Thursday, April 21, 2016

திருமாவுக்கு ஒரு கேள்வி



திருமாவளவன் ஆர்.கே.நகர் தொகுதியைக் கேட்டுப்பெற்று அங்கே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு வசந்தி தேவியை வேட்பாளராகப் போட்டிருக்கிறார். ஆர்.கே.நகர் என்பது சென்ற டிசம்பரில் செம்பரம்பாக்கம் வெள்ளம் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தபோது அதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பகுதி.

என்னதான் ஊடகங்களும் குறிப்பாக டிவி சேனல்களும் அதன் அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் உலகின் நிகரற்ற சிந்தனைச் சிற்பிகளும், அந்த சிந்தனைச் சிற்பிகளுக்குத் தலைமைத் தாங்கும் நெறியாளர் என்ற பெயரில் உலவும் வெறியாளர்களும், ‘ ‘வெள்ளத்தையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்க; அதிலும் குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் கோக்கு மாக்கு நிறுவனங்கள் எல்லாமே பாராட்டு தெரிவித்திருக்கின்றன. அகில உலகமே பாராட்டுகிறது; அதிலும் குறிப்பாக அத்தனைப் பெரிய வெள்ளத்துக்குப் பிறகு எந்த விதமான தொற்றுநோயும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதில் இந்த அரசின் மெச்சத்தகுந்த பணிகள் பாராட்டப்பட்டிருக்கின்றன’ என்று பலவாறாகவும் ஏதோ வெள்ளம் வந்தது இந்தப் பகுதி மக்கள் எல்லாரும் செய்த பூர்வ ஜென்ம பலன் என்பது போலவும் வெள்ளம் வராத பகுதிகளிலில் இருந்தவர்கள் எல்லாரும் வாழத்தகுதியே இல்லாத கழிசடைகள் என்பதுபோலவும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வளவு எளிதாக அந்த சோகத்தைக் கடந்து செல்கிறவர்களாக இல்லை.

ஒரு வாழ்நாளில் தாங்கள் பார்க்கவிரும்பாத சோகத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்கள். இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எவ்வளவு மோசமான மனிதகுலத்திற்கும் இவ்வளவு கோரமான, கொடுமையான, சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உளப்பூர்வமாக வேண்டிக்கொள்பவர்கள் அவர்கள். தங்களின் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அவர்கள். அவர்களின் நிம்மதி, வாழ்வுக்கான ஆதாரம், வாழ்வின் மகிழ்ச்சி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட அந்த நிகழ்வு தங்கள் வாழ்நாளில் ஏற்பட்டுவிட்ட ஒரு கொடுங்கனவு நினைத்து மறுகுகிறவர்கள் அவர்கள். 

அது, அந்த சோகம் ஒரு வாழ்நாள் அல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்கமுடியாத ஒரு சோகம் அது.

‘அந்த சோகம் ஒன்றுமே இல்லை. அது சாதாரணம்தான்’ என்று அந்த சோகத்தை ஒன்றுமில்லாததாக்கி, ‘நிவாரணப் பணிகளும் தொற்றுநோயும் ஏற்படாமல் காத்ததுதான் மிகப்பெரிய சாதனை – புண்ணியம்’ என்பதுபோல் பேசித்திரியும் மகாக் கனவான்கள் இந்த ஜென்மத்திலேயே எத்தனைப் பெரிய பாவங்களுக்கு அடிமையாகி எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளைச் சந்திக்க இருக்கிறார்கள் என்பது அறம் சார்ந்த ஒரு விஷயம். ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் சொல்வது இவர்களுக்காகத்தான்.

இது ஒருபுறமிருக்க அந்த ஆர்.கே. நகரில் செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்குக் காரணமான ஜெயலலிதா தேர்தலில் நிற்கிறார். அவருக்கு எதிரான ஒரு வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் என்ற ஒரு வழக்கறிஞரை திமுக நிறுத்தியிருக்கிறது.

ஒரு பிரபலமான வேட்பாளரை இன்னொரு பிரபலமான வேட்பாளர்தான் வெற்றிபெற முடியும் என்பது நம் தேர்தல்களில் தேவையற்றது. இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக போற்றப்படவேண்டிய காமராஜரை பெ.சீனிவாசன் என்ற சாதாரண ஒரு இளைஞர்தான் 
தோற்கடித்தார். அண்ணாவை வென்ற பரிசுத்த நாடார் என்பவரை யாருக்கும் தெரியாது. 
ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்த சுகவனம் யார் என்றே தெரியாத ஒரு வேட்பாளர்தான். உலகப் பெரு நடிகர்களில் ஒருவராக இருந்த சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத் தெரியாது. 

அப்படியிருக்க ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க யாரோ ஒரு வேட்பாளர் போதும்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் கடைவிரித்திருக்கும் விஜயகாந்த் தலைமையை ஏற்ற தொண்டர்களான விடுதலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொகுதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ‘பதியம்’ போடுகிறார்கள். ‘டெல்லியின் கேஜ்ரிவால் ஷீலா தீக்ஷித்தைத் தோற்கடித்ததுபோல் இங்கேயும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க ‘பிரபலமான’ ஒருவர் வேண்டாமா?’ என்கிறார்கள். 

சரி திருமாவளவன்தான் இங்கே போட்டியிடப்போகிறார் என்கிற சம்சயத்தை இரண்டு நாட்களுக்கு ஏற்படுத்துகின்ற யுக்தியாகத்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு இருக்கிறது. 

இதோ, இன்றைக்கு வசந்திதேவிதான் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வசந்திதேவி முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர். பெரிய கல்வியாளர். நல்ல பண்புகளும் திறமைகளும் கொண்டவர். மகளிர் ஆணையத் தலைவியாகவும் பதவி வகித்தவர். பல்வேறு தலைப்புகளில் காலச்சுவடு இதழில் பல நல்ல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தவர். ஜெயலலிதாவை எதிர்க்க மிகச்சிறந்த வேட்பாளர்.

எனக்கு ஒரேயொரு சந்தேகம்தான் தோன்றுகிறது.

ஜெயலலிதாவை ‘எதிர்க்க’ சிம்லாவே போதும் என்கிறபோது எதற்காக வசந்திதேவி? வசந்திதேவி எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை என்பது சிறுகுழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் வசந்தி தேவியைக் களமிறக்குவதன்மூலம் படித்த மக்களிடையே, ஓரளவு விஷயம் தெரிந்த மக்களிடையே சிம்லாவுக்குப் போகக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முயல்வதுதான் வசந்திதேவியைக் களமிறக்கியிருப்பதன் ‘சூட்சுமம்’.

விடுதலைச் சிறுத்தைகள் வேறொரு வேட்பாளரைப் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய ஓட்டுக்களைவிடவும் ஐந்தாயிரம் ஆறாயிரம் ஓட்டுக்களை வசந்திதேவி நிச்சயம் அதிகம் பெறுவார். 

அந்த ‘அதிகபட்ச ஓட்டுக்கள்’ சிம்லாவுக்குப் போகாமல் இருப்பதற்கான யுக்திதான் இது.

ஆக ஜெயலலிதாவின் வெற்றியை எப்படியாவது ‘உறுதி செய்வது’ என்பதுதான் வசந்திதேவியைப் போட்டியிட வைப்பதன் ‘ரகசியம்’. 

அப்படியெல்லாம் இல்லை. திருமாவின் ராஜதந்திரம் இது. அவருடைய மிகச்சிறந்த அரசியல் சாதுர்யம், யுக்தி என்றெல்லாம் பேசப்படுமேயானால் - திருமா அவர்களுக்கு ஒரு கேள்வி. 

ஜெயலலிதாவை வெற்றிகொள்ள மிகச்சிறந்த வேட்பாளர் இவர்தான். இவர் சாதாரணமானவர் இல்லை. மிகத்தேர்ந்த கல்வியாளர். திறமைகள் அதிகம் வாய்க்கப்பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் என்று திருமா சொல்வாரேயானால் அவரிடம் இந்தக் கேள்வி.

எனக்குத் திருமாவளவனைத் தெரியும். அவரது பகுத்தறிவு தெரியும். அரசியல் அறிவு தெரியும். இன்றைக்கு இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களிலும் –கலைஞரை விட்டுவிட்டுப் பார்த்தோமானால் - திருமா அளவுக்கு அரசியல் அறிவும் தெளிவும் ஆற்றலும் பெற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. 

ஆகவே அவரிடம் இந்தக் கேள்வி-

எல்லாத் தகுதிகளும் திறமைகளும் பெற்ற வசந்திதேவியை வெறும் ஒற்றைத் தொகுதியில் வெற்றிபெற வைப்பதுமட்டும்தான் உங்கள் குறிக்கோளா?

அந்தம்மாவின் திறைமையை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?

ஆகவே இப்போதே ஒன்று செய்யுங்கள்.


எப்படியும் உங்கள் 'முதல்வர்' வேட்பாளர்மீது படித்தவர்களுக்கும் விவரம் அறிந்தவர்களுக்கும் நல்ல அபிப்ராயமில்லை. 

அவரும் பத்திரிகைக்காரர்களைக் கேவலமாகப் பேசுவதும் அவர்களிடம் நாக்கைத் துருத்திக்கொண்டு பாய்வதும் பொது இடங்களில் அருகில் இருப்பவர்களை கைநீட்டி அடிப்பதுமாக இருக்கிறார். 

ஆகவே அவரை மாற்றிவிட்டு நீங்கள் சொல்லியுள்ளபடி “அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற கல்வியாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவியை’ தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று சொல்லி அறிவியுங்கள். 

இதனைச் செய்வீர்களா திருமா? 

உங்கள் அரசியல் யுக்திக்கு அப்போது படித்தவர்கள் மத்தியில் எத்தனை ஆதரவு பெருகுகிறது என்பதை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள். 

அப்படியில்லாவிட்டால் இது ஜெயலலிதாவின் பி டீம் செய்கின்ற சில்லுண்டித் தனங்களில் ஒன்றாகப் போகக்கூடிய ஆபத்துதான் அதிகம்.

29 comments :

Peppin said...

"சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத் தெரியாது"

அந்த இரண்டு பேரில் நானும் ஒருவன் :)

துரை சந்திரசேகர், இப்பொழுதும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்!


Arul Jeeva said...

திருமாவளவனுக்கான சரியான கேள்வி .மக்கள் நலக்கூட்டணியாயினும் ,மற்ற கட்சிகளாயினும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதையே கொள்கையாக கொண்டுள்ளன .அதிமுக வை எதிர்ப்பதாக வேடமிட்டு திமுக வின் வளர்ச்சியைத் தடுப்பதே தங்கள் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் .அரசியல்வாதிகள் தான் ஆதாரத்திற்காக செயல்படுகிறார்களென்றால்சாமானியர்களின் நிலையும் இதுவே என்கிறபோது தமிழகத்தின் நிலைகுறித்து ஐயமுறத்தான்வேண்டியிருக்கிறது.

சார்லஸ் said...

பணம் பாதாளம் வரை பாயும். பாய்ந்திருக்கிறது என்பது புரிகிறது. தங்கள் கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்பதை விட தி மு க தோற்க வேண்டும் என்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்படுகின்றன . அது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தி மு க வோடு சேர்ந்து பயணடைந்தவர்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூடா நட்பு என்றவர்கள் கூடினார்கள். உயிர் பிரிந்திடினும் தலைவனைப் பிரியோம் என்றவர்கள் பிரிந்தார்கள். நிற்கக் கூட முடியாதவர் என இகழ்ந்தவரை முதல்வர் வேட்பாளர் என ஏற்று கொண்டார்கள். அரசியலைப் பார்த்து வியப்பு ஏற்படுவதை விட நகைப்புதான் உண்டாகிறது. இதில் திருமாவளவனை மட்டும் ஏன் நோக வேண்டும்?
பி அணிக்கு பலம் சேர்க்கும் முயற்சியில் தன் தந்திரத்தைப் பயன்படுத்துகிறார். காலம் நகைப்பதைக் காண காத்திருப்போம்.

நம்பள்கி said...

கூடா நட்பு! திருமா கூட்டணி தலைவரை சொன்னேன்!
கூட்டி கழித்து பார்த்தல்...காசே தான் கடவுளடா!

நம்பள்கி said...

காசே தான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா! அதான், கடவுளே காசாலே அடிக்கிறார்கள்!

நம்பள்கி said...

[ரம்மி]சீட்டு ஆட்டத்தில் உள் கையை கண்டுபிடிப்பது கடினம்! ஆனால், அதையும் கண்டுபிடிக்க வழி இருக்கு!

வசந்திதேவி உள் கையா?
திருமா கட்சியில் சீட்டு வாங்கிந கையோடு, வசந்தி தேவி,"நான் பொது வேட்பாளர்! திருமா கட்சி வேட்பாளர் இல்லை" என்று அவசர அவசரமாக கூற காரணம் என்ன?

அந்த கூட்டணியில் உள்ள ஆதிக்க ஜாதி மக்கள் ஓட்டுக்களே திருமா கட்சிக்கு விழாது! அதனால், ஆதிக்க ஜாதி மக்கள் நடுநிலைமை ஓட்டுகளை பிரிக்க..வசந்தி தேவியின் அந்த அறிவிப்பு...."நான் பொது வேட்பாளர்! திருமா கட்சி வேட்பாளர் இல்லை!"


நம்பள்கி said...

வலையுலகில் படித்த நல்ல சிந்தனையாளரே திமுக அபிமானியே வசந்தி தேவிக்கு வோட்டு போடணும் என்கிறார்.அப்ப மீதி நடு நிலமையாலர்கள் வோட்டுக்கள் கதி?! நடுநிலைமை என்ற பெயரில் anti-incumbency வோட்டுக்கள் வசந்தி தேவிக்கு போட்டு வீணடிக்கப்படும்! வீணடிக்கப்பட வேண்டும் என்று தானே நிற்கிறார்கள்!

அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும்! அப்புறம் ஏன் நிற்கணும்? எல்லாம் உள் கை தான்--இது வைகோ வேலையில்லை; திருமாவும் ஒரு கருவி தான்--அப்ப இது? நேராக direct dealing தான்!!

மானுடன் said...

அண்ணாவை தோற்கடித்தவர் பெயர் பரிசுத்த நாடார் இல்லை.அவர் கலைஞரால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட பெரும் பணக்காரர் மற்றும் தஞ்சை நகர்மன்ற தலைவர்.அதாவது அன்றைய தேதியில் கலைஞர் ஒரு சாமானிய வேட்பாளர் ஆனால் பரிசுத்த நாடார் ஒரு ‘பெரிய’ஆள்.”பரிசுத்த நாடாரையே வெற்றி கொண்ட கருணாநிதி” என்பது கலைஞரின் ஆரம்பகால வெற்றி வரலாறு.

நம்பள்கி said...

நண்பர் இப்ப ஓப்பனா அதிமுகவை சப்போர்ட் செய்கிறாமதிரி பச்சையப்பானாக மாறிவிட்டார்! இனி எப்போதும் பச்சையப்பன் தானாம்! என்னா நடிப்பப்பா! சிவாஜியே இவரைப் பார்த்து பொறமை பட்டு இருப்பார்!

ஐயாவும் அழகருடன் பச்சையுடையுடன் ஆற்றில் இறங்கலாமே! அப்படியே ஆத்திகர்கள் ஓட்டுக்களையும் அமுக்கலாமே!

நம்பள்கி said...

June 30, 2015-RK nagar இடைத் தேர்தல்!
Party No. of votes
AIADMK 1.51 lakh; JJ
CPI 9710 ; Mahendarn
-----------------------
இடைத் தேர்தலில்....திமுக ஜெயலலிதாவிற்கு ஒட்டு போட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியே இருந்தாலும், இந்த தேர்தலில் அவர்கள் ஒட்டு திமுகவிற்கு தான்! ஓகேவா!

தேமுதிக இடைத்தேர்தல் அப்ப அம்மா கூட சண்டை அப்படியும் அவர்கள் ஜெயலலிதாவிற்கு தான் ஒட்டு போட்டங்களா? சொல்லுங்க? பின்னே எப்படி இவ்வளவு வோட்டு! தேமுதிக செத்த கட்சி!

CPM, VCK எல்லாம் ஜெயலலிதாவிற்கு தான் ஒட்டு போட்டங்களா?

வரும் தேர்தலில் வசந்தியம்மா எவ்வளவு ஒட்டு வாங்குவாங்க? 10, 000 வோட்டுக்கள்? அதிக பட்சம் 25, 000 வோட்டுக்கள். அதில் அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் 10, 000 உண்டு! அவைகள் திமுகவிற்கு போயிருக்கலாம். இவர்கள் தான் பெரிய கல்வியாளர் ஆச்சே! எப்படியும் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை...!

அப்புறம் நின்னா என்ன உக்காந்தா என்ன?

வெற்றி ஜெயலலிதாவிற்கே!

Amudhavan said...

Peppin said...

\\"சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத் தெரியாது" அந்த இரண்டு பேரில் நானும் ஒருவன் :) துரை சந்திரசேகர், இப்பொழுதும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்!\\

வாங்க பெப்பின், அவரது பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

Amudhavan said...

Arul Jeeva said...

\\மக்கள் நலக்கூட்டணியாயினும் ,மற்ற கட்சிகளாயினும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதையே கொள்கையாக கொண்டுள்ளன .அதிமுக வை எதிர்ப்பதாக வேடமிட்டு திமுக வின் வளர்ச்சியைத் தடுப்பதே தங்கள் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் .அரசியல்வாதிகள் தான் ஆதாரத்திற்காக செயல்படுகிறார்களென்றால்சாமானியர்களின் நிலையும் இதுவே என்கிறபோது தமிழகத்தின் நிலைகுறித்து ஐயமுறத்தான்வேண்டியிருக்கிறது.\\

'அரசியல்வாதிகள்தான் ஆதாரத்திற்காக செயல்படுகிறார்கள் என்றால் சாமானியர்கள் நிலையும் இதுவும் என்கிறபோது தமிழகத்தின் நிலைகுறித்து ஐயமுறத்தான் வேண்டியிருக்கிறது'-என்றீர்கள் பாருங்கள், இந்த இடம்தான் நான் மிகுதியாக வருத்தப்படுவதும். ஆரம்ப நாட்களில் தமிழக அரசியல்பற்றி மரியாதையுடனும் பயத்துடனும் பேசிய கர்நாடக படித்த மக்கள் இப்போதெல்லாம் மிகவும் கேவலத்துடன்தான் தமிழக அரசியலின் உள்குத்து பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.அந்த நிலைமைக்கு தமிழக அரசியலைக் கொண்டுவந்தவர்கள் திமுகவிலிருந்து முதன்முதல் பிரிந்தவர்களும் அதற்குப்பின் தொடர்ச்சியாகப் பிரிந்தவர்களும். ஆரம்பத்தில் திமுகவுடன் முரண்பட்டது கொள்கை ரீதியான அரசியலில். இப்போதெல்லாம் உள்குத்து அசிங்கங்களை மட்டுமே திமுகவின் எதிரிகள் நடத்திக்கொண்டிருப்பதால் திமுக எதிர்ப்பாளர்களைத்தான் குறை சொல்ல வேண்டியிருக்கிறது.

Amudhavan said...

சார்லஸ் said...
\\பணம் பாதாளம் வரை பாயும். பாய்ந்திருக்கிறது என்பது புரிகிறது. தங்கள் கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்பதை விட தி மு க தோற்க வேண்டும் என்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்படுகின்றன . அது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தி மு க வோடு சேர்ந்து பயணடைந்தவர்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கூடா நட்பு என்றவர்கள் கூடினார்கள். உயிர் பிரிந்திடினும் தலைவனைப் பிரியோம் என்றவர்கள் பிரிந்தார்கள். நிற்கக் கூட முடியாதவர் என இகழ்ந்தவரை முதல்வர் வேட்பாளர் என ஏற்று கொண்டார்கள். அரசியலைப் பார்த்து வியப்பு ஏற்படுவதை விட நகைப்புதான் உண்டாகிறது. இதில் திருமாவளவனை மட்டும் ஏன் நோக வேண்டும்? பி அணிக்கு பலம் சேர்க்கும் முயற்சியில் தன் தந்திரத்தைப் பயன்படுத்துகிறார். காலம் நகைப்பதைக் காண காத்திருப்போம்.\\
சார்லஸ் நீங்களும் அருள்ஜீவாவும் மிக நன்றாகவே தமிழக அரசியலை அலசிக் காயப்போடுகிறீர்கள். சமீப காலம்வரை விஜயகாந்தை எப்படி எப்படியெல்லாம் ஏசியவர்கள் இப்போது என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. திருமாவா அல்லது சீமானா நினைவில்லை. 'விஜயகாந்த் ஒரு பத்து திருக்குறளைச் சொல்லிவிடட்டும் அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
காலம் நகைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.(ஏனெனில் காலமும் நீண்ட நாட்களாக சண்டாளர்களின் பக்கமாகத்தான் முகம் காட்டிக்கொண்டிருக்கிறது)

Amudhavan said...

நம்பள்கி said...
\\கூடா நட்பு! திருமா கூட்டணி தலைவரை சொன்னேன்! கூட்டி கழித்து பார்த்தல்...காசே தான் கடவுளடா!\\

ஆஹா ஒரே வார்த்தையில் சொல்லிட்டீங்களே.

Amudhavan said...

நம்பள்கி said...
\\வசந்திதேவி உள் கையா?
திருமா கட்சியில் சீட்டு வாங்கிந கையோடு, வசந்தி தேவி,"நான் பொது வேட்பாளர்! திருமா கட்சி வேட்பாளர் இல்லை" என்று அவசர அவசரமாக கூற காரணம் என்ன? அந்த கூட்டணியில் உள்ள ஆதிக்க ஜாதி மக்கள் ஓட்டுக்களே திருமா கட்சிக்கு விழாது! அதனால், ஆதிக்க ஜாதி மக்கள் நடுநிலைமை ஓட்டுகளை பிரிக்க..வசந்தி தேவியின் அந்த அறிவிப்பு...."நான் பொது வேட்பாளர்! திருமா கட்சி வேட்பாளர் இல்லை!"\\

\\நடுநிலைமை என்ற பெயரில் anti-incumbency வோட்டுக்கள் வசந்தி தேவிக்கு போட்டு வீணடிக்கப்படும்! வீணடிக்கப்பட வேண்டும் என்று தானே நிற்கிறார்கள்! அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும்! அப்புறம் ஏன் நிற்கணும்? எல்லாம் உள் கை தான்--இது வைகோ வேலையில்லை; திருமாவும் ஒரு கருவி தான்--அப்ப இது? நேராக direct dealing தான்!!\\

நீங்கள் சொல்லியிருப்பதுபோல் இப்படியும் இருக்குமோ என்று யோசித்துப்பார்த்தால்தான் இந்தப் பொதுமக்களை எவ்வளவு சுலபமாக எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிகிறது.வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை என்பதுதான் நிதர்சனம் போலும்.

Amudhavan said...

நம்பள்கி said...
\\வலையுலகில் படித்த நல்ல சிந்தனையாளரே திமுக அபிமானியே வசந்தி தேவிக்கு வோட்டு போடணும் என்கிறார்.அப்ப மீதி நடு நிலமையாலர்கள் வோட்டுக்கள் கதி?! நடுநிலைமை என்ற பெயரில் anti-incumbency வோட்டுக்கள் வசந்தி தேவிக்கு போட்டு வீணடிக்கப்படும்! வீணடிக்கப்பட வேண்டும் என்று தானே நிற்கிறார்கள்!\\
நம்பள்கி, நாங்கள் இங்கே இருந்துகொண்டு ஒவ்வொரு செய்திக்கும் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு செய்திகளில் அனாவசியமான சிக்ஸர்களாக அடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் நூறு சதம் உண்மை.

Amudhavan said...

மானுடன் said...
\\அண்ணாவை தோற்கடித்தவர் பெயர் பரிசுத்த நாடார் இல்லை.அவர் கலைஞரால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட பெரும் பணக்காரர் மற்றும் தஞ்சை நகர்மன்ற தலைவர்.அதாவது அன்றைய தேதியில் கலைஞர் ஒரு சாமானிய வேட்பாளர் ஆனால் பரிசுத்த நாடார் ஒரு ‘பெரிய’ஆள்.”பரிசுத்த நாடாரையே வெற்றி கொண்ட கருணாநிதி” என்பது கலைஞரின் ஆரம்பகால வெற்றி வரலாறு.\\

கரெக்ட் மானுடன், நீங்கள் சொன்னபிறகுதான் ஞாபகம் வருகிறது. அண்ணாவைத் தோற்கடித்தவர் பெயர்தான் இன்னமும் நினைவுக்கு வரவில்லை.

நம்பள்கி said...

[[[வசந்திதேவி....
"நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகத் தொடர்ந்து இருமுறை தான் தேர்வு செய்யப்பட்டதும், ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும் தனக்கே ஆச்சரியமாக இருப்பதாக சிரித்துக்கொண்டே சொல்கிறார். ஆச்சரியமாகத்தான் உள்ளது! தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் இந்தத் தேர்வுகள் நடந்துள்ளது."

ref: http://valarumkavithai.blogspot.com/2016/04/blog-post_31.html#more
]]]
நன்றி: valarumkavithai.blogspot.com
__________________
பல்கலைக்கழக துணைவேந்தர் செலக்க்ஷன் மிலிடரி செலக்க்ஷனை விட கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! மேற்கொண்ட செய்தி அவர்களே சொன்னது! இந்த ஒரு பத்தி தான் எங்கே எப்போ எப்படி என்றும் ஏன் அங்கு அவர்கள் நிற்கிறார்கள் என்ற யூகத்திற்கு என்னால் வர முடிந்தது! அவர்களுக்கு மூன்று முறை தலைமைப் பதவி மேலே உள்ள செய்தியைப் பாருங்கள்--நல்ல rapport -புரிதல் இல்லாமல் மூன்று முறை நடக்குமா?

Reading between the lines [always] help as people leave clues without their knowledge inadvertently!

Amudhavan said...

நம்பள்கி said...
\\[[வசந்திதேவி.... "நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகத் தொடர்ந்து இருமுறை தான் தேர்வு செய்யப்பட்டதும், ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும் தனக்கே ஆச்சரியமாக இருப்பதாக சிரித்துக்கொண்டே சொல்கிறார். ஆச்சரியமாகத்தான் உள்ளது! தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் இந்தத் தேர்வுகள் நடந்துள்ளது." ref: http://valarumkavithai.blogspot.com/2016/04/blog-post_31.html#more ]]] நன்றி: valarumkavithai.blogspot.com __________________ பல்கலைக்கழக துணைவேந்தர் செலக்க்ஷன் மிலிடரி செலக்க்ஷனை விட கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! மேற்கொண்ட செய்தி அவர்களே சொன்னது! இந்த ஒரு பத்தி தான் எங்கே எப்போ எப்படி என்றும் ஏன் அங்கு அவர்கள் நிற்கிறார்கள் என்ற யூகத்திற்கு என்னால் வர முடிந்தது! அவர்களுக்கு மூன்று முறை தலைமைப் பதவி மேலே உள்ள செய்தியைப் பாருங்கள்--நல்ல rapport -புரிதல் இல்லாமல் மூன்று முறை நடக்குமா?
Reading between the lines [always] help as people leave clues without their knowledge inadvertently!\\

அபாரம் போங்கள்! திமுகவினருக்கே இத்தகைய செய்திகள் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. அதிலும் கடைசியில் சொல்கிறீர்கள் பாருங்கள்- Reading between the lines ...இந்த விஷயத்தில் நம் இணையத்தில் உலவிவரும் பல 'மேதைகளே'வெறும் கவட்டைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் 'சான்று' வேண்டும். காரணம் அவர்களால் 'In between the lines'ஐப் படிக்க 'முடியாது'. அல்லது படிக்கத் 'தெரியாது'. அதனால் நீங்கள் 'சான்று' காட்டவில்லையென்று குதூகலித்துப் போய்விடுகிறார்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல கேள்வி. நடுவு நிலைமையான நல்ல அரசியல் விமர்சனம்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

உங்கள் ஆதங்கத்தை சொல்வதுபோலவே இருக்கிறது வினவின் இந்தக் கட்டுரை.

http://www.vinavu.com/2016/04/26/brahminical-cleverness-in-equating-dmk-admk/

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\நல்ல கேள்வி. நடுவு நிலைமையான நல்ல அரசியல் விமர்சனம்.\\
தங்களுக்கு என் நன்றி.

Amudhavan said...

காரிகன் said...
\\அமுதவன் ஸார், உங்கள் ஆதங்கத்தை சொல்வதுபோலவே இருக்கிறது வினவின் இந்தக் கட்டுரை. http://www.vinavu.com/2016/04/26/brahminical-cleverness-in-equating-dmk-admk/\\
நன்றி காரிகன்.

சார்லஸ் said...

சார்

///காலம் நகைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.(ஏனெனில் காலமும் நீண்ட நாட்களாக சண்டாளர்களின் பக்கமாகத்தான் முகம் காட்டிக்கொண்டிருக்கிறது)///

பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருப்பது நூறு சதவீதம் நடந்தேறி விட்டது. எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள் ?

Amudhavan said...

நன்றி சார்லஸ்.

Thenammai Lakshmanan said...

சரியாத்தான் கேட்டிருக்கீங்க. :)

Amudhavan said...

தாமதம் என்றாலும் தங்களின் வருகைக்கு நன்றி தேனம்மை.

V Mawley said...

V MawleySaturday, August 27, 2016 at 7:27:00 PM GMT+5:30
பகுத்தறிவு பரவலாக வேண்டும் என்பத ற்காக ஒரு சமூக இயக்கமே
நடத்தப்பட்ட தமிழ் நாட்டில் , இப்போது "பகுத்தறிவு " ஒரு நடிகனின்
cut -out -டிற்கு பாலபிக்ஷேகமும் , கற்பூரம் கட்டுதலும் விமரிசையாக
இளைஞர்களால் நடத்தப்படும் நிலையில் இருப்பது தங்களை பாதிக்கவில்லையா ..?

மாலி

ஜோதிஜி said...

நாளை என் விமர்சனத்தை எழுதுகிறேன். நன்றி.

Post a Comment