரண்டொருவருக்கு மட்டுமே விதிவிலக்கு' - என்ற கான்செப்ட் எனக்குப் புரியவே இல்லை. தவிர, இல்லாத பெருமைகளையும், இல்லாத புகழையும் சொல்லி அழகு பார்ப்பதும், எங்கள் வாழ்க்கையையே வசந்தமாக்கிவிட்டாய், நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த இசையுலகம் என்னவாகியிருந்திருக்கும் வெறுமையாக அல்லவா போயிருக்கும் என்ற சிலாகிப்பையும் சிலிர்ப்பையும் கண்டு அருவெறுத்துப்போய்த்தான் சிலவற்றை எழுத ஆரம்பித்தேன்.
திரு சிவகுமார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவருடைய புதிய பேச்சைப்பற்றிய பதிவொன்றை அடுத்து எழுதவிருக்கிறேன்.

Amudhavan said...

வவ்வால் கடி ரொம்பவும் விஷம் வாய்ந்ததோ? சுஜாதா ஏதோவொரு கதையில் இப்படியொரு கருத்தை வைத்து எழுதியிருந்ததாக ஞாபகம். இங்கே வந்து உங்களிடம் கடி வாங்குபவர்களின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. பின்னூட்டங்களில் உங்களிடம் 'மோதி' ஜெயித்தவர்கள் தொகை மிகமிக சொற்பமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//வவ்வால் கடி ரொம்பவும் விஷம் வாய்ந்ததோ? சுஜாதா ஏதோவொரு கதையில் இப்படியொரு கருத்தை வைத்து எழுதியிருந்ததாக ஞாபகம். இங்கே வந்து உங்களிடம் கடி வாங்குபவர்களின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. //

அப்படிலாம் சொல்லாதிங்க நான் ரொம்ப பரமசாது...யாராவது அச்சுனு தும்மினாக்கூட அஞ்சு மைல் ஓடிருவேன் ,பின்ன பறவைக்காய்ச்சலா இருந்துட்டா என்னாகுறது :-))

நாம யாருகூடவும் மொதுறதுலாம் இல்லிங்க,வெந்ததை தின்று கண்டதை பின்னூட்டம் போடும் வானமே கூடாய் திரியும் இணைய நாடோடிப்பறவை!

ராசாமணிகள் "சிம்பனினு" பாடிக்கிட்டு இருக்காங்களேனு ஒரு கம்பெனிக்கு பின்னூட்டம் போட்டேன் ,மற்றபடி நான் ரொம்ப பயந்த சுபாவம் அவ்வ்!

ஜோதிஜி said...

உங்களிடம் கடி வாங்குபவர்களின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது

தெளிவான கருத்தை அழகான முறையில் எடுத்துச் சொன்ன உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

ஜோதிஜி said...

நான் ரொம்ப பயந்த சுபாவம்

அடுத்த பதிவுக்கு தலைப்பாக எடுத்துக் கொள்ளட்டுமா வவ்வுஜி

Amudhavan said...

ஜோதிஜி வவ்வால் பற்றி ஏதோ ஒரு தீர்மானத்தோடத்தான் இருக்காரு போல.

sekar said...

இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும் விற்கப்பட்டுப் பாதுகாப்பாக பெட்டகத்தில் உள்ளது. மற்றவர்களுக்குக் கிடைக்காது

Amudhavan said...

அடாடா இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? வாங்க சேகர், தங்கள் வருகைக்கு நன்றி.

sekar said...

வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் அல்ல இளையராஜாவும் அப்படியே! அவருடைய காலத்தில் பல வெற்றிப்பட இயக்குனர்கள் அவர் கட்டுப்பாட்டில் வைத்துச் சூழ்ச்சியில் வென்றவர். வேறு இசை அமைப்பாளர்கள் வெற்றிப் பெற வாய்ப்பே இல்லாமல் செய்தவர் .
எதுவும் இல்லாவிட்டால் பழைய சோறு கூட இனிமையாகத்தான் தெரியும். அதையே உண்டு பழகிய உடல் புதிய சத்தான உணவைக் கூட ஏற்றுக்கொள்ளாது. இது இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பொருந்தும்

அதுமட்டும் இல்லை அவருடைய அனேக வெற்றிப் பாடல்கள் கங்கைஅமரனுடையது தான் ஆனால் எந்த மதிப்பையும் தன் சொந்தத் தம்பிக்கே கொடுக்காதவர் தான் இளையராஜா

sekar said...

இளையராஜாவின் போலி முகத்திரையைக் கிழித்து உண்மையை உலகிற்குக் காண்பிப்பதே உங்கள் எழுத்தின் சாராம்சம் அதுவே என் கடமையும்

Bruno said...

:)

Amudhavan said...

திரு சேகர் அவர்களே சில உண்மைகளைச் சொல்லும்போது ரொம்பப்பேருக்குக் கசக்கிறது. அதற்காக உண்மைகளைச் சொல்லாமல் இருந்துவிட முடியாது. தவிர இந்த இணைய உலகில் ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதால் அது உண்மைபோல தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. வரலாறுகள் பொய்யாகப் புனையப்படக்கூடாது என்பதற்காகத்தான் சிலவற்றை எழுதுகின்றோம்.
இந்த இணைய உலகில் குழு சேர்ந்துகொண்டு சிலவற்றைப் பொய்யாகப் பரப்புகிறார்கள். அதனை ஆதரிக்க நிறையப்பேர் இருக்கிறார்கள். மறுத்து எழுதுபவர்கள் ஒரு சிலர்தான்.....ஒரு ஐந்தாறுபேர்தான் இருக்கிறோம். (இதுபற்றியெல்லாம் கவலையே படாமல் மற்றவர்களை விரும்புபவர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நிறைய தனிப்பட்ட சேனல்களே சொல்லுகின்றன.முரசு, சன் லைஃப், ஜெயாமேக்ஸ் என்று நிறைய)
உங்களைப் போன்றவர்கள் துணிச்சலாக கருத்துச் சொல்ல ஆரம்பித்திருப்பது வரவேற்புக்குரிய ஒன்று. தொடர்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், வாழ்த்துக்கள்.

Amudhavan said...

டாக்டர் புருனோ அவர்களும் சிம்பனியைப் பற்றிய உண்மைகளை நீண்ட நாட்களாகவே சொல்லிவருகிறவர், அவரது மீள் வருகைக்கும் நன்றி.

Vaasi engira Sivakumar said...

http://webhome.idirect.com/~rlevy/current_question.html

Vaasi engira Sivakumar said...

http://webhome.idirect.com/~rlevy/current_question.html

Vaasi engira Sivakumar said...

http://webhome.idirect.com/~rlevy/current_question.html

Vaasi engira Sivakumar said...

கடவுள் என்கிற பிரபாகர் டைரக்ட் செய்த நாத்திக படம் ..சதயராஜ் மற்றோர் நடித்தது...பாரதி பட உயக்புனருடன் வேறு பிரச்சினை இதனால் பெரியார் இல்லை...please don't hit

Vaasi engira Sivakumar said...

Please search in google..top 25 composers...rolling picture will come...move it and see

Vaasi engira Sivakumar said...

http://webhome.idirect.com/~rlevy/current_question.html

Post a Comment