Wednesday, February 10, 2010

இளைய ராஜாவா.....? ரகுமானா......?

இளைய ராஜாவுக்கும் ரகுமானுக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சில காலமாகவே இளையராஜாவா ரகுமானா என்ற வாக்குவாதங்களும், பட்டிமன்றங்களும் இணையதளம் உட்பட பல்வேறு தளங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி சில வருடங்களின் முன்புவரையிலும் -குறிப்பாகச் சொல்லப்போனால் ரோஜாவின் வருகை வரையிலும் இளையராஜாவின் ஆதிக்கமும் தாக்கமும் மிகுதியாகவே இருந்தன. இளையராஜாவின் அன்னக்கிளி எப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவந்ததோ அதே போன்ற ஒரு மாறுதலை, அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு மாறுதலை ஏ.ஆர்.ரகுமானின் ரோஜாவும் கொண்டு வந்தது. இரண்டு படங்களின் பாடல்களும் பெருவாரியான அளவில் மக்களைப்போய்ச் சேர்ந்தன. இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்குச் சேர்ந்ததோ அதைவிடவும் அதிகமான அளவில் ரகுமானின் பாடல்கள் மக்களிடம் சேர்ந்தன. இந்த அதிகப்படியான சென்றடைதலுக்கு ரகுமானின் பாடல்களில் இருந்த இனிமையை விடவும்,அவர் பாடல்களில் செய்திருந்த மாற்றங்களை விடவும், முக்கியமான காரணம் -அந்தந்த காலகட்டங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். அன்றைய தினம் இளையராஜாவின் பாடல்கள் திடீரென்று அத்தனைப் பரவலான வளர்ச்சியைப் பெற்றதற்கும் இதே தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையான இயற்கை விதியினைக் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் அந்த படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் இதுதான் அளவில் பெரியது ,இதுதான் சிறந்தது என்றெல்லாம் கச்சைக் கட்டிக்கொண்டிருப்பது சரியான முறைமையாக இருக்காது. இந்த ஒரு விதியைக் காரணம் காட்டியே அந்தந்த படைப்புக்களில் ஒன்றுமே இல்லை எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று சுட்டுவதும் அறிவுடைமை அல்ல. சில படைப்பாளர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது வர்த்தகரீதியான விஷயங்களுக்கு அப்பால் அவை சமூகரீதியாக மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் முக்கியம். இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் தாக்கங்கள் என்பதனை அவை எந்த அளவுக்கு மனதில் ஊடுருவிப் பதிந்திருக்கின்றன , எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கின்றன மனதிலே தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையிலே எந்த அளவுக்கு தொடர்ந்திருக்கின்றன,எத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கின்றன என்பதையெல்லாம் அளவுகோல்களாகக் கொள்ளலாம்.
இந்தக் கோணத்திலிருந்து திரைஇசைப்பாடல்களை அணுகும்போதுதான் காலத்தைத்தாண்டி அவை நிற்கின்றனவா என்பதும் , காலத்தைத்தாண்டி நிற்கின்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கின்றார்களா என்பதையும் கணிக்க முடியும். இந்த அளவுகோல்களெல்லாம் இல்லாமல் அவர்களின் வணிகரீதியான வெற்றிகளை மட்டும் கணக்கிட்டு இவர்தான் எல்லாமே என்பதும்,அவரை இவர் வென்றுவிட்டார் என்பதும் இவரை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறக்கவில்லை என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டுவதும் சரியான ஒப்பீடுகள் ஆகாது.
இதுபோன்ற விஷயங்களில் விடுபட்டுப் போகின்ற இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் ஒருவரைப் பற்றிச்சொல்லும்போது அதே துறையில் இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்த, அல்லது கோலோச்சிக் கொண்டிருந்த இன்னொரு முக்கிய மேதையை மிகச்சௌகரியமாக மறந்துவிடுவது ,அல்லது வேண்டுமென்றே விடுபட்டுப் போய்விட்டதான பாவனைக் காட்டுவது. இந்தச் செயலும் வர்த்தகரீதியான நடைமுறைக்கு
மிகவும் உதவுகிறது என்பதனால் இத்தகு செயல்பாடுகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த முந்தைய மேதை இப்போதைய 'ஒளி வட்டத்து' மேதை நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளை இத்தனைக் காலமும் உயிரைக் கொடுத்துச் சாதித்து முடித்திருப்பார். அவர் சிரமப்பட்டுப் போட்ட ரோட்டில் இந்தச் சாதனையாளர் சர்வசாதாரணமாக சாரட்டு வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பார். எல்லாவிதமான சாதனைகளுக்கும் தான்தான் சொந்தக்காரன் என்பதாக இவரது பாவனைகளும் நடவடிக்கைகளும் இருக்கும். இவரை ரசிக்கின்ற கூட்டமும் இதற்குத் தோதாக நடந்துகொள்ளும். அந்தக் கூட்டத்திற்கு அதனைத் தாண்டிய எந்த நோக்கமும் இருக்காது. தொடந்து ஒரே செய்திகளைச் சொல்லிக்கொண்டு ,ஒரே விதமான புகழுரைகளை முழங்கிக்கொண்டு சலிப்பு ஏற்படுகின்றவரைக்கும் இவர் பின்னாலேயே பயணம் போய்க் கொண்டிருக்கும். அடுத்த ரசனைக்குரிய சாதனையாளர் கிடைக்கிறவரை இந்தக் காட்சிகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.. இதில் பரிதாபம் என்னவென்றால் சில நாட்களுக்குப்பின் நடைபெறுகின்ற அத்தனையையும் அதுதான் உண்மை என்பதுபோலவும் ,அதுதான் நிதர்சனம் என்பதுபோலவும் குறிப்பிட்ட அந்தச் சாதனையாளரே நினைக்க ஆரம்பித்துவிடுவார் என்பதுதான். இன்றைய பொதுவான நிலைப்பாடு இதுதான். இதே பாதையில்தான் இன்றைய பல்வேறு ஒளிவட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி; அங்கீகா
ரங்களும் சரி; புகழ் வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகிறவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்தவொரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் ,அதைச்சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ் வெளிச்சமும், கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதைவிடவும் முக்கியம் இத்தனைப் புகழ் வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ, கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை.அவ்வளவு சாதாரணமாக எந்தவொரு மனிதரிடத்தும் அல்லது எந்தவொரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது. அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும், நூறு கிராம்மிகளும் தாராளமாகத் தரலாம்.
பரிசுகளும் அதனைத் தொடர்ந்த அங்கீகாரங்களும் எப்படிக் கிடைக்கின்றன அவை நியாயமானவர்களுக்கு நியாயமான நேரங்களில் கிடைக்கின்றனவா என்பவையெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள். அவை எப்படிக்கிடைக்கின்றன என்பது இங்கே பேசுபொருள் இல்லை. இந்த இருவரில் யார் வித்தகர்? இந்த இருவரில் யார் விற்பன்னர்? என்பதாக இங்கே முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்குள்ளே இருக்கின்ற நியாய அநியா
யங்களுக்குள்ளே சென்று பார்ப்பதுதான் நமது நோக்கமே.
இன்றைக்கு ஏ.ஆர்.ரகுமான் எட்டியிருக்கும் உயரம் என்பது சாதாரணமானது அல்ல.இசைத்துறையில் என்றில்லை, திரைப்படத்துறையில் இருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த எந்தக் கலைஞனாலும் இத்தனை உயரத்தையும் இனிமேலும் தொடரந்து ரகுமான் எட்டப்போகும் உயரங்களையும் தொடமுடியுமா என்பதுவும் சந்தேகம்தான். இது ஒருபுறமிருக்க, இந்தக் காரணங்களாலேயே ரகுமான் யாரை விடவும் மிகப்பெரிய இசை மேதை ஆகிவிடமுடியுமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி. ரகுமான் காலத்தைக் கடந்த இசைமேதையா என்பது நம்முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி.
இந்த இடத்தில் வேண்டுமானால் நாம் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர இயலும். 'காலத்தைக் கடந்த இசை ' என்ற ஒற்றை வரி விதியொன்றை அளவுகோலாக வைத்துக்கொண்டு ரகுமானையும் , இளையராஜாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நிச்சயம் இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. மாறுபட்ட இசை , புதுமையான இசை, மேல்நாட்டுப் பாணியிலான இசை, நவீன உத்திகளில் கோர்க்கப்பட்ட நவநாகரிக இசை, இதுவரை நாம் கேள்விபட்டேயிராத வாத்தியக்கருவிகளின் லயம் சேர்ந்த இசை, என்று இன்னும் என்னென்னவோ சொல்லி வகைப்படுத்தலாம். அத்தனையும் உண்மைதான், ஆனால் காலத்தைக்கடந்து நிற்கவும், மனதை ஊடுருவிச்சென்று மனதைக் கரைக்கவும் உயிருள்ள வரை உங்களுடனேயே தொடர்ந்து வரவும் ,இத்தனைப் பக்கத்துணைகள் ஒரு நல்ல இசைக்கோர்வைக்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல இசை என்பது ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலிலிருந்துகூட வெளிப்படக்கூடும். அந்த இசையில் தோய்ந்துள்ள சுகமான இனிமைதான் அடிப்படை.
அத்தகைய இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான். இளையராஜா தந்திருக்கும் இனிமையான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். ரகுமான் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது. இனிமையான சுகானுபாவம் என்பது மிகவும் குறைவானது. ஆகவே, இந்த வகையில் ரகுமானைப் பின்னே தள்ளிவிட்டு நிற்பவர் இளையராஜாதான். எனவே ரகுமானை மிஞ்சி நிற்பவர் இளையராஜாவே என்று சொல்லி விலகிக்கொள்ள முடியுமா என்று பார்த்தால் 'முடியாது'என்பதுதான் பதில்.காரணம் இளையராஜா பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே சொல்லவேண்டிய பெயர்கள் சில இருக்கின்றன என்பதுதான்.
இளையராஜா தமிழில் சில சாதனைகள் புரிந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதற்காக ,சாதனைகள் புரிந்த ஒரேயொருவர் இளையராஜாதான் என்பதுபோலவும், அல்லது சாதனைகள் புரிந்த முதலாமவர் இளையராஜாதான் என்பதுபோலவும் ஒரு கற்பிதம் ஏற்படுத்த முயல்வதையும் ஏற்பதற்கில்லை. தமிழ் இசையை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்றெல்லாம் சிலபேர் எழுதிவருவதைப் பார்க்கும்போது அவர்கள்மீது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னொருவர் எழுதுகிறார் 'இளையராஜா அளவுக்குச் சாதனைகள் புரிந்தவர்கள் அவருக்கு முன்னும் இல்லை. பின்னாலும் வரப்போவதில்லை.' இம்மாதிரியான கருத்துக்களெல்லாம் ஒன்று அறியாமையால் வருவது- அல்லது அவர்மீது கொண்ட அதீத ரசிப்புக்கொண்ட்டாட்டத்தால் வருவது. உலகில் எம்.ஜி.ஆர் படத்துக்கு இணையான இன்னொரு படம் வரவே வராது என்றும் வேறு யாருடைய படத்தையும் பார்க்கவே மாட்டேன் என்றும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் கருத்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பாகும் இது. இத்தகைய கருத்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்கள் இருப்பதுபற்றி இளையராஜா வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர, அந்த வாதங்களுக்கு எவ்விதமான முக்கியத்துவமோ அங்கீகாரமோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதாலோ, முந்தையவரை விடவும் வசூல் சாதனைகள் செய்தார் என்பதனாலோ அவருக்கு முன்பு இதே சாதனைகளை செய்த அவரது அப்பன் பாட்டனையெல்லாம் தூக்கிக் குப்பைக்கூடையிலே போடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை. சொல்லப்போனால் இது அதிகாரம் பற்றிய பிரச்சினைக்கூட இல்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். தனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதற்காக, "இந்தியா என்றாலேயே இந்திராதான் .இவருக்கு முன்பு இவர் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் தோன்றியதே இல்லை. காந்தி, நேரு போன்றவர்களுக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை" என்றெல்லாம் அறியாமையால் சொல்வதற்கு ஒப்பாகும்.
இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் நிற்கிறார் என்பது போலவே இளையராஜா யாருக்குப் பின்னால் நிற்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறை. அப்படிப் பார்க்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பின்னால்தான் இளையராஜா நிற்கிறார் என்பது சாதாரண குழந்தைக்குக் கூடத்தெரியும் . தமிழ் இசை உலகில் , இன்னமும் சொல்லப்போனால் திரைஇசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. விஸ்வநாதனின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இளையராஜாவின் சாதனைகள் முழங்காலுக்குக்கூடக் காணாது. விஸ்வநாதன் இசையமைத்து வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கையும் சரி; விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த பாடல்களின் எண்ணிக்கையும் சரி; இளையராஜாவின் இசையமைப்பில் வந்த பாடல்களுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புகள் கூறுவது விஸ்வநாதனின் மேதைமைக்கு இழுக்காகவே இருக்கும். இந்த ஒப்பீடுகூட தனிப்பட்ட விஸ்வநாதனின் சாதனைகளை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதானே தவிர, அவரது முந்தைய அடையாளமான 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி ' என்ற இருவர் கட்டியமைத்துச் சாதித்த பிம்பத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டது அல்ல.
விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு முன்புவரையிலும் தமிழ்த்திரையை ஆதிக்கம் செலுத்திவந்த இசையமைப்பாளர்களாக எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன். ஆதிநாராயணராவ், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ஆகிய விற்பன்னர்கள் பலர் இருந்தார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பாடல்களுக்கெல்லாம் கூட இசையமைத்துத் தந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். எஸ்.வி.வெங்கட்ராமனைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கால் பணிந்து வணங்குவார் எம்.எஸ் .என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஜி.ராமனாதன் அந்தக்கால இசையமைப்பில் செய்யாத புதுமைகள் இல்லை.ஒரு பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் ஜி.ராமனாதன். இவர்கள் அத்தனைப் பேரும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் வருகை நிகழ்கிறது. ஒரு புதிய பிரளயம் பாய்ந்ததுபோல் அத்தனை நாட்களும் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த பாடல்களின் போக்கு சத்தமில்லாமல் மாற்றியமைக்கப்படுகிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாணியிலான மெல்லிசை புதிய பாணி திரைஇசையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றைக்குப் பிரவாகமெடுக்கத்தொடங்கிய அந்த இசை சின்னச் சின்ன மாறுதல்களுடன் இன்றைக்கும் பிரவாகமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மாற்றங்களுக்கும் அந்த மாறுதல்களை நிகழ்த்தும் சாதனையாளர்
களையும் மீறியதொரு புறக்காரணம் இருக்கும். அந்தக் காரணத்தோடு ஒன்றிணைந்துதான் சாதனையாளர்களுக்கும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். திரையுலகில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக 1952-ஐக் குறிப்பிட வேண்டும். திரையுலகில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் வருகை நிகழ்ந்த வருடம் அது. அந்த வருடத்திலிருந்துதான் நடிப்பு, கதை, வசனம், இசை, இயக்கம், என்று ஆரம்பித்து திரையின் அத்தனைத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்த அற்புதம் நடந்தேறியது. 52-க்கு முந்தைய படங்களையும், அதற்குப் பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடியும். கலைஞர் கருணாநிதிகூட அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்தே திரைக்கதை வசனங்கள் எழுதி வந்தபோதிலும் 52-ன் பராசக்தி படத்திற்குப் பிறகுதான் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அவராலும் போட முடிந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவரையிலும் தயாரிக்கப்பட்டு வந்த பழைய பாணிப்படங்களுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய பாணியில் படங்கள் வர ஆரம்பித்தது அந்த ஆண்டிலிருந்துதான். ஆக, அந்த ஆண்டிலிருந்து ஒரு புதிய திருப்பம் நிகழ ஆரம்பித்தது.
இந்தத் திருப்பம் திரையுலகில் மட்டுமல்ல. ஊடகத்துறையிலும் நிகழ ஆரம்பித்தது. தமிழில் வெவ்வேறு புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சொல்லப்போனால் திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு இதழ்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அதுவரையிலும் இதழ்களில் ஆதிக்கம் செலுத்திவந்த 'ஐயராத்துத் தமிழும்', பண்டிதர்களின் தமிழும் விடைபெற்று ,புதிய -எளிய-இயல்பான -இலக்கியத்தமிழ் அரியாசனம் ஏறியது.அதிகக் கல்விக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதிகமான பொதுக்கூட்ளும் அதிகமான இலக்கியக் கூட்டங்களும் மக்களிடையே நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில் சமூகச் சூழலுக்கான ஒரு மாறுதல் பெரிய அளவில் நிகழ்கிறது.
'பணம்' என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசைப்பயணம் ஆரம்பிக்கிறது.ஆரம்பம் சாதாரணமானதாக இருந்தபோதிலும் மொத்த ஊரையும் போர்த்தும் பனிபோர்வையைப்போல தமிழக மக்களைச் சுற்றிக் கவிகிறது அந்த இசை மழை. பொழுது போக்கிற்காக ஏதோ இரண்டு பாடல்களைக் கேட்டோம் அடுத்த வேலையைப் பார்க்கப் போனோம் என்றில்லாமல் ஊனில்,உணர்வில், உயிரில் கலந்து மக்களுடன் நிலைத்து நிற்க ஆரம்பிக்கிறது அவர்களின் பாடல்கள். படுத்தால் எழுந்தால் நிமிர்ந்தால் உட்கார்ந்தால் நடந் தால் அவர்களின் இசையோடுதான் என்கிற அளவுக்கு அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கிறது. அந்த நாளை முடித்து இரவு படுக்கைக்குச் செல்வதற்குக்கூட அவர்களுடைய பாடல்களை ஒருமுறைக் கேட்டுவிட்டே நித்திரையின் வசப்படுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது அவர்களின் இசை.
அவர்களின் இந்தச் சாதனைக்கு ஆணிவேராய், அஸ்திவாரமாய், உயிராய் இருந்தது இன்னொரு மகாகலைஞன். அந்தக் கலைஞனின் பெயர்; 'கண்ணதாசன்!' ஆம் நண்பர்களே, இந்த மூன்றுபேரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இசை சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது. அளவிட முடியாதது. இன்னொருவராலோ அல்லது இன்னும் சிலர் சேர்ந்துகொண்டோ இதனை மிஞ்சும் ஒரு இசை சாதனையை இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்த்திவிட முடியாது. இந்தக் கூட்டணி உடைந்த பின்னால் அதில் இருந்த இரண்டுபேர் சேர்ந்து அவர்களின் முந்தைய சாதனைகளுக்கு நிகரான இன்னொரு சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்தாகவேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பிரிந்த பின்னால் விஸ்வநாதன் -கண்ணதாசன் இணைந்தோ, அல்லது ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்தோ முந்தைய அளவுக்கு ,அந்த உயரத்திற்கு அவர்களால் மீண்டும் வரமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்ததற்குப்பின் அந்த இரட்டையர் ஏற்படுத்தியிந்த தாக்கத்தின் பலன் இசையமைப்பாளர் என்ற முறையில் விஸ்வநாதன் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் அமைந்துவிட்டது. வணிகப்போட்டியில் விஸ்வநாதனுக்கு ஈடுகொடுத்து ஓடி வரமுடியாமல் மிகவே பின்தங்கிப் பின்னர் ஒதுக்கப்பட்டவராகவே மாறிப்போனார் ராமமூர்த்தி. திரைப்பட வணிகச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு தம்முடைய இசைஞானத் திறமையால் தனியரசராய் அதற்குப் பின்னரும் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத சக்தியாய் ஆட்சி செலுத்தினார் விஸ்வநாதன். பல ஆயிரம் பாடல்கள் அவரது இசைப்பிரவாகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தியாய் இருந்து எழுப்பிய இசைக்கோயிலுக்கு இணையான இன்னொன்று கிடையாது.
அவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த இசைக்கோர்வைகளில் யாருடைய பங்கு அதிகம் என்பதான ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த இருவருமாகச் சேர்ந்திருந்து உருவாக்கியபோது கிடைத்த அந்த ஒருங்கிணைப்பு, அந்தப் பக்குவம், அவர்களில் இருந்த அந்தப் புரிந்துணர்வின் பலன், அந்த ஒருங்கிசையின் வெளிப்பாடு, இரண்டுபேரின் திறமையும் எந்த அளவுக்குச் சேர வேண்டுமோ அந்தக் கலவையின் சரியான சதவிகிதம் இவையாவும் ஒரு அற்புதப் படைப்பின் ரகசியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இருவரின் பங்களிப்பில் உருவான பாடல்கள்தாம் இன்றைக்கும் தமிழ்ப்பாடல்களின் அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்படங்களின் உன்னத அடையாளங்களாகவும் மிகப்பெரும் சிகரங்களாகவும் இருந்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இவர்களின் மிகப்பிரபலமான பாடல்கள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இந்த மண்ணில் நிலைத்து நிற்கப்போகும் சாகாவரம் பெற்றவை. அந்தப் பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இவர்கள்தாம்.
இவர்களின் காலத்திய பாடல்கள்தாம் தமிழில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள் என்பதற்கான அடையாளங்கள் ஆரம்பமுதலே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்தில் வரும் பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் பிரபலமாவதற்கே என்னென்னமோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் வேறு என்னென்னமோ செய்து அதனைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகவும் பிரபலமாகவும் உருவாக்கும் அதிசயம் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு படம் இரண்டு படத்தில் அல்ல; சுமார் நூறு படங்களிலாவது அவர்களின் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபூர்வ சாதனை அந்தக் காலத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ; சில இந்திப் படங்களிலும் அன்றைக்கு இருந்த சில இந்தி இசையமைப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களும் இனிமையாகவும் பிரபலமாகவும் இருக்கும் இந்தச் சாதனைகளை இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பொருத்திப் பார்த்தோமானால் அவர்கள் இசையமைத்த படங்களில் ஒரு பத்துப் படங்களோ அல்லது இன்னும் இரண்டொன்றோ தேறலாம். நூற்றுக் கணக்கான படங்கள் விஸ்வநாதனுக்குப் பின்னர் யாருக்குமே தேறாது.
இவர்களின் இசைவெற்றிகளுக்கு கண்ணதாசன் பெருமளவு காரணமாக இருந்ததுபோலவே பின்னணிப் பாடகர்கள் சிலரும் காரணமாக இருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழிகோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோரின் பல்வேறுபட்ட திறமைகள் பட்டைத் தீட்டப்பட்டுப் பிரகாசப்படுத்தப்பட்டன. வேறு பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை 'செந்தமிழ்த் தேன் மொழியாள்' மூலமும் 'எங்கள் திராவிடப்பொன்னாடே' மூலமும் வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்தனர். என்றைக்கும் மறக்கமுடியாத இன்னொரு பாடல்தளம் சந்திரபாபுவுடை யது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு இன்னொரு மாற்றுக்குரல் இதுவரையிலும் வரவில்லை. பின்னணிப் பாடகர்களைப் பொறுத்தவரையில் யாரை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களெல்லாம் இன்றைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் சேர்த்தே இவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமாவின் பொதுவான நியதியே பெரிய படங்களுக்குச் சிறப்பாகச் செயல்படுவது என்பதுதான்.அந்தக் கணக்குப்படி பார்த்தால் சிவாஜி படங்கள், எம்.ஜி.ஆர். படங்கள் மற்றும் வேறுசில பெரிய படங்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசைக்கோர்வை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரட்டையரின் பட்டியலைப் பார்த்தோமானால் இவர்கள் ஈடுபடும் எல்லாப்படங்களுக்குமே தங்களின் திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான இசையையே வெளிப்படுத்தும் தொழில் நேர்மை இவர்களுக்கு இருந்திருக்கிறது.அதனால்தான் அவ்வளவு வெற்றிபெறாத பல படங்களின் பாடல்கள்கூட இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்கும் பாடல்களாக இருந்துவருகின்றன.
இவர்களின் அன்றைய பாடல்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், ஜெமினிகணேசன் பாடல்கள் , பீம்சிங் பாடல்கள், ஸ்ரீதர் பாடல்கள் என்று தனித்தனியாகப் பிரித்து இனம் காணக்கூடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையல்லாமல் கண்ணதாசனின் படைப்புக்கள் எல்லாருக்கும் பொதுவானவை. அவற்றில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள் உறவு பற்றிய பாடல்கள்,குடும்பம் பற்றிய பாடல்கள், பாசத்தைச் சொல்லும் பாடல்கள் என்று வாழ்க்கையின் அத்தனைக் கட்டங்களுக்குமான பாடல்கள் அற்புதச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டு என்றென்றைக்குமான பாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைத் தவிர்த்து இவர்களின் இசையில் மிகப்பிரபலமான பாடல்களாகவும் ,அதே சமயத்தில் மிகப் பிரமாதமான பாடல்களாகவும் அமைந்த சில படங்களின் பட்டியலைப் பார்ப்போம். மாலையிட்ட மங்கை, அமுதவல்லி, ஆளுக்கொரு வீடு, கவலையில்லாத மனிதன், பாக்கியலக்ஷ்மி, மணப்பந்தல், காத்திருந்த கண்கள், சுமைதாங்கி, வீரத்திருமகன், இது சத்தியம், கற்பகம், இதயத்தில்நீ, மணிஓசை, கலைக்கோயில், கறுப்புப் பணம், சர்வர் சுந்தரம், வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக்கிளி, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்று பட்டியல் நீள்கிறது.இவற்றில் ஸ்ரீதரின் மற்ற படங்களையும் சேர்த்தால் பட்டியல் எங்கேயோ போய் நிற்கும்.
1952-ல் பணம் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம் பதின்மூன்று ஆண்டுகள் 1965-ல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் வரையிலும் கொடிகட்டிப் பறந்து முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் படத்தின் மூலம் தமது தனிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்கிறார் எம். எஸ்.விஸ்வநாதன். அவருடைய நீண்ட பயணம் இன்னொரு இருபது ஆண்டுகளுக்கான சாதனையாக விரிகிறது.
இத்தனை ஆண்டுகளின் சாதனையில் மக்கள் மனதில் என்றென்றைக்கும் பசுமையாய் நிற்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் யாவும் வெறும் பட்டியல் போடுவதற்குப் பயன்படுபவையோ அல்லது புள்ளிவிவரம் காட்டுவதற்குப் பயன்படுபவையோ அல்ல. மாறாக மக்களிடையே இத்தனை ஆண்டுக் காலமும் புழக்கத்தில் இருந்து, இன்னமும் பல நூறு ஆண்டுக்காலமும் புழக்கத்தில் இருக்கப்போகும் பாடல்கள். செந்தமிழ்த் தேன்மொழியாள், அச்சம் என்பது மடமையடா, காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், அத்தைமடி மெத்தையடி, போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மலர்ந்தும் மலராத பாதிமலர்போல, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, வீடுவரை உறவு வீதிவரை மனைவி, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ,பாலிருக்கும் பழமிருக்கும், கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள், கட்டோடு குழலாட ஆட, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், நானொரு குழந்தை நீயொரு குழந்தை, உள்ளத்தில் நல்ல உள்ளம்....என்றிப்படி எத்தனைப் பாடல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு பட்டியலை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் போடமுடியாது. இவர்களுடைய காலத்திலேயே கே.வி.மகாதேவன் உட்பட இன்னமும் சில இசையமைப்பாளர்களின் சிரஞ்சீவித் தன்மைப் பெற்ற பாடல்கள் உள்ளன, ஆனால் அவை யாவும் எண்ணிக்கையில் குறைவே.' தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்பார்களே, அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் மூவரும் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. இப்படிப்பட்ட பொற்காலங்கள் ஏதாவது ஒருமுறைதான் வரும்.தமிழுக்கு வந்து முடிந்துவிட்டது. தமிழ்ப்படங்களைப் பற்றிய கிராஃப் ஒன்று போட்டோமானால் அம்புக்குறி உச்சத்தைத் தொட்டு நிற்கும் காலகட்டம் அது. நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள், நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இசை, நல்ல பாடல்கள் என்று காலத்தைக்கடந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் திரைப்படங்கள் வந்த காலம் அது. அதனால்தான் அந்தக் காலத்தில் திரையில் பரிணமித்த எல்லாக் கலைஞர்களுமே - சிவாஜி எம்.ஜி.ஆர் முதல் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் துவங்கி பீம்சிங், ஸ்ரீதர் என்று தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , டி.எம்.சௌந்தர ராஜன் ,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி ,சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா,நாகேஷ்,மனோரமா என்று இன்றைக்கும் வரலாறு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைக்குத் திறமைசாலிகள் இல்லையா, இன்றைய சாதனையாளர்கள் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் வரும் திறமையாளர்கள் காலத்துக்கு ஏற்றாற்போல் வெற்றிக் கொடிகளை நாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் காலத்தைக்கடந்து நிற்பார்களா என்பதைச் சொல்வதற்கில்லை. நாட்டில் எத்தனையோ மகால்கள் வந்திருக்கலாம். ஆனால் தாஜ்மஹாலுக்கு இன்னொன்று வரவில்லை. வரவும்போவதில்லை. எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழனுக்கு இன்னொருவன் ஈடாக முடியாது. அதுபோன்றதொரு காலகட்டம்தான் ஐம்பதுகளில் துவங்கி எழுபதுகளில் முடிந்த காலகட்டம். அது திரும்பி வராது.
இளையராஜாவின் திறமைகளையும், ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளையும் மனமுவந்து ஒப்புக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் இடங்களை அவரவர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய இளைஞர்களுக்கு இர்விங் வாலசைப் பிடித்திருக்கலாம். ஹாரிபாட்டரின் புத்தக விற்பனை உலகின் எல்லா எழுத்தாளர்களையும் மிஞ்சினதாக இருக்கலாம். அதற்காக யாரும் இவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரை மிஞ்சிவிட்டார்கள் என்று எந்தப் பைத்தியமும் சொல்லிக்கொண்டு அலைவதில்லை. தமிழில் திரைஇசையில் சாதித்தவர்களுக்கான இடங்களை வணக்கத்துடன் அவர்களுக்குத் தந்துவிடு
வோம். இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் எந்த இடம் உள்ளதோ அதனை இவர்களுக்குத் தந்து இவர்களைக் கொண்டாடுவோம் . இந்த இடத்தில் இளையராஜாவைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழில் நாட்டுப்புற இசையை முதன்முதலில் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்று பலபேர் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயா, உங்களின் தவறான கருத்துக்களை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் நாட்டுப்புற இசையை குளங்களாக ஏரிகளாகக்கூட அல்ல; பெரிய பெரிய அணைக்கட்டுக்களாகவே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் கே.வி. மகாதேவன். மதகுகளைத் திறந்து உங்கள் கவனத்தை அங்கே கொஞ்சம் திருப்புங்கள். இளையராஜாவே அடிக்கடி 'வாழையடி வாழையாக வந்த ' என்ற சொற்பிரயோகத்தை உபயோகிப்பார். அந்த அடிப்படையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்த விஸ்வநாதனின் தனி ராஜாங்கம் , அதே சமயத்தில் இன்னொரு ராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த கே.வி.மகாதேவன் இவர்களை ஒட்டி , இவர்கள் வந்த பாதையில் வந்து வெற்றிபெற்றவர்தான் இளையராஜாவே தவிர, தமிழ் திரைப்பட இசையே இளையராஜாவிலிருந்துதான் துவங்குகிறது என்று தவறான கற்பி தங்களை யாரும் கற்பித்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எல்லாக்கணக்குகளையுமே தப்பும் தவறுமாகவே போடவேண்டியிருக்கும். தமிழின் முதல் பிரம்மாண்டப் படத்தைத் தயாரித்தவரே செல்வராகவன்தான் என்று சொல்ல வேண்டியிருக்கும. எஸ்.எஸ்.வாசனை யெல்லாம் சௌகரியமாக விட்டுவிடலாம். மூன்று நான்கு வருடங்களாகவே மிகவும் பிரபலமான பாடல்களை எழுதுபவர் நா.முத்துக்குமார். எனவே, நா. முத்துக்குமாரிலிருந்து
தான் தமிழ்ப்பாடல்களின் வரலாறு ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை , வாலி ஆகியோரையெல்லாம் விட்டுவிடலாம். விக்ரமும் சூர்யாவும் சமீப காலத்தில் மிகுதியான திறமையை நடிப்பின் மூலம் நிரூபித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட நடிகர்கள் தமிழுக்கு இதுதான் முதல் என்று கூறிவிடலாம். சிவாஜி, கமலையெல்லாம் கண்டுகொள்ளவே வேண்டாம்........எப்படி சௌகரியம்? இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு அவரது வருகையின் சமயத்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட டேப் ரிகார்டர்களின் வளர்ச்சி. வீடுகளிலும் கார்களிலும் டேப்ரிகார்டர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கத்தொடங்க , காசெட்டுகளாகப் புதிய பாடல்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். பழைய பாடல்களில் இருந்த இனிமையை விடவும் புதிய பாடல்களின் ரிகார்டிங்கில் இருந்துவந்த புதிய ஒலிகள் வசீகரிப்பவையாய் இருந்தன. மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு ஒலிகள் மாறியபோது ஸ்டீரியோ ரிகார்டிங்குகளில் வெளிவந்த பாடல்கள் இளையராஜாவுடையவை. இந்த தொழிற்புரட்சியும் இளையராஜா அதிகமாகப் பரவ ஒரு காரணம்.
இதே காரணத்தை நாம் ரகுமானுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. இளையராஜா பாடல்கள் மிக வேகமாய்ப் பரவியதற்கு காசெட்டுகளும் ஸ்டீரியோவும் பெருமளவு காரணம் என்பதுபோலவே ரகுமானின் பாடல்கள் அதைவிட அசுர வேகத்தில் பரவியதற்கு இன்றைக்கிருக்கும் விஞ்ஞானத் தொழிற்புரட்சிதான் மிகப்பெரிய காரணம். அன்றைக்கு டேப்ரிகார்டர்களும் காசெட்டுகளும் என்றால் இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது. இன்னமும் வாஷிங்டனில் பாடல் பதிவு முடிந்தது என்றதும் நம் காதோரம் இருக்கும் ஏதாவதொரு தலைமுடியில் பொருத்தப்பட்டிருக்கும் மயிரிழையைவிட மெல்லிய ரிகார்டரில் பாடல் பதிந்து நம் காதுகளில் அதுவாகவே ஒலிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த அசுர விஞ்ஞான யுகத்துக்கு இசைமூலம் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் இசையமைப்பாளராகத்தான் ரகுமானைப் பார்க்க வேண்டும்.
இந்த தொழிற்புரட்சிகளைப் பற்றிக் கவலையே படாமல் அந்த இரட்டையர் போட்ட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாடல்கள் நாள்தோறும் உலகம் பூராவும் தினமும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன என்பதுதான் எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம்! இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னம் எத்தனை லட்சக்கணக்கான பேர் அந்தக் காலத்துப் பழைய பாடல்களைக் கேட்கிறார்கள் தெரியுமா? அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்........

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

************************

21 comments :

R.S.KRISHNAMURTHY said...

ஒரு நடுநிலையான, நன்கு எழுதப்பட்ட ஆய்வு. ஆனால், இங்கோ, இன்றைய தமிழனுக்கு இட்லி பிடிக்காது. அல்வா போன்ற அப்படியே உள்ளே போகக்கூடிய சமாசாரம் தான் வேண்டும். அதேசமயம் வீட்டிற்கு வெளியே சென்றால் பர்கர், பீட்ஸா தவிர எதுவுமே உணவில்லை என்று பீற்றிக்கொள்ளவும் வேண்டும்! ஆனால் இதையெல்லாம் மீறித்தான் இன்னமும் கிட்டப்பாவும், தியாகராஜ பாகவதரும், சின்னப்பாவும்,சுந்தராம்பாளும், எம்.எஸ் ஸும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பாடல்கள் இசையால் மட்டுமே பிரபலம் அடைந்திருக்கிறதே தவிர இவர்கள் பாடியுள்ள பாடல்களின் இசையமைப்பாளர்கள் யார் என்கிற தகவலே பெரும்பான்மையான ரசிகர்களுக்குத் தெரியாது. இருந்தும் இன்னமும் ரசிக்கிறோம் என்றால் அதற்கு அந்த இசை மட்டுமே காரணமாகிறது. இன்றோ, இசையமைப்பாளர்கள் தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்வதில்லை. ஒரு கண்மூடித்தனமான ரசிகர் கூட்டமும், மீடியாக்களின் தயவும் அவர்களுக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் இளையராஜா இன்னமும் தனது பழைய மெட்டுக்களையே ரீமிக்ஸ் செய்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அத்தோடு, தான் மட்டுமே புகழின் உச்சியில் இருப்பவன், இருக்க வேண்டியவன் என்ற போதை தலைக்கேறி, ‘மகான் தியாகராஜருக்கு அடுத்து என்னைவிட்டால் முன்னும் இல்லை, பின்னும் இல்லை’ மற்றும் ‘இறைவனுக்கு இவன் புகழ் தேவையா, அவன் கேட்டானா’ என்றெல்லாம் உளறத் தூண்டியிருக்கிறது. இவருடைய நல்ல பாடல்களில் ஒன்றான ‘ராஜாத்தி கையைத்தட்டு’ பிபிஸி யில் (வாக்குகள் மூலம்) அந்த வருடத்தின் உலகத்தின் மிகச்சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது எப்படி என்பது ஒரு சாதாரண கணினி உபயோகிப்பவருக்கும் தெரியும். மொத்தத்தில் விவேக் ஒரு படத்தில் ரம்யாவைப்பார்த்துச் சொல்வது போல, ’இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் உன்னை அடிச்சுக்கமுடியாது’.

Krubhakaran said...

திரை இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ரஹ்மான் ஆஸ்க்ர் விருது வாங்கிய போது எடுத்த விழாவில் இளையராஜா பேசியது:- அண்ணன் விசுவநாதன் ஆதார சுருதி, அதன் மேன் நான் பஞ்சமம், அதற்கு மேன் ஷட்ஜமம் தம்பி ரஹ்மான், நீங்கள் மற்ற இசை கலைஞர்கள் எல்லாம் மற்றைய ஸ்வரங்கள்.

ச(எம் எஸ் வி) பா(ராஜா) சா(ரஹ்மான்).

SANTHA said...

இளையராஜாவையும் ரகுமானையும் வைத்து விவாதம் செய்பவர்கள் கையாளும் அதே யுக்தியைதான் நீங்களும் கையாண்டுள்ளீர்கள். மற்றவர்கள் ரஹ்மானை வைத்து இளையராஜாவை குறை கூறுவார்கள். நீங்கள் அவருக்கு முந்தியவர்களை துணைக்கு அழைத்துள்ளீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டது. R.S.கிருஷ்ணமுர்த்தி அவர்களே சான்று. வாழ்த்துக்கள்.

SANTHA said...

//அமுதவன் பக்கங்கள்

அர்த்தமுள்ள பார்வை//

அர்த்தமற்ற பார்வை

Amudhavan said...

போகிறபோக்கில் புழுதி வாரித்தூற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதவில்லை சாந்தா, நான் இதுபோன்ற விமர்சனக்கட்டுரைகளை அந்தக் காலத்திலிருந்தே பிலிமாலயாவில் எழுதிக்கொண்டிருப்பவன். இன்னமும் சொல்லப்போனால் இந்த விவகாரத்தை இளையராஜாவிடமே கூட விவாதித்திருக்கிறேன். இதுபற்றிய தனிக்கட்டுரையைப் பிறிதொரு சமயத்தில் எழுதுவேன். இன்றைக்கு யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களையும் அவர்களுக்கு முந்தி இருப்பவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு கொண்டாடுவது என்பது பொதுவான ஒரு வழக்கம். இன்றைக்கு பிரபலமாக இருப்பதாலேயே எம்.எஸ்ஸைவிடவும் ஸ்ரேயா கோஷல் குரல்தான் பிரமாதம் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமல்ல.

R.S.KRISHNAMURTHY said...

கலைஞரின் ராஜாராணி படத்தில் சாக்ரடீஸ் சொல்லுவதாக ஒரு வசனம்:”எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்” என்று! இயல்பான என்பதுதான் முக்கியம். நாங்கள் உள்நோக்கம் ஏதுமின்றி இன்றும் முத்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதைச் சொன்னால், திரு.சாந்தா போன்றவர்கள் முத்தெடுப்பவன் நல்லவனா, அங்கங்களெல்லாம் அதனதன் இடத்தில் இருக்கிறதா அவனுக்கு என்று வீண் ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் அனுபவத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் சரியான பதிலாக இருக்கும்!

Amudhavan said...

சரியாகச் சொன்னீர்கள் ஆர்.எஸ்.கே. ஆனால் இன்றைய கலைஞர்களைக் கொண்டாடுகிற அத்தனைப் பேருமே இவர்களுக்கு முன்னாலிருந்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையின்றி இவர்கள் ரசனை என்னவோ அதுதான் நிதர்சனம் என்றே வளைய வருகிறார்கள். ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவர் என்று இவர்கள் சொன்னால் ,'தம்பி மகாத்மா காந்தி என்றொரு மிகப்பெரிய தலைவர் இருந்தார்' என்று சொல்லக்கூடாது என்றே எண்ணுகிறார்கள்.இதுவே இவர்களுக்குப் போதும் என்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இதுதான் முடிந்த முடிவு என்று இவர்கள் நினைப்பதில்தான் நமக்கு ஆட்சேபணை.'வீண் ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் அனுபவத்தைக் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு சிறு திருத்தம். ஆராய்ச்சியே இல்லாமல் வெறும் அபிப்பிராயத்தை வைத்தே ஒரு மாபெரும் அனுபவத்தைக் கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.

Anonymous said...

வணக்கம் ,

தங்கள் ஆக்கம் இன்று வாசித்தேன்.விஸ்வநாதனை தலைசிறந்த இசையமைப்பாளன் என்று மேடைக்கு மேடை இளையராஜா கூறிவருவதை நீங்களா கேட்கவில்லையா? ஆனால் நீங்கள் புகழும் ரகுமான் ,தான் வாத்தியம் வாசித்த இளையராஜாவை எங்காவது சொல்லியுள்ளாரா?சொல்லுங்கள்.! இது தான் உங்கள் நடுநிலை ஆய்வா? இதுவா அவரின் அடக்கம் ,பண்பு ,நாணயம்.
நான் விஸ்வநானதனின் இசையை ஒவ்வொருநாளும் கேட்பவன்.எனது ஏழு வயது மகளும் "அத்தைமடி மெத்தையடி" அடிக்கடி பாடுவாள்.அந்த அளவுக்கு அவர் பாடலை நம் மூலம் அவள் கேட்கிறாள்.
அவரும் சிறப்புத் தான் இவரும் ,சிறப்புத் தான் ஆனால அவரைவிட இவர் சிறப்பு என்கிறீர்கள்.இளையராஜாவின் வாத்திய சேர்ப்பின் இனிமையை இந்தியாவின் எந்த ஒரு இசையமைப்பலனும் செய்ததுண்டா சொல்லுங்கள்.விஸ்வநாதனுக்கு உதவியால்கள் பலர் இருந்தனர்,ஏன்?ஜோசப் கிருஷன ,கோவர்த்தனம்,ஜி.கே .வெங்கடேஷ் என பலர். நிறைய வேலை .அதை ஒருவர் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படும்.இந்த வேலை எல்லாவற்றையும் தனியே செய்து முடிக்கும் வேகமும் ஆற்றலும் பெற்ற ஒரே இசைஅமைப்பாளன் இளையராஜா தான்.மேற்க்கத்திய இசையும் சரி ,நாடுப்புற இசையும் சரி ,செவ்வியல் இசையும் ஒன்று சேர்ந்த இசை மேதை இளையராஜா தான் என்று அடித்து கூறலாம் அவருடைய காலத்திலேயே [msv] மகாதேவன் ,லிங்கப்பா. சுதர்சனம் .ஜி.ராமநாதன்.சுப்பையா நாயுடு ,வெங்கட் ராமன்,வேதா ,ஏ.எம்.ராஜா, சலபதிராவ் ,டி.வி .ராஜூ,ஆதினாரயனரவ் ,ராஜேஸ்வரராவ் ,பாண்டுரங்கன்,ஹனுமந்தராவ் ,வேதா, வி. குமார்,குன்னக்குடி,கண்டசால
எம்.எஸ் விச்வனாதானுக்கு இணையாக சில சமயங்களில் அவர்களுக்கும் மேலாக நல்ல பாடல்களை தரவில்லையா ? ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்களை ஒருமுறை கேளுங்கள்.

இவ்வாறு இளையராஜா காலத்தில் நல்ல பாடல்களை அவருக்கு நிகராக பாடல்களை தந்த இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்துகள் பார்க்கலாம்.?
"கலைஞர்" என்றால் கருணாநிதி,"புரட்சி" என்றால் எம்.ஜி.ஆர்.,"நடிகர்" என்றால் சிவாஜி ,"கவிஞர்" என்றால் கண்ணதாசன் ," லடசியநடிகர்" என்று வகை தொகை இல்லாமல் பட்டங்களை தமுக்கு தாமே சூடிக் கொண்டு ஒரு கோஸ்டி அமைத்து கொண்டு அதில் குறிப்பாக இசையில் எம் .எஸ்,வி + கே.வி.எம் என அவர்களையும் இணைத்ததால் தான் இந்த இரு இசையமைபாலர்களுக்கும் புகழ் சேர்ந்தது.மறுக்க முடியுமா.
பாடல்களில் இனிமையான வாத்யங்களை இணைத்து புதுமை சேர்த்த இளையராஜா எந்த பாடலில் ராகங்களின் இனிமையை கெடுத்திருக்கிறார் சொல்லுங்கள்.மேற்க்கத்திய கார்மோனி இசையால் நமது மெல்லிசையின் பெறுமதியை உயர்த்திவர் ராஜா.
ரகுமானை எடுங்கள் .அவரது பாடல்களை யாராவது முகம் சுளிக்காமல் கேட்டதுண்டா ? இன்று உலக மயமாக்களில் மேற்க்கத்திய இசைக்கு வால் பிடித்து ஓடக்கூடிய நபர்கள் தான் அமெரிக்காவுக்கு தேவை .மண்ணின் அடையாளங்களை எல்லாம் ,காலசாரத்தை அழித்து விட்டால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தங்கு தடை இன்றி விற்கலாம்.அதனால் கலாசாரத்தை தாங்கி வரும் இசை அவர்களுக்கு தேவையில்லை.அதனால் தான் ரகுமான் போன்ற கலாச்சார , பண்பாடற்ற ,வேரற்ற வக்கிர இசை உற்பத்தியாளர்களை , இனம் கண்டு பரிசுகளை அள்ளி கொடுக்கிறார்கள். உலக அழகிகள் உருவாகுகிறார்கள்.
இளையராஜாவை இந்தியா என்ற கலைகளின் தாய் நாடு உருவாகிய மாமேதையை ,ரகுமானோடு ஒப்பிடுவது
மஹா கேவலம்.
அன்புடன்
தாஸ்

Anonymous said...

தங்கள் ஆக்கம் இன்று வாசித்தேன்.விஸ்வநாதனை தலைசிறந்த இசையமைப்பாளன் என்று மேடைக்கு மேடை இளையராஜா கூறிவருவதை நீங்களா கேட்கவில்லையா? ஆனால் நீங்கள் புகழும் ரகுமான் ,தான் வாத்தியம் வாசித்த இளையராஜாவை எங்காவது சொல்லியுள்ளாரா?சொல்லுங்கள்.! இது தான் உங்கள் நடுநிலை ஆய்வா? இதுவா அவரின் அடக்கம் ,பண்பு ,நாணயம்.
நான் விஸ்வநானதனின் இசையை ஒவ்வொருநாளும் கேட்பவன்.எனது ஏழு வயது மகளும் அத்தைமடி மெத்தையடி அடிக்கடி பாடுவாள்.அந்த அளவுக்கு அவர் பாடலை நம் மூலம் அவள் கேட்கிறாள்.
அவரும் சிறப்புத் தான் இவரும் ,சிறப்புத் தான் ஆனால அவரைவிட இவர் சிறப்பு என்கிறீர்கள்.இளையராஜாவின் வாத்திய சேர்ப்பின் இனிமையை இந்தியாவின் எந்த ஒரு இசையமைப்பலனும் செய்ததுண்டா சொல்லுங்கள்.விஸ்வநாதனுக்கு உதவியால்கள் பலர் இருந்தனர்,ஏன்?ஜோசப் கிருஷன ,கோவர்த்தனம்,ஜி.கே .வெங்கடேஷ் என பலர். நிறைய வேலை .அதை ஒருவர் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படும்.இந்த வேலை எல்லாவற்றையும் தனியே செய்து முடிக்கும் வேகமும் ஆற்றலும் பெற்ற ஒரே இசைஅமைப்பாளன் இளையராஜா தான்.மேற்க்கத்திய இசையும் சரி ,நாடுப்புற இசையும் சரி ,செவ்வியல் இசையும் ஒன்று சேர்ந்த இசை மேதை இளையராஜா தான் என்று அடித்து கூறலாம் அவருடைய காலத்திலேயே [msv] மகாதேவன் ,லிங்கப்பா. சுதர்சனம் .ஜி.ராமநாதன்.சுப்பையா நாயுடு ,வெங்கட் ராமன்,வேதா ,ஏ.எம்.ராஜா, சலபதிராவ் ,டி.வி .ராஜூ,ஆதினாரயனரவ் ,ராஜேஸ்வரராவ் ,பாண்டுரங்கன்,ஹனுமந்தராவ் ,வேதா, வி. குமார்,குன்னக்குடி,கண்டசால
எம்.எஸ் விச்வனாதானுக்கு இணையாக சில சமயங்களில் அவர்களுக்கும் மேலாக நல்ல பாடல்களை தரவில்லையா ? ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்களை ஒருமுறை கேளுங்கள்.
"கலைஞர்" என்றால் கருணாநிதி,"புரட்சி" என்றால் எம்.ஜி.ஆர்.,"நடிகர்" என்றால் சிவாஜி ,"கவிஞர்" என்றால் கண்ணதாசன் ," லடசியநடிகர்" என்று வகை தொகை இல்லாமல் பட்டங்களை தமுக்கு தாமே சூடிக் கொண்டு ஒரு கோஸ்டி அமைத்து கொண்டு அதில் குறிப்பாக இசையில் எம் .எஸ்,வி + கே.வி.எம் என அவர்களையும் இணைத்ததால் தான் இந்த இரு இசையமைபாலர்களுக்கும் புகழ் சேர்ந்தது.மறுக்க முடியுமா.
பாடல்களில் இனிமையான வாத்யங்களை இணைத்து புதுமை சேர்த்த இளையராஜா எந்த பாடலில் ராகங்களின் இனிமையை கெடுத்திருக்கிறார் சொல்லுங்கள்.மேற்க்கத்திய கார்மோனி இசையால் நமது மெல்லிசையின் பெறுமதியை உயர்த்திவர் ராஜா.
ரகுமானை எடுங்கள் .அவரது பாடல்களை யாராவது முகம் சுளிக்காமல் கேட்டதுண்டா ? இன்று உலக மயமாக்களில் மேற்க்கத்திய இசைக்கு வால் பிடித்து ஓடக்கூடிய நபர்கள் தான் அமெரிக்காவுக்கு தேவை .மண்ணின் அடையாளங்களை எல்லாம் ,காலசாரத்தை அழித்து விட்டால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தங்கு தடை இன்றி விற்கலாம்.அதனால் கலாசாரத்தை தாங்கி வரும் இசை அவர்களுக்கு தேவையில்லை.அதனால் தான் ரகுமான் போன்ற கலாச்சார , பண்பாடற்ற ,வேரற்ற இசை உட்பத்தியாலகளை இனம் கண்டு பரிசுகளை அள்ளி கொடுக்கிறார்கள். உலக அழகிகள் உருவாகுகிறார்கள்.
இளையராஜாவை இந்தியா என்ற கலைகளின் தை நாடு உருவாகிய மாமேதையை ,ரகுமானோடு ஒப்பிடுவது சரியானது அல்ல.
தங்கள் ஆய்வு நடுநிலையானதல்ல.
அன்புடன்
தாஸ்

R.S.KRISHNAMURTHY said...

அநானிமஸ் என்கிற (?) தாஸ் அவர்களுக்குச் சில சமாசாரங்களைத் தெளிவுபடுத்தும் முன்னர், அவர் அமுதவனின் பதிவை முழுவதும் கவனமாகப் படித்தாரா என்கிற சந்தேகம் எழுகிறதைத் தவிர்க்கமுடியவில்லை. ஏனெனில் எனக்குப் புரிந்த வரை இளையராஜாவை முன்னிருத்தியும் ரஹ்மான் (இசையில்) அவர் பின்னால்தான் என்றும் தெளிவாகவே அமுதவன் எழுதியிருக்கிறார். இன்னொன்று, விமரிசனம் செய்யப்புகுமுன் பதிவை திறந்த மனத்துடன் படிக்கவேண்டியது ‘மிக’ அவசியம் என்று கருதுபவன் நான். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் உதவியாளர்களைப் பட்டியல் போட்டு, அவர்களைப் போன்ற திறமைசாலிகள் இசையமைத்துக் கொடுத்து மன்னர்கள் தம் பெயரைப் போட்டுக்கொண்டு புகழடைந்ததுபோல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறார், திரு.தாஸ். அவர் சொல்வது உண்மை என்றால், மன்னர்கள் காலத்திலோ அல்லது பிறகோ, இந்த உதவியாளர்கள் யாரும் (ஜி.கே.வெங்கடேஷ், கோவர்தனம் தவிர)தனியே ஒரு படத்திற்குக் கூட இசையமைக்கவே இல்லை என்கிற உண்மையைத் திரு.தாஸ் வேண்டுமென்றே மறக்கிறாரோ? அதை மட்டுமல்ல, இதே இளையராஜா, பல படங்களுக்கு அதே எம்எஸ்வியுடனே பணிபுரிந்திருப்பதும் அவருக்குத் தெரியாதோ? நான் குறிப்பிட்டது போலத் திறந்த மனதுடன் இசையை ரசிக்கும் பாங்கு இருந்தால், ரஹ்மானின் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ ‘கண்ணாமூச்சி ஏனடா, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ ’மின்சாரப் பூவே’ போன்ற பல பாடல்கள் அவருக்கும் இனித்திருக்கும்! இவர் பட்டியல் போட்டிருக்கும் தமிழ்த் திரை இசை ஜாம்பவான்கள் எல்லாம் சமகாலத்தவர்கள் என்பதும் அவரவர்கள் திறமையினால் மட்டுமே இங்கே குப்பை கொட்ட முடிந்த்து என்பதையும் மறுக்க முடியுமா? இவ்வளவு காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுமுன், இன்றையத் திரை இசையின் தரத்தை, ‘கொலவெறி’ அளவுக்கு இறக்கியதில், இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்பதைச் சொல்லமுடியுமா? பல சமயங்களில் இளையராஜா, பொதுமேடைகளில் தன் வசமின்றி உணர்ச்சி வசப்படுவது வருத்தமளிக்கிறது. அவர் ஒருவரை எப்போது பாராட்டுவார், எப்போது தூற்றுவார் என்பது அவருக்கே தெரியாத சமாசாரம். ஒருவேளை அதனால்தான் ரஹ்மான் அவரைப் பற்றி வாயைத் திறப்பதில்லை போலிருக்கிறது! திரு.தாஸ் அவர்களுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்றுதான் - இசையை ரசியுங்கள், மற்றதெல்லாம் பிறகுதான். 1950களிலிருந்து திரை இசையை ரசிக்து வரும் மற்றவர்களின் ரசனையைக் கேவலப் படுத்தாதீர்கள்.கடைசியாக ஒரு கேள்வி: இளையராஜா இசையமைத்ததால் மட்டுமே ஓடிய படங்கள் (’சிந்துபைரவி’உள்பட!) எத்தனை? திரைப்படத்தில் இசை என்பது ஒரு பகுதி, அதுவே படமல்ல! அருமையான பாடல்களைக் கொண்ட, அறிஞர் அண்ணாவின் எழுத்தில் வெளிவந்த, எம்ஜிஆர் நடித்த,‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற படத்தின் கதி உங்களுக்குத் தெரியுமா?

Amudhavan said...

திரு தாஸ் அவர்களின் வருகைக்கு நன்றி. நீங்கள் மிக விரிவான பதிலாகச் சொல்லியிருக்கும் அல்லது கேட்டிருக்கும் கேள்விகளுக்கு நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதிலே போதுமானது என்று நினைக்கிறேன். நான் சொல்ல நினைத்ததை அவரே சொல்லியிருக்கிறார். ஏனெனில் என்னுடைய பதிவை நீங்கள் சரிவரப் படிக்கவில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் கேட்டிருக்கும் அத்தனைக்கேள்விக்கான பதில்களும் என்னுடைய பதிவிலேயே இருக்கின்றன. உங்களிடமிருக்கும் இளையராஜா மோகம் என்ற சின்ன அளவுகோலை வைத்துக்கொண்டு தமிழக இசைத்துறையையே வடிவமைத்த ஜாம்பவான்களை எடை போட வேண்டாம். அவர்களெல்லாம் போட்டுவைத்த பாதையில் பயணம் செய்கிறவர்கள்தாம் இளையராஜா ரகுமான் உட்பட எல்லாருமே.
எம் எஸ் விக்கு உதவியாளர்கள் இருந்தார்கள் இளையராஜாவுக்கு யாராவது உதவியாளர்கள் இருந்தார்களா என்கிற உங்கள் கேள்வி உங்கள்மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இளையராஜாவுக்கு யார் உதவியாளர், அவர் இசையமைக்க திரைத்துறைக்கு வந்த பிறகு யார் அவருக்கு உதவினார்கள் தினசரி அதிகாலையில் அவர் யாரிடம் சென்று கர்நாடக இசை பயின்றார் போன்ற எண்ணற்ற கேள்விகளை திரை இசை சம்பந்தப்பட்ட யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். திரு கோவர்த்தனம் அவர்களே பல வருடங்களுக்கு இளையராஜாவுக்கு இசை கோர்ப்புப் பணியில் உதவியாக இருந்தார் என்பதுபோன்ற தகவல்களையெல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
பழைய பாரம்பரிய பட்டியலில் கடைசியாக வருகிறவர் இளையராஜா அவ்வளவுதான். ரகுமான் எல்லாம் வேறொரு பரிமாணத்தில் பார்க்கப்பட வேண்டியவர். இருந்தும் மின்சாரக்கனவு, சங்கமம்,என் சுவாசக்காற்றே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,உழவன்,ரிதம் டூயட் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். நீங்கள் குற்றம் சாட்டும் அமெரிக்கா உலகமயமாக்கல் போன்ற சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி எத்தனை அருமையான மெலடிகளைத் தந்திருக்கிறார் ரகுமான் என்பது தெரியும். மெலடிகள் விஷயத்தில் ராஜாவை சத்தமில்லாமல் ரகுமான் கடந்து செல்வதும் தெரியும்.
இளையராஜவை விடவும் ரகுமான்தான் சிறந்தவர் என்பதாக நான் எங்கேயும் எழுதவில்லை. அப்படி லேசாக தொனிக்கும்படி எழுதியிருப்பது இந்த இடத்தில்தான். மற்றபடி நீங்கள் என்னுடைய பதிவை மறுபடி படித்துப் பாருங்கள். புரியவில்லை என்றால் மீண்டும் படிப்பதைத்தவிர வேறு வழியில்லை. இளையராஜா நல்ல இசையமைப்பாளர் என்று எழுதுங்கள். அது உண்மைதான் ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர் மட்டுமேதான் என்று எழுதுகிறவர்களுக்கு நிச்சயம் பாடம் நடத்தவேண்டியிருக்கிறது.
நீங்கள் சிரமப்பட்டு எம்எஸ்வி காலத்து இசையமைப்பாளர்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். அதில் விடுபட்டுப்போன முக்கியமான ஒருவர் எம்.பி.சீனிவாசன். தென்றல் காற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் போதையிலே என்ற மறக்கமுடியாத பாடலை வழங்கியவர் அவர். முடிந்தால் சரியான தகவல்களோடு மீண்டும் வாருங்கள் நிறையப் பேசுவோம்.

Anonymous said...

வணக்கம்

தங்கள் பதிலும் திரு கிருஷ்ணமூர்த்தி பதிலும் பார்த்தேன் .எம்.பி.ஸ்ரீனிவாசனை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.நான் பட்டியல் இடுவதென்றால் இசையமபால்ர்களின் பெயர்களே பின்நூட்டமாகிவிடும்.
என் கேள்விகளுக்கு உங்கள் நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதிலே போதுமானது என்று நினைக்கிறேன். என எழுதியுள்ளீர்கள்.
அவருடைய பதில் சிறு பிள்ளைத்தனமகவே எனக்கு தெரிகிறது.அதுமட்டுமல்ல என்னுடை கருத்தை திரித்தும் இருக்கிறார்.இசையமைப்பில் உதவியாளர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களை வைத்து இசையமைத்தார்கள் என்றா அர்த்தம்.? பழைய படங்களில் இசையமைப்பாளர்கள் தங்கள் உதவியாளர்களின் மெட்டுக்களை களவாடிய சம்பவங்கள் ஏராளமாக உண்டு.அதற்க்கு நிறைய சான்றுகளை என்னால் தர முடியும்.
பழைய இசையமைப்பாளர்கள் எல்லாம் என் மதிப்புக்கும் ,மரியாதைக்கும் உரியவர்கள்.என்னுடைய பதிலில் ..."நான் விஸ்வநானதனின் இசையை ஒவ்வொருநாளும் கேட்பவன்.எனது ஏழு வயது மகளும் அத்தைமடி மெத்தையடி அடிக்கடி பாடுவாள். .." என்று சொல்லியிருக்கிறேன்.முதலில் திரு கிருஷ்ணமூர்த்தி அதை உற்று படிக்க வேண்டுகிறேன்.அதுமட்டுமல்ல நீங்கள் பரிந்துரைக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி ..." இந்த உதவியாளர்கள் யாரும் (ஜி.கே.வெங்கடேஷ், கோவர்தனம் தவிர)தனியே ஒரு படத்திற்குக் கூட இசையமைக்கவே இல்லை என்கிற உண்மையைத் திரு.தாஸ் வேண்டுமென்றே மறக்கிறாரோ? என்கிறார்.அவர் எந்த உலகிலிருந்து இதை எழுதுகிறார் என்பது புரியவில்லை.ஏனென்றால் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த " தேன் சிந்துதே வானம் எனை உனை தாலாடுதே " [ SPB + S.ஜானகி படம் பொண்ணுக்கு தங்கமனசு ]]என்ற சிவகுமார் நடித்த பாடலை நீங்களும் கேட்கவில்லையா ?

பூந்தென்றல் இசைபாட
புகழ் பானர கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில்
விளையாடும் தமிழ் வாழ்க

என்ற இந்த தமிழின் பெருமைய விளக்கும் பாடலுக்கும்[ பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியது, படம் தாயின் கருணை ] இசையமைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ். அதுமட்டுமல்ல மகளே உன் சமத்து ,நானும் மனிதன் தான் ,தாயின் கருணை, யாருக்கும் வெட்கமில்லை .தென்னங்கீற்று ,பிரியாவிடை , முருகன் காட்டிய வழி ... இன்னும் பல தமிழ் படங்கள் உண்டு. கன்னட படங்கள் 300 க்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
கோவர்த்தனம் இசையமைத்த படங்கள் பல உண்டு .மிகவும் புகழ் பெற்ற பாடல்
அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி
என்னை சேறு நாள் பார்க்க சொல்லடி [பட்டணத்தில் பூதம் ]

கங்கை நதியோரம் ராமன் நடந்தான். [ வரபிரசாதம் ] யேசுட + வாணி ஜெயராம் பாடியது கேட்கவில்லையா.
நான் திறந்த மனத்துடன் இசையை ரசிப்பவன். அதுமட்டுமல்ல உணமையையும் ஒத்துகொள்பவன்.ரகுமானின் பாடல் சிலவற்றை பட்டியல் இட்டிருக்கிறார்.அப்படி பார்த்தால் அவர் போட்ட பாடல்களை விட சிறந்த பாடல்களை தேவா, ,ராஜ்குமார் , மரகத மணி .யுவன் சங்கர் ராஜா. வித்யாசாகர் இன்னும் பிற கலைஞர்களின் நாலு ஐந்து பாடல்களை வரிசைப்படுத்தலாம்.


தாஸ்

Anonymous said...

இளையராஜா என்று சொன்னாலே படம் வெற்றி என்று இருந்த காலம் திரு கிருஷ்ணமூர்த்தி அறியவில்லையா ?முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.இன்றை " பெரி...ய்..ய் ய" இயக்குனர்கள் எல்லாம் அவரின் இசைக்காக காத்து கிடந்தனர் என்பதும் வரலாறு. பாரதிராஜா பதினாறு வயதினிலே எடுத்த போது தயாரிப்பாளர் ராஜ்கண்ணு இட்ட கட்டளை இளையராஜா இசை இருக்கும் என்றால் ஒ.கே ! என்பது தான்.
இளையராஜாவின் இசை பற்றி இங்கே நான் நீட்டி முழக்க வேண்டிய அவசியம் தேவையில்லை .அறிந்தவர் அறிவார்.
பழைய பாரபரியத்தில் பின்னுக்கு வந்த கம்பனை எப்படி பாரதி கவிதையில் முன்னுக்கு வைத்தானோ ..
கம்பனை போல்
இளங்கோ போல்
வள்ளுவன் போல் அது இளையராஜாவுக்கு தான் பொருந்தும்.வரலலாற்றில் பின் வந்த கம்பனை ஏன் பாரதி முன் வைத்தான்.? விடையை நீங்களே கண்டு பிடியுங்கள்.
ஒரு கலைஞனை அவன் வாழ்ந்த காலத்துடன் தன மதிப்பிட வேண்டும்.ரகுமான வந்த காலம் எப்படி பட்டது.மேற்கத்தேய போப் பாடல்கள் ஸ்டார் டி.வீயிலும், எம் டி.வீயிலும் முழங்கி ஒரு ரசிகவட்டத்தை உண்டாகிய காலம்.மைக்கேல் ஜாக்சன் ,மடோன போன்ற பாடகர்கள் காலம். அதற்க்கு ஏற்ப மேற்க்கதீய போப் இசைக்கு வால் பிடித்து ஓடியவர் ரகுமான்.தாளம் என்ற தண்டவாளத்தில் அவர் கொண்டு வந்து சேர்த்த குப்பைகள் ஏராளம்.இந்த வகை வேரில்லாத இசையை தாளம் என்பது மேற்க்கத்திய வேதாளத்தை காவிக்கொண்டு திரிவதும் அதற்க்கு மிகையான விளம்பரகள் கொடுப்பதும் ,காட்டு கத்தலகளுக்கு விருதுகள் கொடுப்பதும் தர்மம் ஆகிவிட்டது.!!
நாடுபற்றை வளர்க்கும் தேசிய கீதத்தை கூச்சலடிப்பதும் இந்தியாவில இருக்கும் ஒருவருக்கும் உறைக்கவில்லையா?
ஏனென்றால் அது இந்தியாவின் அயல் நாட்டு கொள்கை.இப்படித்தானாம் இந்தியாவை உலகிற்கு அறிமுகம் செய்ய வேணுமாம்.அப்படிஎன்றால தானாம் வெள்ளைக்காரர்கள் எல்லாம் முதலீடு செய்வார்களாம்.!!!
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் பரமப்ரைக்கு அன்று ஆங்கிலேய அரசு பணம் கொடுத்தது ,இன்றும் ஆங்கிலேயரின் அடிமை வாரிசுகளும் [இந்திய அரசு ] பணம் கொடுத்து வருகிறார்கள் என அறிகிறேன்.

அன்பன்

தாஸ்

Anonymous said...

நாடுபற்றை வளர்க்கும் தேசிய கீதத்தை கூச்சலடிப்பதும் இந்தியாவில இருக்கும் ஒருவருக்கும் உறைக்கவில்லையா?
ஏனென்றால் அது இந்தியாவின் அயல் நாட்டு கொள்கை.இப்படித்தானாம் இந்தியாவை உலகிற்கு அறிமுகம் செய்ய வேணுமாம்.அப்படிஎன்றால தானாம் வெள்ளைக்காரர்கள் எல்லாம் முதலீடு செய்வார்களாம்.!!!
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் பரமப்ரைக்கு அன்று ஆங்கிலேய அரசு பணம் கொடுத்தது ,இன்றும் ஆங்கிலேயரின் அடிமை வாரிசுகளும் [இந்திய அரசு ] பணம் கொடுத்து வருகிறார்கள் என அறிகிறேன்.
பாடல் வரிகள அர்த்தத்தை முழுமையாக இழந்த காலமும் இது தான்.ஆனால் வைரமுத்துவை கேளுங்கள் மீசையை முறுக்கி அதற்க்கு சப்பை கட்டு கட்டுவார்.
இளையராஜா திரைக்கு வந்த காலம் எப்படிபட்டது.கிராமீய ,நாட்டுபுற இசை அலை அடித்து கொண்டிருந்ததா? இந்தி பாடல அலை அடித்து கொண்டிருந்தது.தமிழ் நாட்டிலயே ஹிந்தி பாடல்கள் தான் வெற்றி கோடி நாட்டிக் கொண்டிருந்தது.அதனை தமிழ் நாட்டுப்புற இசை வடிவத்தால் துரத்தியடித்தார்.தாளம் தான் அதை செய்தது.அது தான் உணமையான தமிழனின் தாளம்.
நாடுப்புற இசையை கே .வீ .மகாதேவன் ,ஜி.ராமநாதன் என பலரும் இசையமைத்துலார்கள் என்பது உண்மையே.ஆனாலும் அதன் அசலான இசைக்கருவிகள் ,இசைக்கூறுகளை வெளிப்படுத்தியவர் இளையராஜா தான்.
இளையராஜாவுக்கு பின் தான் என மிக சாதரணமாக சொன்னது தான் தவறு.இசையின் உச்சம் ராஜா.இதில் ரகுமானை ஒப்பிடுவது தான் அபத்தம்.[ இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான்.அமுதவன் ] நீங்கள் "சற்று" என்று குறிப்பிட்டது தான் சற்று அல்ல கிட்டவே வைக்கமுடியாது.
எனக்கு தெரிந்து கோவர்த்தனம் ,சுந்தர்ராஜன் போன்றோர் படங்களில் பணியாற்றினார்கள்.

தியகய்யரை இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள்.அவரை விட இளையராஜா ஒன்றும் குறைந்தவர் அல்ல.ஏனென்றால் தியாகய்யர்(1767- 1847)எந்தெந்த தமிழ் கீர்த்தனைகளை எல்லாம் காப்பி அடித்தார் என்று இசைமேதை டாக்டர் எஸ்.ராமநாதன் என்பவர் திருச்சி வானொலியில் ஒரு நிழசியாக்வே பாடிக்காடினார்.ஆந்திராவுக்கு தன வாழ் நாளில் ஒரே ஒரு முறை போன தியாகய்யர் கேட்டதெல்லாம் தஞ்சை கோவில்களில் வாசித்த நாதஸ்வரமும் ,தேவரங்கலுமே .அவருக்கு முன்பே

1.சீர்காழி முத்துதாண்டவர்(1525- 1605)

2.சீர்காழி அருனாசலகவிராயர்(1711- 1779)

3.மாரி முத்தாபிள்ளை(1712_ 1787) எனதமிழ் மும் மூர்த்திகள் இருந்து இசை வளர்த்தாகள். இன்று அவர்களை இருட்டடிப்பு செய்து செய்து விட்டார்கள் பிராமணர்களும் அவர்களது தமிழ் கூட்டாளிகளும். தியாகய்யர் எழுதிய தெலுங்கு பாடல்களும் கொச்சையனவையே என அறிஞர்கள் நிரூபித்துவிட்டார்கள். பின்னால்வந்தவர்க்க பாடி பாடியே இன்றுள்ள நிலைக்கு வந்தாக குறிப்புகள் உள்ளன. 1980 களில் அவருக்கு விழா எடுக்க அன்றைய முதல்வர் என .டி ராமராவ் மறுத்ததையும் நினைவில் கொள்ளலாம்.ஆனால் தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் அவரை மிகப்படுத்தி கொண்டாடி வருவதே அவர் பற்றிய " மேன்மைக்கு " காரணம். ஜி.லிங்கப்பா இசையமைத்த கன்னட படம் ஒன்றில் [ கர்னாடக இசையை அடிப்படையாக கொண்ட கதைக்கு ]ஏதோ காரணத்தால் கோவித்து விலகிய போது , டைட்டிலில் பாடல பாடிய பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரை போட்டு தான் தான் இசையமைத்தேன் என தேசிய விருது வாங்கியதும் உண்டு.

தமிழசை [கர்நாடக் இசை ] ,மேற்க்கதீய இசை ,நாட்டுபுற இசை ,சினிமா இசை என இசையின் பன்முகங்கள் கொண்ட இசைமேதை இந்தியாவில் ஒருவர் என்றால் அது இளையராஜா தான் ரகுமான் போல இசையமைக்க அவரது மகனே போதும்.ரகுமான் பத்து பாடல்கலில் எட்டு காப்பி என்பதையும் நிரூபிக்க முடியும்.ரகுமானை இளையராஜ்வோடு ஒப்பிடுவது பொருந்தாது.ரகுமானை மட்டும் தெரிந்த கிணற்று தவளைகளுக்கு விஸ்வநாதன் போன்றோர்ரை தெரியாதது என்பதை வைத்து இளையராஜாவை ரகுமனோடு ஒப்பிடுவதும் அபத்தம்.

அன்பன்

தாஸ்.

Amudhavan said...

மறுபடி மறுபடி வந்து வாதம் செய்யும் நண்பர் தாஸ் அவர்களின் வருகைக்கு நன்றி. தேம்ஸ் நதித் தீரத்திலே இருந்துவருகிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்லது. நிறைய விஷயங்களுடன் இருக்கிறீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் திரும்பத் திரும்ப ஒரேவிதமான தவறைச் செய்கிறீர்கள். அதாவது பதிவையும் சரி, அதற்கான பதில்களையும் சரி சரியாக அல்லது கவனமாகப் படிக்கமாட்டேனென்கிறீர்கள். அல்லது பதிவுகள் படிக்கும்போதும் உங்களுக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களைக்கேட்டபடியே படிக்கிறீர்கள் போலிருக்கிறது. அதனால்தான் கவனம் பிசகுகிறது. சொல்லாத வாதங்களை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு பதில்களைத் தேடிப்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர் கிருஷ்ணமூர்த்தி தமது பதிலில் ஜி.கே.வெங்கடேஷ் கோவர்த்தனம் தவிர வேறு எந்த உதவியாளரும் ஏன் பெரிதாக இசையமைப்பாளர்களாக வரவில்லை என்று கேட்டிருந்தார். நீங்கள் உடனே கோவர்த்தனம் இசையமைத்த படங்களின் பட்டியலையும் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த படங்களின் பட்டியலையும் சிரமப்பட்டுத் தருகிறீர்கள். ரகுமான் மீது உங்களுக்கு நிறைய கோபம் இருக்கிறது அதனால் தேவையில்லாமல் அவரை இங்கே வந்து திட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.'ரகுமானை மட்டும் தெரிந்த கிணற்றுத்தவளைகளுக்கு விஸ்வநாதன் போன்றோரைத் தெரியாது' என்று எழுதுகிறீர்கள். இந்த 'கிணற்றுத்தவளைகள்' ரகுமான் காலத்துக்குச் சற்று முன்னதாக இளையராஜா காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டார்கள் என்பதுதான் பிரச்சினையே. மற்றபடி இளையராஜா பற்றிய நியாயமான விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன. எழுதுகின்ற நேரம்வரும்போது அவ்வப்போது எழுதலாம் என்று நினைக்கின்றேன்.நன்றி,வணக்கம்.

Anonymous said...

திரு.அமுதவன் அவர்களே ,
வணக்கம்.
ரகுமான் எனது பக்கத்து வீட்டுக்காரரா நான் கோபித்து கொள்ள ?ஜி.கே.வெங்கடேஷ் கோவர்த்தனம் பற்றி நீங்கள் சுட்டி காட்டியர்கத்ர்க்கு நன்றி.அதற்க்கு வருந்துகிறேன் .
" கோவர்த்தனம் இசையமைத்த படங்களின் பட்டியலையும் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த படங்களின் பட்டியலையும் சிரமப்பட்டுத் தருகிறீர்கள். " என குறிப்பிடுகிறீர்கள .நீங்கள் நினைப்பது போல நான் சிரமப்படவில்லை .தமிழ் திரைப்பாடலக்ளின் தொகுப்பு 1940 களிலிருந்து இன்று வரையான தொகுப்புக்கள் ஆக 10 ,0000 த்திற்கும் மேற்ப்பட்ட பாடல்கள் என்னிடம் உள்ளன.நாதஸ்வர மேதை திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பாடிய பாடல்களும் உண்டு. privte records ஆக வந்த தனிப்படலகும் நிறைய உண்டு.அந்த பாட்டியல் இட நான் ஏதும் சிரமப்படவில்லை.
உங்கள் நோக்கம் விஸ்வநாதனை வைத்து இளையராஜாவை " இவர் பெரிய ஆளில்லை " என்பதை மறைமுகமாக சொல்வது தான். அதை நீங்கள் நாசூக்காக,நாகரீக தோரணையில் ,உங்கள் எழுத்தாற்றலால் சொல்லுகிறீர்கள்.நான் சொல்வதெல்லாம் இது தான் .
1 . ஒரு கலைஞனை அவன் வாழ்ந்த காலத்துடன் தன மதிப்பிட வேண்டும்.
2 .அவன் தனது துறையில் என்னென சாதனை செய்தான்.முக்கியமாக இசை பற்றியே எழுத வேண்டும்.அதே துறையில் இருந்த மற்ற கலைஞர்களை விட என்ன " புதுமை " செய்தான் ? [சர்க்கஸில் கோமாளி செய்யும் " வித்தை " அல்ல.]
எனது அபிப்பிராயப்படி இளையராஜா இசையில் செய்தது
நாடக இசையில் சங்கரதாஸ் சுவாமிகள் என்ன புதுமை செய்தாரோ ,சந்தங்களில் அருணகிரிநாதர் என்ன புதுமை செய்தாரோ, கவிதையில் கம்பர் என்ன என்ன புதுமை செய்தாரோ, நவீன கவிதையில் பாரதி என்ன புதுமை செய்தாரோ
காப்பியத்தில் இளங்கோவடிகள் என்ன என்ன புதுமை செய்தாரோ,தேவார காலத்தில் பாணர் பரம்பரையில் வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணத்தார் என்ன புதுமை செய்தாரோ அவற்றைத்தான் இளையராஜா திரை இசையில் செய்தார்.

தமிழ் நாட்டில் வளர்ந்த இசைவகைகளை அவற்றின் வளர்ச்சி போக்கில் ஆய்வு ஒன்றை செய்தால் இளையராஜாவின்
நிலை என்ன என்பது தெரியவரும். அப்படி ஒரு ஒப்பீட்டை செய்யுங்கள் .தொடர்ந்து விவாதிக்கலாம்.

காய்தல் ,உவத்தல் இன்றி ஒரு ஆய்வை இசையில் செய்து பார்த்தால் தான் இளையராஜாவின் உலகத்தரம் வாய்ந்த இசையை உணரமுடியும்.
இசை என்று பார்த்தால் இசை நுட்பங்களிலும் ,உள்ளத்தை ஈர்ப்பதிலும் ,உணர்ச்சி செறிவிலும் ,மரபில் நின்று அதொடிணைந்து புதுமைகள் ,இன்னும் எத்தனையோ விடயங்களில் புதுமை செய்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜா.அவருக்கு முன்னுள்ளவர்களை அவரே மேடைகளில் போற்றி சில சமயம் தன்னை குறைத்து விடுகிறார் என்பதும் வேறு விடையம்.!!அது அவரது அடக்கம் . அதை யாரும் கண்டு கொளவதில்லை.!!!

அதுமட்டுமல்ல அவர் ஆன்மீக உரையாற்றுவதும் வருந்தத்தக்கதாகும் என்பது தாழ்மையான கருத்து.[அந்த வெங்காயத்தை உரிக்க எத்தனையோ மூளைகொளாருகள் இருக்கின்றன.]
அவருடைய இசையை பாமரரும் ,பண்டிதர்களும் ஏற்க்க வைத்த மகா கலைஞர் இளையராஜா. இது அபூர்வமாக சில கலைஞர்களுக்கே வாய்க்கிறது.
இளையராஜா இந்தியாவின் மரபிசையினதும் ,அதில் நின்று புதுமை செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய இந்த நூற்றாண்டின் அதிசயம்.

புதுவருட வாழ்த்துக்கள்.


நன்றி,வணக்கம் .விடை பெறுகிறேன்.
அன்புடன்
தாஸ்
ktthas@yahoo.co.uk

R.S.KRISHNAMURTHY said...

’காய்தல் உவத்தல் இன்றி’ என்பதை வாக்கியமாக மட்டும் (!) உபயோகப்படுத்தி வாதம் புரியும் திரு.தாஸ் அவர்களுடைய கருத்துக்களுக்கு,எனக்குப் பதிலாக அமுதவன் அவர்கள் சொல்லியிருக்கும் பதிலே போதுமானது என்று நினைக்கிறேன். நானும் ‘திறந்த மனதுடன்’ என்ற சொற்பிரயோகம் செய்திருப்பதன் அர்த்தமும் அதேதான் என்பதும் தெளிவு! பெரிய பெரிய இயக்குனர்கள் ராஜாவுக்காகக் காத்திருந்தார்கள் என்றால் ரகுமானுக்கு யாருமே காத்திருக்க வில்லையா? மீண்டும் நான் சொல்லிக்கொள்வதெல்லாம், தாஸ் அவர்களே, வாதம் செய்யுங்கள், ஆனால் அதற்குறிய வரைமுறைகளை அலட்சியப் படுத்தவேண்டாம் என்பதுதான். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Amudhavan said...

நண்பர் தாஸ் அவர்களே, பழைய பாடல்களின் தொகுப்பு உங்களிடம் 1940லிருந்து இருக்கிறது, ராஜரத்தினம் பிள்ளை பாடிய பாடல்முதல் தனிப்பட்ட பாடல்கள்வரையிலான தொகுப்பெல்லாம் உங்களிடமிருப்பது அறிந்து வியப்படைந்தேன். பெங்களூரில் என்னுடைய நண்பர் ஒருவர் தாமஸ் என்று பெயர். இப்படிப்பட்ட தொகுப்புகளையெல்லாம் இன்னமும் பாதுகாத்துவருகிறார். திரையிசையைப் பற்றிய நிறைய விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதனை உங்களுடைய முந்தைய பதில்களிலிருந்தே தெரிந்துகொண்டேன்.மிகவும் மகிழ்ச்சி. இந்தியா வந்தால்-பெங்களூர்ப்பக்கம் வந்தால் வாருங்கள் நிறையப்பேசுவோம். இத்தனைத் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கும் உங்கள் குணத்தை மாற்றுவதற்கில்லை. என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது ஆனால் அதனைத் தவறாகத்தான் செலவு செய்வேன். எனக்கு நிறைய கணித சூத்திரங்கள் தெரியும். ஆனால் இந்தக் கணக்குக்கான விடையைத் தவறாகத்தான் போடுவேன் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் நான் என்ன செய்யட்டும்?
இந்தப் பதிவுக்கு மாறி மாறி வாதங்கள் புரிந்த உங்களுக்கும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எனது நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Ganapathy Ram said...

Nice Read !!!!

I am a Ilayaraja fanatic and i'm open to all music

I have no complaints on ur article

But i have some complaints on 1st comment posted here

When on earth did Ilayaraja said After Thiyagaraja its him ????

Some people don't even hear what he speaks and comment all over :/

I had an oppurtunity to be an audience in a music concert by Ilayaraja's Son Mr.Yuvan Shankar Raja

There When Ilayaraja came he uttered these words , when he was asked of his heir in music

"Naan modha innum isai kathukala , aprom thane ya vaarisu , ennaku munnadi aalunga ellam enna enna senjutu ponanga , MSV anna kaal la saastangama vilundhu kedakanum kaalathukum naan , avlo panni irukar avar "

those were the words of Ilayaraja

And in recent 50 years function of Cine Music association, when all people performed their songs , It was Ilayaraja who chose a C.R.Subbaraman song and asked the orchestra to play his famous song from Laila - Majnu(1949) movie

Why he had to do that ??? He wanted younger gen to educated to that divine music , which inspired him to be a composer

Still many more instances for his admiration of his predecessors in tamil cinema music can be quoted

My kind request is don't use harsh words , without musch groundwork .

Regards
Ganapathy Ram

suresh said...

எதோ இந்தமட்டும் இப்போதாவது தமிழ் பாடலுக்கு அங்கிகாரம் கிடைத்து இருக்கிறதே அப்படின்னு மகிழ்ச்சி அடையரதை விட்டுட்டு இதென்ன வறட்டு வாதங்கள்...

யார் பெரியவன் அப்படிங்கற சண்டையை சம்பந்தபட்டவங்க போடறாங்களோ இல்லையோ... இணையத்தில அது ஜெகஜோதியா நடக்குது. இதுதான் எனக்கு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகிறது. ரஜினி கமல், அஜித் விஜய், சச்சின் கங்குலி, இளையராஜா விஸ்வநாதன், இளையராஜா ரகுமான்... என்னதான் பிரச்னை...? ஒருத்தர்க்கு ரெண்டு பேராக இருப்பதால் தமிழுகுதானே பெருமை.. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்...

என் ஆதங்கமெல்லாம் ஒரு இரண்டு மூன்று பேர் மட்டும்தானே கிடைத்து இருக்கிறார்கள் என்பதுதான்...

இன்னும் நிறைய பேர் வரவேண்டும். நிறைய விருதுகள் தமிழுக்கு வர வேண்டும். தமிழின் பெருமையும் தமிழிசையின் பெருமையும் உலகெங்கும் பரவ வேண்டும்.

ஜோதிஜி said...

நேரம் இருக்கும் போது பழைய பதிவுகளை மீண்டும் பத்தி பிரித்து போட முடியுமா? என் று பாருங்கள். மீண்டும் வருவேன். படிக்க நிறைய விசயங்கள் உள்ளது. நன்றி.

Post a Comment