Wednesday, January 4, 2012

இளையராஜாவா......ரகுமானா ? – பகுதி : 2


விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு முன்புவரையிலும் தமிழ்த்திரையை ஆதிக்கம் செலுத்திவந்த இசையமைப்பாளர்களாக எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன். ஆதிநாராயணராவ், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ஆகிய விற்பன்னர்கள் பலர் இருந்தார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பாடல்களுக்கெல்லாம் கூட இசையமைத்துத் தந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். எஸ்.வி.வெங்கட்ராமனைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கால் பணிந்து வணங்குவார் எம்.எஸ் .என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஜி.ராமனாதன் அந்தக்கால இசையமைப்பில் செய்யாத புதுமைகள் இல்லை.ஒரு பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் ஜி.ராமனாதன். இவர்கள் அத்தனைப் பேரும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் வருகை நிகழ்கிறது. ஒரு புதிய பிரளயம் பாய்ந்ததுபோல் அத்தனை நாட்களும் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த பாடல்களின் போக்கு சத்தமில்லாமல் மாற்றியமைக்கப்படுகிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாணியிலான மெல்லிசை புதிய பாணி திரைஇசையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றைக்குப் பிரவாகமெடுக்கத்தொடங்கிய அந்த இசை சின்னச் சின்ன மாறுதல்களுடன் இன்றைக்கும் பிரவாகமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மாற்றங்களுக்கும் அந்த மாறுதல்களை நிகழ்த்தும் சாதனையாளர்
களையும் மீறியதொரு புறக்காரணம் இருக்கும். அந்தக் காரணத்தோடு ஒன்றிணைந்துதான் சாதனையாளர்களுக்கும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். திரையுலகில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக 1952-ஐக் குறிப்பிட வேண்டும். திரையுலகில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் வருகை நிகழ்ந்த வருடம் அது. அந்த வருடத்திலிருந்துதான் நடிப்பு, கதை, வசனம், இசை, இயக்கம், என்று ஆரம்பித்து திரையின் அத்தனைத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்த அற்புதம் நடந்தேறியது. 52-க்கு முந்தைய படங்களையும், அதற்குப் பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடியும். கலைஞர் கருணாநிதிகூட அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்தே திரைக்கதை வசனங்கள் எழுதி வந்தபோதிலும் 52-ன் பராசக்தி படத்திற்குப் பிறகுதான் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அவராலும் போட முடிந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவரையிலும் தயாரிக்கப்பட்டு வந்த பழைய பாணிப்படங்களுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய பாணியில் படங்கள் வர ஆரம்பித்தது அந்த ஆண்டிலிருந்துதான். ஆக, அந்த ஆண்டிலிருந்து ஒரு புதிய திருப்பம் நிகழ ஆரம்பித்தது.

இந்தத் திருப்பம் திரையுலகில் மட்டுமல்ல. ஊடகத்துறையிலும் நிகழ ஆரம்பித்தது. தமிழில் வெவ்வேறு புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சொல்லப்போனால் திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு இதழ்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அதுவரையிலும் இதழ்களில் ஆதிக்கம் செலுத்திவந்த 'ஐயராத்துத் தமிழும்', பண்டிதர்களின் தமிழும் விடைபெற்று ,புதிய -எளிய-இயல்பான -இலக்கியத்தமிழ் அரியாசனம் ஏறியது.அதிகக் கல்விக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதிகமான பொதுக்கூட்ளும் அதிகமான இலக்கியக் கூட்டங்களும் மக்களிடையே நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில் சமூகச் சூழலுக்கான ஒரு மாறுதல் பெரிய அளவில் நிகழ்கிறது.

'பணம்' என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசைப்பயணம் ஆரம்பிக்கிறது.ஆரம்பம் சாதாரணமானதாக இருந்தபோதிலும் மொத்த ஊரையும் போர்த்தும் பனிபோர்வையைப்போல தமிழக மக்களைச் சுற்றிக் கவிகிறது அந்த இசை மழை. பொழுது போக்கிற்காக ஏதோ இரண்டு பாடல்களைக் கேட்டோம் அடுத்த வேலையைப் பார்க்கப் போனோம் என்றில்லாமல் ஊனில்,உணர்வில், உயிரில் கலந்து மக்களுடன் நிலைத்து நிற்க ஆரம்பிக்கிறது அவர்களின் பாடல்கள். படுத்தால் எழுந்தால் நிமிர்ந்தால் உட்கார்ந்தால் நடந் தால் அவர்களின் இசையோடுதான் என்கிற அளவுக்கு அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கிறது. அந்த நாளை முடித்து இரவு படுக்கைக்குச் செல்வதற்குக்கூட அவர்களுடைய பாடல்களை ஒருமுறைக் கேட்டுவிட்டே நித்திரையின் வசப்படுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது அவர்களின் இசை.

அவர்களின் இந்தச் சாதனைக்கு ஆணிவேராய், அஸ்திவாரமாய், உயிராய் இருந்தது இன்னொரு மகாகலைஞன். அந்தக் கலைஞனின் பெயர்; 'கண்ணதாசன்!' ஆம் நண்பர்களே, இந்த மூன்றுபேரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இசை சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது. அளவிட முடியாதது. இன்னொருவராலோ அல்லது இன்னும் சிலர் சேர்ந்துகொண்டோ இதனை மிஞ்சும் ஒரு இசை சாதனையை இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்த்திவிட முடியாது. இந்தக் கூட்டணி உடைந்த பின்னால் அதில் இருந்த இரண்டுபேர் சேர்ந்து அவர்களின் முந்தைய சாதனைகளுக்கு நிகரான இன்னொரு சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்தாகவேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பிரிந்த பின்னால் விஸ்வநாதன் -கண்ணதாசன் இணைந்தோ, அல்லது ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்தோ முந்தைய அளவுக்கு ,அந்த உயரத்திற்கு அவர்களால் மீண்டும் வரமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்ததற்குப்பின் அந்த இரட்டையர் ஏற்படுத்தியிந்த தாக்கத்தின் பலன் இசையமைப்பாளர் என்ற முறையில் விஸ்வநாதன் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் அமைந்துவிட்டது.

வணிகப்போட்டியில் விஸ்வநாதனுக்கு ஈடுகொடுத்து ஓடி வரமுடியாமல் மிகவே பின்தங்கிப் பின்னர் ஒதுக்கப்பட்டவராகவே மாறிப்போனார் ராமமூர்த்தி. திரைப்பட வணிகச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு தம்முடைய இசைஞானத் திறமையால் தனியரசராய் அதற்குப் பின்னரும் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத சக்தியாய் ஆட்சி செலுத்தினார் விஸ்வநாதன். பல ஆயிரம் பாடல்கள் அவரது இசைப்பிரவாகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தியாய் இருந்து எழுப்பிய இசைக்கோயிலுக்கு இணையான இன்னொன்று கிடையாது.

அவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த இசைக்கோர்வைகளில் யாருடைய பங்கு அதிகம் என்பதான ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த இருவருமாகச் சேர்ந்திருந்து உருவாக்கியபோது கிடைத்த அந்த ஒருங்கிணைப்பு, அந்தப் பக்குவம், அவர்களில் இருந்த அந்தப் புரிந்துணர்வின் பலன், அந்த ஒருங்கிசையின் வெளிப்பாடு, இரண்டுபேரின் திறமையும் எந்த அளவுக்குச் சேர வேண்டுமோ அந்தக் கலவையின் சரியான சதவிகிதம் இவையாவும் ஒரு அற்புதப் படைப்பின் ரகசியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இருவரின் பங்களிப்பில் உருவான பாடல்கள்தாம் இன்றைக்கும் தமிழ்ப்பாடல்களின் அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது.

தமிழ்ப்படங்களின் உன்னத அடையாளங்களாகவும் மிகப்பெரும் சிகரங்களாகவும் இருந்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இவர்களின் மிகப்பிரபலமான பாடல்கள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இந்த மண்ணில் நிலைத்து நிற்கப்போகும் சாகாவரம் பெற்றவை. அந்தப் பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இவர்கள்தாம்.

இவர்களின் காலத்திய பாடல்கள்தாம் தமிழில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள் என்பதற்கான அடையாளங்கள் ஆரம்பமுதலே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்தில் வரும் பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் பிரபலமாவதற்கே என்னென்னமோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் வேறு என்னென்னமோ செய்து அதனைக் கொண்டாட வேண்டியிருக்கிறது.

அப்படியிருக்கையில் ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகவும் பிரபலமாகவும் உருவாக்கும் அதிசயம் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு படம் இரண்டு படத்தில் அல்ல; சுமார் நூறு படங்களிலாவது அவர்களின் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபூர்வ சாதனை அந்தக் காலத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ; சில இந்திப் படங்களிலும் அன்றைக்கு இருந்த சில இந்தி இசையமைப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களும் இனிமையாகவும் பிரபலமாகவும் இருக்கும் இந்தச் சாதனைகளை இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பொருத்திப் பார்த்தோமானால் அவர்கள் இசையமைத்த படங்களில் ஒரு பத்துப் படங்களோ அல்லது இன்னும் இரண்டொன்றோ தேறலாம். நூற்றுக் கணக்கான படங்கள் விஸ்வநாதனுக்குப் பின்னர் யாருக்குமே தேறாது.

இவர்களின் இசைவெற்றிகளுக்கு கண்ணதாசன் பெருமளவு காரணமாக இருந்ததுபோலவே பின்னணிப் பாடகர்கள் சிலரும் காரணமாக இருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழிகோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோரின் பல்வேறுபட்ட திறமைகள் பட்டைத் தீட்டப்பட்டுப் பிரகாசப்படுத்தப்பட்டன. வேறு பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை 'செந்தமிழ்த் தேன் மொழியாள்' மூலமும் 'எங்கள் திராவிடப்பொன்னாடே' மூலமும் வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்தனர். என்றைக்கும் மறக்கமுடியாத இன்னொரு பாடல்தளம் சந்திரபாபுவுடை யது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு இன்னொரு மாற்றுக்குரல் இதுவரையிலும் வரவில்லை. பின்னணிப் பாடகர்களைப் பொறுத்தவரையில் யாரை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களெல்லாம் இன்றைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் சேர்த்தே இவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமாவின் பொதுவான நியதியே பெரிய படங்களுக்குச் சிறப்பாகச் செயல்படுவது என்பதுதான்.அந்தக் கணக்குப்படி பார்த்தால் சிவாஜி படங்கள், எம்.ஜி.ஆர். படங்கள் மற்றும் வேறுசில பெரிய படங்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசைக்கோர்வை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரட்டையரின் பட்டியலைப் பார்த்தோமானால் இவர்கள் ஈடுபடும் எல்லாப்படங்களுக்குமே தங்களின் திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான இசையையே வெளிப்படுத்தும் தொழில் நேர்மை இவர்களுக்கு இருந்திருக்கிறது.அதனால்தான் அவ்வளவு வெற்றிபெறாத பல படங்களின் பாடல்கள்கூட இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்கும் பாடல்களாக இருந்துவருகின்றன.

இவர்களின் அன்றைய பாடல்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், ஜெமினிகணேசன் பாடல்கள் , பீம்சிங் பாடல்கள், ஸ்ரீதர் பாடல்கள் என்று தனித்தனியாகப் பிரித்து இனம் காணக்கூடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையல்லாமல் கண்ணதாசனின் படைப்புக்கள் எல்லாருக்கும் பொதுவானவை. அவற்றில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள் உறவு பற்றிய பாடல்கள்,குடும்பம் பற்றிய பாடல்கள், பாசத்தைச் சொல்லும் பாடல்கள் என்று வாழ்க்கையின் அத்தனைக் கட்டங்களுக்குமான பாடல்கள் அற்புதச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டு என்றென்றைக்குமான பாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைத் தவிர்த்து இவர்களின் இசையில் மிகப்பிரபலமான பாடல்களாகவும் ,அதே சமயத்தில் மிகப் பிரமாதமான பாடல்களாகவும் அமைந்த சில படங்களின் பட்டியலைப் பார்ப்போம். மாலையிட்ட மங்கை, அமுதவல்லி, ஆளுக்கொரு வீடு, கவலையில்லாத மனிதன், பாக்கியலக்ஷ்மி, மணப்பந்தல், காத்திருந்த கண்கள், சுமைதாங்கி, வீரத்திருமகன், இது சத்தியம், கற்பகம், இதயத்தில்நீ, மணிஓசை, கலைக்கோயில், கறுப்புப் பணம், சர்வர் சுந்தரம், வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக்கிளி, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்று பட்டியல் நீள்கிறது

இவற்றில் ஸ்ரீதரின் மற்ற படங்களையும் சேர்த்தால் பட்டியல் எங்கேயோ போய் நிற்கும்.

1952-ல் பணம் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம் பதின்மூன்று ஆண்டுகள் 1965-ல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் வரையிலும் கொடிகட்டிப் பறந்து முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் படத்தின் மூலம் தமது தனிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்கிறார் எம். எஸ்.விஸ்வநாதன். அவருடைய நீண்ட பயணம் இன்னொரு இருபது ஆண்டுகளுக்கான சாதனையாக விரிகிறது.

இத்தனை ஆண்டுகளின் சாதனையில் மக்கள் மனதில் என்றென்றைக்கும் பசுமையாய் நிற்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் யாவும் வெறும் பட்டியல் போடுவதற்குப் பயன்படுபவையோ அல்லது புள்ளிவிவரம் காட்டுவதற்குப் பயன்படுபவையோ அல்ல. மாறாக மக்களிடையே இத்தனை ஆண்டுக் காலமும் புழக்கத்தில் இருந்து, இன்னமும் பல நூறு ஆண்டுக்காலமும் புழக்கத்தில் இருக்கப்போகும் பாடல்கள். செந்தமிழ்த் தேன்மொழியாள், அச்சம் என்பது மடமையடா, காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், அத்தைமடி மெத்தையடி, போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மலர்ந்தும் மலராத பாதிமலர்போல, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, வீடுவரை உறவு வீதிவரை மனைவி, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ,பாலிருக்கும் பழமிருக்கும், கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள், கட்டோடு குழலாட ஆட, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், நானொரு குழந்தை நீயொரு குழந்தை, உள்ளத்தில் நல்ல உள்ளம்....என்றிப்படி எத்தனைப் பாடல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட ஒரு பட்டியலை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் போடமுடியாது.

இவர்களுடைய காலத்திலேயே கே.வி.மகாதேவன் உட்பட இன்னமும் சில இசையமைப்பாளர்களின் சிரஞ்சீவித் தன்மைப் பெற்ற பாடல்கள் உள்ளன, ஆனால் அவை யாவும் எண்ணிக்கையில் குறைவே.

' தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்பார்களே, அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் மூவரும் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. இப்படிப்பட்ட பொற்காலங்கள் ஏதாவது ஒருமுறைதான் வரும்.தமிழுக்கு வந்து முடிந்துவிட்டது.

தமிழ்ப்படங்களைப் பற்றிய கிராஃப் ஒன்று போட்டோமானால் அம்புக்குறி உச்சத்தைத் தொட்டு நிற்கும் காலகட்டம் அது. நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள், நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இசை, நல்ல பாடல்கள் என்று காலத்தைக்கடந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் திரைப்படங்கள் வந்த காலம் அது. அதனால்தான் அந்தக் காலத்தில் திரையில் பரிணமித்த எல்லாக் கலைஞர்களுமே - சிவாஜி எம்.ஜி.ஆர் முதல் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் துவங்கி பீம்சிங், ஸ்ரீதர் என்று தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , டி.எம்.சௌந்தர ராஜன் ,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி ,சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா,நாகேஷ்,மனோரமா என்று இன்றைக்கும் வரலாறு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைக்குத் திறமைசாலிகள் இல்லையா, இன்றைய சாதனையாளர்கள் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் வரும் திறமையாளர்கள் காலத்துக்கு ஏற்றாற்போல் வெற்றிக் கொடிகளை நாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் காலத்தைக்கடந்து நிற்பார்களா என்பதைச் சொல்வதற்கில்லை.

நாட்டில் எத்தனையோ மகால்கள் வந்திருக்கலாம். ஆனால் தாஜ்மஹாலுக்கு இன்னொன்று வரவில்லை. வரவும்போவதில்லை. எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழனுக்கு இன்னொருவன் ஈடாக முடியாது. அதுபோன்றதொரு காலகட்டம்தான் ஐம்பதுகளில் துவங்கி எழுபதுகளில் முடிந்த காலகட்டம். அது திரும்பி வராது.

இளையராஜாவின் திறமைகளையும், ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளையும் மனமுவந்து ஒப்புக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் இடங்களை அவரவர்களுக்கு விட்டுவிடுவோம்.

இன்றைய இளைஞர்களுக்கு இர்விங் வாலசைப் பிடித்திருக்கலாம். ஹாரிபாட்டரின் புத்தக விற்பனை உலகின் எல்லா எழுத்தாளர்களையும் மிஞ்சினதாக இருக்கலாம். அதற்காக யாரும் இவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரை மிஞ்சிவிட்டார்கள் என்று எந்தப் பைத்தியமும் சொல்லிக்கொண்டு அலைவதில்லை. தமிழில் திரைஇசையில் சாதித்தவர்களுக்கான இடங்களை வணக்கத்துடன் அவர்களுக்குத் தந்துவிடு
வோம். இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் எந்த இடம் உள்ளதோ அதனை இவர்களுக்குத் தந்து இவர்களைக் கொண்டாடுவோம் .

இந்த இடத்தில் இளையராஜாவைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழில் நாட்டுப்புற இசையை முதன்முதலில் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்று பலபேர் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயா, உங்களின் தவறான கருத்துக்களை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்

நாட்டுப்புற இசையை குளங்களாக ஏரிகளாகக்கூட அல்ல; பெரிய பெரிய அணைக்கட்டுக்களாகவே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் கே.வி. மகாதேவன். மதகுகளைத் திறந்து உங்கள் கவனத்தை அங்கே கொஞ்சம் திருப்புங்கள்.

இளையராஜாவே அடிக்கடி 'வாழையடி வாழையாக வந்த ' என்ற சொற்பிரயோகத்தை உபயோகிப்பார். அந்த அடிப்படையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்த விஸ்வநாதனின் தனி ராஜாங்கம் , அதே சமயத்தில் இன்னொரு ராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த கே.வி.மகாதேவன் இவர்களை ஒட்டி , இவர்கள் வந்த பாதையில் வந்து வெற்றிபெற்றவர்தான் இளையராஜாவே தவிர, தமிழ் திரைப்பட இசையே இளையராஜாவிலிருந்துதான் துவங்குகிறது என்று தவறான கற்பி தங்களை யாரும் கற்பித்துக்கொள்ள வேண்டாம்.

அப்புறம் எல்லாக்கணக்குகளையுமே தப்பும் தவறுமாகவே போடவேண்டியிருக்கும். தமிழின் முதல் பிரம்மாண்டப் படத்தைத் தயாரித்தவரே செல்வராகவன்தான் என்று சொல்ல வேண்டியிருக்கும.
எஸ்.எஸ்.வாசனை யெல்லாம் சௌகரியமாக விட்டுவிடலாம்.

மூன்று நான்கு வருடங்களாகவே மிகவும் பிரபலமான பாடல்களை எழுதுபவர் நா.முத்துக்குமார். எனவே, நா. முத்துக்குமாரிலிருந்து
தான் தமிழ்ப்பாடல்களின் வரலாறு ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை , வாலி ஆகியோரையெல்லாம் விட்டுவிடலாம். விக்ரமும் சூர்யாவும் சமீப காலத்தில் மிகுதியான திறமையை நடிப்பின் மூலம் நிரூபித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட நடிகர்கள் தமிழுக்கு இதுதான் முதல் என்று கூறிவிடலாம். சிவாஜி, கமலையெல்லாம் கண்டுகொள்ளவே வேண்டாம்........எப்படி சௌகரியம்? இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு அவரது வருகையின் சமயத்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட டேப் ரிகார்டர்களின் வளர்ச்சி. வீடுகளிலும் கார்களிலும் டேப்ரிகார்டர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கத்தொடங்க , காசெட்டுகளாகப் புதிய பாடல்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். பழைய பாடல்களில் இருந்த இனிமையை விடவும் புதிய பாடல்களின் ரிகார்டிங்கில் இருந்துவந்த புதிய ஒலிகள் வசீகரிப்பவையாய் இருந்தன.

மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு ஒலிகள் மாறியபோது ஸ்டீரியோ ரிகார்டிங்குகளில் வெளிவந்த பாடல்கள் இளையராஜாவுடையவை. இந்த தொழிற்புரட்சியும் இளையராஜா அதிகமாகப் பரவ ஒரு காரணம்.
இதே காரணத்தை நாம் ரகுமானுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. இளையராஜா பாடல்கள் மிக வேகமாய்ப் பரவியதற்கு காசெட்டுகளும் ஸ்டீரியோவும் பெருமளவு காரணம் என்பதுபோலவே ரகுமானின் பாடல்கள் அதைவிட அசுர வேகத்தில் பரவியதற்கு இன்றைக்கிருக்கும் விஞ்ஞானத் தொழிற்புரட்சிதான் மிகப்பெரிய காரணம். அன்றைக்கு டேப்ரிகார்டர்களும் காசெட்டுகளும் என்றால் இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது. இன்னமும் வாஷிங்டனில் பாடல் பதிவு முடிந்தது என்றதும் நம் காதோரம் இருக்கும் ஏதாவதொரு தலைமுடியில் பொருத்தப்பட்டிருக்கும் மயிரிழையைவிட மெல்லிய ரிகார்டரில் பாடல் பதிந்து நம் காதுகளில் அதுவாகவே ஒலிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த அசுர விஞ்ஞான யுகத்துக்கு இசைமூலம் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் இசையமைப்பாளராகத்தான் ரகுமானைப் பார்க்க வேண்டும்.

இந்த தொழிற்புரட்சிகளைப் பற்றிக் கவலையே படாமல் அந்த இரட்டையர் போட்ட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாடல்கள் நாள்தோறும் உலகம் பூராவும் தினமும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன என்பதுதான் எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம்! இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னம் எத்தனை லட்சக்கணக்கான பேர் அந்தக் காலத்துப் பழைய பாடல்களைக் கேட்கிறார்கள் தெரியுமா? அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்........

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.


68 comments :

துளசி கோபால் said...

கடைசிப் பாரா 'நச்'ன்னு இருக்கு!!!!

அட்டகாசமான அலசல் பதிவு.

ரசித்துப் படித்தேன். நன்றி.

Anonymous said...

அந்த அந்த காலத்தில் அவர் அவர்கள் ஜாம்பவான்கள்.
சின்னத்திரை தோன்றும் முன்பு வெள்ளித்திரையும் , திரைப்படம் தோன்றும் முன்பு
நாடகமும்கூத்தும் , மின்விளக்கு வரும் முன்பு எண்ணெய் விளக்கும் ... இப்படி அடுக்கிக் கொண்டே
போகலாம். ஒப்பீட்டிற்கு ஆப்பிளும் ஆரஞ்சும் சரியானவை அல்ல.
வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாம் .....எதிர் காலத்தில் ஆச்க்காரை விட
உயரிய விருது வரலாம் .. அதை நம்மவர் பெறலாம்.
அப்போது அவர் ரஹ்மானை விட ஹீரோ வாகி விடுவார்.
இவரை சமகாலத்தவர்களுடன் ஒப்பிடுவதே சரி.
ஆனால் தொழில்நுட்பப புரட்சி அனைத்திலும் மூலமாக
இருக்கிறது என்பது மறுக்கக் கூடாத உண்மை.

நல்ல விவாதங்கள் , தகவல்கள் , கருத்துகள் சார். நன்றி.

kaialavuman said...

நம் மக்களுக்கு புகழ்வது என்றால் உயர்வு நவிற்சி தான். அது சில நேரம் மிகையாகி விடும்.

அதேபோல், புகழ்பவரின் புகழை உயர்த்த அடுத்தவரை இகழ்வதும் (உதா- சிவாஜி பிடிக்கும் என்றால் MGR-ஐ இகழ வேண்டும், ரஜினி என்றால் கமல் வகை...) ஒப்பிட்டு பார்ப்பதும் நடந்து கொண்டும் தான் இருக்கின்றன.

இதனால், வரலாறு மறைக்கப் பட்டு விடுகிறது என்ற தங்களின் ஆதங்கம் ஞாயமானது தான்.

இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக சச்சின் - பிராட்மென் ஒப்பீடு போன்றவை.

நல்ல அலசல். நன்றிகள்.

(நேற்றே கருத்திட நினைத்தேன்; முழுவதும் படித்த பின் இடலாம் என்று இருந்துவிட்டேன்)

கொக்கரக்கோ..!!! said...

மிக மிக நேர்த்தியாக, கயிற்றின் மேல் நடப்பது போன்று இரு பாகங்களாக எழுதப்பட்ட பதிவு இது. இந்த விஷயத்தில் உங்கள் கருத்தை இன்னும் ஒரு துளி அழுத்தமாக சொல்லியிருந்தாலும், இந்நேரம் இங்கு பலர் வந்து (விவாதித்திருக்க மாட்டார்கள்) திட்டித் தீர்த்திருப்பார்கள். இதை நீங்கள் உணர்ந்திருப்பது உங்கள் நட்சத்திர வார முதல் பதிவிலேயே தெரிந்து விட்டிருந்தது. அதனால் தான், இவ்வளவு நேர்த்தியாக இந்த விமர்சனத்தை இங்கு பதிவிட்டிருக்கின்றீர்கள்.

நேர்மையான இந்த அலசலுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்
http://vennirairavugal.blogspot.com/

Marc said...

மகா அட்டகாசம்!!

ஜோதிஜி said...

கம்பி மேலே நடந்து இருக்கீங்க.

கொக்கரக்கோ சொன்னது உண்மை தான். இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கிற விசயத்தில் ஒரே ஒரு நுண்ணரசியல் என்பதை சொல்லாமல் போயிட்டுங்கன்னு நினைக்கின்றேன்.

காரணம் நீங்க இசையை மட்டும் பேசியிருக்கீங்க.

ரகுமான் தொடக்கம் முதல் தன்னை வெறுமனே இசை அமைப்பாளர் என்பதாக கருதிக் கொண்டு தனக்கு இதன் மூலம் வரும் புகழ் பணம் போன்றவற்றை இயல்பாகவே எடுத்துக் கொள்வது போல தெரிகின்றது.

ஆனால் ரகுமானின் வளர்ச்சி என்பது இளையராஜாவின் தனிப்பட்ட "கொள்கைகள்" சார்ந்தது அல்லது அதன் காரணமாக ரகுமானை வளர்த்து விட வேண்டும் என்று பலரும் யோசித்து செயல்பட்டதாக என்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

தெரிந்து கொள்ளத்தான்?

Anonymous said...

What a Words! Great! Great! This is Golden Words!

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

Amudhavan said...

ரசித்துப் படித்துப் பாராட்டிய துளசி கோபால் அவர்களுக்கு நன்றி.

Amudhavan said...

உண்மைதான் ஸ்ரவாணி, ஆனாலும் கோல்டன் பீரியட் என்ற ஒரு காலகட்டம் ஒவ்வொன்றிற்குமே உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காலகட்டம், திமுகவுக்கு ஒரு காலகட்டம், அதிமுகவுக்கு ஒரு காலகட்டம் என்றிப்படி. அதன்பிறகு வருபவை எல்லாம் அவற்றையொட்டின அதன் மிச்சங்களும் நிழல்களுமே. வியாபார ரீதியில் பெரிதாக்கிக்கொள்ளலாம்; ஊடக விளம்பரத்தால் பூதாகாரமாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்த பிரைம் டைம் மறுபடியும் வராது.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் சரியான தீர்வுக்கும் நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்.

Amudhavan said...

சரியான காரணங்களுடன் நேர்மையாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சொல்லப்படும் வாதங்களுக்கே ஒரு உறுதி வந்துவிடும். மற்றவர்கள் வந்து திட்டுவார்களோ என்பதற்காக நம்மை ஒரு வரையறைக்குள் உட்படுத்திக்கொண்டு மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து எழுதிய கட்டுரை அல்ல இது; தவிர, நேற்றைக்கே சொல்லியிருந்ததுபோல் நான் பதிவுலகிற்கு வந்ததும் எழுதிய முதல் பதிவு இது. அதனால் 'மற்றவர்கள்' பிரச்சினை இதில் இல்லை. நான் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தேனோ அதை என் பாணியில் சொல்லியிருக்கிறேன். தங்கள் பாராட்டுகளுக்கும் கருத்திற்கும் நன்றி கொக்கரக்கோ.

Amudhavan said...

மகா நன்றி எஸ்.தனசேகரன்.

Amudhavan said...

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிகிறது ஜோதிஜி.ஒரு புறம் நீங்கள் சொல்வது உண்மை என்றபோதிலும் ரகுமான் குடும்பத்திற்கு நெருக்கமான மறைந்த பத்திரிகையாளர் எம்.ஜி.வல்லபன் போன்றவர்களுடன்(இவர் யாரைவிடவும் இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர்)பழகியதில் ரகுமானும் சரி ரகுமான் குடும்பத்தவர்களும் சரி கொஞ்சமும் கர்வம் இல்லாதவர்கள்; எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாதவர்கள் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்பதை உளமாற ஏற்றுச்செயல்படுபவர்கள் என்பதாகவே அறிகிறேன்.

Amudhavan said...

நன்றி...நன்றி...நன்றி அனானிமஸ்.

ராஜ நடராஜன் said...

எம்.எஸ்.வி-ராமமூர்த்தியின் காலகட்டமும் அதற்கு பின்பான ஒற்றையர் ஆட்டத்தின் போதும் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி என்ற இரு போட்டா போட்டி வல்லமைகளின் அடிப்படையிலேயே திரைப்படங்களும்,பாடல்களும் அமைந்தன.நகர தியேட்டர்கள்,வால்போஸ்டர்,தினத்தந்தி,மாலைமுரசுகடந்து திரைப்படப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த மூன்று ஊடகங்கள் ஆல் இண்டியா ரேடியோ,இலங்கை வானொலி,கிராமப்புறத்து டூரிங் டாக்கிசுகளின் படம் போடுவதற்கு முன் படம் பார்க்க அழைக்கும் பாடல்கள்.

இதில் கூடுதலாக இலங்கை வானொலி கே.எஸ்.ராஜாவின் தமிழ்க்குரல் வர்ணனையும்,பிறந்த நாள் வாழ்த்துக்களாக அம்ம்மா,அப்பப்பாக்களையெல்லாம் துணைக்கிழுத்துக்கொண்டு ஒவ்வொருவரின் பெயரையும் உச்சரிப்பது போன்றவையும் இனியும் திரும்பி வராத ஒன்றே எனலாம்.இப்பொழுதும் பழைய பாடல்கள்,தொலைக்காட்சிகளின் பொக்கிசங்களாக மாறியிருந்தாலும் காட்சி அமைப்பு ,நடிப்பு(முக்கியமாக சிவாஜி),நடனம்,இயக்கம் போன்றவை கண்ணதாசனின் வரிகளை அரை போதைக்கே கொண்டு செல்கிறது.

பாடல் வரிகள்,இசை இரண்டையும் கலந்து கிர் கிர்ரென்ற வானொலிக் காற்றின் சத்ததையும் மீறி பாடலின் ஒருமித்த தியான நிலைக்கு கொண்டு செல்வது உறங்கப் போகும் முன் ஒலிக்கும் ரேடியோ கானங்கள்.

சமகால ஒப்பீடாக இப்பொழுது நோக்கும் பொழுது முகமது ரஃபி,லதா மங்கேஷ்கர் வடக்கில் வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தும்,முழு உரிமை ஆல் இந்தியா ரேடியோவின் இந்தி காற்றும் கூட உள்ளே நுழையாத சாகாவரம் பெற்ற பாடல்களை முந்தைய தலைமுறை தமிழுக்கு விட்டுச் சென்றிருக்கிறது என்பது புரிகிறது.

வாசிப்பின் சுகங்களை உங்கள் எழுத்துக்கள் இணையத்தில் பதிவு செய்கின்றன.இது போன்ற தமிழ் எழுத்தின் வீச்சுக்களை வரவேற்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

பதிவோடும்,முந்தைய பின்னூட்டத்தையும் ஒட்டி கே.எஸ்.ராஜா பற்றித் தேடியதில் யாழ்.சுதாகரிடமிருந்து கிடைத்தது

http://vaanoli.blogspot.com/2006_02_01_archive.html

Askar said...

நடுநிலையான அலசல் என்ற பெயரில் இளையாராஜாவை ஒன்றுமில்லை என ஓரங்கட்டுவதாகவே உங்கள் பதிவிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது

shagitha said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். அந்தந்த காலகட்டங்களில் அவர் அவர்கள் ஜாம்பவான்கள் தான். ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் பதிவு. இரசித்து வாசித்தேன்

shagitha said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். அந்தந்த காலகட்டங்களில் அவர் அவர்கள் ஜாம்பவான்கள் தான். ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் பதிவு. இரசித்து வாசித்தேன்

shagitha said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். அந்தந்த காலகட்டங்களில் அவர் அவர்கள் ஜாம்பவான்கள் தான். ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் பதிவு. இரசித்து வாசித்தேன்

தருமி said...

//அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்...//

முழு உண்மை. அழகான, இனிமையான நேரங்கள் அவை.

ஷைலஜா said...

எத்தனை தீர்க்கமாய் அலசி இருக்கிறீர்கள் அமுதவன்... பாராட்டுக்கள் அதற்கு.

.//தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்///

மிகச்சரியான வரிகள் இது எல்லா துறைகளின் எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்.

Amudhavan said...

'வாசிப்பின் சுகங்களை உங்கள் எழுத்துக்கள் இணையத்தில் பதிவு செய்கின்றன' என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கு மிகவும் மகிழ்கிறேன் நடராஜன்-நன்றி.

Amudhavan said...

ராஜநடராஜன், நீங்கள் சொல்வதுபோல அந்த நாட்களின் இந்திப்பாடல்கள்தாம் இந்தி திரைப்பட பாடல் நாட்களின் பொற்காலம். நௌஷாத், சி.ராமச்சந்திரா, ஓ.பி.நய்யார்,எஸ்.டி.பர்மன்,ரோஷன்,சலீல் சௌத்ரி,ஷங்கர் ஜெய்கிஷன்,மதன்மோகன் என்று எண்ணற்ற இசைமேதைகள் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் அது. அந்த இசை அத்தனை அமுதமாக இருந்த நாட்களிலும் இங்கு தம் சாம்ராஜ்ஜியத்தை அவர்களுக்கு இணையானதாக நடத்தினார்கள் என்பதுதான் விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் பெருமை.அவர்களுக்குப் பிறகுவந்து வர்த்தகரீதியில் வெற்றிபெற்ற இசையமைப்பாளர்கள் யாரும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை என்பது உண்மையே.
நீங்கள் நினைவு படுத்திய வானொலியின் காலகட்டமும் மீண்டும் கிடைக்கமுடியாத அனுபவமே.

Amudhavan said...

நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் ரப்சன்.

Amudhavan said...

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஷாகிதா.

Amudhavan said...

நன்றி தருமி சார்.

Amudhavan said...

நன்றி ஷைலஜா.

R.S.KRISHNAMURTHY said...

எதிர்பார்த்த துணிபு. மீண்டும் எம்.கே.டியின் பாணியை விரைவிலேயே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்!

Amudhavan said...

உங்கள் எதிர்பார்ப்பு விரைவிலேயே பூர்த்தியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் எல்லாமே ஒரு வட்டம்தானே. எம்கேடி பாணி என்பது புதிய மோஸ்தரில் புதிய டெக்னாலஜியுடன் சீக்கிரமே வரலாம். இப்போதுகூட so called புதிய இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராம மூர்த்திக்கும் முன்னுள்ள பழைய பாடல்களைத்தானே ரீமிக்ஸ் என்ற பெயரில் மிக்ஸித்துக்கொண்டிருக்கிறார்கள் அசிங்கமாக. பெரும்பாலான துறைகளில் பதர்கள்தாம் பந்தி வைக்கப்படுகின்றன. பார்த்தால் கோபம் அல்ல; பரிதாபம்தான் வருகிறது.

வந்தியத்தேவன் said...

ரப்சனை வழிமொழிகின்றேன் அத்துடன் உங்கள் கடைசிப் பந்தியில் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிகளை தூக்கி ஏன் வைக்கின்றீர்கள் இவர்கள் தமிழிசையை தெலுங்காக்கியவர்கள். இப்பவும் தமிழில் கர்நாடக சங்கீதம் பாடுவது ஏதோ தீட்டு என நினைக்கும் ஜாம்பவான்கள் தமிழ்நாட்டில் உண்டு.

tekvijay said...

http://www.youtube.com/watch?v=FeUz_4kMKEI

இந்த வீடியோவை நன்கு கவனித்து கேளுங்கள். கமல் இளையராஜாவை பற்றி பேசுகிறார். இளையராஜா எப்போதுமே தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களை பாராட்டியே வந்திருக்கிறார். ஆனால், ஒரு இசை அமைப்பாளரை, அவருடைய திறமை என்று முழுமையாக பார்த்தோமாயின், இளையராஜாவிற்கு ஒப்பான அளவுக்கு இசையில் பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தியவர் யாருமே இல்லை. இதனை பாலமுரளிக்ரிஷ்ணாவும் ஒப்புக்கொள்வார், பாமரனும் ஒப்புக்கொள்வார். இளையராஜாவின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வைத்து சீர் தூக்கிபார்த்தால், தரத்திலும் சரி, புதுமையிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, இந்த மூன்றிலுமே சிக்சர் அடித்த ஒரே இசையமைப்பாளர் இளையாராஜா மட்டுமே என தெரியவரும்.

இன்றைய இசையமைப்பாளர்கள், அதி சிறந்த கம்ப்யூட்டர்களையும், மென்பொருள்களையும், ஒலி வல்லுனர்களையும் வைத்துக்கொண்டும் கூட, ஒரு வருடத்திற்கு மிஞ்சிப்போனால் நான்கு படங்கள், ஆக இருபது பாடல்கள் தர முக்கோ முக்கு முக்குவதையும்,

இளையராஜா உச்சத்திலிருந்தபோது ஒரே வருடத்தில் நாற்பது ஐம்பது படங்கள் அதில் முக்கால்வாசிக்கும் மேல் வெற்றி, என்பதையும், அந்த பாடல்கள் இன்றும் புகழுடன் இருப்பதை பார்க்கிறோம். இத்தனைக்கும் எண்ணிக்கை அதிகமானபோது தரம் கொஞ்சம்கூட குறையவில்லை.

விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பின்னர் வந்தவர் என்றதால் இளையராஜா அவர்களைவிட திறமை குறைவாகத்தான் இருதாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர்கள் எட்டடி என்றால் இளையராஜா அறுபத்தினாலு அடி. ஆனால் அவருக்குப்பின் யாரும் இன்னும் முப்பதடி கூட தாண்டவில்லை. நான் புகழ் ரீதியாக சொல்லவில்லை திறமைரீதியாக சொல்கிறேன்.

டேப் ரிக்கார்டர் வந்ததாலும் தொழில்நுட்பத்தாளும்தான் அன்றைய இளையராஜா வளர்ந்தார் என்பது எத்துனை நகைச்சுவையான வாதம்! அவர் காலத்தில் இருந்த ஒரு இசையமைப்பாளரும் இன்று நினைக்கப்படுவதில்லை.

இன்றைய புதிய இசையமைப்பாளர்களை கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ராஜாவின் திறமையை. "இளையராஜா என்ற ராட்சச யானை தின்றது போக வைத்த மிச்சத்தை வைத்துதான் இன்றைய இசையமைப்பாளர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம்" என்று விஜய் ஆண்டனி சொன்னார்.

அவ்வளவு ஏன், இன்று முதியவர்கள் நடுவயதினர், இளையவர்கள் அனைவரும் யூடியூப் தளத்தை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா- அவருக்குப்பின் வந்தவர்கள் என அனைவரும் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையை கூட்டிப்பாருங்கள். யார் அதிகம், இளையராஜாவின் திறமை என்ன என்பது உங்களுக்கு புரியும்.

இதே அமெரிக்க என்ர்லார், இலியாராஜாவின் இசையை, இசை மாணவர்களும் விமர்சகர்களும் அக்குவேறாக அலசி அதிலுள்ள நுணுக்கங்கள் சிறப்புகளை வெளிக்கொனர்வர். ஒரு கலைஞ்சனின் படைப்புக்களை புரிந்துகொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நடுநிலையாக பேசுகிறேன் பேர்வழி என்று பேசி இளையராஜாவின் ஆற்றலையும் வெற்றியையும் சிறுமைப்படுத்தாதீர்கள்.

Amudhavan said...

வந்தியத்தேவன் உங்களுடைய கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. தமிழிசைக்காக நடந்த போராட்டங்கள் பக்கம்தான் நாம் நிற்கமுடியும். இசை என்று வரும்போது அவர்களை முதன்மைப்படுத்தி (அல்லது ஏன் முதன்மைப் படுத்துகிறீர்கள்?)அவர்களுக்கடுத்து இளையராஜாதான் என்று சொல்லுவதை ஏற்பதற்கில்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன். திரை இசையை மெல்லிசையாக்கி அதனை இனிமையானதாக மாற்றி மக்கள் அத்தனைப்பேருக்கும் கொண்டு சேர்த்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்பதில் மாற்றமில்லை. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்திருப்பவர்களும் அவர்கள்தாம். அவர்களுக்குப் பின்னேதான் இளையராஜா நிற்கிறார் என்றுதான் சொல்கிறோமே தவிர இளையராஜா ஒன்றுமேயில்லை என்று சொல்லவில்லை. முன்னோர்களை ஒப்புக்கொள்ளாமல் நமக்குப்பிடித்தவர்களை மட்டும் சொல்லும் போக்கு ஆபத்தானது. இருபது வருடங்களுக்கு முன்பு இசையை பின்புறம் திரும்பிப்பாராமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டு எனக்கு இவரைத்தான் தெரியும் அதனால் நான் இவரைத்தான் ரசிப்பேன் என்ற பிடிவாதம் எந்த அளவு ஆபத்தானது என்பதற்கு இப்போதே உதாரணங்கள் ஆரம்பித்துவிட்டன. இளையராஜா ஒன்றுமேயில்லை ரகுமானுக்கு இணை இங்கே யாருமே கிடையாது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உலக அளவிலான வணிகமும் அதற்குத் துணை செய்கிறது.இதைத்தான், இந்தப்போக்கைத்தான் வேண்டாமென்கிறது என்னுடைய கட்டுரை. புரிந்துகொண்டால் சரி.

Amudhavan said...

சிலிகான் சில்லு அவர்களே நான் மறுபடி மறுபடி ஒரே விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருக்கப்போவதில்லை. உங்களைப் போன்றவர்களின் இம்மாதிரியான எல்லா வாதங்களுக்கும் என்னுடைய பதிவிலும் மற்றும் மறுமொழிகளிலும் பதில்கள் இருக்கின்றன.என்ன கொஞ்சம் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் பொறுமை இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

தரம்,புதுமை, எண்ணிக்கை என்கிறீர்கள். இங்கே நிற்பவர்கள் 'பழையவர்கள்' என்பதுதான் பிரச்சினையே.

மிகச்சிறந்த இசை என்பது வாத்தியக்கருவிகளாலும் உயர்தொழில் நுட்பங்களாலும் மட்டும்தான் நிற்கமுடியும் என்றால் இந்த வரிசையில் ரகுமானுக்கு இணையாக யாரையும் சொல்லமுடியாது. ஆனால் நான் இதனை ஒப்புக்கொள்ளமாட்டேன்.

மிகச்சிறந்த இசையை, உள்ளத்தை உருக்கி உயிரில் சென்று சேரும் இசையை உருவாக்க ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலே போதும்.


கமல் என்ன சொல்கிறார், விஜய் ஆண்டனி என்ன சொல்கிறார் பாலமுரளி என்ன சொல்கிறார் என்பதையெல்லாம் கேட்கச்சொல்கிறீர்கள். இம்மாதிரி பட்டியலெல்லாம் எம்மிடமும் நிறைய இருக்கிறது.நௌஷாத் என்ன சொன்னார்,ராஜ்கபூர் என்ன சொன்னார்,இதே பாலமுரளி விசுவநாதனுக்கு நடந்த பாராட்டு விழாவில் என்ன சொன்னார். இதே கமல் விசுவநாதனைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதெல்லாம் இருக்கிறது. ஏன்,விசுவநாதன் ராமமூர்த்திபற்றி இளையராஜாவும் கங்கை அமரனும் என்ன சொன்னார்கள் என்பதும் இருக்கிறது.

அனைவரும் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்க்கும் விளையாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.அப்படி ஆரம்பித்தால் கொலவெறி முன்னணியில் நின்றுவிடும். இதைத்தான் விஞ்ஞானத் தொழில்நுட்பத் தாக்கம் அல்லது ஆபத்து என்பது.

ஒரு படத்தில் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகத்தருவது என்பது பற்றியும் அந்தப்பதிவிலேயே பேசியிருக்கிறோம்.

இந்தச் சாதனையை இளையராஜா அதிகம் போனால் ஒரு இருபது படங்களில் செய்திருப்பார். பழையவர்கள் ஒரு நூறு படங்களில் செய்திருக்கின்றனர். இதுதான் வித்தியாசம்.

'நடுநிலையாகப் பேசுகிறேன் பேர்வழி என்று பேசி இளையராஜாவின் ஆற்றலையும் வெற்றியையும் சிறுமைப்படுத்தாதீர்கள்' என்கிறீர்கள். அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன். இளையராஜாவுக்காகப் பேசுகிறேன் என்று பேசி இளையராஜாவுக்கும் இன்றைய ரகுமான் ஹாரிஸ் போன்றவர்களுக்கும் பாதை போட்டுத்தந்து கண்ணதாசன், சிவாஜிகணேசன், எம்ஜிஆர்,வாலி போன்றோரின் பாடல்களைத் தமிழ் உள்ளவும் தமிழர் நெஞ்சங்களில் நிற்க வைத்திருக்கும் வணக்கத்திற்குரிய பெரியவர்களை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.

Unknown said...

இளையராஜா, ரகுமானெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு சொல்றதுக்கு கூட தலைப்புல அவுங்க பேர் தேவையா இருக்கு இல்லையா அமுதவன் சார்!

Amudhavan said...

யாரப்பா இங்கே? இவங்களுக்கெல்லாம் எப்படிச் சொல்லிப் புரியவைக்கிறதுன்னு தெரியலையே. இளையராஜா ரகுமானெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு எங்கேயும் சொல்லலை, சொல்ல வரவில்லைன்றதை எப்படிச் சொல்வது....? அதே சமயம் எல்லாமே வெறும் இளையராஜாவும் ரகுமானும்தான் என்று மட்டும்தான் சொல்லக்கூடாது என்பதுதான் கட்டுரையின் சாராம்சம்.....விருட்சவிதை போன்றவர்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Unknown said...

அதத்தான் சார் நானும் சொல்றேன். அதுக்கு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு? மத்தவங்க பேரை பயன்படுத்தி இருக்கலாமே??? அவுங்க பேரை போட்டால்தான் இந்த 'தொழிற்புரட்சில' மக்கள் நீங்க என்ன சொல்றீங்கன்னு படிக்க வருவாங்கங்கிறதுனாலதான!! என்னா ஒரு வில்லத்தனம்.

Unknown said...

மிகத்தெளிவாகக் கூறியுள்ளீர்கள்! எனது பதிவில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தையும் ரசித்தேன்!

Amudhavan said...

விருட்ச விதை உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Amudhavan said...

நன்றி.........ஜீ!

tekvijay said...

இளையராஜாவிற்கு முன்பு இருந்த பெரியவர்களின் சாதனை எல்லாம் மறுக்கவே முடியாதது. அதே சமயம் நான் திரும்ப திரும்ப சொல்வது இதைதான் - திரை இசையின் அனைத்து சாரங்களிலுமே வெற்றி பெற்றவர், அனைத்து வகை இசையிலும் திறமையானவர், இளையராஜா ஒருவர் தான். இதை அவரை பாராட்டவோ, மற்றவர்களை விட அதிக உயரத்தில் தூக்கி பிடிக்கவோ சொல்லவில்லை. இது ஒரு நிஜமான தகவல் தானே தவிர கருத்து அல்ல. ராஜாவின் அதி புகழ் பெற்ற பாடல் கூட ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம் அது (அவருடைய சொந்த) கருத்து. நான் இங்கே கருத்தை பற்றி, புகழை பற்றி பேசவில்லை ஒட்டுமொத்த திறமை பற்றி பேசுகிறேன். ராஜா போல் அனைத்து வகை இசையிலும் கைவைத்து கலக்கியது வேறு யாருமே இல்லை. மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதம், அத்துடன் கர்னாடக இசையை ப்யுஷன் செய்தது, ஜாஸ் பாப் ராக் மற்றும் பலவிதமான இசைவகைகளில் அதிகம் முயற்சி செய்தது ராஜா தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியும் செய்திருக்கின்றனர், அதற்கு முன்னவர்களும் கூட செய்திருக்கின்றனர். ஆனால் ராஜா அளவுக்கு இல்லவே இல்லை. அதிக வகையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியது, பலப்பல உத்திகளை பயன்படுத்தியது இதிலும் ராஜாவே முன்னோடி. வாசிக்க அதிக கடினமானது ராஜாவின் இசை மட்டுமே என்பது அவரிடம் பல வருடங்களாக வாசிக்கும் அனுபவசாலிகளின் வாதம்.

இசை மனதை வருட ஒரு புல்லாங்குழல் நாதமே போதும் என்கிறீர்கள், முற்றிலும் சரிதான். ஆனால் இதெல்லாம் ரசிகனின் பார்வைகள். நான் புகழை பற்றி பேசவில்லை. யார் முதலில் செய்தது என்பதை (மட்டுமே) பேசவில்லை. திறமை பற்றி பேசுகிறேன். கட்டாயம் ராஜாவின் இசைத்திறன் முன்பிருந்தவர்களை விட அதிகம் தான். வேண்டுமானால் ஒன்று சொல்லலாம். சிவாஜியை விட கமல் அதிக திறமைசாலி என்று சிலர் சொன்னால், கமல் சொல்லுவார் "ஆமாம் அவர் தோளின் மேல் ஏறி உலகத்தை பார்ப்பதால் அவரைவிட உயரமாகத்தான் தெரிவேன்". இதே லாஜிக்கை ராஜாவுக்கும் சொல்லலாம். அந்த வகையில், ராஜாவின் உயரம், முன்பிருந்தவர்களுக்கு பெருமையே சேர்க்கும் அன்றி அவர்களை எந்த விதத்திலும் குறைத்து விடாது. கமல் கலைத்துறையில் செய்வதுபோல், இசையில் அவரும் ஒரு மாபெரும் சகலகலா வல்லவர். அவர் மட்டுமே சகலகலா வல்லவர். இன்று கம்ப்யூட்டர் வைத்து செய்யும் உத்திகளை எல்லாம் அன்று ராஜா கம்ப்யூட்டர் இல்லாமலே செய்திருக்கிறார், கிராபிக்ஸ் இல்லாமலே கமல் அப்புவாக நடித்தது போல்.

நம்மில் பலரும் ரசிகனின் பார்வையில் மட்டுமே பேசுகிறோம். அப்படி பேசுவது தவறில்லை. ஆனால் ரசிகனுக்கு, ஒரு இசைத்துணுக்கில் உள்ள நுட்பமும் அறிவுஜீவித்தனமும் மேதைமைத்தனமும் கடின உழைப்பும் தெரிய வாய்ப்பில்லை. அது தெரிய ஒரு இசை வல்லுனரால் தான் முடியும். இசையில் வல்லுநர் என்பது எம்.எஸ்.வி ராஜா ரஹ்மான் போல ஒரு படைப்பாளி ஆனால் தான் என்றில்லை. கர்னாடக ஹிந்துஸ்தானி இசை என்றால் என்ன, ராகங்கள் தாளங்கள் என்றால் என்ன, அவை எத்தனை வகை, அந்தந்த பகுதியில் உள்ள நாட்டுப்புற இசை, உலக இசை வகைகள், மற்றும் இசைக்குறிப்பு ( Music Theory ) அடிப்படை கருவிகளின் வாசிப்பு முறை, ரசனை, இதெல்லாம் கற்றுக்கொண்டு உணர வேண்டும். இசை ரசனையும் வேண்டும். ஒரு பாடல் ஒரு குறிப்பிட்ட ரசிகனுக்கு ஏன் பிடிக்கிறது, ஏன் ஒரு குறிப்பிட்ட பாடல் பிடிக்கவில்லை, ஏன் வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடையே இசை ரசனையில் மாபெரும் வேறுபாடுகள் உள்ளன, இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

Amudhavan said...

உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது இல்லையா? ரொம்பவும் சரி, வந்தனம்.

கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது, தலைமுறைகள் தொடர்கின்றன, இதில் சாதனையாளர் இவர் தான் என்று சொல்ல ஒன்றும் இல்லை, தேவா கூட 90 - 2000 ஆண்டுகளில் பெரும் சாதனைகள் புரிந்துள்ளார்.

tekvijay said...

my 2nd comment is missing....

Amudhavan said...

கோவி.கண்ணன் தலைமுறைகள் தொடர்ந்தால் யாரும் சாதனையாளர் ஆகமுடியாதா என்ன? சாதிப்பவர்கள் எல்லாரும் சாதனையாளர்களே. தவிர, தேவாவைப் பற்றி ஒரு விஷயம் சொல்லலாமென்று நினைத்தேன். இருக்கின்ற தகராறுகள் போதாதென்று புதிய விவாதங்களுக்கு எதற்கு வழியேற்படுத்த வேண்டுமென்பதற்காகத் தவிர்த்துவிட்டேன். நீங்கள் தேவாவையும் தொட்டதனால் இதனைச் சொல்கிறேன். இளையராஜா உச்சத்திலிருந்த சமயம் பிரபல விமரிசகர் சுப்புடுவை இன்றைய இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
சுப்புடு சொன்ன பதில்; தேவா.

Amudhavan said...

சிலிகான் சில்லு, நீங்கள் சரிவர கவனிக்கவில்லையா? மேலே இருப்பது உங்களுடைய இரண்டாவது கமெண்ட்தானே?

tekvijay said...

No sir, I pasted a long post, totally 5 paragraphs but the blogger said that the comment exceeded the limit, so i posted in 2 parts. but the 2nd part didn't appear till now.

See the below link, that has my whole comment

http://pastebin.com/1GutaxJ3

தறுதலை said...

//சுப்புடு சொன்ன பதில்; தேவா//

என்ன கொடுமை சரவணன்?
ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு?

-----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப் -'2012)

தறுதலை said...

நேற்றைய நீட்சியே இன்றாக இருக்கிறது. இன்றாக இருப்பதுவே நாளையாக நீளும். இது நியதி.

இங்கே நாம் பேசுவது மரபுகளை மீறியவர்களை அல்லது புது மரபுகளை உருவாக்கியவர்களை. உங்கள் கட்டுரையிலேயே சிவாஜியிலிருந்துதான் நடிப்பின் இலக்கணம் தொடங்குகிறது. அதுதான் சரி. மரபு என்று சொல்லிக்கொண்டு பாகவதர்களிளிருந்து தொடங்க முடியாது.

பண்டைய இலக்கியங்களுக்குப் பிறகு பாரதியில்தான் புதிய மரபு உருவாகிறது. இங்கே மரபு என்று சீட்டுக்கவிகளை கூட்டு சேர்க்க முடியாது.

எனக்கு இசை அறிவு கிடையாது. பிடித்த பாடல்களை கேட்பேன். அதன்படி, சலில் சௌத்ரியின் 'திங்கள் மாலை வெண்குடையான்' தொடங்கி 'கொலை வெறி' வரை பத்து பாடல்களை பட்டியலிட்டால் அதில் ஏழு பாடல்கள் இளையராஜவுடையதாக இருக்கிறது. இது என் தனிப்பட்ட விருப்பமே.

என்னைக்குத் தெரிந்து தமிழில் திருடி இந்தியில் போடப்பட்ட காலம் இளையராஜவிளிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முன் இந்தி திணிப்பு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும் அவப்போது இந்திப் பாடல்கள் தமிழில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் ஊடுருவிக்கொண்டிருந்தன.

காலத்தால் அழியாத பாடல்களாக நீங்கள் போட்டிருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் இணையாக பத்து பாடல்களை கொடுக்க முடியும்.

திரை இசையில் புதிய மரபை உருவாக்கியவர் இளையராஜா மட்டுமே. இளையராஜவிளிருந்துதான் முன்னும் பின்னும் பார்க்க வேண்டும். இதை சரியாக செய்ய வேண்டுமென்றால், இசையின் பல பரிமாணங்களை பட்டியலிட்டு, அதில் ஒவ்வொன்றிலும் யார் எப்படி செய்திருக்கிறார்கள் என்று அலசலாம். அதற்கான புற sUzalkaLaiyum கணக்கில் கொண்டு செய்ய வேண்டும். இதை இரண்டு பதிவுகளில் அடைக்க முடியாது. இல்லையென்றால் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் அளவுகோளாகவே அமையும்.

பி.கு.: இதையும் என் கருத்தாக சொல்லியே ஆக வேண்டும். இசையில் மட்டும்தான் ஞானி. மற்றபடி வெறும் சாணி.

-----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப் -'2012)

Amudhavan said...

நண்பரே மீண்டும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிர்ப்பந்தத்தையே உங்கள் கருத்துக்கள் ஏற்படுத்துகின்றன. உங்களுடைய கேள்விகளுக்கான பதில்கள் என் பதிவிலேயே இருக்கின்றன.'காலத்தால் அழியாத பாடல்களாக நீங்கள் போட்டிருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் இணையாக பத்து பாடல்களை கொடுக்கமுடியும்' என்கிறீர்கள் .தயவுசெய்து கொடுங்கள். பிறகு தொடர்ந்து பேசுவோம்.

Amudhavan said...

அப்படியே உங்களுடைய பட்டியலின்போது இதனையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது அடுத்த பதிவான 'நன்றி நண்பர்களே நன்றி' என்ற பதிவில் எழுதியது. உங்களுடைய பட்டியலுக்கு உதவுமே என்பதற்காக நினைவுபடுத்துகிறேன். நீங்கள் சொன்னமாதிரியே பத்துப் பத்து பாடல்களைப் பட்டியலிடுங்கள் இந்த அடிப்படையில்...நன்றி. நாம் பிறகு பேசுவோம்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தியைத் தள்ளிவைத்துவிட்டுப் போவது அவ்வளவு சாதாரணமில்லை. ‘கார் உள்ளளவும் கடல் உள்ளளவும்’ என்று சொல்வார்களே அப்படி நிற்கக்கூடிய பாடல்கள் சில உள்ளன.

1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.

2) பி.சுசீலாவின் பாடல்கள்.

3) கண்ணதாசனின் பாடல்கள்

4) சிவாஜிகணேசனின் பாடல்கள்

5) எம்ஜிஆர் பாடல்கள்

6) சந்திரபாபு பாடல்கள்

7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்

8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்

9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்

11) வாலி பாடல்கள்..........................................இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தரம்பாள் பாடல்கள்......இப்படியெல்லாம் வகைப்பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?

இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் டிஎம்எஸ் பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப் பாடல்? பேசுவதற்கு வாய் கூச வேண்டாமா?

தறுதலை said...

பெண் குரல் (தனி) பாடல்கள்
------------------------------------

1. மச்சான பார்த்திங்களா
2. காற்றில் எந்தன் கீதம்
3.நானே நானா யாரோதானா
4. நின்னுக்கோரி வரணும்
5. பாடறியேன் படிப்பறியேன்
6. நித்தம் நித்தம் நெல்லு சோறு
7.சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா
8. பூவே பூ சூடவா
9.வரம் தந்த சாமிக்கு
10. யமுனை யாற்றிலே

இந்தப் பாடல்களுக்கு இணையாக எதை சொல்லுவீர்கள். இது சவால் விடும் நோக்கமல்ல. அப்படிப்பட்ட பாடல்கள் இருந்தால் தெரிந்துகொள்ள உதவும்.

நீங்கள் இணையாக கொடுக்கும் பாடல்களை இசை நுணுக்கத்துடன் ஒப்பிட இசை ஞானம் உள்ளவர்கள் திறன் ஆய்வு செய்தால் பல பரிமாணங்களை தெரிந்து கொள்ளலாம்.

-------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப்'2012)

Amudhavan said...

நண்பரே இதைவிடவும் நல்ல இனிமையான இளையராஜா இசையமைத்த பாடல்களின் பட்டியலை என்னாலேயே தரமுடியும். உங்கள் பட்டியலின் ஆரம்பமே இதுதான் என்றால் நீங்கள் இன்னமும் இளையராஜாவின் இசையையே சரிவர தெரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். பிரச்சினை இளையராஜா சில நல்ல இனிமையான பாடல்களைப் போடவில்லையா என்பதல்ல. மறுபடியும் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். தயவுசெய்து என்னுடைய கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு வாதம் செய்ய வாருங்கள்.

R.S.KRISHNAMURTHY said...

இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. வாதம் செய்யத்தொடங்கியவர்கள் பலர் பிடிவாதத்தோடு எதிராளியின் கருத்துக்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்று நிற்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம்-தூங்குவதுபோல நடிப்பவர்களை? எல்லாவற்றையும் ரசியுங்கள் என்று சொன்னால் நான் இவரைமட்டுமே ரசிப்பேன் என்றால் நஷ்டம் யாருக்கு? அமுதவன் அவர்களே, இத்தோடு இந்த வாதங்களுக்கு முடிவு கட்டுவது நல்லது என நினைக்கிறேன். உடனே சிலர், நீங்கள் தோற்று ஓடுகிறீர்கள் என்று புதிய வாதம் ஆரம்பிப்பார்கள்- அவர்களுக்கு வேண்டியது அதுதான்! கொடுத்துவிடுஙளேன்! காரணம் சொல்லிவிட்டோம்-(இனி நம்)காரியங்களைக் கவனிப்போம்!

Amudhavan said...

வாருங்கள் ஆர்எஸ்கே...உங்களைப்போன்று பூரணமாக இசையையும் திரைத்துறை பற்றிய சகல விஷயங்களையும் அறிந்தவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துவிட்டு அடுத்தவேலையைப் பார்ப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனாலும் இந்த இடத்திலும் சில வார்த்தைகள்...'பலர் பிடிவாதத்தோடு எதிராளியின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்று நிற்கிறார்கள்' என்கிறீர்கள்.
இங்கே 'கருத்துக்கள்'கூட பிரச்சினை அல்ல. எந்த பாடாவதிக் கருத்துக்களை யார் வைத்துக்கொண்டிருந்தால் நமக்கென்ன பிரச்சினை? பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் முதல் பிரதமரான மன்மோகன் சிங் அவர்களே என்று யாராவது ஆரம்பித்தால், 'அய்யா தவறு. முதல் பிரதமரே நேருதான். அதற்கடுத்த நிறைய பிரதமர்கள் வந்தார்கள். இந்திராகாந்தி போன்று மிகப்பிரபல பிரதமர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்' என்று பாலபாடத்தைச் சுட்டிக்காட்டுவதில்லையா அதைத்தான் செய்திருக்கிறேன்.
தோற்று ஓடுவதற்கெல்லாம் இங்கே வாய்ப்பே இல்லை. ஐம்பது வருடங்களாக மகா மகா மேதைகளெல்லாம் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் பொக்கிஷமாக ஏராளமான தமிழ்ப்பாடல்கள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. அவை பற்றிய தகவல்களும் குறிப்புக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.யார் என்னவிதமான வாதங்களைக் கொண்டுவந்தாலும் அவற்றை சந்திக்கும் வல்லமையும் இருக்கிறது. இது ஒன்றும் சவடால்தனமான வாதம் கிடையாது. மகாகலைஞர்களை ஒன்றுமேயில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்குச் சிலவற்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண வேலையைத்தான் செய்கிறேன். இணையத்தில் மட்டுமே சிலவற்றைப் படித்துவிட்டு இவ்வளவுதான் உலகம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதைத்தாண்டியும் நிறைய இருக்கிறது என்று சொல்வது தவறாகாது அல்லவா?
ஆனாலும் தங்கள் கோரிக்கையை ஏற்று இத்துடன் அமைகிறேன்.வணக்கம்!

Anonymous said...

இளையராஜாவை " ஒன்றும் இல்லை " என்பதே கட்டுரையின் மைய்ய கரு.

ஆதாரம் இதோ :
"...விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் பெருமை.அவர்களுக்குப் பிறகுவந்து வர்த்தகரீதியில் வெற்றிபெற்ற இசையமைப்பாளர்கள் யாரும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை என்பது உண்மையே. " - அமுதவன்

அமுதவன் அவர்களுக்கு தனது ரசிப்புக்கு உகந்ததாக இருக்கும் இசையை வைத்து ( விஸ்வநாதன் -ராமமூர்த்தி )எழுதுகிறார்.
அது இசை ஒப்பீடு அல்ல.
அப்படி அல்ல என்றால் தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்க வேண்டும்.
அப்படியும் இல்லை என்றால் முன்னவர்கள் இசையில் என்னென்ன துறைகளில் சாதனை செய்து உள்ளார்கள் என்ற பட்டியலாவது இருக்க வேண்டும்.அதுவும் இல்லை.வெறும் ரசிக மன நிலையில் எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.
கட்டுரையின் அடிப்படை கரு இக்ளையராஜாவை மட்டம் தட்டுவதே!
அமுதவன் ஒரு நல்ல ரசிகராக இருக்கிறார்.சிவாஜிக்கு ,கண்ணதாசனுக்கு .....இருக்கட்டும்.
நல்ல இசை பற்றி எழுத இந்த தகுதி மட்டும் போதுமா ?

1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.

2) பி.சுசீலாவின் பாடல்கள்.

3) கண்ணதாசனின் பாடல்கள்

4) சிவாஜிகணேசனின் பாடல்கள்

5) எம்ஜிஆர் பாடல்கள்

6) சந்திரபாபு பாடல்கள்

7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்

8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்

9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்

என்று பட்டியல் தந்திருக்கிறார். நல்லது .இளையராஜாவின் சிறப்பு என்னவென்றால் எந்த நடிகருக்கு ,எந்த பெரிய பாடகர் ,பாடகி பாடினாலும் அது "இளையராஜா பாட்டு "என்று தான் அறியபடுகிறது.நடிகர் ,பாடகர் ,இயக்குனர் என்பது எல்லாம் அதற்க்கு பிறகே.
இது தான் இளையராஜா நாட்டிய சாதனை.


தாஸ்
லண்டன்
21.02.2012

எனது விரிவான பதில் பகுதி 1இல் உள்ளது.

Amudhavan said...

திரு தாஸ் அவர்களே எவ்வளவு பேசினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பதற்குப் பெயர் என்னவென்று தெரியவில்லை. நான் பட்டியலிட்டிருக்கும் அத்தனை சாதனையாளர்களின் பாடல்களும் ஐம்பது அறுபது வருடங்களைத் தாண்டி இன்றைக்கும் நிலைத்திருக்கின்றன. பாடல்களோ கதையோ கவிதையோ ஒரு படைப்பு என்பது அது எத்தனை ஆண்டுக்காலம் அதற்குப் பிந்தைய அதனைச் சார்ந்த அதே போன்ற படைப்புக்கள் வருகின்றனவோ அவற்றையெல்லாம் தாண்டியும் இவை நிற்கின்றன என்றால் அதுதான் நிலைத்திருப்பவையாக அர்த்தம் கொள்ளப்படுபவை.

இந்த நியதி எல்லாவற்றுக்குமே பொருந்தும். பாடல்களும் அப்படித்தான். இந்த அடிப்பைடையில்தான் நான் மேற்குறிப்பிட்ட பாடல்களும் இன்னமும் எத்தனையோ பாடல்களும்கூட இன்றைக்கும் உலகம் பூராவும் இருக்கும் பல்வேறு டிவி சேனல்களிலும் அமுதகானம் என்ற பெயரிலும் தேன்கிண்ணம் என்ற பெயரிலும் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரிலும் இன்னமும் எத்தனையோ பெயரிலும் நாள்தோறும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இன்னமும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பழையபாடல்களின் ரசிகர்களாயிருப்பதெல்லாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த அடிப்படையில்தான் ஒரு பாடல் நிலைத்திருக்கிறதா என்பதும் அது எத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்கின்றன என்பதும் ஒருவர் இசையமைத்த எத்தனைப் பாடல்கள் இப்படி நிலைத்திருக்கின்றன என்பதையும் பார்த்துத்தான் கட்டுரையின் மேற்கண்ட முடிவுகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் மட்டும் நான் நல்ல ரசிகனாக இருந்துவிட்டுப்போவதில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையாம். ஆனால் விஸ்வநாதன் ராம மூர்த்தி உட்பட வேறு பலருக்கும் 'நல்ல ரசிகனாக' இருக்கக்கூடாதாம். என்ன தமாஷ் இது?

பாடல்களின் சாதனை என்பது அந்தப் பாடல் வெளியானபிறகு வந்த லட்சக்கணக்கான பாடல்களுக்குப் பிறகும் அதையெல்லாம் தாண்டி ஒரு பாடல் நிற்கிறது என்பதுதான்.
இதைத்தாண்டி அந்தப் பாடல்போட்டவருக்கு பியூஷன் தெரியுமா,மேண்டலின் வாசிக்கத்தெரியுமா,கடம் தெரியுமா என்பதெல்லாம் கேள்வி இல்லை.

அம்மாதிரி காலத்தைத் தாண்டி நிற்பவையாக இளையராஜாவின் பாடல்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
இந்த எண்ணிக்கையை ரகுமான் கடந்துசென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'இளையராஜாவின் சிறப்பு என்னவென்றால் எந்த நடிகருக்கு எந்த பெரிய பாடகர் பாடகி பாடினாலும் அது இளையராஜா பாட்டு என்றுதான் அறியப்படுகிறது. நடிகர் பாடகர் இயக்குநர் என்பது எல்லாம் அதற்குப் பிறகே. இதுதான் இளையராஜா நாட்டிய சாதனை' என்கிறீர்கள்.
இளையராஜாவுக்காகப் பேசுகிறேன் பேர்வழி என்று நீங்கள் பயங்கரமாகச் சறுக்கி விழும் இடமே இதுதான்.கூடவே உங்கள் இளையராஜாவையும் சேர்த்துக்கொண்டு சறுக்கிவிழும் சாகசத்தைச் செய்கிறீர்கள்.
தன்னுடைய சுய திறமையில் நம்பிக்கை கொண்ட எந்த சாதனையாளனும் இன்னொரு கலைஞன் மேலே வருவதைத் தடுக்கமாட்டான். கையை வைத்து அவனுடைய தலையைப் பிடித்து அழுத்த மாட்டான். ஆனால் இளையராஜா இதனைச் செய்திருக்கிறார்.

நல்ல பாடல் வரிகளை இசை அமுக்குகிற மாதிரியான கைங்கரியத்தைத்தான் அவர் பல காலம் செய்துவந்தார்.

இப்படிப்பட்ட விவகாரங்களெல்லாம் நிறைய இருக்கின்றன. அவை பற்றியெல்லாம் பேச இது சந்தர்ப்பம் அல்ல.

படங்களில் இதைத்தான் எம்ஜிஆரும் செய்துவந்தார். எம்ஜிஆருடைய 'உயரத்துக்கு' என்ன அக்கிரமங்கள் செய்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவதற்கான 'வணிகத்தேவைகள்' தயாரிப்பாளர்களுக்கும் திரைபடத்துறைக்கும் இருந்தன. அதனால் அவ்வளவையும் 'ஏற்றுக்கொண்டு' வாய்பொத்தி சென்றார்கள்.

இளையராஜா அப்படியான முயற்சிகளில் முனைந்தபோது வெகு சீக்கிரத்திலேயே அதற்கான ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் ரகுமான் வந்தார். தேவா வந்தார்.இம்மாதிரியான விவகாரங்களெல்லாம் நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்காக எல்லாவற்றையும் இங்கே இழுத்துப்போட்டுச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தேவையும் இல்லை.
இன்னொன்று தாஸ், உங்களுக்கு ஏற்கெனவே சொன்னதையே மறுபடியும் நினைவு படுத்துகிறேன். இளையராஜாவுக்காக வாதாடுகிறேன் என்ற பெயரில் டிஎம்எஸ்,பி.சுசீலா,கண்ணதாசன்,சிவாஜி,எம்ஜிஆர்,டி.ஆர்.மகாலிங்கம்,பிபிஎஸ்,சீர்காழி போன்ற மிகப்பெரும் கலைஞர்களையெல்லாம் அவமதிக்காதீர்கள்.
அவர்களின் சாதனைப் பெருமைகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள்.

Anonymous said...

அமுதவன் அவர்களே !
வணக்கம் .

"....மறுபடியும் நினைவு படுத்துகிறேன். இளையராஜாவுக்காக வாதாடுகிறேன் என்ற பெயரில் டிஎம்எஸ்,பி.சுசீலா,கண்ணதாசன்,சிவாஜி,எம்ஜிஆர்,டி.ஆர்.மகாலிங்கம்,பிபிஎஸ்,சீர்காழி போன்ற மிகப்பெரும் கலைஞர்களையெல்லாம் அவமதிக்காதீர்கள்."

அமுதவன் அவர்களே ! திசை திருப்பாதீர்கள்.உங்களுக்கு இது தகுமா ...?
நான் எங்கே அவமதித்தேன் ?
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.1977 ஆம் ஆண்டு திரு.டி.எம்.சௌந்தர ராஜன் இலங்கை வந்தார்.அவர் இளையராஜாவை பற்றி என்ன சொன்னார் தெரியுமா ? " இந்த தவில் கொம்பனி எல்லாம் கன நாளைக்கு தாங்காது " இப்படி "அறம்" பாடியவர்களே அதிகம்.அந்த செவ்வியோடு அவர் தானே ராசியில்லா ராஜாவகிவிட்டார்.எல்லாவற்றிற்கும் காரணம் "வாய்".

நல்ல பாடல் வரிகளை இசை அமுக்குகிற மாதிரியான கைங்கரியத்தைத்தான் அவர் பல காலம் செய்துவந்தார்.- அமுதவன்
அந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை.
அப்படி சொன்ன வைரமுத்து இன்று தங்கிலிஸ் (தமிழ் + ஆங்கிலம் )பாட்டு எழுதி திரிகிறார்.
அந்த குற்றத்தை சொன்ன வைரமுத்து இன்று என்ன எழுதுகிறார்.தனது பாட்டில் நம்பிக்கை இருந்திருந்தால் இந்த சினிமாவை விட்டு விலகி கருவாச்சி காவியம் எழுதியிருக்கலாம். இப்போது மட்டும் அவரின் பாட்டு மக்களுக்கு புரியுதோ சார் !

விஞ்ஞான குறிப்புகளும் ,மருத்துவ குறிப்புகளும் 50 கிலோ தாஜ்மஹால் போன்ற" கவித்துவமான " வரிகளை எழுதுகிறார்.இவற்றைவிட இளையராஜாவிடம் அவர் எழுதியது தேவலை.இளையாராஜாவுடன் இவர் இருந்த போது செய்த முகஸ்துதி சொல்லி மாளாது.முகஸ்துதி செய்வதில் சினிமா துறையில் உள்ளவர்கள் பல்கலை கழகமே நடத்தலாம்.
அதோ ரகுமான் வந்ததாலே தப்பி பிழைத்தார்...இப்போ என்ன கதை விடுகிறார் வைரமுத்து தெரியுமா ...நீ (இளையராஜா) இல்லை என்றல் நானும் இல்லை நிலையில் நீயும் இல்லை நானும் இல்லையாம் ..என்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு " உன்னுடைய மூச்சும் இசைதான் ..அப்பப்ப ..
கவிஞர் நா.காமரசனிடம் வைரமுத்து பற்றி கேட்டதற்கு " வைரமுத்துவை நான் ஒரு கவிஞன் என்று ஒத்துக்கொண்டதே இல்லை..சும்மா வாயை கிளறாதீர்கள் ....
கவிஞன் என்றால் கண்ணதாசன் ,கலைஞர் என்றால் கருணாநிதி ,அறிஞர் என்றால் அண்ணாத்துரை ,புரட்சி என்றால் எம்.ஜி.ஆர், நடிகர் என்றால் சிவாஜி இதெல்லாம் திராவிட முனேற்ற கழக காரர்கள் தமக்கு தாமே சூட்டிய பட்டங்கள்.கூட்டணிகள்.(இந்த மாதிரியான "கொடுமைகளையே " அன்றைய இடதுசாரிகளும் ,ஜெயகாந்தனும் எதிர்த்தார்கள்.)இதை வைத்தே மற்றவர்களை ஓரம் கட்டியவர்கள்.
பின்னாளில் கவிஞர் சுரதாவிடம் ஏன் தற்போதெல்லாம் சினிமாவில் பாடல் எழுதுவதில்லை என கேட்ட போது " யார் என்னை கூப்பிடறான் ? ஆர்மோனியம் வைத்து கினு... கினு..ன்னு வாசிச்சவனை( எம்.எஸ். விஸ்வநாதன் ) நான் தான் எம்.எஸ். ஞானமணியிடம் (எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ,எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி இசையமைப்பாளர்.எம்.எஸ். விஸ்வநாதன் அனவரிடமும் உதவியாளராக இருந்தவர் )அறிமுகம் செய்தேன்.அவன் கூப்பிடுகிறானா ?அதே பெட்டியில் கண்ணதாசனை பற்றி கேட்ட பொது நல்ல மாதிரி சொன்னார்.
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் எந்தவித பின் புலமும், கூட்டணியும் ,பரிவாரங்களும் ,அரசியல் பின் புலமும் இல்லாமல் தனித்து தன் இசை ஒன்றையே நம்பி "இசையின் எல்லா பரிமாணங்களிலும் " வெற்றிக்கொடி நாட்டியவர் இந்திய அளவில் இளையராஜா ஒருவரே.
அவர் பெரியோரை மதிப்பதும் உண்டு சிறியோரை தவிர்ப்பதும் நாம் கண்டவையே.

அன்புடன்
தாஸ்

Amudhavan said...

ஊரில் யாரிடம் என்னவிதமான சிறப்புக்களும் அருமைப் பெருமைகளும் நிரம்பியிருந்ததை எவ்வளவு அரும்பாடுபட்டுச் சொல்லியபோதிலும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "என்னதான் இருந்தபோதிலும் எங்கள் எம்ஜிஆருக்கு இங்கே ஈடும் இணையும் எவரும் இல்லே" என்று சொல்லக்கூடிய ரசிகசிகாமணிகளிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.

குட்டிபிசாசு said...

நான் எல்லோருடைய பாடல்களையும் கேட்பவன். எம்.எஸ், இளையராஜா, ரகுமான் என அனைவரும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொன்ன சாதனை என்று வரும்போது, எம்.எஸ் - ராமமூர்த்தி அவர்களின் சாதனை பெரிது. இதனை இளையராஜா அவர்கள் கூறியதைவிட கங்கையமரன் பல இடங்களில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

Amudhavan said...

வாருங்கள் குட்டிப்பிசாசு இதனைத்தான் நானும் இங்கே பல்வேறு வகைகளில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இரண்டாவது, விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மற்றும் விஸ்வநாதனின் பாடல்கள் காலத்தைக் கடந்து நின்றிருக்கின்றன. இன்றைக்கு (4-3-2013) பெங்களூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதலில் இப்போதைக்குப் புழக்கத்தில் உள்ள கடல்,கும்கி போன்ற படங்களிலிருந்து பாடல்கள் போட்டார்கள். பிறகு திருமண வாழ்த்துக்கள் அடங்கிய பாடல்கள்....... எல்லாம் சாரதா படத்தில் மணமகளே மருமகளே வா வா வில் துவங்கி பூமுடித்தாள் இந்தப் பூங்குழலியில் தொடர்ந்து பாசமலர் என்று போய்க்கொண்டேயிருந்தது. இதில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்பதுபோல் இளையராஜா மற்றும் பலரின் பாடல்கள் சுத்தமாக இல்லவே இல்லை.காலம் என்பது இப்படித்தான் பயணிக்கிறது. காலத்தைக் கடந்து நிற்பதை மட்டும்தான் சாதனையாக எடுத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் சொல்லியிருப்பது சரி; இதனை கங்கைஅமரன் நேரில் பேசிக்கொண்டிருந்தபோதும் சொல்லியிருக்கிறார்.
தங்களின் வருகைக்கு நன்றி.

DR said...

//இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது.//

இதில் யாரும் வெறும் ரகுமான் பாட்டு மட்டுமே கேட்பது இல்லை... எல்லா இசைக்கலைஞர்களும் இதில் அடங்கி விடுகின்றனர்...

சமீபத்தில் நான் இளையராஜா இசையைபற்றி வெகுவாக என் மனதில் அசை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..." கேட்க நேர்ந்தது... ஏற்க்கனவே பல முறை கேட்டிருந்தாலும் ஹை க்வாலிட்டி ஹெட்செட்-இல் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கேட்டதற்க்கு நான் என்னையே மறந்தேன்... அப்பொழுது தான் எனக்கு உரைத்தது, இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்ல என்று...

நீண்ட பதிவுக்கு மிக்க நன்றி...

Amudhavan said...

வாருங்கள் DR. நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் அதே கருத்தைத்தான் நானும் வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு வடிவங்களில் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

நல்லதொரு இசைக்கு வெறும் வாத்தியக்கருவிகள் மட்டுமே போதாது. எந்த வாத்தியமும் துணைக்கு இல்லாமல் சில சமயங்களில் பாடகர்கள் பாடும் பாடலைக் கேட்டீர்களானால் ஒரிஜினல் பாடல்களை விடவும் நன்றாக இருப்பதையும் மனதில் உடனே இடம் பிடித்துவிடுவதையும் உணர முடியும். காரணம் நல்ல பாடலுக்கு நல்ல இசைதான் முக்கியம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், மட்டுமல்ல சுதர்சனத்துடைய இசையையே கூட இளையராஜாவோ அதற்குப் பின் வந்தவர்களோ இன்னமும் தாண்டிவிடவில்லை என்பதுதான் உண்மை.

தனுசுராசி said...

உங்களோட இளையராஜா ரகுமான் சண்டையில எங்கள் இன்னிசை வேந்தன் டி.ராஜேந்தரை வசதியாக மறந்தமைக்கு என்னுடைய வருத்தங்களை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்...

அவரை போன்ற ஒரு பன்முகக்கலைஞனை இந்த தேசம் கண்டதுண்டா... இனிமேலும் காணும் வரம் உண்டா...

Amudhavan said...

என்ன தனுசுராசி இப்படிச் சொல்லிட்டீங்க...இங்கே வெறும் இசையமைப்பாளர்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமா, ஒட்டுமொத்த ஆர்க்கெஸ்ட்ராவை விட்டுவிட்டோம் போல. தோள்பட்டையையும், தொடையையும்,மேஜையையும் வாத்தியக்கருவிகளாக்கி நாக்கையும் வாயையும் வைத்தே ஒரு முழு இசைக்கச்சேரியை(அதுவும் ஆப்பிரிக்க இசைக்கச்சேரியைச்) செய்யும் வித்தை அவ்வளவு சுலபமாக யாருக்கு வரும்?
பன்முகத்திறமை கொண்ட அவர் ஒருதலை ராகம் படத்திற்குப் போட்டுவைத்திருந்த டியூன்கள் அபாரம். (என்னதான் எஸ்.ஏ.ராஜ்குமார் இசைக்கோர்ப்பு செய்திருந்தார் என்றாலும் மெட்டுக்களும் பாடல்களும் இவருடையதுதானே.)அதற்குப்பின் அவர் இசையமைப்பில் நிறையப் பாடல்கள் ஹிட் அடித்திருந்தபோதும் அந்தப் பாடல்களுக்கு இணையாக எதுவும் வரவில்லை. வேறொரு படத்தில் 'மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றதுவைத் தூதுவிட்டேன்' என்று எஸ்பிபியை வைத்து ஒரு மெலடி போட்டிருப்பார். அருமையாக இருக்கும்.

Amudhavan said...

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் இது ஒன்றும் இளையராஜா ரகுமான் சண்டை அல்ல. இளையராஜா ஒருவர்தான் இசையமைப்பாளர் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு அப்படியல்ல நண்பர்களே என்று விளக்கங்களுடன் சில விஷயங்களைச் சொல்லும் ஒரு சிறு முயற்சிதான் இது.

காரிகன் said...

"சமீபத்தில் நான் இளையராஜா இசையைபற்றி வெகுவாக என் மனதில் அசை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..." கேட்க நேர்ந்தது... ஏற்க்கனவே பல முறை கேட்டிருந்தாலும் ஹை க்வாலிட்டி ஹெட்செட்-இல் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கேட்டதற்க்கு நான் என்னையே மறந்தேன்... அப்பொழுது தான் எனக்கு உரைத்தது, இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்ல என்று... "

இதைதான் நானும் திரு அமுதவன் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இளையராஜாவின் காலத்தில் வந்த தொழில் நுட்பம் அவரை வேறு இடத்திற்கு கொண்டுசென்றது. ரகுமானின் கால தொழில் நுட்பம் அவரை இன்னும் அதிக தூரம் கொண்டு சென்றது. ஆனால் இது எல்லாம் இல்லாத காலத்தில் பாடல்கள் அமைத்த எம் எஸ் வியின் பாடல்களை இன்றைக்கு இருக்கும் அதி நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு மறுபடி பதிவு செய்ய முடிந்தால் அது மிக நவீனமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதை நீங்கள் புரிந்து கொண்டது போல மற்ற இளையராஜா அபிமானிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Post a Comment